Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 18. அக்னி பரீட்சை 

வகைகள் : தொடர்கள் / மனதின் வார்த்தைகள் புரியாதோ

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

18. அக்னி பரீட்சை 

 

 

புதிய வருடம் ராத்தோட் குடும்பத்தினருக்கு மிகவும் சந்தோஷமாகவும், வெற்றிகரமாகவும் தொடங்கியது புதிய டெண்டர் கிடைத்த மகிழ்ச்சியைப் பேச்சிலர் ஆண்கள் கொண்டாட, குடும்பஸ்தர்கள் வீட்டுப் பெண்களை அழைத்துக் கொண்டு கிளம்புவதாக ஏற்பாடு செய்தனர்.

 

ராக்கேஷ் ரெனாவத் இந்தக் காண்ட்ராக்ட்டை ரகுவீரிடம் இழந்ததாகக் கருதவில்லை. அவனுடைய ஹேக்கர்ஸ்ஸை தாண்டி ஸ்வர்ணி மில்ஸ்க்கு கிடைத்ததை அவமானமாக நினைத்தான். அதுவும் புது ட்ரைனி ஒரு பெண், இந்த வேலையைச் செய்தது அவனிடம் ஆக்ரோசத்தைத் தூண்டியது.

ரகுவீருக்கு ஜானகி மேல் இருந்த ஈர்ப்பை ராக்கேஷ் கவனித்தான். அவனுக்கு இந்த டெண்டர் பற்றிய விசயம் ஏற்கனவே தெரியும். பார்ட்டிக்கு வந்ததிலிருந்து, இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டே தான் இருந்தான். சமயம் இப்போது வாய்க்க அதனைச் செயல்படுத்த சூழலை உருவாக்கிக் கொண்டு இருக்கிறான்.

ராகேஷ் ஜானகியிடம் பழரசம் அருந்த கொடுத்த பின் அவளிடம், "காயம் ஆறிடுச்சா ?" என கண்ணால் அவள் இடுப்பைக் காட்டி அவளுக்கு மட்டுமே கேட்கும் தொனியில் கேட்டவன், "டெண்டர் க்ளோஸ் செய்து மூன்று மணி நேரம் ஆகியிருக்குமா, இந்த விபத்து நடந்தப்போ." என இளக்காரமாக கேட்க,

 

ஜானகி பயப்படுவாள் என நினைத்ததுக்கு மாறாக கண்களால் ரகுவீரைத் தேடினாள். அவன் கண் பார்வையில் இல்லை என்றதும் நல்லவேளை என நினைத்தவள், அவனுக்குத் தக்க பதிலடி கொடுக்க நினைத்து," மிஸ்டர். ரெனாவத், 1+1=2தான், இதற்கெல்லாம் பயந்தால் ஆகுமா?" என்றாள் எகத்தாளமாக.

 

"எனக்கு நேரமாகிறது பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், ஹேப்பி நீயூஇயர்." என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் ஜானகி.

இவ்வளவு நேரம் வில்லனோடு நம்ம கதாநாயகியைப் பேச விட்ட துணை நாயகர்கள் என்ன செய்யறாங்கனு பார்ப்போம்.

ரகுவீர், ராஜ்வீர், ரன்வீர் அவர்களுடைய பிஸ்னஸ் ப்ரண்ட்ஸுடன், மும்மரமாக இருந்தனர். ரகுவீர் நடுநாயகமாக நின்று சிரித்து மகிழ்ந்து, மற்றவரைக் கிண்டல் செய்து பேசிக் கொண்டிருந்தான். ராஜ்வீர் பிஸ்னஸ் சர்கிலுடன் முக்கியமான விசயங்களைப் பற்றிய டிஸ்கஸனில், சில நண்பர்களுடன் நின்றிருந்தான். ரன்வீர் தன் வீட்டுப் பெண்கள் சென்றவுடன், அங்கு எஞ்சியிருந்த பெண்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தான்.

அமரேன், அமர்சிங் ஆகியோர் பெண்களை அழைத்துச் செல்வதாக முடிவு ரகுவீர் இருவரிடமும் பேசிவிட்டே மும்மரம் ஆனான்.முதல் காரை அமரேன் கிளப்ப, பூனம், மஞ்சரி, மயூரி, அமிர்தா அதில் ஏறினர். அமிர்தா, ஜானகி வரவில்லை எனச் சொல்ல, பாலன், "ஜானகி அடுத்து வருவாள் நீ ஏறு ட்ராபிக் ஜாம் ஆகிறது." என்றான். எனவே அதில் ஏறினாள். அமரேன் வண்டி 7 சீட்டர் அங்கிருந்து கிளம்பினர்.

