தொடர் : 22
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
மனதின் வார்த்தைகளுக்கும், மூளையின் வார்த்தைகளுக்குமான போராட்டம். அறிவு சார்ந்த மூளையும், உணர்வு சார்ந்த மனதும் ஒன்றை வீழ்த்த மற்றொன்று முயன்று கொண்டே இருக்கும். இரண்டும் சேர்ந்து வெல்லும் போது மனிதன் பூரணச் சந்தோஷமாக இருப்பான்.
ரகுவீரின் உள்ளே இந்தப் போராட்டம் தான் நடந்தது. 'அந்த ஒரு ஸீஸீ டீவி போட்டேஜ் போதுமா, நான் ஒரு பொண்ணைச் சந்தேகிக்க, அதுவும் ஜான்வியை' என அவன் மூளை கேட்டது.
'அவள் அடிபட்டப நானும் அவளைத் தூக்கினேன் தானே. தன்னிலையில் அவளால் நிக்க முடியாதப்போ தான், அவள் உதவியை ஏற்பாள். அப்ப அவன் தூக்கிட்டுப் போகும் போது, தன்நிலையில் இல்லை. ஜான்விக்கு ட்ரிங்க் பண்ற பழக்கம் கட்டாயம் இல்லை. இப்படி யோசிச்சது தெரிஞ்சா கூடக் கொன்னுடுவா அப்ப அங்கே என்ன நடந்திருக்கும், அமுதன், பாலன் இரண்டு பேரும் அங்கே தான் இருந்தாங்க, அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை. ஏன் நானும் அங்கே தானே இருந்தேன், நான் எப்படி அவளுக்கு எதுவும் நடக்க விடுவேன்.ஏன் நான் கூட வரும் போது தான் மாலில் அவளுக்கு அட்டாக் ஆனது.’
காலையில் ஜானகியுடனான தன் சண்டையை நினைத்துப் பார்த்தான். ராஜ் தானே நின்னுகிட்டு இருந்தான். இவ எப்ப வந்தால்? இதுவரை என் ரூம் பக்கம் வந்ததே இல்லையே. முதல்லையே உள்ளே வந்தாளா' என யோசித்து, யோசித்துத் தலை ,கழுத்து எனத் தடவிக் கொண்டவன், கழுத்தில் எப்போதும் போட்டிருக்கும் செயின் காணவில்லை என உணர்ந்து, எங்க கழட்டி வச்சேன். என யோசித்து, தலைவலி வந்தது தான் மிச்சம்.
ஏதோ ஞாபகம் வந்தது போல் லாண்டரி கூடையில் இரவு அணிந்திருந்த வெள்ளை குர்தாவை பார்க்க அதில் செயின் இருந்தது. அதோடு நீளமான முடிக் கற்றை, அதை எடுத்துப் பார்த்தான். 'இதை யாராவது பார்த்தா, என்னை என்ன நினைப்பாங்க. யாரோடது இந்த முடி? என் குர்தாவில் ?' என யோசித்த படி முடியை விரலில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"பையா!" என ராஜ் சத்தம் கேட்டது. அந்த முடியை வேகமாக மறைத்த ரகுவீர், "இதோ வரேன்." என்றான். "பையா, இந்தாங்க ஐஸ்கிரீம்." என நீட்டினான்
"வைடா, அப்புறம் சாப்பிடறேன். காலையில் என்ன நடந்தது சொல்லு." என்றான் ரகுவீர்.
"நீங்க தான் ஜானகியை கண் முன்னாடி வராதேன்னு சொல்லிட்டீங்க. பாவம் ரொம்ப ஹேர்ட் ஆகிட்டாள்." என்ற ராஜிடம் . "முழுசா சொல்லு." என்றான் ரகுவீர்.
