தொடர் : 20
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
வீட்டுப் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி விடை பெற்றனர்.ஜானகி, மீண்டும் ஆறாம் தளம் சென்றவள், ரகுவீர் அறைக் கதவைத் தட்ட, ராஜ் யெஸ் என்றான். உள்ளே போன ஜானகி, "மஞ்சரி கிளம்பிடா, உனக்காக கீழே ரிஸப்ஸன்ல வெயிட்டிங்." என்றாள்.
ராஜ், ஜூஸ் மற்றும் மாத்திரையுடன் ரகுவீர் முன் நின்றான். ஜானகி கண் ஜாடையில் தன்னிடம் தரச் சொல்லி, அவனை அனுப்பி விட்டு ரகுவீரை உருத்துப் பார்த்தபடி அவன் முன் நின்றாள்.
உரிமை இருக்கும் இடத்தில் தான் கோபம் வரும். நம் மனதிற்குப் பிடித்தவர்களின் சிறு செயலும் நம்மைப் பாதிக்கும். நேசம் கொண்ட நெஞ்சம், நேசித்தவரின் நெஞ்சமும் தனதே என்று உரிமை கொண்டாடும்.
ஜானகி, கையில் மாத்திரை, ஜூஸ் சகிதமாக அவன் எதிரில் வந்து நின்றாள். ஆள் மாறியதை கவனிக்காத ரகுவீர்,
"சோடோ ராஜ், முஜே குச் நஹி சாஹியே!" என்றான். "ஆனால் எனக்கு வேணுமே!" என்றாள் ஜானகி. அவன் வெடுக்கென நிமிர்ந்து பார்த்தான். பின் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"யாரு மேல் கோபம்." என்றாள் ஜானகி நேரடியாக. ம்ச்ச், என அவன் வேறு புறம் திரும்ப, "சரி கோபமா இருங்க இந்த மாத்திரையை முதலில் போட்டுகிட்டு ஜூஸ் குடிங்க." என்றாள்.
அவன் அங்கே ஒருத்தி நிற்கிறாள் என்பதை அலட்சியம் செய்து, தன் போக்கில் தலையைக் குனிந்து இருந்தான். அவனுக்கு மிக அருகில் வந்தவள், சிறு குழந்தைகளுக்குச் செய்வது போல், குனிந்திருந்த அவன் மூக்கை இடது கையாள் பிடிக்க, அவள் பிடித்ததில் அதிர்ந்த ரகுவீர் அவள் கையைப் பிடித்தான்,
மேலும் அவள் மூக்கை பிடித்த வண்ணம் இருக்க, மூச்சு விடச் சிரமப்பட்டு வாயைத் திறந்தான். இதற்காகக் காத்திருந்தது போல், மாத்திரையைப் போட்டு, நான் ஸ்டாப்பாக ஜூஸை ஊற்ற,வேறு வழியின்றிக் குடித்து முடித்தான்.
அவள் மூக்கை விட்டவுடன், ஸீஸீ டிவி போடடேஜ் காட்சிகள் நினைவுக்கு வர, அவள் கழுத்தைப் பிடித்துச் சுவரோடு ஒட்டி நிறுத்தி, குரல்வளையை நெருக்கி, "ஏண்டி அப்படிச் செஞ்ச?" எனக் கண்களில் தீ பறக்கக் கேட்டான்.
அவன் ஜூஸ் குடிக்க வைத்ததைக் கேட்பதாக நினைத்துக் கொண்டாள் அவன் குரல்வளையை நெரித்ததில் இருமல் வர மூச்சு திணற, கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
அவன் கையை எடுக்கப் போராடினாள். அதன் பின் உணர்வு வந்தவன் போல் கையை விலக்கினான் ரகுவீர். கழுத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு நீவி விட்டு, இருமிய படி மூச்சு விட சிரமப்பட, அவள் இடுப்பில் பட்ட காயமும் சேர்ந்து வலித்தது. அவள் அவஸ்தையைப் பார்த்து அவளை அந்த ஷோபாவில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தான், முதுகை வருடி விட்டான். தண்ணீர் ஒரு மடக்கு குடித்தவள், அவன் முதுகை வருடிய கையைத் தட்டி விட்டாள்.
