தொடர் : 24
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
விருந்தோம்பல் என்பது நம் இந்திய குடும்பங்களுக்கே உரிய பண்பு. அதுவும் பஞ்சாபிகள், அன்பை காட்டுவதில் நம் தமிழக கிராம மக்களை ஒத்தவர்கள். வருடத்தின் முதல் நாள் இனிமையாகவே முடிந்தது இரு குடும்பத்தினருக்கும். நிறைவு விருந்தாக ஐஸ்கிரீம் பார்ட்டி அதைப் பார்த்தவுடன், ஆளுக்கு ஆள் ஜானகியைத்தான் கலாய்த்தார்கள்.
"ஜானி இது உன் வாய்க்கா, அல்லது என் தம்பி தலைக்கா?" என்றாள் ஹரிணி.
"என்ன தீதி சொல்றீங்க உங்க தம்பி ஐஸ்கிரீம் போட்டா ஹேர்வாஷ் பண்ணுவார் அதுவும் இந்த நைட்ல?" என்றாள் ஜானகி, ஒன்றும் அறியாதது போல்.
"ஹரிணி, ஜானகி ஏதாவது ப்ராங் பண்ணி உன்னோட ஐஸ்க்ரீமும் சேர்த்து சாப்பிடுவாளே தவிர யாருக்கும் தரமாட்டாள்."என்றாள் சிம்மி.
"சிம்மி தீதி, அது எல்லாம் முன்னாடி, இப்ப பாஸ்க்கு ஐஸ் வைக்கிறதுன்னா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம் இல்லை ஜானி தீதி?" என்றாள் தீப்தி. ஜானகி அவளை முறைத்தாள்.
"ஹலோ என்ன ஐஸ் வச்சாலும் எங்க பையா, மனசை கரைக்க முடியாது, என்ன பையா சரி தானே?" என ரன்வீர் கேட்டான். ரகுவீர் பேசாமல் ஜானகியை பார்த்துக் கொண்டிருந்தான்.
"அதெல்லாம், ஐஸை கொட்டி, ஏற்கனவே கரைச்சுட்டா ஜானி." என்றான் ராஜ் வீர். "ராஜ், யூ டூ?" என்றாள் ஜானகி. "அப்படியா" என்றனர் பல்லாஸ்.
"என்ன கோரஸ்ல அதிர்ச்சி ஆகுறீங்க?" என்றான் ராம்.
"ஏன்னா முதல் பலி ஆடு நான் தான்." என்றான் ஜெய்.
"ஹலோ, நீ வேணும்னா ஆடுன்னு சொல்லிக்க, என் சாலே சாப் இராஜஸ்தானி ஸேர்." என்றான் அமர் சிங். "அபிஷேகம் ஆனது ஜஸ்ல அது ஆடு என்ன, சிங்கம் என்ன?" என்றான் ராம். "உங்களை என்ன செஞ்சா?" என ஆர்வமானான் ரகுவீர்.
"அந்தச் சோக கதையை கேளுங்க, எனக்கு ஹல்தி வச்சாங்க, எல்லாரும் மஞ்சள் வைக்க, இவள் என்னைய வச்சு செஞ்சா. ஹல்தி முடிஞ்சு குளிக்கப் போனேன். உங்களுக்காகத் தண்ணீர் எடுத்து வச்சிருக்கேன், என்னை தான் கட்டிக்கலை, நான் நிரப்பி வச்ச தண்ணிலையாவது குளிங்கன்னு, அம்ரூ என்னமோ சொல்லி கூப்பிட்டாளே என்னைய என்ன அது. எனக் கேட்டான்.
"ஜெய் அத்தான்!" என அமிர்தா எடுத்து கொடுக்க, ஹாங், ஜெய் அத்தான்னு, ரொமான்டிக்கா கூப்பிட்டாள். (இப்போது, ரகுவீர், ஜானகியை முறைத்தான்.) அது அவங்க ஊர்ல அத்தான்னு கூப்பிடருது, முறை பையன்களைக் கூப்பிடுவாங்கலாம். அம்ரூ கூடப் பாலனை கூப்பிடுவா, அதுனால நம்ம மேலயும் ஒரு ஆசை இருக்கு இதையாவது நிறைவேத்தலாம்னு நம்பி போனேன்." என்றான் ஜெய்
"அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் ராஜ் வீர்.