"நேத்திலிருந்து சொல்லனும் இருந்தேன் ஏன் பையா, உங்கள் டிரிங்ஸ் அவுன்ஸ் அளவு கூடத் தாண்டாதே, நேத்து அளவு ரொம்ப ஜாஸ்தி, யாரையோ திட்டிகிட்டே வந்திங்க. ஒன்றும் புரியலை. வீட்டுக்கு வந்து ட்ரஸ் மாற்றிப் படுக்க வச்சோம்.
காலையில் நானும் எந்திரிக்க லேட், சரி உங்களைப் பார்க்க வரலாம்னு உங்கள் கதவைத் திறக்க வந்தேன். உள்ளே இருந்து ஜானகி வந்தாள். மயூ ரூம்னு நினைத்து மாற்றி வந்துட்டேன். உன் பையா, கீழே படுத்து கிடக்கிறார்னு சொன்னாள். அப்பத் தான் நீங்க எந்திரிச்சீங்க, ஹேங்க் ஓவர் தலை வலியோடு இருந்தீங்க. அதனால் ஜானியை லெமன் ஜூஸ் அனுப்பச் சொன்னேன். யாருக்கும் தெரியாமல் ஜூகுனு கிட்ட அனுப்பி விட்டா. மஞ்சரி ஊருக்குக் கிளம்பியதால் என்னை அனுப்பிவிட்டு, அவ உங்களுக்கு ஜூஸ் குடுத்தா. ஏன் பையா அவ கழுத்தை நெரிச்சீங்க?
'பாவம் சின்னபொண்ணுன்னு' நான் சொன்னதுக்கு .இவளான்னு' கேட்டு ஒரு லுக் விட்டீங்க.பாவம் ஜானி. எனக்கென்னமோ, அதுலதான் அவள் ஹேர்ட் ஆகியிருப்பான்னு தோனுது,மாத்திரையைப் போட்டுட்டுப் படுத்திட்டாள், ஏதாவது பிரச்சனையான்னு அம்ரு கூட கேட்டாள்." என விளக்கினான் ராஜ்.
"சரி அவளுக்குப் போனை போடு, நீ என் கூட இங்கே இருக்கன்னு சொல்லாமல் பேசு ஸ்பீக்கர்ல போடு." என்ற ரகுவீரிடம்.
"பையா, அவ ரொம்ப நல்ல பொண்ணு, அவங்க குடும்பம் நம்மக் குடும்பம் மாதிரி தான், மரியாதையானவங்க. நம்ம மயூவை அனுப்பியது மாதிரி தான் அவங்களும் ஜானியை அனுப்பி இருக்காங்க. சில பெண்கள் உங்க கிட்ட நடந்ததை வச்சு, ஜானியை ஜட்ஜ் பண்ணாதீங்க ப்ளீஸ்." என்றான்.
"ராஜ், நீதானே அவளுக்குக் காயம் ஆறலைனு சொன்ன, வா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம். தயாராகச் சொல்லு." என்றான்.
"பையா, ஒன்னு செய்யலாம், எல்லாரும் ஜுஹூ பீச் போகலாம். அங்கேயே ஜானி, அம்ரூ, ப்ரீத்தோ ஆண்டி பேமலி எல்லாரையும் வரச் சொல்லலாம்." என யோசனைச் சொன்னான் ராஜ்.
ரகுவீருக்கும் அதுவே சரியெனப் பட, " எல்லாரையும் கிளப்பு, அவர்களை அங்க வர வைக்கிறது உன் பொறுப்பு." என்றான் .
ராத்தோட் பிரதர்ஸ் & பேமலி ஜுஹூ பீச் சென்றடைந்தனர். ஜானகியை, அவர்கள் அனைவரையும் அழைத்து வரச்சொன்னான் ராஜ். ஜானகி, ஓமி பல்லாவிடம் இதைச் சொல்லவும் "நீ போன் போட்டு குடு நான் பேசுகிறேன்." என்றார் பல்லாஜீ .
ஜானகி, ராஜிற்க்கு மீண்டும் போன் போட்டு, "ஹலோ, ராஜ் மாமாஜீ உங்க கிட்ட பேசனுமாம்." என்றாள். "நமஸ்தே அங்கிள் ஜீ!" என்றான் ராஜ்.
