தொடர் : 17
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
அடர் வண்ண ரோஜாப்பூக்களை அள்ளி தெளித்தார் போல் நெய்யப்பட்ட ஜெக்கார்ட் ப்ளவுஸ், அதுவும் முன் பகுதி போட் நெக், பின்பகுதி டீப் நெக் இறங்கி, முத்துப் பாசிகளால் பின்னங் கயிறு கட்டப் பட்டிருந்தது. அவள் மேனியை அழகாகக் காட்டிய ப்ரின்ஸஸ் கட் ப்ளவுஸ், அதிலிருந்து இடையை மறைத்த பிங்க் வண்ணப்ரில்கள், செமி ஸ்லீவ் அதில் அந்த ஜார்ஜெட் ruffle சாரி டிசைனர் வேர் எத்தினிக் லுக். ராணியாக மிளிர்ந்தாள் ஜானகி தேவி.
அமுதன் ராம் இருவரும் ஜானகியை அழைத்துச் செல்ல அவள் அறைக்கு வந்தனர். அதே நேரம் அவளும் வெளியே வர, "ஹலோ,எஸ்க்யூஸ் மீ, இங்க என் ப்ரண்ட் ஜானகி இருந்தாங்க, நீங்க யாரு, அவள் ரூமில் இருந்து வரீங்க?" எனச் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ராம்.
"ஆமாம் ,எங்கடா நம்ம ஜானகி?" என அமுதன் கேட்டான். "ஆமாம்பா,நானும் அவளைத் தேடித்தான் வந்தேன், அவளைக் காணோம்." என்றாள் ஜானகி. 'அம்பேல்' கையைத் தூக்கினர் இருவரும். "யாருகிட்ட என் கிட்டயேவா!" என்றாள் ஜானகி. மூவரும் லாபியில் நடந்து லிப்டில் புகுந்தனர். பார்ட்டி ஹாலில் வந்து இறங்கினர்.
முதலில் ராம் வெளியே வந்து கையை முன்னால் நீட்டி பில்டப் கொடுக்க ஜானகி வந்தாள், பின்னாடியே அமுதன் பாடிகார்ட் போல் வந்தான்.
அங்கிருந்தவர்கள் இவர்களைப் பார்க்க,"டேய், ஓவர் பில்டப் குடுக்காதீங்கடா!" என அவள் புன்னகை மாறாமல் சொன்னாள்.
"நீங்க இரண்டு பேரும் முன்னாடி போங்க!" என்றாள். "நீ போ நாங்க பின்னாடி வருகிறோம்." எனச் சொல்லி நின்றனர் நண்பர்கள். அங்கே வந்த பிஸ்னஸ் ஃப்ரண்டை,ராம் அமுதனுக்கு அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருந்தனர். "நீ போ, உள்ளே எல்லாரும் இருக்கிறாங்க." என ஜானகியை சைகை செய்து அனுப்பினான் அமுதன்.
பார்ட்டி ஹாலில், ஜானகியை காணாமல் தேடிய ரகுவீர் அமிர்தாவிடம் கேட்டான். அவள் நிலவரம் சொல்ல, தான் ஏதாவது அரேஞ் செய்து அழைத்து வருவதாகச் சொல்லி வந்தான்.
ஜானகி லிப்டில் வெளிவந்த இடத்திலிருந்து வலது புறம் திரும்பி பத்தடி நடந்தால் பார்ட்டி ஹால். தன் அண்ணனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தவள் தூக்கியிருந்த கார்பெட்டை பார்க்காமல் காலை தூக்கி வைக்க முன்னால் குப்புற அடித்து விழப்போனாள்.
"ஜானூ!" என்ற அலறலுடன் ஜானகிக்கு முன்புறம் ஓடிவந்து, அவள் இடையை தன் இடது கையால் தடுத்து நிறுத்தி, அவளைத் தன் தோளில் சாய்த்து, வலது கையால் முதுகை வருடிக் கொடுத்தான் ரகுவீர். அவள் இதயம் துடிப்பதும் உடல் அதிர்வதும் அறிந்தான். பிறகு கை வளைவில் அவளை வைத்து, ஒற்றை விரலால் அவள், முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தி, "ஜானூ" என ஏதோ சொல்ல வந்தான். அவள் முகத்தின் பாவனையில் மயங்கி, கண்களோடு உறவாடி முகம் மறைத்த கூந்தலை ஒதுக்கிசொல்ல வந்ததை மறந்து அவளையே பார்த்திருந்தான் ரகுவீர்.ஜானகி, தான் விழப்போகும் அதிர்ச்சியிலிருந்தவள், ரகுவீரின் பாதுகாப்பான கரத்தில் ஆசுவாசம் அடைந்தாள். அதற்குள் அவன் அணைப்பும், முதுகை வருடியதும், இதயத்தை எம்பிக் குதிக்க வைத்தன. அவள் நாணத்தால் சிவந்து தலை குனிந்திருக்க, ரகுவீர் அவள் முகம் நிமிர்த்திப் பார்த்ததில், அவன் கண்களில் தன்னைத் தொலைத்தாள் ஜானகி.
