Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 22- பொறாமையும்,புரிதலும்.

வகைகள் : தொடர்கள் / மனதின் வார்த்தைகள் புரியாதோ

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

22- பொறாமையும்,புரிதலும்.

 

நம் மனதுக்குப் பிடித்தவர்கள் மேல் உள்ள உரிமையில், அவர்கள் மனதைத் துன்புறுத்துகிறோம் என்பதைக் கூட நாம் அறிவோம் இல்லை.இதற்கு அவர்கள் நம் மீது வைத்த அன்பும் காரணம். அவர்களும் நாம் செய்யும் துன்புறுத்தலுக்கு ஒரு சரியான காரணத்தை, சரியென நமக்குப் பட்டதைச் சொன்னாலும் கூட போதும் சமாதானம் ஆகி ஒத்துப்போகின்றோம்.

அவர்களுக்கும், சமாதானம் தான் தேவையே ஒழிய, நீதி நியாயம் எல்லாம் இல்லை. சமாதானம் ஆவதற்கு நமக்கெனக் காலதாமதம் ஆகும், அதுவும் நாம் மற்றவர்க்குக் கொடுத்த துன்பத்தைப் பொறுத்து. ஆனால் கட்டாயம் சமாதானம் வந்தே தீரும். நம் கதை மாந்தர்களும் இங்கே வாழ்பவர் தாமே, நம்முடைய பிரதிபிம்பங்கள்.

ஓம்பிரகாஷ் பல்லாவின் வீட்டிற்க்கு வந்த ராத்தோட் குடும்பத்து இளையவர்கள் ஹாலில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ரகுவீர் பல்லாஜியின் அனுமதியுடன் மேலே ஓய்வெடுக்கும் ஜானகியைக் காணச் சென்றான். பல்லாஜீயின் இளைய மகள் பிங்கி, ஜானகியின் கதவைத் தட்டி அழைத்து விட்டு விடை பெற்றாள். கதவை ஜானகி திறக்கவும்  வேகமாக உள்ளே வந்த ரகுவீர் பேச்சுக் கொடுக்காமல் சத்தமில்லாமல் கதவைச் சாத்தித் தாழ் போட்டான்.

"ஐயோ கதவை திறங்க  எல்லாரும் தப்பா நினைப்பாங்க." என பதறினாள்  ஜானகி 

"என்னைப் பார்த்தா ரோட் சைட் ரோக் மாதிரி இருக்கா எதுக்கு இப்படிப் பிகேவ் பண்ற." என ரகுவீர் கோபிக்க,

"நீங்க தான் என்னை அடுத்தவங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்த இடத்தில் இப்படிப் பண்றீங்க." என வேறெங்கோ பார்த்தபடி ஜானகி சொன்னாள்.

"எனக்கும் தெரியும். கான்பிடென்சியலா ஒரு மெயில் அனுப்பனும்  உனக்குத் தான் அது தெரியும்னு, ஆண்டி அங்கிள்கிட்ட பெர்மிஸன் வாங்கிட்டு தான் வந்தேன்." என ரகுவீர் சொல்லவும், 

லேப்டாப் பை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள் ஜானகி. "சொல்லுங்க என்ன அனுப்பனும்னு?" என அவள் அவனைப் பார்க்காமலே கேட்டாள்.

 

"இங்க என்னைய பார்த்துப் பேசு. இன்னும் அந்தக் காயம் ஆறலைல , அதுக்குள்ள எதுக்கு இப்படி அலையிற? உனக்கு என்னமாவது ஆச்சுன்னா நான் என்ன பண்றது?" என்ற ரகுவீரன் குரலில் பதட்டம் தெரிந்தது.

ஜானகி அவனைத் திரும்பிப் பார்த்தாள், "ஐ மீன், நீ என்னோட, அதாவது எங்களோட பொறுப்பு தானே." என சமாளிக்க, 

"உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம், எனக்கு ஏதாவது ஆனாலும், நானே தான் அதுக்குப் பொறுப்பு. ராத்தோட் பேமலி கிடையாதுன்னு எழுதி தரேன்." என்றாள் ஜானகி.

அவள் பேச்சை பொருட்படுத்தாமல்  "அந்த ஆண்டி ஏதோ மருந்து போட்டதா ராஜ் சொன்னான். வா ஹாஸ்பிடல் போகலாம்." என அழைத்தான்.

"அது தான் நான் நல்லா இருக்கேன்னு சொன்னேன்ல, நீங்க டிக்டேட் பண்ணுங்க, நான் போகனும்." அவள் பிடிவாதமாக சொல்ல  "இப்ப என்ன தான் உன் பிரச்சினை?" சலித்தான் ரகுவீர்.