பல்லாஜீ, "ஜீத்தே ரஹோ புத்தர்ஜீ. புத்தரு, இங்க ஒரு ப்ரைவேட் ஏரியா நம்ம பீச்ஹவுசுக்குப் பக்கத்தில் இருக்கிறது, வேற யாரும் வரமாட்டாங்க, நீங்க உங்க பேமலியோட வாங்க லொகேசன் அனுப்பறேன்." என்றார்.
ஜானகியின் பெயரைப் பார்க்கவும், அருகில் ரகுவீர் மட்டும் இருந்ததால் ஸ்பீக்கரில் போட்டிருந்தான் ,எனவே அவர் பேசுவதை, இருவரும் கேட்டிருந்தனர். ரகுவீர் சரி எனத் தலை ஆட்ட, "சரிங்க அங்கிள் ஜீ!" என்றான் ராஜ்.
ஜானகியிடம், "ராத்தோட் பேமலி இங்க வருதும்மா, ஆண்டிகிட்ட சொல்லு, நாளைக்கு ஷாப்பிங் போகலாம்." என்றார்.
ப்ரித்தோ இன்னும் சில விருந்தினர் வருவதில் உற்சாகமானார். இரவு உணவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ரகுவீர், இவர்கள் வீட்டுக்கு வருவதால் ஒரு ஸ்வீட் கடையை அள்ளி வந்தான்.
ஜானகிக்கு, அன்று மதியம், ஐஸ்கிரீமை மறுத்துக் கண்ணை மூடியவள், சிந்தனை ஓட்டம் அவளின் வீருஜீயை சுற்றியே ஓடியது.
'அவன் மேல் இருந்த கோபம், அதையும் தாண்டி வருத்தம், இந்தக் 'கடுவா' எப்படி என்னைய அப்படிப் பார்க்கலாம். நான் என்ன பண்ணேன். இவன் கூடப் பேசவே கூடாது. ஆமா, நீ பேசாமல் இருக்க லட்சணம் தான் தெரியுதே, பேசலை, பேசலைனு அவனையே நினைத்துக் கிட்டு இருக்க' என்றது அவள் மனசாட்சி.
நான் ஒண்ணும் அவனை நினைக்க மாட்டேன், என்னை எவ்வளவு கேவலமா பார்த்தான். அது எப்படிப் பார்க்கலாம். என மனதில் வார்த்தைகளைக் கொண்டே சண்டையிட்டு கொண்டிருந்தாள். அப்படியே தூங்கியும் விட்டாள்.
ஜானகி, அந்த மேல்மாடத்தில் நின்று ஓயாது, கரையோடு கட்டிப் புரளும், அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் வந்த தொட்டுச் செல்லும் அலைகள் அவனது நினைவுகள் போல் தோன்றின. அவன் நினைவுகளும் அப்படித்தான் அவளைத் தழுவி செல்கின்றன.
அவர்களுக்குள் எட்டு வருட வித்தியாசம் இருக்கும், எனவே ரகுவீர் அவளை எப்போதும் அரைடிக்கட் என்றதொரு நினைவில் ஓர் ஆளுமைக்குள் வைத்திருப்பான். சில நேரங்களில் அவனது அந்த ஆளுமைக்குள் அடங்கியிருக்கும் அவள், சில நேரங்களில் அதனைத் தாண்டி, தனது ஆளுமையில் அவனைக் கொண்டு வந்திருப்பாள். ஆனால் அதை அவன் ஒரு போதும் உணர்ந்தது இல்லை.
இரண்டு வாரக் காலங்களில் அவர்களுக்கு, பல வருடங்கள் பழகிய தோழமை இருந்தது. எல்லாரிடமும் கலகலப்பாகப் பழகும் ஜானகியின் குணம்.
