தொடர் : 21
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
நம் இந்தியர்கள், பலவகைக் காய்கறி கலந்த கலவை போட்டுச் செய்யப்பட்ட அவியல் போல ருசி மிகுந்தவர்கள். ஒவ்வொரு மாநிலத்தவரும், அவர்களுக்கென ப்ரத்யேக குணம் படைத்தவர்கள். இங்கே ஒரு பஞ்சாபி தட்கா.
ஓம்பிரகாஷ்பல்லா அவர் மனைவி ப்ரீத்தோ ஜாடிக் கேத்த மூடியாய் கலகலப்பானவர்கள் மூன்று பிள்ளைகள் இவர்களின் ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது, இவர்கள் திருமணத்தில் சிவகுரு நாதன் குடும்பமாக வந்திருந்து கலந்துகொண்டார். ஜானகியும், அமிர்தாவும் ராஜ் அனுப்பிய காரில் லொகேசன் மேப் வழி காட்ட வந்து சேர்ந்தனர். அழகான பீச்ஹவுஸ், பல்லாஜீ தானே டிசைன் செய்து கட்டியிருந்தார்.
ஆறடியில் இருந்தார் ஓம்பிரகாஷ் பல்லா. இவர்கள் டர்பன் கட்டுபவர்கள் அல்ல, அதனால் ஒரு மிடில் ஏஜ் பிஸ்னஸ் மேனாக இருந்தார்.அவரது மனைவி ப்ரீத்தோ, முழு பஞ்சாபி தட்கா நிறைந்த சுவாரஸ்யமான பெண்மணி. பட்டியாலா குர்தி, பெரிய வளையத் தோடு, கருமணி தாலி, நல்ல கட்டான உடல்வாகு. பேச்சில் பஞ்சாபி தட்கா அதிகமாக இருக்கும்.
"ஆவோ, ஆவோ, மேரி பேட்டி!" என வரவேற்றார் பல்லாஜி.
"ஸன்ஸ்ரியாகால் மாமாஜீ!" எனக் காலை தொட்டு வணங்கினார்கள் இருவரும்.
"ஜீத்தி ரஹோ புத்தரு!" என ஆசீர்வதித்துத் தோளோடு அணைத்துக் கொண்டார்.
"ப்ரீத்தோ மாமி எங்க மாமாஜீ?" என ஜானகி கேட்டாள்.
"மைம் இத்தி ஆம் ஸோனிகுடி!" (நான் இங்க இருக்கிறேன் தங்கப் பெண்ணே) என்ற படி வந்தார் ப்ரித்தோ, பெயருக்கேற்ப அன்பு நிறைந்த புன்னகையுடன் வந்தார்.
"ஸன்ஸ்ரியாகால், மாமிஜீ." எனக் காலைத் தொட்டு வணங்கி, அவரை அனைத்துக் கொண்டாள் ஜானகி. அமிர்தாவும் வணங்கி எழுந்தாள்.
"ஜீத்தீ் ரஹோ புத்தரு அம்ரூ, தூ கித்தே ஹோ!" என்றார். "நல்லா இருக்கிறேன் மாமிஜீ!" என்றாள்.
அறையில் போடப்பட்ட வசதியான ஷோபாக்களில் அமர்ந்தனர். "ஸோனிகுடியாங், இரட்டை புள்ளைங்க மாதிரி தான் எப்பவும்." என நெட்டி முறித்தார் ப்ரீத்தி.
"பெண்கள், வந்தால் தான் வீட்டுக்கே, அழகு வந்து சேருகிறது. எங்கடா தங்கியிருக்கீங்க?" என்று கேட்டார் பல்லாஜி.
"மாமாஜி, உங்களுக்கு மட்டும் சொல்றேன், அப்பாகிட்ட போட்டுக் கொடுக்கக் கூடாது. ப்ராமிஸ்." என்றாள் ஜானகி.
"இவ்வளவு பீடிகையைப் பார்த்தால் ராத்தோட்ஸ் ஸ்வர்ண மஹலா?" என அலட்சியமாய் நாட்டுக் குண்டை வீசினார் பல்லாஜி.
"ஹே,புத்தரூ, உங்கள் அப்பனும், ஹேமந்தும் (மஞ்சரி அப்பா) தான் பேசிக்க மாட்டார்கள், ஆனால் பஞ்ச பாண்டவர்கள் நாங்கள் லிங்கிலத் தான் இருக்கிறோம்." என்றார் ஓமி பல்லா.
"மஞ்சரி செகாவத், உன் கூடத்தான் படிக்கிறாளாமே?" எனக் கேட்டார் பிரித்தோ. பின் உள்ளே குரல் கொடுத்தார். "ஏ சிம்மி, பிங்கி, ஹர்லினு இங்க வாங்க." என்றார்.