இதற்குள் ராஜ் வீர் திரும்பி வர, தன் பையா அமர்ந்திருந்த இடத்தில் ஜானகி அவள் நின்ற இடத்தில் கையில் டம்ளர் உடன், ரகுவீர். என்ன தலைகீழ் காட்சி என நினைத்தபடி வந்தான்.
ஜானகியின் நிலை கண்டு பதற, அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்ட ஜானகி, கஷ்டப் பட்டு வார்த்தைகளைப் பேசினாள் ஆனால் அத்தனையும் பேசினாள்.
"பைத்தியமா பிடிச்சிருக்கு உன் பையாவுக்கு, ஜூஸ் குடிக்க வைக்கிறதுக்காக மூக்கை பிடிச்சேன், எங்கள் அப்பத்தா மருந்து குடிக்கலைனா அப்படித் தான் செய்யும். அதுக்குப் போய் குரல்வளையைப் பிடிச்சு நெரிக்கிறார்." எனக் கழுத்தைத் தடவிக் கொண்டாள்.
"என்னமாவது ஆகியிருந்தால், ஓ மை காட், நான் இன்னும் சைட் அடிச்சது இல்லை(பொய்,பொய்,வீரூஜீ யை,சைட் அடிச்சா என மனசாட்சி ) லவ் பண்ணலை, ஒரு டேட்டிங் இல்லை, மெஹந்தி ஹல்தி, சங்கீத் எதுவும் நடக்கலை, தாலி கட்டிக்கலை, ஃபர்ஸ்ட் நைட் நடக்கலை, புள்ளை பெத்துகலை, அதுக்குள்ள உங்கள் பய்யா என்னைப் பரலோகம் அனுப்ப பார்க்கிறார்." என நிறுத்தியவள், ஒரு மடக்குத் தண்ணீர் குடித்த பின்
"நீயூஇயர், முதல் நாள் பார்ட்டி முடிஞ்ச ஹேங்க் ஓவர் கூட இன்னும் சரியாகலை உன் பையாவுக்கு, அதுக்குள்ள உன் பையா இன்னைக்கே எனக்கு லாஸ்ட்டே ஆக்கப் பார்த்தார்." மீண்டும் தண்ணீர் ஒரு மடக்கு குடித்தாள்.
"இப்ப தான் எங்க அண்ணன், என் சேப்டி பத்தி கவலைப்பட்டுப் போனான். என்னைய பார்த்துக்றேன்னு மாம்ஸ் வேற ப்ராமிஸ் பண்ணிணார். அதுக்குள்ள மர்டர் ப்ளான். எங்க அண்ணன் இன்னும் ஏர்போர்ட்டுக்கு கூடப் போயிருக்க மாட்டான். வேலை முடிந்தால் கழட்டி விடுவார்கள். கழுத்தையா நெரிப்பாங்க?" எனக் கேட்டாள்.
"பையா, என்ன இது?" எனக் கேட்டான். ரகுவீர், என்னவென்று சொல்வான். அவன் பார்த்த போட்டேஜ் அப்படி. மௌனமாக நின்றான்.
"போங்கடா, உங்களுக்கு எல்லாம், நல்லது செய்யவே வந்திருக்கக் கூடாது. அழகான தமிழ் பேசி, எங்க சிங்காரச் சென்னலையே இருந்திருப்பேன். அதை விடு, எங்க வீட்டில் இருந்து போய் வரத் தொலைவு தான். நேற்று பார்த்தமே ராம் அவங்க மில்ஸ் இருக்கு . நான் கேட்டா இந்தா அம்மா மருமகளே வச்சுக்கன்னு, அவங்க அப்பா மில்லையே என் பேரில் எழுதி வச்சு இருப்பாரு, (கோவை சரளா- என் கிரகம் சொல்றமாடுலேசன்),அதையெல்லாம் விட்டுட்டு , ராஜ், நீ எங்க பையா அப்படி இப்படின்னு, ஓகோன்னு சொன்னேன்னு, இங்க வந்தேன். இப்படிக் கழுத்தை நெரிப்பார்னு சொன்னியா?" என்றாள்
இன்னும் ரகுவீர் முறைத்துக் கொண்டிருந்தான். ராம் பெயரைச் சொல்லவும் மீண்டு வந்த கோபம். "இன்னைக்கு மட்டும் எனக்கு ஏதாவது ஆகியிருந்துச்சு,எங்க அப்பத்தா பேசியே கொன்னுருக்கும். (உன்னை விடவா,வீர்'ஸ் மைண்ட் வாய்ஸ்) தாத்தா வேட்டை துப்பாக்கிக் கொண்டு வந்து சுட்டு இருப்பாரு. சண்முப்பாவும், தெய்வாமாவும் அருவாள் எடுத்துட்டு வந்திருப்பார்கள்.