"அது தண்ணீ இல்லைபா, ஐஸ் பார் கரைஞ்சு தண்ணீயா மாறி இருந்தது. இதுல இன்னும் நாலு பொண்ணுங்கள கூட்டிட்டு வந்தா என்னைய ராஜகுமாரன் போலக் குளிப்பாட்டுறேன்னு!" என்றான் ஜெய்.
"இவருக்குப் பெரிய மன்மதன்னு நினைப்பு!" என ஹர்லின் நொடித்தாள்.
"ஐந்து பேர் சேர்ந்து, குடத்தில தண்ணீரை நிறைச்சு, கதறக் கதற ஊத்துனாளுங்க." என்றான் ஜெய். எல்லாரும் விழுந்து விழுந்து, சிரித்தனர்.
"லைப்ல இதெல்லாம் சகஜம் பா." என்றாள் ஜானகி.
"எது ஜன்னி வந்து சாகறதா." என்றான் ரகுவீர் வேகமாக. ஜானகி முகம் சோகமாக, ஜெய்க்கு தாங்கவில்லை. "ஹே ப்ரோ, ஆனா ஜானி ரொம்ப நல்லவ அப்படி சீக்கிரம் ஜன்னி வந்து சாக விடமாட்டாள். கையோட கசாயமும் கொண்டு வந்து மூக்க புடிச்சு ஊத்தி விட்டுட்டுத் தான் போனாள்." என்றான் ஜெய்.
"அதென்ன மூக்க பிடிச்சு?“ என அவன் ஜீஜு கேட்டான்
"அப்பதான, மூச்சு விட வாயை திறப்போம், அப்ப மருந்தை ஊத்தலாம்." என்றான் ரகுவீர். "ப்ரோ யூ டூ!" என ஹை பை கொடுத்தான் ஜெய், ரகுவீருக்கு.
"அவனுக்குத் தெரியும், உங்கமாதிரி அதுக்காக, அவன் என் கழுத்தை நெரிக்கலை." என்றாள் ஜானகி, ரகுவீரை அட்டாக் செய்து. "ப்ரோ இது என்ன எப்பவுமே, டாம்& ஜெர்ரியா?" என்றான் ஜெய்
"முதன் முதலில் பார்த்த நிமிசத்தில இருந்து." எனக் கோரஸ் பாடினர் அமிர்தாவும் ராஜ் வீரும். அதன்பின் மீண்டும் நேயர் விருப்பமாக, ஏர்போர்ட் அபிஷேகம் வர்ணனை செய்யப் பட்டது. இப்போது ஜானகி கையில் கோன் ஐஸ் இருக்க, அனைவரும் உஷாரானார்கள். சிரித்து முடிந்து கிளம்பும் நேரம் வந்தது.
விடை பெற்று முதல் காரில் ஹரிணி குடும்பம் தீப்தி, சிருஷ்டி உடன் கிளம்பினர். சிம்மியும் அவள் கணவனும் வீட்டுக்கு பிள்ளைகளைத் தூக்கி சென்றிருந்தனர். பிங்கி, ஜிதேந்தரில் லயித்திருந்தாள். மற்றவர்கள் சாப்பிட்டதை ஒழித்துப் போடுவதில் ப்ரீத்தோ மாமிக்கு உதவிக் கொண்டிருந்தனர்.
ரகுவீர் தனியாக நின்ற ஜானகியிடம் வந்தான். "ஜான்வி அம்ரூவை கூட்டிட்டு என்னோட கிளம்பு." என்றான் ரகுவீர். "ம் போங்க, நான் இங்க இருந்துட்டு மாமாஜீ கிளம்பும் போது, நாளை மறுநாள் ஆபீஸுக்கு நேரா வரேன்." என்றாள் ஜானகி.
"நோ வே. என் கூட இப்பவே கிளம்புங்க." என்றான் அதிகாரமாக. அவன் சொன்ன விதத்தில் ஜானகிக்குக் கோபம் வந்தது.