இவர்களின் இந்த நயன பாஷையும், மோன நிலையும் எவ்வளவு நேரம் நீடித்ததோ, ஆனால் பொக்கிசமாக அவர்கள் மனதில் நிறைந்தது. வாய் திறந்து பேசும் வார்த்தைகள் மட்டும் இன்றி மனதின் வார்த்தைகளும் ஊமையாகின.
ராம், அமுதன் பேசும் குரல்கள், அவர்களை நினைவுக்குக்கொண்டு வர அப்போதும் கை பிடியில் அவளை வைத்திருந்தான். "ஜானும்மா,என்னடா ஆச்சு?" என்றபடி ஓடிவந்தான் அமுதன்.
ரகுவீர், கார்பெட்டை காட்டியபடி, "இந்நேரம் குப்புற அடித்து விழுந்திருப்பாள்." எனக் கூறினான்.
"என்னடா, இப்ப தான் அடிபட்டிருக்கு, கவனம் வேண்டாமா!" என்றான் அமுதன். ரகுவீரை முறைத்தாள் ஜானகி. "ஏய் மிர்ச்சி! என்னைய எதுக்கு முறைக்கிற? அடிபடாமல் காப்பாற்றினதுக்கா?" என்றான் ரகுவீர்.
"நம்ம ஜானகிக்கு, நிக் நேமா? அதுவும் மிர்ச்சி? சார் உங்க தைரியத்துக்குச் சலாம்." எனச் சல்யூட் அடித்தான் ராம்.
"ரகுவீர் இது என்னுடைய ப்ரண்ட், ஸ்ரீ ராம்ராஜன், எங்க ஊரில் சௌந்தர்ராஜா மில்ஸ் இவர்களுடையது, அண்ட அமிர்தாவின் கசின் ப்ரதர்." என அறிமுகம் செய்தவன்.
"ராம், இவர் ரகுவீர் சிங் ராத்தோட், ராத்தோட் க்ரூப்ஸ், ஸ்வர்ணி மில்ஸ் MD. ஜானகியின் பாஸ். ஜானகி ப்ரண்ட் மயூரியின் பையா." என அறிமுகப் படுத்தினான். "வெரி க்ளாட் டூ மீட் யூ!" என இருவரும் கை குலுக்கினர்.
பின்னர் ஜானகியைப் பார்த்து, "விழாமல் நடப்பியா? இல்லை தூக்கிட்டு போகனுமா?" என்றான் ரகுவீர். அவள் ஓர் முறைப்புடன் உள்ளே செல்ல, ரகுவீர் உடன் சென்றான். அமுதனும், ராமும் பின் தொடர்ந்தனர்.
"ஆர் யூ கம்ஃபர்டபில் வித் யுவர் ட்ரஸ். காயம் வலிக்கிறதா?" எனக் கேட்டான் அக்கறையாக. "டிக் ஹூம். நீங்க ஒன்னும் பேச வேண்டாம், மிர்ச்சியாம் மிர்ச்சி!" என்றாள் ஜானகி.
"கோபத்தில் சிவந்து லால் மிர்ச்சி மாதிரி இருக்கிறது முகம்." என்றான் ரகுவீர் கண்களில் கேலியுடன், "பக்கத்தில் வராதீங்க, கண்ணில் பட்டால் எரியும்." என்றாள் ஜானகி.
"ஹலோ, நான், இராஜஸ்தானி இராஜ்புதான் ஷேர். மிர்ச்சி எல்லாம் மேட்டரே இல்லை." என்றான் ரகுவீர் "ஹலோ நாங்களும்,புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீர தமிழச்சி பரம்பரை." என்றாள் ஜானகி.
பின்னால் வந்த அமுதன், ராம் இருவரும் இவர்கள் சண்டையைப் பார்த்து, "என்னடா டாம் & ஜெர்ரி மாதிரி!" என்றான் ராம்.
"நாலு வார்த்தைக்கு மேலே பேசாத எங்க பையா வையே பேச வச்சுட்டா ஜானகின்னு, இவர் தங்கை மயூரி சொன்னாள்." என்றான் அமுதன்.
"ஆமாம் பிஸ்னஸ் சர்கில்ல கேள்வி பட்டேன், mr.ராத்தோட் பயங்கர அடமெண்ட்னு." என்றான் ராம்.
பார்ட்டி ஹாலுக்கு ரகுவீருடன் வந்த ஜானகியை, கூடி இருந்தவர்கள் கொஞ்சம் அதிசயித்தே பார்த்தனர். அவர்கள் இருவரும் வார்த்தை போர் புரிந்தாலும், ஒருவர் மேல் மற்றவருக்கு இருந்த அன்பு அவர்களுக்குப் புரியவில்லை எனினும் பார்வையாளர்கள் புரிந்து கொண்டனர்.
