இருவாச்சி, மல்லிகையின் ஒரு வகை , மணம் பரப்பி, நுகர்வோர் மனதை மயக்கும். அது போல் இருவாச்சி இணையதளம், இயலால் செம்மொழியாம், எம் தாய் மொழி தமிழைச் சுவாசிப்போர்க்கு இனிமை கூட்டத் தொடங்கப்பட்ட தளம். தமிழின் செழுமை, வளமை, அழகியலை நுகர்ந்து, ரசிக்கலாம், நீங்களும் இனிய தமிழ் படைக்கலாம். மனதின் எண்ணங்களுக்குக் கதை, கவிதை, கட்டுரை வடிவம் தந்து அளவளாவி மகிழலாம்.
2024 ஆம் ஆண்டு ,ஏப்ரல் 14, சித்திரை முதல் நாளில் குரோதி வருடத்தில் , மணம் பரப்ப வந்துள்ளது இருவாச்சி இணையதளம்.
எங்கள் எண்ணங்களை வண்ணமாக்கி இங்குத் தருகிறோம். வாசித்து விமர்சியுங்கள். விருப்பமிடுங்கள், கருத்துக்களைப் பகிருங்கள்.
நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் முதல், கன்னித் தமிழ் பழகுவோர் வரை, அனைவருக்குமான தளம்.
கதை, கவிதை, கட்டுரை, ஆயக் கலைகள், என நம் தாய்மொழிக்கு, ஏதோ ஒரு பங்களிப்பு , உங்களால் இயன்றதை நல்கி, எங்களோடு இயல் தமிழில் கை கோர்க்க வாருங்கள்.
நட்புடன் அழைப்பு விடுக்கும்
தீபங்களையே, நாமங்களாகக் கொண்ட
தீபாஸ் மற்றும் தீபா செண்பகம்