"நானிஷா, நானாஷா கிட்டச் செல்லம் கொஞ்சியாச்சா?"என்றார் பல்லாஜீ.
"ஆச்சு ஆனால் அவங்களுக்குத் தான் நான் பேத்தியென்று தெரியாது," என்றாள் ஜானகி.
"விடுடா,தெரியவச்சுடுவோம், ஸப் சங்கா ஹோகா!" என்றார்.
"மம்மிஜீ கூப்பிட்டீங்களா?" என்றபடி மூன்று பெண்கள் வந்தனர்.
"சிம்மிதீ பிங்கி,பாபிஜீ, எப்படி இருக்கீங்க?" என்றாள் ஜானகி.
ஹர்லினுக்கு ஜானகி அமிர்தாவை அறிமுகப் படுத்தினார் ப்ரீத்தோ.
"ஜானி பேபி, வாடா வா, நல்லா இருக்கியா, உன் அண்ணா என்ன பண்றான்?" என்றாள் சிம்மி.
"சிம்மிதீ, நீங்க இங்க இருக்கிறது தெரிந்தால், இன்றைக்கு ப்ளைட்டுக்குப் போகாமல் இருந்திருப்பான். ஆகா ஜஸ்ட் மிஸ்." என்றாள் ஜானகி.
"இங்க வந்திருந்தானா என ஆர்வமாகக் கேட்டாள்." சிம்மி.
"யாரு சிம்மி?" என்றபடி வந்தான் சிம்மியின் கணவன் கையில் பெண் குழந்தை ரிங்கு.
"ஜீஜூ, அது, சிம்மியோட பாய் பிரண்டு!" என்றாள் பிங்கி. அங்குத் தனியே குடும்ப விசாரணை ஓடிக் கொண்டு இருந்தது.
"பாபி ,ஜெய் பாயி எங்கே?" என்றாள் ஜானகி.
"இப்ப தான் யூவியைக் கூட்டிட்டு ஐஸ்கிரீம் வாங்கப் போனார்." என்றாள் ஹர்லின்.
"நாங்கள் வந்தது தெரியுமா, போன் பண்ணுங்க, எனக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் கோன் இவளுக்கு வெனிலா." என்றாள் ஜானகி.
"ஏற்கனவே சிம்மிதீ சொல்லி அனுப்பிட்டா." என்றாள் பிங்கி.
"தீதீ, ஞாபகம் இருக்கா?" என்றாள் அமிர்தா.
"ஜானியும் ஐஸ்கிரீமும் மறக்கமுடியுமா, அவளுக்கு வேண்டியது இல்லைனா ஒருவழி ஆக்க மாட்டா." என்றாள் சிம்மி.
கார் ஹாரன் சத்தம் கேட்க, ஐஸ்கிரீம் வந்துடிச்சு என ஒரே ஆர்ப்பாட்டம். "ஏய், பாந்திரியாங், ஜஸ்கிரீமே பார்த்தது இல்லையா?" என ப்ரீத்தோ திட்டினார். உள்ளே நுழைந்த ஜெய்பிரகாஷ் பல்லா கையில், ஐஸ்கிரீம் கடையே இருந்தது. பேக் பேக்காக இருந்தது வேலையாளைக் கூப்பிட்டு உள்ளே வைக்கச் சொன்னார்கள். இப்போதைக்கு ஒரு பேக்கை பிரித்தனர்.
ஜானகி அருகில் வந்த அமர்ந்த ஜெய், "ஜானிபேபி, கொஞ்சம் இளைத்து போய்ட்டியோ?" என்றான்.
"ஆமாம் என் கூட ரோகா செஞ்சுக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டேயில்லே அது தான்." என்றாள் ஜானகி.
"இப்ப கூட ஒன்னும் பிரச்சினை இல்லை, ஹர்லின் ஒண்ணும் சொல்ல மாட்டாள். மதராசன் கல்யாணம் பண்ணிக்கலாம். ப்ரீத்தோவை சமாளிக்க முடியாமல், இன்னொரு ஆளு வந்தால், சாஸ்-பஹூ சண்டை நடக்கும். நாங்கள் எஸ்கேப் ஆகலாம் அப்டின்னு பார்த்தா, இவள் சாசுமாகிட்ட சரண்டர் ஆகிட்டாள். அதுனால தான், நீ வா மேரி ஜானி, ஒரு கை பார்க்கலாம்." என்றான்.
"அடப் பாவி, பாபி என்ன இது? மாமாஜீ, என்ன இது?" என்றாள்.