மயூரியும் அமிர்தாவும் ஜானகியிடம் வந்தனர். "ஜானி சூப்பர் டி, எப்படி அதுக்குள்ள ட்ரெஸ் கிடைத்தது." என அம்ரூ கேட்டாள். "உன் அண்ணன் ஸ்பான்ஸர்ட்டு!" எனச் சொன்னாள் ஜானகி.
"பையா, சொன்னதுக்குள்ள எப்படி?" என ரகுவீரைக் கேட்டாள். "அடியே,உன் ராக்கி ரிஸ்தா பையா இல்லடி, உன் ஒன்னு விட்ட உடன்பிறப்பு." எனவும், அம்ரூ முழித்தாள் .
அதற்குள் அங்கு வந்த ஸ்ரீ ராம், "சகோதரி, நான் தமிழ்நாட்டில், திண்டுக்கல் பக்கத்திலிருந்து வருகிறேன். என் பெயர் ஸ்ரீ ராம். உங்கள் சித்தப்பா மகன். அண்ணன் முறையாகுது, ஞாபகம் இருக்குங்களா?" எனப் படுபவ்யமாகக் கேட்டான் .
"அப்படிக் கேளுடா மச்சான், ரொம்ப ஓவரா போகுது, சென்னை பெங்களூரூ இப்ப மும்பை, நம்ம ஊருகாரங்களையெல்லாம் எங்க கண்ணு தெரியுது, என்னையவே யாருன்னு கேட்கிறாள்." எனப் பாலன் சந்தடி சாக்கில் குறை பாடினான்.
"டேய் மச்சான் என் தங்கச்சியை நான் சொல்லுவேன், ஆனால் நீ சொல்லக்கூடாது. திருப்பாச்சி மாதிரி வந்திருவேன் இந்த அண்ணன்." என்றான் ராம்.
"அண்ணா, ஜானகி சமாதானம் ஆகிட்டாளா?" என ரகசியமாகக் கேட்டாள். அவள் காதை பிடித்துத் திருகிய ஜானகி, "ஏண்டி எல்லாம் கூட்டு களவாணியா?" என்றாள். "ஐய்யோ விடுடி, விடுடி வலிக்குது." என்றாள் அம்ரூ.
"ஏய்! மிர்ச்சி சோடோ மேரி பஹன் கோ." என்றான் ரகுவீர். என்ன விசயம் எனக் கேட்டான். ஸ்வாரஸ்யமாக ஒரு கூட்டம் கூடியது ஜானகி கதை கேட்க.
அமுதனைத் தேடிய மயூரிக்கு, ஜானகியின் பின்னால் வந்தவன் கண்ணில் பட்டான். அவளைப் பார்த்த அமுதன், "வீட்டில் ஒன்றும் பிரச்சினை இல்லையே?"எனக் கேட்டான்.
"குச் நஹி!" எனத் தலை ஆட்டியவள், "தேங்க்ஸ்!" என்றாள். "என்னைப் புரிந்து எங்க பேமலிக்கு ஸ்பேஸ் கொடுத்ததுக்கு." என்றாள் மயூரி.
"அது உன் ஃபேமலி மட்டும் தானா?" என்றான் அமுதன் அவள் கண்களைப் பார்த்து. "சாரி நான் அந்த மீனிங்ல சொல்லை." என்றாள். அதற்குள் ஜானகி புராணம் ஆரம்பிக்க அமுதன் சிரித்தான்.
"அண்ணா சொல்லாத, மர்டர் தான்." என ரகுவீரை பார்த்தபடி ஜானகி அமுதனிடம் சொன்னாள். "ஏய்! அமுதா சொல்லு தி இஸ் சம்திங் ப்ளஸ்சி." என்றான் ரகுவீர். அதற்குள் மற்ற குடும்பத்தினரும் அங்கு வந்து சேர, ராமுடன் அறிமுகம் ஆனார்கள்.
ஜானகியின் பார்வையை, அமுதன் சந்தித்துக் கண்ணால் சேதி சொன்னான். பின்னர், "ஸ்ரீராம்,இப்ப தான் நீயுமராலஜி படி கெஜட்டில் பெயர் மாற்றினான். அதற்கு முன் ஸ்ரீ ராமச்சந்திரன் அவன் பெயர், நாங்க எல்லாரும் ஒன்னா தான், எங்க அம்மா ஸ்கூல்ல படிச்சோம் . அப்ப ஜானகிக்கும் இவனுக்கும் செம சண்டை வரும். கண்டாலே பிடிக்காத எனிமிஸ்."
"இவன் என் வயசு, அவளை விட இரண்டு வயசு பெரியவன்." என்றான் அமுதன்
"நீதான் மெச்சிக்க, நான் வயதில் பெரியவன்னு, ஜானகிக்கு அதெல்லாம் மேட்டரே கிடையாது." என்றான் ராம்.