பிஸ்னஸ் வட்டத்தில் எப்போதும் இறுக்கமாக இருக்கும் ரகுவீரையும் கூடச் சகஜமாக இழுத்து வந்தது.
எந்த விசயமாயினும்,எதிராளிக்குப் பதில் கொடுக்கும் பழக்கத்தில், இவளது துடுக்குத்தனம் பேச்சுகளுக்கும் அவளைப் போலவே பதில் தந்ததில் அவன் இறுக்கமும் தளர்ந்தது. இன்று காலை முதலான அவர்களின் தவறான புரிதல், இருவருக்குமே மன நிம்மதியைப் பறித்தது.
ஜானகி, பால்கனியில் நின்று, அன்று காலை நடந்ததை நினைத்திருந்தாள். அவன் மேல் கால் இடறி விழுந்ததையும், அவன் ஸ்பரிசத்தையும், இறுகிய அணைப்பையும் நினைக்கையில் மூச்சை அடைப்பது போல் ஒரு உணர்வு.
அந்தச் சுவாக் காற்று, இப்போதும் அவளுக்கு நினைவில் உணர, கடல் திசையில் தூரத்தில் கண்கள் வெறித்துப் பார்த்திருக்க, மயக்கத்தில் பதுமை போல் நின்றாள் ஜானகி தேவி.
அவளது முழு நீள ஸ்கர்ட்டுக்கும், ஷார்ட் டாப்புக்கும் இடையே, பின்னிருந்தபடி அவள் இடையில் ஓர் கரம் வருடியது, அவள் அதிர்ந்து திரும்பும் முன்னே, கழுத்து வளைவில் முகம் புதைத்து, "என் கூடப் பேச மாட்டியா? மேரி ஜான், ஜானூ!" என்ற ஹஸ்கி குரலில் அவளிடம் ரகசியம் பேசி, தன் இதழ்களால் அவள் கழுத்தில் கவிதை எழுதிக் கொண்டிருந்தன.
அவை அவள் நினைவில் உணர்ந்த ரகுவீரின் கரங்களும் இதழ்களும் தான். அதிர்ந்து, பின் கண்ணை மூடி அவன் ஸ்பரிசத்தை அனுபவித்தவள், அவன் கை இடையில் பட்ட காயத்தை ஆராய்ந்து விட்டு, இடையை ஆராய முன்னேற, இவளுக்கு அவனின், "இவளா சின்னப் பொண்ணு?" என்ற அவனது குரல் ஞாபகம் வர, அவனிடமிருந்து தன்னை உருவிக்கொண்டு பால்கனியின் மறுகோடி சென்று நின்றாள்.
காரின் ஹாரன் சத்தம், கேட்டு தன் அருகிலிருந்தவனை, "நீங்க இங்கிருந்து போங்க." எனச் சொல்லி பக்கவாட்டில் பார்க்க வெறுமையாக இருந்தது அந்த இடம். போய்ட்டானா என மனம் பதைக்கச் சுற்றி, முற்றிப் பார்த்தவளின் பார்வை, கீழே நுழைவாயிலுக்குப் போக அங்கே சிறிய உருமலுடன் வந்த ஜீப்பிலிருந்து, ரகுவீர் இறங்கினான்.
ஜீன்ஸ் டீசர்ட், கண்களில் கூலர்ஸ் சகிதம் கையில் கீயுடன் இறங்க, ராஜ் வீர், ரன்வீர், தீப்தி ரோஹன் இறங்கினர். மற்றொரு ஆடி வாகனத்தில் ஹரிணி குடும்பம் சிருஷ்டி உடன் வந்து இறங்கினர்.
ப்ரீத்தோ பல்லாஜீ அவரது குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர். மற்றவர்களை உள்ளே போகச் சொல்லி, ராஜ் ரன்வீர் கைகளில் பொட்டலங்களை எடுத்துக் கொடுத்து விட்டு "நீங்க போங்க மீதியை நான் எடுத்துட்டு வரேன்." என்றான் ரகுவீர்.