"நீங்க இப்படி அதிகாரம் பண்ண நான் உங்க பொண்டாட்டி இல்லை." என்றாள் ஜானகி சுருக்கென்று. அவள் முன் ஒரு எட்டு வைத்து, அவள் கையைத் தன் ஒரு கையால் வளைத்துப் பிடித்துப் பின்னால் நிறுத்தி அவளைத் தன் அருகில் கொண்டு வந்தான். தன் கை அவளை வளைவில் நிறுத்தி.
"அப்படின்னா தான் சொன்னதைக் கேட்பேன்னா, அதையும் செய்வேன்." என அவள் கண்களை ஊடுறுவியவன், காற்றில் ஆடிய கற்றை அவளின் முடியை மற்றொரு கையால் ஒதுக்கி, ஒரு மயக்கும் புன்னகையுடன் "கிளம்புடா!" என்றபடி விடுவித்தான்.
ஜானகி நிலையை விவரிக்க வேணுமா என்ன. வயிற்றில் இருந்த பந்து நெஞ்சில் ஏறி வந்து குதிக்க, இதயம் படபடத்தது. கண்கள் சிமிட்டாமல் அவனையே பார்த்திருந்தாள்.
ப்ரித்தோ மாமி அங்கு வந்தவர், "புத்தருஜீ, ஜானகியும், அம்ரூவும் நாளைக்கு இங்க இருந்துட்டு வரட்டும். பிங்கி ஷாதிக்குப் பர்சேஸ் பண்ணனும். நகை கடை, துணிக்கடை எல்லாம் போகனும். இவங்க இருந்தா எனக்கு வசதி புத்தருஜீ, நாளைக்குக் கொண்டு வந்து விட்டுட்டு போறேன்." என்றார் ரகுவீரிடம்.
ஜானகி இப்போ என்ன செய்வீங்க என்பது போல் பார்த்தாள். பல்லாஜீ வந்து, "ஜானகி, அம்ரூ என் பொறுப்பு. நான் பார்த்துக்குறேன். நீங்க கவலை படாமல் கிளம்புங்க தம்பி." என்றார்.
ப்ரீத்தோவிடம், "ஆண்ட்டிஜீ, நம்ம ஜுவல்லரி இருக்கு, பாபுஷா தான் இருப்பாங்க, நான் சொல்லிடுறேன். நீங்க அங்க போய் நகை எடுத்துக்குங்க." என விசிட்டிங் கார்ட் கொடுத்தான் ரகுவீர்.
"ஆண்ட்டிஜீ, எனக்குத் தெரிஞ்ச டிசைனர் பொட்டிக் இருக்கு, போங்க நான் சொல்லி வைக்கிறேன்." என்றான் ராம். "ஆகா, ரெண்டு பேரும் சொல்லீட்டிங்களா, பார்ப்போம் தப்பிக்க முடியுமான்னு." என்றார் ஓமி பல்லா.
"பாப்பாஜீ, ஒரே கடையில் கொண்டு போய் விட்டாலும், அங்கேயே எல்லாமே கிடைச்சாலும், இவங்க ஒரு நாள் முடியாம வரமாட்டாங்க." என்றான் ஜெய்.
பெண்கள் அனைவரும் அவனைக் கூட்டாக முறைத்தனர், இரு நாளைக்கு வச்சுக்குறோம் என்று.
'அவசரப் பட்டு வாயை விட்டுட்டனோ?' என மைண்ட் வாய்சில் இல்லை, அவுட் வாய்சில் புலம்பினான். எல்லாரும் விடைப் பெற்றனர்.
வேறு வழியில்லாத ரகுவீர், ஜானகியைப் பார்த்துக் கொண்டே இருந்தான். வாய்ப்புக் கிடைத்த போது, ஆயிரம் அட்வைஸ் செய்தான். "அந்த காயம் வலி இருந்தா அலையாத, ஆண்ட்டிகிட்ட தயங்காம சொல்லு." என்றான்.