"Mr.ராம் ஐ வில் அக்ரீ வித்யூ100%, யாரா இருந்தாலும் ஜானகி சண்டை போடுவாள்." என ரகுவீர் சொல்ல,ஜானகி ஒரு லுக் விட, இரண்டு பேரும் நமட்டு சிரிப்புடன் கப்சிப்.
"அப்ப ஒரு பையன், இவளை கலாய்ப்பதாக நினைத்து, ஜானகி, ராமச்சந்திரனுடன் என்ன சண்டை? என்றான். அதைக் கேட்ட மற்றொருவன், முன்னால் முதல்வர்கள் ஜானகி- ராமச்சந்திரன், ஜானகிராமசந்திரன். எனக் கேலி செய்தான்.அதற்குப் பிறகு இவளைப் பார்க்கும் போது எல்லாம், இதே பெயரில் கூப்பிட, இவளுக்கு ராமின் பெயரில் கோபம் அதிகமானது." என்றான் அமுதன்.
"இவன் மட்டுமில்லை,இவனோட ப்ரண்ட்சிப் வச்சவங்களும் எனக்கு எனிமி தான்" என்றாள் ஜானகி.
"இவள்,விளையாட்டாகச் சொல்றா என நினைச்சு, நாங்கள் ராமுடன் பேச, இவள் எங்களை அவாய்ட் செய்தாள். கொஞ்சம் நாள் போன பிறகு கவனிச்சு ராம்கிட்ட சொல்ல, அவன் வேறு பள்ளிக்கு மாறினான். பிறகு ஒரே காலேஜ், அவன் டெக்ஸ்டைல், நான் சிவில் அங்க ஜானகியும் இல்லை, நண்பேன்டா என ஒன்னு கூடுனோம். இன்றைக்குத் தான் திரும்ப ஜானகி, ராமைப் பார்த்தாள், இன்னும் என்ன 4ஆங் க்ளாஸ் பிள்ளையா என் தங்கச்சி சமாதானம் ஆகிட்டாள்." என்றான் அமுதன்.
"எப்படிச் சமாதானம் ஆனாள்?" என அம்ரூ கேட்டாள்.
"இந்தச் சேரியைக் கொடுத்து சாரி சொல்லி கரெக்ட் பண்ணிட்டான்." என்றாள் ஜானகி, தொடர்ந்து, "காலத்தாற் செய்த நன்றி, திருக்குறள் திருவள்ளுவர் ஞாபகம். ஓகே பிழைச்சு போன்னு விட்டுட்டேன்." என முடித்தாள் ஜானகி.
"அடிப் பாவி, ஒருத்தனைச் சேர்த்துக் கிண்டல் செஞ்சதுக்கு, ஸ்கூல விட்டே அனுப்பிட்டியா? பாவம் ப்ரோ!" என்றான் ராஜ்.
"ஆமாம் பையா, ஜானகி தீதி மாதிரி டெரர் கூடக் காலம் பூரா தண்டனை அனுபவிக்க, எவன் மாட்ட போறானோ(அவள் முறைக்க) மாட்டப் போறாரோ, பாவம் ப்ரோ." என்றான் ரன்வீர்.
"ஏய் ஓட்டவாய், இரு வீட்டுக்கு வந்து பிறந்த நாள் புது வருஷம் எல்லாம் சேர்த்து உனக்குக் கொண்டாடுகிறேன்.” என்றாள் ஜானகி ரன்வீரிடம்.
"பையா, பசாவ்." என ரகுவீரிடம் சரணடைந்தான் ரன்வீர். அமரேன், பூனம் அங்கு வந்தவர்கள், அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தனர்.
அமர்சிங், ஹரிணி அப்போது ஒரு பளிங்கு சிலை போன்ற பெண்ணைக் கூட்டி வந்து ரகுவீரிடம், "ரகுவி, இவள் சிருஷ்டி மேத்தா, அம்மா வழி சொந்தம், உன்கிட்ட அறிமுகம் செய்து வைக்கச் சொன்னாங்க."
"சிருஷ்டி, இது என் தம்பி ரகுவீர்." என அறிமுகம் செய்தாள் ஹரிணி.
சிருஷ்டி, உயரமாக, கூர் நாசி,அகலக் கண்கள், பளிங்கு தேகம் என ரகுவீர் சொன்ன பளிங்கு சிலை போல் இருந்தாள். ஸ்லிம் பிட், முழங்கால் வரை வெஸ்டர்ன் வேர் என அழகாக இருந்தாள். லண்டன் ரிடர்ன் பார்த்தவுடன் குறை சொல்ல இயலாத அக்மார்க், மேல் தட்டு வர்க்கப் பெண்.
