Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Recent Comments
மனதின் வார்த்தைகள் புரியாதோ
38- தொடரும் உறவு 

 

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பார்கள், ஆனால் மயூரா தேவிக்கு மகளிடம் பேச நிறைய இருந்தது. தாயும், தகப்பனும் அவரைத் தாங்கள் ஓய்வெடுக்கும் அறையில் அமர்த்திப் பேசிக் கொண்டிருந்தனர். ராகினி தனது வாழ்வின் முக்கியத் தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்

ஹேமந்த் சாப்பிட்டவுடன் தன் ஹவேலிக்கு கிளம்பினார். அவருடன் மற்ற நண்பர் கூட்டமும் கிளம்ப, சிவகுருவும் ராகினியின் முகத்தைப் பார்த்தார்.

ராகினி, "இதோ சொல்லிட்டு வர்றேன்.” என்றவர் தன் சகோதரர்களிடம் விடை பெற வந்தார். "அதெல்லாம் முடியாது தீதீஷா, இங்க நம்ம ஹவேலி இருக்கும் போது எப்படி வெளியே தங்குவீர்கள்?" எனக் கோபப்பட்டனர்.

"லக்ஜேஜ் எல்லாம் அங்க இருக்கிறது அம்மு, சாய்ந்திரம் ஃபங்சனுக்கு ரெடியாகனும்." எனச் சமாதானம் செய்தார் ராகினி.

 ரகுவீர் அங்கே வந்தவன், "புவாஷா இப்ப அந்த ஹோட்டல் போங்க, ரெடி ஆகிட்டு செகாவத் ஹவேலி வந்துடுங்க. நீங்க கிளம்பும் போதே லக்கேஜ் பேக் பண்ணிடுங்க, எல்லாருக்கும் நம்ம ஹவேலில ரூம் அரேன்ஞ் பண்ணிடுறேன் பூஃபாஷா கிட்ட பேசிட்டேன்." என்றான்.

"சரிங்க வீரூஜீ உங்கள் கட்டளை எங்கள் பாக்கியம்." என்றார் ராகினி. அவர் தன் தாயிடம் விடை பெறச் சென்றார். ஜானகி, அமிர்தா ஒரு பெட்டியுடன் கிளம்பினர். ரகுவீர் அதிர்ந்தவனாக," ஹேய், மிர்ச்சி என் சிஷ்டரைக் கூட்டிக் கிட்டு நீ எங்கப் போற?" என வினவினான்.

"அம்மா அப்பாகூட இருந்து ரொம்ப நாள் ஆச்சு, அதுவும் இல்லாமல், அப்பா இங்க இருக்கும் போது உங்கள் கூடத் தங்குனா நல்லா இருக்காது, அதுதான். நான் வந்த காரணம் முடிந்தது, சோ பேக் டூ சிறுமலை." என்றாள்  ஜானகி.

 " நான் உனக்குப் போகப் பர்மிஷனே கொடுக்கலையே, அங்க ஹோட்டல் ரூம்ல எப்படி ரெடியாவ? புவாஷாவுக்கு அன்கம்ஃபர்டபிளா இருக்கும். அப்பறம் என்ன சொன்ன வந்த வேலை எங்க முடிஞ்சது, நீ வந்தது ப்ராஜெக்ட் பண்ண ஒரு மாதம்தான் முடிஞ்சிருக்கு, இப்ப எல்லாம் அனுப்ப முடியாது, உள்ளப் போ." என மிரட்டினான் ரகுவீர். இவர்கள் சண்டையைப் பார்த்த அமிர்தா தன் மாமாவை நோக்கிச் சென்றாள்.

 "இந்த மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். நீங்க யாரு என்னை தடுக்கிறதுக்கு, நாங்களெல்லாம் எங்கப் பேச்சை நாங்களே கேட்காத ஆளுங்க, உங்கள் பேச்சைக் கேட்டுடுவோமா?" என்றாள் ஜானகி.

 "உன் பேச்சை, நீயே கேட்டிருந்தாலும் எல்லாம் புரிஞ்சிருக்கும். அங்க தான் மேல் மாடி காலி ஆச்சே." என்றான் ரகுவீர். ஜானகி முறைத்து நின்றாள்.

அங்கு வந்த ராஜ்வீர், "ஜானி, மயூ உன்னைக் கூப்பிடுறா, தீம் ட்ரெஸ், பார்லர்னு என்னமோ சொன்னாள் போய்க் கேட்டுக்கோ." என்றான். அவள் அப்போதும் அசையாமல் இருந்தாள்.

அமுதன் அவர்களின் அருகில் வந்தவன் "ஜானும்மா, ஸ்வர்ணி உன்னைய வரச் சொல்றா." என அடுத்தத் தூதாக வந்து சேர்ந்தான்.

"நானும் அதைத் தான் சொன்னேன். வந்த வேலை முடிஞ்சதாம், ஒரு ஹெலிகாப்டர் வச்சு, சிறுமலையில் இறக்குங்கள் அவளை!" எனக் கோபமாகச் சொன்னான் ரகுவீர். அவன் கோபம் அவளைத் தாக்கியது.

"அண்ணா எனக்கு இன்றைக்கு நைட் டிக்கெட் போடு, நான் ஊருக்குப் போறேன், தெய்வாம்மாக்கிட்ட இருந்துக்கிறேன். மாதாஜீ, அப்பாஜான், நீ அமித்து எல்லாம் இருந்துட்டு வாங்க." என்றாள் கோபமாக.

"அதெப்படி, ப்ராஜெக்ட் ட்ரைனியா வந்தவ, பாதியில் விட்டுட்டு போவாள், நான் சர்டிவிகேட் எல்லாம் தர மாட்டேன்."  ரகுவீர் கோபம் கொண்டான் 

"இவர் சர்டிஃபிகேட்டை இவரையே வச்சுக்கச் சொல்லு, எனக்கு ஒன்னும் சர்டிஃபிகேட்டும் வேணாம், எம்பிஏ வும் வேணாம். நான் சிறுமலைக்குப் போறேன்."  ஜானகியும் முறுக்க,  "ஜானு பொறுமையாகப் பேசு." அண்ணனாக அமுதன் அடக்கினான்.

"அமுதன், அவளை டிக்கெட் போட்டு அனுப்பிச்சு விடுங்க. ஒரு வேலை செய்ய வந்தால், அதை முடிக்கனும்னு கமிட்மெண்ட் இருக்கனும். அது இல்லாதவளை எதுக்கு எம்பிஏ சேர்த்து விட்டு, டைம் அண்ட் மணியை வேஸ்ட் பண்றீங்க." என  ரகுவீர் எரிச்சலைக் காட்ட, 

"பையா, ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா பேசுங்க, ஜானி புரிஞ்சுப்பா." என  ராஜ், அத்தை மகளுக்கு வக்காலத்து வாங்கினான்.

"நீ சொன்னீயேன்னு தான், ட்ரைனீயா சேர்த்தேன் த்ரீ மந்த்ஸ் அக்ரிமெண்ட் முடிய வேணாமா? எவ்வளவு பேர் கேரியர் செட்டில் ஆகனும்னு நம்ம கம்பெனியில் சேர காத்திருக்காங்க. இதுக்குத் தான் பணக்காரப் பொண்ணுங்க செல்லுலாய்ட் பேபீஸ் இதுகளையெல்லாம் வேலைக்கே எடுக்கக் கூடாது. நீயே டீல் பண்ணிக்க." என்ற ரகுவீர், அங்கிருந்து சென்று விட. "பார்த்தியா ராஜ் உன் பையாக்கு எப்படிக் கோபம் வருது. இவர் தான் ராத்தோட்ஸ் க்ரூப்பையே தாங்குகிறதா நினைப்பு, நீ என்னை ரிலீவ் பண்ணு நான் போறேன்." என ஜானகியும் பிடிவாதம் பிடித்தாள் .

"நீ எதுக்கு இப்போ, இவ்வளவு சீன் கிரியேட் பண்ற?" என ராஜ் கேட்கவும், 

"மெஹந்திக்கு முன்னாடி, சிருஷ்டி வீட்டிலிருந்து, உன் பையாவுக்குச் சம்பந்தம் பேசறதுக்கு வர்றாங்க . அந்த நேரம் என்னால் இங்க இருக்க முடியாது.” என அவனிடம் தனித்துச் சொன்னவளா, “ அமுதா வா போகலாம்." என அண்ணனை அழைத்தாள், ராஜ் அவள் மனநிலை அறிந்து மௌனமானான்.

"ஜானி, சாய்ந்திரம் மெஹந்திக்கு முன்னால் மயூரியை, அமுதன் அத்தானுக்குப் பெண் கேட்கலாமென்று மாமா பேசுறாங்க. இப்ப என்னடி செய்யறது?" என, மாமனை பார்த்து வந்த அமிர்தா, மெதுவாகக்  கேட்டாள்.

"அமித்து, நாம ரெடியாகிட்டு நேரே மஞ்சரி வீட்டுக்கு போயிடலாம்டி." என்றாள் ஜானகி. அமுதன் இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். "ஜானும்மா, இப்ப உனக்கு எனடா பிரச்சினை, என்கிட்ட சொல்லு." என்றான் அமுதன்.

"என்னைய லேக் ஹோட்டல் கூட்டிட்டுப் போ. எனக்கு இந்த ஷாதி அட்டண்ட் பண்றதுல எல்லாம் இஷ்டம் இல்லை." என்றாள் ஜானகி. "சரி வா, அமிர்தா நீ அவளைக் கூட்டிட்டுப் பார்க்கிங் போ, நான் பேசிட்டு வர்றேன்." என்றவன் எல்லாரும் இருக்கும் இடம் வந்தான். 

"அம்மா, ஜானகிக்கு ஏதோ வாங்கனுமாம், நான் முன்னாடி கூட்டிட்டுப் போறேன். நீங்க வாங்க." என மற்றவர் பேசும் முன் வெளியே வர ,  ஶ்ரீநிதி, நானும் வருகிறேன் எனத் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு இவர்களுடன் சேர்ந்துக் கொண்டாள்.

ராகினி தன் சகோதரர்களிடம், "நான் செகாவத் வீட்டுக்குப் போகும் முன், உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசவேண்டும். சாயந்தரம் வர்றேன்." எனப் பூடகமாகச் சொல்லி விட்டுக் கிளம்பினார்.

ரகுவீருக்கு தான் மனசே ஆறவில்லை, தான் இத்தனை சொல்லியும் ஜானகி போய் விட்டாளே எனக் கோபமாக இருந்தான். அமுதன், ஜானகியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தவன், தனது அறையைத் திறந்து ஜானகிக்குக் கொடுத்தான். இதற்குத் தானே அண்ணன் வேண்டும் என்பது.

அமிர்தா அண்ணன், தங்கைக்குத் தனிமை கொடுத்து ஶ்ரீநிதியுடன் அவள் அறைக்குச் சென்றாள். அவளருகில் அமர்ந்தவன் அவளின் தலையை வருடி, "ஜானும்மா, என்னடா, உன்னால் தான் அம்மா, இன்னைக்குப் பிறந்த வீட்டோடு சேர்ந்து இருக்காங்க, நான் நான்கு வருஷமா செய்ய முடியாததை, நீ நான்கு வாரத்தில் சாதிச்சிட்ட. உனக்கு என்னடா பிரச்சனை?" எனக் கேட்டான்.

ஜானகி பதில் பேசவில்லை, அப்படியே உட்கார்ந்து இருந்தாள். "சரி, அடுத்து என்ன செய்யலாம், அதைச் சொல்லு?" என வேறு ரூட்டைப் பிடித்தான்.

"அமுதா, நாம நினைச்ச மாதிரி அம்மாவைச் சேர்த்து வச்சிட்டோம், என்னால் உங்கள் எல்லாத்தையும் விட்டுட்டு இங்க இருக்க முடியலை, ரொம்ப ஏக்கமா இருக்கு. இந்த ப்ராஜெட் ஶ்ரீராம் வீட்டு மில்லில் செஞ்சுக்கிறேன். அங்க மாற்றிக் கொடு." எனத் தனது மனதில் உள்ளதை மறைத்து செண்டிமெண்ட்டில் தாக்கினாள் .

"இதுதான் காரணமா, ஜானும்மா என்கிட்ட வேறெதையோ மறைக்கிறது மாதிரி தோணுது." என்ற அண்ணனிடம்,

"இங்க இவங்க பிஸ்னஸ்ல போட்டி ரொம்ப இருக்கு, ஆபத்தும் தான், அந்த ஒரு டீல்க்கே இடுப்பில் குத்துனாங்க. இரண்டு நாள் முன்னாடி ஒரு ஹேக்கிங் ட்ரை பண்ணாங்க. ஶ்ரீராம் சொன்னதால் தப்பித்தது ராத்தோட் க்ரூப். ஐயோ, ஶ்ரீராம்க்கு கால் பண்ணவே மறந்துட்டேன். அந்த ராக்கேஷ் ஒன்னும் செய்திருக்கக் கூடாது." என்ற வேண்டுதலுடன் அவன் போனுக்கு ட்ரை செய்யா, நாட் ரீச்சபில் என வந்தது. 

ஜானகிக்குப் பதட்டமானது. "அண்ணா நீ ட்ரை பண்ணு."  என்றாள் ஜானகி. அமுதனுக்கும் அதே பதில் வந்தது. "அவர்கள் வீட்டுக்கு போன் போட்டுக் கேளு!" என ஜானகி பரபரத்தாள்.

"ஏய் திடீரெனக் கேட்டா பயந்துருவாங்கடி நான் விசாரிச்சுச் சொல்கிறேன்." என்றான். பின்னர் இதற்காகத் தன்னையே நொந்து கொள்வோம் எனத் தெரியாமல் அசட்டையாக விட்டான்.

ராகினி சிவகுரு மற்றும் நண்பர்குழு, ஹோட்டல் வந்து சேர்ந்தது. ஜானகிதான் பெற்றோர் ரூமிற்குச் சென்றாள். அவர்கள் ஓய்வெடுக்கக் கட்டிலின் இரண்டு புறமும் படுத்திருக்க, "உங்கள் ரொமான்ஸ் டையத்தில் நான் வரலாமா?" எனக் கேட்டாள்.

"உள்ள வந்துட்டு, என்னடி வரலாமான்னு கேள்வி? வாங்க மகாராணி." என்றார் ராகினி. அவர்களுக்கு நடுவில் சென்று சிறு குழந்தைப் போல் அம்மாவைக் கட்டிக் கொண்டாள் ஜானகி.

அவளை அணைத்து தடவிக் கொடுத்த ராகினி, "மாதாஜீக்காகப் பெரிய வேலையெல்லாம் செய்ற பெரிய மனுசி ஆகிட்டியா நீ?" எனத் தட்டிக் கொடுத்தார்.

"ஆமாம், நீங்க தானே என்னை உங்கள் தாதிஷா மாதிரி தைரியம்னு சொல்லுவீங்க அதுதான் தாதிஷா செய்ற வேலை." எனக் கட்டிக் கொண்டாள்.

சிவகுரு அவள் முதுகையும்  தலையையும் வருடிக் கொடுக்க, "அப்பாகிட்ட சொல்லாமல் வரலாமாடா உனக்கு ஏதாவது ஆனால் அப்பா என்ன பண்ணுவேன். என் உயிரே உன் கிட்டத் தானே இருக்கு." என்றார்.

அம்மாவிடம் இருந்து, அப்பாவின் மார்பில் சாய்ந்தவள், "நீங்க சொன்னா விட மாட்டிங்களே, அதுதான் மாமாக்களுக்குச் சொல்லிட்டு வந்தேன். அப்படியும் பல்லா மாமா மும்பைக்கே  வந்துட்டாரே!" எனச் சொன்னவள், இங்கும் ஓர் பிட்டைப் போட்டு வைத்தாள்.

ஜானகிக்கு, ரகுவீரின் திருமணத்தைப் பார்க்கும் மனவுறுதி இல்லை. இப்போது தான் சேர்ந்திருக்கும் குடும்பம் தன்னால் பிரிய வேண்டாம் என முடிவு செய்தவள், "அப்பா ஜான், நானும் உங்கள் கூடவே வந்துடுறேன். என்னையும் சிறுமலைக்குக் கூட்டிட்டுப் போங்க. ஐ மிஸ் யூ, மாதாஜீக்காகத் தான் இவ்வளவு தூரம் வந்தேன்." எனக் கொஞ்சினாள்.

 ராகினி, மீனாட்சி அம்மன் கோவில் குறி சொன்ன பெண்மணி ஞாபகம் வந்து, "ஸுனியேஜீ, இன்றைக்குத் தான் உருப்படியா பேசி இருக்கா, இவளுக்கும் அமிர்தாவுக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க." என்றார்.

"மாதாஜீ, உங்க வீரூ கிட்ட சொல்லுங்க. பாதியில் விட்டுட்டு போறேன்னு திட்றார்." என்றாள் ஜானகி. கொஞ்சம் நேரம் ஓய்வுக்குப் பின், பெரியவர்கள் சீக்கிரம் கிளம்பினர். 

ஜானகி, அமிர்தா, ஶ்ரீநிதி மூவரும், யாருக்கு வந்த விருந்தோ எனக் கிளம்பினர். "ஒரே மாதிரி, ட்ரெஸ் அனுப்பி இருக்கா மயூரி பார்த்தியா, இதற்குத் தான் கூப்பிட்டாளோ?" எனக் கேட்டாள் அமிர்தா.

"போடி அவளுக்குச் சைட் அடிக்க, அவளைச் சைட் அடிக்கவும் ஆள் இருக்கு, அலங்காரம் பண்ணிக்குவா, நமக்கென்ன வேண்டி கிடக்கு, இல்லடி ஶ்ரீ?" எனக் கேட்டாள் ஜானகி.

"ஆமாம்டி அமித்து, சும்மா ஒரு டச்அப்  போதும், என்ன ஜானி, கரெக்ட் தானே!" எனக் கேட்டாள் ஶ்ரீ. அந்த நேரம் , ரூம்காலிங் பெல் அடித்தது ஜெய் வந்து நின்றான், "என்ன மச்சான்." என்றாள் ஜானகி.

"சத்தம் கம்மியா பேசுடி, பக்கத்தில் என் பொண்டாட்டி இருக்கா.” என்றவன் “அமித்து, கொஞ்சம் வாடா பாபி கூப்பிடுறா!" என்றான்.போகும் போது, "ஏய் அமித் வரான்டி நைட் வந்து சேருவான்." என நல்ல செய்தி சொல்லிவிட்டுச் சென்றான்.

ஶ்ரீ வேகமாக, குளியலறை சென்று, பளிச்சென்று வந்தாள். இது போடவா, அது ஃபிட் ஆகுமா? என ஜானியுடன் எந்த ட்ரெஸ் போடுவது என டிஸ்கஸனில் ஈடுபட்டாள். ஜானகி, ஶ்ரீயைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், "ஏண்டி, இதுதான் பைலட் மேஜிக்கா?" எனக் கிண்டல் செய்தாள்.

பின்னர் அவளுக்கு ஏற்ற உடையைத் தேர்ந்தெடுத்து, அவளைத் தேவதைப் போல் அலங்கரித்தாள். தன் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்தவள், தானே வியந்து நின்றாள் ஶ்ரீநிதி. பின்னர், நேரத்தைக் கடத்தி ஒரு மணிநேரத்தில் கிளம்பினாள் ஜானகி.

ராத்தோட் ஹவேலிக்கு, கையில் பரிசுகளுடன் மயூரிக்கு வைர நகை எடுத்துக் கொண்டு, சிவகுரு-ராகினி தம்பதி, அமுதனை அழைத்துக் கொண்டு, பல்லாஜீ, பாண்டே சாப், ரெட்டிகாரு தம்பதியுடன் சென்றனர்.

ராத்தோட்களும் கிளம்பி தயாராக இருந்தனர். வந்தவர்களை வரவேற்று உபசரித்தனர். ஆண்கள் செர்வானியில் தயாராக நிற்க  பெண்கள் இராஜஸ்தானி ஸ்டைலில் நின்றனர். வீர் ப்ரதர்ஸ் இவர்களை வரவேற்று அமர வைத்தனர்.

சந்திரசேகர ரெட்டி தான் ஆரம்பித்தார், "எல்லாருக்கும் நமஸ்காரம், நான் சிவா சார்பாக உங்கள் கிட்ட பேசுகிறேன். பல வருஷம் கழித்து ராகினி தங்கையா, அவர்கள் பிறந்த வீட்டோடு சேர்ந்து இருக்காங்க. அதில் நமக்கு ரொம்பச் சந்தோஷம். இதை இன்னும் தொடரனும்னு ஆசை. உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், அமரேந்தர் மகள் மயூரி, சிவகுரு வீட்டில் தான் தங்கி இருந்தது. நாங்கள் சிவகுரு-ராகினி மகன் சிவகுக அமுதனுக்கு, உங்கள் மகள் ஸ்வர்ண மயூரியைப் பெண் கேட்டு வந்திருக்கிறோம்." என்றார்.

தாதாஷா, தாதிஷாவுக்கு ஆனந்த அதிர்ச்சி அமரேந்தர், பூனம் இதை எதிர்பார்த்தது போல் இருந்தனர். கஜேந்தர், ஸர்குனுக்கு இப்படியும் செய்யலாமோ? என இருந்தது. ரகுவீருக்கு, அமுதனைப் பார்த்தவுடன் பிடித்தது. தனது பிரதியாக இருப்பான் எனத் தோன்றியது.

ராஜேந்தர், "எங்க ராகினி, நடந்தது எல்லாம் மறந்து எங்கள் குடும்பத்தில் ரிஸ்தா வைக்கச் சம்மதித்தது சந்தோஷம். எங்கள் முடிவுக்கு முன்னாடி ஸ்வரூவின் சம்மதம் முக்கியம்." என்றார்.

பாண்டே, "நல்லா கூப்பிட்டுக் கேளுங்க, லட்கீ, லட்கியின் மாதா, பிதா, பாயீ பஹன், தாதா,தாதி எல்லாருடைய சம்மதமும் முக்கியம்." என்றார்.

பல்லாஜீ, "எங்கப் பையனை நாங்களே பெருமையாகச் சொல்லக் கூடாது, சிவில் இன்ஜினியர், எம்பிஏ. அப்பா தொழிலைப் பார்க்கிறான். வீடு, எஸ்டேட், தோட்டம், ரிசார்ட், ஸ்கூல்னு எல்லாம் இருக்கு. எல்லாத்தூக்கும் மேல அவங்க அப்பாவை மாதிரி தங்கமானவன்." என்றார் .

"அது எங்கள் தீதீஷா முகத்தை வைத்தே தெரிஞ்சுக்கிட்டோம்." என்றார் கஜேன். "அம்மு உன் மகளை, என் வீட்டு மருமகளா கொடு. என் மகளா பார்த்துக்குவேன். நான் அனுபவிக்க விட்டுப் போனதும் அவளுக்குக் கிடைக்கட்டும். " எனக் கேட்டார் ராகினி.

ராகினி அருகில் வந்து அவர் கையைப் பிடித்துக் கொண்ட அமரேன், "தீதீஷா, என்னையவே அப்படிப் பார்த்துகுவீங்க, என் மகள், உங்கள் வீட்டில் சந்தோஷமாக இருப்பாள். எனக்குச் சந்தேகமே இல்லை, நான் அவள் வார்த்தையில் சம்மதம் கேட்டு வருகிறேன், தப்பா எடுத்துக்காதீங்க." என்றார்.

சிவகுரு, "தாராளமாகப் போய்க் கேளுங்கள் மச்சான். எங்கள் ஜானகியை யாராவது கேட்டாலும் நானும் இதே தான் சொல்லுவேன்." என அனுப்பி வைத்தார்.

ரகுவீரும், அமரேனும் அம்மாக்கள் மூவரும் மயூரியை கேட்கச் சென்றனர். ஹரிணியின், கை வண்ணத்தில் மயூராதேவி, அழகிய ரோஜாவாகப் பிங்க, கீரின் கலந்த வண்ணத்தில் ஜொலித்தாள்.

"ஸ்வரூ பேட்டா புவாஷா கீழே உனக்கு அமுதனின் ரிஸ்தா கேட்டு வந்திருக்கிறார்கள் என்ன பதில் சொல்லட்டும்?" என அமரேன் கேட்டு முடிக்கும் முன்னே, "சரின்னு சொல்லுங்கள் பாபு, நான் அமுதனைக் காதலிக்கிறேன்." என வேகமாகச் சொன்னாள் மயூரி. சூழலை அப்போது தான் உணர்ந்து, அமரேனையே கட்டிக் கொண்டு தன் வெட்கிய முகத்தை மறைத்தாள்.

அவள் முன் நெற்றியில் முத்தமிட்டவர், கண்கள் கலங்க, "சரிடா." என்றார். பூனத்திடம் திரும்பி, "நீ என்னம்மா சொல்ற?" என்றார். "ஒரே பொண்ணு, அவள் சந்தோஷம் தான் என்னுடையது. அவள் முகத்தைப் பாருங்கள். இப்பவே புவாஷாவோட போகவும் ரெடி தான் இந்த லட்கீ!" என்றவர். கண் மை எடுத்து அவளுக்குத் திருஷ்டி பொட்டு வைத்தார்.

ரகுவீர், "சோட்டிக்கு வெட்கம் எல்லாம் வருதே!" என அணைத்துக் கொண்டான். மயூரியை அழைத்துக் கொண்டு அனைவரும் கீழிறங்கி வந்தனர். தாதாஷா தாதிஷாவுக்கு ராகினியை பார்த்தது போல் இருந்தது. அமுதனின் கண்கள் சுற்றம் மறந்து தன் இனியவளைக் கண்களால் பருகிக் கொண்டு இருந்தன.

"ஜீஜூ, வாய்க்குள்ள கொசு போகுது." என்றான் ரன்வீர். அமுதன் சூழல் அறிந்து சிரித்துக் கொண்டான்.

மயூரி, குனிந்து வந்தவள் அனைவருக்கும் வணக்கம் சொன்னாள். ராகினி தான், "மயூ,நீ என் வீட்டுப் பொண்ணு நோ மோர் ஃபார்மாலிடீஸ்." எனத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.

இருவரையும் சம்மதம் கேட்டனர் பெரியவர்கள், இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரம் பார்த்து, கண்கள் கலந்து கவிதை பேசிய பின்னே சம்மதம் என ஒரே நேரம் சொன்னார்கள்.

எல்லாருடைய நகை ஒலியும் சேர்ந்து மங்களமாய் ஹவேலியை நிறைத்தது. ராகினி, தான் கொண்டு வந்த வைர நகையை மயூரிக்கு போட்டு திருஷ்டி கழித்தார். தாதாஷா, தாதிஷா தங்கள் பேத்தியை உச்சி முகந்தனர். அமுதன் அருகில் மயூரியை உட்கார வைத்தனர்.

ஷப்னம், ரகுவீரிடமிருந்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கி, அவர்கள் இருவருக்கும் தலையைச் சுற்றி திருஷ்டி சுற்றி, வேலையாளைக் கூப்பிட்டுப் பணத்தைப் பிரித்துக் கொள்ளச் சொன்னார். 

அமுதன் நடுவில் குறுக்கிட்டு, "எனக்கு ஸ்வர்ணியை மணப்பதில் சம்மதம். ரொம்பச் சந்தோஷமும் கூட. ஆனால் ஒரு விசயம், என் தங்கை ஜானகிக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். அவள் கல்யாணம் ஆகாமல்  இருக்கும் போது எனக்கு நடந்தால் எங்கள் ஊரில் ஒரு மாதிரி பேசுவார்கள். அதனால் அவள் திருமணம் முடியவும் எண்கள் திருமணத்தை வச்சுக்கலாம்.” என்றான்.

ராத்தோட்களுக்கு அமுதன் பொறுப்பான அண்ணனாகப் பேசுவது, மிகவும் பிடித்தது. ரகுவீர் மனதில், "அந்த மிர்ச்சியை வழிக்குக் கொண்டு வருகிறது அவ்வளவு சுலபம் இல்லை." என நினைத்தான்.

அமரேன், "ஜமாயிஷா என் பாஞ்சி அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டாள். அவளுக்கு வருகிற மாப்பிள்ளை, காளை மாட்டை அடக்கவேண்டும், இளவட்டக் கல் தூக்கவேண்டும், ரேக்ளா வண்டி ஓட்டி ஜெயிக்கனும்." என வரிசையாகச் சொன்னார். "இதெல்லாம் அவளே சொன்னாளா மாமாஷா?" எனக் கேட்டான் அமுதன

"ஆமாம்." என ராத்தோட் குடும்பமே கோரஸ் பாடியது. ராகினி, சிவகுருவிடம், “உங்கள் மகள், எப்படி எங்க வீட்டு ஆளுகளை ட்ரைன் பண்ணி இருக்கா பாருங்கள்." எனச் சொன்னார். சிவகுரு சிரித்துக் கொண்டார், ஆனாலும் மகள் மனதில் என்ன ஓடுகிறதோ, என்ற கலக்கம் வந்தது.

பல்லாஜீ, "சிவா பயந்திடாத, அவள் கண்டிசனை விடப் பெட்டர் மாப்பிள்ளை கிடைப்பார்." என ரகுவீரைப் பார்த்தார். ராத்தோட்கள் சிவகுருவிடம் மகிழ்ச்சி தெரிவித்து, கட்டியணைத்து வாழ்த்திக் கொண்டனர்.

ராகினியிடம், பூனம் தன் மகிழ்ச்சியைக் கண்ணீராக வெளிப்படுத்தினார். ஷப்னம் ராகினியிடம், "அப்படியே உன் வீரூவின் ஷாதியை முடிவு பண்ணிட்டு போ ராகினி, எத்தனை ரிஸ்தா வந்தது, ஷாதினாலே ஓடுகிறான்." என மனக்குறையை வாசித்தார்.

தாதிஷாவும், "இவன் வயது லட்கா எல்லாம் இரண்டு பிள்ளைகள் பெற்றுத் திரிகிறது, இவன் மட்டும் மாட்டேன் என்கிறான்." எனப் பேரனைக் குறை சொன்னார். செகாவத் ஹவேலி கிளம்பலாம், நேரமாகிறது எனும் நேரம். அமர்சிங் டாக்கூர், சிருஷ்டியின் தந்தை ரத்தன்சிங் டாக்கூர், மேத்தாவுடன் ஹவேலிக்குள் உள்ளே வந்தார்.

 

மனதின் வார்த்தைகள் புரியாதோ
 37-அம்மா-மாஷா!!

 

அம்மா-மாஷா எத்தனை வயதானாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை தான் ஏது? எனது மகள் எங்கே இருக்கிறாள், என்ற ஒரு தாயின் ஏக்கக் குரலுக்குப் பதிலாக அந்த மகளின், "மாஷா!!!" என்ற அழைப்பு உயிர் வரை உலுக்கியது அந்தத் தாயை. கால்வலி, மூட்டு வலி இதெல்லாம் இருந்த இடம் மறந்து போனது மயூரா தேவிக்கு. மகளின் குரலில் இத்தனை வருடம் பிள்ளைகள் அழைத்ததில் எல்லாம் வராத நிறைவு, தன் செல்ல மகளின் மாஷாவில் நிறைந்தது. பெற்ற வயிற்றில் பாலை வார்த்தனர் அங்கிருந்த நல்ல உள்ளங்கள்.

அவர்களின் கண்ணீரில் கால் நூற்றாண்டை தாண்டிய பிரிவின் வலி இருந்தது. ராகினியை ஒரு புறம் அமுதனும், மறுபுறம் ரகுவீரும் பற்றியிருக்க, மகளைக் கண்ட தாதிஷா வேகமாக வரவும், அமரேன் தன அன்னையைத் தாங்கி தன்  தீதியிடம் அழைத்து வந்தார். தாயும், சேயும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

நடைத் தளர்ந்த தன் தாயினைப் பக்கத்திலிருந்த ஷோபாவில் அமர வைத்து, தன் தலையைத் தாயின் மடியில் வைத்து அழுதார் ராகினி. சில நிமிடங்கள் யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை, "நீ நல்லா இருக்கியா?" என உச்சி முதல் பாதம் வரை கண்ணைக் குறுக்கி ஆராய்ந்தது தாயின் பார்வை.

 தாதாஷா, அதிர்ச்சியில் சமைந்து நின்றார். யாரைத் தன் கண் மூடும் முன் பார்க்க வேண்டும் எனத் தவித்தாரோ, அவளைக் கண்ட பின்னே செயல் மறந்து, கண்ணீர் அருவி போல் கொட்ட இருந்தார்.

 கஜேந்திர தன் தீதியைப் பற்றிய உண்மை தெரிய வந்ததிலிருந்தே, தான் செய்த செய்கைக்கு வெட்கி, குற்ற உணர்ச்சியில் இருந்தவர், தனது தீதியின் முகத்தை பார்க்கவும், பக்கத்திலிருந்த தூணைப் பிடித்த வண்ணம் குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

ராஜேந்தருக்கு கண் முன் தங்கையை பார்த்த அதிர்ச்சியில், தன மாஷாவும் சோட்டியும் கட்டித் தழுவி கண்ணீர் வெள்ளத்தில் இருந்ததைக் கண்டு உணர்வு மிகுதியில் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதையும் அறியாமல் நின்றார்.

 ஷப்னம், தான் நின்ற இடத்திலிருந்த ராகினியை நோக்கி வந்திருந்தார். தனக்கு முடியாத போது தன் பிள்ளைகளை மடிதாங்கிய மாது அல்லவோ ராகினி.

 ஜானகி தன தாய் அழுததை பொறுக்க மாட்டாமல் அமிர்தாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள், அவளும் அதே உணர்வில் இருக்க மயூரி இவர்களை தேற்றினாள். “ஜானி நீ செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் நேரம் அழாதடி!“ என கட்டிக் கொண்டாள், பூனத்தின் பார்வை மாமியாரிடம் இருந்ததால் இவர்களை கவனிக்கவில்லை.

அமரேன் தன் பாபுஷாவை அசைத்ததில் உணர்வு பெற்றவராய் ராகினியிடம் வந்தார். "ஸ்வரூ பேட்டா, இஸ் ஹாரே பாபுஷா கோ மாஃப் கர்ணா!" (தோற்றுப் போன அப்பாவை மன்னித்துவிடு) என்று கை கூப்பியபடி வந்து நின்றார்.

அவரின் குரலில் தாய் மடியில் இருந்து நிமிர்ந்த ராகினி, "நஹி பாபுஷா, என்கிட்ட தான் குறை இருந்திருக்கும், யாரோ சொன்னதை நீங்க நம்பறதுக்கு என் குறையும் தான் காரணம்." என அவர்  கேவி பலமாக அழுதார். தன் தாய் அழுவதைப் பார்த்து, அமுதன் ஜானகிக்கும் பதறியது அவருக்கு புரை ஏறினாலோ, இது போல் உணர்ச்சி வயப்பட்டால் முடியாமல் போகும். தாயிடம் பாய இருந்த ஜானகியை ரகுவீர் தன் கண் பார்வையில் அடக்கினான்.

சிவகுரு பதட்டமாக வந்தவர் பக்கத்தில் இருந்த பர்க்காவிடமிருந்து தண்ணீரை வாங்கி, ராகினி அருகில் வந்தார். "எந்திரிமா, இப்படி அழுதா உடம்புக்கு என்ன ஆகிறது. போதும் நீ அழுதது எல்லாம்." என மெல்லக் கடிந்தவர், சிறு பிள்ளையைச் சமாதானம் செய்வது போல் அவரைத் தேற்றி தண்ணீர் அருந்த வைத்தார். சுற்றி இருந்த அனைவரும் அவர்களின் அன்யோன்யம் கண்டு வாயடைத்தனர். ராகினியை அவரின் தாய் அருகில் அமர்த்தியவர் ,

"நான் சிவகுரு நாதன், ராகினியின் கணவன். ஹேமந்தின் நண்பன். இவன் கல்யாணத்துக்கு வந்தபோது நடந்த சம்பவம் தான், விதியாக வந்து எங்களைச் சேர்த்தது. நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி ,எங்கள் கல்யாணம், லவ் மேரேஜ் கிடையாது. ஹேமந்துடன் வந்த போது ஓரிரு முறை ராகினியை பார்த்து இருக்கேன் அவ்வளவு தான். ராகினியின் தாதிஷா, அவளை என் கையில் கொடுத்த நொடி முதல் அவளுக்கு எதுவும் வரக் கூடாதுனு  முடிவெடுத்தேன். இங்கிருந்து ராகினியை அழைத்துப் போனது என் தாத்தா சுப்பையா அவர்கள், ராகினியின் தாதிஷாவுக்குக் கொடுத்த வாக்குக்காகத்தான்.” என, தங்கள் உறவை பற்றி பேச ஆரம்பித்தார் 

 “நாங்களும், தாத்தா,அப்பத்தா, அப்பா, அம்மா, அண்ணன் , தம்பினு,  உங்களைப் போல் கூட்டுக் குடும்பமாக வாழறவங்க தான், வீட்டில் நானும் என் தம்பியும் இருக்கும் போது மணமாகாத பெண்ணை அதே வீட்டில் வைக்கக் கூடாதுனு , என் தாத்தா அப்பத்தா ராகினியுடன் தனிக் குடித்தனம் இருந்தாங்க." எனச் சிவகுரு சொன்ன போது ஊர் பெரியவர்கள், தமிழரின் பெருந்தன்மை, ஒழுக்கம் பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொண்டனர்.

"ராகினியின் மனம் எங்கள் ஊரில் ஒட்டவே இல்லை , பிறந்த வீட்டினரை தேடிட்டே இருந்தது, அதனால் என் தாத்தாவே, அவளை மும்பைக்கு உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே." என்றார் சிவா.

"ஆமாம், ஒரு மாதத்துக்குப் பின் ஒரு பெரியவருடன் ராகினி வந்திருப்பதாக வேலையாள் வந்து சொன்னப்போ, நான் பார்க்க முடியாதுனு  மறுத்தேன் ஜீஜூஷா தான், அவர்களைப் பார்த்து பேசி அனுப்பினார்." என தாதாஷா வேதனையானக் குரலில் தன் நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்கும் உண்மையை அனைவர் முன்னும் சொன்னார்.

பைரவ் செகாவத், "சாலேஷா, நீர் சொன்னதைத் தான் நான் செய்தேன்." என்றார். ராகினிக்கு அந்த நேரம் அழுகையை மீறிய கோபம் வந்தது, "ஆமாம் செகாவத்ஷா, உங்களுக்குத் தானே எல்லாமே தெரியும், அதனால் பாபுஷாவை முந்திக்கிட்டு, வந்த நீங்க என்னை அனுப்புவதில் குறியாக இருந்தீங்க. சிவாவின் தாத்தா எவ்வளவோ, எடுத்துச் சொன்னாங்க , இவர் அவரையும் சேர்த்து அவமரியாதையாகப் பேசினார். எனக்காக உதவ வந்த பெரிய மனிதர், அவமானப் படுறதைத் தாங்க முடியாமல் நான் திரும்பிச் சென்றேன். என் கண் முன்னே, வீரூவை வேலையாள் அழைத்துச் சென்றான். அவனைப் பார்க்க கூட இவர் விடலை." என ராகினி கூறி முடிக்கையில் ரகுவீர் ராகினியை கட்டியணைத்து ஆறுதல் சொன்னான்.

"நீ போன பிறகு ஒரு மாதம் ரகுவி காய்ச்சலில் கிடந்தான் ஸ்வரூ, சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், நடுநடுவே, புவாஷானு கதறுவான். அவனுக்கு மாற்று இடம் தேவைனு  ஹரிணியோடு சேர்த்துப் போர்டிங் ஸ்கூலில் சேர்த்தோம்." என ராஜேந்தர் தன் தங்கையிடம், அவளைப் பிரிந்து தாங்கள் பட்ட கஷ்டத்தைச் சொன்னார்.

"ராகினி, என்னை விட அவன் உன் மடியில் தானே அதிகம் இருந்தான். என் பிள்ளை இப்படிக் கஷ்டப்படும் போது, இவனை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்ததுனு, உன்னை மனசில் ரொம்ப நொந்து இருந்தோம்." என்றார் ஷப்னம்.

"விதியின் விளையாட்டை என்ன சொல்றது பாபிஷா, எனக்கும் வீரூவைப் பற்றிய கவலை தான், அதே மனவருத்தில் இருந்த என்னைத் தேற்றிக் கொண்டு வர, சிவாவின் தாத்தா அப்பத்தா பெரும்பாடு பட்டாங்க ." என நிறுத்தினார் ராகினி.

"ராகினி அருகில் இருக்கையில் எனக்கும் அவள் மீது ஈடுபாடு வந்தது, ஒரு முறை வெள்ளி மலைக் கோவிலில், என் கையில் இருந்த குங்குமம் ராகினி நெற்றியை நிறைக்க, அது கடவுள் ஆசி என ராகினியிடம் கல்யாணத்திற்குச் சம்மதம் கேட்டார்கள், எங்கள் குடும்பத்தினர்." என சிவகுரு, தன் மனதையும் மறைக்காமல் சொல்ல, 

ராகினி, "அடைக்கலம் தந்தது பாவமா, சிவாவைக் கட்டாயப்படுத்தாதீக  , நான் இப்படியே இருந்துடுவேன்னுச்  சொன்னேன், ஆனால் சிவாவின் தாத்தா, என் தாதிஷாவிடம் பேசி சம்மதம் வாங்கினவர், நான் அறியாமல் திருமண ஏற்பாடுகளையும் செய்தார். திருமணத்திற்கு இரண்டு நாள், முன்பு தாதிஷா வந்து சேர்ந்தாங்க. என்னை எனக்கே புரிய வைத்து, சிவாவிற்கும் என் மீது பிரியம் இருப்பதைப் புரிய வச்சாங்க ." என அந்த நாள் நினைவில் நிறுத்தினார் ராகினி.