"நீங்க கவலை படாமல் போங்க, நான் என்ன சின்னப் புள்ளையா?" என்றாள். "ஓகே பை!" என்று ஜானகியை, இழுத்து இலேசாக அனைத்து டேக் கேர் என்றபடி கூலர்ஸை மாட்டி, தம்பிகளுடன் ஜீப்பை வேகமாக ஓட்டிச் சென்றான்.
ஜானகிக்கு ஆயாசமாக இருந்தது. இது என்ன விதமான பாசம், இரண்டு வாரத்தில் என்னிடம் இவ்வளவு அன்பு அக்கறை. என்னை ஊருக்கு போக விடுவானா தெரியலையே என நினைத்தாள் ஜானகி.
அமுதன், மயூரி, பாலன் மற்றும் மஞ்சரி இரவு பத்து மணி, மதுரையில் வந்து தரை இறங்கினர். அவர்கள் கார், விமான நிலையத்தில் நிறுத்தி விட்டு சென்றிருந்தனர். அதில் ஏறி திண்டுக்கல் செல்லும் நான்கு வழிச் சாலையில் பயணம் செய்தனர். மதுரையில் ஒரு கார்டன் ரெஸ்டாரெண்டில் காரை நிறுத்தினான் அமுதன். "வீட்டுக்குப் போய்டலாம் அமுதன்." என்றாள் மயூரி.
"இல்லம்மா இங்க சாப்பிடுவோம்." என நான், பட்டர் பீன்ஸ் குருமா, சென்னா மசாலா, ருமாலி ரொட்டி, தோசை, சில்லி கோபி என வகையாய் ஆடர் செய்தான்.
"இவ்வளவு எதுக்குப்பா?" என்றாள் மயூரி. மஞ்சரி இந்தக் கேள்வி எல்லாம் எழுப்பவில்லை. அவள் உண்டு டிபன் உண்டு என்றிருந்தாள். பாலனுக்கும் நல்ல பசி. சாப்பிட சாப்பிட தான் பசி தெரிந்தது. மயூரி, அமுதனும் நன்றாகச் சாப்பிட்டனர். அடுத்த முக்கால்மணி நேரத்தில், திண்டுக்கல் அடைந்து, மலைப் பாதையை அடைந்திருந்தனர்.
மயூரி, அமுதனிடம், "கொஞ்சம் வண்டிய நிறுத்துங்கப்பா." என்றாள் .
"ஏம்மா, என்ன செய்யுது" என மலை ஏறும் முன் வெளிச்சம் உள்ள ஒரு வீட்டின் அருகே நிறுத்தினான். பாலனை எழுப்பினான்.
மயூரி, இடது பக்க கதவை திறந்து இறங்கினாள். மஞ்சரி அசந்து தூங்க, அவளை எழுப்ப வேண்டாம் எனச் சைகை செய்தான்.
மயூரி அருகில் சென்று என்ன வென்று கேட்க, வாமிட் வருவதாகச் சொன்னாள். அவள் தலையைப் பிடித்துக் கொண்டான் அமுதன். அவள் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தாள்.
தண்ணீர் பாட்டில் எடுத்து வாய் கொப்பளிக்க வைத்து, முகத்தைக் கழுவி விட்டான். அவள் நிற்க முடியாமல் துவழ, தோளில் தாங்கினான் அமுதன். தன் கர்சீப் எடுத்து அவள் முகம் துடைத்து, தண்ணீர் கொஞ்சமாகக் குடிக்க வைத்தான்.
"வீட்டுக்கு போயிடலாமா, சமாளிக்க முடியுமா?" எனக் கேட்டான். அங்கு மரத்தில் தொங்கிய புளியம் பழத்தை பறித்து, செங்காயாக இருந்ததை, கடிக்கச் சொன்னான். அவள் முகத்தைச் சுளிக்க, "கொஞ்ச நேரம், பொறுத்துக்கோ!" எனச் சொல்லி, ஏசி ஆப் செய்து, ஜன்னலை திறந்து விட்டான்.
மஞ்சரி அப்போது தான் முழித்துப் பார்த்தாள். "மயூ என்ன ஆச்சு?" என்றாள். "ம் குழந்தை அழுதது." என்றான் பாலன். "என்ன ப்ரோ?" என்றாள் மஞ்சு.