ரகுவீருடன் ஹாய் எனக் கை குலுக்கி, கட்டியணைத்து நலம் விசாரித்தாள். ரகுவீர் அதிர்ந்தாலும், சமாளித்து இயல்பானான். அவர்களைத் தனித்து விட்ட ஹரிணி, பூனத்திடம், "சாசி, இவளுடைய ரிஸ்தா வந்திருக்கு ரகுவீக்கு. மாம், அவங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கச் சொன்னார்கள்." என்றாள்.
இது அந்த பக்கம் வந்த ஜானகியின் காதில் விழுந்தது. தன் நெஞ்சில் பாரம் ஏறியது போல் உணர்ந்தாள் ஆனால் சமாளித்தாள்.
'ரகுவீருக்கு ரிஸ்தா, ஆமாம் என்னைக்கு இருந்தாலும் இந்தக் கட்வாக்குக் கல்யாணம் ஆகும் தானே, இப்பவே லேட் சிரிக்காமல் விட்டு முகமும் முதிர்ந்து இருக்கு, அவனும் கூடப் பளிங்கு சிலை ஏதோ சொன்னானே, ஆங் கடவுள் பளிங்கு சிலை போலச் சிருஷ்டித்து இருப்பார், அப்படித் தான் சொன்னான். அப்ப ஷப்னம் ஆண்ட்டி ஏற்கனவே சொல்லி இருபாங்க இவளைப் பற்றி, என நினைத்தவள் பார்ப்போம் அந்தப் பளிங்கு சிலை எப்படி இருக்கு என்று, சிருஷ்டியைப் பார்த்தாள்.
நல்லா தான் இருக்கா, என்னைவிட உயரம், நிறம் அதிகம். சிரித்த முகமா பேசிக்கொண்டு இருகக்கா ஓகே தான்.' என அவள் அவனுக்குப் பெண்ணைப் பார்த்தாள்.
ஹரிணி சொன்னதைச் செய்யும் விதமாக, ரகுவீர் சிருஷ்டியைத் தவிர்த்து, அவர்கள் அறியாமல் மற்றவர்களைச் சின்னச் சின்ன டாஸ்க்கேம் நடந்த இடத்துக்கு விளையாட அழைத்துச் சென்றாள் ஜானகி.
மனதின் ஆசைகள் வளர்ந்து ஓர் உரு கொள்ளும் முன், அதை அறியாமல் நாம் செய்யும் பிழைகள் நம் வாழ்வை நோகச் செய்யும். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாமல் ஆற்றும் செயல்கள், புரிதலின் குறைபாடு புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கும். நம் ஜானகியும், ரகுவீரும் அந்தச் சுழலில் தான் சிக்குகிறார்கள்.
சிருஷ்டி மேத்தா, அவளை ரகுவீருக்கு அறிமுகம் செய்து வைத்த ஹரிணி, தன் வேலை முடிந்தது என அவ்விடம் விட்டு நகர்ந்தாள். ரகுவீரும்,அவளோடு ஓரிரு வார்த்தை பேசி அகன்று விடலாம் என நினைத்துப் பேச, சிருஷ்டி வார்த்தைகளை, சிருஷ்டித்துப் பேசிக் கொண்டே இருந்தாள்.
அவன் அம்மாவின் விருந்தினர் ஆகையால், முகம் முறிக்கவும் முடியாமல் பேசிக் கொண்டே இருந்தான். யாராவது காப்பாற்ற வருவார்கள், அவர்களுடன் பேசியபடி தப்பிக்கலாம் என ரகுவீர் ப்ளானில் ஜானகி தண்ணீர் ஊற்றினாள். அங்குச் சின்னச் சின்னக் கேம் நடத்தி ஜெயித்தவருக்குப் பரிசு, தோற்றவருக்குப் பெனால்டியாகப் பாட்டு, டான்ஸ் என நடந்தது.
நிச்சயிக்கப்பட்ட ஜோடிகளுக்கான கேம், என அறிவிப்பு வர மஞ்சரி, ராஜை இழுத்துக் கொண்டு மேடை ஏறினாள். பாலன், அம்ரூவை கூப்பிட அவள் மாட்டேன், என மறுத்தும் விடாமல் அனைவருமாக மேடை ஏற்றிவிட்டனர். ஜோடிப் பொருத்தம் நடத்த பாலன், அம்ரூ எல்லாம் க்ளீயர் செய்தனர்.
ராஜ் மஞ்சரியில், ராஜ் முக்கால் வாசி கோட்டை விட்டான். மஞ்சரி முறைத்துக் கொண்டே ஏதோ கொஞ்சம் சொன்னாள்.
பெனால்டியாக ராஜ், மஞ்சரியை நிறுத்தி. Mr.ராத்தோட், வுட்பீ யை பற்றி இப்படி ஒன்னுமே தெரியாமல் எப்படிச் சமாளிப்பீங்க. ப்ளீஸ் ஒரு டெமோ, நிறைய ஆண்களுக்குத் தேவைபடுது எனக் கேட்டனர்.