பாண்டே தொடர்ந்தார், "சிவா, ராகினி திருமணம்னு  எங்களுக்கு அழைப்பிதழுடன், விமான டிக்கெட்டும் வந்துச்சு, நாங்க மூன்று பேரும் ,சிறுமலையில் ஆஜரானோம். சகல சீர் வரிசைகளுடன், தன் பரம்பரை ராஜ நகைகளும் பூட்டி, அந்த மலையே வியக்கும் வண்ணம், தாதிஷா ஸ்வர்ண மஹாலக்ஷ்மி தன் பேத்தி ஸ்வர்ண ராகினியை கன்னிகாதானம் செய்து வைத்தார். " எனப் புகைப்படத்தைக் காட்டினார் மங்கள் பாண்டே. அதனை வாங்கிப் பார்த்த தாதாஷா தன் தாயின் தனித்துவம், தைரியம், தூரதிருஷ்டியை எண்ணி வியந்தார். தாதிஷா தனது மாமியாருக்கு மனதார நன்றி சொன்னார்.

ராகினி, சிவகுரு நாதன் திருமணப் புகைப் படத்தைப் பல பிரதிகள் எடுத்துக் கொண்டு வந்திருந்தார் பாண்டே. அந்தப் புகைப்படங்களை அனைவரும் பார்க்கும் வண்ணம், ஊர்க்காரர்கள் கையில் கொடுத்தனர். ராகினி இராஜபுத்திர மணமகளைப் போலவும், சிவகுரு தமிழர் மணமகனாகவும், உடை அணிந்து இரண்டு முறைப்படியும் மந்திரம் ஓதி முறைப்படி நடந்தது அவர்கள் திருமணம்.

இப்போது, உதய்பூர் வாழ் இராஜஸ்தானிகள், சிவகுரு நாதனிடம் , "எங்கள் குலத்துப் பெண்ணை நாங்கள் விரட்டி அடித்தோம், நீங்கள் பெருந்தன்மையுடன் அவளை உங்கள் வீட்டு ராணியாக ஏத்துக்கிட்டு, நாங்கள் சிதைக்கத் தெரிந்த பெண்ணின் மானத்தை நீங்கள் காப்பாற்றி இருக்கீங்க  நன்றி." எனக் கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

 "அது மட்டும் இல்லை காகாஷா, நம்ம ராகினி தீதீஷா பெரிய ஸ்கூல் வச்சு  நடத்துறாங்க. இவர்களைப் பெரிய கல்வியாளர், முன்னோடி எனத் தமிழ்நாடே கொண்டாடுகிறது." என அமரேன் பெருமையாகச் சொல்லி, சில செய்தித்தாள்களை  காட்டினார்.

அதைப் பார்த்துப் பெருமை பட்ட இராஜஸ்தானிகள், "பேட்டிஷா, நமது ஊருக்கும் இதுமாதிரி ஸ்கூல் ஆரம்பிக்கவேண்டும். எங்கப் பொண்ணு எவ்வளவு பெரிய ஆளென்று நாங்களும் சொல்லுவோம்." எனக் கூறினர்.

"கட்டாயம் காகாஷா, நான் பிறந்த மண்ணுக்குக் கட்டாயம் செய்வேன்." என ராகினி அவர்களுக்கு வாக்குத் தந்தார். ஊர் பெரியவர்கள், தாங்கள் முன்னர்ச் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து ராகினியை ஆசீர்வதித்து விடைப் பெற்றனர். அவர்களுடன் பைரவ் செகாவத்தையும் அனுப்பி வைத்தார் ஹேமந்த்.

“கம்மகானி பாபிஷா, உங்கள் ஷாதி அன்று நடந்ததை நாங்களும் தப்பாக நினைத்திருந்தோம், இப்போ புரியுது உங்களது அருமை. உங்களை காப்பாற்றிய பாயிஷாவுக்கும் நன்றி.” என அமர்சிங்கின் அப்பா ரத்தன் சிங் டாக்கூர் ஊர் பெரியவராகப் பேசினார். அவரை ராஜேன், ஹரிணியின் மாமனார் டாக்கூர் குடும்பம் என தங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பல்லாஜீ, பாண்டே சாப், ரெட்டிகாரு குடும்பத்தினரை வரவேற்று, உள்ளே ஹால் பகுதியில் உட்கார வைத்து, அவர்களைத் தன் அம்மா பெரியம்மாவுடன் அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள் மயூரி. ஹரிணியும் உடன் இருந்ததால் ஒரே மகிளா மண்டலாக இருந்தது.

ஜானகி, அமிர்தாவும், ராகினி, சிவகுரு அறியாமல் அவர்களுடன் அன்பை பரிமாறிக் கொண்டிருந்தாள். ப்ரீத்தோ, பர்க்காவை அணைத்துக் கொண்டு, ஜானகி "தாங்க்யூ மாமிஜீ!" என நெகிழ்ந்து நின்றாள். பம்மியும், மஞ்சரியும் அப்போது அங்கு வந்து இணைந்தனர்.

எல்லாம் சுமூகமாக முடிந்த மகிழ்வில் இருக்கும் போது, "மண்ணே மாஃப் கர்ணா தீதிஷா!" எனக் கஜேந்தர் ராகினியின் கால்களில் விழுந்தார்.

"கஜேன், இதெல்லாம் என்ன? சும்மா இருடா. ஏதோ கெட்டக் காலம் அதை மறந்துடுவோம்." என்றார் ராகினி

"தீதீஷா, எல்லாருக்கும் நான் செஞ்ச தவறு தெரியனும் . பூஃபாஷா, குல கௌரவம் உன்னால் கெட்டதுனுச் சொல்லி, சொல்லிக் கேட்டு நானும் அப்படியே கோபத்தில் இருந்தேன். உன்னைக் கர்ப்பமாகப் பார்த்த போது, இவள் சந்தோஷமா இருக்கா, நாம தான் அவமானப் பட்டு இருக்கோம்கிற  கோபம் வந்தது. உன்னையும், ஜீஜூஷாவையும் அப்படிப் பேசி அனுப்பிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க, ஜீஜூஷா!" எனச் சிவகுருவிடமும் மன்னிப்பு கேட்டார்.

"இரண்டு வாரம் முன்பு  மயூரி கேட்ட கேள்வியில் நீ வந்து போனதை மாஷாகிட்ட பல வருடம் கழிச்சுச் சொன்னேன். மாஷா, என்னைப் பார்த்த பார்வையில் பேசிய பேச்சிலும் அன்னைக்கே மடிந்து போனேன். மாஷா, உனக்கும் ஒரு பொண்ணு இருந்தால் தெரியுமென்று சொன்னாங்க. அப்புறம் தான், ஹரிணி, மயூரிகிட்ட கூட நான் அப்பா மகள் அன்பை உணரவில்லைங்கிறதும் புரிஞ்சது.” என நீளமாகப் பேசி மன்னிப்பு வேண்டினார்.

ராகினி சிவகுருவைப் பாக்கவும், “போனதெல்லாம் போகட்டும் விடுங்க கஜேன், இனியாவது உங்க தீதி உங்களையெல்லாம் நினைச்சு கண்ணீர் விடாமல் இருந்தால் சரி. உங்க தீதி விட்டக் கண்ணீரில் தான், சிறுமலைத் தண்ணீர் பஞ்சமே தீர்ந்தது.” என வேடிக்கையாகப் பேசி சூழ்நிலையை சகஜமாக்கப் பார்த்தார்.

“ஜிஜுஷா உங்க பழ வியாபாரம் வெற்றிகரமா நடக்க எங்க தீதிதான் காரணமுன்னு ஒத்துக்குறீங்க.“ என அமரேன் கேலி பேச்சிலேயே அவரோடு அறிமுகம் ஆனார்.

“உங்க தீதி கண்ணீர் மட்டுமில்லை, ராகினி அழுகுதுன்னு,போன் போட்டு உங்க ஜிஜு எங்கள் கிட்ட அழுவான், அந்தத் தண்ணீரும் சேர்ந்து பாய்ந்தது.” என்றார் பாண்டே. அவர்கள் அன்பில் நெகிழ்ந்த அனைவரும் சிரித்தனர்.

“பொண்டாட்டி அழுதால், புருஷன் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.” என்றார் தாதாஷா . “மாமாஷா, இது நூற்றில் ஒரு வார்த்தை.” என்றார் சிவகுரு. ஆமோதிக்க பெண்கள் முறைத்தனர்.

ரகுவீர் ஜானகியைப் பார்க்க அவளும் முறைத்தாள், உனக்கு இருக்கு , இருடி என நினைத்தவன் கஜேனைத் தூண்டிவிட்டான்.

“சசாஷா, உங்க மனசு எப்படி மாறுச்சுன்னு சொல்லவே இல்லையே?“ என ரகுவீர் எடுத்துக் கொடுக்க, 

“ஆமாம், தீதி ,எனக்கு இரண்டும் பையன்தான், மகள் இல்லைனு ஒரு போதும் நினைக்கலை ஆனால் எங்கிருந்தோ வந்த அந்தத் தேவதை, எனக்கு மகளின் பாசத்தை உணர்த்தினா, இவளைப் போல மகளை எனக்கு ஏன் கடவுள் தரலைனு  ஏங்கினேன்." என்றவர், "ஜானகி பேட்டா இங்க வாடா!" என அழைத்தார் கஜேந்தர்.

ஜானகி, தயங்கி தயங்கி மெல்ல அடி எடுத்து வைத்து வந்தால். முகத்தை மறைத்து முக்காடு வேறு. உண்மை தெரிந்த அனைவரும் சிரித்தனர்.

ரகுவீர் தான் முன்னே வந்து, "சாசாஷா, உங்களை மாற்றின தேவதை முகத்தைப் புவாஷா, பூஃபாஷா பார்க்க வேண்டாம். முக்காட்டை எடுக்கச் சொல்லுங்கள். முஹ் திகாயீ நடக்கட்டும்." எனத் தூண்டி விட்டான்.

ஜானகி  முக்காட்டுக்குள் இருந்து ரகுவீரை முறைத்தாள், அவன் காலை யாரும் அறியாத வண்ணம் மிதிக்கப் பார்த்தாள், ரகுவீர் சுதாரித்து நகர்ந்தான்.

கஜேனையே மாற்றிய பெண் யாராக இருக்கும் என ராகினி ஆவலாகப் பார்க்க அவள் மாட்டேன் எனத் தலை ஆட்டினாள். ”அப்படி எல்லாம் விட முடியாது.” என்றவன், ”புவாஷா உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறதே, அவள் பேரென்ன?” எனக் கேட்டான். "அவள் ஜானகி தேவி!" என்றார் ராகினி.

"அந்த ஜானகியும்,இந்த ஜானகியும் ஒன்று தானா பாருங்கள்!" என ரகுவீர் அவள் முக்காட்டை விலக்கினான். உள்ளே ஜானகி தலை கவிழ்ந்து நின்றாள். முகத்தை நிமிர்த்திக் காட்டினான் ரகுவீர். ஜானகி, ராகினி மகளா என எல்லாருக்கும் அதிர்ச்சி.

 "ஜானும்மா, நீ எப்படி இங்க. இங்க என்னடி பண்ற மும்பையில் ட்ரைனிங், ப்ராஜெக்ட்னு சொன்ன அமிர்தா எங்க?” என ராகினி அதிர்ச்சியாகி கேள்விகளை அடுக்கினார். "அத்தை இங்க இருக்கிறேன்." என அவளும் ஆஜரானாள்.

 "ஸுனியேஜி, எல்லாம் நீங்க கொடுக்கிற இடம், நமக்குத் தெரியாமல் எங்க வந்து உட்கார்ந்து இருக்காப் பாருங்கள்." என டீச்சர்- அம்மாவாகக் காதை திருகினார்.

"மாதாஜீ விடுங்க வலிக்குது, வலிக்குது அப்பா ஜான், மாதாஜீயை விடச் சொல்லுங்கள் வலிக்குது." என நாடகமாடினாள்.

"ஜானும்மா இந்த அப்பா ஜானையும் சீட் பண்ணியிருக்க நான் இப்போ சப்போர்ட் பண்ண மாட்டேன்." என்றார் சிவகுரு. ரகுவீர் தன்குட்டிப் பிசாசின் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

"ராகினி விடுமா என் நாதியை." எனத் தாதாஷா சொல்ல. தாதிஷா, தன் அருகில் ஜானகியை அழைத்துக் கொண்டு, ராகினி அவளைப் பிடிக்க விடாமல் தடுத்து நின்றார்.

"தீதீ அவள் தன் மாமா வீட்டுக்குத் தானே வந்தாள் விடுங்கள்." எனக் கஜேந்தரும். "எங்க முன்னாடி எங்கள் பாஞ்சியை எதுவும் சொல்லக்கூடாது." என ராஜேந்தரும் சப்போர்ட் செய்தனர். "சும்மாவே ஆடுவாள் இப்போ நீங்களும் சப்போர்டா?" என ராகினி நொந்து கொண்டார்.

"ஸ்வரூ, இவள் உன் மகள்னா, அந்தப் பையன் மும்பை வந்ததே அவன் தான் உன் மகனா?அப்போ ஸ்வரூ உன் வீட்டில் தான் இருந்தாளா " எனக் கேட்டார் தாதாஷா. 

ஜெய்பல்லா, "அம்மு பாயீ, அடுத்து உங்கள் காதை திருகுவார்கள் புவாஜீ!" என்றான். "அமுதன் பாயீ வாங்க." என ரன்வீர் அழைத்து வந்தான்.

"வணக்கம் நானாஷா, நானிஷா!" என அவர்களது காலைத் தொட்டு வணங்கினான். அவனைக் கட்டியணைத்த தாதிஷா, அமுதன் நெற்றியில் முத்தமிட்டு நூறுவருஷம் வாழவேண்டும் என வாழ்த்தினார்.

 

"பாயீஷா என் மூத்த மகன், அமுதன்." என ராஜேன், கஜேன், அமரேனுக்கு அறிமுகம் செய்து வைத்தார், அவர்களையும் வணங்கினான்.

“ஜானகியின் அண்ணன் எனத் தெரியும், இப்போது உன் மகனாக அறிமுகம்." என்றனர். ராகினியும், சிவகுருவும், "தம்பி நீயும் எங்ககிட்ட மறைச்சிட்டியே?" என அங்கலாய்த்தனர்.

ராஜ்வீர், ரன்வீரை அழைத்து ராகினி, சிவகுருவிடம் அறிமுகப் படுத்தி வைத்தார் கஜேந்தர். ஹரிணி வந்து ராகினியை அணைத்துக் கொண்டு, தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தாள்.

ரகுவீர் அங்கிருந்த பெரியவர்களிடம், "இது தெரியாதவங்க  நாம தான்.” எனவும், ராஜ்வீரும் அமுதனும் ஒன்றாக லண்டனில் எம்பிஏ படித்தது,  அங்கே அவர்களுக்குச் சொந்தம் எனத் தெரிந்தது. அமுதன், தன் அம்மா, பிறந்த வீட்டோடு சேர்க்க நினைத்தார் , மயூரி, ஜான்வியை ஒரே காலேஜில் சேர்த்து, ப்ராஜெக்ட்க்கு வந்தது, அதன் ஒரு பகுதி, மயூரிக்கு புவாஷா வீட்டுக்கு போனபின்பு தான் தெரியும்." என அவன் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல எல்லாருக்கும் வியப்பு மேலிட்டது.

இதற்கிடையில் பல்லாஜீ குறுக்கிட்டு, "புத்தர்ஜீ, இதில் மூலகர்த்தா ஒரு ஆள் இருக்கான்,.உங்களுக்கு அது தெரியாது." என்றார். அனைவரும் யார் என்பது போல் பார்த்தனர்.

"ஹேமந்த்தான் இதன் மூலக் கர்த்தா. அமுதனையும், ராஜ்வீரையும் லண்டனில் சேர்க்க வைத்தது அவன் தான். தன் மகள் ஷாதிக்கு முன்னாடி எல்லாரையும் ஒன்றாகச் சேர்க்க ப்ளான் போட்டது." என்றார் பல்லாஜீ.

சிவகுரு நெகிழ்ந்து போனார், "ஹேமா எங்களுக்காக இவ்வளவு யோசிச்சியாடா?" என அவர் கையைப் பிடித்துக் கொண்டார்.

"நான் என்னடா செஞ்சேன், நீயும் ராகினியும் எங்களால் பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லை." என நண்பனை தழுவிக் கொண்டார்  ஹேமந்த். 

வந்த வேலை, சுமூகமாக முடிந்த திருப்தியில், "சரி வாங்கப்பா, சாயந்திரம் மெஹந்தி இருக்கு,  இப்ப வாங்க மதிய சாப்பாடு சாப்பிடலாம்." என தன் ஹவேலிக்கு  ஹேமந்த் அழைக்க, 

"பூஃபாஷா, இங்கேயே எல்லாருக்கும் லன்ச் அரேன்ஞ் பண்ணிட்டேன். எல்லாமே ரெடி, நீங்க இங்கே உங்கள் நன்பர்களோட சேர்ந்து சாப்பிடுங்கள் அப்புறம் தெம்பா மெஹந்தி செர்மனியை வச்சுக்கலாம்." என்றான் ரகுவீர்.

ராஜேந்த், "சந்தோஷமான இந்த நேரத்தில், மதியம் சாப்பாடு தயார் வாங்கச் சாப்பிடலாம்." எனக் கூப்பிட்டார். ராத்தோட் ஹவேலி மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது. ராகினியை அழைத்துச் சென்ற பாபிஷாக்கள், அவரை அன்பு மழையில் நனைத்தனர். ஸர்குனை ராகினிக்குத் தெரியும், பூனமும் சிறுவயதில், ஷப்னம் ஷாதியில் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.

மதிய உணவுக்குப் பின் பெரியவர்கள் இளைப்பாறினர். சிறியவர்கள் மேல் மாடியில், ஒன்றாக அமர்ந்து கேலி கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.

 

 

மனதின் வார்த்தைகள் புரியாதோ
36- எங்கே என் மகள் 

 

 ராத்தோட்களின் ஹவேலியின் முன்னே வரிசைக் கட்டி நின்றது, செகாவத் குடும்ப வாகனங்கள். ஹேமந்த் செகாவத் தன் பெரியப்பா பைரவ் சிங் செகாவத்துடன் வந்து இறங்கினார். ஹேமந்த் தன் நண்பர்கள் மூவரையும், தான் சொல்லும் போது வீட்டிற்குள் வருவது போல் பக்கத்தில் ஓரிடத்தில் நிறுத்தியிருந்தார்.

 வீர் பிரதர்ஸ் அண்ட் அமரேனுக்கு விசயம் தெரியும், ஒரு சிசி டிவி கேமராவில் பதிந்து, மொபைலில் பார்க்கும் படி, மற்றவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான் ரகுவீர்.

 தாதாஷா, தாதிஷா, ராஜேன், மற்றும் கஜேந்தரிடம, “ராகினி தீதீஷா ஷாதி அன்று நடந்த விசயம், கொஞ்சம் நேரத்தில் வெளியே வரும், பைரவ் பூஃபாஷா, வர்றார். அவர் பேசுற விசயத்தை அனுசரித்துப் பேசுங்கள். கொஞ்சம் கெத்தாகக் கோபத்தை மெயிண்டைன் பண்ணுங்கள்.”என அமரேன் ஹிண்ட் கொடுத்து வைத்தார்.

 "மாம்ஸ், என்ன நிறைய இன்ஸ்ட்ரக்ஸன் குடுத்துட்டு இருக்கார் என்ன விசயம்." என ஜானகி, மயூரியிடம் கேட்டாள்.

 "மஞ்சரி குடும்பத்திலிருந்து வர்றாங்க , நாம அவங்க மேல் கோபமா இருக்க மாதிரி மஞ்சரி ஷாதியில் பிரச்சனை மாதிரி கொளுத்திப் போட்டு இருக்காங்க. அது தான் ஊர்காரங்களோட வர்றாங்க. பாபுஷாகிட்ட, கொஞ்சம் முன்னாடி பூஃபாஷா பேசினார். அப்புறம் அமுதன், ராகினி புவாஷா, பூஃபாஷா, அவர்கள் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும், ரீச்சபில் டிஸ்டன்ஸ்ல இருக்காங்க. சரியான நேரத்தில் ஒவ்வொருத்தரா எண்டரி ஆவாங்க." என விளக்கினாள் மயூரி.

 ராஜ்வீரை முன்னால் வராமல் மறைத்து நிற்க வைத்தனர். ரன்வீர் வீட்டின் வாசல் பக்கம் எதற்கும் தயாராக நின்றான்.

 "தாதிஷா, மாஷா, சாசிஷா, இங்க செகாவத் குடும்பம், ஊர்காரங்களோட வர்றாங்க . தாதிஷா நீங்க அவர்களைக் கூட்டி, நியாயம் கேட்க சொன்னீங்களே, இப்ப அதுதான், ஹேமந்த் பூஃபாஷா அரேன்ஞ் பண்ணியிருக்கார்." என்றான்  ரகுவீர்.

 ரகுவீர் ஜானகியிடம் கண்களால் பக்கத்தில் அழைத்து, "கொஞ்ச நேரம் அமைதியாக நடக்கிறதை வேடிக்கைப் பாரு. உணர்ச்சி வசப்படக் கூடாது. யார் கவனமும்  உன் மேல் வரக் கூடாது. நான் காரணமாகத்தான் சொல்கிறேன்." என அமர்ந்த குரலில் ரகுவீர் சொல்ல, சரி எனத் தலை ஆட்டினாள் .

 ஹேமந்த் கைகளைக் கூப்பிய வண்ணம், "கம்மாகனி மாமாஷா! மாமிஷா." என்றபடி உள்ளே வந்தார். அவர்கள் ஓர் தலையசைப்புடன் திரும்பிக் கொண்டனர். பைரவ் செகாவத், ராம் ராம் சாலேஷா, என்றபடி உள்ளே வந்தார். என்ன இருந்தாலும் அவர் தமது தீதிஷாவின்  கணவன் என்ற முறையில் வணக்கம் மட்டும் தெரிவித்தார் வீரேந்திர சிங் ராத்தோட்.

கஜேந்தர் எல்லாரையும் உட்காரச் சொல்லி இருக்கைகளைக் காட்டினார். அந்த ஊரில் உள்ள, முக்கிய இராஜஸ்தானி பெரிய குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தார் ஹேமந்த். ராகினியின் களங்கம் துடைத்து, அவள் வீட்டினருடன் சேர்த்து வைத்து, தனது நன்றி கடனை அடைப்பது அவரது தலையாயக் கடமை என இருந்தார்.

 எல்லோரும் வாங்க உட்காருகங்க என்று குளிர்பானம் பரிமாறினர். பெண்களில் தாதிஷா, ஹாலின் உட்புறத்தில் அமர்ந்திருக்க, ராத்தோட் பஹூராணிகள், முக்காடு போட்டு பக்கத்து ஷோபாக்களில் என்ன பிரச்சனை வருமோ எனக் கலக்கத்துடன் அமர்ந்து இருந்தனர். மயூரி, ஜானகி, அமிர்தா பின்னால் நின்றனர்.

 சரியாக அதே நேரம், ஹரிணி குடும்பத்தினரான டாக்கூர் பரிவாரும் வந்து சேர்ந்தனர். ரகுவீர் அவர்களை வரவேற்றான். ராத்தோட்கள் சம்பந்தியை முறைப்படி வரவேற்று அமர வைத்தனர். பெண்கள் உட்கட்டுக்குச் சென்று தாதிஷாவுடன் அமர்ந்தனர். அமர்சிங், அவரது தந்தையும் இந்தக் கூட்டத்தில் அமர்ந்தனர்.

"ஊர் பெரியவர்கள் எல்லாரும் ஒன்றா வந்திருக்கிங்க , எதுவும் முக்கியமான விசயமா?" எனக் கேட்டார் அமர்சிங் டாக்கூரின் தகப்பனார். இவர்கள் குடும்பத்துக்கு எனத் தனி மதிப்பு அந்தப் பகுதியில் உண்டு.

 "நாங்களும் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தோம் சம்பந்ஷா." என்றார் ராஜேந்தர்.

ஹேமந்த்தான் பேச்சை ஆரம்பித்தார் "எங்களை மன்னிக்கவும் மாமாஷா! எனக்கும், ராகினிக்கும் நடக்க இருந்த ஷாதி அன்று நடந்த அத்தனையும்  என்னுடைய தவறு தான். இதற்காக என் மகள் மஞ்சரி வாழ்கையில் பிரச்சினை வருவதை நாங்கள் விரும்பவில்லை." என்றார்.

 கஜேந்தர், "இப்போது இதைப் பேச என்ன அவசியம் வந்தது ஜீஜூஷா?" எனக் கேட்க,  குட்டு உடைந்து விடுமோ எனப் பயந்த அமரேன்.

 "ஏன் அவசியம் இல்லை பாயிஷா, நாமும் நம்ம தீதீஷாவை இத்தனை வருடமாகப் பிரிஞ்சு இருக்கோம். அதற்கான தண்டனை நமக்கு மட்டும் தான். ஹேமந்த் ஜீஜூஷா, பங்குரி தீதீஷாவோட சந்தோஷமாகத் தான் இருக்காங்க, நான் அதைத் தவறென்று சொல்லலை. ஆனால் நம்ம ராகினி தீதீஷாவை பிரிஞ்சு  எவ்வளவு மனக்கஷ்டம் அனுபவிக்கிறோம்." என அப்புறம் பார்க்கலாம் என ராத்தோட்ஸ் தள்ளிப் போட்ட விசயத்தை ஊதி விட்டார்.

 தாதிஷா, மயூராதேவி பெண் சிங்கம் போல் முன்னே வந்தார், "சப்கோ கம்மாகனி, பெண்கள் நடுவில் பேச அனுமதிக்க மாட்டீர்கள். ஆனாலும், பாதிக்கப்பட்டது என் குடும்பம். நான் பெற்ற மகள் அவளை யாரோடு ஓடிப்போனதாக!" என்று சொல்லும் போது உடைந்தவரை ரகுவீர், தோளோடு தாங்கினான் பேரன் ஆதரவில் தொடர்ந்து, "ஓடிப் போனதாக இந்த ஊர்க் கதை கட்டியது, அது தவறு, என் மகள் ஒரு தவறும் செய்யவில்லனு  என், சாசுமா மாஷா ஸ்வர்ண மஹாலக்ஷ்மி மரணிக்கும் தறுவாயில் சொன்னார்கள். அது சரியென்றால் எனக்கும் என் மகளுக்கும் நியாயம் வேண்டும்." என்றார்.

கூட்டத்தில் அமைதி நிலவியது. தாதாஷா, வீரேத்தர் ராத்தோட், "நானும் என் மகளைத் தவறாகத் தான் நினைச்சேன், பைரவ் ஜீஜூஷா சொன்னதை நம்பி, குல கௌரவம், இன மானம் எனச் சொல்லி என் பேட்டியைத் தள்ளி வைத்தேன். ஒரு மாதத்தில் திரும்ப வந்த என் மகளை ஜீஜூஷா தான் , திரும்ப அனுப்பி வச்சார். எனக்கு நான் கண்ணை மூடும் முன் என் மகளிடம் மன்னிப்பு வேண்டும். நான் என் மகளைக் காக்கத் தவறிய, ஒரு தோற்றுப் போன தந்தை. எனக்குப் பதில் சொல்லுங்கள்." எனக் கோபத்தோடு ஆரம்பித்துக் கதறலில் முடித்தார்.

 ஜானகி, மயூரி, அமிர்தா அனைவரும் ராகினியை நினைத்துக் கலங்கி இருந்தனர். இதை மொபைலில் பக்கத்துக் கட்டிடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராகினி கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார். பக்கத்தில் அமர்ந்து அவரை அணைத்துத் தேற்றினார் சிவகுரு.

 ஊர் பெரியவர் ஒருத்தர், "ராத்தோட்ஷா, நீங்க பெத்தவரு அதனால் அப்படிப் பேசுகிறீங்க, ஆனால் நமது இனத்துப் பொண்ணு படி தாண்டுனா அது தவறான முன்னுதாரணம் தானே, நீங்க அப்ப எடுத்த முடிவு சரிதான்." என்றார்

ஜானகிக்குத் தன் தாயைச் சொல்லவும் சுள்ளென ஏறியது, இதை எதிர்பார்த்த ரகுவீர், அவளைக் கண்களால் அடக்கினான்.

 பெரியவர் பேச்சில் குறுக்கிட்ட ரகுவீர், "என் புவாஷா ஷாதியின் போது, எனக்கு நான்கு வயது. அந்த ஷாதி ஏற்பாட்டில் புவாஷாவின் சம்மதம் இருந்தது. ஷாதி அன்னைக்கு இரவு எங்கள் பர்தாதிஷா, புவாஷாவின் கையை ஒரு ஆடவர் கையில் கொடுத்து அனுப்பினார், புவாஷா அழுதுட்டே போனாங்க, இதற்கு நானும் என் தீதீஷா ஹரிணியும் சாட்சி." என்றான்.

 "ஆமாம், நானும் பார்த்தேன். பூஃபாஷா தலையில் ஓர் காயம் பட்ட கட்டு இருந்தது." என ஹரிணி டாக்கூர் நினைவு கூர்ந்தாள்.

 "ஓடிப் போனதாகச் சொல்லப்படும் பெண் இரண்டு முறை திரும்ப வந்து குடும்பத்தினரைச் சமாதானம் செய்ய மாட்டா. பூஃபாஷா தான் இதற்குப் பதில் சொல்லனும் ஏன்னா முதலில் என் தங்கை மீது பழி போட்டதே அவர் தான்." என ராஜேந்தரும் வாயைத் திறந்து பேசினார்.

 உன்மை மெல்ல வெளி வருவதைக் கண்ட பைரவ் செகாவத், சமாளிக்கும் விதமாக, "ஹேமந்தின் நண்பன் தான், ராகினியை கூட்டிச் சென்றான். ராகினிக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்கனும், இல்லைனா  ஏன் பங்குரியை மாற்றி உட்கார வைத்து அவள் போகவேண்டும்?" என்றார் விடாப்பிடியாக.

 "பாய்ஷா, உங்கள் வீட்டுப் பொண்ணு இங்க வாழ்ந்துட்டு இருக்கு , அடுத்தத் தலைமுறையும் இங்க வரக் காத்துக்கிட்டு இருக்கு. வார்த்தையை விட்டுறாதீங்க. நாங்கள் ராத்தோட், எங்கப் பொண்ணை முறை தவறி வளர்க்கவில்லை." எனக் கடுமையாகச் சொன்னார் மயூரா தேவி.

 "பாபுஷா நானும் பங்குரியை விரும்பினேன், அதனால் ராகினி விட்டுக் கொடுத்து தன், ஒன்று விட்ட தங்கையை மனை ஏத்துச்சு." என்றார் ஹேமந்த்.

 "சரி அப்படியே வச்சிக்கோ, ராகினி தைரியமாச் சொல்ல வேண்டியது தானே ஏன் ஓடிப் போகவேண்டும்?" என்றார் கிழட்டு நரி.

 "அதுக்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம்." என்ற கோரஸ் சத்தத்தில் எல்லாரும் வாசலைப் பார்த்தனர்.

 அங்கே, ஹேமந்தின் திட்டப்படி பல்லா, பாண்டே, ரெட்டி நின்றனர். மூவரும் வயதுக்கேற்ற தோற்றம், பிஸ்னஸ் அனுபவம் தந்த கம்பீரத்துடன் அவர்கள் நின்றனர். ஹேமந்த் இவர்கள் என் நண்பர்கள் என் ஷாதி அன்று ராகினிக்கு உதவியவர்கள் எனக் கூறினார்.

 பைரவ் செகாவத் ஒரு நொடி அதிர்ந்து பின் பலி ஏற்றுக் கொள்ள இவர்களே வந்துட்டாங்க என மனதில் சந்தோஷம் அடைந்தார். "இவர்கள் தான் நம்ம வீட்டுப் பெண்ணைக் கூட்டிட்டுப் போனது." எனப் பழி போட்டார். 

"ஹலோஜீ நடந்த உண்மையை நாங்களும் சொல்றோம் எங்கப் பக்கமும் கேளுங்கள். " என்றார் ஓம்பிரகாஷ் பல்லா.

 "நீங்க என்ன சொல்லப் போறீங்க , எங்க ராகினி எங்க இருக்கா?" என பதட்டமாக வினவினார்  ராஜேந்தர்.

 "முதல்ல, அன்னைக்கு  நடந்ததைக் கேளுங்க, முகூர்த்த நேரத்துக்கு முன்னால் நாங்கள் எங்கள் அறையிலிருந்து உங்கள் வீட்டுக்கு வரும் சமயம் ஒரு பொண்ணு ஏரியில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தது. நாங்கள் தான் காப்பாற்றினோம். அப்புறம்  தான் அந்தப் பெண்ணை உங்கள் வீட்டில் பார்த்த ஞாபகம்.நாங்க தகவல் கொடுக்க, சற்று நேரத்தில் ஹேமந்த், ராகினி இருவரும் அங்கே வந்து சேர்ந்தாங்க." என நிறுத்தினார் பாண்டே.

 "ராகினி தான் பங்குரியை விசாரித்தது, அப்போது தான் பங்குரியும் ஹேமந்த்தும் விரும்பும் விசயமே தெரிந்தது. ராகினி இந்த ஷாதியை நிறுத்தலாம்னுச் சொல்லும் போது, ஹேமந்தும் ஒத்துகிட்டான். ஆனால் பங்குரி இதற்குச் சம்மதிக்கல, தான் சாகிறது தான் ஒரே முடிவு எனப் பிடிவாதம் பிடித்தது." என நிறுத்தினார் ரெட்டி.

 "அதன் பிறகான யோசனை ராகினியுடையது. பங்குரியும் எங்கள் குடும்பத்து பொண்ணு தான் அதனால் ஷாதி முடியவும் ,தெரியும் போது ஏத்துக்குவாங்க எனச் சொன்னது.” என்றார் ஹேமந்த்.

 "பங்குரி வாழ்க்கை சரி, ராகினியின் வாழ்க்கை என்ன ஆகுமென்று நீ யோசிக்கவில்லையா ஹேமந்த்?" என்றார் தாதாஷா.

"நானும், இதைச் சொல்லி மறுத்தேன் மாமாஷா, ஆனால் ராகினி, என் பாபுஷாவுக்கு என் மேல் நிறையப் பாசம், நம்பிக்கை எல்லாம் உண்டு, நான் எது செய்தாலும் சரியாக இருக்குமென்று சொல்லுவார்கள், அதனால் நான் அவரைச் சமாளிச்சுக்குவேன். தாதிஷாவும் புரிஞ்சுபாபாங்க எங்கள் குடும்பம் எனக்கு ஆதரவுத் தரும் எனச் சமாதானம் சொல்லி தன் இடத்தைப் பங்குக்குத் தந்தது ராகினி." எனக் கண்கலங்கினார் ஹேமந்த்.

 இதைக் கேட்டவுடன் தாதாஷா மிகவும் காயப்பட்டுப் போனார். "ஸ்வரூ, நான் தான் உன்னுடைய குற்றவாளி. என் மேல் நீ எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த, நீ என்னை ஏமாற்றல, நான் தான் உன்னை ஏமாற்றிட்டேன்." எனப் புலம்பிய படி அழ, ராத்தோட்கள் அனைவரின் கண்ணிலும் கண்ணீர். தன் குடும்பத்தினர், தன் மீது வைத்திருக்கும் பாசம், இன்னும் குறைந்து விடவில்லை என மனம் தேறினார் ராகினி.

 அவர்களுக்கான அவகாசம் தந்த ரெட்டி, மீண்டும் பேச்சை எடுத்தார். "பொண்ணு மாற்றித் திருமணம் நடப்பது, எங்கள் ஐந்து பேர் மற்றும் பங்குரி, ராகினிக்கு தான் தெரியும். ஷாதி முடிந்து பிற்பாடு சடங்குகள், ஒருமணி நேரம் நடந்தது. அதுக்குப் பின்னர், "மூஹ் திகாயீ ரஸம்" (முகம் காட்டுதல் சடங்கு) போது தான் எல்லாருக்கும் தெரியும், அதுக்கு முன்னாடியே ராகினியை கடத்த திட்டம் போட்டாங்க." எனக் குண்டைத் தூக்கிப் போட்டார் ரெட்டி.

 இது ஹேமந்துக்குமே அதிர்ச்சி தந்தது, "என்ன சொல்ற ராஜூ?" என்றார் .ராத்தோட்களின் அதிர்வுக்கு எல்லையில்லை. ரகுவீர் அன்றொரு நாள் கேட்டது, நினைவில் வந்தது ராகினியின் சகோதரர்களுக்கு.

 "பைரவ் சாப், நீங்க சொல்கிறீர்களா இல்ல நாங்கள் சொல்லவா?" எனக் கேட்டார் பல்லாஜீ.

 "நானே சொல்றேன்." என்ற கிழட்டு நரி பேச ஆரம்பித்தது. "எங்களுக்கும், ரெனாவத்களுக்கும் ராகினியை ஷாதி செய்து கூட்டி வந்து, ராஜ பரம்பரை நகைகளை யார் வைத்துக் கொள்வது என்பதில் போட்டி, இந்த நகை மேவாட் ராஜவம்சத்தில் பெண் வழியில், வழிவழியாகத் தொடர்வது.

 ஸ்வர்ண மஹாலக்ஷ்மி மாஷாவுக்குப் பின், எனது மனைவிக்கு ஒரு சிறிய பகுதியைத் தான் தந்தார் அவளுக்குக் குழந்தை இல்லாததால் ராகினிக்கு ஒரு பகுதியைத் தருவதாகப் பேச்சு. நான் ஹேமந்த்தை இதற்காகவே பெரிய அளவில் படிக்க வைத்தேன்.

 என் மனைவி மூலம் பிறந்த வீட்டில் பேசி பால்ய விவாகமும் செய்ய வைத்தேன். ஆனால் முகூர்த்தத்தின் போது பொண்ணு மாறிய செய்தியை முதலில் அறிந்தது என் மனைவி தான்."

 "என் மனைவி வந்து விசயம் சொல்லும் போதே கேட்டு விட்ட ரெனாவத் குடும்பம் ராகினியை கடத்த திட்டமிட்டனர். அதே நேரம் என் சாசுமாவுக்கும் விசயம் தெரிந்து விட்டது. ரெனாவத் ஆட்களைக் கூட்டி பொண்ணைக் கடத்த ஏற்பாடு செய்தான். நானும் ஹேமந்த் பங்குரி காதல் விசயம் வெளியே வந்தால் எங்கள் தொடர்பு ராத்தோட்களோடு விட்டுப் போகும் என நினைச்சு , ராகினி மேல் பழிப் போட்டேன்." என நிறுத்தினார்.

 

தாதாஷாவுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்தது, "ஏய் பைரவ் செகாவத், நீ மட்டும் என் தீதீஷாவின் புருஷனா  இல்லாவிட்டால் இந்நேரம் உன்னைக் கொன்றிருப்பேன்." எனக் கிழட்டுச் சிங்கமாகக் கர்ஜித்து, பைரவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார்.

 தாதிஷா தான் அவரை அடக்கி, "சோடியே, இவரைக் கொன்று போட்டா நமது மகள் திரும்பி வந்துடுவாளா? நமக்கு மகளாகப் பிறந்த பாவத்துக்கு, அவளுக்கு இந்தக் கதி, நம்ம பாவத்துக்கு அவளைப் பார்க்காமலே கண்ணை மூடுவது தான் நமக்குத் தண்டனை." என அழுதார். அவர்கள் இருவரையும், மகன் மருமகள்கள் தேற்றினர்.

 ரகுவீர் அமுதனுக்குத் தன் புவாஷாவை அழைத்து வரச் சொன்னான். வாசலுக்கு வந்தபின் தான் வந்து அழைத்து வருவதாகச் செய்தி அனுப்பினான்.

 "ரெனாவத் ஆட்கள் சமயம் பார்த்து, ராகினியை தாக்க வந்தனர், அந்தச் சமயம் பாதுகாப்புக்கு நின்ற சிவா தன் தலையில் ராகினியின் அடியைத் வாங்கினான். நாங்கள் மூவரும் அவர்களை விரட்டி அடித்தோம்." என்றார் பல்லாஜீ.

 மேலே நடந்ததைப் பாண்டே சொன்னார். "உங்கள் தாதிஷா இது எல்லாவற்றையும் பார்த்தவங்க,  எங்கள் அனைவரையும் ஓர் ரகசிய அறைக்கு கூட்டிட்டு போனாங்க . அங்கு ராகினியிடம் ஒரு முதலுதவிப் பெட்டியைக் கொடுத்து, சிவாவிற்குக் கட்டுப் போட சொன்னார். ராகினி தயங்க, உன்மேல் விழுந்த அடியைத் தாங்க, அந்தப் பையன் இவ்வளவு யோசித்ததா?" எனக் கேட்டார்.