"பிரச்சினை எனக்கு இல்லை மிஸ்டர். ராத்தோட், உங்களுக்குத் தான். நீங்க தான் என்னைக் கண் முன்னே வராதேன்னு சொன்னீங்க." என அவன் வார்த்தைகளை ஞாபகப் படுத்தவும், 

"அது கோபத்தில் சொன்னது, நீ அந்த ஜூஸை குடிக்க வச்சதுனால!" எங்கோ பார்த்தபடி சொன்னான். 

"பொய் சொல்லாதீங்க உங்களுக்குத் தான் என்னைய பார்க்க பிடிக்கலையே. அப்புறம் என்ன, டிக்டேட் பண்ணுங்கள் சும்மா எதுக்கு தேவையில்லாத பேச்சு." ஜானகி பேச்சை முடிக்கப் பார்க்க, 

 

"நீ, இங்க உன் பேமலி ஃப்ரண்ட்ஸை  பார்க்க வந்திருக்க, சரி. ஆனால் நான் தான் காரணம்னு ராஜ் சொல்றான்." என ரகுவீர் பேச்சைவளர்த்தான்.

"ராஜ், என் அண்ணன் ஃப்ரண்ட் அதுனால கேட்டிருப்பார். நீங்க அவங்களுக்காக உங்கள் கருத்தை மாத்திக்க வேண்டாம். நான் ஒரு சௌத்இண்டியன் பீஜீ பார்த்துட்டேன். ஆபீஸ்க்குப் பக்கம். நாளைக்கு வந்து வீட்டில் சொல்லிவிட்டு மாறிக்கிறேன்." என்றாள் ஜானகி.

ரகுவீர் அதிர்ச்சியாகி "நீ எங்களை இன்சல்ட் பண்ற. உங்கள் அண்ணனே, எங்க வீடு உனக்குப் பாதுகாப்புன்னு சொன்னார்." என அவளை முறைத்து நிற்க, அவளுக்கும் கோபம் வந்தது, 

 

"சேஃப்டியை விட மரியாதை முக்கியம். நீங்க தான் என்னை ஏதோ உங்களை மயக்க வந்த மாதிரி, கால்கேர்ள்ன்னு நினைச்சிங்க போல." என அவள் உடல் துடிக்கப் பேசி முடிப்பதற்குள், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான் ரகுவீர்.

"என்ன பேசுகிறோம்னு  புரிஞ்சுகிட்டு பேசு, இடியட் கால்கேர்ளாம், கால்கேர்ள். உன்னை அப்படியா வச்சுருக்கோம் வீட்டில், கெஸ்ட் ரூமுக்கு  கூட அனுப்பாம, என் தாதிஷா தன் பக்கத்து அறையில் தங்க வச்சிருக்காங்க. இனி இதுமாதிரி பேசினே பாரு, பேசும் முன்ன உன் வார்த்தையை யோசித்துப் பேசு." எனஅவளை நேராக நிறுத்தி, கண்களை ஊடுருவிப் பார்த்த கண்டிப்பான வார்த்தைகளுடன் அவன் உறும,  அவள், தன்  கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி, உடல் நடுங்க நின்றாள். 

அவளை அப்படிப் பார்க்கப் பொறுக்காத ரகுவீர், அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான். அவளின் கண்ணீரால் அவன் டீசர்ட் நனைந்திருந்தது.அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்

"அழாத, அழாத. உன்னை நான் அப்படி நினைப்பேனா, யோசிக்காமல்  பேசலாமா. அப்படி நினைச்சா, யாருன்னே தெரியாதவங்க, வீட்டுக்கு வந்து இப்படி உன்னைச் சமாதானம் செய்வேனா சொல்லு." என சமாதானம் செய்ய, அவன் இதயம் படபடக்கும் சத்தம் கேட்டது. அதில் அவன் வார்த்தைகளின் உண்மையை உணர்ந்தவள், அவன் சமாதானத்தில் மேலும் குலுங்கி அழுதாள். ம்ப்ச் என அவள் முதுகைத் தடவினான்.

"பாகல் மிர்ச்சி. காரமா இருந்தால் தான் மிர்ச்சி நல்லா இருக்கும். இது என்ன கொடமிளகாய் மாதிரி சவசவன்னு நல்லா இல்லையே." என்றவன்,அவளை உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தான். அவள் கொஞ்சம் குடிக்க வாங்கிக் கீழே வைக்க,  "நிஜமாகவே நீங்க என்னைத் தப்பா நினைக்கலைல?" என அழுகையுடே கேட்டாள்.

அவள் கேள்வியிலேயே, தன் வார்த்தை அவள் மனதை எவ்வளவு புண் படுத்தியிருக்கிறது, என்பதையும், அவளை பற்றிய அவன் நினைவும் அவளுக்கு முக்கியமாக படுவதையும் உணர்ந்து, அதையே  "நான் நினைக்கிறது அவ்வளவு முக்கியமா உனக்கு, ஏன் இப்படி ஃபீல் பண்ற?" என கேட்டான் ரகுவீர். 