மஞ்சரி நிஜமாகவே கோபமாக நிற்க, பேபி, பேபி என்று ரோஸ், சாக்லேட் ஐஸ்க்ரீம், கடைசியில் கையில் ஒரு கிஸ் அடித்து மண்டியிட்டு அவளுக்காக வாங்கிய ப்ரேஸ்லெட்டை கொடுத்தான். அவள் கன்னங்கள் செம்மையுற ஹே... என அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
இதற்குள் ரகுவீர், சிருஷ்டியுடன் வந்து சேர்ந்தான். ஒரு ஹிந்தி பாடலுக்கு டான்ஸ் ஆட, மகளிர் அணி களமிறங்கியது
மயூரி, மஞ்சரி, தீப்தி, அமிர்தாவையும் இழுத்துச் சென்றவர்கள், ஜானகியை நடுவில் நிறுத்தி, அதிக அசைவு இல்லாமல், டான்ஸை நகர்த்தினர். விண்ணில் இருந்த தாரகைகள், மண்ணில் வந்தது போல் இருந்தது.
கரோக்கே பாட்டுப் பாடப்பட்டது, மியூசிக் ரெக்கார்ட்டட் பாடல் வரிகள் டிஸ்ப்ளேவில் வரும். இதில் ஆளுக்கு ஒரு பாடல் தேர்வு செய்து, மாறி மாறி ஆண் பெண் என அனைவரும் பாட, சிலர் வேற்று மொழி பாடல்களையும் பாடினர். ஜானகி தமிழ்ப் பாடலில்,
"ஒரு பொய்யாவது சொல் கண்ணே,
உன் காதல் நான் தான் என்று,
அந்தச் சொல்லில் உயிர் வாழ்வேன்"
என மனதிலிருந்து உருகிப் பாடினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட மொழி புரியாதவர்களும் கூட உணர்ச்சி வயப்பட்டு நின்றனர்.
அமுதன், பாலன், அமிர்தா, ராம் என மொழி புரிந்தவர்கள், இவள் யாரை நினைத்து இப்படிப் பாடுகிறாள் என அதிர்ச்சி அடைந்தனர். மொழி புரியாமல், அவளின் மனதை உருக்கிய பாடலில் லயித்து இருந்தனர் மற்றவர்.
ரகுவீர், ஜானகியை, உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கண்ணீர் அவனை என்னமோ செய்தது, அவளை அணைத்து ஆறுதல் படுத்தத் துடித்தது அவன் கரங்கள். பாடி முடித்த ஜானகியை அமுதன் தன்னோடு கை வளைவில் அணைத்து, "சூப்பர் ஜானூம்மா!" என உச்சி முகர்ந்தான். அவளைச் சமாளிக்க, அவள் அண்ணன் செய்த செயலில் கண்ணீர் கரைந்து, புன்னகை ஒட்டிக் கொண்டது.
"யுவர் அடென்சன் ப்ளீஸ்!" என அனைவரையும் அழைத்தார் அந்த அமைப்பின் செகரெட்டரி. "இங்குக் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். இன்னும் சில மணித் துளிகளில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த முறை வித்யாசமாக கொண்டாட நினைக்க, தி லீடிங் ப்ராண்டட் சர்டிங் சூட்டிங் நிறுவனத்திற்கு டெண்டர் நேற்று வாங்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு இன்றே அதன் முடிவை அறிவிக்கிறோம். அதன் முடிவை இப்போது அறிவிக்க உள்ளார். Mr.சிங்கானியா,அந்த வின்னரை வைத்து இந்த வருடப் பிறப்பைக் கொண்டாட உள்ளோம். யாருக்கு டெண்டர் கிடைக்குமோ அவர்களே இந்தக் கேக்கையும் வெட்டி நம்முடன் இணைந்து இரட்டை மகிழ்வைக் கொண்டாடுவார்." என அறிவித்தார்.
"குட் ஈவினிங் லேடீஸ் அண்ட் ஜெண்டில் மென். இங்குப் புத்தாண்டை வரவேற்கும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். நாங்கள் எங்கள் ப்ராண்ட்டை, மேலும் பல நாடுகளுக்கு விரிவு படுத்த திட்டமிட்டு இருப்பதால், உங்கள் அனைவரின் ஆதரவைப் பெற விரும்புகிறோம். இனி வரும் நாட்களில், ராத்தோட் க்ரூப்ஸ், கபூர்ஸ், ரெனாவத்ஸ், ஜான்சன்ஸ் அண்ட் தி சம்மோர் நீயுகம்மர்ஸ், உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி எங்களுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்."