 சிவாவிடம், "பேட்டாஷா, ராகினியின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம், இங்கு உள்ள கும்பல் இவளை மனுசியாக மதிக்காமல், ஒரு சொத்தாகத் தான் பார்ப்பாங்க. அதனால் யோசிச்சு தான் சொல்கிறேன். உங்களால் என் பேத்திக்குப் பாதுகாப்பு தர முடியுமா?" எனக் கேட்டார்.

 சிவா ஒரு நொடி கூடத் தயங்காமல்," நீங்க அனுமதி கொடுங்கள், என் உயிரைக் கொடுத்தாவது, உங்கள் பேத்தியைக் காப்பாற்றுவேன்." என வாக்குத் தந்தான்.

 அவர் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி, "உங்கள் வீட்டு பெரியவர்களுக்குப் போன் போட்டுக் கொடுங்கள்." எனத் தொலைப்பேசியைக் காட்டினார். "அவர்களுக்கு மொழி புரியுமா?" எனக் கேட்டார்

 "என் தாத்தா பழவியாபாரம் நாடு முழுவதும் செய்பவர், அவருக்கு ஆறு மொழித் தெரியும்" என்றவன் அவரைப் போனில் காண்டாக்ட் செய்து, பேசிவிட்டு, ராகினியின் தாதிஷாவிடம் கொடுத்தான். அவரும் ராம் ராம் சொல்லி பேச்சை ஆரம்பித்தார்.

"உங்களை அண்ணனாக நினைத்துக் கேட்கிறேன், என் பேத்தியை அனுப்பி வைக்கிறேன் உங்கள் பேத்தியா நினைத்துப் பாதுகாப்புக் கொடுங்கள்." எனக் கேட்டார்.

 "நீங்க அனுப்பி வையுங்கள் தங்கச்சிமா, நான் பார்த்திக்கிறேன்." என வாக்குத் தந்தார் சிவாவின் தாத்தா.

 அதன்பின் ஒரு மரப் பெட்டியைத் தந்து தன் கை கழுத்திலிருந்ததை இருந்ததை ராகினிக்கு மாட்டி விட்டு, பணத்தை ஒரு கத்தை அள்ளி எங்கள் கைகளில் திணித்து, சிவாவின் வீடுவரை சேர்ப்பது எங்கள் கடமை என அறிவுறுத்தினார்,

சிவா, "இந்தப் பணம் நகை இல்லை என்றாலும் நாங்கள் பாதுகாப்பு தருவோம். அது வேண்டாம்." என மறுத்தான்.

"என் பேத்தியை நான் இப்படி அனுப்புவது காலத்தின் கட்டாயம், அவள் மேவாட்டின் பெண்வழி வாரிசு. அவளுக்கு என ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்." எனச் சொல்லி ராகினியின் கையைச் சிவாவின் கைகளில் தந்து, உன் பொறுப்பு என்றார். வேறு ஓர் ரகசிய பாதை வழியாக எங்களை வெளியேற்றி, டிரைவருடன் இருந்த காரில ஜெய்பூர் அனுப்பி வைத்தார்.” எனப் பாண்டே அந்த நாளின் ரகசியத்தைச் சொல்லி முடித்தார்.

ஊர் பெரியவர்கள் முதல் அனைவருக்கும், ஸ்வர்ண மஹாலக்ஷ்மியைப் பற்றிய மலைப்பு இருந்தது. எல்லாக் காலங்களிலும், ராணிகள்  இருக்கத்தான் செய்கின்றனர். அவரின் ராஜபரம்பரை தைரியத்தைப் பற்றிப் பேசியவர்கள்.

"படி ராணிஷாவே செய்திருந்தால் ஒரு காரணம் இருக்கும்." எனக் கட்டளை போல் ஏற்றனர்.

 "இப்போதாவது சொல்லுங்கள், என் மகள் எங்கே?" என மயூராதேவி, ஹேமந்தின் நண்பர்களைக் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டார்.

 "மாஷா!" என்ற அழைப்பில் வயதான மயூரா தேவி, தன் வயதையும் பொருட் படுத்தாமல், திரும்பி ராகினியை நோக்கி ஓடினார். ராகினியும், அவிழ்த்து விட்ட கன்றினைப் போல் தன் தாயின் மடித் தேடி ஓடினார். இந்தத் தாய், சேய் சந்திப்பில் அங்கிருந்த அனைவர் மனமும் நெகிழ்ந்து கண்ணீர் வழிந்ததைத் துடைக்கவும் மறந்து நின்றனர்.

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்)
இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 18

அத்தியாயம் 18

கிஷோர் தன்னை பிஸ்னெஸ்க்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளாமல் அதைத்தாண்டி தன்னை முழுவதுமாக சொந்தமாக்கிக்கொள்ள பிரியப்படுகிறான் என்பது புரிந்தது. கண்மூடித்தனமாக அவனை மறுக்கவும் விருப்பம் இல்லை.

லகரங்களில் சம்பளம் பெற்றாலும்... அதைக்கொண்டு ஏழு குட்டிக்கரணம் போட்டாலும்... தன்னால் தொழில் அதிபனாகிய கிஷோரின் அளவு செல்வவளத்தை எட்டிப்பிடிக்க முடியாது. ஆனால் அவனின் வாழ்கையில் ஒரு அங்கம் ஆனால் அவளின் சொத்து முழுக்க தனக்கும் சொந்தமாகும் என்ற கணக்குப் புரிந்தது.

அதோடு இந்த கல்யாண ஆஃப்பரை தட்டிக்களித்தால் இந்த வேலையில் இருந்து தன்னை தூக்கி எறிந்துவிடவும் சந்தர்ப்பம் உள்ளது. அதனால் திரும்ப சாதாரண மிடில்கிளாஸ் வாழ்க்கைக்குள் போய்விடும் நிலை வந்துவிடும் என்ற பயம் உண்டானது.

இதுவரை அவள் தன்னை திருமணம் ஆனவள் என்று அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உண்மையைச் சொல்லி அதன் பிறகும் அவன் என்னை கல்யாணம் செய்ய விரும்பினால் மேற்கொண்டு யோசிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

அவளின் மும்பை வாழ்க்கை ஆரம்பமானத்தில் இருந்து அங்குள்ளவர்கள் எவரிடமும் கடந்தகால வாழ்கையை வெளிப்படுத்தவில்லை. தன்னைப்பற்றி பிறரிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைத்திருந்தாள். ஆனால் கிஷோரிடம் அவ்வாறு மறைப்பது ஆபத்து என்பது புரிந்தது.

அதனால் தனது கடந்தகால வாழ்கையை பற்றி அவளிடம் சொல்ல முன்வந்தாள். அதுவும் இங்கு யாருக்கும் தனது கடந்த கால வாழ்க்கைப் பற்றித் தெரியாது.. உங்ககிட்ட அதைச்சொல்வதை நீங்கள் யாரிடமும் வெளிப்படுத்திவிடக் கூடாது... என்ற நிபந்தனைகளுடன் கிஷோரிடம் வெளிப்படையாப் பேசினாள்.

அவள் பேசியதும் யோசனையாக சிறிதுநேரம் அமர்ந்திருந்த கிஷோரிடம், “இதை உங்ககிட்டு மறைச்சு கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பலை கிஷோர்... அதேபோல கல்யாணம்ற கமிட்மென்ட்க்குள்ள நுழையாம  லஸ்ட்டுக்காக படுக்கையில் இடம்கொடுத்தால் வரும் அனர்த்தங்களை நான் ஏற்கனவே சந்திச்சிட்டேன். இனி அப்படி நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். இனிமே நீங்கதான் ‘வெறும் ஸ்டாஃப்பா வேலையை நான் பார்க்கணுமா.... இல்லை உங்க லைஃப் பார்ட்னராகி உங்களுக்கு என் படுக்கையில் இடம் கொடுக்கணுமா’ என்றதை முடிவு பண்ணனும்” என்றாள்    

கிஷோருக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடோ. நெறியான வாழ்க்கைமேல் பிடிப்போ கிடையாது அவனுக்குத் தேவை பணம்... பெரும் பணம்... அதன் மூலம் கிடைக்கும் வளமான வாழ்வு மட்டுமே குறிக்கோள்.

ஆனால் அவனது குடும்பத்துப் பெரியோரிடம் அதை வெளிப்படையாகப் பகிர முடியாது. மேலும் தன்னுடைய மைன்ட் செட்டிற்கு ஏற்ற லைஃப் பார்ட்னர் சந்திரிக்காதான் என்று முடிவெடுத்தான். அவளை போன்ற ஒரு கேரக்டரை இனி காண்பது அரிது எனவே அவளை எப்படியாவது தன்னுடன் பிடித்து பிணைத்து நிறுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.

மேலும் அவளது கடந்தகால வாழ்க்கையை சொல்லியதால் ‘அவளுக்கு குழந்தைகள் இருந்தாலும் அக்குழந்தைகளின் மேல் பிடிப்பு இல்லை என்றும்... வாழ்கையில் பெரிய அளவில் செட்டிலாக வேண்டியது மட்டுமே அவளது  குறிக்கோள் எனவும்... சொல்லி முடித்திருந்ததால் ‘தாங்கள் இருவருக்குமே ஒத்த எண்ணம் கொண்டவர்கள்’ என்று புரிதலில் சந்தோசம் அடைந்தான்.

“நீ அம்மாவா...? சான்சே இல்லை சந்திரிக்கா...! யாருமே உன்னை பார்த்து அப்படி சொன்னா நம்ப மாட்டாங்கயூ ஆர் ஸ்டில் வெரி யங் என்றான்.

அவன் சொன்னதும் கெத்தாக ஓர் புன்னகையை உதிர்த்தவள்அதெல்லாம் சரி, இந்த நிலையில் என்னை லைஃப் பார்ட்னராக்க உங்களுக்கு சம்மதமா கிஷோர்...!?.

முதல் தடவை போல கமிட்மென்ட் ஆகாமல் குழந்தை பெற்று அதற்கான பொறுப்பை என் தலையில் தூக்கிக்கிட்டு அலைவது போல இன்னொரு நிலை வர நான் விட மாட்டேன. அதனால இப்படியே என்னை மனைவியா ஏற்றுக்கொண்டால் தவிற வேறு வகையில் மத்த விஷயங்களுக்கு உங்ககூட இணக்கமாக இருக்க மாட்டேன்” என்றாள் சந்திரிக்கா..

எனக்கு உன்னைய இப்படியே என் லைஃப் பார்ட்னராக்க எந்த அப்ஜெக்சனும் இல்லை. ஆனா என் வீட்டில உன் பாஸ்ட் லைஃப் பற்றி வெளிப்படையாச் சொல்ல வேணாம். உனக்கு இதுக்கு முன்பு கல்யாணமாகாமல் குழந்தை இருக்கும் விஷயத்தை மறைச்சுத் தான் நாம் பேசணும் அப்பத்தான் நாம கல்யாணம் பண்ண  சம்மதம் வாங்க முடியும்” என்றான்.

அவன் அவ்வாறு சொல்லவும் சந்திரிக்கா மனதினுள் மகிழ்ச்சி அடைந்தாள். வேலைபார்க்கும் இடத்தின் முதலாளியான அவனுடன் வாழ்கையில் இணைந்தால் அவனின் நிறுவனமும் சொத்துக்களும் தனக்கும் சொந்தமாகும் என்ற ஆசை பிறந்தது எனவே அவளும் சம்மதித்தாள்.

மேலும் சந்திரிக்கா தன்னுடைய கடந்த காலத்தை முற்றிலும் மறைத்து புதியதாக இந்த சமூகத்தில் தன்னை பெரிய வீட்டு பெண் என்ற அடையாளத்துடனும் பிஸ்னெஸ் உலகில் தன்னையும் ஒரு தொழிலதிபர் என்ற அந்தஸ்திலும் நிலை நிறுத்திக்கொள்ள இந்த ஏற்பாடு, திட்டம் வகுத்துத் தரும் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தாள்...

சந்திரிக்கா லைஃப்பில் இருந்து மகள்களான தங்களை எதுவோ வேண்டாத பொருளைப் போல ஒதுக்கி வைத்ததும்.... அவள் அப்பா ரித்திக் பணத்தை பெற்றுக்கொண்டு சொந்த மகளையே தத்துப் பிள்ளையாக மாற்ற சம்மதித்த கதையையும் சொல்லி முடித்தாள்.

அவள் சொன்னதை கேட்ட வண்ணன் ‘பணத்துக்காக இப்படிப்பட்ட செயலை செய்யவும், ஒரு தாய் தகப்பனால எப்படி முடிந்தது...? இப்படிப்பட்ட இந்த சந்திரிக்கா பெற்ற பிள்ளைகளை கொல்லவும் தயங்கியிருக்க மாட்டாள்... இப்படிப்பட்ட ஒரு அம்மாவுக்கு மகள்களாக பிறந்ததால் இவள் இன்னும் என்னென்ன வகையில் துன்பப்பட்டாளோ... என்ற எண்ணத்தில் அனுதாபமும் பரிவும் தாராமீது உண்டானது.

அவனின் எண்ணத்தை மெய்பிக்கும் வகையில் தாரா மறுபடியும் பேச ஆரம்பித்தாள்... “என்னையும் லாராவையும் இப்போவரை உயிரோடு விட்டு வச்சதுக்கு ஒரே காரணம் இதுவரை நாங்க சந்திரிக்காவின் மகள்னு எங்களை வெளிபடுத்திக்காம இருக்கிறதால் தான்... இதுவரை எங்களைத் தெரிந்த நெருங்கிய உறவுக்காரங்க உண்மைய வெளியில சொல்லாம இருக்கிறதுக்கு காரணம் அவங்க வாய தொறக்காம இருக்கிறதுக்கு கிடைச்சப் பணம். பணக்காரங்க மேல இருக்கிற பயம்...

ஆனா எங்க மனசு இப்படி அப்பா, அம்மா இருந்தும் அனாதையா அடையாளப்படுத்துறதால என்னமா பாடுபட்டிருக்கும்னு எங்களை சேர்ந்த யாருமே யோசிக்கலை...

அப்பா ரித்திக் பணத்துக்கு விலைபோனதுக்குப் பின்னாடி என்னை அவர் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனதும்... கங்குப்பாட்டிக்கு என் அம்மாவின் சுயரூபம் தெரிஞ்சதும்... இப்படியும் ஒரு தாயானு தான் சந்திரிக்காவை திட்டினாங்க.

ஆனா கட்டுக்கட்டா பணத்தை மகன் காட்டியதும் அவுங்க கண்ணும் ஆசையில் மின்னுச்சு... அதுக்குப் பிறகு இத்தனைப் பணத்தோடு வந்திருக்க மகன் இன்னும் எதுக்கு பொண்டாட்டி துணை இல்லாமல் தனியாக இருக்கணும்னு யோசிக்க ஆரம்பிச்சாங்க...

அப்படிப்பட்ட அம்மாவுக்கு பிள்ளையாய் பிறந்த என்னை அற்பமாய் பார்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க சொந்தத்தில் இருக்கிற ஒரு பொண்ணை, அப்பா ரித்திக்கிற்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க. அதுக்கு பின்னாடி அந்த வீட்டில் நான் வேண்டாத பொருளாய் எல்லோராலும் பார்க்கப்பட்டேன்.

என்நிலமை இப்படி ஆகிப்போச்சு என்றால் லாராவுக்கு அம்மான்னு இதுவரை சொல்லிக்கொண்டிருந்த சந்திரிக்காவை அக்கா, மேடம்னு கூப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டாள்.

அதுக்குப் பிறகு மூணு வருஷம் மட்டுமே லீவுக்கு தொடர்ந்து சேலத்துக்கு தாத்தா கூட்டிக்கிட்டு போவாங்க. என்னோட உடல் மெலிவு, டிரஸ், ஏன்... படிக்கிற ஸ்கூல் கூட... ரித்திக்கின் புது மனைவியால் எனக்கு தெண்டத்துக்கு காசு செலவழிக்க மனம் இல்லாமல் மாற்றப்பட்டத்தையும், எனக்கான கவனிப்பு மற்றும் செலவுகளை சுருக்கிக் கொண்டத்தையும்   கண்டுக்கொண்டார்கள்.

என்னோட நிலையைப்  பார்த்து பாட்டியும் தாத்தாவும் ரொம்ப கவலைப் பட்டாங்க. எனக்கு ஏதாவது வழி செய்யச்சொல்லி மகள் சந்திரிக்காவை  தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க.

அந்த மூணு வருஷத்தில் சந்திரிக்கா பெரிய அளவில் எல்லா பிஸ்னெஸ் மேகசீங்களிலும் பாராட்டி ஆர்டிக்கிள் பிரசுரம் ஆகும் அளவில் பிஸ்னெஸ் உலகில் ஒரு தனி இடத்தை பெற்றுக்கொண்டாள். அவளோட வாழ்க்கைத்தரமும் பணமும் புகழும் ஜெட்வேகத்தில் உச்சத்துக்கு போச்சு. எந்த அளவுக்குனு உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றவளிடம்.

“ம்... தெரியும் உலக அளவில் பவர்புல் பிஸ்னெஸ் வுமன் லிஸ்டில் முதல் பத்து இடத்துக்குள்ள அவங்க பேர் வந்ததைத்தானே சொல்ற..?’ என வண்ணன் கேட்டதும்.

“அதுமட்டும் இல்ல... முக்கியமான அரசுப்பதவியல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு சந்திரிக்கான்ற பேர் மிகவும் பரிட்சயமான நெருக்கமான ஆளாவும் ஆனாங்க. அரசாங்கத்தை அவளின் தேவைக்கு வளைச்சுப்போடும் பவர் இருகிக்கிறவளாக சந்திரிக்கா பார்க்கப்பட்டாள்

ஆனா எனக்கு சப்போட் பண்ணச்சொன்ன தாத்தாவை எடுத்தெறிஞ்சு பேசினாள். அந்த கவலையில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்....

எல்லா மனிதர்களுக்கும் ஒரு வீக்னெஸ் உண்டு அதேபோல சந்திரிக்காவின் வீக் பாய்ன்ட் அவளது தந்தை. சிறுவயதில் இருந்து படிப்பு ஸ்கூல் ஆக்டிவிட்டிஸ் அனைத்திலும் திறமையான அவளுக்கு முழு சப்போர்ட் அவளின் தந்தைதான்.

அவள் என்ன செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதில் சரி, தவறு என்று பிரித்துக் கூட பார்க்காமல் உடன் துணை நிற்பவர் அவர். அவளின் பிளஸ் மைனஸ் இரண்டுமே அவர்தான். ஏனோ லாரா, தாரா பிறந்ததுக்குப் பின்னால் பிள்ளைகளுக்கு அடுத்து தான் தான் அவருக்கு முக்கியம் என்ற நிலைக்கு வந்ததை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அந்த பிள்ளைகளுக்காகவே எந்நேரமும் யோசித்து தன்னிடம் பேசும் அவரின் வார்த்தைகள் பிடிக்காது போனதால் சற்று அவரை விட்டு மனத்தால் தூரம் சென்றாள் சந்திரிக்கா. இருந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து என்றதும் உலகத்திலேயே அந்த ஒரு மனிதருக்காக மட்டுமே அவள் சற்று பதறிப் போனாள்.

அவளது அந்த பிஷி செட்யூல்களுக்கு இடையில் தந்தையை மருத்துவமனையில் பார்க்க ஓடி வந்து சேர்ந்தாள்.

மருந்துவ உபகரணங்களுடன் படுக்கையில் இருந்த அவர் மகளிடம் வைத்த கோரிக்கை, தாரா படிப்புக்கும், படிப்பு முடிந்து தங்கள் கால்களில் நிற்கும் வரைக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு செலவு செய்யவும், தாராவை நல்ல ஸ்கூலில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு கவனித்துக்கொள்வேன் என்று சத்தியம் செய்யச் சொன்னார்.

அவர் அந்த நிலையில் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக மட்டுமே தான் இப்பொழுது படித்துக்கொண்டிருந்த டெல்லி யுனிவர்சிட்டி காலேஜ் படிப்பு வரை சப்போர்ட் பண்ணிக்கொண்டிருகிறாள் சந்திரிக்கா. அதுவும் ஏழை பொண்ணுக்கு படிப்புக்கு ஸ்பான்சர் பண்ணுகிறேன் என்ற பேரில் உதவிக்கொண்டிருக்கிறாள். தன்னை அவளின் மகள் என்று உலகத்திற்கு சொல்லிவிடக் கூடாது என்ற பயங்கர கெடுபிடிகளுடன் நடந்துக்கொண்டிருகிறார்.

எல்லைத்தாண்டிய சந்திரிக்காவின் மீது கோபமும் ஆத்திரமும் கொள்ளும்படியான சூழலுக்கு சமீபகாலமாக அடிக்கடி நான் செல்ல வேண்டிய சூழல் வந்தது. அதற்கு தன்னை அவள் மிரட்டிய விதத்தை தாரா சொல்லிக் கேட்டதும்...  இப்படியுமா...!? என்று வண்ணன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான்...

---தொடரும்---

இனிக்கும் விஷம் (தீபாஸ்)
இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 17

அத்தியாயம் 17

வண்ணன் அவளிடம் “ஒருவேளை மகளை வளர்த்த அப்போ செய்த தப்பை உணர்ந்துக்கிட்டவங்க, உங்களை நல்ல விதமாய் வளர்த்திருக்கலாம்ல” என்றவனின் முகம் எதுவோ யோசனைக்குள் சென்றது...

அவனின் ஆழ்ந்த யோசனையை பார்த்து. “என்ன யோசிக்கிறீங்க? எதுவும் கேக்கணுமா...?” என்றவளிடம்.

“உன் அக்காவுக்கு நீ தவிக்கிறது உண்மையா..? லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க நினைச்சா... என்கூட லாராவை கண்டுபிடிக்கும் ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ணலாம்?” என்றான்.

அவன் அவ்வாறு கேட்டதும் ‘கண்ணா லட்டுத் திங்க ஆசையா...?’ என்று கேட்பது போல தோணியது நட்சத்திரா பேரில் இருக்கும் தாராவுக்கு.

“எனக்கு இப்போ இருக்கிற ஒரே லச்சியம் அதுதான். ஆனா என்னைய எதுக்கு நீங்க கூட்டுச் சேர்க்க நினைக்கிறீங்க...? அதனால உங்களுக்கு என்ன லாபம்..?” என்றாள்.

“உனக்கு சந்திரிக்காவோட வீடு, அவளுக்கு நெருக்கமானவ்காங்க அவங்ககூட பழகி இருக்கதால அவங்க எப்படி யோசிப்பாங்க அப்படின்ற விஷயம் தெரியும் அந்த டீடைல்ஸ் வச்சு அவங்ககிட்ட லாரா மாட்டி இருந்தா கண்டுபிடிக்க ஹெல்ப்பா இருக்கும். இல்லைன்னா அதுக்கான பிராசஸ்க்கு சரியான ஆளைத் தேடணும்” என்றவனிடம்.

“ம்... என்னால நீங்க சொல்ற டீடைல்ஸ் எல்லாம் ஓரளவுக்கு கொடுக்க முடியும். அதேபோல இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சாலும் என்னால நேரடியா... அதுவும் தனியா... அவங்களை பேஷ் பண்ணவோ விசாரிக்கவோ  முடியாதுதான். ஆனா இதுமட்டும்தான் காரணமா...?”

“எனக்கு உன்னோட உணர்வுகள் புரியுது... நம்ம வீட்டு மனுஷங்களே நம்மளுக்கு துரோகம் பண்ணுறதோட வலி எனக்கு நல்லாவே தெரியும். நான் எப்படி என் அம்மாவோட டெத்துக்கு காரணமான ஒவ்வொருத்தரையும் கண்டு மனசுக்குள்ள குமுறிக்கிட்டு இருக்கேனோ... அதே போலத்தானே நீயும் இருப்ப? எனக்கு அம்மா... உனக்கு அக்கா.. அவ்வளவுதான் வித்தியாசம்” என்று சொல்லிக்கொண்டு போனவனை

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் டாக்...” என்று காதை பொத்தியபடி கத்தினாள்.

தான் என்ன அப்படித் தவறாக பேசிவிட்டோம் என்பது வண்ணனுக்குத் தெரியவில்லை, எனவே “எதுக்கு இப்படி தேவையில்லாம ரியாக்ட் பண்ற...?” என்று கடினமான முகத்தோடு அவளிடம் கேட்டான்.

“நீ... நீ... இப்போ என்ன சொன்ன...?  என் லாரா.. உன் அம்மா போல செத்துப் போனது போல இல்ல...  நீ பேசுற...? அது அப்படி இல்லைன்னு சொல்லு... என் லாராவுக்கு எதுவும் அந்த மாதிரி ஆகலைன்னு சொல்லு...” என்றாள் பதட்டத்தோடு.

அவனுமே அப்போதுதான் தனது வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தான். அவன் வேண்டும் என்றே அவ்வாறு சொல்லவில்லை... உறவுகளின் தேடல், அதன் வலி இருவருக்கும் உண்டு என்பதை சொல்ல சொன்ன வார்த்தைகளில் விளைந்த அனர்த்தமான அர்த்தம் புரிந்ததும்

“ஸாரி... ஸாரி... நான் உணர்ந்து சொல்லலை...” என்றவன் மனதினுள் ஒரு நெருடல் ஒட்டிக்கொண்டது.

“சரி... உனக்கும் லாராவுக்கும் அந்த சந்திரிக்காவுக்கும் இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப் பத்தி கொஞ்சம் சொல்லு..., ஏன் கேக்குறேன்னா, லாரா பேர்ல கோடிக்கணக்கான பணம் இருக்கு... அது சந்திரிக்காவுக்கு வேணும்... அதனால அவளை கண்ரோல் பண்ணி வைக்கப் பார்க்கிறா...

ஆனா  உனக்கும் சந்திரிக்காவுக்கும்  என்ன பிரச்சனை....? நீ எதுக்கு அவளைப் பார்த்துப் பயப்படுற...?.” என்று கேட்டான். அவனிடம் பதில் சொல்லாமல் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தவளிடம்.

“இங்க பார்... உன் பேரு தாரா தானே? எதுக்கு நட்சத்திரான்ற பேர்ல சுத்திக்கிட்டு இருக்க...? “ என அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.

“உங்க கிட்ட அதை எல்லாம் சொல்லி எனக்கு என்ன ஆகப்போகுது..?” என்றவளிடம்.

“லாராவுக்கு  என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியணும். நானும் அதை கண்டுபிடிக்கத்தான் டிரை பண்ணிக்கிட்டு இருக்கோம். நாம தனித்தனி பாதையில் போனா நம்ம ரெண்டுபேருக்குமே சவாலாய் இருக்கும். அதுதான் சேர்ந்து தேடுவோம்னு நினைக்கிறேன்.” என்றான்.

அவன் சொல்வதில் ஒரு அர்த்தம் இருப்பதாகப் பட்டது. அவள் உதித்திடம் லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கேள்விக் கேட்க நினைத்தே இங்கே புறப்பட்டு வந்தாள். அவளை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அவனுக்கும் பொறுப்பு உண்டு எடுத்துக்கூற நினைத்தாள். லாராவை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு கேட்க நினைத்திருந்தாள். ஆனால் அவனே, இந்த டெவிலிடம் தான் அந்த வேலையைக் கொடுத்திருக்கான்’ என்று நினைத்தவள்.

“ஓகே... லாராவை கண்டுப்பிடிக்க எனக்கு நீங்க ஹெல்ப்பண்றேன்னு சொன்னதால... நானும் உங்கக் கூட கோவாப்ரேட் பண்றேன்...” என்றவள் அவள் வாழ்கையில் நடந்ததை அவனிடம் சொல்லத் துவங்கினாள்.

என்னோட மூணு வயசுல, அப்பாவும் அம்மாவும் டைவேர்ஸ் ஆனதுல நான் அப்பா ரித்திக் பொறுப்பில் கங்கம்மா பாட்டியோட கண்ட்ரோலில்  வளர்ந்தேன், லாராவோ  அம்மா சந்திரிக்கா பொறுப்பில் சமர் வீரபுத், அருணிமா பாதுகாப்பில் சேலத்தில் வளர்ந்தாள்.

அம்மா சந்திரிக்கா  மேற்படிப்பு முடிக்க... அதை தொடர்ந்து பிஸ்னெஸ் பண்ணணு மும்பையில செட்டில் ஆகிட்டாங்க. எப்பவாவது கெஸ்ட் போல சேலம் வீட்டுக்கு வந்து போவாங்க.

அப்பா ரித்திக்கோட  வீட்டுல... கங்குப்பாட்டி கண்டிப்புல நான் வளர்ந்துகிட்டு இருந்தேன். அப்பா பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டாங்க. மாசம் ஒரு தடவையோ ரெண்ட்டு தடவையோ தான் வீட்டுக்கு வருவாங்க.

அப்பா ஒவ்வொரு முறை வரும் போதும் கங்குபாட்டி “நான் ஒத்தமனுஷியா இருந்தப்போ இருக்கிறது வச்சு வயித்தை நிரப்பிக்கிட்டு கம்முனு கிடந்தேன். இப்போ  தாராவவையும் வளர்த்து விடணுமே...., அவள் படிப்புக்கு, துணிமணி, சாப்பாடு தின்பண்டம்னு மாசம் எம்புட்டுச் செலவு ஆகுது தெரியுமா...?  ஒழுங்கு மரியாதையா செலவுக்கு பணத்தை எடுத்து வச்சிட்டு இங்க இருந்து கிளம்புன்னு அப்பாகிட்ட சண்டைப் பிடிப்பாங்க.

அப்பாவும் பாட்டிகிட்ட கோவப்பட்டுப் பேசிட்டு பணத்தைக் கொடுத்துட்டு கிளம்பிடுவாங்க. கங்குப்பாட்டி என்கூட பாசமாய் பேசி அரவணைக்க மாட்டாங்க... ஆனா சாப்பாடு, உடுத்த டிரஸ், நல்ல படிப்புன்னு அத்தனையும் கொடுத்தாங்க.  எனக்கு ஏனோ அவங்க கூட ஒட்டவே இல்லை... எப்படா லீவ் விடுவாங்க சேலத்துல இருக்கிற அம்மம்மா வீட்டுக்கு போவோம்னு காத்துக்கிட்டு இருப்பேன்.

அங்க போனா சமர் வீரபுத் தாத்தாவும், அருணிமா பாட்டியும் நல்ல கதைகள் சொல்வாங்க, கடைத்தெருவுக்கு கூட்டிட்டுப் போவாங்க, லாரா கூட விளையாட முடியும்னு சேலம் போக ஆசைப்படுவேன்.

எப்பவும் சமர் தாத்தா தான் லீவ்விட்டதும் என்னைய டாக்சி பிடிச்சிட்டு வந்து ஊருக்கு அழைச்சிட்டுப் போவாங்க. ஆனா ஒரு தடவை அப்பா என்னைய அங்க அழைச்சிட்டுப் போனார். அப்போ நான் மூணாவது படிச்சுக்கிட்டு இருந்தேன் லாரா ஐந்தாவது படிச்சுக்கிட்டு இருந்தா...

அப்பாகூட அம்மம்மா வீட்டுக்குள்ள நுழைஞ்சப்போ எப்பவும் போல வீடு இல்லை. ரொம்ப அமைதியாய் இருந்தது. அப்பவே சந்திரிக்கா வந்துருக்காங்கன்ற விஷயம் எனக்கு விளங்கிடுச்சு.

அம்மா வந்தா லாரா பயத்துடன் எந்தம் சந்தமும் போடாம அமைதியாகிடுவாள். பாட்டி சமையல் அறையே கதின்னு ஆகிடுவாங்க. தாத்தா வந்திருக்கிற மகள்கூட அடுத்து என்ன பண்ணப் போற... குடும்ப நிலலவரம் என்ன என்பதை பற்றி தணிந்த குரலில் பேசிட்டே இருப்பாங்க. அதனால லாராவோட சத்தமோ... பாட்டியோட கண்ணுங்களா என்ற பாசமான அழைப்போ... தத்தாவின் பின்பு சிலேடை எடுத்துக்கொண்டுபோய் யானை படம் வரைஞ்சு கொடுங்கன்னு நொச்சரிக்கும் எங்க சத்தமோ இருக்காது.

அப்போதான் சந்திரிக்கா, பிரபல தொழில் அதிபத் கிஷோர் வர்மாவை கல்யாணம் பண்ண பிளான் பண்ணிட்டாங்க. அதுக்கு எந்த விதத்திலும் தாரா, லாரா அப்பாவான ரித்திக் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்... தனக்கும் அவனுக்கும் முன்னாடி  கல்யாணம் முடிந்து குழந்தைகள் இருக்குன்ற  விஷயத்தை உலகத்தின் பார்வையில் மறைக்கவும் பணம் டீல் பேச அப்பா ரித்திக்கை அங்க வர வைத்திருந்தாள்.

லாரா, தாரா ரெண்டுபேரும் அனாதைகள் என்ற போலி ஆதாரத்துடன் லாராவை வீரபுத், அருணிமா தந்தெடுக்கவும்... அதுபோல ரித்திக் குடும்பம் என்னைய அடாப்ட் செய்தது போல டாக்குமென்ட் ரெடி பண்ணவும் ரித்திக்  ஒத்துழைக்க அவரிடம் பணம் பேரம் பேசப்பட்டது.

ரித்திக் கேட்ட பெரும் தொகையை மறுபேச்சு பேசாமல் கொடுத்து தனது திட்டத்துக்கு ஒத்துழைக்க வைத்தாள் சந்திரிக்கா. இனி எங்கும் அவனின் முன்னாள் மனைவி என்று சந்திரிக்காவை நேரடியாகவோ மறைமுகமாகவோ மூச்சுவிடக் கூடாது... அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பது உலகத்தின் பார்வைக்கு வரக்கூடாது... என்ற டீல் அன்றில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

நானும் லாராவுக்கும் எங்களோட பேரன்ஸ் பிரிஞ்சதால ஒருமுறை அறியாத வயதிலேயே இடம்மாறியதால உறவுகள் உருமாற்றத்தால ஒரு பெரிய கஷ்டத்தை ஃபேஸ் பண்ணினோம். அதைத் தொடர்ந்து ரெண்டாவது தடவையாய எங்களைப் பெத்தவங்களால் எங்கள் பிறப்பே கேள்வி கேலிகூத்தாய் ஆகியது...

இவ்வாறு அப்பொழுது சந்திரிக்காவின் சுயநலப் பேய் வெளியில் வர காரணம் கிஷோர் வர்மா.... பாரம்பரியமான தொழில் துறையில் முன்னனியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் வர்மாவுக்கு மனைவியாக வேண்டும் என்ற ஆசைக்கு குறுக்கே அவளின் கடந்த கால கல்யாணம் குழந்தைகள் ரெண்டும் தடையாக இருந்ததால் பணம் கொடுத்து அத்தடையங்களை உலத்தின் பார்வையில் மறைக்கப்பட்டது.

இதில் இப்பொழுது அவள் வாழ்க்கைக்குள் வந்திருக்கும் கிஷோர்  சந்திரிக்காவுக்கு முதலாளியாக அறிமுகமாகியவர். இருவருக்கும் உண்டான ஈர்ப்பும், தேவைகளும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற இடத்துக்கும் அவர்களை நகர்த்தியிருந்தது.

யூடியூப் கலாச்சாரம் சோசியல் மீடியாக்களில் புகாத அன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் தங்களை பிராலமாக்க... தங்களுக்கென தனிச்சேனலை போட்டிப் போட்டு உருவாக்கிய காலம் அது.

அவ்வாறான சூழலில் தான் கிஷோரின் வளர்ந்துவரும் மீடியா கிரியேடர் தொழிலில் முறை கம்பெனியில் சந்திரிக்கா வேலைக்கு அமர்ந்தாள். கிஷோரிடம் வேலைக்கு சேர்ந்த சந்திரிக்கா, டெக்னிக்கள் செயல்பாட்டிற்கான நுண்ணறிவும் அந்த பிஸ்னெசை டெவெலப் பண்ண என்னென்ன செய்யவேண்டும் என்ற அறிவும் கொண்டிருந்தாள்.

கிஷோர் தொழிலில் தடுமாற்றத்தை சந்திக்கும் நேரங்களில் தக்க ஆலோசனை கொடுத்து கம்பெனி முன்னேற சந்திரிக்கா காரணமாக ஆனாள். எனவே கிஷோரின் கவனம் சந்திரிக்காவின் மீது விழுந்தது. அவளின் மீது ஈர்ப்பு உண்டானது. அவள் நிரந்தரமாக தன்னுடன் இருந்துவிட்டால் தொழிலில் நிறைய சாதிக்க முடியும் என்ற எண்ணம் துளித்தது.

எனவே செல்லும் இடங்களுக்கெல்லாம் அவளையும் உடன் கூட்டிக்கொண்டு திரிய ஆரம்பித்தான். காலப்போக்கில் இருவரின் நெருக்கமும் அதிகமானது. கிஷோர் அவளுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டதை சூசுகமாக அவளிடமும் கோடிட்டு அடிக்கடி காட்ட ஆரம்பித்தான்.

சந்திரிக்காவுக்கு கைநிறைய சம்பளமும், நட்சத்திர விடுதி வாசமும், டாம்பீகமான வாழ்க்கை முறையும் அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் கிடைத்தது. எனவே  கிஷோரின் ஆசைகளை கோடிட்டுக் காட்டியும் வேலையை விட்டு விலக மனம் இல்லாமல் அவனை  தட்டிக்களித்துக் கொண்டே அந்த நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் சந்திரிக்கா அவனக்கு தந்த பிஸ்னெஸ் ஆலோசனையில்... வெளிநாட்டு முதலீட்டை தங்களது நிறுவனத்திற்கு திரட்டும் விதமாக... ஒரு பிக் பிஸ்னெஸ் ஆபர் கிடைக்க சந்தர்ப்பம் அமைந்தது. அதனால் கிஷோர் மிகவும் சந்தோசமடைந்தான்.

இருந்தாலும் அந்த பிஸ்னெஸ் டீலிங்கில் ஒரு சிக்கல் இருந்தது. வெளிநாட்டு முதலீட்டை அரசாங்கம் வரையறை செய்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கள் கம்பெனிக்குள் கொண்டு வர முடியாமல் போவதால், ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாத சூழல் வந்தது.

அரசாங்கம் அனுமதித்த வெளிநாட்டு முதலீட்டுக்காக சதவீதத்தை தகரத்தினால் தான் இந்த ஒப்பந்தம் முடியுமென்ற நிலையில். அதற்கு பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சட்டத்தை ஏய்த்தால் சாத்தியமாகும் என்ற புரிதல் சந்திரிக்காவுக்கு இருந்தது.

தொழில் அதிபர் என்ற முறையில் அந்நிய செலாவணி தொடர்பான அமைச்சரை சந்திக்க கிஷோர் ஏற்பாடு செய்தான். அவள் அந்த அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை தனது பேச்சுத் திறமையால் பெற்று சாதித்துக் காட்டினாள். அதைக்கண்ட கிஷோருக்கு அவளின் திறமை மற்றும் அழகை நிரந்தரமாகச் சொந்தம் கொள்ள, தனது வாழ்க்கைக்குள் கொண்டுவரவேண்டும் என்று முடிவெடுத்தான்.

முதலில் வெறும் படுக்கையை மட்டும் பகிர்ந்துகொள்ள நினைத்தவன் அவளை நிரந்தரமாக தன பிடிக்குள் கொண்டுவர அவளைகொண்டு  பிஸ்னெசை முன்னேற்ற தன்னுடன் தக்கவைத்துக் கொள்ள அவளை   கல்யாணம்செய்ய முடிவெடுத்தான்.

---தொடரும்---

மனதின் வார்த்தைகள் புரியாதோ
34-  புவாஷா கீ லாட்லி 

 

ரகுவீர்-மனதின் வார்த்தைகள்

 காதலால் என் மனதை களவாடியவளே

மைவிழியால் என்னை மயக்கியவளே

தேனாக இசைத்தடி நின் காணம்.

தெவிட்டாத தெள்ளமுது நின் பேச்சு

 

மாயம் செய்து என்னை மாற்றவே

மலை விடுத்து இவ்விடம் வந்தாயோ

 

எனக்காகக் காயம் பட்டது நின் மேனி

உனக்காக உருகுதடி என் ஆவி

ராமன் தேடினான் சிதையை, என்னுயிர்

ஜானகி தேடினாள் இந்த ரகுவீரனை!

 ரகுவீரின் மனதில் வடிவாகி உருவாகி உருகிய வார்த்தை என்னவென்று சொல்வது. ஜானகி, என் புவாஷாவின் மகள். எனக்காக என் அத்தை பெற்ற ரத்தினமோ?

 "ஜானகிக்கா அமுதன் அண்ணாவின் அம்மா. என் பெரியப்பா சிவகுரு நாதனின் மனைவி ஸ்வர்ண ராகினி. உங்கள் அத்தை, ஐ மீன் புவாஷா. " என விலாவாரியான விளக்கம் தந்தான் கணேஷ். தன் பெரியம்மாவைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள், எத்தகையது என அவன் அறிய மாட்டான்.

 ரகுவீர், தன்னவளின் நதிமூலம் இங்கிருந்தே உருவானது என அறிந்தப் பின்னே அதிர்ந்து தான் நின்றான். பேசும் மொழி மறந்து போனது அவனுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதையும் ,மறந்து  ஸ்தம்பித்து நின்றான்.