ஹரிணி குடும்பம் தீப்தியையும், சிருஷ்டியையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினர். ஹாசினி பாப்பா ஹரிணி மடியில் படுத்துத் தூங்க ரோஹன் தன் புவா தீப்தி மடியில் சாய்ந்திருந்தான்.

"சிருஷ், உன் லக்கேஜ் எங்கே?" என ஹரிணி கேட்டாள்.

"ராத்தோட் மேன்சன் ஐ மீன் ஸ்வர்ணி மஹல் அனுப்பி விட்டேன்." என்றாள். அடுத்தடுத்துக் கார்கள் பார்கிங்கில் இருந்து கிளம்ப அங்கே காரை நிறுத்துவது பெரும் பாடாக இருந்தது. அதனால் அமர்சிங்கும் அவசரமாக, அமரேன் மற்றவர்களை ஏற்றிச் சென்றிருப்பார் எனக் காரை கிளப்பி விட்டான்.

ரெனாவத்துடன் நின்ற அமுதன், மற்றவரைத் தேடி ரிஸப்ஸன் வரை சென்றான். எதிரே பாலன் அமிர்தாவை ஏற்றி விட்டு ஜானகியை தேடி வந்தான். மொபைல் நெட்ஓர்க் நீயூஇயர் வாழ்த்துக்கள் அழைப்புகளால் நிறைந்து ஜாம் ஆகி இருந்தது.

ஜானகியுடன் இருந்த ராமிடம், ராக்கேஷ், புரை போனது போல் இருமி செருமி நடிக்க அவனுக்காக, ராம் தண்ணீர் கொண்டு வர ஓடினான்.

ஜானகி, கிளம்ப முற்பட ஜஸ்ட் வெயிட் உங்கள் ப்ரண்ட் வரட்டும் என நேரத்தைக் கடத்தினான் ராகேஷ். ஒருவழியாக ராம் வரவும், ஜானகிக்கு தலை சுற்றவும் சரியாக இருந்தது. தண்ணீரை ராக்கேஷிடம் கொடுத்தவன் ஜானகி தள்ளாடுவதைப் பார்த்து அவள் கையைப் பிடித்தான். அவள் மயங்கிச் சரிய, ராம் தோளில் தாங்கினான். ஜானகி, ஜானகி எனக் கன்னத்தைத் தட்ட, அவளுக்கு விழிப்பு இல்லை.

"மிஸ்டர். ராம், நீங்க அவர்களைக் கூட்டிட்டு போங்க." என்றான் ராக்கேஷ். "இவள் அண்ணன் வருவான்." என அவன் தயங்க,

 

"நான் சொல்லி அனுப்புகிறேன் நீங்க கூட்டிட்டுப் போங்க." எனக் கரிசனையாக நடித்து அனுப்பி வைத்தான்.

ராம், ஜானகியை கைதாங்கலாக அழைத்துச் செல்ல, அங்கே நிறையக் கப்பிள், ஆணோ பெண்ணோ மயங்கி மற்றவர் கைகளிலிருந்தனர்.

"பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும் கள் என்றே சொல்லுவர்." அந்தக் கதை தான் ஜானகிக்கும் நடந்தது. ராம்- ஜானகியை, பல ஆங்கிளில்  ஒருவன் போட்டோ சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தான்.

ராம் அவளைத் தூக்கிக் கொண்டு லிப்டில் நுழைந்தான். பின்னர் அவள் தங்கியிருந்த தளத்துக்குச் சென்று, கையில் ஜானகி இருந்ததால், வெயிட்டரை கதவைத் திறக்கச் சொல்லி, உள்ளே சென்றான். அவளைக் கட்டிலில் கிடத்தினான். இவை அனைத்தும் ஒருவனால் போட்டோ எடுக்கப்  பட்டது.

அமுதனும், பாலனும் பார்ட்டி ஹாலுக்கு வர, ராகேஷ் நடந்ததைச் சொல்லி, அறைக்கு அனுப்பி வைத்தான். சகோதரர்கள் இருவரும் ராம் அறைக்குப் பதறித் துடித்து வந்தனர்.