அவள் இந்தப் பேச்சுவார்த்தையில் அவன் தன்னைத் தவறாக நினைக்கவில்லை என்பதில் சகஜமானவள்,"ஆமாம், நீங்க தானே MD சார், எனக்குக் கான்டேக்ட் சர்டிபிகேட் தரனுமே அதுனால தான்." என்றவள். "சரி, மெயில் டிக்டேட் பண்ணுங்க டைப் பண்றேன்." என கடமையை ஆற்ற அவள் முனைய, 

"அது மறந்துடிச்சு, அப்பறம் சொல்கிறேன்." என மழுப்பினான். 

"தெரியும் முன்னாடியே தெரியும், உங்கள் கான்பிடென்சியல் மெயில் என்னன்னு!" என்றாள் ஜானகி.

"ஆமாம், இரண்டு வாரமா வேலை பார்க்கிற ட்ரைனி கேன்டிடேட், கோடிகளில் டீல் க்ராக் பண்ற எபிலிட்டி இருக்கவங்களுக்கு, இதைப் பற்றித் தெரியாதா என்ன?" என அவனும் சீண்ட ."கான்பிடென்சியல் முடிந்ததா போகலாமா?" என்றாள்.

"அந்தக் காயம் இன்னும் வலிக்கிதா?" கரிசனையோடு வினவினான், 

"லேசா, அப்ப அப்ப வலிக்குது." என்றவளிடம், தயங்கி பின் "காயத்தைக் காட்டு."என்றான் ரகுவீர்.

 

"நெட்பேங்கிங் வச்சு இருக்கீங்கலா. ஒரு பத்து லட்சம் என் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க" என கேட்கவும்,  அவன் புரியாமல், "இப்ப எதுக்கு அவசரமா?" எனக் கேட்டான்.

"ஆமாம், நீங்க தானே என் காயத்தைப் பார்க்கனும்னு சொன்னீங்க. சைட், ஸீயிங் பீஸ்." என அவள் தன் இடுப்பின் பாகத்தைச் சுட்டிக் காட்டி ஜானகி கேட்க, அவன் அடக்க மாட்டாமல் சிரித்தான். ”உன் வாய் இருக்கே  அப்பா, சரி அக்கவுண்ட் நம்பர் சொல்லு." என ரகுவீரும் வினையமாகவே கேட்டான்.

"சீரியஸ்லீ, உலகத்துலையே ஒரு பொண்ணோட இடுப்பை சைட் அடிக்க, பத்து லட்சம் குடுக்கறது மிஸ்டர். ராத்தோட்டாகத் தான் இருப்பார்." என்றவள் மீண்டும் எதையோ நினைத்து அடக்கமாட்டாமல் சிரிக்க,  "இப்ப எதற்குச் சிரிக்கிற?" என்றான்.

"இல்லை, ஃபண்ட் ட்ரேன்ஸ்ஃபர் பண்றேன் சொன்னீங்களே, அதில் ரீசன் கேட்டு ஒரு ஆப்சன் வருமே, நீங்க என்ன எழுதுவீங்க? ஹிப் ஸீயிங் பீஸ்... அப்படீன்னா?" என்றாள்.

அவள் சொன்ன விதத்தில் அவனுக்கும் சிரிப்பு வந்தது. "சான்சே இல்லை, ஏன் உலகத்திலேயே இடுப்புக் காயத்தைக் காட்டப் பணம் கேட்டவளும் நீதான்." என்றவன், "ஜான்வி இது உன் முடியா?" எனச் சின்னப் பாலிதீன் கவரில் இருந்த ஒரு முடிக் கற்றையைக் காண்பித்தான்.

"ஹலோ, நான் உங்க கிட்ட என் முடிய காணோம்னு கேட்டனா? அது எப்படிங்க தெரியும்?" என அவள் துடுக்காக கேட்க,

"இப்படித்தான்." என அவள் ஜடையைப் பற்றி இரண்டு முடி டெக்சரையும் ஒப்பிட்டுப் பார்த்தான். "ஹலோ என்ன பண்றீங்க, ஜடையை விடுங்க வலிக்குது." என கத்தினாள்.

"ஒரே முடி தான், இது என்னோட குர்தால இருந்து கிடைத்தது, எப்படிச் சொல்லு" என்ற கேள்வியோடு நின்றான்.

 

"எனக்கு என்ன தெரியும்." என மழுப்பலாக திரும்பிக் கொண்டாள் . ரகுவீருக்கு சந்தேகம் உறுதிப்பட்டது. அவளைத் தன் புறம் திருப்பி, சுவரோடு நிற்க வைத்து, தன் கைகளை இருபுறமும் வைத்து மறித்துக் கொண்டான்.

"சொல்லு, இல்லைனா விடமாட்டேன்." என அவளை நெருங்கி ஸ்மெல் செய்து, "என்ன பெர்ஃயூம் இது, ஆளை தூக்குது." என்றான். அவளுக்கும் அதே நிலை தான். 