 "அண்ணா. அண்ணா!!!" என அமிர்தா அழைக்க சிவகணேஷ், தன் முன்னால்  நிற்பதை உணர்ந்து, "உண்மையாவே புவாஷா அங்க தான் இருக்காங்களா?" என்றவன் கண்களிலிருந்து தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

 "தாங்க்ஸ் சோட்டூ தாங்க் யூ வெரிமச்." என உணர்ச்சி வயப்பட்டுச் சிவகணேஷை கட்டி அணைத்துக் கொண்டான்.

 "நீ, உண்மையில் என் வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷத்தை திருப்பித் தந்திருக்கச் சோட்டூ." என அவனை மீண்டும் அணைத்தவன் , வா என அவனை அழைத்துச் சென்று ஷோபாவில் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.

 "ஜூகுனு, வீட்டில் இருக்கும் எல்லா இனிப்பும் எடுத்துட்டு வா." எனக் கட்டளை இட்டவன்,  "உனக்குத் தெரியுமா எனக்கு எங்க புவாஷான்னா ரொம்ப இஷ்டம். மாஷா மடியிலிருந்ததை விட, அவர்கள் மடியில் தான் வளர்ந்தேன்." என உணர்ச்சிப் பெருக்கில் அதே நான்கு வயது சிறுவனான் ரகுவீர் சிங் ராத்தோட்.

 ஜூகுனு கொண்டு வந்த இனிப்புகளைத் தன் கையால் சிவகணேஷ்க்கு ஊட்டி விட்டான். "அம்ரூ, எடுத்துக்கோ என் புவாஷா கிடைச்சிட்டாங்க." எனக் கண் கலங்கி நெகிழ்ந்தான்.

 "புவாஷாவின் இப்ப உள்ள போட்டோ இருக்கா?" என ரகுவீர், ஆவலாக கேட்க,  சிவகணேஷ், தன் பேமலி போட்டவை காண்பித்தான். தீபாவளி பண்டிகை அன்று, ஒன்று கூடிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும், கணேஷ் தனக்கு இருந்த போட்டோகிராபி ஆசையால், தன் விலையுயர்ந்த கேமராவில் அழகாய் பிடித்து வைத்திருந்தான்.

தன் மொபைலில், வைத்திருந்த புகைப்படங்களை ரகுவீரிடம் காட்டினான். ராகினியின் தற்போதைய நிழற்படம், கண்ணீர் பெருக்கோடு ஆசையாக வருடினான். "புவாஷா!" என அழைத்துக் கொண்டான்

ரகுவீரின் உணர்வு பெருக்கு நிலை அமிர்தாவுக்கும் கண்ணீரை வரவழைத்தது. வரிசையாக ராகினி சிவகுருவின் படம், "இது எங்கள் மாமா", என்ற அமிர்தா, "சாரி அண்ணா, நம்ம மாமா, உங்கள் புஃபாஷா." என்றாள்.

 அவன் கவனமாகச் சிவகுருநாதனைப் பார்த்து, "இவங்களை நான் சின்னப் பையனா இருந்தபோது, ஹேமந்த் பூபாஷாவோட பார்த்திருக்கேன்." என்றான் ரகுவீர்.

 "ராகினி அத்தை மேல் உயிரையே வச்சிருக்காங்க மாமா. அத்தை, மாமா அவ்வளவு அன்யோன்யம். எங்க அம்மா சொல்லுவாங்க, 'இவங்க  இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தரென்று வரம் வாங்கிப் பிறந்தவங்க , இல்லைனா, எங்கோ வடக்க இருந்த மகராசி, இங்க வந்து அரசாளுமா?' அப்படின்னு சொல்லுவாங்க." என்றாள்  அமிர்தா.

 "அத்தான், உங்களைப் பார்க்கும் போது பேசனும்னே, நாங்கள் ஹிந்தி கத்துக் கிட்டோம். ஏன்னா, ராகிம்மாவின் வர்ணனையால் நீங்க எங்களுக்குப் 'பால் கோபால்- வீரூஜீ'." எனச் சிரித்தான் சிவகணேஷ்.

 ரகுவீருக்கு, இவர்கள் பேச்சைக் கேட்டதில் வியப்பு மேலிட்டது. நான் என் புவாஷா, என்னை மறந்ததாக நினைக்க, அவர் தன் குடும்பத்தையே, என்னை நினைக்க வைத்துள்ளார் எனத் தன் மனதில் புவாஷாவை நினைத்துப் பெருமிதம் கொண்டான். ஜானகியின் வீருஜியும் இப்போது புரிந்தது.

 அடுத்தப் படங்கள் ஜானகியின் பல்வேறு போஸ்களில், பட்டுச் சேலைக் கட்டி, பின்னலிட்டு, தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, ஒரு கன்றுக்குட்டியை அணைத்த வண்ணம் இருந்தாள் . அடுத்தடுத்த போட்டோக்களில் ஜானகி அசத்தலாக, விதவிதமாக நின்றாள். ரகுவீர் இமைக்காமல் கண்களில் காதல் வழியப் பார்த்திருந்தான். அமிர்தாவின் மொபைலை வாங்கி, ரகுவீர் ரியாக்ஷனை அவனறியாமல் வீடியோ எடுத்தான் கணேஷ்.

 "அத்தான், இந்தப் போட்டோஸ் உள்ள ஃபோல்டர், உங்களுக்கு அனுப்புறேன். அடுத்து என அமுதன், பாலன், கணேஷ் ட்ரையோ போஸ். இவங்க எங்கள் தாத்தா, அப்பத்தா எனக் காட்டினான். இவர்கள் தான் தன் காதலுக்கு மரியாதை தந்து, துணைப் புரிவார்கள் என்பதை அறியாமல் பார்த்தான். எங்க அம்மா, அப்பா, எனக் காட்டினான், "இவர்களுடன் தொலைப்பேசியில் பேசி இருக்கேன்." என்றான் ரகுவீர்.

 "எங்கம்மாக்கு, சுட்டுப் போட்டாலும் ஹிந்தி வராதே எப்படிப் பேசுனீங்க?" என கணேஷ், கேலியாக கேட்கவும்,  "அவங்களும் இதையே தான் சொன்னாங்க." என்றான் ரகுவீர்.

 அமிர்தாவின் குடும்பப் போட்டோவும் காட்டினான். "எங்கள் அத்தை, இவர்கள் அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள், அண்ட் குட்டீஸ்." என அறிமுகப் படலம் முடிந்தது.

 "எல்லாப் போட்டோலையும், ஜான்வி எப்படி இருக்கா?" என ரகுவீர் கேட்க,.  "டைரக்டரே, எங்க அக்கா தான் இப்படி நில்லுங்க, உட்காருங்கள் சிரி சிரிக்காதே, அங்க பாரு, இங்க பாருன்னு உயிரை வாங்கும். நம்ம சொன்னா, போஸ் கொடுக்க மாட்டாங்க அக்கா சொன்னால் மறுப்பே கிடையாது." என அக்காள் புராணம் பாடினான் சிவகணேஷ்.

 "இன்னைக்கு, மும்பை வந்ததே, அதை வச்சுத் தான். சிறுமலை பற்றிய என் போட்டோகிராபி, காம்படீஸனுக்குச் செலக்ட் ஆனது, அதோடு கொஞ்சம் கடல் தீவு இதெல்லாம் வேண்டும். ஒரு சோசியல் மீடியா ஃப்ரண்டு, தான் அரேஞ்ச் பண்றாங்க. ஒரு கேங் நாளைக்கு அங்க போகிறோம். இரண்டு நாள் சூட்டிங் பெர்மிஷன் வாங்கியாச்சு." எனத் தன் மும்பை விசிட்டுக்கான, காரணமும் சொன்னான் சிவகணேஷ்.

 செகாவத் ஹவேலியில் மஞ்சரியின், பெரியப்பா மகள் மோனலின் ஷாதிக்கான ஆரம்பம் கணேஷ் பூஜையுடன் அங்கே ஆரம்பமானது. ராத்தோட் குடும்பத்தினர் ஜானகியை உடன் அழைத்துச் சென்று அதில் கலந்து கொண்டனர்.

 அடுத்த நாள் காலையில், ஹரிணி, அமர்சிங் டாக்கூர் குடும்பச் சகிதமாக உதய்பூர் வர இருந்தனர்.

 உதய்பூரில், கணேஷ் பூஜையுடன், ஷாதியின் சுப ஆரம்பம் ஆனது. இங்கே மும்பையில், சிவகணேஷ், தன் அக்காளின் மனப் புத்தகத்தின் பக்கங்களை, தன் அத்தானுக்குப் புரட்டிக் காட்டிக் கொண்டு இருந்தான்.

 "அத்தான், உங்களை எப்படி அடையாளம் கண்டு பிடிச்சேன்னு நீங்க கேட்கவே இல்லையே?" என்றான் சிவகணேஷ்.

 "சோட்டே,(சின்னவனே) நீ, என்னைய முறை சொல்லி கூப்பிட்டப் பாரு, சூப்பர்டா. அதிலையே, உங்கக்கா மனசில் நான் தான் தெரிந்து போச்சு. அவள் ஒரு கல்பிரிட், மேடம் என்கிட்ட தான் முறைப்பா, மறைப்பா உங்க எல்லார்க்கும் அவள் என்னை விரும்புறான்னு தெரியும் அப்படித்தானே?" என்றான் ரகுவீர்.

 "எப்படித்தான் இவ்வளவு கான்பிடென்ட், அவள் மனசை ஸ்கேன் பண்ண மாதிரி சொல்றீங்க." என்றான் கணேஷ்.

"அது அப்படித்தான், நீ லவ் பண்ணும் போது தெரிஞ்சுக்க." என்றவன், "அப்ப நான் மட்டும் தான் பாகல் கைக்கா, மற்ற எல்லார்க்கும் தெரியும் அப்படித்தானே?" என்றான் ரகுவீர்.

 "பெரியவர்களில் அமரேன் அங்கிள்க்கு மட்டும் தெரியும். சிறியவர்களில் ரன்வீருக்குத் தெரியாது அங்க அத்தை மாமாவுக்குத் தெரியாது.” என்றாள் அமிர்தா.

 

"அம்ரூ, நான் உன்னை மயூ மாதிரி தான் நினைக்கிறேன், ஆனால் மயூவே என்கிட்ட மறைக்கும் போது, நான் வேற யாரைக் குறை சொல்றது?" எனத் தன் தம்பி, தங்கை தன்னை நம்பி விசயத்தைச் சொல்லவில்லை என்ற ஏமாற்றத்தில் பேச, 

 "அண்ணா ப்ளீஸ்! என்னை மன்னிச்சிடுங்க, உங்களுக்கு ஜானியைப் பத்தி தெரியும் தானே. அவள் தான் மறுத்தாள். நான் என்ன செய்ய முடியும்?" என அம்ரூ தன்னிலை விளக்கம் தந்தாள்.

"புவாஷா, உதய்பூரில் இருக்கும் போது நான் இங்க கையைக் கட்டிட்டு உட்கார முடியாது. நிச்சயம் ஏதாவது பிரச்சினை வரும். கணேஷ் உன் ப்ளான் என்ன என்றான்?" ரகுவீர்.

 "நாளைக்கு சாயந்திரம், அந்தத் தீவுக்குச் சூட்டிங் போறோம், காலைல நான் ப்ரண்ட்ஸ் கூட மீட்டிங், நீங்க கிளம்புங்க நீங்க திரும்பி வரும் போது நானும் வந்துடுவேன் அக்காவைப் பார்த்துட்டு தான் சென்னை." என்றான் கணேஷ்.

 "ஓகே குட் நாளைக்கு மார்னிங் ப்ளைட்ல நாம உதய்பூர் போகலாம் அம்ரூ கிளம்பு" என்றான் ரகுவீர்.

 அமிர்தாவிடம், பாலனிடம் புவாஷா வரும் பயண ஷெட்யூலை வாங்கச் சொன்னான் ரகுவீர். அதன்படி, ராகினி வரும் ப்ளைட்டுக்கு முன்னர் இவன் உதய்பூர் சென்று விட டிக்கெட் புக்கிங் செய்தான்.

 ஹேமந்த் செகாவத், தன் நண்பர்களுக்காகத் தாஜ் லேக் பார்க்கில், பத்து ரூம்களை புக்கிங் செய்து வைத்திருந்தார். அமுதன், சென்னையிலிருந்து ஜெய்ப்பூருக்கு ப்ளைட் பிடித்தவன் காலையில் கார் மூலம் உதய்பூர் வந்து சேர்கிறான்.

ஓம்பிரகாஷ் பல்லா மற்றும் ப்ரீத்தோ ஜெய் மற்றும் ஹர்லீனை அழைத்துக் கொண்டு இரவே உதய்பூர் வந்து சேர்ந்து விட்டனர்.

 அதிகாலை ஆறு மணிக்கு எல்லாம் மும்பை- உதய்பூர் விமானம் தரையிறங்கி விட்டது. ரகுவீர் அமிர்தாவுடன் வந்தவன், நேரே அவளைத் தங்கள் ஹவேலிக்கு அழைத்துச் சென்றான். ராஜிடம் அமிர்தாவை வேறு அறையில் தங்க வைக்கச் சொன்னவன், தான் மயூரியை அழைத்து வருவதாகச் சென்றான்.

உதய்பூரிலிருந்து சற்றே தூரத்திலிருந்த, மஹாராணா விமான நிலையத்துக்கு தன் புவாஷாவைக் காணும் ஆவலுடன் அதே நான்கு வயது சிறுவனாக வந்து நின்றான் ரகுவீர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போல், ஒருநாளில் தான் அவனது புவாஷா, அழுத கண்களுடன் அந்த ஆடவரின் பின்னால் சென்றார், அதற்கு ரகுவீர் சாட்சி. அதே போல் இன்று விமான நிலையத்தில் கூலர்ஸ் அணிந்து, லாபியில் புவாஷா வருகைக்காகக் காத்திருந்தான்.

 

டெல்லியிலிருந்து வரும், விமானம் தரையிறங்கும் அறிவிப்பு வந்தது. அரைமணியில் பயனிகள் வெளியே வந்தனர். ஹேமந்த் சரியாக அதே நேரம் தன் நண்பர்களை வரவேற்க வந்து சேர்ந்தார்.

முதலில் தொப்பையுடன் தோரணையாக மங்கள் பாண்டே  தன் மனைவி பர்க்காவுடன் வந்தார். அவர்கள் பின்னே கம்பீரமாகச் சந்திரசேகர் ரெட்டியும், பார்வதி அம்மாவும், குழந்தை தியாவுடன், ஶ்ரீநிதியும் அவளோடு மயூரி, மஞ்சரியும் லக்கேஜ் ட்ராலியுடன் வந்தனர்.

 கடைசியாக புவாஷாவை, ஒரு கையில் அணைத்தவாறு மறு கையில் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு சிவகுரு நாதன் வந்து சேர்ந்தார்.

 "ஸ்வர்ணி, நீ சும்மா இருக்கியா, டோன்ட் கெட் எமோஷனல், நடந்துருவியா இல்லை தூக்கனுமா?" என அவர் கேலி பேச பதட்டம் நிறைந்த ராகினியின் முகத்தில் சிறுநகை எட்டிப் பார்த்தது.

 "ஹலோ ஓல்ட் மேன் நீ இன்னும் ஜவான் லட்கா இல்லை மறந்துடாதே." எனப் பாண்டே பின்னால் திரும்பி கிண்டல் செய்தார்.

 "உன்னளவு ஓல்ட் கிடையாதுடா நான் பிட் தெரியுமா, மலை ஏறி இறங்குறவன்டா. மயூ இந்த ட்ராலியை பிடிடா ஸ்வர்ணியை தூக்கிக் காட்டவா?" எனச் செயலில் இறங்கப் பார்த்தார்.

 "சோடியேஜீ எல்லாரும் பார்க்குறாங்க. நான் ஒன்னும் டென்ஷன் ஆகலை." என்றார் ராகினி.

ரகுவீர், தன் புவாஷாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவரைப் பூஃபாஷா தாங்குவதைப் பார்த்தவன் மனம் திருப்தி அடைந்தது.

 ஹேமந்த் நண்பர்கள் மூவரையும் பார்த்து, கட்டியணைத்துக் கொண்டார். கண்கள் கலங்கி இருந்து. ராகினியிடம் கை கூப்பி நின்றவர், இராஜஸ்தானி மொழியில், "நான் உன்னுடைய குற்றவாளி, முடிந்தால் என்னை மன்னித்துவிடு ராகினிமா!" என மன்னிப்புக் கோரினார்.

 "ஜீஜூஷா, இதென்ன பப்ளிக் ப்ளேஸ்ல, நான் அதெல்லாம் மறந்துட்டேன். இதோ இங்க வந்ததே அதற்குச் சாட்சி. பம்மி நல்லா இருக்கிறாளா?" என வினவினார்.

 "நல்லா இருக்காம்மா." என்றவரை சிவகுரு, "விடுடா பேரன் பேத்தி எடுத்த பிறகும் இதையே சொல்லுவியா? ராகினியை நான் தான் சமாளிக்க முடியும்னு ஆண்டவனே என்னோடு அனுப்பிட்டார்." என்றார் சிவகுரு.

 "ஏம்மா, அவ்வளவு டெரராகவா மாறிட்ட, சிவா இப்படிப் புலம்புறானே." என்றார்.

 

"பாயீஷா, எல்லா மர்த்தும்(ஆண்கள்) இப்படித்தான் மனைவிக்குப் பயந்த மாதிரி நடிக்கிறது. பம்மி பாபியை கேட்டால் சொல்லுவாங்க நீங்களும் அப்படித்தான்னு." என்றார் பர்க்கா.

 "பஹன்ஜீ, நான் சரண்டர். பம்மியை உங்கள் லிஸ்ட்ல சேர்காதீங்க. அது படாகா, மஞ்சுமா பாபுஷா சரியா சொன்னேன் தானே?" என மகளைச் சப்போர்ட்டுக்கு அழைக்க,

 "மாமிஜீ, எங்க மாஷா இருக்காங்களே, ஓ காட்  இதில் என்னையும் எங்க பாபுஷாவையும் தான் பயங்கர டார்ச்சர்." எனப் பாபுஷாவுக்கு ஜால்ரா போட்டாள்.

 மயூரி, ஹேமந்தை வணங்க அவளை அணைத்துக் கொண்டார். மயூரி, மஞ்சரியைப் பார்த்து, "இன்னைக்கு உங்களால் தான் என் நண்பன் கிடைத்தான்." என உருகினார்.

 "பூபாஷா ராஜ் பய்யா என்ன  பிக்கப் பண்ண  வரேன்னு சொன்னாங்க." என்றாள். "இன்னும் வரலைப் போல, நான் போற வழியில் ட்ராப் பண்றேன்." என்றார்.

 இவர்கள் கிளம்பும் நேரம், "பூபி, புவாஷா, தூ, மண்ணே சாத் நஹி லே ஜாவோகி?" (அத்தை,என்னை கூடக் கூட்டிட்டு போக மாட்டியா) எனக் கேட்டான் ரகுவீர்.

ராகினி அந்த வார்த்தைகளில் ஸ்தம்பித்துத் திரும்பினார். கண்களில் அருவியாகக் கண்ணீர் கொட்ட, "வீரு, தூ கித்தே ஹோ?" எனச் சத்தமாகக் கேட்டார் ராகினி.

"தாரே சாம்னே ஹை, பூபி பைசான் நஹி கயோ?" (உன் முன்னாடி தான் இருக்கிறேன் அடையாளம் தெரியலையா?) என்றபடி ராகினியின் முன்னால் வந்து நின்றான் ரகுவீர்.

 தன் முன்னே ஆறடி ஆண்மகனாக, இராஜஸ்தானிகளுக்கு உரிய கம்பீரத்துடன் நின்ற இளைஞனைப் பார்த்த ராகினி, "தூ???” என அவனுக்கு நேராகக் கையை நீட்டினார். அவர் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்ட ரகுவீர், "புவாஷா என்னை மறந்துட்டியா?" என்று சிறுபிள்ளையாக அழுதான்.

"இல்லை வீரு உன்னை எப்படி மறப்பேன் நீ என்னோட ஜான் இல்லையா!" என அவனை அணைத்துக் கொண்டார் ராகினி. அவனின் முதுகில், தலையில் தடவுவதுமாக தனது மகனாக வளர்த்த பாஞ்சாவை தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

 இந்த அத்தை மருமகன் உணர்வு பூர்வமான சந்திப்பைப் பார்த்து நெகிழ்ந்த மற்றவர்கள் அவர்களுக்குத் தனிமை கொடுத்து காபி ஷாப்புக்குள் சென்றனர். மயூரியும் சிவகுருவும் மட்டும் உடன் இருந்தனர்.

 

இருவரையும் ஓரத்திலிருந்த ஷோபாவில் அமர வைத்தார் சிவகுரு. ராகினியின் ஹேண்ட் பேகை, மயூரி வாங்கிக் கொண்டாள். ராகினியைக் கட்டிக் கொண்டு விடவே இல்லை ,அவரை அணைப்பதும் முத்தமிடுவதுமாகவே இருந்தான் ரகுவீர்.

 "புவாஷா, நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? நீங்க அந்த அங்கிளோட அழுதுகிட்டே போனதைப் பார்த்தேன். தூங்கும் போது, நீங்க அழுதது ஞாபகம் வந்து நானும் அழுவேன்." என்றான் சிறுவனாக. இவ்வளவு நாள் யாரிடமும் பகிராத ரகசியங்களைச் சொல்ல, ஏதோ அவன் இப்போதுதான் அப்படி இருந்தது போல் அவன் கன்னங்களை கைகளில் ஏந்தி முத்தமிட்டார்.

 "என்னை விட்டுட்டு போய்ட்டிங்கன்னு உங்கள் மேல் பயங்கரக் கோபம் புவாஷா, பேசவே கூடாதுன்னு இருந்தேன். இப்ப பாருங்க ஏதோ மேஜிக் வச்சுருக்கீங்க நீங்க."என அவர் மீதே சாய்ந்துக் கொண்டான் ரகுவீர்.

 "நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் வீரூ. உன்னைப் பிரிந்தது தான் எல்லாத்தையும் விடத் தாங்க முடியாமல் போனது." எனக் கண்ணீர் வடித்தார்.

 "புவாஷா, போதும் இனி நோ மோர் டியர்ஸ்." எனக் கொஞ்சினான். ஜானகியோ, அமுதனோ பார்த்திருந்தால் நிச்சயமாகப் பொறாமையில் வெந்திருப்பார்கள், அவ்வளவு அன்யோன்யம் இந்த அத்தை மருமகனிடம்.

 தனது படேபையாவை கம்பீரம் குறையாமல் ஒரு பிஸ்னஸ் மேனாக, தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த மயூரி, புவாஷாவுடன் அவன் நெருக்கத்தைப் பார்த்து அதிசயித்தாள். அவன் தனது மாஷாவிடம் கூட இவ்வளவு நெருக்கத்தைக் காட்டியது இல்லை.

 ஹேமந்த் மற்றவர்களைக் காரில் லேக் பேலஸுக்கு அனுப்பி வைத்து விட்டார். மஞ்சரியுடன் இவர்கள் இருந்த இடத்திற்கு வந்தவர், "ஜமாயிஷா, ஹவேலிக்கு போக வேண்டாமா புவாஷாவை இங்கேயே காக்க வைப்பிங்களா?" எனக் கேட்டார்.

அதன் பின்னரே சுற்றுப்புறம் உணர்ந்தான் ரகுவீர். "பெரிய பிஸ்னஸ் மேன், இப்படியா நான்கு வயசு பையன் மாதிரி இருக்கிறது. பூஃபாஷாவை வாங்கனு கேளுங்கள்." எனச் சொல்லிக் கொடுத்தார் ஹேமந்த்.

 தன்னைச் சமன் படுத்திக் கொண்ட ரகுவீர், எழுந்து நின்று, சிவகுரு நாதன் காலைத் தொட்டு வணங்கி, கைக் கூப்பி "கம்மாகனி பூஃபாஷா, வாங்க. இவ்வளவு நாள் எங்கள் புவாஷாவை கண் போல் பார்த்துக் கிட்டத்துக்கு நன்றி. எங்க மேல இருக்கும் தவறையும் மன்னிச்சிடுங்க." எனக் கை கூப்பி நின்றான்.

 "இதென்ன தம்பி நீங்களும் அமுதன் மாதிரி ஒரு மகன் தான். இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம். நடந்ததை நினைச்சு யாருக்கு என்ன லாபம். விடுங்க. ஸ்வர்ணி அவள் குடும்பத்தோடு சேரனும். அது தான் முக்கியம்." என்றவர் ராகினியிடம்,

 

"ஸ்வர்ணி, இந்தக் குட்டிப் பையன் தானே நமக்கு இடையில் ஒடுனது, இப்பப் பார் ஜவான் லட்காவா நிற்கிறார். நமக்கு வயசாகிடுச்சா என்ன?" என்றார் சிவகுரு.

 "இல்லைடா சிவா, இன்னொரு முறை கையைப் பிடிச்சிகிட்டு ஹீரோயிசம் செய்ற அளவு ஜவான் நீ." எனக் கேலி செய்தார் ஹேமந்த். 

"புவாஷா, பூஃபாஷா வாங்க, நம்ம ஹவேலிக்குப் போகலாம்.” என அழைத்தான் ரகுவீர்.

 ஹேமந் தான், "நஹி ஜமாயிஷா, காலையில் பதினோரு மணிக்கு சில முக்கியமான ஆட்களுடன் உங்க ஹவேலிக்கு வர்றேன். கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு . லேக் ஹோட்டல் வாங்க. அங்க விளக்கமாகச் சொல்கிறேன்." என்றவர் முதல் காரில் மஞ்சரி, மயூரியை அழைத்துச் சென்றார்.

 பின்னாடியே ரகுவீர், தன் அத்தை, மாமாவை பின்சீட்டில் அமர்த்தி லேக் ஹோட்டலை நோக்கி காரை செலுத்தினான். வழி நெடுக ராகினி அந்த ஊரின் மாற்றங்களை அதிசயித்துப் பார்த்து வந்தார். தன் பிறந்தகத்தில் எல்லாரைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார் ராகினி.

 தாஜ் லேக் வ்யூ ஹோட்டல், ராயல் லுக்குடன் மிகவும் ரம்யமாக இருந்தது. அதில் ஒரு டபுள் சூட்டில், இவர்கள் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். ரகுவீர் காரை பார்க் செய்து, புவாஷாவுடன் வந்து சேர்ந்தான். சிவகுருவை பல்லாஜீ கட்டியணைத்து வரவேற்றார்.

 "வீர்ஜீ, எப்படி இருக்கீங்க, பாபிஜீ சங்கா ஹைனா?" என விசாரித்தார் ராகினி. ப்ரீத்தோ தான், "ஆயியே நநத்ஜீ, உங்கள் புண்ணியத்தில் நாங்களும் உதய்பூர் பார்த்திட்டோம்." என்றார்.

 அங்கே, ஓமி பல்லா, ப்ரீத்தோ ஆண்டிக்கு நமஸ்தே சொன்னான் ரகுவீர். "ஆயியே புத்தர்ஜீ, ஜீத்தே ரஹோ." என்றனர். ஜெய் பல்லா வந்து ஆவோ பாயீ என அணைத்துக் கொண்டான். ஹேமந்த், ரகுவீருக்கு ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார். அவர்களை நமஸ்தே சொல்லி வணங்கினான்.

 "ஜமாயிஷா, நாங்கள் ஜந்து நண்பர்கள் பஞ்சபாண்டவர்கள் போல இருந்தோம். டில்லியில் ஒன்னா சிவில் இன்ஜினியரிங் படிச்சோம். இவங்க  மங்கள் பாண்டே, பர்க்கா பாண்டே யூபி காரங்க. இப்போது டில்லியில் பிஸ்னஸ். இரண்டு பசங்க, முதல் மகன் ஆரவ்பாண்டே, ஐஏஎஸ் ஆபீஸர், மருமகளும் ஐஏஎஸ், சின்ன மகன் அமித்பாண்டே, ஏர்போர்ஸ் பைலட்.

 இவன் சந்திரசேகர ரெட்டி, பார்வதிரெட்டி, இரண்டு பொண்ணுங்க. ஶ்ரீமதி, ஶ்ரீநிதி. பெரிய பொண்ணு சாப்ட்வேர் இன்ஜினியர் மருமகனும் அதே. சின்ன மகள் எம்பிபிஎஸ் ஹவுஸ்சர்ஜன்” என அறிமுகப் படுத்தியவர், 

 

“ இப்போ விசயத்துக்கு வருவோம், எனக்கும், ராகினிக்கும் ஷாதி நிச்சயம் பண்ணி இருந்தாங்க, ஆனால் அதுக்கு முன்னமே பங்குரியும் நானும் விரும்பினோம். பெரியவங்க வார்த்தையை மீறவும் முடியாத நிலமை  பங்குரி சூஸைட் அட்டண்ட் பண்ணினாள் எப்படியோ, நான் காப்பாத்திட்டேன். இது ராகினிக்கு தெரிய வந்தது. ஷாதியை நிறுத்தனும்னு முடிவெடுத்தோம்.

அப்போது இன்னொரு பெரிய பிரச்சினை எங்கள் முன்னால் வந்தது.  உங்கள் குடும்பத்தோடு சம்பந்தம், உங்கள் புவாஷாவின் ஷாதி என்பது பெரிய ப்ரஸ்டீஜியஸ் விசயம், 

 ராத்தோட்ஸ் குடும்பத்தோட, ரெனாவத் செகாவத் குடும்பங்கள் பல தலைமுறை சம்பந்தம் உடையவங்க. உங்கள் பர்தாதிஷா ரெனாவத் குடும்பம்.  பெரிய ராணியாக ஒரே பொண்ணு. மேவாட் ராஜ குடும்பத்தின் வழிவந்தவர்கள். அவர்கள் கிட்ட ராஜ பரம்பரை விலை மதிப்பற்ற நகைகள் உண்டு. அதனால் உங்கள் குடும்பச் சம்பந்தம் பெரிய மரியாதை உடையது.

 அதில் ஒரு பகுதியை எங்க படிமாஷா, உங்கள் பாபுஷாவோட,  புவாஷாவுக்கு, ஷாதி செய்த போது போட்டாங்க. அவங்களுக்கு வாரிசு கிடையாது. ஆனாலும் படே பாபுஷாவுக்குக் குடும்பப் பெருமை அதிகம். அதனால் தம்பி மகனான என்னை, ராத்தோட்ஸ் சரிசமமாகக் கான்வெண்ட் படிப்பு, இன்ஜினியரிங் எனப் படிக்க வைத்தார். எப்படியாவது இன்னொரு பகுதி நகையும் இங்க வந்து பெருமை அதிகமாகனும்னு, ராகினியை எனக்குப் பேசுனாங்க.

 நான் பங்குரியை பார்த்த அளவு, ராகினியை பார்த்தது இல்லை. எனக்கு  பங்குரி மேல் விருப்பம், அவளும் உங்கள் குடும்பம் தான். ஏற்கனவே  ராத்தோட் குடும்பப் பெண் மற்றும் நகைக்காக,ரெனாவத், செகாவத் இரண்டு குடும்பத்துக்கும் பயங்கரப் போட்டி” என நடந்ததை சொன்னார். 

 ஷாதி நடக்கும் போது, பொண்ணை மாற்றும் முடிவு, ராகினி உடையது. இது ராகினியின் தாதிஷாவுக்குத் தெரிந்து விட்டது,  அவர்களுக்கு இங்கு இருக்கும் , முரட்டுக் கும்பலைப் பற்றியும்  நன்கு தெரியும். அதனால் ஹேமந்த்தின் நண்பர்கள்,நால்வரையும் அழைச்சார். ராகினிக்காக, சிவாவின் தவிப்பைப் பார்த்தவர் உடனே முடிவெடுத்தார். சிவாவின் பூர்வீகம் பற்றிக் கேட்டவர் அவன் தாத்தாவுக்குப் போன் செய்யச் சொன்னார். சிவாவின் தாத்தாவிடம் , உங்களுக்கு ஒரு தங்கையாக இருந்து கேட்கிறேன். "என் பேத்தியை அனுப்பி வைக்கிறேன். அவளைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு." என ஸ்வர்ண மஹாலக்ஷ்மி ராத்தோட் கேட்டார். 

"நீங்க அனுப்புங்கள் தங்கச்சி என் பேத்தி மாதிரி பார்த்துக்கிறேன்." என வாக்கு கொடுத்தார் சிவாவின் தாத்தா. மொழி தெரியாத ஊருக்கு, தன் பேத்தியின் உயிரைக் காக்க இந்தத் தமிழனின் நம்பிக்கையில், என் நண்பர்கள் உதவியுடன் அனுப்பி வைத்தார் தாதிஷா.

 "நான், பங்குரியை விரும்பிய விசயம் வெளியே வந்தால், ராத்தோட்களின் பகை வரும் எனக் கணக்குப் போட்ட என் படே பாபுஷா, ராகினி யாருக்கும் தெரியாமல் ஓடியதாகக் கதை கட்டினார். ரெனாவத்களைத் தூண்டி இன உணர்வு எனச் சொல்லி திசைத் திருப்பினார். என் படிமாஷா இப்போது இல்லை, ஆனால் படே பாபுஷா இருக்கிறார். நான் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து உங்கள் ஹவேலிக்கு கூட்டிட்டு வரேன். என் நண்பர்களும் வருவாங்க, ராகினியின் கலங்கம் துடைக்கப் பட வேண்டும். அதன் பிறகு நீங்களே உங்கள் புவாஷாவை கூட்டிட்டு வாங்க." என முடித்தார் ஹேமந்த் செகாவத்.

 இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அமுதனும் வந்து சேர்ந்தான். ஹேமந்த், மஞ்சரியை அழைத்துக் கொண்டு, ரகுவீர் மயூரியை அழைத்துக் கொண்டு அவரவர் ஹவேலிக்கு கிளம்பினர்.

கிளம்பும் முன் தன் புவாஷாவிடம் வந்த ரகுவீர், "பூபி, இன்றைக்குப் பிரச்சினை முடிந்து உங்கள் கையில் தான் எனக்குச் சாப்பாடு. அதுவரைக்கும் விரதம் தான். உங்கள் வீருக்கு தால் ரொட்டி ஊட்ட வந்துடனும்." எனச் சொல்லி கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான்.

 

ஆடியோ நாவல்
நீ தான் என் சோட்டுக்காரி

சோட்டுக்காரி-ஆடியோ நாவல் திரி  

http://www.youtube.com/watch?v=eFqHa3XlWYU&t=5s

நீ தான் என் சோட்டுக்காரி - செண்பக சோலையில் ஓசை சித்திரமாக கேட்க,மேலே உள்ள திரி வழி செல்லவும்.

Shailputri

#KSK1 நீ தான் என் சோட்டுக்காரி!

Wonderful Family Drama. 

அரடிக்கட்டுக்கும் கிழமுருக்குக்கும் நடக்குற அழாகான காதல் கதை.

பெரிய ஃபேமிலில பிறந்து ஒற்றை ஆண்வாரிசின் மொத்த பொறுப்புகளையும் சுமக்கும் இளமுருகு பெரிய கோடீஸ்வர குடும்பத்துல பிறந்து செல்லமகளா வளரும் தெய்வா என்னும் மோஹனகுழலியிடம் எப்படி கல்யாணத்துக்கு பிறகு காதலில் விழுந்தான் என்பதே கதை.

சரோஜா, குமுதினி, கமலினி நளினின்னு நாத்தனார் அதிகாரம் ஒரு பக்கம், ரெஸ்பெக்ட் வரதராஜன், மனோ. தினகரன், ரவின்னு வீட்டு மாப்பிள்ளைகள் கெத்து ஒரு புறம்ன்னு கதை ரொம்பவே இயல்பா இருந்தது.

ஆடியோ நாவல்
ஹாசினி சந்திரா

ஹாசினி சந்திரா -part-1

ஹாசினி சந்திரா -part-2

நாயகி; மதுர ஹாசினி சந்திரா 

நாயகன் : சந்திரதேவ் 

நாயகியின் அடையாளத்தையே  அழித்து அவளை காக்கும் நாயகன். ஹாசினி சந்திரா.  பாம்ப் ப்ளாஸ்ட், படுகொலை, கடத்தல், தீவு, விசாரணை, அரசியல், அதிகாரம், காதல் என ஃபுல் பேக் மூவி... Read & enjoy. 
 
தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன்.
தந்தைக்காக அரசியலுக்கு வந்து தன்னையே இழக்கும் நாயகி.
குடும்பம், அரசியல், கடத்தல், விசாரணை என பரபரப்பான கதை களம்.
 
விமர்சகர்; அலமு கிரி
கதை: ஹாசினி சந்திரா
ஆசிரியர்: தீபா செண்பகம்
சஸ்பென்ஸ் ரொமான்ஸ் பாசம் னு எல்லாம் கலந்த ஒரு திரைப்படம் பார்த்த மாதிரி இருந்தது கதை....
திரைப்பட நடிகர் தேர்ந்த அரசியல்வாதியின் மகளாக நாயகி ஹாசினி... ஹாசினிக்காக உலகையே எதிர்த்து நின்று காதலை காட்டும் ஹாசினியின் மாமன் மகன் சந்திரா...
நினைவுகள் சிதறிப் போய் இருக்கும் தந்தையின் பெயர் கெட்டு சீரழியாமல் இருக்க நிற்பந்நத்தின் பேரில் அரசியலில் கலமிறங்கும் ஹாசினியை ஆபத்தில் இருந்து காப்பாற்றி சுத்தமாக அவளின் அடையாளத்தை அழித்து காக்கிறான் சந்து ....
ராம்ஜீ பானுமதி மேனகா இவர்களின் முக்கோண உறவுகளை மிக மிக நேர்த்தியாக கொடுத்து இருக்காங்க....
தங்கப் பாண்டியன் ஹாசினி கேஸ் விசாரணை செய்வது ரொம்பவே விறுவிறுப்பாக இருந்தது..... ( தங்கப்பாண்டியன் தான்வி வேற கதையா இருக்கா? )
ஹாசினி புது அடையாளத்தை ஏற்கிறாளா? இல்லை பழைய ஹாசினியாக இருக்கிறாள? அதனால் ஹாசினி சந்து விற்க்கும் ஏற்படும் விளைவுகளை என்ன என்பதை கதையை படிச்சி தெரிந்து கொள்ளுங்கள்...

Amazon links
தீபாஸ் இணையப் புத்தகம்

பனி இரவில் தணலாவாய்

பனி இரவில் தணலாவாய்

 

பேசும் கண்ணனுக்கு என்னைப் புரியாதா

 பேசும் கண்ணனுக்கு என்னைப் புரியாதா

 

பூகம்பத்தை பூட்டியப் பூவை (பாகம் 1)

பூகம்பத்தை பூட்டியப் பூவை (பாகம் 1)

 

பூகம்பத்தை பூட்டியப் பூவை (பாகம் 2)

பூகம்பத்தை பூட்டியப் பூவை (பாகம் 2)

 

விடை தேடும் விட்டில் பூச்சிகள்

விடை தேடும் விட்டில் பூச்சிகள்

 

பிரிவும் உறவும் அவளாலே

பிரிவும் உறவும் அவளாலே

 

விழியிலே மலர்ந்தது! உயிரிலே கலந்தது!

விழியிலே மலர்ந்தது! உயிரிலே கலந்தது!

 

தாழம் பூ வாசம்

தாழம் பூ வாசம்

 

மீட்டாத வீணை

மீட்டாத வீணை

 

செவ்விழியன் (பாகம் 1)

செவ்விழியன் (பாகம் 1)

 

வெண்பனிப் பூவே

வெண்பனிப் பூவே

 

கோடையில் மழை

கோடையில் மழை

 

மின்னி மறையும் ஆசை

மின்னி மறையும் ஆசை

வாழ்வியல்
ஐ லவ் யூ வும் முத்தங்களும்

காலை 6.40 மணிக்கு விக்ரமின் செல்போன் துடித்தது. அரை தூக்கத்தில் கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தவன் அலைப்பேசி திரையில் சுகுமார் மாமா என்று வந்திட சட்டென்று எடுத்தான். 

"ஹலோ மாமா! சொல்லுங்க மாமா... இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தான். 


"தம்பி எப்பவும் அப்பா வந்து 5.30க்கு எழுப்பி வாக்கிங் கூட்டிட்டு போவாரு. இன்னைக்கு இன்னும் வர காணோம்னு வீட்டுக்கு வந்து பார்த்தேன்" என சுகுமார் சொல்லி முடிக்கும் முன்பே விக்ரம் முகம் வெளிரியது.

சுகுமார், "கதவ தட்டி பார்த்தேன். சத்தம் ஏதுமில்ல. காலிங் பெல் அடிச்சேன். எந்திரிக்கல. போன் பண்ணியும் பார்த்தேன். எந்த பலனும் இல்ல. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. கதவ உடைச்சு பார்த்தரலாமா?"  என கேட்க,


"ஐயோ மாமா. இத கேக்கணுமா? சீக்கிரம் கதவ உடைச்சு என்னன்னு பாருங்க மாமா" கட்சி கொண்டு கட்டிலை  விட்டு இறங்க அவன் குரல் கேட்டு எழுந்தாள் சத்யா.

சுகுமார் அருகில் இருந்தவர்களை அழைத்து விஷயத்தை சொல்லி கதவின் தாழ்பாளை உடைத்தார்கள்.  அவர்கள் வேகமாக உள்ளே சென்றபோது பெட்ரூம் அறை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது உள்பக்கமாக தாழிடப்படவில்லை.

கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து கொண்டு தனது மனைவியின் பட்டுப்புடவை தனது நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் எந்த அசைவும் இன்றி அமைதியாக படுத்திருந்தார் செல்வகுமார்.


குளிர்ந்து போன அவரது உடலும் மூச்சற்ற நாசியும் அசைவற்ற உடலும் இறந்து விட்டார் என்பதை உணர்த்தியது.  அருகில் காலியாகிப்போன தூக்க மாத்திரை அட்டை சிலருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்திருந்தது.

சரியாக ஏழு மணிக்கு மீண்டும் விக்ரமிற்கு போன் அழைப்பு சென்றது. அதற்கு முன் ஆறு முறை முயற்சி செய்த போதும் சுகுமார் அழைப்பை எடுக்கவில்லை. பதட்டத்தில் இருந்த அவனோ சட்டென்று அழைப்பை எடுக்க "மாப்ள அப்பா நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டாருடா" என அழுது கொண்டே சொல்ல அப்படியே சரிந்து அமர்ந்தான். 

அவன் உடல் மொழியை பார்த்த சத்யாவிற்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. 

"மாமா..." துவண்டுபோன குரலில் திக்கி திக்கி பேசினான். 

"சீக்கிரம் கிளம்பி வாடா. இங்க நாங்க மத்த வேலையை ஆரம்பிக்கிறோம். ஆனா அப்பா தானா சாகலடா. தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்கார்னு நினைக்கிறேன். என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் புரியலடா. நம்ம எஸ்ஐ சக்திவேல் கிட்ட சொல்லி இருக்கேன்" என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.


"அப்பா.... அப்பா.... "  என்று அவன் அழுது கொண்டே கத்தியதில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்தான். சத்யாவும் அழுது கொண்டே சீக்கிரம் கிளம்புங்க போலாம் என்றாள்.


செல்வகுமாரின் உடல் பெட்ரூமில் இருந்து எடுத்து வந்து ஹாலில் தரையில் வைத்தார்கள். தலைமாட்டு அருகில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அவருக்கு செய்ய வேண்டிய முறை செய்தார்கள். சிறிது நேரத்தில் ஊர் முழுக்க அந்த செய்தி பரவியது. 

சிறிது நேரத்தில் அங்கு வந்து இறங்கிய ஐஸ்பெட்டிக்குள் உடல் புகுந்தது. உயிரோடு இருந்தவரை செல்வகுமார் என்ற பெயரோடு வாழ்ந்தவர் சில நிமிடங்கள் முன்னால் இருந்து சவம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். 


"ஏம்பா அவர் பையனுக்கு விஷயத்தை சொல்லிட்டீங்களா? முக்கியமான சொந்த பந்தம் எல்லாத்துக்கும் சொல்லிருங்கப்பா" கூட்டத்திலிருந்து குரல் வந்தது. 


"அதெல்லாம் சொல்லியாச்சுப்பா. இந்நேரம் பையன் கிளம்பி இருப்பான். எப்படியும் வர்றதுக்கு ரெண்டு மூணு மணி ஆகும்னு நினைக்கிறேன்"


"எத்தனை மணிக்கு சவத்த எடுக்கிறதுன்னு சொன்னா தானப்பா காட்டுல எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்க முடியும். நம்ம வீரனும் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும்ல"


"அட என்னப்பா சொல்றீங்க! அவ்வளவு தூரத்திலிருந்து பையன் வரான். ஒரே பையன். அவனுக்கு அவங்க அம்மா மூஞ்சி ஞாபகம் இருக்கோ இல்லையோ? அவங்க அப்பன் தான் அப்படி வளத்தான். அவனுக்கு கொஞ்சம் அழறதுக்காவது நேரம் தர வேண்டாமா?" முதியவர் ஒருவர் சொல்ல, 

"பெருசு நீ சொல்லிட்டு போயிருவ. எழவ முடிச்சுட்டு மத்தவங்க எல்லாம் வீட்டுக்கு போக வேண்டாமா? இங்கேயே டோரா போட்டுக்கலாமா? கொஞ்சம் சும்மா இருங்க" 


"ஏன்டா உங்கப்பன் செத்தா இப்படித்தான் எடுப்பேன்னு துள்ளுவியா? வந்தோமா எழவு கண்டோமா? விருப்பம் இருந்தா எடுக்கிற வரைக்கும் இரு. இல்லையா நீ பாட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இரு. அவன் பெத்த பையன் வந்துட்டு இருக்கான்ல. அவன் வந்து எப்ப எடுக்கிறதுனு சொல்லுவான்" என்று அந்த முதியவர் சொன்னவுடன் அவருக்கு சுருக்கென்று இருந்தது.


"விடுங்கப்பா. ஆளாளுக்கு பேசிக்கிட்டு. விக்ரமுக்கு போன் பண்ணி என்ன பண்றதுன்னு கேட்டா சொல்ல போறான். அத விட்டுட்டு நாமளே ஒன்னு பேசிட்டு இருந்தா என்ன பிரயோஜனம்?" என ஒருவர் சொன்னவுடன்,


சுகுமார், "அவனுக்கு யாரும் போன் பண்ண வேண்டாம். அவன் இப்போ என்ன மனநிலையில் இருப்பான்னு நமக்கு தெரியாது. இங்கே என்ன நடந்திருக்குன்னு அவனுக்கு தெரியாது. அவன் வந்த அப்புறம் நாம பேசிக்கலாம். இப்போதைக்கு ஒருத்தர் போய் ஜோசியர் கிட்ட எடுக்குறதுக்கு எது நல்ல நேரம்னு குறிச்சிட்டு வாங்க. இன்னைக்கு சாயந்திரம் இல்லைனாலும் நாளைக்கும் சேர்த்து எழுதி வாங்கிட்டு வாங்க" என்றார்.


செல்வகுமார் இறந்த செய்தி கேட்டு பல உறவினர்கள் விக்ரமிற்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார்கள் அவர் இறந்த செய்தி உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள. 


கண்ணீர் நிறைந்த முகத்துடன் வார்த்தைகள் தொண்டைக்குள்ளியில் சிக்கிக் கொண்டு வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கிற பதில் சொல்லி கொண்டிருந்தான். ஹலோ விக்ரம். அப்பா இறந்துட்டாரா?" என்ற கேள்விக்கு, "ஆமா. அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டாரு" என்று சொன்னான். 


அப்பா இறந்துவிட்டார் என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை. அவன் மனதில் இருந்த வலியிலும் துக்கத்திலும் அவனிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கேள்வி அப்பா என் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது தான். 

"ஏங்க.. உங்க வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல மாமா தவறிட்டாருனு வச்சிருங்க. நிறைய பேரு உங்களுக்கு போன் பண்றாங்க. யார் யாருக்கு சொன்னாங்கன்னு தெரியல. சொந்தக்காரங்க எல்லோருக்கும் தெரியனுமில்ல" என்றாள் சத்யா. 

அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டு தனது செல்போனின் இன்டர்நெட் வசதியை ஆன் செய்தான்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் குழுவில், " எனது அப்பா எங்களை விட்டுவிட்டு அம்மாவிடம் சென்றுவிட்டார். ஊரில் உள்ள அவரது வீட்டில் அவர் உடல் இருக்கிறது" என பதிவு செய்தான். 

இரவில் இன்டர்நெட்டை ஆப் செய்து வைக்கும் பழக்கம் உள்ளதால் காலையில் குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. அதில் தனது தந்தை எப்பொழுதும் காலை அனுப்பும் காலை வணக்கம் குறுஞ்செய்தி இன்று அவனுக்கு வரவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி நள்ளிரவில் வந்திருந்தது. 


அதை படித்தவனுக்கு உடல் குப்பென்று வியர்த்தது. கண்ணீர் வேகமாக கன்னங்களில் விழுந்து ஓடியது. அவன் படித்த அந்த செய்தியை தன் மனைவியிடம் கூட கூறவில்லை.


அவனுக்கு எப்போது வீட்டுக்கு சென்று அப்பாவை பார்ப்போம் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. அவனால் இப்போது யாரிடமும் பேசக்கூட முடியவில்லை.

தனது செல்போனை தன் மனைவி சத்யாவிடம் கொடுத்துவிட்டு அமைதியாக கண்களை மூடி சாய்ந்து கொண்டான். அவன் கண்களில் வழிந்து ஓடிய கண்ணீர் அவன் வலிகளை சொல்லிக் கொண்டே இருந்தது.


அதே நேரத்தில், 


"அவருக்கு என்னதான் பிரச்சனை? இத்தனை நாள் சந்தோசமா தான் இருந்தாரு. காடு தோட்டம் வீடு போய் வருவதற்கு காரு அதை ஓட்டுறதுக்கு டிரைவர்னு காசு பணத்துக்கு குறை இல்லாம நல்லா தானே இருந்தாரு. அப்புறம் ஏப்பா இப்படி மாத்திரை சாப்டாரு?" கூட்டத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 

"யாருக்குப்பா தெரியும்? பையன் கூட ஏதாவது சொல்லி இருக்கலாம்?" மற்றொருவர் கூறினார்.

"இத்தனை சொத்தும் அவர் பெயரில தான் இருக்கு. எழுதி வைக்க சொல்லி பையன் கேட்டிருக்கலாம் இல்ல"


''அட சும்மா இருங்கப்பா. இத்தனை சொத்துக்கும் அவன் ஒருத்தன் தானே வாரிசு. என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு தானே எல்லாம். அது காரணமா இருந்திருக்காது"


"அப்ப பையன் ஏதாவது பிசினஸ் பண்ணனும்னு காட்ட வித்து காசு குடுக்க சொல்லி இருக்கலாம்... இல்ல"


"அட ஆமாப்பா... பையன் போன தடவை வந்தப்பவே தொழில்ல நட்டமாயிருச்சு. அங்கிருந்தா பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அதான் இங்கு வந்து ஒரு நாலு நாள் இருக்கலாம்னு அன்னைக்கே சொன்னான். அப்ப கூட அப்பாவை ஊருக்கு வாங்கன்னு கூப்பிட்டான். ஒருவேளை அந்த வீட்டை விக்கிறதுக்கு தான் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். பெருசு எப்படியும் முடியாதுன்னு சொல்லி இருக்கும். நேத்து போன் பேசும்போது ஏதாவது சொல்லி இருப்பான். அவசரப்பட்டு மாத்திரை சாப்பிட்டுருச்சு" என்றார் உறவினர் ஒருவர்.

"இல்லன்னா பெரியவர் ஏதாவது அவனை சொல்ல.... அவர ஏன் இன்னும் இருந்து தொல்லை பண்றீங்கன்னு கேட்டு இருக்கலாமில்ல" என ஒருவர் மாற்றி ஒருவர் செல்வகுமார் தற்கொலை செய்து கொள்ள விக்ரம் தான் காரணம் என்று முடிவு செய்து விட்டார்கள். அந்தப் பேச்சுக்களும் துக்க அழுகைக்கு நடுவே காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

மதியம் சரியாக 2.30க்கு விக்ரம் வந்த கார் வீட்டிற்கு வந்தது. ஏற்கனவே பல கார்கள் நின்றதால் ஆனால் வாசல் வரை வர முடியவில்லை. காரை விட்டு இறங்க அவனுக்கு பயம் பற்றியது. கார் கதவை திறக்க கைகள் நடுங்கியது. அவனைப் பற்றி சத்யா அறிவாள். சற்றென்று கார் கதவைத் திறக்க இருவரும் இறங்கினார்கள். 


மொத்த கூட்டமும் இவர்களை தான் பார்த்தது. அருகில் நின்ற சிலர் அவனது தோளை தட்டி முன்னை நகரச் சொல்ல வீட்டில் இருந்து சிலர் வேகமாக ஓடி வந்து அணைத்து அழுதார்கள்.


சத்யாவின் அப்பா குழந்தையை வந்து வாங்கிக் கொள்ள, அவளின் அம்மா அழுது கொண்டு அவளை வேகமாக உள்ளே அழைத்துச் சென்றார். 


அழுது தேங்கி நின்ற விக்ரமை சுகுமார் கைபிடித்து இழுக்க வரமாட்டேன் என தலையாட்டிபடி அங்கேயே அமர்ந்தான்.


"வாடா..."

"எதுக்கு மாமா வரச்சொல்றீங்க. நான் வரமாட்ட" 

"எந்திரிடா மாப்ள. வந்து அப்பாவ பாரு"


"இனிமேல் பார்க்க முடியாதுன்னு இப்ப வந்து பாத்துக்க சொல்றீங்களா மாமா. என்ன இப்படி விட்டுட்டு ஏன் மாமா போனாரு" என கண்ணீர் விட்டு கதறினான்.


"டேய் மரியாதையா எந்திருச்சு வாடா. எல்லாரும் உனக்காக தான் காத்திருக்காங்க" என அண்ணன் குமரேசன் சொல்ல, 


விக்ரம், "நாங்க இருக்கும். சித்தப்பாவை பாத்துக்குறோம். நீ தைரியமா போயிட்டு வான்னு சொன்னீங்களேடா. அடுத்த தடவை ஊருக்கு வரும்போது அவர் இருக்க மாட்டார்டா" என சொல்லிவிட்டு எழுந்து ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 

அனைவரும் அவனை பிடித்து இழுக்க, "விடுங்க என்ன. எனக்கு அவரை பார்க்க புடிக்கல. நாம இல்லாம நம்ம பையன் என்ன பண்ணுவான்னு யோசிச்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பாரா? என்ன பத்தி யோசிக்காதவர நான் எதுக்கு பாக்கணும்? விடுங்க... விடுங்க..." என்று கத்த அவனை இழுத்து வந்து வீட்டின் கதவு அருகில் நிறுத்தினார்கள்.


அவனின் கதறல் கேட்டு எந்த அசைவும் இன்றி அமைதியாக  கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருந்தார் செல்வக்குமார். அவரின் உடலை பார்த்தவுடன் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அங்கே நின்றான் விக்ரம். 


உள்ளே இருந்து ஓடி வந்த அவனது அத்தை, "விக்ரமு எங்க அண்ணனை இந்த கோலத்துல பார்க்கவா நீ வந்த. இனி எங்க அண்ண கூட  எப்படிடா நான் பேசுவேன்" என கதறி அழுதாள். அவனது அக்கா அவனை கைபிடித்து இழுத்து செல்ல குழந்தையை போல் உள்ளே சென்றான்.

செல்வகுமார் தலை அருகில் அவன் நிற்க, சத்யாவை மற்ற பெண்கள் அணைத்து அழுதுகொண்டு இருந்தனர். 


ஐஸ் பாக்ஸ் கண்ணாடி பெட்டியை குமரேசன் எடுத்து கீழே வைக்க சிரித்த முகத்தோடு இறந்து கிடக்கும் தன் தந்தையை பார்த்தவன் சட்டென்று அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.


"எப்பவும் அப்பா இருக்கேன்... அப்பா இருக்கேன்னு சொல்லுவீங்களேப்பா.  இப்ப மட்டும் எப்ப விட்டு போனீங்க. நான் என்னப்பா தப்பா செஞ்சேன். சொல்லுங்கப்பா.... சொல்லுங்கப்பா... " 


"நீ என்ன வேணா பண்ணு. உனக்கு பின்னாடி தான் இருக்கேன். சரி எது தப்பு எதுன்னு சொல்றேன். திருத்திக்கோன்னு சொல்வீங்களே. இனி எனக்கு யாருப்பா அதெல்லாம் சொல்லுவா?" 

"அப்பா உயிரோடு இருக்கிறதே உனக்காகத்தானே சொல்லுவீங்களே. இப்ப என்னாச்சுனு தற்கொலை பண்ணிட்டீங்க. பையன் கடைசி காலத்துல பார்க்க மாட்டானு நினைச்சிட்டீங்களா?"


"அம்மா செத்தப்போ எனக்கு இந்த அளவுக்கு வலிக்கல. எனக்கு அப்போ அந்த அளவுக்கு வயசு இல்ல. ஆனா இனி எப்படி இருக்க போறேன்னு தெரியல. ரொம்ப பயமா இருக்குப்பா. எந்திரிங்கபா... சும்மா தூங்கிட்டு தான் இருக்கேன் எந்திரிச்சு சொல்லுங்கப்பா" என கதறினான்.

"போன தடவை ஊருக்கு வந்தப்போ எங்களோடு வாங்க வாங்கன்னு கூப்பிட்டேனே. வர முடியாதுன்னு பிடிவாதமா சொன்னீங்களே. இதுக்குத்தானா? வந்திருந்தா இப்படி ஆகி இருக்காது இல்ல. என் மேல என்னப்பா கோபம். சொல்லுங்கப்பா...." அவன் சத்தம் ரோடு வரை கேட்டது. 


அவன் அழுகையும் கேள்வியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு கொண்டிருந்தது. அவரின் இறப்பில் அவனுக்குத் தான் வலி அதிகம் என்பதால் யாரும் அவனை தேற்ற கூட தயாராக இல்லை. இன்னும் சற்று நேரம் அவன் அழட்டும் அமைதியாக இருந்தார்கள். 

சற்றென்று ஒருவர், "தம்பி விக்ரமு அப்பாவை எப்ப எடுக்குறதுன்னு சொல்லுப்பா. காட்டுக்கு சொல்லி அனுப்பணும்" என்றதும் அவர் மேலே படுத்துக்கொண்டான். 


"நான் அப்பாவை எடுக்க விட மாட்டேன். எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க முதல்ல. யாரும் எங்கப்பா தொடக்கூடாது" என்றதும், 

"ஏங்க எல்லாருக்கும் அப்பா இருந்தா இப்படித்தான் இருக்கும். அவன யாராவது முதல்ல வெளிய கொண்டு வாங்க. எல்லாரும் துக்கம் கேட்கணும் இல்ல. எத்தனை மணிக்கு இறந்தாருன்னு தெரியல. சீக்கிரம் எடுத்தரலாம்" என்றார்.

அவர் சொன்னது சரி என்று பட அவனை உள்ளே இருந்து எடுத்து வந்து வெளியே நிற்க வைத்தார்கள். 

எஸ்ஐ சக்திவேல் அப்போது அங்கு வந்து சேர்ந்தார். "தம்பி உங்க அப்பா இறந்துட்டாரு. அது தற்கொலையா இல்ல கொலையான்னு பாக்கனும். அதே மாதிரி ஒரு வேளை அவர் தற்கொலை பண்ணி இருந்தாருன்னா என்ன காரணம்னு தெரியனும். போஸ்ட்மார்ட்டம் பண்ணலாமா?" என்று சாதாரணமாக கேட்டார்.


அழுது கொண்டிருந்த விக்ரம், "இது கொலை இல்ல சார். அப்பா சூசைட் தான் பண்ணிட்டாரு" 

"ஏன்னு தெரியுமா? இல்ல போஸ்ட்மார்ட்டம் பண்ண கூடாதுன்னு சொல்றீங்களா?" சக்திவேல் கேட்க 


தனது செல்போனை எடுத்து நேற்று இரவு சரியாக 12.43 க்கு "அப்பா சந்தோஷமா போய்டு வரேன். நீ பத்திரமா இரு. உனக்காக பீரோல சில பேப்பர்ஸ் வெச்சிருக்கேன். என்ன எடுக்கிறதுக்கு முன்னாடி அதை எடுத்து எல்லோரும் முன்னாடியும் படிச்சுரு. அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும். துக்கத்துல மறந்துடாத" என்று செல்வகுமார் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை காண்பித்தான்.


"இதை எத்தனை மணிக்கு பார்த்தீங்க?"

"காலையில ஒரு 8.30க்கு பார்த்தேன்"

"ஏன் அவ்வளவு நேரம்? உங்களுக்கு மிட்நைட்ல அனுப்பிட்டாரு"


"நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி எப்பவும் நெட் ஆப் பண்ணி வச்சுருவேன். காலையில சுகுமார் மாமா கூப்பிட்டு விசயத்த சொன்னார். அப்பா எங்கள விட்டுட்டு போன தகவல ஸ்டேட்டஸ் வைக்கும் போது தான் பார்த்தேன்" என்றான்.


"போய் அந்த பேப்பர்ஸ் எடுத்துட்டு வாங்க"


"வேண்டாம் சார். எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம். நீங்க போயிட்டு வாங்க. எல்லாம் முடிஞ்சா அப்புறம் நானே ஸ்டேஷன் வரேன்" விக்ரம் சொல்ல, 

"அப்பா சொன்னா ஆயிரம் காரணம் இருக்கும் மாப்ள. போய் எடுத்துட்டு வா. அவர் பத்தி எனக்கு நல்லா தெரியும். போ" சுகுமார் சொன்னவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். சக்திவேல் வந்த பிறகு அந்த வீட்டில் ஒரு துளியும் அழுகை சத்தம் இல்லை. 


பீரோவை திருந்தவுடன் தனது மனைவியின் சேலைக்குள் ஒரு பை ஒன்றை வைத்திருந்தார் செல்வகுமார். அதை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் திறக்க பல சின்ன சின்ன கவர்கள் இருந்தது. 

அதில் தனது சொத்துக்கள் ஒவ்வொன்றையும் தன் இறப்பிற்குப் பிறகு மகனுக்கு சேர வேண்டும் என்று எழுதி பதிவு செய்து வைத்திருந்தார்.

ஒவ்வொரு கவராக எடுக்க ஒரு கவரில் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்து பிரித்தான்.


" அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்..." என்ற வரியை படித்தவுடன் அந்த கடிதத்தை அப்படியே போட்டுவிட்டு கைகளால் முகத்தை மூடி "அப்பா..." என்று கத்திக்கொண்டே அமர்ந்தான். அந்த அழுகை அங்கு நிலவிய அமைதியை குலைத்தது.


சக்திவேல் அந்த கடிதத்தை எடுத்து பார்த்தார். "விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும்" என அடுத்ததாக எழுதி இருந்தது.


"எல்லாரும் இங்க வாங்க. இந்த லெட்டர எல்லாரும் கேக்குற மாதிரி சத்தமா படிக்க சொல்லி எழுதி வச்சிருக்காரு. நான் இந்த லெட்டரை படிக்கிறேன். கேளுங்க " என்றார் எஸ்ஐ  சக்திவேல்.


"அன்புள்ள மகன் விக்ரமுக்கு அப்பாவின் ஐ லவ் யூவும் அன்பு முத்தங்களும்...


விக்ரம் இந்த கடிதத்தை எல்லோரும் கேட்கும்படி சத்தமா படிக்கனும். அப்பா சொல்றேன். காரணம் கடைசில உனக்கே புரியும். 

உன்னால படிக்க முடிஞ்சா படி. இல்லன்னா வேற யாராவது படிக்கச் சொல்லிடு. ஆனா இந்த லெட்டர் படிக்காம என்னோட உடம்ப எடுத்துவிடாதே.

முதல்ல நீ அப்பாவ மன்னிக்கணும். ஏன்னா நான் உனக்கு பண்ண துரோகம் இது. நம்ம அப்பா நம்மள விட்டுட்டு இப்படி செத்துப் போவார்னு நீ கனவுல கூட நினைச்சு இருக்கமாட்ட. உன்ன இப்படி தனியா விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா எப்படியும் ஒரு நாள் நான் சாக தானே போறேன். அதான் இப்ப கிளம்பிட்டேன். 


விக்ரம் நான் தற்கொலை பண்ணிக்கனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். எப்ப இருந்துனா உன்னோட 13 வயசுல இருந்து. என்னைக்கு உங்க அம்மா என்னை விட்டு போனாலோ அன்னைக்கு சாகணும்னு நினைச்சேன். ஆனா நானும் போய்ட்டா நீ என்ன செய்வ. உங்க அம்மா இறந்தது விதி. அன்னைக்கு நான் தற்கொலை பண்ணி இருந்தா நீயும் என்னை வெறுத்திருப்ப. ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்ப. அதனால தான் அப்பா சொல்லுவேன் உனக்காக தான் உசுரு வாழ்றேன்னு. 

நான் உன்கிட்ட உன் அம்மாவ பத்தி பேசினதே கிடையாது. நீயும் அம்மாவ கேட்டது கிடையாது. எங்கே அம்மாவ பத்தி பேசி உனக்கு ஏக்கம் வந்திருவோம்னு பயந்தே பேச மறுத்துட்டேன். 

ஆனா அவளை பத்தி நினைக்காத நாள் கிடையாது. அவள நினைச்சு கண்ணீர் சிந்திக்காத நாள் கிடையாது. இன்னைக்கு நீ எப்படி என்னை இழந்துட்டு அழுகிறயோ அதே மாதிரி தான் தினமும் அழுதுகிட்டு வாழ்ந்தேன்.


என்னோட உசுரு உங்க அம்மா தமிழ்செல்வி. உங்க அம்மாவ நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரும்போது எங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியாது. கல்யாணம்னா நம்ம உடல் சுகத்திற்கும் புள்ள பெத்துக்கறதுக்கும் வீட்டு வேலை செய்யறதுக்கும் தான்னு நினைச்சுட்டு இருந்த காலம். 

கல்யாணமான கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாள் நைட் எனக்கும் உங்க அம்மாவுக்கும் சரியான சண்டை. அன்னைக்கு உங்க அம்மாவை ஓங்கி அடிச்சிட்டேன். ஆம்பள திமிரு. உன் அப்பன் வீட்டுக்கு கிளம்பு அப்படின்னு சொன்னேன். 


"என் அப்பா வீட்டிலிருந்து நான் எப்படி வந்தனோ அதே மாதிரி கன்னிப்பொண்ணா என்னை திருப்பி அனுப்புங்க நான் போறேன்" அப்படின்னு சொன்னா. நான் ஆடிப் போயிட்டேன். அவ்வளவு போல்டு என் தமிழ்செல்வி.

அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் நான் பேசவே இல்லை. சமைச்சு வச்சா திங்க மாட்டேன். அவ மூஞ்சிய பாத்தாலே திரும்பி போயிடுவேன். அன்னைக்கு காலையில எழுப்பினா. கண்ணு முழிக்கும்போது உன் அம்மா பக்கத்துல நின்னுட்டு இருந்தா. அவ்வளவு அழகா இருந்த அன்னைக்கு. நான் அவள பாத்துட்டு இருக்குறத பாத்து என் காது பக்கத்துல வந்து ஐ லவ் யூ அப்படின்னு சொல்லிட்டு நெத்தில ஒரு முத்தம் கொடுத்தா. அதுக்கு அப்புறம் அவ மேல இருந்த மொத்த கோபமும் போயிருச்சு.

அவ என் மேல வச்சு அன்பு அவள எப்பவும் மிஸ் பண்ணிடவே கூடாதுன்னு நினைக்க வச்சுது. அதுக்கப்புறம் உன் அம்மா இல்லாம எங்கேயும் நான் போகவே மாட்டேன். வாழ்க்கையில கஷ்டம் வரத்தான் செய்யும். மேல இருக்கிறவங்க கீழ போவாங்க. அப்படி நான் போனப்ப எல்லாம்  செல்வி தான் என்னோட ஒரே ஆறுதல்.


எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ மடியில் படுத்துட்டு அவகிட்ட சொல்லுவேன். சில தடவை சொல்லவும் முடியாது. ஆனா அவ புரிஞ்சுக்குவா. அவ தந்த அந்த முத்தமும் ஐ லவ் யூவும் என்ன ஓட வெச்சது. அதுக்கப்புறம் நீ பொறந்த. உன் அம்மா எனக்கு மட்டும் தந்த அந்த முத்தத்துல நீயும் பங்கு கேட்ட" என்று சொல்லிவிட்டு சக்திவேல் விக்ரமை பார்த்தார். அவன் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் மட்டும் பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தான்.

சக்திவேல் மேலும் படிக்க ஆரம்பித்தார்.

"நாங்க ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே உனக்கு முத்தம் கொடுப்போம். நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையில புயல் அடிச்ச மாதிரி அந்த நாள் என்னுடைய வாழ்க்கையை மாத்திடுச்சு.

தினமும் உங்க அம்மா எனக்கும் நான் அவளுக்கும் ஐ லவ் யூ சொல்லிட்டு நெத்தில முத்தம் கொடுத்துட்டு தூங்குறது வழக்கம். அன்னைக்கு முதல் நாள் நைட்டும் அப்படித்தான் போச்சு. அந்த நாள் தான் நான் கடைசியா சந்தோஷமா இருந்த நாள்.


என்னோட வாழ்க்கையில நான் அந்த மாதிரி என்னைக்கும் அழுததே இல்ல. எவ்வளவு கஷ்டம் வந்தப்ப கூட நான் சாக நினைக்கல. ஆனா அன்னைக்கு அவ கூடவே செத்துப் போயிடனுமுனு தோணுச்சு. ஆனா நான் சாகாம இருக்க ஒரே காரணம் நீ மட்டும் தான்" 


"அப்பா....." விக்ரம் சத்தம் சக்திவேலை ஒரு நிமிடம் அமைதி ஆக்கியது. 


"விக்ரம் நீ அப்போ அம்மா அம்மான்னு அழுத. உனக்கு ஆறுதல் சொல்றதா இல்ல நான் அழற தானே தெரியல. என்னோட செல்விய கட்ட மேல அப்படியே படுக்க வச்சிருந்தாங்க. என் ஈரக் குலையே நடுங்கிருச்சு. ஆனா அந்த நிமிஷம் மாறாது. அவளை கட்டி புடிச்சிட்டு அழுதேன். அந்த இடத்துல நான் அவளுக்கு கடைசியா ஒரு ஐ லவ் யூவும் முத்தமும் கொடுத்தேன். அதுக்கப்புறம் என்னால கொடுக்க முடியாம போயிடுச்சு. 


அப்பதான் புரிஞ்சுகிட்டேன். ஒரு ஐ லவ் யூ ஒரு மனிதனை எந்த அளவுக்கு சந்தோஷமா வாழ வைக்கிறது அதே அளவுக்கு அழ வைக்கவும் செய்யும்.

அதனால் தான் உன் மனசு கஷ்டத்தில் இருக்கும் போது மட்டும் நான் உன்னை அணைத்து ஆறுதல் சொல்லி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொல்வேன். ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லுவ. இப்ப ஆறுதல் சொல்ல நான் இருக்க மாட்டேன் என்பது கஷ்டமாக தான் இருக்கிறது.

என்னோட உலகம் நீ மட்டும் தான். உன்ன நல்லா படிக்க வச்சு, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்துட்டேன். 


ஆனா நான் நரகத்தில் தான் வாழ்ந்தேன் விக்ரம். உன் அம்மா இல்லாத இரவுகளை என்னால கடக்கவே முடியல. நான் அழுதா நீ உடைஞ்சு போய்டுவ. அதுக்காக நீ தூங்குன  அப்புறம் சத்தம் வராமல் வாயை பொத்திகிட்டு அழுகிற வாழ்க்கை ரொம்ப கொடுமைடா.  ஒரு ஆம்பள அழக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அவனும் மனுஷன் தானே. வலிக்கும்ல. 

எனக்கு தனிமை தேவைப்பட்டுச்சு. அதனாலதான் உன்னை சென்னைக்கு அனுப்பி வெச்சேன். நீ அடிக்கடி கேட்பயே, "ஏன்பா இன்னமும் அம்மாவோட புடவை எல்லாம் வீட்ல வச்சு இருக்கீங்க. தூக்கி போட்டுடலாம்லனு". எப்பவும் நான் உன் அம்மாவோட சேலையை கட்டிப்பிடிச்சிட்டு போத்திகிட்டு தான் தூங்குவேன். அதுல அப்படி ஒரு ஆறுதல் கிடைக்கும். அவ என் கூடவே இருக்க மாதிரி இருக்கும்.

அதனாலதான் நீ மருமகளுக்கு அவ சேலை எடுத்து தரும்போது சண்டை போட்டேன். அவ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தான் அவகிட்ட உண்மையை சொல்லிட்டேன். உனக்கு தெரிய கூடாதுன்னு சொல்லி இருந்தேன்.


அது உனக்கு சொன்னா புரியாது. அத புரிஞ்சுக்க கூடிய வயசும் அனுபவமும் உனக்கு வரல. இந்த வீட்லதான் நானும் அவளும் வாழ்ந்தோம். இந்த செவரு கூட நான் பேசுவேன். அந்த மரத்தோட நான் பேசுவேன். இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும். அவ கூட வாழ்ந்துட்டே இருக்குற மாதிரி தோணும். 

ஆனா பகல்ல இருக்கிற அந்த காதல் அந்த சுகம் நைட் இருக்காது. அப்ப வலி மட்டும் தான் இருக்கும். கண்ணீர் இத்தனை வருஷம் ஆகியும் குறையல. எனக்கு சாகலாம்னு தோணும்போதெல்லாம் நீ என்ன பண்ணுவ அப்படிங்கிற பயம் மட்டும் தான் இருந்துச்சு.

ஆனா இப்ப நான் சந்தோஷமா சாகப் போறேன். உன்ன நீ தனியா பாத்துக்குற அளவுக்கு வந்துட்ட. அப்பா இல்லாமல் பிரச்சனைகளை தனியா முயற்சி பண்ணி முடிக்கணும்னு முடிவுக்கு வந்துட்ட. இனி அப்பா உனக்கு பாசத்துக்கு தவிர வேற எதுவும் தேவைப்பட மாட்டேன். அந்த தைரியம் தான் என்ன தற்கொலை பண்ணிக்க சொல்லுச்சு. 

அப்பா மேல கோவப்படாதே. இது பல வருச ஏக்கம். அதுவும் இல்லாம அப்பாவுக்கு வயசு ஆகுது இல்ல. பேரனை நல்லா பாத்துக்க.


எப்பவும் பொண்டாட்டி கூட சண்டை போடாத. போட்டாலும் சமாதானமாக உனக்கு அப்பா பலமுறை வழி சொல்லி இருக்கேன். அது எப்பவும் பிடிச்சுக்க. 

அப்பாவுக்காக ஒரே ஒரு விசயம் பண்ணுடா. அப்பாவை இந்த தோட்டத்துல புதைச்சுடு. அப்போ அம்மாவோட சேலையும் சேர்த்து புதைச்சிடுங்க. மக்கி போக போற இந்த உடம்போட கொஞ்ச நாள் அது கூட வாழ்ந்துட்டு போகட்டும். 


அப்பா எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன். ஐ லவ் யூ இப்படிக்கு உன் அப்பா" என்று சக்திவேல் வாசித்து முடித்தவுடன் வேகமாக உள்ளே சென்று அவரை அணைத்துக் கொண்டு "அப்பா..." என்று கதறி அழுதான்.


"என்ன மன்னிச்சிடுங்கப்பா. நீங்க அம்மா மேல வச்சிருக்கிற காதல தெரிஞ்சுக்காம போயிட்டேன்பா... ஆனா என்ன இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே. எனக்கு கெட்ட பேரு வந்துர கூடாதுன்னு இப்படி லெட்டர் எழுதுன உங்கள புரிஞ்சுக்காம போயிட்டேன் பா..." அடுத்த ஒரு மணி நேரம் அவன் அழுகை சத்தம் தவிர வேறு எதுவும் எதுவும் அங்கு கேட்கவில்லை. 


சக்திவேல் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். 
சில நிமிடங்களில் செல்வகுமார் உடலை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் ஆசைப்படி அனைத்தும் நிறைவேறியது. 
உறவினர்களும் சுற்றத்தார்களும் செல்வகுமாரின் இருப்பின் ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர் விக்ரமின் யாரும் குறை சொல்லவில்லை. அதைத்தான் அவரும் எதிர்பார்த்தார். பதினாறாம் நாள் காரியத்திற்கு அவரின் புகைப்படம் ஒன்றை பிரேம் போடச் சொல்லி கொடுத்தான் விக்ரம். 


அதை பிரேம் போட்டுக் கொண்டு வந்த பின்னர் பார்த்த விக்ரமின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது. 

காரணம் புரியாமல் சத்யா அதை கையில் வாங்கி பார்க்க, "ஐ லவ் யூ வும் அன்பு முத்தங்களும்" என்று எழுதி இருந்தது. 


அந்த வார்த்தை அவன் வாழ்வோடு இணைந்து விட்டது. 

              - சேதுபதி விசுவநாதன் 


(உங்கள் பின்னூட்டங்களை yaazhistories@gmail.com என்பதிலும் 

ஒருபக்க கதை
இன்பத்துப்பால்

குனிந்த தலை நிமிராமல் தான் எழுதிக்கொண்டிருந்தான் வள்ளுவன், ஏடுகளில் கூரான எழுத்தாணி உரசும் சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தன.

அறத்துப்பால், பொருட்பால் இரண்டும் சேர்த்து 1080 குறள்கள் எழுதி விட்டான், இத்துடன் 'திருக்குறள்'நிறைவு பெற்றதாக கூறி எழுத்தாணியிலிருந்து பிடி தளர்ந்தது வள்ளுவனிடம்...

அப்போதுதான் ஏறிட்டு பார்க்கிறான் தன் மனைவி வாசுகியை..
அங்கே அவள்....

கூர் மழுங்கிய எழுத்தாணி கொண்டு தன் கண்களில் மை தீட்டி கொண்டிருக்கிறாள்,
அப்போது வள்ளுவன் அவளை பார்க்க, மை தீட்டிய கண்களுடன் வாசுகியும் வள்ளுவனை பார்க்க..

அப்போதுதான் 'இன்பத்துப்பால்'பிறக்கிறது, அதன் பின்னர் 250 குறள்கள் எழுதி 1330 குறள்களாக நிறைவு பெற்றது..

இன்பத்துப்பாலில் முதல் குறளே இதுதான்...

"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து"

விளக்கம் : இவள் பார்க்க நான் பார்க்க இவள் மை தீட்டிய கண்களின் எதிர் பார்வை சேனை போல் தாக்குகிறது./Ram(ஒரு கற்பனை தான்)

ஒருபக்க கதை
காமெடி குற்றவாளிகள்-1

'கூவம் ஆற்றில் சாக்கு மூட்டையில் பிணம்'
நாறிகொண்டிருந்தது.. கூவ ஆற்று நாற்றத்தையும் மீறி வந்தது...

போலீஸ்க்கு தகவல் பறக்க, போலீஸ் கூவத்தில் குதித்தது இல்லை களத்தில் குதித்தது,
போலீஸ் மூக்கை பொத்திக்கொண்டு மூட்டையை புரட்டி போட... அவ்வளவுதான் சோளிமுடிந்தது, அந்த சாக்கு மூட்டையில் பச்சை நிற மசியில்..'இசக்கி முத்து, தந்தை பெயர் நடேசன்.. பிறகு வீட்டு முகவரி..
பிறகு என்ன போலீஸ் வேர்க்கடலையை வாங்கி கொறித்து கொண்டே ஜீப்பில் ஏறி பக்கத்தில் உள்ள தண்டையார்பேட்டை சென்று..
வீட்டில் டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த இசக்கிமுத்து வை அள்ளி கொண்டு சென்றார்கள்..
அவனும் அவன் கூட்டாளிகளும் கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்..

அவனை ஜெயிலில் தள்ளும் போது போலீஸ் ஒருவர் சொன்னது..'நீ ரொம்ப நல்லவன் டா! எங்களுக்கு எந்த சிரமும் வைக்காமல் அட்ரஸ் சோடு போட்ட பாரு அதை நினைத்து ரொம்ப பெருமை படுகிறேன் 'என்று பாராட்டியுள்ளார்

வாழ்வியல்
எங்க ஊரு, எங்க சாமி! நீ உள்ள வராதே! 

 

வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இருக்க, அதன் கீழே, திறந்த வெளியில் அமைந்திருந்த கருப்பண்ணச்சாமி கோவில். ஆளுயரத்தில் படு கம்பீரமாக, முறுக்கு மீசைக்காரனாக, கோனைக் கொண்டையிட்டு, வலது கையில் வீச்சரிவாலும், இடது கையில் கதாயுதம் தாங்கி, தன் பரிவார தெய்வங்களோடு, அந்த பசும் பூமியில் தன் விழியோட்டி, அனைத்துக்கும் காவலனாய் நின்றார், மூன்று மாதங்களுக்கு முன் குடமுழுக்கு கண்ட மாவடி முத்துக்கருப்பணசாமி.  

ஏகாந்தமாய் மருதமரத்தடி நிழலில், அவன் வீற்றிருக்க,  மரங்கள் இரண்டும்,  இலைகளாலும், பூ, கனிகளாலும் அர்ச்சித்து, அவ்விடத்தையே நிறைத்திருந்தன. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த, கோவில் வளாகத்தை, கோவிலின் பூசாரியும், சாமியாடியுமான முத்துசாமியின் பேத்தி, முத்து பேச்சி, கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள். 

வயல் நடுவிலிருக்கும் கோவிலுக்கு, உள்ளூர்காரர்களே, "துடியான தெய்வம்." எனப் பயபக்தியோடு  கூட்டமாகத் தான் வந்து செல்வார்கள். பிறந்தது முதல், தாத்தா, அம்மாச்சியோடு வளர்ந்த முத்துப் பேச்சிக்கு, ஊருக்குள் இருக்கும் அவர்கள் வீடு போல், கருப்பன் கோவிலும் ஒரு வீடு தான் தாத்தா, முத்துச்சாமி போல், கருப்பண்ணச்சாமியும் அவளுக்குப் பூட்டன் முறை. அப்படிப் பாவித்துத் தான், அந்தத் தெய்வங்களிடம், உரிமை பாரட்டுவாள். 