"அடப் போமா, அவன் ஹால்ல இருக்கிறதுனால பேசுவான், அந்த ரூம்குள்ள போகும் போது மூனு அடி மனுசனா போவான்." என்றார் பல்லாஜீ.
"பாபுஜீ, ப்ரீத்தோ ரூம்க்கு நீங்க எத்தனை அடிக்கு போவீர்கள்?" என்றான் ஜெய்.
"நமக்கெல்லாம் வெளியே வரது தான் அடி கணக்கு 1.அறை,2.குத்து 3.மிதி. " எனச் சைகையுடன் செய்தார் பல்லாஜீ. எல்லாரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க. சிரித்ததில் ஜானகிக்கு இடுப்பு, அல்லையில் பிடித்தது.
"மாமாஜீ, போதும்,போதும் என்னால சிரிக்க முடியலை." என அவள் இடுப்பைப் பிடிக்க. "ஸோனிகுடி, என்ன ஆச்சு?" என்றார் ப்ரீத்தோ ஜானகி பக்கத்தில் வந்து, இடுப்பில் தேய்க்க வந்தார் ஏதோ சுளுக்கு என நினைத்து.
"மாமி, நஹி." என அலறி விட்டாள் ஜானகி. அமிர்தா காயம் பட்ட விசயத்தைச் சொன்னாள். "சரி நீ வா" என அவளை ரூமிற்கு அழைத்துச் சென்று காயத்தைப் பார்த்தார்.
அதைச் செய்தவனுக்குப் பஞ்சாபியில் அர்ச்சனை செய்தார். "இரு. உனக்குப் பத்துப் போடுகிறேன் இரண்டு மணி நேரத்தில் சரியாகலைன்னா என்னானு கேளு!" எனச் சில பல சாமான்கள் சேர்த்து, பசும் மஞ்சள் பத்து போட்டு விட்டார்.
ரூமிற்குள் பட்டர் ஸ்காட்ச் கோனோடு வந்த பிங்கி "ஜானி இந்தா உன் பேவரைட்!" எனக் கொடுத்தாள்.
அதைக் கையில் வாங்கப் போனவள், அன்று ஏர்போர்ட் சம்பவமும், அவனும், அவன் பார்வையும் ஞாபகம் வர அப்படியே சிலையானாள்.
ப்ரீத்தோ மாமி தான், "அவளுக்கு இப்ப வேணாம்டி மருந்து போட்டு இருக்கிறேன்." எனத் தடுத்தார். இவளும் நல்லது எனக் கண்ணை மூடி சாய்ந்தாள்.
"அம்ரூ நீயும் ரெஸ்ட் எடு, சாய்ந்திரம் ஷாப்பிங் போகலாம்." என்றார் ப்ரீத்தோ.
ராத்தோட் மேன்சனில் அதே நேரம் ஜானி தீதி இல்லாமல் போர் அடிக்கிறது என்றாள் தீப்தி. கெஸ்ட் தங்கும் தளத்தில் இளையவர்கள் அமர்ந்திருந்தனர்.
“ராஜ்வி, ஜஸ்கிரீம் ஆர்டர் பண்ணுடா!” என்றாள் ஹரிணி. சரி என்ற ராஜ், மொபைலில் ஆர்டர் செய்ய, ஒவ்வோர் வகையாகச் சொல்லி, யாருக்கு என்ன என ஆர்டர் செய்தவன்,
"ஜானகிக்குப் பட்டர் ஸ்காட்ச் சரி தானே பையா!" என்றான் ரகுவீரை பார்த்துக் கேட்டான் வேண்டும் என்றே.
"அவள் எங்க இங்க இருக்கா நீதானடா அனுப்பி வச்ச." என எரிச்சலாகப் பேசினான் ரகுவி.
"ஆமாம், மறந்தே போயிட்டேன்." என்றான் ராஜ்.
"போனப் பிறகு ஒரு போன் பண்ணினாளாடா?" என்றான் குறையாக.
"அம்ரூ, படி மம்மாக்கும் எனக்கும் கூப்பிட்டுச் சொன்னாள். அப்கோர்ஸ் அந்த வீட்டு ஆண்டி, பஞ்சாபி என்ன பேரு? ம்ம்.. ப்ரீத்தோ ஆண்டி கொஞ்சம் முன்னே படிமம்மா கிட்ட பேசுனாங்க, அவர்கள் ஜானகி பேமலி ப்ரெண்ட் தானாம். முந்தியே லீவுக்கு இவங்க ஊரில் தங்கி இருக்காங்கலாம் ஜானகி, அம்ரூ. என் மகள் மாதிரி, நான் பார்த்துக்கிறேன். இப்ப கூட அவள் காயத்துக்கு மருந்து போட்டேன், இன்னும் கொஞ்சம் நேரத்தில் பாருங்கள் சரியாகிடும்னு சொன்னாங்க." என்றான்.