 

'கனவுலையாவது விட்டுட்டுப் போயிடுறான். இப்ப அதுவும் முடியாதே, அய்யோ என்னை மயக்குகிறானே, அவன் என்ன என்னைய ஏதாவது செய்யறதுக்கு முன்னாடி, நான் அவனை ஏதாவது செஞ்சுடுவேன் போல இருக்கே. கிஸ் அடிச்சிறாதடி ஜானி பேபி, இப்ப தான் உன்னை நல்லவன்னு சொல்லியிருக்கான். கைப்புள்ளைய விட மோசமா மாட்டிக்கிட்டேன்.' என மனதில் புலம்ப எக்ஸ்பிரஸன் மட்டும் ஜானகியின் முகத்தில் தெரிய ரகுவீர் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு ஐடியா தோன, அவன் கைகளின் வழியே கீழே குனிந்து தன்னை விடுவித்துக் கொண்டு வந்தாள். அவனின் அடுத்த ஆக்சனுக்குள் அவசரமாக பேச ஆரம்பித்தாள்.

"கேட்கிறது மட்டும், கேளுங்க ரோட் சைட் ரோக்கான்னு, ஆனால் ரோட் சைடு ரோமியோவுக்குக் குறைஞ்சவர் இல்லை நீங்க. தெரியாமல் கால் தவறி உங்க மேல விழுந்தேன், அதுக்கு இப்படியா கட்டி பிடிப்பாங்க, அப்படி டைட்டா இறுக்கீட்டிங்க மூச்சு முட்டுது. நான்  மட்டும் ஸ்ட்ராங்கா இல்லைனா, mrs.ராத்தோட ஆயிருப்பேன். கஷ்டப்பட்டு வெளியே வந்தேன். இதுக்குத் தான் காலா காலத்துல கல்யாணம் பண்ணணும் சொல்றது. வீட்டில் சொல்றத கேட்கனும். நான் உங்க மேல விழும்போது, என் முடி விழாதா, உங்க ஊர்  உப்பு தண்ணிக்கு என் முடி பூரா கொட்டுது." என அவள் பேசி முடித்தாள்.

இப்போது அவன் தான் எம்பேரஸ் ஆனான். "சாரி  ஜான்வி, சாரி, எனக்கே தெரியாமல், எப்படி நான் இப்படி. உன்னை ரொம்ப ஹேர்ட் பண்ணேன்னா? அதுல தான் மறுபடி வலிக்குதா என்ன? அப்ப நான் சுய நினைவில் இல்லைனா, ஒரு பெண்ணைத் தொட கூடத் தயங்க மாட்டேன்னு தெரியுதே. சாரி, என்னைய மன்னிச்சிடு." என அவன் தன்னில் வைத்த நம்பிக்கை பொய்ததில் தடுமாறினான்.

 

"நீ வந்ததும் சொன்னது சரிதான் கதவை திறக்கறேன்." என அவன் கதவை நோக்கிச் செல்ல, .அவனின் அந்தப் புலம்பல் அவளை அசைத்தது. அவனைப் பின் தொடர்ந்தவள், அவன் கையைப் பிடித்து நிறுத்தி, அவன் உதடுகள் மேல் ஓர் விரலை வைத்தாள்

"உஸ், சுப்  எங்க MD சார். கொஞ்சம் நல்லவர் தான் கழுத்தை நெரிப்பார், கன்னத்தில் அடிப்பார். ஆனால் வரம்பு மீற மாட்டார். நீங்க ஒண்ணும் அவரைத் தப்பா பேசாதீங்க." என்றாள்.

அவன் அவளையே பார்த்திருந்தான்.அவள் அவன் கண்ணைப் பார்த்து, "இங்க பாருங்க வீரூஜீ, உங்களை நம்பி எங்க வேணும்னாலும் நான் உங்க கூட வருவேன். உங்கள் மேல நம்பிக்கை இருக்கு. எங்க அப்பா, அண்ணனுக்குப் பிறகு, உங்ககிட்ட பாதுகாப்பா பீல் பண்றேன் போதுமா?" என்றாள்.

"தாங்க்ஸ், மேரி ஜான். என்னைப் புரிஞ்சுகிட்துக்கு, எனக்கும் புரிய வச்சத்துக்கு." என்றான் ரகுவீர். இருவரும் புரிதலின் ஓர் அத்தியாயத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். தன்னைப் பற்றி அவன் தவறாக நினைக்கக் கூடாது என்று அவளும், அவள் தன்னைத் தவறாக நினைப்பாளோ என்ற அவன் பதட்டமும், ஒருவர் மேல் மற்றவர் வைத்த அன்பையே காட்டியது.