ராம், "திடீர்னு  ஜானகி மயங்கிட்டா அமுதா,நான் தூக்கிட்டு வந்தேன். டாக்டரை வரச் சொல்லவா?" எனக் கேட்டான்.

"இல்லடா, வலி மாத்திரை போட்டது அசத்தும்னு  நினைக்கிறேன், சாய்ந்திரம் ரொம்ப நேரம் கழிச்சுத் தான் எழுந்தாள். சரி டிஸ்டப் பண்ண வேண்டாம். நான் இங்க இவளுக்குத் துணைக்கு இருந்துக்கிறேன், நீங்க இரண்டு பேரும் போங்க." என தங்கைக்கு துணை இருந்தான் அமுதன்.

 

வெளியே செல்லும் போது ஜானகி தூங்குவதைக் கருத்தில் கொண்டு,"Don't disturb" அட்டையைப் போட்டார்கள்.மேலே, ட்ரிங்ஸ் பார்ட்டி நடந்தது. ரகுவீர் கர்டசிக்காக ஒரு பெக் மட்டுமே எடுத்தான்.

இன்று அவன் மனதில் ஜானகி நிறைந்து இருந்தாள். அவளின் பாட்டு அவனுக்கு மிகவும் பிடித்துப் போக, இத்தனை செலபரேஷனுக்கும் நடுவில், அதன் அர்த்தம் அறியும் ஆவல் ஏற்பட, அமிர்தாவின் உதவியால், பாட்டின் அர்த்தத்தை  அறிந்துக் கொண்டான். 

ராகேஷ், ரகுவீரின் மகிழ்ச்சியைக் குலைக்கத் தீர்மானித்தான். டிரிங்ஸ் பார்ட்டி நடக்கும் இடத்தில், இயல்பாகப் பேசுவது போல் பேசினான்.

ஜானகியைப் பற்றிப் பாராட்டி, "வெரி டேலண்ட்டட்!" என்றான். பின்னர், "அவர்கள் ஊர் பிஸ்னஸ் மேன், மில் ஓனர் மிஸ்டர்.ராம்னு ஒருத்தர், இவங்கக் கிட்ட சரண்டர் ஆகிட்டார் ரிலேடிவ்ஸ் போல. லவ் பண்றாங்க போல மிஸ்டர்.ராம்க்கு என்னுடைய வென்சர் இருக்கிறது, அதான் இந்த டீடைல்ஸ் தெரியும். " எனப் பீலா விட்டான்.

ரகுவீர். "மிஸ்டர்.ரெனாவத் தேவையில்லாமல் எதற்கு மற்றவர்கள் பெர்சனல்ல தலையிடுவது."எனக் கடிந்தான்.

அதற்கு, ராகேஷ் ஏற்பாடு செய்த ஆள் "ஆமாம் மிஸ்டர்.ரெனாவத், நான் கூடப் பார்த்தேன் அந்தப் பொண்ணு மிஸ்டர். ராத்தோட் கூட மேடை ஏறினாங்களே, அவங்க இப்ப தான் ஒருத்தரோடு ரொம்ப க்ளோசா போனாங்க." என்றான்.

 

ரகுவீரின் இழுத்துப் பிடித்த பொறுமை பறக்க, அந்த மற்றவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான். அனைவரும் வந்து விலக்கி விட்டனர்.

 

"ஹலோ மிஸ்டர், இவ்வளவு நம்பிக்கை அந்தப் பொண்ணு மேல இருந்தால், வாங்க போட்டேஜ் பார்ப்போம்." எனவும், "நீ இவ்வளவு சொன்ன பிறகு வா!" என இழுத்துக் கொண்டு செக்யூரிட்டி கேமரா அறைக்குச் சென்றான்.

 

அங்கே, இவர்கள் சொன்ன நேரத்தில் ராம், ஜானகியுடன் லிப்டில் ஏறியது, கீழ் தளத்தில் வந்தது. அவன் அறைக்குள் சென்றது வரை பார்த்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான். ரகுவீர். கூடக் கொஞ்ச நேரம் பார்த்து இருந்தால் அமுதன், பாலன் வந்தது தெரிந்திருக்கும்.