மாதாஜிக்கு என்ன தான் வீருஜீ மேல் பாசம் இருந்தாலும், மகள்னு வந்துட்டா மாறிடும். எங்க அப்பா வேண்டுமானால் ஜென்டில் மேனா இருப்பாரு, ஆனால் என் அண்ணன் தம்பி, உங்களைச் சும்மா விடமாட்டார்கள். இவ்வளவு ஏன், கீழே இருக்க அமித்துவே அழுதே உங்களைக் கொன்னுடுவா." என்றாள்
"ராஜ், இவள் வாயை மூடிக்கிட்டுக் கிளம்பச் சொல்லு, இல்லைனா நிஜமாகவே கொன்னுடுவேன்." என்றான் ரகுவீர்.
"இந்த ரூமை விட்டுப் போகச் சொல்கிறாரா, இல்லை வீட்டை விட்டேவான்னு கேளு ராஜ்." என்றாள் ஜானகி
."போகச் சொல்லு, எங்கையாவது போகச் சொல்லு, என் கண்ணு முன்னாடி வரக் கூடாது இவள்." என்றான் ரகுவீர். "பையா ப்ளீஸ், அவதான, சின்னப் பொண்ணு, நீங்களும் என்ன, சரிக்குச் சமமா சண்டை போடுகிறீர்கள்." என்றான் ராஜ்.
"இவளா சின்னப் பொண்ணு?" என அவன் பார்வையில் இளக்காரம் தெரிய, ஜானகி அதிர்ந்து போனாள். சில நேரங்களில், சிலர் பார்வைக்கு வார்த்தையை விட சக்தி அதிகம். அது போல் இதுவரை எதிர் வாதம் செய்தவளுக்கு, ரகுவீரின் பார்வை உள்ளுக்குள் தன் மேல் ஏதோ தவறான பார்வை விழுந்ததாகப் பட்டது.
"இனிமேல் உங்க கண்ணு முன்னே வர மாட்டேன். என் ப்ராஜெக்ட் வேற யார்கிட்டயாவது சமிட் பண்ண ஆர்டர் குடுங்க. இல்லை பிடிக்கலைனா, கம்பெனில இருந்து ரிலீவ் பண்ணிடுங்க. நான் வெளியேறிக்கிறேன்." என்றாள் ஜானகி.
இந்த வார்த்தைகளுக்குப் பின்னர், பதில் கேட்க அவள் இல்லை. "என்ன பையா, என்ன நடக்குது, அவள் ரிபோர்ட் தான், இந்தக் காண்ட்ராக்ட் கிடைக்கக் காரணம்னு நேற்று சொன்னீங்க, 12 ஹவர்ஸ் என்ன ஆச்சு பையா?" என்றான். ரகுவீர் அவன் பதில் பேசவில்லை. தலையை இட வலமாக ஆட்டிக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றான். ராஜ் மூன்றாவது தளத்திற்கு வந்தான்.
ஜானகி ஹாலில் இல்லை. அமிர்தா கண்ணில் பட, "மாத்திரை போட்டு தூங்குறா அண்ணா நேற்றும், நாங்க கீழே வந்தபிறகு பார்ட்டில மயங்கிட்டாள்ன்னு அமுதன் அத்தான் சொன்னார் நீங்க பார்த்தீங்களா?" என்றாள்.
"இல்லையே இது எப்ப நடந்தது, நான் பார்க்கவும் இல்லை. திரும்ப டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவோமா?" என்றான். "இப்ப தூங்கி எந்திரிக்கட்டும், அதுக்கப்புறம் பார்க்கலாம்." என்றாள் அம்ரூ.
"நீ சாப்பிட்டியா?" எனக் கேட்டான் ராஜ் வீர்.