அவன் காலையில் வெறித்த பார்வையும், பேசாதே என்றதும் அவளைத் துரத்தி, வீட்டை விட்டு வெளியேற்றியது. அவள் தன் வார்த்தை வீரியத்தால் வீட்டையும், அவனையும் புறக்கணித்ததை, அவனால் சகிக்க முடியவில்லை. தான் பார்த்த கோணத்தில் தவறு இருக்குமோ, எனும் சந்தேகம் வந்தவுடனே, ஏன் அதுக்கும் முன் அவளுக்கு முடியவில்லை எனத் தெரிந்தவுடன், அவளைக் காண ஓடி வந்தான் ரகுவீர்.

அன்பெனும் பாதையில் இவர்கள் நடக்கும் போது, முட்களாக வரும் தொல்லைகள் சவால்களைக் கடந்து, காதல் எனும் இலக்கை சென்றடைவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

இருவரும் கீழே அறைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே அமிர்தாவுடன் பல்லாஜீ் மற்றும் ராம் இவர்களுக்காகக் காத்திருந்தனர். நமது அருகில் இருக்கும் மனிதர்களோ அல்லது பொருளோ எதுவாகினும் அதன் அருமை தெரிந்தாலும் கூட, அதைப் பெரிதாகக் கொண்டாட மாட்டோம்.

 

குழந்தைகளிடம் நூற்றுக்கணக்கான பொம்மைகள் கேட்பாரற்று இரைந்துக் கிடக்கும், ஆனாலும் அடுத்தக் குழந்தையின் பார்வை அதன் மேல் பட்டால் பொறுத்துக் கொள்ளாது, மறைத்து வைக்கும்.

ஏன் மகளிருக்கும்  கூடப் புடவை கடைக்காரர் விரித்துப் போட்ட நூறு புடவையைக் காட்டிலும் , பக்கத்தில் பார்த்துக் கொண்டு இருக்கும் பெண்மணி கையில் உள்ள புடவை தான் சிறந்தது எனத் தோன்றும். அந்தப் பெண்மணி அந்தப் புடவையை நிராகரிக்கப் போனதும் கூட அதுவே தான் தனக்கும் வேண்டும் என எடுத்துச் செல்லும். மேற்கூறியவை சில உதாரணங்களே. இது மனித மனம் சம்மந்தப்பட்டது.

இங்கும் ரகுவீர், ஜானகியிடம் காட்டிய அதே கரிசனம், கேரிங் எல்லாவற்றையும் ராமும் காட்டினான். அதுவும் தோழமை தான், அந்த எல்லையை ராம் என்றும் தாண்ட மாட்டான், ஏனெனில் அவன் சூடு பட்ட பூனை. ஆனால் இது ரகுவீருக்குத் தெரியாது. கீழே இறங்கி வந்தவன் ஹாலில் ராமைப் பார்க்கவும், இதழ்கள் சிரித்தாலும், இதயத்தில் கரித்துக் கொட்டினான். ரகுவீர் அவளுக்கு ஒருபடி முன்னே இறங்கினான். அவள் விழுந்தாலும் பிடிக்க வசதியாய் இருக்க வேண்டுமே.

"வந்துட்டான் உங்க ஊர்காரன், இனி எனக்குப் புரியாதபாஷையில கதைப்பியே!” என்றான் ரகுவீர்.

"ஹலோ, இப்ப அவரை எதுக்குத் திட்டுறீங்க உங்களுக்கு எங்க ஊரு ஆளுங்கன்னாலே வில்லனா தான் தோணும்." என்றாள் ஜானகி.

"ஆமாம் உனக்கு அவன் தானே ஹீரோ. மாட்டை அடக்குவானோ?"

"கேட்டு பார்த்திருவோமா, பொங்கல் இரண்டு வாரத்தில் வருது. ஊருக்கு போகும் போது ஒரு சான்ஸ் கொடுக்கலாம். ஆள் நல்லா தானே இருக்கான். எனக்கு மேட்சா இருப்பானான்னு பார்த்து சொல்லுங்க. நீங்க தான் எல்லாத்தையும் கரெக்டா ஜட்ஜ் பண்ணுவீங்களே?" என்றாள் ஜானகி.

"திமிரப் பாரு நான் பார்த்துச் சொல்லனுமாம். நான் என்ன மேட்ச் மேக்கரா?" என்றான்.

"ஆமா, உங்க கிட்ட கேட்டேன் பாருங்க, ஆமாம் மயூக்கு பார்க்க மாட்டீங்களா?" என்றாள். "மயூவும், நீயும் ஒன்னா?" என்றான் ரகுவீர். அதற்குள் தளம் வந்திருந்தது.

"வேலை முடிஞ்சதா புத்தரூ?" என்றார் பல்லாஜீ.

"முடிஞ்சது மாமாஜீ, ராம் எப்படி இங்கே?" என்றாள் ஜானகி.

"நம்ம அமிர்தாவுக்குப் போன் போட்டார், நான் தான் இங்க வரச் சொன்னேன். சங்கா ஹைனா புத்தரு!" என்றார்.