"ஒருத்தி அரை மணி நேரமா வாந்தி எடுத்துக்கிட்டு இருக்கா, இப்ப கேளு." என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான். பதினைந்து நிமிடத்தில் வீட்டில் இருந்தனர்.
மயூரியை கைத் தாங்கலாகக் கூட்டி வந்தான் அமுதன். மஞ்சரி தொடர்ந்து வந்தாள். தெய்வா, "என்னடா ஆச்சு?" எனப் பதறி வந்தார். இங்க மலை ஏறும் போது வாந்தி வேறு ஒன்னும் இல்லை என்றான் பாலன்.
"தலை வலிக்குதா?"எனக் கேட்டார் தெய்வா. மயூரி ஆம் எனத் தலையாட்ட. சுக்கை உரசி பத்து போட்டு விட்டார். அது விறுவிறுவென நெற்றியில் பிடித்தது. சுக்கு மல்லி காபி, பனங்கற்கண்டு போட்டுக் கொண்டு வந்தார் தெய்வா.
அதற்குள் பேச்சுச் சத்தம் கேட்டு, ராகினி வந்தார். "என்ன ஆச்சு?" என்றபடி வந்தவர். மயூரி தலையைப் பிடித்து அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவள் தலையைப் பிடித்து விட்டார். மயூரி, ராகினியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
மஞ்சரி, "மாஸியை பார்த்துட்டு, ஓவர் பில்டப் விடாதடி.” என்றாள்.
"நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, நாங்க பார்த்துக்குறோம்." எனப் பெண்மணிகள் இருவரும், மற்ற மூவரை அனுப்பி வைத்தனர். பத்து நிமிடத்தில் கீழே வந்த அமுதன் கையில் தலைவலி மாத்திரை இருந்தது. அதைப் பார்த்து அவள் முழித்தாள்.
"எனக்கு மாத்திரை வேண்டாம். தெய்வா அத்தை கொடுத்ததில் சரியாயிடுச்சு." என்றாள் மயூரி.
"பொய் சொல்லாத, ட்ராவல் அலுப்பு இருக்கும் . மாத்திரை போடு சரியாகிடும்." என்றான் அமுதன். பத்து நிமிடம் ஆட்டம் காட்டி ஒருவழியாக மாத்திரை போட்டாள் மயூரி. தன் அம்மாக்கள் இருவரையும், அனுப்பி விட்டு அவளை மாடிக்கு அழைத்துச் சென்றான் அமுதன்.
"மஞ்சரி, அங்க தூங்கட்டும், நீ ஜானகி ரூம்ல தூங்கு. அப்ப தான், நான் வந்து பார்க்க முடியும். " என்றவன். "இந்த ட்ரஸ்ஸை கழட்டு." என்றான் அமுதன். அவள் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
"ஹே,என்னை அப்படிப் பார்க்காதம்மா, நான் குட் பாய்!" எனக் கண்கள் சிரிக்க அவளைப் பார்த்தான். அவன் பார்வையில் கன்னங்கள் குங்குமம் பூசியது. அவள் முகம் சிவப்பது அவளுக்கே தெரிந்தது.
"நைட் ட்ரெஸ் போட்டுக்க, இதில் வாமிட் ஸ்மெல் அடிக்கும்னு சொல்ல வந்தேன்." என்றான் அமுதன். "ஜானகியிது இருக்கும் பாரு, மஞ்சரி படுத்துட்டா!” என்றான் அமுதன். மயூரி தயங்க, அவனே ஜானகி யின் நைட் சூட்டை எடுத்துக் கொடுத்தான். கீஸர் ஆன் செய்து அனுப்பி வைத்தான்.
அவள் உடல் கழுவி, உடை மாற்றி வந்தாள். அந்த உடை அவளது மேனியின் வளைவுகளைக் காட்ட கொஞ்சம் சங்கடமாக நெளிந்தாள். படுக்க முடியும்னா படுத்துக் கண்ணை மூடு என்றவன். அவள் கட்டிலில்படுக்க தலையனையை உயர்த்தி வைத்து, அவளைப் படுக்கச் சொன்னான். அவளுக்குப் போர்வை போத்தி விட்டான்.