"நான் சாப்பிட்டேன், நீங்க?" எனக் கேட்டாள். "இல்லை." என அவன் தலை ஆட்ட, "சரி வாங்க நான் எடுத்து வைக்கிறேன்." எனக் கூறினாள்.
அமிர்தா,ராஜ்க்கு பரிமாறினாள். அவன் சாப்பிட்ட பிறகு, "மேலே எதுவும் பிரச்சினையா அண்ணா?" எனக் கேட்டாள்.
"இல்லையே, ஏம்மா?" என்றான். "இல்லை, கொஞ்சம் முன்னாடி, அந்தத் தாஞ்சூர் பெயிண்ட்ங் எல்லாம் கொடுத்து ரொம்பச் சந்தோஷமா இருந்தா ஜானகி. இப்ப கீழே வரும் போது முகமே சரியில்லை." எனக் கேட்டாள். ராஜ்வீர் மேலே நடந்ததை அவனுக்குத் தெரிந்த வரை சொன்னான்.
"இவங்க இரண்டு பேரையும் புரிஞ்சுகிறது கஷ்டம் தான்." என்றாள்.
மதியம் உணவுக்குத் தான் ஹரிணி குடும்பத்துடன் சிருஷ்டியும் இறங்கி வந்தாள். காலை உணவை மாடிக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.
ஜானகி, இரண்டு மணிநேரம் புரண்டு படுத்தவள் எப்படியோ தூங்கினாள், எழுந்த போது சில தீர்மானங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தாள்.
ஹாலில் ரகுவீர் இருக்கிறானா எனப் பார்த்தாள், இல்லை என உறுதியான பின் ரூமை விட்டு வெளியே வந்தாள். அங்கு ஹரிணி குடும்பம் இருந்தது.
ஹரிணி, இராமர் பட்டாபிஷேகம் பெயிண்டிங்கை பார்த்து ஜானகியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். ஜானகியும், தமிழ் நாட்டு ஸ்பெஷல், இந்தத் தாஞ்சூர் பெயிண்டிங், பற்றியும் அங்குள்ளவர் இங்கே கடை வைத்திருக்கிறார், எனவும் கூறினாள். இது போன்ற வேறு படங்கள் உள்ளனவா? எனக் கேட்டாள் ஹரிணி. ஜானகி, தன் மொபைலில் அவர்கள் வெப்பேஜைக் காட்டினாள் .
அதே நேரம், அவள் அப்பாவிடம் இருந்து போன் வந்தது. எஸ்க்யூஸ்மி என்றபடி நடந்த கொண்டே வாசல் வரை வந்தாள். "அப்பா, புது வருட வாழ்த்துக்கள்." என்றாள்.
"வாழ்த்துக்கள் டா தங்கம், இந்த வருஷம், நீ நினைச்சது எல்லாம் நல்லா நடக்கட்டும்." என ஆசீர்வாதம் செய்தார். "இருடா அம்மா கிட்டப் பேசு." எனக் கொடுத்தார்.
"நவ் ஸால் ரீ பதாயீ மாஷா, மாதாஜீ கரக்டா, உங்க மொழியில் சொல்லிட்டேனா?" என்றாள் ஜானகி.
"புது வருட வாழ்த்துக்கள் என் செல்லமகளே." என்றார் ராகினி.
"இன்னைக்கு என்ன இராஜஸ்தானி மாஷா, செந்தமிழ் அன்னையாக மாறியாச்சா?" எனக் கேலி செய்தாள்.
அந்த நேரம் லிப்ட் திறந்து ரகுவீர் வெளியே வர,அவனைக் காணாதது போல் தவிர்த்து விட்டு மாடிப் படிகளில் ஏறிக் கொண்டே பேசினாள்.
ரகுவீரும், அவளைக் கண்டு கொள்ளாமல், ஹாலுக்குள் சென்றான். அங்கே சிருஷ்டி இவனைக் கண்டவுடன், எழுந்து வந்து பேச ஆரம்பித்தாள்.