"பஹூத் சங்காஹை, அங்கிள்ஜீ!" என்றான் ரகுவீர்.( ரொம்ப நல்லது அங்கிள்ஜீ) "ராம், என்ன திடீர்ன்னு?" என்றான் ரகுவீர்.

"தங்கச்சிய பார்க்க வந்தேன்." என்றான் ராம். "ஜான்வியவா?" என்றான் ரகுவி. ஜானகி அவனை முறைத்தாள்.

"ஐயோ, அண்ணா, ராம் எனக்குத் தான் அண்ணா, ஜானகிக்கு அத்தை மகன், முறை மாப்பிள்ளை." என்றாள் அமிர்தா.

'ஐய்யோ, இவ வேற, அவனே வேணும்னே வெறுப்பேத்துறான். இவ வேற புளியப் போட்டு விளக்குறா!' என்றது ஜானகியின் மைண்ட் வாய்ஸ்.

"யூ மீன், கஸின்ஸ். ஆனால் நாங்க இங்க அவர்களை ப்ரதர் அண்ட் சிஸ்டராகத் தான் பார்ப்போம்." என்றான் ரகுவீர்.

'இப்ப நீயே உனக்குச் சூனியம் வச்சுக்கோ, வாடி மச்சான் என்னைக்காவது என் கிட்ட மாட்டாமலா போயிடுவ.' என்றது மீண்டும் ஜானகி மைண்ட் வாய்ஸ்.

"பேசிகிட்டே நின்றாள், ப்ரீத்தோ ரொட்டிய காலி பண்ணிடுவா, வாங்க போகலாம்." எனப் பீச் சைடு கூட்டி வந்தார் ஓமி பல்லா.

பல்லாஜீயின், பீச்ஹவுசுக்கு நடை தூரத்தில் அந்தப் பீச் இருந்தது. நீண்ட தூரத்துக்கு மணற்பரப்பு. அது ஒரு ப்ரைவேட் இடமாக இருந்தது. ஆர்பாட்டம் இல்லாத கடல். அங்குச் சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் அஸ்தமனமாகும். தற்போது பொன்னிறமாக ஒளிர்ந்தது வானமும், கடலும். கடலலைகள் போட்டி போட்டு, ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டிருந்தது. அதே போல் பிள்ளைகள் ஒன்றோடு ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. இரு குடும்பங்களின் மகன்கள் மருமகன்கள் பெண் பிள்ளைகள் என அந்த இடமே களை கட்டியது.

அங்கு ஓரிடத்தில் வாலிபால் நெட்  கட்டப்பட்டிருந்தது. வாலிபால் விளையாட முடிவு செய்யப்பட்டது. ராத்தோட்ஸ் ஒரு பக்கமும், பல்லாஸ்  ஒரு பக்கமும் நின்றனர். ராம் பல்லாஸ் பக்கம் நின்றான்.

ஒரு புறம் ராஜ், ரகுவீர் பின்னால் நிற்க, அமர்சிங் ரன்வீர் முன்னால் நின்றனர். அந்தப் பக்கம், பல்லாஜி, ராம் பின்னால் நிற்க, ஜெய் அவன் ஜீஜூ முன்னால்  நின்றனர்.

இரண்டு பக்கத்துப் பெண்களும் அவரவர் தரப்பை உற்சாகப் படுத்த, ஜானகி இரண்டு பக்கமும் சீயர் அப் செய்தாள். கேம் படு சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் சென்றது. சீரியஸ்  கேம், சொதப்பல் கேம் எனக் கலக்கலாக முடிந்தது.

பெண்கள் கயிறு இழுக்கும் போட்டி, நடைபெற அதில் கலந்து கொள்ளும் பெண்களைத் தேர்வு செய்யும் போது, ரகுவீர் ராம் இருவரும் ஒரே நேரம் "ஜான்வி நோ." என்றும், "ஜானகி நோ." என்றும் சொன்னார்கள்.

பெண்களுக்குக்கான போட்டி, ஆண்களும் கலந்து கொண்டு சுவாரஸ்யமானது. போட்டிகள் முடியும் நேரம், இருள் பரவியது. அதே நேரம் செயற்கை ஒளிகளால் மின்னியது அந்த இடம். அழகான இரவு, ரம்மியமான நிலவு, குளுமையான காற்று, கடலலைகளின் மெல்லிய சப்தம், கண்ணை  உறுத்தாத விளக்குகள் என மயனின் மாய உலகம் போல் இருந்தது அந்தக் கடற்கரை.

மண்ணில் விளையாடியதில் புழுதி படிந்தவர்கள், கை கால்களைக் கழுவி வந்தனர். ஜானகியும், ப்ரீத்தோ  மாமியும் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துத் தந்தனர்.