"கூறு கெட்ட மனுசன், தலைபிரட்டு புடிச்சு அலையுது. யாருகிட்ட, என்ன பேசுறோமுன்னு, மட்டு மருவாதை இருக்கா. நாலு எழுத்து படிச்சு, கூட்டத்தில பேசிட்டா பெரிய ஆளாக்கும். இவுகளுக்குச் சப்போர்ட்டு பண்றதுக்கும், கை தட்டி துண்டு போர்த்தறதுக்கும் நாலு அல்லக்கை வேற. ஐயா, கருப்பா நீ தான் அவுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும்." என வேலையைப் பார்த்துக் கொண்டே, தன் புலம்பலையே வேண்டுதலாக்கி கருப்பனிடம் முறையிட்டாள் முத்துப்பேச்சி. 

ஆனால் கருப்பண்ணசாமி அவள் வேண்டுதல் கேட்டும்  ஆனந்தமாகவே, அவளது தாத்தா முத்துசாமியைப் போல் சிரித்துக் கொண்டிருக்க, “யார், ஏசினாலும், பேசினாலும் நீயும், உன்னை சாமியாடுற  என் தாத்தாவும், ஒரே மாதிரி சிரிச்சுக்கிட்டு அப்படியே நில்லுங்க.” என்றாள். கருப்பன், தன்னோடு சேர்த்து அவர் பக்தனுக்கும் பேத்தியிடம், பேச்சு வாங்கிக் கொடுத்தார்.

“ஏண்டி நீ மட்டும், கருப்பனை வையலாமாக்கும்.” எனச் சாப்பாடு கூடையோடு வந்த, அவளது அம்மாச்சி பவளாயி கேட்க,

“நான் பேசுறதும்,அவுக பேசறதும் ஒண்ணா. அந்தாளு புத்தியில்லாத பேசுது, நான் அதுக்குப் புத்தியைக் கொடுக்கச் சொல்லி  கருப்பனை வேண்டுறேன்.” என அவள் வார்த்தையாட, “ஏசினாலும், பேசினாலும் அப்படியே நிக்கிறாகன்னு, யாரைச் சொன்ன!” எனக் கிழவி கிடுக்கி பிடி போட,

“அது இவரையும், இவரைத் தாங்கி ஆடுற உன் புருஷனையும் தான். பூசை வச்சு, மணி அடிச்சுக் கூப்பிடையில் மட்டும், ஆக்ரோஷமா இறங்குறது. மத்த நேரம், ஒண்ணும் நடக்காத மாதிரி தான நிக்கிறாரு. ஒருக்கா, இவர் சுய ரூபத்தைக் காட்டினா, பேசறவனுங்க நாக்கு மேலன்னத்தில ஓட்டிக்காது, அப்புறம் எப்படிச் சாமி, இருக்கு இல்லைனு பேசுவாங்க.” என அவள் விடாமல் யாரையோ வறுத்தெடுத்துக்க, பொங்கல் வைக்கும் கட்டாந் தரையில் சாப்பாட்டை இறக்கி வைத்து விட்டு, பேத்தியைப் பார்த்த பவளாயி,

“இப்ப யாருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி வேண்டிக்கிட்டு இருக்கவ!” என்றார். 

“எல்லாம் நீ வளர்த்து விட்ட, கோயில் காளை ஒன்னு, யாருக்கும் அடங்காமத் திரியுதே, உன் கொழுந்தன் மகன், அதுக்குத்தான்.“ என அவள் நொடிக்க,

“உனக்குப் பரிசம் போட்ட, என் மவன் ராசப்பாவ சொல்றீயாக்கும், அவனைத்தான், ஜில்லாவுலையே, பெரிய அறிவாளி, புரட்சி புயல்னு, கருப்புச் சட்டை, சிவப்புச் சட்டையெல்லாம் புகழுது, நீ என்னண்டா, அவனுக்கே புத்தி கொடுக்கச் சொல்லி வேண்டுறவ. ஒரு வேளை , நீ வேண்டிக்கிறதால தான், அவனுக்கு அம்புட்டு அறிவோ என்னமோ?“ எனப் பவளாயி நக்கலாகச் சிரித்தார்.

அவரை முறைத்து விட்டு , “நம்ம சாமி, அவருக்கு அறிவை கொடுத்திருந்தா, அதைத் தூக்கி ஆடுற, என் தாத்தனையே, எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்குமா. அகராதி திண்ட, அந்த மனுஷனைப் பத்தி, இனிமே நாம பேச வேண்டாம் அம்மாச்சி, இத்தோட, அவுக சம்பந்தப் பட்ட விஷயத்தை எல்லாம் முடிச்சுக்குவோம், அவுக சங்காதமே வேண்டாம்.“ என அவள் வேலையைத் தொடர்ந்தாள்.

“அதென்னடி, அப்படிச் சொல்லிபுட்ட, ஊரோட வந்து உனக்குப் பரிசம் போட்டுப் போயிருக்கான், ஐப்பசி பொறக்கவும் கல்யாணம் கட்ட போறவனோட, சங்காதம் வச்சுக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தமுன்னேன்.”

“அந்த நினைப்பு இருந்தா, சாமியாடியான என் தாத்தாகிட்டையே, ஊருக்கு நடுவுல வச்சு, சாமியுமில்லை, பூதமும்மில்லைனு தர்க்கம் பண்ணியிருக்குமா, அவுக சம்மதம் நமக்கு ஒத்து வராது.” என அவள் பேச்சை வெட்ட,

“அவன் நல்லவன், உன்னை வச்சு நல்லா பொழைப்பான்னு, உன் தாத்தனே, இந்தக் கருப்பன் கிட்ட உத்தரவு வாங்கிப் பேசி முடிச்சாரு, எனக்குத் தெரியாதுத்தா, நீயாச்சு உன் தாத்தாவாச்சு, இந்தக் கருப்பனாச்சு, நீங்களே பேசி முடிவுக்கு வாங்க.” எனப் பவளாயி கணவன் வரும் வழியைப் பார்த்தார்.

வயல் வேலையை முடித்து, முத்து சாமி பம்ப்செட்டில் கைகால்களைக் கழுவி கொண்டு, “கருப்பா, எல்லாரையும் நல்லா வை.“ என வேண்டியபடி, சன்னதியில் விழுந்து, விபூதியைப் பட்டையாய் அடித்துக் கொண்டு மனைவியும், பேத்தியும் இருக்குமிடம் வந்தமர்ந்தார்.

கோவிலைச் சுற்றியுள்ள வயல்கள், முத்துசாமியின் பொறுப்பு, அதில் இரண்டு ஏக்கர் இவர் பங்கு எனில் மீதமுள்ள, பத்து ஏக்கர் பங்காளிகளுடையது, மற்றவர்களுக்கு விளைச்சலில் பங்கு கொடுத்து விட்டு, பாட்டாளிகளுக்குக் கூலி கொடுத்து, கருப்பனுக்குப் போக, மீதியில் இவர் குடும்பம் வயிற்றை நிறைத்துக் கொள்ளும்.

“என்னா விஷயம், அம்மாச்சியும் பேத்தியும் கருப்பனையும், பேச்சிலே இழுத்து பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்க?” என முத்துசாமி கேள்வி எழுப்ப, ஒரு தூக்கு போணியை அவர் புறம் நகர்த்திய, பவளாயி, பேத்தி நறுக்கி வைத்திருந்த வாழை இலையில் வெஞ்சனத்தை வைத்து நீட்டி விட்டு, பேத்தியின் அங்கலாய்ப்பையும் சொன்னார்.

 

அதைக் கேட்டு ஹாஹாவெனச் சிரித்தவர், “ஏத்தா சின்னப் பயலுக, அறியாமைல பேசுறதுக்கெல்லாம், மனுஷ கழுதையாட்டம், கருப்பனும், அருவாளை தூக்கணும்னா எப்படி? நிண்டு நம்மையே ஆள்றது தான் சாமி. அதது, அவரவர் பக்குவதில தான் உணர முடியும்.” என்றவர், “கோபமில்லாத, கருப்பன் படியளந்ததைச் சாப்பிடு, வயித்தோட மனசும் குளிர்ந்து போகும்.” எனத் தேற்றியவருக்குப் பேத்தியின் கோபத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றாமை புரியாமல் இல்லை.

 

முத்துச்சாமிக்கு, விவசாயம் முதல், நாட்டு நடப்பு வரை அத்தனையும் அத்துப்படி. ஊருக்கே யோசனை சொல்லும் சிறந்த மனிதன். அவர் ஒரு வாக்குச் சொன்னால், அது கருப்பன் வாக்கு என்றே, ஊர் மக்கள் சிரம் தாழ்ந்து கேட்பார்கள். அவர் தெய்வ சன்னிதியில் சந்ததம் வந்து, கருப்பனைத் தாங்கி ஆடும் போது, ஊர் சனமே அவர் காலில் விழுந்து திருநீறு வாங்கும். அந்த நேரம், வழங்கப்படும் திருநீற்றை, கருப்பனே வந்து தருவதாகவும், வருடம் ஒரு முறை அவன் ஆசி பெற்றாலும் போதும், எந்த நோய் நொடியும், தீவினைகளும் தங்களை அண்டாது என்பது கிராம மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

 

தெய்வ நம்பிக்கை மிகுந்த அவரது குடும்பத்தில் தான், நாத்திகம் பேசும் மூன்றாம் பங்காளியின் வாரிசு ராசப்பாவும் இருந்தான். பெரியப்பாவோடு, மற்ற விசயங்களில் ஒத்துப் போகும் ராசப்பா, இந்த விசயத்தில் மட்டும் தர்க்கம் செய்து எதிர்த்துத் தான் நிற்பான். ஆனால் தன்னைப் போலவே, உடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து, அம்மாவையும் பேணும் அவன் குணத்திலும், அவன் உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, பேத்தியை அவனுக்குக் கட்டித் தர சம்மததித்திருந்தார் முத்துச்சாமி. 

 

ஊரின் நடுவிலிருக்கும் டிக்கடையில் தான், காரசாரமான எல்லா விவாதங்களும் ஓடும். மூன்று நாட்களுக்கு முன், "ராசப்பா, பௌர்ணமி பூசை வருது. கோவில்ல இரண்டு நாளைக்கு, குழாயைக் கட்டி விடு. ஊர் பூரா கருப்பன் பாட்டு கேக்கட்டும்." என அவர், முன்பணத்தை  நீட்ட, அதை வாங்க மறுத்தவன்,

"கருப்பனுக்கு, கருப்பனுக்குனு, உழைச்ச காசை எல்லாம் அங்கயே கொண்டு போய்க் கொட்டுங்க. விளைச்சலையும் பங்காளிகளுக்குப் பங்கு வச்சிடுறீங்க. எவன்கிட்டையும் கோயில் வரி வாங்கிறதும் கிடையாது, கருப்பன் உங்களைக் காப்பாத்துறானா, இல்லை நீங்க கருப்பனை காப்பாத்துறீங்களான்னு தெரியலை." என பேச்சை ஆரம்பிக்க, 

"எல்லாருக்கும் படியளக்கிறதே, அவன் தான். அவனுக்கு நாம படியளக்க முடியுமா. இதையெல்லாம் புரிஞ்சுகிற பக்குவம் உனக்குக் கிடையாது. விடுய்யா!"  என்றார் பெரியவர். 

"புரிஞ்சுக்கிற மாதிரி, எடுத்துச் சொல்லுங்க. நீங்களும் உங்க வயசுக்கு, எழுபது வருசமா, உங்க சாமிக்குச் சேவகம் பண்றீங்க. கஷ்டத்தைத் தவிர அந்தச் சாமி என்ன கொடுத்துச்சு? கைகாலை முடக்கி போட்ட ஒரு மகனை கொடுத்துச்சு, காலம் பூரா, உங்க மகன் சின்ன கருப்பனை தூக்கி சுமந்திங்க, அவனும் அல்ப ஆய்ஸ்ல போயிட்டான். சரி ராக்கம்மா அக்களாவது நல்லா வாழ்ந்துச்சா, முதல்பிரசவத்துலையே அதுவும் போய் சேர்த்துடுச்சு, வயசான காலத்துல பேத்தியை காவல் காத்துகிட்டு திரியிறீங்க." என அவர், வாழ்வை வரிசையாய் பட்டியலிட்டு, சாமியே இல்லை என விதண்டாவாதம் பேசினான். 

“ராசப்பா, எல்லாமே நம்ம பார்க்கிற பார்வையில தான் இருக்கு, என் மகன் ஊனமா தான் பொறந்தான், நான் இல்லைங்கல, ஆனால் அவனை சுமக்க உடம்புலையும், மனசுலையும்  வலுவ கொடுத்தது என் கருப்பன் தான். அவன் என் வினைப்பயனை முடிக்க, எனக்கு வரமா வந்தவன். மகளும் அதே தான். ஆனால் போக கூடாத வயசில போனாலும், எங்க பிடிமானத்துக்கு பேத்தியை கொடுத்துட்டு போயிருக்கா, அவளை கட்டிக்க நல்ல மனசுக்காரன் நீ வந்துட்ட, நீ என்னை தூக்கி போடாதையா போயிடுவ?” என அதே விஷயத்தை தன் பார்வையில் சொன்னார். 

ஆனால், அதை அப்படியே ஒத்துக் கொண்டால், அவனெப்படி புரட்சியாளன், ஊர், நாட்டு நடப்பை இழுத்துப் பேசி, கடவுள் மறுப்பை அவன் ஆணித்தனமாக எடுத்து வைக்க, முத்துச்சாமி அமைதியானார். ஆனால் அவர் சார்பாகக் கிராம மக்கள், தங்கள் அறிவுக்கு எட்டிய தூரம், கடவுளைத் தாங்கிப் பேசினர். ராசப்பா பக்கமும், இளவட்டங்கள் பேசினர்.

இந்த விசயம், ஊருக்குள், சாமியாடியை, அவர் தம்பி மகன் எதிர்த்திட்டான் என அவரவர் புனைவு, பிறசேர்க்கை எல்லாம் சேர்த்துச் சொல்ல, விசயம் ஊருக்குள் பரவி முத்துபேச்சி காதுக்கும் சென்றது. 

ராசப்பா, நல்ல உழைப்பாளி. கொட்டகை, பாத்திரங்கள் முதல், விசேசங்களுக்குத் தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்திருக்கிறான், நல்ல வருமானம். முத்துச்சாமியை காட்டிலும், அதிகம் அடிபட்டதாலும், சுயமரியாதை கூட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங்க் என மைக் செட் அமைக்கும் வேலைக்கு போனவன், அவர்கள் பேச்சைச் செவி மடுத்து, இரண்டுக்கும் பொதுவாக, தனக்கென ஓர் கொள்கையை உருவாக்கிக் கொண்டான்.

போன மாதம் தான் முத்து பேச்சிக்குப் பரிசம் போட்டுச் சென்றான். அது முதல், அங்கங்கே அவளைப் பார்க்கும் நேரமெல்லாம், ஜாடையாய் பேசி, தன் பிரியத்தை அவன் உணர்த்த, அவளுக்குள்ளும் பூ மலர்ந்தது. ஆனால் இயல்பாகவே அவன் பேச்சில் வரும், இறை மறுப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் தன் தாத்தாவிடம் தர்க்கம் செய்ததில் ஏகத்துக்கும் கடுப்பு.

நாளை பௌர்ணமி பூஜை, எல்லாருக்கும் வழி காட்டும் இந்தத் தெய்வம், தனக்கும் நல்ல வழியைக் காட்டட்டும் என மனதில் மருகி நிற்க,

"ஆத்தா பேச்சியம்மா, ராசப்பா, ஆளுங்க, குழா கட்ட வருவானுங்க. இந்தத் தரம் கொஞ்சம், உச்சக்க ஏத்திக் கட்டச் சொல்லு. நாளைக்குப் பூசைக்கு அன்னதானம் யாரோ கொடுக்குறோமுன்னு சொன்னாகளாம், யார் என்னனு ப்ரசிடெண்டை விசாரிச்சிட்டு வந்துடுறேன்.” என அவர் கிளம்ப,

"அந்தாள விட்டா, உங்களுக்கு வேற மைக் செட்டே கிடைக்கலையாக்கும்." என நொடித்த பேத்தியைப் பார்த்து, ஓர் சிரிப்பை மட்டும் உதிர்த்துச் சென்றார்.

பௌர்ணமி அன்று, காலையிலிருந்தே ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு, சாமியை வணங்கிச் சென்றனர். இன்று கோவிலில், முத்துசாமி குடும்பம் மட்டுமின்றி, மற்ற பூசாரி, பங்காளி குடும்பங்களும், கருப்பனுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருந்தனர்.

உச்சி காலப் பூஜையில், ஆலய மணி முழங்க, தூப தீபம், பூக்களின் நறுமணம் அவ்விடத்தை நிறைக்க, எழில் கொஞ்சும் பசுமையோடு பூலோக கைலாயம் போல் கோவிலே தெய்வ கடாட்சம் நிறைந்து இருந்தது. ஆனந்தரூபனாய், அருள் பாலிக்கும் கருப்பன், கோவில் மணியடித்து, பக்தர்கள் சரணங்களை முழங்க  ஆக்ரோஷமாய் முத்துசாமி மேல் இறங்கினான். நாக்கை துருத்தி, கண்ணை மலர்த்தி, செவ்வெறி ஓடிய சிலிர்ப்புடன், அருவாளை ஏந்தி சன்னதி முன் ஆட்டம் ஆடியவன், தன் முன் மண்டியிட்டு விழும் பக்தருக்கெல்லாம், அருளாசி வழங்கினான். கண்ணீர் மல்க கதறியவர்களுக்கு, நல்வாக்குத் தந்தான்.

முத்துப்பேச்சி, கருப்பனாகிய தாத்தன் முன் மனக்குறையோடு மண்டியிட, பவளாயி, “அவள் மனச் சஞ்சலத்தைத் தீர்த்து வைங்க.” எனவும், ஓர் அட்டகாசமான சிரிப்போடு, “உன் மனசு குளிர,மனை அமையும்.” என ஆசிர்வதித்தார். 

ஊர் ப்ரசிடெண்ட்டிலிருந்து, காவிசட்டையிலிருந்த வெளியூர்காரர்கள் வரை பயபக்தியோடு வணங்கி நின்றனர். கருப்பன், அனைவருக்கும் அருளாசி வழங்கி மலை ஏறினார். சூட தீபாராதனை காட்டப்பட்டது.

அன்று முழுவதும், ஊர் மக்கள் அங்குத் தான் குடியிருந்தனர், பெரும் புள்ளி ஒருவர், அன்னதானம் வழங்கினார், மற்றொருவர் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்தார். சிலர் புதிதாகக் கோரிக்கை வைக்க வர, சிலர் நிறைவேறிய கோரிக்கைக்காகக் காணிக்கை செலுத்த வந்தனர். 

மதியத்துக்கு மேல் கூட்டம் குறையவும், பிரசிடெண்ட் அழைத்து வந்த காவி சட்டை, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ,தான் இருக்கும் அமைப்பைப் பற்றியும், இந்தக் கோவிகளைப் பாதுகாத்து, கருப்பனின்  அருளை வெளியுலகுக்கு பிரபலப்படுத்தும்  யோசனையும்  சொன்னார். அதன் மூலம் பக்தியையும், மதத்தையும் வளர்க்கலாம் என்றார். தங்கள் அமைப்பை, கட்சியின் செல்வாக்கைப் பற்றி அடுக்கியவர் கடைசியில் முத்துசாமியை தங்கள் அரசியல் கட்சியில் சேரச்சொல்லி வலியுறுத்தினார்.

“நம்ம கட்சியில் சேர்ந்துட்டீங்கன்னா, மத்த மதத்துக்காரங்க உங்களை எதிர்க்கத் துணிய மாட்டாங்க. நம்ம மதத்திலிருந்து, மதம் மாறுவதைத் தடுக்கலாம். நாத்திக கூட்டம், உங்களை ஒரு வார்த்தை பேசும் முன்ன யோசிப்பாக. நீங்க தனி ஆளா இருக்கப் போய்த் தானே, உங்க சொந்தக்காரன், ஊர் மத்தியில் உங்களை அசிங்க படுத்தியிருக்கான். இனிமே அதெல்லாம் நடக்காது, நாங்க உங்களுக்குத் துணையா இருப்போம், பேசுறவனுக்கு, நம்ம சாமி, அங்கேயே தண்டனை தருவார், அவன் பல் உடையும்.” என முத்துசாமியை மூளைச் சலவை செய்து கொண்டிருக்க, அம்மாச்சியும், பேத்தியும் தூரத்திலிருந்த பார்த்துக் கொண்டே இருந்தனர்.

 மைக் செட்டை அவிழ்க்க, ராசப்பவே வந்தான், நேற்றே அவன் எடுபிடி  சீனி, குழாய் கட்ட வந்தவன் முத்து பேச்சியின் வாயை பிடுங்கி , அவளது மனத்தாங்கலை, கேட்டு அறிந்து, “நயன்டிஸ் கிட்ஸ்சுக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது அண்ணன், உனக்கு மேடையில் பேசுற அளவுக்கு, வீடு விவகாரத்தில் விவரம் பாத்ததுன்னேன், மதனிகிட்ட அடங்கிப் போ, அப்பத்தான், அது உன்னைக் கட்டும். அதை விட்டு, அவுக தாத்தா, சாமியாடிகிட்டையே போய் ஒரண்டை இழுத்துகிட்டு இருக்க!” என அறிவுரை வழங்க, 

“பொடிப்பய, நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துட்ட!” என  முறைத்தவன், 'காவி கூட்டமெல்லாம், உள்ள வர்றது இந்த ஊருக்கு நல்லதில்லை, அதுக்காகவாவது, நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்.' என வந்து சேர்ந்தான்.

பவளாயி, அவனை வரவேற்றுச் சாப்பிடச் சொல்ல, முத்துப் பேச்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு அம்மன் பீடத்துக்கு அருகில் சென்று நின்று கொண்டாள், அவன் தான் அங்கு வரமாட்டானே!

ராசப்பாவை பார்க்கவும், காவி சட்டை கொஞ்சம் ஸ்ருதியைக் குறைத்து, “சரிங்க ஐயா, நாளைக்குப் பார்ப்போம், இப்ப நீங்களும், கருப்பனும் எனக்கு உத்தரவு கொடுங்க.” எனக் கையைக் கூப்ப.

“இருங்க தம்பி, கருப்பனை கும்பிட வந்துட்டு, சும்மா போகலாமா.” என்றவர், ராசப்பாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, கருப்பன் சன்னதிக்குச் சென்று, நறநறவென இருந்த சாம்பல் விபூதியை, தன் நெற்றியிலும், உடலிலும் பட்டையாக அடித்துக் கொண்டு வந்து தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றார்.

“இது, எங்க ஊரு, எங்க சாமி. நாங்க பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து, இந்த வயல் வெளியில் வச்சு, அவனைக் கும்பிட்டு வரோம். காவி சட்டைக்காரன் சொல்லித் தான், நாங்க எங்க சாமியை கும்புடணுங்கிறதும் இல்லை, கருப்பு சட்டைக்காரன் சொல்லி, அவனை மறுக்கணும்கிறதும் இல்லை. எவன் வந்தாலும், போனாலும், சொன்னாலும் சொல்லைனாலும், எங்க அப்பனை ஆத்தாளை, நாங்க கும்பிடத் தான் செய்வோம்.

நாட்டில் நடுக்கிற அக்கிரமத்தையெல்லாம் பட்டியல் போட்டு, உங்க சாமி இருக்கா, இருந்தா இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு கருப்பு சட்டைகாரன் கேட்கிறான். அவனுங்களுக்குப் பதில் சொல்ல, காவி சட்டைக்காரன் கச்சை கட்டிட்டு இறங்குறீங்க.

'தீதும், நன்றும் பிறர் தர வாரா' நம்ம செஞ்ச தப்பு தான், நமக்குத் தண்டனையா வரும், அந்தத் தப்பு எப்போ செஞ்சேன்னு கேட்காத, அப்பாவியா இருக்கச் சின்னப் பிள்ளைகளைக் கூடச் சீரழியுதுங்களேன்னு கேட்டுத் தர்க்கம் பண்ணாதே. எந்தச் ஜென்மத்துல, எந்த உசிரு என்ன பாவம் செஞ்சது, இப்ப பாவம் செய்யிறவன் என்ன கதி ஆவான், என்ன கணக்குன்னு நமக்குத் தெரியாது, ஆனால் அவனுக்குத் தெரியும். அவன் கணக்கு தப்பவும் தப்பாது. 

ஒருத்தன் சீரழிச்ச புள்ளைக்கு, அது சீரழிவு இல்லைனு புரிய வை. மனசு சுத்தம் தான் கடவுள். நல்லதோ கெட்டதோ சமநிலையில் பார்க்கிற பக்குவம் தான் அவன் அருள் கொடை. உன் பக்குவத்துக்கு ஏத்த மாதிரி அவன் காட்சி கொடுப்பான். இது அவனவனா உணர்ந்து தெளிய வேண்டிய விஷயம்.

இது சரி, இது தப்பு, நீ கும்பிடு, கும்புடாதேன்னு அடுத்தவனுக்குச் சொல்லித் தராதே. எங்க பிள்ளைகளுக்கு நாங்க சொல்லி கொடுத்துவுக்கோம்.” என முத்து சாமி, ஆக்ரோசம், ஆவேசமின்றி அமர்த்தலாகச் சொன்னார்.

“அப்ப மதம் மாறி போறவங்களுக்கு என்ன சொல்றிங்க?“ எனக் காவி சட்டைகேட்க. “எல்லாச் சாமியும் ஒன்னு தான், அவனுக்குக் கடவுள் எந்த  விதத்தில் காட்சி கொடுத்தாரோ, அதை  பிடிச்சுக்குறான். ஆனால், நீ இதைச் செய், நான் உன்னைக் கும்புடுறேன்னு போறவன், எந்த மதத்துக்கும், ஏன் அவனுக்கு அவனே உண்மையானவனா இருக்க மாட்டான்.” என்றார்.

“சாமி கும்பிபுடுங்கிற மாதிரி, சாமி இல்லைங்கிறதும் ஒரு கொள்கை தானே, அதைச் சொன்ன எதுக்கு ஒதுக்கி வைக்கிறிங்க?” என் ராசப்பா கேள்வி எழுப்ப, முத்துப்பேச்சி  மறுபடியும் ஆரம்பிக்கிறியா  என முறைத்தாள்.

“உன்னை எப்ப நான் ஒதுக்கி வச்சேன், அப்படி ஒதுக்கி வச்சா என் பேத்தியை உனக்குக் கட்டி கொடுக்கச் சம்மதிச்சு இருப்பேனா. உன்னைக் கேள்வி கேட்க கூடாதுன்னும் சொல்லலை, ஆனால் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனா, பிடிவாதமா கேட்காத, உனக்குள்ள கேள்வியைக் கேளு. 

சங்கடம் வரும் போது, தானே சாமியே இல்லைனு வசனம் பேசுறீங்க, அந்தச் சங்கடம் தான், உன்னை வலுவான மனுசனா மாத்தும், மனுச சித்தம், நாளுக்கு நாள் மாறக் கூடியது. உன் கையும், காலுக்கு ஓயும் போது, உன் மேலையே உனக்கு நம்பிக்கை குறையும். நம்பிக்கை குறைஞ்ச மனுஷன் ரொம்ப ஆபத்தானவன். அவனையும் காத்து, சமுதாயத்தையும் காத்து நிக்கிறது இறை நம்பிக்கை, அங்க துணை நிக்கிறவன் தான் கடவுள்.“ என முத்துசாமி பேச,ராசய்யா சிந்திக்க ஆரம்பித்தான்.

அவன் யோசித்து நிற்கும் நேரமே, 'கருப்பா, இந்த விபூதியை, மாமன் பூசிக்கிச்சுன்னா, நான் அதைக் கட்டிக்குவேன், இல்லையினா உனக்குச் சேவகம் பார்த்துகிட்டு இருந்துக்குறேன், முடிவு உன்னது தான்.‘ என முத்துப்பேச்சி, விபூதியை ராசப்பாவின் நெற்றியில் பூச வர, ஒரு நிமிடம் தயங்கியவன், அவள் முகம் சுருங்கவும், “உன் நம்பிக்கைக்காகப் பூசிக்கிறேன்.” என நெற்றியை நீட்டினான். “கருப்பா, என் மாமனுக்கு நல்ல புத்தியைக் கொடு." என்ற வேண்டுதலோடு பூசி விட, பவளாயி சிரித்தார்.

“அய்யா, கடவுள் இருக்கார்னு ஒத்துக்குறிங்க, நம்ம மதத்து கடவுளைத் தான் கும்புடுறீங்க, நம்ம கட்சியில் சேரலாமே!” எனக் காவி சட்டை கருத்து தெரிவிக்க,

மீண்டும் கலகலவெனச் சிரித்த, முத்துசாமி, “நீங்க, உங்க கட்சியை வளர்க்க மதத்துக்குக் காவலன் வேஷம் கட்டுறீங்க, அவுங்க சாமி எது, பிற்பாடு வந்த சம்பிரதாயம் எதுன்னே தெரியாமல் எதிர்த்து நிக்கிறாங்க. உங்க இரண்டு கட்சியும் ஆரம்பிக்கும் முன்னையும், நாங்க சாமி கும்பிட்டோம், உங்களுக்கு அப்புறமும் நாங்க சாமி கும்பிடுவோம். 

எங்க நம்பிக்களுக்குள்ள, உங்க கட்சியை வளர்க்க பார்க்காதீங்க, அவுங்க அப்படி தான் கத்துவாங்கன்னு, உங்களை கடந்து போயிகிட்டே இருப்போம். நீங்க சட்டையில், அடையாளத்தில் காட்டுறிங்க, நாங்க வேட்டியில் பக்தியை காட்டுறவுங்க. எங்க ஊர், எங்க சாமி, நீங்க உள்ள வராதீங்க!“ என முடித்தார் சாமியாடி முத்துசாமி.

எங்க ஊரு எங்க சாமி! நீ உள்ள வராதே!

 

அனுபவம்
கடந்த கால எச்சங்கள்.

  

நடப்பு 

"தேவி இந்த வருஷம் மே லீவுக்கு ராமசாமி மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோம்.  மாமா ரிடையர் ஆகிட்டா அப்பறம் அங்கே போக முடியாது." 

"சரி போவோம் நானும் வரேன்." .

அந்த நாளும் வந்திடாதோ, என ஏங்கி பல நாட்கள் 'வடிவேல்' பாணியில் 'ப்ளான்'  பண்ணி எங்கள் திட்டத்தை செயல் படுத்தினோம். ஆளுக்கு ஒரு ஊரில் குடியேறி இருந்தவர்கள், காவிரி அகன்று ஓடும் அந்தச் சிராப்பள்ளி நகருக்கு, அக்கா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

பல வருடங்களுக்கு பிறகு, எங்கள் குழந்தை பருவம் கழிந்த, நாங்கள் பிறந்து வளர்ந்த குவாட்டர்ஸ் வீடுகளை காணும் ஆவலில், எனது மகன், மகளை மட்டும் அழைத்துக் கொண்டு நானும் என் தங்கை தேவியும் காட்டூர் பஸ் ஏறினோம். அந்த பேருந்தே ஏதோ ஓர் விட்ட குறை, தொட்ட குறை சொந்தம் போல், எங்களை நலம் விசாரிப்பது போல் தோன்றியது.

இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், எங்கள் பிறந்த இடத்தின் சொர்கத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் முன் அவ்விடத்தின் இனிமை நினைவுகளை அக்காளும், தங்கையுமாய் அசைப் போட்டபடி பயணித்தோம்.

அது ஒரு சர்க்கரை ஆலை, அதனுள் அமைந்த குடியிருப்பு பகுதியில் தான் எங்களின் பாலபருவ சொர்க்கம் இருந்தது. வளரும் போதே பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒரு வேலி உணர வைத்தது, ஆம் குடியிருப்பை, அதிகாரிகள், தொழிலாளர்கள் என்ற பாகுபாடு செய்வித்து இரண்டாக பிரித்திருந்தார்கள். இன்று நினைக்கும் போது ஆபீஸர்களின் குடியிருப்பு ஒற்றை படுக்கையறை, அல்லது இரண்டு படுக்கையறைக் கொண்டாத இருந்திருக்கும் அவ்வளவே. ஆனால் அன்றை தினத்தில் அங்கு வசிக்கும் மக்களை, ஏதோ பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் போல் எண்ண வைத்தது.

      காலணி பகுதியில்  ஒரு பல்பொருள் அங்காடி,  காய்கறிக்கடை, ஒரு கிளினிக் இவை வரிசையாகவும், இதைத் தாண்டிய பெரிய மைதானம், என நான் சிறு பிள்ளையில் நினைத்த ஓர் மைதானம், குடியிருப்பு வீடுகள்,

கிளப், ஒரு ஸ்கூல், பேக்டரி, சர்க்கரை விநாயகர் கோவில் எல்லாம் உள்ள ஒரு சிறிய (சிறு பிள்ளையில்  நான் பெரியதாக  நினைத்த) உலகம்.

  பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் ஒரு பெரிய கேட் இருக்கும், பல்குனி ஆறு என காவியத்தில் வர்ணிக்கப்படும் புண்ணிய நதி, தற்போது அது பங்குனி வாய்க்கால் என்ற பெயரோடு சிறு ஓடையாக இருபது அடி அகலத்தில் அந்த கேட்டுக்கு முன்னே ஓடுகிறது. எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை, அங்கு வரை வந்து பேருந்தில் வழியனுப்பி வைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த நேரம் இந்த வாய்க்காலுக்கு மேலே பாவிய பாலத்தின் தடுப்புச் சுவர் கட்டையில் அமர்ந்து அதன் நீரோட்டத்தை வேடிக்கை பார்ப்பது எங்கள் தனியாத ஆசையில் ஒன்று.

 அந்த பிரசித்தப் பெற்ற வாய்க்காலைத் தாண்டிய கேட்டில் நேபாளி கூர்க்காக்கள் காவல் காக்க அமர்ந்திருப்பார்கள். நல்ல சிவந்த நிறமும் ஈடுதாடான உடல் வாகும், காக்கிச் சட்டையில் போலீஸ்காரர்களுக்கு சவால் விடும் மிடுக்கோடு நின்றிருப்பர். அவர்களைப் பார்க்கும் போதே ஒரு பயம் வரும். புதிதாக வரும் யாரையும், யார் எவர் யார் வீட்டுக்கு என விசாரித்த பின்பே உள்ளே செல்ல  அனுமதி கிடைக்கும். எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் முன் எங்கள் அப்பாவுக்கு போனில் தகவல் சென்று விடும்.

     ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா, சித்தப்பா வரும் போது, வாட்ச்மேன் அவர்களை கேள்வி கேட்காமல் உள்ளே விடுவார், "தெரியும் சார் பாலு சார் அண்ணன்." என சரியாக அடையாளம் கண்டு கேட்காமல் அனுப்புவர், "எப்படி டா அவன் கரரெக்டா  சொல்லிடறான்?"  என ஒவ்வொரு முறையும் என் பெரியப்பா  ஆச்சரியமாய் கேட்பார். இதில் சிறப்பு என்னவென்றால், ஆறு மாதக் குழந்தை கூட அசப்பில் ஒரே மாதிரி இருக்கும் இவர்களை ஒருவரோ என குழப்பம் கொண்டு ஏமாறும். இவர்கள் உருவப் பொருத்தம் அப்படி. அந்தப் பெருமையைத் தான் பெரியப்பா அப்படி சிலாகித்துக் கொள்வார்.

   அந்த மரபுப்படி, எங்களுக்கே ஓர் அறிமுகம் தேவைப் படுகிறதே என மனது கனத்தாலும், இருபது வருடம் சும்மாவா என மனதை தேற்றிக் கொண்டு, நாங்களும் மாமாவின் பெயர் சொல்லி உள்ளே சென்றோம் .

   குடியிருப்பு  வீடுகளுக்கு செல்லும் வழியின்  இரு புறமும் பண்ணீர், புங்கை  குல்மோஹர் மரங்கள் நிறைந்த நிழல் பாதை. வலது புறம் பாக்டரியின் கழிவு நீர் சுத்திகரித்து செல்லும் நீர் பீச்சிகள் வெதுவெதுப்பான நீரை பீச்சிக்கொண்டு இருக்கும், இடது புறம் வாய்க்காலை ஒட்டிய பகுதி மரங்கள் நிறைந்து இருக்கும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப் பட்டு வாய்காலில் பாயும்.

  அந்தப் பாதையில் சென்றால் நேரே ஒரு பாதையும், வலது புறம் ஓர் பாதை பிரியும். வலது பிரியும் பாதையில் பத்தடி தூரத்தில் ஒரு  மைதானம் வரும் அதன் பிறகு செடிக்கு பாத்திக் கட்டியதுபோல் வரிசைக்கு பத்து என 40 வீடுகளும், பக்கவாட்டில் 2வரிசை 20 வீடுகளும் இருக்கும். இந்த வீடுகள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வரிசை  வீடுகள்.

நினைவுகள் 

    மனம் இருந்தால் குருவிக்கூட்டில் மான்கள் வாழலாம், என்பது போல் இருக்கும் அங்கு எங்கள் வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் 3,4 பிள்ளைகள், ஒரு தாத்தா, பாட்டி என குடும்பங்கள் நிறைந்து வாழ்ந்தன அங்கே. வரிசையாய் உள்ள எல்லா வீடுகளிலும் உள்ளவர் அனைவரும், அத்தை,மாமா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என முறை வைத்தே அழைக்கப்பட்டனர் .

80 களில் வாழ்ந்த அந்த 100 குடும்பங்களை கொண்ட காலணி, குதூகலம் நிறைந்த உயிரோட்டமுள்ள ஒரு கூட்டுமுறை வாழ்வு போல் இருந்தது. அந்த குடியிருப்புகளை தாண்டி ஒரு சிறு பள்ளிக்கூடம், ஒரு க்ளப் இவை உண்டு.

இந்த ஆரம்பப்பள்ளியில்  மாணவர் சேர்க்கைக்கான தகுதி அந்த சிறுவனோ, சிறுமியோ கையை தலையை சுற்றி அடுத்த காதைத் தொட வேண்டும் என்பதே.

சிறுமியாக இருக்கும் போது, என் தாத்தா என்னை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வார். எதிரே வரும் பெரிய டீச்சரிடம், "என் பேத்தியை உங்க பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொள்ளுங்கள்." என்பார், பெரிய டீச்சர் என் கையை தலை சுற்றி காதை தொடச் சொல்வார். கொஞ்சம் எட்டாமல் இருக்கும் என் கை, "கொஞ்சம் நாள் ஆகட்டும் ஐயா!" என பதில் சொல்லி எங்களை கடப்பார்கள். "என்ன ஐயா பேத்தியோடு வாக்கிங்கா?" என எதிர் வருவோர் எல்லாம் தக்கபடி விசாரித்தே நகர்வர்.

வீட்டில் இருக்கும் என் அப்பாயியிடம் பள்ளிக்கு கிளம்பும் முன் தலை வார, எனக்கும் பக்கத்து வீட்டு ராஜி அக்காவுக்கும் எப்போதும் போட்டி நடக்கும், பூனைக்குட்டி போல் குடுமி வைத்துள்ள  உள்ள நான், ஜடையை மடித்துக் கட்டினாலே  இடுப்பு வரை தொங்கும் அந்த அக்காவிடம் போட்டி போடுவேன். காய் நறுக்கிக் கொண்டோ, மோர் கடைந்துக் கொண்டோ உட்கார்ந்திருக்கும் என் அப்பாயியிடம், "அம்மா என்ன செயகிறீர்கள்?" என்கிற விசாரிப்போடு உரையாடல் நடந்து கொண்டிருக்கும். பார்ப்பவர் பாசமாய் விசாரிக்கும் இந்த விசாரிப்புக்குத் தான் இன்றைய பெரியவர்கள் ஏங்குகின்றனர் என்பது இப்போது புரிகிறது.

"ஒரு டம்ளர் சீனி,  வேணி அம்மா கிட்ட வாங்கியது. திருப்பி குடுத்துட்டு வா." என அம்மா ஓசி வாங்கியதை திருப்பித்தரச் சொல்லி அனுப்புவதும், சாப்பிடும் போது வெஞ்ஞனமாக வைத்தக் காய் பிடிக்க வில்லை எனில், குமாரத்தை வீட்டு ஊறுகாய் தேடி ஓடுவதும் எங்கள் வழக்கம். அம்மா பிழிந்து வடகத்தை காக்கா கொத்தாமல் பாதுகாப்பது எங்கள் பொழுதுபோக்கில் சேர்த்தி. காக்கைக்கு பதில் நாங்கள் கொத்துவோம் அது வேற கதை.

    மாலை 5 மணி சங்கு ஊதும் போது சரியாக எங்கிருந்தாலும் எங்கள் அப்பா வரும் நேரம் வீட்டில் ஆஜராகி விடுவோம் நாங்கள். மதியம் சாப்பாடு, அப்பா, தாத்தாவுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தே சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தவுடன் என் அப்பா 20 நிமிட ஓய்வில் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்கள்.  அப்போது அப்பா  கால் மிதித்து விடுவது என்னுடைய தலையாய கடமை.

   மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்பது போல், வெயில் வீணாக போகாமல் காலணி முழுவதும் சுற்றித் தீருவோம். பம்பரம், குண்டு, கிளித்தாண்டு, புளியம் முத்து செதுக்கல், பாண்டி விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், கல் விளையாட்டு, உப்பு, நாடு பிடித்தல், மரம் ஏறுதல், கண்ணாம் மூச்சி என நேரத்திற்கு தகுந்தாற் போல் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடுவோம்.