ஜானகி, மாடிப் படியில் ஏறியவள், முதல் வளைவில் படியில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். ஒரு சுற்று, வீட்டினர் அனைவரிடமும் பேசி முடித்தாள். மீண்டும் தன் தந்தையிடம் பேசினாள். "ஜானகி கண்ணு, ஓமி பல்லா இருக்கான்லடா, என் தோஸ்த், அவன் அந்தேரி பகுதியில், பீச்ஹவுஸ்ல தான் தங்கி இருக்கானாம். இன்னைக்குக் குடும்பத்தோடா அங்க இருக்கான். லொகேஷன், போன் நம்பர் அனுப்புறேன் போய்ட்டு வாடா, உன்னைப் பார்க்கனும்னு ரொம்பக் கேட்டான்." என்றார். "சரிப்பா."எனப் போனை வைத்தாள்.
அங்கிருந்த படியே, ராஜ்வீருக்கு போன் செய்தாள். ஹாலில் இருந்த ராஜ், ஜானி போன் கால் பார்த்து சுற்றி பார்க்க மாடிப்படியிலிருந்த ஜானகி தென்பட அங்கே வந்தான்.
"அப்பாவுடைய ப்ரண்டு இங்கே அந்தேரியில் இருக்கிறாங்களாம். போய்ப் பார்த்துட்டு வர சொன்னாங்க. நானும் அமித்துவும் போய்ட்டு வர்றோம்." என்றாள் ஜானகி.
"சரி ஜானி, படிமா கிட்ட சொல்லிட்டு போ, எங்கப் போனாலும். ப்ளீஸ் டேக் கேர்." என்றான் ராஜ்.
ஜானகி, தன் அறைக்குச் சென்று, அமித்துவிடம் தன் அப்பா சொன்னதைச் சொல்லி, ஒரு ட்ரெஸ் பேக் பணிக்கலாம், காலையில் நேரா ஆபீஸ் வந்திடலாம். ஷப்னம் ஆண்டி கிட்ட சொல்லிட்டு வா." என்றாள்.
அமிர்தா, ஷப்னத்திடம் சென்று சொல்ல, "சரிம்மா போய்ட்டு வாங்க, அங்க போய்ட்டு எனக்குக் கால் பண்ணுங்க." என அனுப்பி வைத்தார்.
எல்லார் கவனமும் பேச்சுச் சுவாரஸ்யத்தில் இருக்க, இவர்கள் கீழே இறங்கினர். ராஜ் அங்கு டிரைவரை அழைத்து, இவர்களை ட்ராப் செய்யச் சொன்னான். அவர்களும் அங்கிருந்து அந்தப் பீச் ஹவுசுக்கு சென்றனர்.
அவர்களை அனுப்பி விட்டு ராஜ் மேலே வந்தான். ரகுவீர், பாராமுகம் காட்டினாலும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கண்ணாம் மூச்சி விளையாட, "இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை." என மனதில் திட்டினான்.
ராஜ், ஜானகி சொன்னதைச் சொல்ல, "வெளியே அவளுக்குச் சேப்டி இல்லைடா, ரெனாவத் எப்ப வேணா எதனாலும் செய்வான்." என்றான் ரகுவீர்.
"ஜானகி, அப்பா பிரண்டு வீட்டுக்குத் தான் போயிருக்க, நம்ம ட்ரைவர் தான், நாளைக்குக் காலையில் அங்கே போய்ப் பிக்கப் பண்ணிக்குவார், டோண்ட் வொரி பையா." என்றான்.
"என்னது நாளைக்கா? நோ வே, இன்றைக்கே திரும்பச் சொல்லு." என்றான் ரகுவீர்.
ஷப்னம் தான், "ரகுவி வந்ததிலிருந்து அந்தப் பொண்ணுங்க எங்கேயும் போகலை, பீச் ஹவுஸ் தெரிஞ்ச பேமலி விடுடா, நான் ஃபாலோ பண்ணிக்கிறேன்." என்றார் ஷப்னம்.
ரகுவீர், வீட்டு கார்களுக்கு எல்லாம் சிப் இருந்தது, காரை ட்ராக் செய்யலாம். ராஜ் வண்டியை ட்ராக் செய்து அவர்கள் செல்லுமிடத்தைப் பார்த்துக் கொண்டான். ஜானகியும், அமித்துவும் அந்தப் பஞ்சாபி பேமலியை சந்திக்க அந்தேரி சென்றனர்
திக் திக் நிமிடங்களா,வீர் உள்ளுணர்வு சொல்லுமா ஜானகிக்கு இருக்கும் ஆபத்தை????