அந்த நேரம், பிங்கியின் ஃபியான்சி ஜிதேந்தர் சிங் வந்து சேர்ந்தான். அவன் ஒரு சிங்கர்.எல்லாருடனும் கலகலப்பாகப் பழகினான். தீபதி அவனின் விசிறி ஆனாள். ரன்வீர் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

அந்த இரவு பொழுதை எல்லோரும் ரசிக்க, பில்லோ பாசிங் கேம் விளையாடினர். ஜிதேந்தர் ஒரு பாடலை இசைக்கப் பில்லோ பாசாகும் அவன் நிறுத்தும் இடத்தில் பில்லோ வைத்திருப்பவர்,ஏதாவது செய்ய வேண்டும்.

முதலில் நின்றது அமர்சிங்கிடம், அவன் தன் பாணியில் ஹரிணியிடம் ப்ரபோஸ் செய்து படத்தின் காட்சியை  செய்தான். அடுத்தது, ஜெய்பிரகாஷ் பல்லாவிடம் வந்த நிற்க, ஹர்லினை இழுத்துக் கொண்டு டூயட் ஆடியவன், இடையே ஜானகியை கை பிடித்து அழைத்துக் கொண்டான்.

ஜானகியும் பதி, பத்தினி அண்ட அவள் என ஆக்ட் செய்தாள் ரகுவீர் முறைக்க, ஜெய்யுடன் சேர்ந்து ஆடினாள். அதைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். 

ஹர்லின் லுக் விட்டதில் எல்லாரும் சேர்ந்து, "ஜெய் பாயீ, இன்றைக்கு முனு  அடி மனுசன் தான்" என்றனர். புதியவர்கள் குழம்ப, அறிந்தவர்கள் அதை அடுத்தவருக்குச் சொன்னார்கள்.

அடுத்தப் பில்லோ அமிர்தாவிடம் நிற்க, ராம் உடன் சேர்ந்து பாசமலர் வசனம், ஹிந்தியில் மொழி பெயர்த்து நடித்தனர். ராஜ்வீரிடம் நிற்க, ஒரு ஸாயரி கவிதை சொன்னான்.

பல்லாஜி - ப்ரீத்தோ ஷம்மி கபூர்-ஸாயிரா பானு நடித்த' ஜங்கிலி' படத்திலிருந்து "சாஹே கோவி முசே சங்கிலி கஹே. என்ற பாடலை ஆக்ஷனுடன் கலக்கினார்கள். எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். சிருஷ்டியின் டேர்ன் வர, மாதிரி அழகியாய் கேட் வாக் செய்து, ஃப்ளையிங் கிஸ்,அதுவும் ரகுவீரை பார்த்தே பறக்க விட்டாள்.

ஜானகிக்கு பொசு பொசு வென இருந்தது. ரகுவீர் அவளை வெறுப்பேற்ற அதனைப் பெற்றுக் கொள்ளும் ஆக்ஷன் செய்தான். ரன்வீர் முறையில், ஹேப்பி நீயூ இயர் டான்ஸ் ஆடினான்.

பிங்கி, தீப்தி இணைந்து ராம் ரத்தன் தன் பாயோ… பாட்டுக்கு ஸ்டெப் வைத்து ஆடினர்.ரகுவீர், ஜானகி மட்டுமே மிஞ்ச, ஹரிணி, ரகுவீரை ஒரு பாட்டு பாடச் சொன்னாள். "யாரு, இவரு பாட்டு, ஹரிணி தீ, கிண்டல் பண்ணாதீங்க." என்றாள் ஜானகி.

"ரகுவி, இதுக்கு மேலும் பேசாம இருந்தால்  அது அசிங்கம். என் மானத்தைக் காப்பாற்று." என்றாள் ஹரிணி.

"ஆமாம் பய்யா பாடுங்க!" என்றனர் வீர் பிரதர்ஸ்.

"ரொம்ப நாள் ஆச்சு டா, ஸ்ருதி சேராது." என்றான் ரகுவீர்.

ஜிதேந்தர், "பய்யாஜீ நான் ஆரம்பிக்கிறேன் நீங்க ஜாய்ன் பண்ணுங்க சரியா போகும்." என்றான். ஜிதேந்தர் ஒரு பஞ்சாபி பாட்டு ஆரம்பித்து, சினிமா பாட்டில் விட, ஸ்ருதி அட்ஜஸ்ட் செய்து பாடினான்.

"தனு இத்தனா மே ப்யார் கரான்" ஏர்லிப்ட் படத்தின் பாடலை, கண்ணை மூடி லயித்து, மனதில் நிறுத்தி பாடினான்.

ஜானகி அசந்து போனாள், ரகுவீர் பாடுவான் எனக் கற்பனை கூட இல்லாததால் அவனைக் கண் இமைக்காது பார்த்திருந்தாள். ரகுவீர் அவளைக் கண்களாலே கேள்வியாகவும் கேலியாகவும் பார்த்தான். இவளும் மெச்சுதலாய் பாராட்டினாள். நிஜமாகவே ரகுவீருக்கு அவள் பாராட்டு மகிழ்ச்சி அளித்தது.