ரகுவீர் கீழே நிற்கிறான் அப்போது என் கூட இருந்தது என அவள் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்தபடி ரகுவீரை பார்த்து நின்றாள். அவன் கூலர்ஸை கழட்டி விட்டு அண்ணாந்து வீட்டைப் பார்க்க அப்போதுதான் அவனையே, முகம் செம்மையுறப் பார்த்து நின்ற ஜானகி, அவன் கண்ணில் பட்டாள்.
அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் . கண்களில் காதல் பரிமாறப் பட அதனை அறியாத அந்தக் காதலர்கள், அப்படியே பார்த்து நின்றனர்.
பின்னர்ச் சுயநினைவு வந்த ஜானகி அவனின் வார்த்தையான "என் கண் முன்னே நிற்காதே!" என்பது நினைவில் வர, திரும்பி உள்ளே சென்று விட்டாள். ரகுவீர் 'இவளுக்குத் திமிரு.' என்று விட்டு உள்ளே சென்றான்.
அந்தப் பஞ்சாபி குடும்பத்தை அவர்களுக்குப் பிடித்திருந்தது. அமிர்தா, ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்தினாள்.
பல்லாஜீ, ராஜ் வீர் கையைப் பற்றி, "இவரு நம்ம தாமாத், மஞ்சரியை கட்டிக்கப் போகிறார்" எனச் சொல்லவும், "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றாள் ஹரிணி.
பல்லாஜீ சமாளிப்பாக, "என் பிஸ்னஸில், இவங்க மாமனார் பார்ட்னர். அப்ப இவர் என் மருமகன் தானே" என்றார்.
சிம்மி கணவனும், அமர்சிங் பேசிக் கொண்டிருந்தனர். ஜெய், வீர் ப்ரதர்ஸ் பல்லாஜீயுடன் பேசிக் கொண்டிருந்தனர். ஹர்லின் பாபி ,வேலையாட்கள் உதவியுடன். கரமாகரம் சமோசா, சாய்க் கொண்டு வந்தாள். மகளிர் கூட்டம் அரட்டையைத் தொடங்க, பொறுத்துப் பார்த்த ரகுவீர். ஜானகி எங்கே எனக் கேட்டான்.
"வோ, ஸோனிகுடி எந்திரிச்சு இருக்கும். வர்ற நேரம் தான். பிங்கி நீ போய்ப் பாரு." எனச் சின்ன மகளை ஏவினார் ப்ரீத்தோ.
"ஆண்டிஜீ அங்கிள்ஜீ, உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, ஒரு அபிஷியல் மெயில் அனுப்பனும். ஜானகிக்கு தான் தெரியும். கொஞ்சம் கான்பிடென்சியல், அவள் ரூம்ல பார்க்கட்டா?" எனக் கேட்டான்.
ப்ரீத்தோ பல்லாஜீயை பார்க்க, அதற்குள் நேற்று பார்ட்டி பற்றி மற்றவர் கூறினர். "ஓ, புத்தர்ஜீ நீங்கப் போய்ப் பாருங்கள் பிங்கி, பாய் ஸாப் கூட்டிட்டு போ." என்றார்.
ஜானகி, ரூமில் 'அய்யோ, வெளியே போனா இந்தக் கட்வா இருக்குமே, அது தான் முகத்தில் முழிக்காதேன்னு சொல்லுச்சே' எனப் புலம்பிக் கொண்டிருந்தாள். கதவு தட்டப்பட்டது. அய்யோ வந்துட்டாங்களே, என மனதில் தவித்தாள்.
"ஜானகிதீதீ கதவை திறங்க, இவங்க உங்களைப் பார்க்க வந்திருக்கிறாங்க." எனப் பொதுவாகச் சொன்னாள். ரகுவீர் மெதுவான குரலில், "தேங்க்யூ சிஸ்டர் நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்." என அனுப்பி வைத்தான்.
வீரு மலை இறங்கி விட்டானா . சமாதானத்திற்கு வந்து விட்டான்.