பள்ளிக்கூடம் ஆண்டு விழா எனில் நடனம், நாடகம் ஏதாவது ஒன்றில் பங்கேற்று கட்டாயம் மேடை ஏறுவோம். விளையாட்டு போட்டியில் பரிசு வருமோ, இல்லையோ ரன்னிங் ரேஸில் கடைசி வந்தாலும், ஸ்கிப்பிங்கில்   முதலில் தடுக்கி விழுந்தாலும், பாட்டிலில் தண்ணீர் நிரப்பு வதில், கையிலேயே தண்ணீர் எல்லாம் வழிந்தோடினாலும், அதைப்பற்றி கவலை இல்லாமல் கலந்து கொள்வோம். அந்த மகிழ்வை இன்று எங்குத் தேடினாலும் கிடைக்காது.

  பள்ளிக்கூடத்தை அடுத்து ஒரு கிளப் இருக்கும், பகல் பொழுதில் ஒன்று, இரண்டாவது பள்ளி  வகுப்புகள் அதில் நடை பெறும். மாலையில் அதே இடம் பொழுது போக்கு இடமாக மாறி விடும். ஒரு வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டி அங்கே இருக்கும், அதில் தான் dd யில், 13 வார நாடகங்கள், ஒளியும் ஒலியும், திரைப்படம் எல்லாம் பார்ப்போம்.  ஒரே டிவியில்  மொத்த காலணியும் சேர்ந்து  வெள்ளிக்கிழமை இரவில் டெக்கில் புது படம் எடுத்துப்  போடுவார்கள், போர்வை சகிதம் இடம் பிடித்து முந்திச் சென்று பார்ப்போம். இப்போது 24 மணி நேரமும் ஏதாவது ஒரு படம் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடினாலும் அன்று பார்த்த சுவரசியத்திற்கு ஈடாகாது.

     பள்ளிக்கூடம் தாண்டி ஒரு கருவேல மரம் நிறைந்த பகுதி இருக்கும், அதில் மரத்துக்கு அடியில் கூட்டி சுத்தப் படுத்தி ரகசிய இடம் எல்லாம் வைத்திருப்போம்.

பக்கத்து வீட்டு புளியமரம் இருக்கும் அதில் பிஞ்சு விடும் நேரம் எங்களுக்கு வேட்டைதான். எங்கள் வீட்டு மாடிக்கு படி எல்லாம் கிடையாது, கான்க்ரீட் ஓடு நடுவில் குவிந்து, இரு புறம் சரிந்த ஒட்டு வீடு போல் தான் இருக்கும். அதில் வீட்டுக்கு பின்புறம் போடப்பட்ட கொட்டகையின்  தென்னம் தட்டியில் காலை வைத்து லாவகமாக ஏறி விடுவோம், ஓட்டு மேலே ஏறி, புளியம் பூ, பிஞ்சுகளை சாப்பிடுவோம், அந்த ஓட்டு மேலே ஏறுவது எந்த ஒரு சாகசத்திற்கும் குறைந்தது இல்லை தட்டியில் உள்ள சிலாம்பு குத்தும், சுளுக்கி எறும்பு கடிக்கும். இந்த சோதனைகளுக்கு நடுவே தான் சாதனையாக ஓட்டு மேல் ஏறுவோம்.

இந்த வேலை எல்லாம் அம்மா மதியம் தூங்கும் போது தான் அரங்கேற்றுவோம். ஒருமுறை எங்கள் தம்பி சிறுவனாக இருந்தவன் எங்களை தொடர்ந்து எப்படியோ, எங்கள் முயற்சியும் சேர்ந்து மேலே ஏறிவிட்டான், ஏற்றிவிட்டோம். பின்னர் சிறிது நேரம் சென்று இறங்கும் போது இருந்தது வேடிக்கை, அவனுக்கு உயரத்தைப் பார்த்து பயம் வந்து விட்டது. பின்னர் பலர் கூடி, நெட்டை குமார் அண்ணன் உதவியுடன் பல கலவரங்களுக்கு பின் கீழே இறங்கினோம்.

    இப்படியான எங்களுடைய பல வருட மலரும் நினைவுகளை நினைத்தபடி காலணிக்குள் சென்ற எங்களுக்கு அங்கே இருந்த மாற்றங்கள் தந்தது பேரதிர்ச்சி .

இப்போது உள்ளது போல் ஆண்ட்ராய்டு போன்கள் அந்த சமயம் புழக்கத்தில் இல்லை, எனவே ஒரு டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு எங்கள் நினைவுகளை பதிவு செய்து கொள்ள சென்றோம்.

    நான் சொன்ன அந்த மைதானம் இப்போது உரு மாறி யூகலிப்டஸ் காடாக இருந்தது. பாக்டரியில் இருந்து வரும் காற்று மாசுபாடை தவிர்க்க யுக்கலிப்டஸ் வளர்த்திருக்கிறார்கள் .

  அதனை கடந்து எங்கள் மாமா வீட்டிற்கு செல்ல, எங்கள் தோழிகளும் எங்களைப்போலவே உரு மாற்றம் பெற்று சுட்டி பசங்களுக்கு தாயாகவும் ஆகி இருந்தார்கள் . ஒவ்வொரு விடுமுறைக்கும் இவர்கள் இங்கே வந்து விடுவது வழக்கமாம். ஒருவருக்கு ஒருவர் மகிழ்ந்து கூடி விசாரித்து மனம் நிறைந்தோம். எல்லாமே மாறிடுச்சுடி என என் தோழி சொல்ல, அதன் பின் உண்டு முடித்து எங்கள் பழைய பெரும் உலகத்தை வலம் வர ஆரம்பித்தோம்.

கடந்த கால எச்சங்கள். 

உயிர்ப்புள்ள ஓவியமாக திகழ்ந்த எங்கள் காலணி எலும்பு கூடு போல் இருந்தது. எங்கே வீட்டுக்கு வீடு குழந்தைகளும், கும்மாளமும் நிறைந்து இருந்ததோ அவை வெறுமைப் பட்டு வெறிச்சோடி இருந்தன. நாங்கள் சுதந்திரமாய் சுற்றிய இடங்கள் பல கம்பி வேலிக்குள்  அபாயகரமான கட்டுமானம் ஆகி சிறை இருந்தன.

ஆட்கள் நிறைந்த வசிப்பிடம், ஆள் அரவமற்ற இடமாக இருந்தது. சில வீடுகளில் வேற்று மொழி  காண்ட்ராக்ட் வேலையாட்கள் முரட்டு சிங்கிள் ஆக தங்கி இருந்தனர்.

      எது வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்ற நடுத்தர வர்க்க சுற்றம் இல்லை, மேல் தட்டு படாடோபம் நிறைந்த ஆஃபீஸ்ர் குடும்பங்கள் இல்லை, ஊரையே சுற்றி காவல் செய்த, நேபாளி கூர்காக்கள் இல்லை, எங்கிருந்தோ குறைந்த பட்ச கூலிக்கு ஆட்களை கொணர்ந்து ஆலையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு 20 வருட இடைவெளியில் இப்படி இங்கே வசித்த குடும்பங்கள் இதனில் இருந்து பணி ஓய்வு, வேலை இழப்பு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை என ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்விடம் விட்டு குடி பெயர்ந்து இருக்க, எஞ்சிய ஓரிரு குடும்பங்கள் மட்டுமே அங்கிருந்தன.

நாங்கள் வசித்த வீடு, எங்கள் பள்ளி, இந்த மரம், அந்த செடி என ஏதோ சிலவற்றோடு டிஜிட்டல் கேமராவில் பதிவு செய்து கொண்டு, மாற்றங்களுடன் உருக்குலைந்த எங்கள் காலனியை பிரிந்து அடுத்த நாள் கனத்த மனதோடு கிளம்பினோம்.

கேமராவில் பதிந்த பிம்பங்களை, கணினியில் மாற்றி சேமிக்கும் நேரம் ஏதோ பிழை காரணமாக நாங்கள் எடுத்த நிழற்படங்கள் அழிந்து போயின. கடந்த காலத்தின் இந்த எச்சங்கள் எங்கள் மலரும் நினைவுகளான குழந்தைப் பருவ உயிரோவியத்தை   சிதைக்காமல் இருக்கவே கணினி பிழை செய்தது போலும்.

 

வாழ்வியல்
காலம்

 

காலமும் காலனும் யாருக்காகவும் இரக்கப்பட்டுவதில்லை‌.காலச் சக்கரம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது.

காலை 8 மணி

" என்னங்க குளிச்சாச்சா? ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் ரெடியா இருக்கு.சீக்கிரம் சாப்பிட வாங்க.ஆஃபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குன்னீங்களே!".

" இதோ வந்துட்டேன்மா",

என்று வந்து அவசர அவசரமாகக் காலை உணவை முடித்து விட்டுக்
கிளம்பினான் அநிரன்.அன்பு மனைவி மாளவிகாவின் இதழில் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டு அந்த  இனிமையுடன் கிளம்பினான்.ஆறு மாத கர்ப்பிணியான அவளின் மேடிட்டிருந்த வயிற்றில் அடுத்த முத்தத்தைப் பதித்து
விட்டு வேகமாகக் கிளம்பினான்.

பகல் 11 மணி

ஸெல்ஃபோன் விடாமல் அடிக்க வேலைகளை முடித்து விட்டு அப்போது தான் உட்கார்ந்த மாளவிகா 
ஃபோனை எடுத்தாள்.

" ஹலோ மிஸஸ்.மாளவிகா தானே பேசறது? உங்கள் கணவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஜி.ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கிறார்.சீக்கிரமாகக் கிளம்பி வாங்க",

என்று மற்ற விவரங்கள் எதுவுமே சொல்லாமல் ஃபோனை வைத்து விட்டார் அந்த முகம் தெரியாத மனிதர்.

காதல் திருமணம் என்பதால். இரண்டு பக்கப் பெற்றோரும் இன்னமும் முறைப்பிலேயே இருக்கிறார்கள்.உதவிக்காக ஆஃபிஸ் நண்பருக்கு ஃபோன் செய்து விட்டுக் கையில் கொஞ்சம் பணத்துடன் கிளம்பினாள் மாளவிகா.

பகல் 3 மணி

ஜி.ஹெச்.சில் தலைமை மருத்துவரின் அறை.மாளவிகா கவலையுடன் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.ஆஃபிஸ் நண்பர் மாளவிகாவின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

" மேடம்.வெரி ஸாரி.உங்களுடைய கணவருக்குத் தலையில் பலத்த அடி.அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தோம்.ஒன்றும் பலனளிக்கவில்லை.இப்போது அவருக்கு மூளைச்சாவு ஆகி விட்டது.இப்போது நீங்கள் ஒரு முக்கியமான முடிவைத் துணிச்சலாக எடுக்க வேண்டும்.நீங்கள் ஓகே சொன்னால் உங்களுடைய கணவரின் ஆர்கன்களை தானம் செய்யலாம்.ஆர்கன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஐந்து நோயாளிகள் பயனடைவார்கள்.நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்",

தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த மாளவிகா  நிமிர்ந்து பார்த்தார்.

" இதில் யோசிக்க டயம் தேவையில்லை டாக்டர்.நான் முழு சம்மதம் தருகிறேன்.
எந்த பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லுங்கள்",

கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய மாளவிகாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அந்த டாக்டர்.

இரவு 8 மணி

கணவனின் உடலோடு வீட்டுக்கு வந்தாள் மாளவிகா.அடுத்த நாள் காலையில் அநிரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அலுவலக நண்பர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

அவளைப் பார்க்கப் புதிதாக ஐந்து பேர் வந்து கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் நன்றி கூறினார்கள்.அவர்களுடைய குழந்தைகளுக்குத் தான் அநிரனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப் பட்டிருந்தன.

" அம்மா நீ தான் எங்களுக்கு இனி தெய்வம்.எங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறாய்.
உனக்கு எவ்வளவு பண உதவி வேணுமோ தயங்காமல் கேளும்மா",

என்ற அவர்களைக் கை கூப்பித் தடுத்து நிறுத்தினாள் மாளவிகா..

" பணத்தாசை காண்பித்து என் கணவரின் உடல் உறுப்புகளை விற்ற
பாவத்தை என் மேல் போட வேண்டாம். முடிந்தால் நீங்கள் யாராவது எனது தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தர முடியுமா? எனது குழந்தைக்காக நான் உயிர் வாழ வேண்டும்",

என்று சொன்ன அந்த வீரப் பெண்ணை பிரமிப்புடன் பார்த்தார்கள்.

" கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறோம்மா",

என்று சொல்லி நகர்ந்தார்கள்.

காலத்தை வென்ற அந்தப் பெண்
மனித நேயத்தில் உயர்ந்து நின்றாள்.

புவனா சந்திரசேகரன்.

சித்திர கவிதை
தற்குறி'யாய்

பிறப்பிற்கு முன்னர் என்னவாக இருந்தோம் கேள்விக்குறிதான்..

இறந்த பின்னர் முற்றுப்புள்ளியா, கமா வா ;அதுவும் தெரியாது..

இடையில் வாழும் இந்த வாழ்க்கையிலும் ஏதும் அறியாத

'தற்குறி'யாய் தானே வாழ்கிறோம்.

சித்திர கவிதை
ஆடிப்போன நந்தி

அசையாத நந்தியும், ஆடிப்போனது

சிறுமியின் வேண்டுதல் கேட்டு..

அது வேண்டுதல் இல்லை மிரட்டல்!
நான் கேட்டது நடக்காவிட்டால்...

'நான் உன் பேச்சு காய் விட்டுவிடுவேன்'

என்பதை காதில் கேட்டதிலிருந்து! /Ram.

சித்திர கவிதை
வேண்டுதல்

பகலெல்லாம் வேண்டுதலை

காதில் வாங்கிய நந்தி...
இரவெல்லாம் அசை போட்டது..

'மனிதர்களுக்குத்தான் இவ்வளவு ஆசைகளா'என்று!!

சித்திர கவிதை
அம்மா

தன்னை காப்பாற்றுபவனை..
கடவுள் என்கிறது இந்து மதம்,

ஆண்டவர் என்கிறது கிருஸ்த்துவ மதம்,

இறைவன் என்கிறது இஸ்லாம்...
குழந்தைகள் மட்டுமே சரியாக சொல்கிறது,

அழகாக சொல்கிறது "அம்மா"என்று

சித்திர கவிதை
மூங்கில் இலை மேலே

மூங்கில் இலை மேலே, மூங்கில் இலைமேலே,

தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரே...

தூங்கும் பனி நீரை

தலாட்டும் வெண்ணிலவே

சித்திர கவிதை
கள்ளமில்லா சிரிப்பு

'கள்ளமில்லாத சிரிப்பு'தான் 
ஆனாலும்

கொள்ளை கொண்டு தானே

போகிறது மனதை.

ஆன்மீகம்
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்-5

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்

முருகனின் திருநீறை நெற்றியில் நேசத்துடன் பூசிக்கொள்ளும் போது பாசவினைகள் ஆசைகள் அனைத்தும் நீங்கப்பெற்று முருகனின் திருப்பாதத்தில் நீங்காமல் இருக்க முருகனின் திருவருளே துணைபுரியும். வேலை ஆயுதமாக உடைய முருகப்பெருமானே! என்னை அன்போடு காத்து, எனக்கான உணவையும் பொருளையும் மிக மிக சௌகர்யமாக பெருக்கி தருவாயாக!   


சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
 

எதையும் சாதிக்கவல்ல ஆற்றல்களை (சித்திகள்) அடிர்களாகிய நாம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும். மயிலோடு இருக்கும் முருகன் வாழ்க. அழகிய வேலொடு இருக்கும் முருகன் வாழ்க எங்களுக்கு ஞானம் அளிப்பதற்காக மலைமீது குருவாக இருக்கும் முருகன் வாழ்க குறமகள் வள்ளியோடு வாழ்க வெற்றிமுழக்கத்தோடு பறந்து முருகன் புகழை பறைசாற்றும் சேவற்கொடி வாழ்க உன் புகழை பாடும் என் வறுமைகள் என்னை விட்டு நீங்க வேண்டும.
 

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்

 

என்னிடம் பல குறைகள் இருந்தாலும், பல தவறுகளை செய்து இருந்தாலும், என்னை பாதுகாக்கும் தாய் - தந்தை முருகப்பெருமான் மட்டுமே குருவாக வந்து வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையது ஆகும். முருகப்பெருமானின் அன்பை பெற்றவளான குறமகள் வள்ளி பெற்று எடுத்த பிள்ளை போல அடியேனை அன்புகாட்டி பிரியத்துடன் பாதுகாக்க வேண்டும். உன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டு மனமகிழிச்சியுடன் உனது அருளை தரவேண்டும். முருகப்பெருமான் மீது நம்பிக்கையுடன் வரும் அடியவர்கள்/ பக்கதர்கள் பாதுகாத்து மென்மேலும் வளம் பெற்று வாழும் படி அருள் செய்ய வேண்டும்.

 

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
 

முருக பக்தர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்பி பால தேவராயன் ஸ்வாமிகள் உருவாக்கி அனைவரும் அறியும் வகையில் எல்லோருக்கும் கொடுத்த கந்த சஷ்டி கவசம் என்னும் இந்த பாடலை நமது உடலை முறைப்படி தூய்மை படுத்தி மனதில் வேறு சிந்திக்காமல் முருகப்பெருமான் சிந்தனையுடன் காலைபொழுதிலும், மலைப்பொழுதிலும் மற்றும் எப்போதும் மனதில் உணரும் படி படிக்கலாம்.

 

கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
 

இந்த கந்த சஷ்டி கவசத்தை வேறு சிந்தனைகள் கவனம் சிதறாமல் மனதில் உணர்வோடு சிந்தித்து 'ச ர வ ண ப வ' எனும்அட்சரத்தை தொடர்ந்து மனதில் ஓதிக்கொண்டே (சொல்லிக்கொண்டே) இருக்கும் பொது 

ச ர வ ண ப வ

ர வ ண ப வ ச

வ ண ப வ ச ர

ண ப வ ச ரவ

ப வ ச ரவ ண

வ ச ரவ ண ப

36 அட்சரமாக உரு மாறும் விருப்பத்துடன் திருநீறு (விபூதி) பூசி, அவ்வாறு முருகனை வேண்டி வந்தால் நாம் இருக்கும் இடத்தை சுற்றி உள்ள எட்டு திசைகளிலும் ஆளும் மன்னர்கள் நமக்கு அடங்கி நடப்பார்கள். நமக்கு வசப்பட்டு நாம் நினைப்பதை செயல்படுத்துவார்கள்.


மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

நாம் அறியாத நபர்கள் அனைவரும் நம்மை மதித்து வணங்குவார்கள். ஒன்பது கோள்களும் மகிழ்ச்சியோடு நன்மை அளிக்கும். புதிய பொலிவுடன் மன்மதன் போல அழகான பிரகாசமான ஒளி பெற்ற உடம்பு பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் பதினாறு செல்வங்கள் அதாவது   

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)

2. குறையாத வயது (நீண்ட ஆயுள்)

3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)

4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)

5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)

6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)

7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)

8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)

9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)

10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)

11.மாறாத வார்த்தை (வாய்மை)

12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)

13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)

14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)

15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)

16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

பெற்று வாழ்வார்கள் முருக பெருமான் கையில் எப்போதும் உள்ள வேல் போல எப்போதும் பதினாறு செல்வங்கள் நம்கைவசமாகும்.

கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
 

இந்த கந்த சஷ்டி கவச வரிகளை வீடுபேறு அடைய வழி என நினைத்து துதித்தால் மெய்ப்பொருளாக விளங்கும். முருகப்பெருமானின் அருள் பொங்கும் விழிகளால் நம்மை பார்க்கும் பொது நம்மிடம் இருக்கும் அகப்பேய்கள் அவையாவன  

1) காமம் – தீவிர ஆசை 

2) குரோதம் – கோபம் 

3) லோபம் – பேராசை 

4) மோகம் – மருட்சி  

5) அகங்காரம் – இறுமாப்பு  

6) மதஸர்யம் – பொறாமை 

போன்ற துர்குணங்கள் பயந்து வெருண்டு ஓடும், பொல்லாதவற்றை பொடி பொடியாக்கும், நல்லவர்களாக நம்மை மாற்றி நம் உணர்வில் மெய் எழுச்சி பெற்று நடனம் புரியும்.

 

சர்வ சத்ரு சங்கா ரத்தடி 

அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி

அனைத்து எதிரிகளையும் வென்று தீய எண்ணங்களை அழித்து நல்லவர்களாக மாற்றும் முருகப்பெருமானை அறிந்தகொண்டது நம் உள்ளம் , சூரபதுமனை வதைத்து அஷ்ட லட்சுமிகளில் (ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி , தனலட்சுமி) ஒருவரான வீரலட்சமி விருந்து படைத்தது முருகப்பெருமானின் திருக்கரம் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பதவிகளை மீட்டு அளித்தார். லட்சுமி மற்றும் தேவர்களுக்கு குருவாக திருஆவினன்குடி அருள்பாலிக்கிறார் பழனி மலையில் குழந்தையாக சிவந்த காலடி போற்றி வணங்குவோம்.

 

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி

நாம் தவறான பாதைக்கு செல்லாதபடி தடுத்து நம் மனதில் குடிகொண்டு நம்மில் முழுவதும் பரவி அழகிய வேலனை வணங்கி புகழுவோம்.

 

தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரச

தேவர்களின் சேனை தலைவராக போர்புரிந்து சேனாதிபதியை போற்றுவோம், குறத்தி மகளான வள்ளி மனம் மகிழ்ந்து அரசனைப் போற்றுவோம், வல்லமை பொருத்திய அழகான உடம்பை பெற்றவரைப் போற்றுவோம், துன்பத்தை தீர்க்கும் இடும்பா உனைப் போற்றுவோம், கடம்ப மலர்களை சூடும் கடம்பா போற்றுவோம், போரில் வெற்றி பெற்று வெட்சி பூவை சூடும் (தமிழர் மரபு) வேல் ஏந்தியவரை போற்றுவோம்.

 

உயர்கிரி கனகசபைக்கோ ரரச

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

 

உயர்த்த மலையான கந்தகிரி பொன்னால் ஆன சபாமண்டபத்துக்கு மாமன்னராக மயில் போல மனதை கவரும் நடனம் ஆடும், உன் மலர் போன்ற மென்மையான பாதங்களை கதி என சரணம்/ தஞ்சம் அடைகின்றோம். முருகப்பெருமானின் அட்சரமான சரவணபவ சரணம் அடைகின்றோம். ஆறு திரு முகம் ஒளி வீசும்   முருகப்பெருமானின் சரணம் அடைகின்றோம்.

 

ஆன்மீகம்
கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -4

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

என்னை எந்தக் காலத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! எனது வார்த்தையானது நாக்கு அசைய வெளிப்படும் போது பொன்னாலான வேலானது விரைந்து வந்து காக்க வேண்டும். இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம் வைர வேலானது காக்க வேண்டும்! பாதி இராத்திரியில் அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது காக்க வேண்டும். முன்னிரவு நேரத்திலும் நடுராத்திரி நேரத்திலும் பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது காக்க வேண்டும்! தாமதத்தை அகற்றி அறிவில் சிறந்த வேலானதுகாக்க வேண்டும்!

 

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பொன்னாலான வேலானது காக்க வேண்டும்! தாமதமின்றி ஒரு நொடியில் நோக்கி அருள வேண்டும்.  தடைகள் (இடைஞ்சல்கள்) அடித்து விலக்க வேண்டும். முருகனின் அருள் பார்வையால் நம் செய்த பாவங்கள் அனைத்தும் பொடி பொடி தூளாகி ஒழிய வேண்டும் 

 

பில்லிசூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும், பெரிய பகைவர்களும் என்னை நெருங்கிவராமல் விலக வேண்டும், துன்பப்படுத்துகின்ற மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும், வலிமை வாய்ந்த பூதங்களும், வல்லமை உடைய பிசாசுகளும், பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற புறவாசல் முனியும்

 

கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்

நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் கொள்ளிவாய் பேய்களும் குறளை எனும் குட்டி பேய்களும், பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பிரம்ம ராக்ஷசப் பேய்களும், இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும், காட்டேரி என்ற துஷ்ட தேவதையும் மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும்.

 

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

பகலிலும் இரவிலும் எதிர்த்து வருகின்ற அண்ணர் என்ற தேவதைகளும், மிகுந்த பூஜைகளைப் பெற்றடையும் காளி தேவதையோடு, காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும், விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும் இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும் பல்லக்கில் வரும் பூதங்களும் கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும் முருகனின் பக்தரான என் பெயர் கேட்டாலே இடி விழுவதை போல பயந்து ஓடவேண்டும். 

 

ஆனை அடியினில் அரும் பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

யானையின் பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட
வெறும் கண்ணால் காண முடியாத பதுமைகளும், பூனையினுடைய முடி பிள்ளைகள் எலும்பும், நகங்களும், மயிரும் நீண்ட முடியை உடைய தலையும்,  மரத்தினால் செய்த பொம்மைகள், பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும், வீட்டில் தீங்கு விளைவிக்கும் பொருட்டு புதைத்து வைத்த மந்திர தந்திர மாயங்களும், மாந்திரீகம் அறிந்த பகைவர்களின் கர்வமும் மந்திரித்துச் செய்த மரத்தினால் செய்த பொம்மைகள்.

 

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

தீய சக்திகளுக்குத் கொடுக்கும் காசும் பணமும், ஆடு கோழி காவு கொடுத்து அதன் ரத்தத்தில் புரட்டிய சோறும், மாந்திரீகம் சொல்லுகின்ற அஞ்சன வித்தையும், சிந்தை கவர்ந்து பித்துப்பிடித்து போகச் செய்யும் மாய மந்திரமும், இந்த மேற்குறிய துஷ்ட செயலை செய்வோர்கள் முருகன் பக்தரான அடியேனை பார்த்தவுடனே நேராக பார்க்கமுடியாமல் இங்கும் அங்கும் அலைந்து எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் பயந்து குலைந்து பேசவேண்டும்.  பகைவர்களும் வஞ்சகர்களும் வந்து என்னிடம் அடிபணியவும் எமனுடைய தூதர்கள் என்னைக் கண்டால் பயந்து நடுங்க வேண்டும்.

 

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறியக்

பயந்து நடுநடுங்கவும் அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு கீழே விழுந்து புரளவும், வாயைத் திறந்து கதறி புத்தி கெட்டு ஓடவும், படியினில் முட்டிக்கொள்ளவும், பாசக்கயிற்றினாலே கட்டி உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக! காலும் கையும் ஒடியவும் படி அவர்கள் கதறும் படியாகவும் பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்!


முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

கண்விழிகள் வெளியே பிதுங்கி வருபடியாக மோதுவாய்! தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி அழிப்பாய்! அனைவரையும் கவரும் அழகனே சூரர் பகை அழித்த அழகனே! கூரிய வேலால் குத்தி அழிப்பாய்! 

 

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அதுஆக

முருகனை நன்றாக பிடித்து கொண்டவர்களுக்கு பிரகாசமாக எரியும் சூரியன் வெப்பம் கூட தணிந்து குறைந்து இதமாக இருக்கும்.

 

விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட

புலியும், நரியும், சிறு நரியும், நாய்களும், எலிகளும், கரடியும் இனிமேல் பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பயந்து ஓடும் படி வேலை விடுவாயாக!

 

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

தேள்களும் பாம்பும் செய்யான் பூரான்களும் கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும் எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்.

 

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்

ஒளிப்பும், நரம்பு சுளுக்குதலும்,ஒரு பக்கத்தலைவலியும், வாதம்(வாயு சம்பந்தமான வியாதி) வலிப்பு, குளிர்நோயும் இழுப்பு நோயும், பித்தநோயும், சூலைநோயும், சயம், குன்மநோயும் சோர்வை உண்டாக்கும் சிரங்குரோகமும், கைகால் குடைச்சலும், சிலந்திக்கட்டியும், குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும், விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும்,பரவுகின்ற தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும்,கடுவன், படுவன் என்னும் சிலந்தியும்  கைகால் சிலந்தியும், பல் குத்து வலியும், பல் அரணையும், பருக்கட்டிகளும், அரையாப்புக் கட்டியும், மேற்கூறிய எல்லா வியாதிகளும் என்னைக் பார்த்தவுடன் என்னிடத்தில் தங்கி இருக்காமல் நீங்கி ஓட அருள் புரிவீராக!


ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்

பதினான்கு உலகமும் என்னுடன் நட்புடன் இருக்க வேண்டும், ஆண்களும், பெண்களும், எல்லோரும், ஆள்கின்ற மன்னர்களும் என்னோடு மகிழ்ச்சியுடன் நல்ல நட்போடு உறவாக இருக்க அருள் புரிய வேண்டும். 

 

உன்னைத் துதித்த உன்திரு நாமம்
சரவண பவனே! சைலொளிபவனே!
திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!

உன்னை போற்றி வணங்க கூடிய "சரவணபவ" எனும் திருநாமம் உடைய சரவணப் பொய்கையில் உதித்தவனே! மலைகளில் வீற்றிருக்கும் ஒளிமயமான கடவுளே! திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! எல்லா திசையிலும் புகழ்பெற்று ஒளிரும்  ஒளியினை உடையவனே!, பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே! பிறவி துயரான பாவத்தை போக்கும் சக்தியை உடையவனே!

 

அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே! சங்கரன் புதல்வா!

திருமாலுக்கும், மகாலட்சுமிக்கும் மருமகனே! தேவலோகத்தை காத்து! தேவர்களுடைய கடுமையான சிறையிலிருந்து விடுதலை செய்தவனே! கந்தக் கடவுளே! மனித மனம் எனும் குகையில் குடியிருக்கும் குகனே! கதிர் ஒளிபொருந்திய வேல் ஏந்தியவனே! கார்த்திகை பெண்களின் மகனாக வளர்த்தவனே! கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே! கடம்பனையும் இடும்பனையும் போரில் வென்று அருள் புரிந்தவனே! இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே! திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே! சிவபெருமானின் மகனே!


கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே

கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற கதிர் ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே! குழந்தை வடிவில் பழனி எனும் தலத்தில் தலைவனாக வாழ்கின்ற பால குமாரா!  திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்க்கின்ற அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே! திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள சிறப்புடைய மா மலையில் எழுந்தருளி இருக்கும் செங்கல்வராயனே! சமராபுரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு ஆள்பவனே!

 

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப்பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

கரிய மேகங்களை போல கூந்தலை உடைய கலைமகளான சரஸ்வதி தேவி  ஞானம் சிறக்குமாறு எனது நாவில் இருந்து, அடியேன் உன் புகழைப் பாட வேண்டும். என்னோடு எப்போதும் இருந்து வரும் என் தந்தை போல வழிநடத்தும் முருகனை நினைத்து நெஞ்சம் நெகிழ பாடினேன் ஆடினேன். எல்லையற்ற அனந்த நிலை ஆடிக்கொண்டே திருஆவினன் குடியை (பழனி) அடைவேன்.

 

 

ஆன்மீகம்
கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -3

ஆறு முகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

ஆறு திருமுகங்களும், அழகிய மகுடங்கள் ஆறும், திருநீறு அணிந்த ஆறு திருநெற்றிகளும், நீண்டு நெளிந்திருக்கும் புருவங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், பவளம் போல் சிவந்த ஆறு திருவாய்களும், சீரான ஆறு திருநெற்றிகளிலும் ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும், பன்னிரண்டு செவிகளிலும் விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியும், வலிமை வாய்ந்த பன்னிரண்டு தோள்களிலும் அழகுபொருந்திய திருமார்பில்

 

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

பலவகையான ஆபரணங்களும் மார்புப் பதக்கமும் நல்ல மணிகளைக் கொண்ட நவ ரத்தின மாலையும் அணிந்து மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும், முத்து மாலையையும் அணிந்த திருமார்பும், புகழத்தக்க அழகுடைய மேன்மையான வயிறும், கொப்பூழும் அசைந்த இடுப்பிலே சுடர்விட்டு ஒளிபரப்புகின்ற பட்டாடையும்
நவ ரத்தினங்கள் பதித்த பார்ப்பதற்கு வரிசையாக அழகுற அமர்ந்துள்ளது

 

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

இரண்டு தொடைகளின் அழகும் இரண்டு முழங்கால்களும் ஓசை எழுப்ப அழகிய திருவடிகளில் சிலம்பு ஒலி முழங்

 

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

அகரமுதலென தொடங்கும் திருப்புகழில் இதே ஓசைகளை அமைத்திருப்பார் அருணகிரிநாதர் ஸ்வாமிகள். பிரபஞ்சம் உருவான பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் என அருணகிரிநாதர் ஸ்வாமிகள் கூறியுள்ளார். உதாரணமாக தடதட வென ரயில் வந்தது, சடசட என மழை பொழிந்தது என்ற ஒலிகளை விவரிக்கும் (இரட்டைக்கிளவி) சொற்கள் ஆகும். அது போல செககண’ என்பதில் தொடங்கி ‘டிங்குகு’ என்பதுவரை முருகனின் சிலம்பொலி ஓசை போல மறைபொருளாக பிரணவ மந்திரத்தின் ஓசை வடிவம் இங்கே இடம்பெற்றுள்ளது. இவை தாள ஜதிகளுடன் முருகனை அழைக்கும் மந்திர வார்த்தைகள் ஆகும். இந்த அரிய மந்திரங்களை முருகனின் சிலம்பொலியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளனர்.

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று

எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! உயிர் சக்தியை உள்ளடக்கிய மூலாதார பரம்பொருளே, மயில் வாகனத்தைக் கொண்டுள்ள மூலப் பரம்பொருளே! மயில் என்பது ஓம்கார வடிவாகும், என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன், முன்னதாகப் புறப்பட்டு முந்தி வரும் முருகனின் வேல். உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும் திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் மகனாகிய அடியேன் விரும்பிக் கேட்கின்ற வரங்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கின்ற லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின் பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க லீலா லீலா லீலா என்னும் பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய விநோதத்தை உடையவனே! என்று கூறித் துதித்து

 

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

உன்னுடைய அழகிய பாதங்கள் என்னை நிச்சயம் காக்கும் என்று நம்பிக்கையுடன் நினைக்கின்ற பக்தனாகிய என்னுடைய தலைமேல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வைத்து என்னைக் காத்து அருள் செய்வாயாக! என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற முருகக்கடவுளே! என்னைக் காத்து அருள் செய்க! பன்னிரண்டு திருக்கண்களாலும் உமது குழந்தையாகிய என்னை காத்து அருள் செய்ய வேண்டுகிறேன். அடியவனாகிய என்னுடைய முகத்தை உனது அழகிய வேலானது காத்தருள வேண்டும். திருநீற்றை அணிகின்ற நெற்றியை புனித வேல் காக்க வேண்டும். ஒளி வீசுகின்ற வேலாயுதமானது எனது இரு கண்களை காத்தருள வேண்டும்.
 

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

 

பிரமனால் படைக்கப்பட்ட இரு செவிகளையும் வேலாயுதபாணியே! காக்க வேண்டும்! இரண்டு மூக்குத் துவாரங்களையும் நன்மையைச் செய்யும் வேலானது காக்கவேண்டும். உனது புகழைப் பாடிய எனது வாயை பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்! என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும் கூர்மை பொருந்தியவேல் காக்க வேண்டும். உனது தோத்திரங்களைச் சொல்லி நாக்கை செம்மை கொண்ட வேலானது காக்க வேண்டும். கன்னங்கள் இரண்டையும் ஒளிவீசும் வேலானது காக்க வேண்டும். எனது இளமையான கழுத்தை இனிமையான வேல் காக்க வேண்டும். மார்போடு சேர்ந்துள்ள இளமுலைகளை அழகியவேலானது காத்தருள வேண்டும்.

 

வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வடித்தெடுக்கப்பட்ட வேலானது இரண்டு தோள்களையும் சிறப்படையும் படி காக்க வேண்டும். இரண்டு பிடரிகளையும் பெருமை வாய்ந்த வேலாயுதமானது காக்க வேண்டும். முதுகுப் புறத்தினை அழகுடன் முதுகை சிறப்பாக கருணை பொருந்திய வேலானது காக்க விலா எலும்புகள் பதினாறினையும் பெரிய வேல் காக்க வேண்டும்.

 

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வெற்றியையுடைய வேலாயுதமானது சிறப்புற விளங்குமாறு வயிற்றை காக்க வேண்டும்! சிறிய இடையை அழகு சேர செம்மை கொண்ட வேல் காக்க வேண்டும்! நரம்பாகிய கயிற்றை நன்மையை அருளும் வேலானது காக்க வேண்டும்! ஆண்குறி இரண்டும் கூர்மையாகிய வேலானது காக்க வேண்டும்! இரண்டு ஆசன பக்கங்களையும் பெருமை வாய்ந்த வேலானது காக்க வேண்டும்!

 

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க

வட்ட வடிவத்துடன் கூடிய ஆசன துவாரத்தை வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! திரண்ட இரண்டு தொடைகளையும் வலிமை வாய்ந்த வேல் காக்க வேண்டும்! இரண்டு கணைக்கால்களையும் இரண்டு முழந்தாள்களையும் ஒளி பொருந்திய வேல் காக்க வேண்டும்! ஐந்து விரல்களைக் கொண்ட இரண்டு பாதங்களையும் கருணை உடைய வேல் காக்க வேண்டும்! இரண்டு கைகளையும் அருள் மிக்க வேலாயுதமானது காக்க வேண்டும்!

 

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

இரண்டு முன்னங்கைகளையும் வலிமை பொருந்திய வேலானது காக்க வேண்டும்! இரண்டு பின்னங்கைகளிலும் திருமகள் வாசம் செய்யுமாறு அருள வேண்டும்! நாக்கில் சரஸ்வதி நல்ல துணை ஆக இருக்க வேண்டும்! (நாபி) உந்தித் தாமரையை நன்மை அருளும் வேலானது காக்க வேண்டும்! மூன்று பிரிவான நாடிகளை கூர்மை பொருந்திய வேலானது காக்க வேண்டும்!

 

 

ஆன்மீகம்
கந்த சஷ்டி கவசம் -விளக்கம்-2

கந்த சஷ்டி கவசம்

“துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை”.

கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த நூலை (துதிப்போர்க்கு) படிபவர்களுக்குக் வலிமை வாய்ந்த கொடிய வினை (வல்வினை போகும்) இடர்ப்பாடுகள் துயரங்கள் போகும் (துன்பம் போகும்) நெஞ்சில் பதியும் படி. உணர்ந்து முழுமனதோடு ஓதுபவர்களுக்குக் (பதிப்போர்க்கு) செல்வம் சேரும் மேலும் வந்த செல்வம் குறையாமல் பெருகும் (கதித்து ஓங்கும்) ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்கள் இல்லாத தூயவன் (நிமலன்) அருளால் ஆழ்ந்து தியானம் மூலம் இறைவனை உணரும் நிலை (நிஷ்டை) கைகூடும். 

 

அமரரிடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி.

அமர்களாகிய தேவர்களின் துயரை போக்க போர் புரிந்த குமரன் காலடி நோக்கியே நம் மனம் வணங்கி நிற்கட்டும்.

 

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

சூரசம்காரம் எனும் சஷ்டி பொழுதில் சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரத்தை மனதிற்குள்ளே கூறிக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு உதவும் செங்கதிர் (சிவப்பு நிறம் கொண்ட) வேலோன்.

 

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும் பல மணிகளால் ஆன சதங்கை என்னும் அணிகலனானது ராகத்தைப் பாட கிண்கிணி என்னும் மணிகள் அசைந்து ஆட
எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய திருநடனம் புரியும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள் என் கண்முன்னே எழுந்தருளி

 

கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக!

என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு  கையில் வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள் வந்தருள்வாராக! வேல் ஆயுதம் கொண்டவரே வருக!!மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள்வந்து அருளுக! 

 

இந்திரன் முதலாக  இந்திரன் (கிழக்கு) – தேவர்களின் அரசன்.,அக்னி (தென் கிழக்கு) – நெருப்பு கடவுள்,எமன் (தெற்கு) – இறப்பு கடவுள், நிருத்தி (தென் மேற்கு) – அழிவு மற்றும் அழியாத தன்மையுடைய தெய்வம்,வருணன் (மேற்கு) – கடல் மற்றும் நீரின் கடவுள், வாயு (வட மேற்கு) – காற்று மற்றும் வாயுக்களின் கடவுள், குபேரன் (வடக்கு) –செல்வத்தின்  கடவுள்,ஈசானன் (வட கிழக்கு) – ஈசனின் (இறைவனின்) ஒரு வடிவம்.எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம் வணங்கும் பெருமையும் மந்திர வலிமையும் உடைய கூர்மையான வேலாயுதமானது என்னைக் காத்து வந்து அருளுக! 

 

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரவண பவனார் சடுதியில் வருக

தேவேந்திரனின் மருமகனே! வந்து அருள்க அன்பு மிகுந்த குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின் எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் கந்தக்கடவுள் வந்து அருள்க! ஆறு திருமுகங்களைக் கொண்ட தலைவனே வந்து அருள்க! திருநீற்றை திருமேனியில் அணிகின்ற வேலாயுதபாணியே! நாள் தோறும் வந்தருளுக! சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே! விரைவாக வருக சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே சீக்கிரமாக வந்து அருள்க!