"ஜானகி, ரகுவி, லைட் மியுக் ஸிங்கர் நல்லா பாடுவான். பிஸ்னஸ் பிஸில எல்லாம் மறந்துட்டான். பல்லா அங்கிள்க்கு தான், தாங்க் பண்ணனும், இன்னைக்கு இப்படி ஒரு மீட்டுக்கு. தேங்க்ஸ் அங்கிள்ஜீ!" என்றாள் ஹரினி.

அந்தப் பாடலில் இருந்த உணர்வு, எல்லாரையும் மயக்கியது.அதை அப்படியே தொடர்ந்து ஜானகி, "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன" எனப் பாடினாள் தமிழ் பாடல்.

ஜிதேந்தர்,"மோஹ்,மோஹ்" பாட்டைப் பாட அதில் ரகுவீர், ஜானகியும் இணைந்தனர். இப்படியே ஒரு மணிநேரம், இசை மழை பொழிந்தது.

செவிக்கு, உணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். என்றபடி, உணவுப்  பரிமாறினர்.

நான் வெஜ்ஜை, ஒரு பிடி பிடித்தான் ராம். "ஆண்டிஜீ, இன்னும் ரெண்டு சேர்த்து போடுங்க, இந்த ஜானகியை தூக்கியதிலேயே என் கை ஒடஞ்சு போச்சு." என்றான் ராம்.

"நீ என்னைத் தூக்குனியா,பொய் சொல்லாதே?" என்றாள் ஜானகி. அதே நேரம் அருகில் இருந்த ரகுவீர், ராமை அதிசயமாகப் பார்த்தான்.

"ஏன் சொல்லமாட்ட மகாராணி, ரகுவீர் நீங்களே சொல்லுங்க, பார்க்கத் தான் ஆள் ஸ்லிம், ஆனால் சரியான  வெயிட் குண்டச்சி." என்றான் ராம்.

"பொய் சொல்லாத ராம்." என்றாள் ஜானகி அழாத குறையாக. "இங்க இருந்த யாருக்குமே தெரியலை நீ பொய் சொல்ற." என்றாள்.

"மிஸ்டர்.ராத்தோட் , நேற்று பார்ட்டியில கேக்  கட் பண்ணிட்டு இறங்குன பிறகு இவளை நீங்க பார்தீங்களா?" எனக் கேட்டான்.

ரகுவீர், என்ன பதில் சொல்லுவான், அவன் மனதை உலுக்கிய காட்சியைப் பற்றி அல்லவா அவன் பேசப் போகிறான். காதை தீட்டி ராமின் வார்த்தைகளைக் கவணித்துக் கொண்டிருந்தான்.

ராமே தொடர்ந்தான். "நீங்க பார்த்திருக்க மாட்டீங்க ஏன்னா, ஜானகியை அறிமுகப்படுத்தி என் பாட்னர் கிட்ட பேசிகிட்டு இருந்தேன். அப்போ அமுதன் இவளை வழியனுப்பும் வழிய பார்க்கப் போனான். நான் தான் இவள் பக்கத்தில் நின்னேன். என் பாட்னருக்கு புரையேற, தண்ணீர் எடுக்கப் போனேன். வந்து குடுத்துட்டு நிக்கிறேன் அப்டியே சாஞ்சிட்டாள்." என்றான்

"ஏய்  ஜானகி சரக்கை, கிரக்கை மாத்தி குடிச்சியா?" என்றான் ராம். ஜானகி அவனைத் துரத்தி, துரத்தி அடித்தாள்.

"அடிக்காதடி." என்றபடி. மிஸ்டர். ராத்தோட் காப்பாத்துங்க, உங்க ட்ரைனீட்ட சொல்லுங்க சார். கஷ்டப்பட்டு லிப்ட்ல இருந்து ரூம் வரைக்கும் தூக்கிட்டு போனேன்." என்றான். "அதுக்கப்புறம், டாக்டரை கூட்டிட்டு வந்தீங்களா?" எனக் கேட்டான் ரகுவீர்.

"இல்லையே, அமுதன் இவ மட்டையானதை பார்த்து, பெயின் கில்லர் போட்டது, தூங்கட்டும்

2 கருத்துகள்
  • நந்தினி 28-Nov-2024

    ரைட்டர் ஜீ அவங்களை மட்டும் கடற்கரையில் ரொம்ப ஜாலியாக விளையாட விட்டு ஆசையையும் பொறாமையும் தூண்டுறீங்க, உங்க கூட கா????????????

    • தீபா செண்பகம் 28-Nov-2024

      பொறாமையை தூண்டினால் தானே புரிதல் வரும். வாசிங்க. வாசிங்க. 

       

ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!