அதற்குள் அந்த ரூமை சென்று பார்க்க, ராமின் பெயரில் ரூம் பதிவில் இருந்ததும், வெளியே தொங்கிய அட்டை, ரெனாவத் ஆட்கள் செய்த மாறாட்டம், எல்லாம் சேர்ந்து, ரகுவீரை பாருக்கு முன் கொண்டு வந்து நிறுத்தியது.

ஒருவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அன்பு அவனை அடிமைப் படுத்தும், அங்கு ஏமாற்றம் வரும் போது சிந்தனை சக்தியை மறந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என மனம் பேதலிக்கும். இன்று ரகுவீர் நிலையும் அதுவே.

ரகுவீர் முகம் கோபத்தில் தகித்தது பெண்களையே பார்க்காதவன் அல்ல ரகுவீர், ஆரம்பக் காலக் கட்டத்தில் அவன் மீது வந்து விழுந்த பெண்கள் அநேகம். அவர்கள் இவனிடம் அத்துமீறி உரசிப் பேச முயல, இந்தக் கடுமை முகமூடியை அணிந்து கொண்டான்.

ஜானகி, இவர்களிலிருந்து வேறு பட்டால், அவளின் நிமிர்வும், நிறையக் குணங்கள், பண்புகள் தன் புவாஷாவை நினைவு படுத்தின. அவள் அவனை அணுகும் முறையில் என்றுமே தாயின் கரிசனை இருக்கும். இதுவே அவனை அவளிடம் ஈர்த்தது.

இன்று நடு இரவு வரை இனிமையாகக் கழிந்த பொழுது, இப்போது தன் மனதை நோகடித்து, இவ்வளவு மோசமான நிலைக்குக் கொண்டு வரும் என அவன் நினைக்க வில்லை.

ஒவ்வொன்றாக நினைத்து பெக் உள்ளே இறங்க, நிதானம் தாண்டியது. ராஜ் வீரும், ரன்வீரும் அவனைத் தேடி வந்தவர்கள், பாரில் போதையுடன் தன்னிலை இல்லாத பையாவைக் கண்டு அதிர்ந்தனர்.

 

ரகுவீரை, பையா பையாவென மாறி மாறி அழைக்க, "எனக்கு இங்க வலிக்குதுடா!" என நெஞ்சில் கை வைக்க. ஹார்ட் அட்டாக்கோ எனப் பயந்து, யாராவது டாக்டர் இருக்கிறார்களா என விசாரித்தனர். பார்ட்டியில் இருந்த ஒரு டாக்டர், பரிசோதித்தார்.

"நத்திங்க் டு ஒரி. ட்ரிங் கொஞ்சம் ஜாஸ்தி. வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, காலையில் ஹேங் ஓவர் ஆனால், இந்த டேப்லட் கொடுங்கள்." என ப்ரிஸ்க்ரைப் செய்தார்.

அதற்குள், அங்கே வந்த பாலன். "ஜானகி, மெடிசன் எபக்ட்ல தூங்கிட்டாள். அமுதன் கூட இருக்கிறான். நாங்க காலையில் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றோம், ஒரு மணிக்கு பிளைட், பத்து மணிக்கு, மயூரி, மஞ்சரியை தயாரா இருக்கச் சொல்லுங்கள்." என்றான் பாலன்.

"ஓகே! பையா நிலைமை சரியில்லை, நாங்கள் கிளம்புகிறோம்." எனக் கூறி விடை பெற்றனர் வீர் ப்ரதர்ஸ். அந்த இரவு எவ்வளவு சந்தோஷத்தை அளித்ததோ, அதே அளவு வேதனையையும் தந்தது ரகுவீருக்கு.

ஆனால் ஜானகி மகிழ்ச்சியான மனநிலையுடன் எதையும் அறியாமல் ராகேஷ் தந்த மயக்க மருந்தில் நிம்மதியாய்த் தூங்கிக்கொண்டு இருந்தாள்.

புது வருடத்தின் முதல் நாள், ஜானகி வாழ்வில் என்ன மாற்றம் கொண்டு வர இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

1 கருத்துகள்
  • நந்தினி 27-Nov-2024

    சூழ்ச்சியில் மாட்டியிருக்கும் ஜானகி சேதாரம், மனக்கசப்பு இல்லாமல் வெளிவந்து சந்தோஷமாக வாழ வேண்டும் ????????❤️

ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!