"நவ், இம்பார்டன்ட் அனோன்ஸ்மென்ட். டென்டர் ரிசல்ட், இப்போது சொல்லக் கடைமை பட்டுள்ளேன். தாங்ஸ் டு செகரெட்டரி, டு அலோ மீ, பார் தி அனோன்ஸ்மென்ட். நாங்கள் இந்தக் காண்ட்ராக்ட் ராத்தோட் க்ரூப்ஸின், ஸ்வர்ணி மில்ஸ்க்குக் கொடுக்கிறோம். தே சப்மிட்டட் ,எப் பென்டாஸ்டிக் டென்டர், ப்ரைஸ் அண்ட் தி ப்ராமிஸஸ் ஆர் ஸோ நைஸ்." என Mr. சிங்கானியா இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் சொல்லி முடிக்க, ரகுவீர் ஆச்சரியமும், மற்றவர்களுக்கு அதிர்ச்சியும், ஜானகிக்குப் பேரின்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாள். "வீ வெல்கம் மிஸ்டர். ரகுவீர் சிங் ராத்தோட் டு கம் ஆன் தி ஸ்டேஜ், அண்ட் கட் தி கேக்." என்றனர்.
ரகுவீர் பெருமையும் கம்பீரமாக வந்து, ஜானகியிடம் கையை நீட்டி அழைத்தான். அவள் தயங்கத் தானே கையைத் தூக்கி எழுப்பி அவள் கையோடு கை சேர்த்து முன்னேறினான். மேடையை நோக்கி.
"குட்ஈவினிங் டு ஆல். ஐ விஷ் வெரி ஹேப்பி நீயூஇயர் டு ஆல். எல்லாருக்கும், சர்ப்ரைஸா இருக்கும், நான் ஒரு பெண்ணோடு மேடை ஏறியது. அப்படி எதுவும் நினைச்சுடாதீங்க, லால் மிர்ச்சி வச்சுருக்காங்க கண்ணில் தூவிடுவாங்க." என்றவுடன் சிரிப்பலை.
"ஷீ இஸ் மிஸ். ஜானகி தேவி சிவ குருநாதன் ஃப்ரம் தமிழ்நாடு. இவர்கள் இங்க MBA. ப்ராஜெக்ட் ட்ரெயினி. உண்மையில் இவர்கள் தான் இந்த ப்ரபோசல் ரெடி பண்ணது. நிறைய டேட்டா, அனாலிசஸ் போட்டு இராத்திரி பகல் பாராமல் உழைத்தார்கள். இவர்களுக்குத் துணையாக மிஸ். அமிர்த வள்ளி முருகானந்தம். ப்ளீஸ் எழுந்திரு சிஸ்டர்." என ரகுவீர் அழைக்க எழுந்து நின்றாள்.
"இது வெறும் ப்ராஜெக்டா நினைக்காமல் சின்சியர் வொர்க். அவர்களுக்குத் தான் இந்தப் பெருமை சேர வேண்டும். ப்ளீஸ் கிவ் தம் எ ரவுண்டாப் அப்லாஸ்." என ரகுவீர் சொல்ல அனைவரும் கை தட்டினர்.
கேக் கட் செய்யச் செகரெட்டரி சொல்ல, "ஜான்வி, ஜாயின் வித் மீ!" என அழைத்து இருவருமாகக் கேக் கட் செய்ய, ஷாம்பெயின் பாப்பர், ஸ்ப்ரே சிதற வெளியே வெடி முழங்க வானவேடிக்கை, விண்ணை ஒளிர வைக்கப் புத்தாண்டு பிறந்தது. ஹேப்பி நீயூ இயர் என அனைவரும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர். ஸ்ப்ரே, பாப்பர் இவர்கள் மேல் பட மேடையில் ஒதுங்கினர் ரகுவீர், ஜானகி.
ரகுவீர் அவளை அணைத்தபடி ஓரத்தில் நிற்க அவளைப் பார்த்த நொடி, கண்ணீர் வழிந்த காதல் பாவங்கள் நினைவில் வர, தனிமையில் அவளை அனைத்து நெற்றியில் முத்தமிட்டு, "ஹாப்பி நியூ இயர் மேரி ஜான்." என்றான். "ஹாப்பி நியூ இயர்." என அவளும் அவனைக் கட்டிக் கொண்டாள்.
சில நிமிட இடைவெளியில் வீட்டினருடன் கலந்தனர். புத்தாண்டு வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர். பிஸ்னஸ் சர்கில் மக்கள், ராத்தோட் ஆண்களைச் சூழ்ந்து கொண்டு, வாழ்த்துச் சொன்னார்கள்.
ரெனாவத் க்ரூப்ஸ், ஜானகி சொன்னது போல் சொற்ப லட்சங்கள் வித்தியாசத்தில் காண்ட்ராக்ட்டை இழந்து இருந்தனர். அதன் MD, ராகேஷ் ரெனாவத், ரகுவீரை நோக்கி வந்தான்.