"காயத்துக்கு மருந்துன்னா, இன்னும் பெயின் இருக்கா?" எனப் பதறினான் ரகுவீர். "பையா ஜானி சும்மா இருக்கா, ரிலாக்ஸ். " என்றான் ராஜ்.
வேகமாக மொபைலை எடுத்து நம்பரைத் தட்டப் போக,"பையா, அவ தூங்கிகிட்டு இருப்பாள்." என்றான் ராஜ். ம்ச்ச் என அங்கிருந்து நகர்ந்தான் ரகுவீர்.
ரன்வீர் "ஏன் பையா, எந்திரிச்சு போறாங்க?" என ஐஸ்கிரீம் பார்சல் ரிசீவ் செய்து கொண்டு வந்தான் அதற்குள் ஜஸ், ஜஸ் என ரோஹன், ஹாசினி ஓடி வந்தனர்.
ரகுவீர், இல்லாததால் தைரியமாக ராஜ், ஏர்போர்ட் கதையைக் கூறினான். எல்லோரும் ஜானகி ஃபேன் க்ளப் மெம்பர் ஆனார்கள்.
ரகுவீர், தன் அறைக்குள் வந்து அமிர்தாவுக்குப் போன் செய்தான். திரையில் ரகுவீர் நம்பரைப் பார்த்து பால்கனிக்கு சென்று அட்டண்ட் செய்தாள்.
"ஹலோ அண்ணா!"என்றாள்.
"அம்ரூ சேஃப் ஆகப் போய்ச் சேர்ந்தீர்களா? ஒண்ணும்பிரச்சினை இல்லையே???" என்றான்.
"ஒண்ணும் இல்லை அண்ணே, நம்ம கார் தான் இறக்கி விட்டுச்சு, வந்துட்டோம். ஓமி மாமாஜீ எங்களுக்கு ஏற்கனவே நல்ல பழக்கம்." என்றாள் அம்ரூ.
"ஏதாவது அன்கம்ஃபர்டபிளா பீல் பண்ணா சொல்லுமா கார் அனுப்புறேன்." என்றான் ரகுவி.
"ஐயோ அண்ணா, இங்க இருந்தால் எங்க ஊரில் இருக்க மாதிரி. சிம்மிதீ , ஜீஜூ, ஜெய் பாயி, பாபி, பிங்கி, எல்லாத்துக்கும் மேலே ப்ரீத்தோ மாமி எல்லாரும் நல்லா பழகுவாங்க நீங்க கவலையே படாதீங்க." என்றாள் அம்ரூ.
"வேற ஒன்றும் பிரச்சனை இல்லையே?" என்றான் தயங்கி நேரடியாக ஜானகியைப் பற்றிக் கேட்கவும் இல்லாமல்.
"வேற ஒன்றும் இல்லை அண்ணா." என்றாள் அமிர்தா.
"ஜான்வி, என்னமா பண்றா, காயம் இன்னும் வலிக்கிறதா. மறுபடியும் ஹாஸ்பிடல்ல காட்டலாம், ஈவினிங் வருகிறேன்." என்றான் ரகுவீர்.
"இல்லைண்ணா மதியம் வேகமா சிரித்தாள் அதில் கொஞ்சம் பெயின் வேற ஒன்னும் இல்லை." என்றாள்.
"அவ எதற்குச் சிரித்தாள்?" என அவன் கோபப்பட்டான்.
"அண்ணா!!!" என அமிர்தா அதிர்ந்தாள். தன் கேள்வி, தனக்கே அபத்தமாகப் பட்டது ரகுவீருக்கு.
"ஓ, சாரி,அதாவது மெதுவா சிரிச்சிருக்கலாம்லனு சொல்ல வந்தேன்." என அவன் சமாளிக்க. இப்போது சிரிப்பது அமிர்தாவின் முறையானது.
"அண்ணா, நல்லா இருக்கா. நீங்க கவலைப் படாமல் இருங்க." என்றாள்.
"சரிமா, ஏதாவதுன்னா சொல்லு.” என்றபடி அரை மனதாகப் போனை வைத்தான் ரகுவீர்.
‘இப்ப எதுக்கு வீட்டை விட்டு போனா, நான் கோபத்தில் சொன்னா உடனே போய்டு வாளா? என்னைய ஏண்டி இந்தப் பாடு படுத்துற. ம்ப்ச்’ எனத் தன்னைத் தானே நொந்து கொண்டான் ரகுவீர்.