 

ரவண பவச ர ர ர ர ர ர ர

ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விநபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

ரவண, பவச, ரரா. ரிவண பவச ரி ரி  "சரவணபவ' என்பது ஆறு எழுத்து மந்திரமாகும். அதில் உள்ள எழுத்துக்களை முன் பின்னாக மாற்றியமைத்து உச்சரிப்பதும், ''போன்ற எழுத்துக்களை அடுக்கடுக்காக உச்சரிப்பதும், முருகப் பெருமானை மனதில் நிலைபெறச் செய்யும் மந்திர முறையாகும். 

 

விணபவ சரவண வீரா நமோ நம-சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திர மூர்த்தியாக விளங்கும் வீரரே உம்மை நான் வணங்குகிறேன். நிபவ சரஹண நிற, நிற நிறென-ஆறெழுத்து மந்திரத்தின் ஒளிவடிவமாய் பிரகாசிக்கின்ற. சரவணப் பொய்கையின் வீராதி வீரன் இறைவன், தனது வாகனமான மயிலின் மீது வந்தடையும் அவனை வணங்குகிறோம். அசுரர்களுக்கு எதிரான போரில் தேவர்களின் வீரத் தலைவனாக இருப்பவரை வணங்குகிறோம். 

 

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

என்னை ஆட்கொண்டு அருளும் சிவபெருமானின் இளைய குமாரரும் வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள் கையில் பன்னிரண்டு ஆயுதங்களும் பாசமும் அங்குசமும் பரந்து விரிந்த பன்னிரண்டு திருக்கண்களும் விளங்க என்னைக் காக்க வேகமாக வந்தருள்க!

 

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஐயும் கிலியும் செளவும் றீயும் ஒவ்வும் என்பன மந்திர வார்த்தைகள் இது 'ஈம்,' 'கிள்ம்,' 'சௌம்' என்ற பீஜ மந்திரங்கள் குறிக்கிறது. 'பீஜ' அல்லது 'விதை' என பொருள் சொற்களின் தொடராக இருந்து, அதற்கு ஒரு தனிப்பட்ட 'சக்தி'யையும் அளிக்கிறது.
பீஜ மந்திரங்களில் நுண்மையான மற்றும் மர்மமான உள் அர்த்தம் உள்ளது.

 ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்: விழிகளும், கரங்களும் தெய்வீக அடையாளங்களுடன் இணைந்து, படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தெய்வீக பண்புகளை குறிப்பிடுகின்றன. உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்: உய்யும் ஒளியாகவும் (தெய்வீக பிரகாசம்-அருட்பெரும் ஜோதி), உயிரின் ஆதியாகவும், செழிப்பும் காத்திடும் ஆற்றலாகும். கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்: கரங்களிலும் ஒளி, இந்த ஒளி தெய்வீக காந்தம் மற்றும் சண்முகனின் பிரகாசமான உருவம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. நிலைத்து நிற்குமாறு எனக்கு முன் நாள் தோறும் ஒளிவீசுகின்ற ஆறுமுகனாகவும் நீயும் உன்னதமான, தனித்துவமான ஒரு ஒளி “அருட்பெரும் ஜோதி” அல்லது சிறப்பு ஆறுமுகனின் மகிமையுடன் பொருந்தி, மிக உயர்ந்ததாக இருக்கும், நமது உடலில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி சிவ அருளை பெற்று ஒவ்வொரு நாளும் மேலோங்க நம் மனத்தில் குடியிருக்கும் முருகன் (குகன்) வந்து அருள்க

 

ஆன்மீகம்
கந்த சஷ்டி கவசம் -விளக்கம் -1

கந்த சஷ்டி கவசம் -விளக்கம் 

கந்த சஷ்டி கவசம் என்றல் என்ன?

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. 

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌணர்னமிக்கும் அடுத்து வரக்கூடிய ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். செவ்வாய் அதிபதி முருகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, 

சஷ்டி என்பது சூரனோடு முருகன் போர் புரிந்த காலம் ஆகும். போரிலே மாமரமாக நின்ற சூரனை இரு கூறுகளாகப் பிளந்து மயிலாகவும் சேவற் கொடியாகவும் தன்னோடு வைத்துக் கொண்டார். இதனை சங்கரன் மகன் சட்டியில் மாவரத்தான் என்று வட்டார மொழிச் சொற்களில் கூறுவது உண்டு. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை நோக்கி தொழுவது சஷ்டி விரதம் ஆகும்.

சஷ்டி பொழுதில் கணவன் மனைவி இருவரும் இணைந்து விரதம் இருந்தால் மக்கட் பேரு கிடைக்கும். இதனை “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறுவது உண்டு. “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்றும் கூறுவார்கள்

சஷ்டி என்றால் ஆறு, ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். மனக்கவலை நீங்க ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன்.  முருகனை வணங்க எல்லா தீய வினைகளும் ஒழியும் வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். 

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். பழனியில் கிரிவலப் பாதையில் பலரும் நோயினால் அவதிப்படுவதை பார்த்து மனம் வருந்தி அதனை தீர்க்க முருகனை வேண்டி இயற்றப்பட்ட பாடல் ஆகும்.

கந்த சஷ்டி கவசம் என்ன பயன்? 

இந்த கவசத்தை படிப்பதால் அல்லது பாடுவதால் நமது மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும்.  இதில் உள்ள 240 வரிகளை தொடர்ந்து வாய் திறந்து படுவதால் நாளமில்லா சுரப்பிகள் சீராக வேலை செய்யும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் குணமடையும், மனஅமைதி கிடைக்கும், புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்நூலை வாயால் படிப்பதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் பதிக்கவும் செய்யவேண்டும். உணர்ந்து முழுமனதோடு பாட வேண்டும். அப்போது தான் முழுப்பலனும் கிட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் மனதார நினைத்து சரி படுத்துவது யோகக் கலையில் ஒருவித முறையாகும். இதனை மறைப்பொருளாக சஷ்டியில் கொண்டுள்ளது. 

கொடிய விஷமும் கண்களுக்கு, தெரியாத பில்லி சூனியங்களும், சஷ்டியை படிக்க படிக்க நம்மை விட்டு விலகும். இதனை எந்த நேரத்திலும் படிக்கலாம். தீராத பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் படித்து வந்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் முருகன் தீர்த்து வைப்பார் அல்லது தீர்க்க வழி காட்டுவர்.  

ஆன்மீகம்
ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.

ஆறுமுகம் அவன் சின்னங்களும் - ஓர் பார்வை.

முன்னுரை 

அகவும் மயிலும், கூவும் சேவலும், கூரான வேலும், பொங்கும் கடலும், பொதிகை மலையும், ஒதும் தமிழும் சிந்தையுள் நிறைந்த சித்தர்கள் வழிபடும் சிவமைந்தன் பெயரை, குறை தீர்க்க குன்றம் தோறும் குடியிருக்கும் குமரனையே கூறும்.

 

அறிமுகம்

முருகனின் வரலாறு என்றால் 

  • சிவனின் நெற்றிக்கனில் உதித்த சிவகுமாரன், கங்கையில் தவழ்ந்த காங்கேயன், கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து கார்த்திகேயன் அகிலம் காக்கும் அன்னை பார்வதியால் ஒன்று சேர்ந்த ஸ்கந்தன்.
  • பிரணவ பொருளுக்கு விளக்கம் கூறா பிரமனை சிறைபிடித்து தந்தைக்கே உபதேசம் செய்த தகப்பன் சுவாமி,
  • ஒரு கனிக்காக சிவனிடம் சிற்றம் கொண்டு கயிலை விட்டு மயிலேறி ஞானப்பழமாக நின்ற ஞான பண்டிதன்.
  • தேவரும் மூவரும் அழிக்க முடியாத அசுர குல தலைவன் சூரனை போரிலே வென்ற செந்தூரன். மனம் மாறிய சூரனை மயிலாகவும் சேவல்கொடியாகவும் சேர்த்துக்கொண்ட செந்தில்குமரன்,
  • தெய்வானையை கரம்பிடித்த தேவசேனாதிபதி, குற மகளை மணந்த வள்ளிமணாளன், கடல் போல குறையா கருணை கொண்ட கந்தசாமி.
  • யாமிருக்க பயமேன் என உரைத்து பக்கதரிகளின் குறைதீர்த்த பாலசுப்ரமணியன், குன்று தோறும் குருவாக அமர்ந்த குமரேசன், சித்தர்களுக்கெல்லாம் சித்தன், தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தயாளன் முத்தமிழும் போற்றும் முத்துக்குமரன். 

பகுத்தறிவாளர்களும் அறிவியல் சிந்தனையாளர்களும் கந்தனை கடவுளாக பார்ப்பதில்லை இருப்பினும் குறமகள் வள்ளியை மணந்த குமரனை குறிஞ்சி நில தலைவனாக ஏற்றுக்கொள்கின்றனர் ‌அவர் முன்னர் ஒரு காலத்தில் இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்து உலகத்துக்காக போர் புரிந்து மக்களை காப்பாற்றி நல்வழி காட்டும் தலைவனாய் இருந்திருப்பார் என ஏற்றுக்கொள்கிறார்கள்.

 

ஷண்முகம் (ஆறுமுகம்)  

ஈஸ்வரனின் "ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்" என்று வெளிப்படத் தெரியும் ஐந்து முகங்களோடு பரம ஞானியரின் மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருமுகம்- அதோ முகம் சேர்ந்து நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த அருட்பெரும் ஜோதி ஆறுமுகங்களாக மாறியது.

 

ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்)

ஓகம் என்ற தமிழ் கலையே வடமொழியில் யோகம் என பெயர் பெற்றது. இரண்டாக உள்ள பொருளை ஒன்று சேர்ப்பது ஓகம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேரும் விஞ்ஞானமே ஆகும். ஓகக் கலையின் நாயகன் முருகனே, மூலாதாரம்-ஓங்காரம், நிராகுலம் (சுவாதிஷ்டானம்)-நிலம், மணிப்பூரகம்-நீர், அனாகதம்-நெருப்பு, விசுத்தி-வளி(காற்று), ஆக்கினேயம்- வான்(ஆகாயம்) ஒரே நேர்கோட்டில் நிற்க வெளிப்படும் பேராற்றல் முருகன் என்ற அறியப்படுகிறது, 

 

தமிழ் ஆயுதம் -வேல்

அரிதான யோக முறையால் புருவ மத்தியில் சக்தியாக திரண்டு சுழலும் உன்னத நிலையே முருகனின் அவதாரமாகும். கபச் சுரப்பி (Pituitary gland, பிட்யூட்டரி சுரப்பி), கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள் ஃ இந்த மூன்று புள்ளிகளுக்கு இடையே தமிழின் ஆயுத எழுத்தான ஃ வடிவில் விரிவடையும் இந்தப் புள்ளிகளையும் 6 மையங்களையும் ஒன்று சேர்த்தால் வேல் வடிவில் உருவம் தோன்றும், யோகத்தில் இந்த உயர்ந்த நிலை அடையும்போது அவரது உடம்பு சூரியனைப் போல பிரகாசிக்கும் அனைத்து வித சித்திகளும் கைகூடும்

 

துரியம் (Crown or உச்சிமண்டை )

மனித உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன. இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாகவும் சுழுமுனை முருகனாகவும் உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள். மனித உடம்பு இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர இணையும்போது அங்கே ஏழாவது சக்கரமான துரியம் (சகஸ்ரநாமத்தில்) நிலைக்குச் செல்லும்.அப்போது ஓரு மனிதன் இறை தன்மை எனும் தெய்விக நிலையை அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது மருத்துவர்கள் பயன்படுத்தும் முதுகு தண்டில் இரண்டு பாம்புகள் பின்படுவது போல் உள்ள அடையாள குறிகளும் முருக தத்துவமே.

 

ஆறுமுகம்(நதி)

ஆறுமுகம் என்பது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் ஆறு சக்கரங்களை குறிப்பதாக கூறலாம். எண்ணிக்கை அடிப்படையில் ஆறு என்றும் மற்றும் ஓடும் நதிகளை ஆறு என்று கூறுவோம். இவை அனைத்தும் முருகனுக்கு உவமையாக இருக்கலாம். மலைகளிலே மழையாய் பொழிந்து, சுனையாய் ஒன்றிணைந்து, அருவியாய் கொட்டி, நதியாய் பெருகி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்த்து, பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாகி. பெருங்கடலில் கலக்கும் ஆறு போல முருகனும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவ சக்திக்கு மைந்தனாக அவதரித்து குறிஞ்சி நிலத்தில் தவழ்ந்து ஆறுமுகமாக ஒன்றிணைந்து சூரனை அழிக்க வீறு கொண்டு எழுந்து வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருளை வாரி வாரி கொடுத்து பிறப்பு இளமை முதுமை நோய் இறப்பு என்கின்ற கர்ம வினை கொண்டு அவதியுறும் பக்தர்களை குருவாய் அமர்ந்து ஞானம் கொடுத்து பரமாத்மா எனும் பெருங்கடலில் சங்கமிக்க ஞான வழிகாட்டியாக இருக்கிறார்.

 

ஆற்றுப்படுத்தல்

ஆறு என்ற சொல்லுக்கு ஆறுதல், ஆற்றுப்படுத்தல் என்ற பொருளும் உண்டு.  சூடான தேநீர் சற்று ஆறிய பின் குடிக்க இதமாக இருக்கும். வேகமாக ஒருவர் ஓடிய வந்த பின்பு அவருடைய மூச்சு வேகமெடுக்கும், (இளைப்பு) அப்போது ஓய்வெடுக்கும் நேரம் மூச்சுக்காற்று சீராகும். (இளைப்பாறு). சாப்பிட்டு விட்டீர்களா என கேட்பதற்கு பதிலாக பசியாறியாச்சா (பசியாற்று) எனவும் கேட்பது உண்டு. ஏதோ ஒரு விஷயத்திற்கு நம்முடைய நெஞ்சம் அஞ்சும் போது மனம் பதைக்கும் போது யாமிருக்க பயமேன் என ஒருவர் நம்மை தேற்றும் போது நம் மனம் ஆறுதல் அடையும்.  

 

ஆறுதல் அளிக்கும் ஆறுமுகன்

இங்கே மேற்கண்ட பதத்தில் ஆறு என்பது தணிப்பு/ தணிக்கை எனப் பொருள் கொள்ளலாம். தணிகை என்ற சொல்லும் (திருத்தணிகை தணிகாசலம் தணிகை வேல்) முருகனுக்கே உரியது,

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன்

என்ற திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஆறு என்ற சொல் ஆறுதல் console என்ற பொருளிலே கையாண்டுள்ளார். 

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை

அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை

முருகனை குறித்த பாடலில் கவியரசு கண்ணதாசன் கையாண்டுள்ளார்

அபாயத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கு அபய கரம் நீட்டும் முருகனின் ஆறுதல் அளிக்கும் முகமே ஆறுமுகம் ஆகும்.

 

ஆறு எழுத்து மந்திரம்

சிவனை வழிபடுவோர் நமசிவாய என் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவர் அதுபோல முருக பக்தர்களுக்கு சரவணபவ எனும் ஆறு எழுத்து மந்திரம் ஆகும் சரவணபவன்-நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் சரவணபவ - என்பது ச–செல்வம், ர-கல்வி, வ-முக்தி, ண-பகை வெல்லல், ப-கால ஜெயம், வ–ஆரோக்கியம் குறிக்கும் அல்லது ச(கரம்)-உண்மை, ர(கரம்)-விஷயநீக்கம், அ(வ)(கரம்)-நித்யதிருப்தி, ண(கரம்)-நிர்விடயமம், ப(கரம்)-பாவநீக்கம், வ(கரம்)-ஆன்ம இயற்கை குணம் என விளக்கங்களை அளிக்கின்றனர்

 

காலங்களும் கார்த்திகை நட்சத்திரமும்

வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டமைப்புகளுக்கு கார்த்திகை நட்சத்திரம் என பெயர் வைத்தனர்.கார் என்றால் குளிரைக் குறிக்கும் சொல் தீ என்றால் வெப்பத்தை குறிக்கும் சொல் இவ்விரண்டையும் இணைத்து கார்த்திகை என அழைத்தனர். இந்த கால மாறுபாட்டை கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணித்தனர்.

 

ஆறு சிறுபொழுது

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஒரு நாள் எடுக்கும் இதனை ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இந்தப் பகுப்பைப் சிறுபொழுது என்பர் 1.வைகறை( 2 am to 6 am)  2.விடியல்(6 am to 10 am). 3.நண்பகல்(10 am to 2 pm), 4.எற்பாடு(2 pm to 6pm), 5.மாலை (6 pm to 10 pm), 6.யாமம்(10 pm to 2am) ஆகும்.

 

ஆறு பெரும்பொழுது 

சூரியனை பூமி சுற்றிவர ஒரு வருட காலமாகும் இதனையும் தமிழர்கள் ஆறு காலங்களாக பிரித்தனர் இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி), கார்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக் காலம் (மார்கழி, தை), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி) ஆறுமுகனை வழிபடும் தமிழர் காலத்தையும் நேரத்தையும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டு கணக்கிட்டுஆறு பிரிவுகளாகவே பிரித்தனர் இதன் மூலம் காலநிலை அறிந்து அதற்கு ஏற்ப வேளாண்மை செய்தனர்.


 

சூரசம்காரம்

முருகனை குறிஞ்சி நிலத்தலைவன் என்பது மட்டும் உண்மையானால் சூரசம்ஹார போர் மனிதர்களுக்கும் மனிதர் அல்லாத விலங்குகளுக்கும் நடந்திருக்கும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனை மற்றும் சூரனை தோளில் சுமந்து போரிட்டு காட்சிப்படுத்தினர் எனவே சக்கரம் மற்றும் ரதம் கண்டறியாத காலமாக இருக்கும் தோராயமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலமாக இருக்கும். சூரசம்கார விழாவில் சுரன் யானை முக வடிவிலும் சிங்க முக வடிவிலும் அசுரமுக வடிவிலும் முருகனோடு போர் புரிகின்றான். சூரனின் தங்கை அஜமுகி (ஆடு முகம்) என்றும் போருக்கான முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பெரிய கோள்களில் காணப்படும் யாழி முக்கிய வகையாக மூன்று வகையாக பிரிக்கலாம் ஆட்டுத்தலை கொண்ட மகர யாளி, யானை தலை கொண்ட கஜ யாளி, சிங்க தலை கொண்ட சிம்ம யாளி. யானை குதிரை சிங்கம் புலி மயில் குரங்கு ஆகிய விலங்குகளை தெய்வ வாகனமாகவும் வணங்கும் இந்து சமயம் யாளியை வணங்குவதில்லை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்துள்ளது. அரண்மனைகளில் மன்னர் வேட்டையாடிய பொருளை காட்சி பொருளாக வைப்பது வீரத்தை வெளிக்காட்டும் தமிழ் மரபு அதுபோலத்தான் முருகனின் வீரத்தையும் வெளிகாட்ட யாளியை காட்சிப்படுத்திருக்கக்கூடும் ஆனால் பூஜை செய்வது இல்லை.

 

வேலுண்டு வினையில்லை!

மலைகளிலும் காடுகளிலும் வாழ்வோர்கள் கையில் உயர்ந்த கம்பு/தடி எப்போதும் வைத்திருப்பார்கள் விஷச் செடிகள் பூச்சிகள் விலங்குகள் இவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும் மேலும் மலையற்றத்தின் போது கீழே விழாமல் இருக்க கையில் கம்பு இருப்பது மிக அவசியம் இன்றும் பெரிய மலைகளில் ஏறுபவர்கள் கையில் குச்சியில் பிடித்துக் கொண்டு ஏறுவது நடைமுறையில் உள்ளது. மலைகளில் வாழ்ந்த முருகன் கையில் வேல் வைத்திருப்பது இயல்புதான். சூரன் படை மிருக கூட்டம் எனில் போர் என்பது எதிர்பாராமல் நடக்கும் தாக்குதலாகதான் இருக்கும் எனவே கூர்மையான வேல் எப்போதும் கையில் இருப்பது தன்னையும் தன் குடிமக்களையும் காப்பதற்காகவே.

 

மயிலுண்டு பயமில்லை

மயில் தொலைதூரம் பறக்கின்ற பறவை கிடையாது சிறிய தூரம் மட்டுமே பறக்கும் யானை குதிரை ஒட்டகம் போன்ற விலங்கு போல் மனிதனை சுமந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் கிடையாது. அதேசமயம் முருகன் மயில்லோடு தான் இருக்கிறான் காரணம் என்னவெனில் மயில் முருகனைப் போன்றே அழகான ஆண் இனம் மேலும் மழை வருவதை முன்னரே உணர்த்தும் அறிவு படைத்தது. கொடிய விலங்குகள் தாக்குதலை முன்னரே உணர்ந்து பிற உயிரினங்களுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும் மேலும் தன் இருப்பை எப்பொழுதும் தன் குரலால் ஒலித்துக் கொண்டே இருக்கும் (ஆகவும்). சூரன் ஒரு விலங்கினமாக இருந்தால் போர் என்பது எதிர்பாராத தாக்குதல் அச்சமயத்தில் அபாய ஒலியை எழுப்பவும் முருகன் இருக்கும் இடத்திற்கு அறிந்து கொள்ளவும் செய்தி அனுப்ப முருகனின் மயில் உதவி செய்திருக்கும். மயில் மற்ற எல்லா வளர்ப்பு பிராணிகள் போல் இல்லாமல் வித்தியாசமானது பழகிய மனிதரை தவிர வேறு யாரிடத்திலும் நெருங்கி பழகாது குறிப்பிட்டு நபர்களிடம் மட்டுமே நெருங்கி பழகும். சேவலுக்கும் ஏறக்குறைய இதே குணாதிசயம் உண்டு.

 

கந்தன்உண்டு கவலை இல்லை

மறைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் ஈட்டு வீரனை அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு முருகன் நினைவாக எழுப்பப்பட்ட தூண் கந்து என்று அழைக்கப்படும். முருகன் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல சித்தர்கள் வணங்கும் சித்தராக தலைசிறந்த ஞானியாக இருந்தார் பிறப்பு இளமை முதுமை கர்மவினை நோய் இறப்பு என்னும் இயற்கை விதிகளை அறிந்து அதனை மாற்றும் வல்லமையும் பெற்று இருப்பார். முருக அடியார்களான அகத்தியர், ஔவையார், போகர் புலிப்பாணி அருணகிரிநாதர் வள்ளலார் இவர்களுக்கும் இயற்கை விதியை மாற்றியமைக்கும் வல்லமையோடு இருக்கிறார்!. பேசாத குழந்தையான குமரகுருபரரை பாட வைத்தது முருகன் அருளே! பாம்பன் சுவாமிகள் முறிந்த எலும்பை சரி செய்ததும் கந்தனின் கருணையே! ஈரோடு மாவட்டதில், புகழ் பெற்ற சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கடந்த, 14/02/1984, 1,320 படிகள் வழியாக, இரண்டு எருதுகள் பூட்டிய மாட்டு வண்டி, மலை ஏறிய அதிசயம் நடந்தது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என திருவள்ளுவரின் வாக்கின்படி முருகன் போர் வீரனாக, தலைவனாக மட்டுமல்ல கருணையே வடிவான இறைவனாக மாறியவன். அபாயத்தில் அஞ்சி இருப்பவருக்கு அபய கரம் நீட்டும் ஆறுதல் அளிக்கும் முருகனின் திருவருள் என்றென்றும் தொடரும்

 

கதம்பம்
எதையோ தேடி

கனவெல்லாம் காதற்ற ஊசி

ஒன்றை தேடித்தேடியே

இரவு கழிகிறது...

விழித்த பின்னும்

இனிக்காத கரும்பை

இனிக்கும் என்று நினைத்தே..

சுமந்து திரிந்தே பகலும் கழிகிறது..

எதையோ தேடி எதையோ சுமந்து..

இது என்னமாதிரி வாழ்க்கை?

கதம்பம்
நகைப்புக்குறிய விசயம் எது?..

விக்கிரமாதித்தன் தோளில் கிடந்த வேதாளம்

எள்ளி நகையாடியது...
மதி நுட்பம் நிறைந்த மன்னா! என அழைத்து

ஒரு கதையை கூறி முடித்து..
ஒரு கேள்வி கேட்டது மன்னா!

இந்த உலகத்தில் மிகவும் நகைப்புக்குறிய விசயம் எது?..

இதற்கு சரியான பதில் தெரிந்தும் நீ மௌனம் சாதித்தால்

உன் தலை சுக்கு நூறாக தெறித்து விடும் என்று எச்சரித்தது..

விக்கிரமாதித்தன் பதில்:  இந்த உலகில், வயதானவர், நடுத்தர வாயதுடையோர், இளைஞர், பாலகன், குழந்தை, பிறந்த சிசு என, தினம் தினம் இறப்பதை பார்த்த பின்னரும், தான் மட்டும் இந்த உலகில் காலம், காலமாய் இருக்க போகிறோம் என்பது போல் அகங்காரத்துடன் திரிகிறார்களே, அந்த ஆணவம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கிறான்.

இந்த பதிலை கேட்டதும், மீண்டும் வேதாளம் புளிய மரத்திற்கு தாவியது.

துணுக்குகள்
ஒரு கத சொல்லட்டா...?!

ஒரு கத சொல்ட்டா..?!"

எங்கம்மா, பாட்டி, தொத்தா (சித்தி), நானுனு எல்லோரும், ரெண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்ற எங்கூரு தியேட்டர்ல, ஈவ்னிங் ஷோ பார்த்துட்டு வெளியே வந்தோம்...

அப்போ, நைட்ஷோவுக்கான 'உத்தமப் புத்திரன்' பட போஸ்டர்ல, ராகிணியை ராவா காமிச்சுட்டு, பத்மினியின் கச்சையை முக்கால்வாசி மூடியிருந்த 'இன்றே கடைசி' ன்ற அரையடி 'பிட்டு' போஸ்டரை கை காட்டி, அதை நான் பார்த்தேயாகணும்'னு அடம்புடிச்சப்போ எனக்கு வயசு ஆறு!

இந்தக் கொழந்தயோட ஆசையை நிறைவேத்த, நைட்ஷோவுக்கும் டிக்கெட் எடுத்துட்டு பால்கனியில உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்ருந்தோம்...
கொஞ்ச நேரத்துல, "யாரடீ நீ மோகினீ..." னு பாட்டு ஓடிக்கிட்ருந்தப்போ.., எல்லாரும் ஸ்டைலான சிவாஜியை ரசிச்சுக்கிட்டிருந்தாங்க...

நான் மட்டும், அது டாப் ஆங்கிள்' ஷாட்'னு கூடத் தெரியாம.., கிறுகிறுகிறு'னு சுத்திக்கிட்டிருந்த அந்த ரெண்டு நாயகிகளோட முட்டியாச்சும் தெரிஞ்சிடாதா'னு,‌ முட்டிபோட்டு குனிஞ்சு பார்த்துக்கிட்ருந்தேன்... ஆனா.., கால் கட்டைவிரல் கூடத் தெரியாதபடி தரையைப் பெருக்குற அளவுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாங்க அவங்க! அடுத்தமுறை தரை டிக்கெட் எடுத்துவந்து பார்த்துடணும்'னு முடிவு செய்தேன்.

இந்த நேரத்துல தான்.., திடீர்னு அந்தப் பாட்டுல வர்ற சாட்டையடி மட்டும் எனக்கு பொளீர்... பொளீர்னு DTS ல கேட்குது...

என்னடா விஷயம்னு திரும்பிப் பார்த்தா.., சிவாஜிக்கு பதிலா, என் அப்பா கையில சாட்டையோட பக்கத்துல நின்னுக்கிட்ருக்காரு...

மாலைக்காட்சிக்குப் போனவங்க, இரவு பதினோரு மணியாகியும் வீடு திரும்பாததால.., எங்களைத் தேடிக்கிட்டு தியேட்டர் பால்கனிக்கே வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வந்த என் தகப்பர்.., எல்லாத்துக்கும் காரணமான என்னய விட்டுட்டு, அம்மா, சித்தினு என்னோட உட்கார்ந்திருந்த எல்லா பொம்பளைங்களையும் பொள.. பொள'னு பொளந்துக்கிட்ருக்காரு...

தடுக்கப் பார்த்தப் பாட்டியை, பெத்த ஆத்தானு கூடப் பாக்கலையே.., சும்மா.., வுட்ட அடியில, பாட்டிக்கு கடவாப்பல்லு பேந்துடுச்சி!!

இப்ப கூட, அந்தப் பாட்டு டிவியில ஓடும்போதெல்லாம்... சம்பவத்தை நெனச்சு பயத்தோடவே பகிர்ந்துக்குவாங்க, எங்க அம்மா.

ம்ம்.., முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்.‌‌..,

அன்னிக்கி, அனுமதியின்றி "உத்தமப்புத்திர"னைப் பார்த்ததற்காக உதை வாங்கிய எங்க வீட்டுப் பொம்பளைங்களுக்கு.., ஈவ்னிங் ஷோ பார்க்க மட்டும் முழுச் சுதந்திரம் இருந்தது... ஏனெனில், அப்படத்தின் பெயர்... "அடிமைப்பெண்!"

- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.

விமர்சனங்கள்
குலக்கதை -இணைய நூல் விமர்சனம்

 

நந்தினி சுகுமாரனின் குலக்கதை - இணைய நூல் விமர்சனம் 

 குலக்கதை 

இரண்டு பாகங்களாக இணையத்தில் எழுதப்பட்ட நூல்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  உற்பத்தியாகும், பல ஓடைகளும், சிற்றாறுகளும்,  காட்டாறுகளும் ஒன்று  சேர்ந்து வைகையாய்  உருப் பெற்று , வேகவதியாய் ஓடி, கண்மாயில் கலந்து நிற்கும்.

அதுபோலத் தான்,நந்தினி சுகுமாரனின் எழுத்தும், இந்த கதையும். தமிழ் மண்ணில் வேரூன்றிக் கிடக்கும் , குலதெய்வம், இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் வீட்டுத் தெய்வம் பற்றிய கதை  இந்த குலக்கதை. 

முற்பகுதியில், கதை ,காட்டாற்று வெள்ளமாக மஞ்சளாடைகாரி, சித்திரகலா பூங்கோதை, ஆகியனவாக  பிரவாகித்து, அங்கங்கே சில சம்பவங்கள் கோர்க்கப்பட்டு, பாலாம்பிகை,கிருஷ்ணம்மாள்,ராஜநாயகி, மரிக்கொழுந்து, செந்தில்நாதன், கரிகாலன், சங்கீதா கதாபாத்திரங்கள் வந்தபின், தெளிந்த நீரோடையாக வேகமெடுத்துப் பாய்கிறது.

குலகதையின் தெய்வங்கள் வாசகர் மனதில் குடிகொண்டு விடுகிறது. இனி மஞ்சள் உருண்டையை பார்க்கும்போதும், காமாட்சி விளக்கின் சுடரிலும் இந்த தெய்வங்கள் நம் நினைவில் வந்து போவார்கள்.

நம்மைப் போல் பிறந்த ஆன்மாக்கள், ஊருக்காக,தனது குலத்துக்காகத் தன்னையே பலி கொடுத்து , நோய்,நொடி , அடக்குமுறை ,இயற்கை பேரழிவுகளிலிருந்து  நம்மைக் காத்து மேல்நிலை அடைந்திருக்கும் . அந்த ஆன்மாவை வழிபட ஆரம்பித்து இருப்பர். சில தலைமுறை தாண்டும் போது, மனிதருள் ஏற்படும் குண இயல்பு மாறுபாடுகள், வழிபாட்டிலும் பிரதிபலித்து இருக்கும்.இவை  நன்மை தீமை இரண்டையும் கூட்டித் தரும். 

குழந்தையும்,தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பர். இங்குத் தெய்வமே குழந்தைதான்.கன்னிகை,கன்னியம்மாள் என்ற மஞ்சளாடைக்காரி.  அவளைத் தெய்வமாய் அடைந்து, அதன் அருமை தெரியாமல் தொலைத்து, கஷ்டங்களை அனுபவித்து, எத்தை தின்றால் பித்தம்தெளியும் என விடை அறியாது  நிற்கும் குலம், ஆற்றில் நீரோடு கரைந்த மஞ்சளாடைக்காரியை, அணைத்து , அரவணைத்து வழிபடும் மற்றொரு குலம். தாத்தாவாக எல்லை சாமியை உருவகப்படுத்தி, அவரை பெட்டியிலிருந்து கோவிலில் நிறுவும் குலம். 

இப்படியான மூன்று குலங்களின் தெய்வங்களையும், மனிதரையும் நிகழ்வுகளையும் ,முற்பிறப்பு, இப்பிறப்பு என அழகாக வடிவமைத்து, இதற்கு இது காரணமென அழகான பூமாலையாக, அதிரல் ,மருதம், கோர்த்துக் கொடுக்கப்பட்ட அருமையான புனைவு.

பலநூற்றாண்டுகள் கடந்து எப்படி மீண்டும் ஒன்றுகூடி வழிபடுகின்றனர், என்பதை சொல்லும் கதை.

மனித இயல்புகளை, படாடோபம் இல்லாமல், இயல்பாக எழுத்தாக்க இந்த ஆசிரியரால் மட்டுமே முடியும். நக்கல்,நய்யாண்டியோடு இயல்பான நடை.

சித்திரகலா, பூங்கோதை என முற்பிறப்பு கதை வருமிடங்களில் நற்றிணை, குறுந்தொகை என சங்க கால பாடல்கள் கதைக்கு பொருத்தமாய் அமைந்து, ஆசிரியரின் விளக்கங்களோடு கதைக்கு மெருகூட்டுகிறது.

முதல் பாகத்தையும்,இரண்டாம் பாகத்தையும் அழகாக வடிவமைத்து, சம்பவங்களில் இடைவெளி விட்டு, எதிர்பார்ப்பை தூண்டி, மீண்டும் சரியாக நிரப்பி, ஆரம்பம்,முடிவு  கதையை முடித்த விதமும் அருமை.

அகமும்,புறமும் , பக்தியும்,காதலும் முற்பிறப்பு,இப்பிறப்பும் சேர்ந்த அருமையான புனைவு. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கதை. 

இப்படி ஒரு கதை எழுதப்படும்போது ,அதில் உள்ள சவால்கள் எத்தனை , எல்லாம் சரியாக கொடுக்கவேண்டும் என்ற தவிப்பு எப்படியிருக்கும், என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. கதையை நிறைவாய் முடித்தமைக்கும் வாழ்த்துக்கள் நந்தினி சுகுமாரன்.

உங்கள் எழுத்து பயணத்தில் மற்றொமொரு மகுடம் சூடும் படைப்பு இந்த குலக்கதை. மேலும் நல்ல பல கதைகள்  படைக்க வாழ்த்துக்கள்.

இருவாச்சி தளத்தில், இணையத்தில் வரும் நல்ல கதைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பகுதியை வைத்துளோம். அதில் முதல்  விமர்சனமாக குலக்கதை அமைந்ததில் மகிழ்ச்சி.

தீபா செண்பகம் 

கதம்பம்
பாட்டும் நானே... 'பாவமும்' நானே

பாட்டும் நானே... 'பாவமும்' நானே...!!"

சினிமாப் பாடல் வரிகளை சரியா கவனிக்காம, தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டு பாடித்திரிந்த அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். உண்மையான வரியை உணர்ந்த பின்பு, அப்பாடல் மீதான நம் பார்வையே மாறிப்போய்,‌ ஒவ்வொரு முறையும் அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம் நினைவலைகள் பின்னோக்கிச் செல்லும் தானே?!

அப்படியொரு சுவையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு..!

 'ஒரு பாதி கனவு நீயடா... மறு பாதி கனவு நானடா..' என்று ஒரு மொக்க(?!) சாங் வரும். ட்ராவல்ல அந்தப் பாட்டு வர்றப்போலாம் ஸ்கிப் பண்ணிடுவேன்.

ரொம்ப நாளைக்கப்புறம் பஸ்ல போறப்போ அந்தப் பாட்டைப் போட்டான் என் ஆஸ்தான டிரைவன்!

முதல் சீட்லயே உட்கார்ந்திருந்த நானு, 'Fwd' பட்டனை அழுத்தணும்ங்குற முடிவோட, என் செருப்பை மாட்டிக்கிட்டு எந்திரிக்கும் போது... பக்கத்துல(?!) உக்கார்ந்திருந்த சுடிதார், அந்தப் பாட்டை ரசிக்கும் தொணியில் 'ஹம்' பண்ண ஆரம்பிச்சா. நமக்குத்தான் வயசுப்புள்ளைங்களப் பார்த்தாலே இரக்க குணம் பீறிட்டு வந்திடுமே... 

பாட்ட மாத்த எழுந்த நானு... அவ ரசிக்குறதைப் பார்த்ததும், 'வால்யூமை உயர்த்தி'.. "அருமையான பாட்டுப்பா.." ன்னுட்டு  அவ பக்கத்துல இன்னும் ரெண்டு இஞ்ச் நெருக்கமா உட்கார்ந்ததை,‌ கண்ணாடி வழியா கவனிச்சுக் கண்ணடிச்ச டிரைவரின் பின்மண்டையில தட்டி, "மச்சீ... பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கிடாதேடா.., முன்னாடிப் பார்த்து கவனமா ஓட்டு" என ஓவராக்டிங்கை அடக்கிவிட்டு அமர்ந்தேன்.

அப்புறமென்ன..., அவ பாட.. நான் வாயசைக்க... அவ தலையசைக்க நான் பாட.... நல்லபடியா போய்க்கிட்டிருந்த இந்த எடத்துல தான் ஒரு ட்விஸ்ட்டு...

எனக்கும் வரிகள் தெரியும்'னு நம்மாளுக்கு காமிக்க நினைச்சு,  எட்டுக்கட்டையில கஜலைப் புடிச்சு, ஹை பிட்ச்ல குரலை உயர்த்தி, "ஒரு பாதி கனவு நானடா.." ன்னு  பாடினேன்(?!).

உடனே, பட்சி புருவத்தை உயர்த்தி மொறைச்சதும் கப்புனு நிப்பாட்டிட்டு... அடுத்த வரியைக் கேட்டேன்.... அது, "..மறு பாதி 'கதவு' நீயடா..." ன்னுச்சு...

அதுக்கப்புறமும் வாயத் தொறந்திருப்பேன்னு நினைக்குறீங்க..?! ம்ஹூம்...

இப்ப என் டிரைவர் மாப்ள ஸ்டெயரிங்குலேர்ந்து ரெண்டு கையையும் எடுத்து காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டே.., "ஒரு பாதி கதவு நீயடி.., மறு பாதி கதவு நானடி..." ன்னு சத்தமா பாடினான் பாருங்க...,

எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு கொமாரூ.... 

அப்படியே.... எழுந்துப்போயி, கடைசி படிக்கட்டுக்கும் அப்பால இருக்குற ஆறு பேரு சீட்ல குப்புறப் படுத்து குலுங்கி குலுங்கி அழுதேன்...  

இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்.., நீங்கள் உச்சரிக்க வேண்டிய சொல் "கனவு" அல்ல... "கதவு!!"

என் ஃபேவரிட் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பிடிக்கும் அருமையான சிலேடை வரிகளை எனக்கு உணர்த்திய அந்தச் சுடிதாருக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாத ஏக்கம்  இன்னமுமிருக்கு... 
 

கதம்பம்
அப்பவே எழுத்தாளராக வேண்டியது

9th படிக்கும் போதே ராணி முத்து புத்தகத்தில் கதை எழுதியுள்ளேன்...

அந்த கால கட்டத்தில் ராணிமுத்து நல்ல பேமஸ்.. அதில் கதை போட்டி அறிவித்து 200 ரூபாய் பரிசு என்று இருந்தது.
உடனே நானும் அவனும் (அவனும் நம்ம சொந்தக்காரன்தான்)
களத்தில் குதித்தோம், பரிசு 200 ரூபாயில் ஆளுக்கு நூறு ரூபாய் பங்கு..
ரமணி சித்தியிடம் நிறைய ராணி முத்து புத்தகம் இருந்தது அதில் பழைய புத்தகம் ஒன்றை ஆட்டையை போட்டு வந்து..
ஒரு வரி விடாமல் எழுதினோம், மூன்று நாட்கள் இருவரும் சேர்ந்து எழுதி, A4 பேப்பரில்15 பேப்பர்கள்!!.. ஒரு வழியாக எழுதி ராணிமுத்து பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டோம்.

பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தது..
அதில் ஆசிரியர் பதில்.. "தூ "என்ற ஒரே எழுத்துதான்

அவன் எங்களை அப்படி துப்பியதற்கு முக்கிய காரணம் நாங்கள் இடை, இடையே வரும் விளம்பரங்களையும் விட வில்லை அதையும் எழுதி விட்டோம்..
அதிலதான் அவன் ரொம்ப கடுப்பாகி விட்டான்..
'உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது லைபாய் மட்டுமே'

'உங்கள் பற்கள் முத்து போல் பிரகாசிக்க கோபால் பல் பொடி'
போன்ற விளம்பரங்கள்..

எப்படியோ எங்கள் கதை எழுதும் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டான் அந்த படுபாவி.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!