"கங்கிராட்ஸ் Mr. ரகுவீர் ராத்தோட்." எனக் கை குலுக்கினான். "ஒரு பெண்ணை வைத்து டீல் க்ராக் பண்ணியிருக்கீங்க, நயே அந்தாஸ் ஹை!" என்றான். ”ஹாப்பி நியூ இயர்! மிஸ்டர். ரெனாவத், அப்படிச் சொல்லக்கூடாது. ஒரு பொண்ணுன்னு என்ன இளக்காரம். அவள் MBA ஸ்டூடண்ட் அண்ட மை ட்ரைனி. இது கவுரவமானது." என்றான் ரகுவீர்.
"குட், கீப் இட் அப், ஸீ யூ லேட்டர்." என்றான் ராகேஷ்.
ராம் அங்கு வந்தவன் "ஹலோ Mr.ரெனாவத், க்ளாட் டூ மீட்யூ. இரண்டு நாள் கழித்து உங்களுடைய பிஸ்னஸ் மீட் இருக்கு, அதுக்கு முன்னால் இங்கே பார்த்தது சந்தோஷம்." என்றான்.
"எனக்கும் உங்களைப் பார்த்ததில் ரொம்பச் சந்தோஷம். பை த வே இங்க உங்கள் ஃப்ரண்ட்ஸ் நிறைய இருக்க மட்டங்களே, யு கேன் ஜாயின் வித் மீ." என்றான் ரெனாவத்.
"ரொம்பச் சந்தோஷம், என் கஸின்ஸ் வந்திருக்கிறார்கள்." என்றவன், ஒரு நிமிஷம் அமுதனை அழைத்தான். "ஹீ இஸ், சிவகுக அமுதன், கன்ஸ்ட்ரக்ஷன் ரிஸார்ட், ஸ்கூல் அண்ட் ப்ரூட்ஸ் பிஸ்னஸ்." என அறிமுகப்படுத்தினான்.
"ஹாய்! ஹலோ!!!" என அமுதனும் பேசினான். அதற்குள் அங்கு வந்த ஜானகி, "அண்ணா, நான் அமித்துவை கூட்டிட்டு வீட்டுக்கு போகிறேன்." என்றாள் ஜானகி. "ராஜ் கிளம்பர மாதிரி தெரியலையே!" என்று சொல்ல. "மாம்ஸ் கூடப் போகிறோம்." என்றாள்.
அதற்குள் ராம், "ஹலோ மேடம் வாழ்த்துக்கள், ட்ரைனி லெவல்லயே கலக்குறீங்க, இன்னும் பிஸ்னஸ்ல காலடி வச்சா நாங்க தாங்குவோமா?" என்றான் ராம்.
"யோசிக்க வேண்டிய விசயம் தான், பேசாமல் உன் கம்பெனிய மாமாகிட்ட சொல்லி நான் டேக் ஓவர் பணிக்கிறேன். நீ பொட்டி கடை வச்சு பிழைச்சுக்கோ." என்றாள் ஜானகி.
"அமுதா அடி மடியிலேயே கையை வைக்கிறாடா!" எனபுலம்பினான் ராம்.
ராக்கேஷ் அவளையே உருத்துப் பார்த்தான். பின் ஏதோ ஏற்பாடு செய்தான். "ஓகே mr. ராம் நீங்க என்ஜாய்ப் பண்ணுங்கள், ஐ வில் லீவ்!" என்றான்.
"ஓ சார் நில்லுங்க,ஒரு விஐபி யை அறிமுகப் படுத்துகிறேன்." என்றவன் ஜானகியை அழைத்தான்.
"ஜானகி யை பார்த்திருப்பீர்கள் ஸ்டேஜில், என் கஸின் ஒரே ஊரு என்றான், ஜானகி இது mr. ராகேஷ் ரெனாவத் ." என அறிமுகம் செய்ய.
"தெரியும், லீடிங் மில் ஓனர். சின்னக் காண்ட்ராக்ட் எல்லாம் தொட கூட மாட்டார், கோடிகளில் தான் விளையாட்டே." என்றாள் ஜானகி.
"ம்ம், ரகுவீர் பாராட்டியதில் தப்பில்லை, இரண்டு வாரத்தில் இது கொஞ்சம் ஜாஸ்தி தான்." என்றான் ராக்கேஷ்.
"ஹேவ் எ ட்ரிங்க்!" என வொயினைத் தர, அவள் முறைப்பில், "ஓ, சென்னை கேர்ள்!" என ஃப்ரூட் ஜூஸை நீட்டினான். "நோ தேங்க்ஸ்." என்றாள். "பயம் ஓகே விடுங்கள், ரகுவீர்க்குப் பயப்படனுமே, பாஸ்!" எனச் சரியான திசையில் அடித்தான் ராகேஷ்.
"என்கிட்டயேவா!" என்றவள் நா வறட்சி தெரியவும் மேங்கோ ட்ரிங் எடுத்துக் குடித்தாள்.
<
ஜானகி எதிரியின் சதி வலையில் சிக்கிக் கொள்வாரோ; ஆசிரியர் மேடம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க ????