மணி பணிரெண்டை நெருங்கியது. "ஏதாவது வேணும்னா, கால் பண்ணு தூங்குமா, குட் நைட்." என அவள் முடியை கோதி விட்டு, "கண்ணை மூடித் தூங்கு." என விளக்கை அணைத்து கதவை மூடிச் சென்றான் அமுதன்.
புதுவருட கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு, தங்கள் பணியிடங்களுக்கு இன்று புது உற்சாகத்தோடு கிளம்புகின்றனர் மக்கள். அது என்னவோ, புது வருடம் எதையோ கூட்டி வருவது போல் ஒரு பி்ரம்மை நமக்கும் தெரியும். இருந்தாலும் நம்பிக்கை, இருந்துவிட்டுப் போகட்டும். நாமும் புது வருட நம்பிக்கையைப் பின்பற்றுவோம். இந்த வருடம் மார்கழி, பின்பனியை கொஞ்சம் சீக்கிரம் கூட்டி வந்தது எனலாம். அதுவும் இந்த மலையூரின் சிலுசிலுப்பு கேட்கவே வேண்டாம்.
ஆறரை மணிக்கு குறைந்து அருணன் குதிரையை ரதத்தில் பூட்டுவது இல்லை போலும். அவன் வராமல் தேரை யார் ஓட்டுவது, அதனால் எஜமானர் ஆதவனின் தரிசனமும் தாமதமாகிறது. எந்த நேரம் எஜமானர் எழுந்தருளினாலும், அவர் குறும்புத்தனம் குறைவதில்லை. கன்னிப்பெண்கள் கன்னம் தொட்டு விளையாடும் கள்ளத்தனமும் மறைவது இல்லை அவன் அக்கிரமத்தை அதட்டிக் கேட்பாரும் இல்லை. ஏதாவது கேட்டால் எரித்து விடுவானே கதிர் அவன். மேகங்களில் பவனி வந்த கதிரவன், மஞ்சரி அறையை எட்டிப் பார்த்தான். "சூரிமாமா கெட்அவுட்." எனச் சொல்லி ஸ்கீரினை விரித்தாள் மஞ்சரி.
வேறு யாராவது கெட் அவுட் சொல்லியிருந் தால் பொசுக்கி இருப்பார். மஞ்சரி மாமா என்றதால் மயங்கி அடுத்த அறைக்குச் சென்றார்.
மயூரி, இரவு மாத்திரை போட்ட வீரியத்தில் இவர் வந்தது கூடத் தெரியாமல் தூங்கினாள். கோபமான சூரியன் உற்று பார்க்க, அமுதன் அங்கே வந்து திரைச்சீலை மூடி, ஆதவனை மறைத்தான். கோபம் கொண்ட ஆதவன் இடைவெளியில் புகுந்தான். அமுதன் மயூரிக்கும் அவனுக்கும் நடுவில் வந்து நின்று கொள்ள, அமுதன் முதுகை துளைத்து பார்த்து விட்டு, வெளியே தானே வருவ என உருமி விட்டு உயரே செல்ல உத்தரவிட்டான் ரதத்தை.
அமுதன், இரவின் களைப்பு நீங்கி வந்தவன், துவண்ட கொடியாய் கிடக்கும் தன் மாமன் மகளை, வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். முதன்முதலில் அவளைப் பார்த்த தினத்தை நினைவில் கொண்டு வந்தான்.
நான்கு வருடங்களுக்கு முன் அன்று ஒரு முழு நிலவு நாள். மும்பை மெரைன் டிரைவ் பகுதியில், இவன் நண்பர்களுடன் நடந்து சென்றான். அப்போது இவனைக் கடந்து சென்ற பெண்ணின் துப்பட்டா இவன் மீது தடவி சென்றது. அதில் அவள் வாசமும் அவன் நாசியை வருடிச் சென்றது.
"ஸ்வர்ணி, துப்பட்டாவைப் பிடி." என்ற குரலில் அவள் -அந்த ஸ்வர்ணியை பார்க்க அவன் மனம் ஏங்கியது.
"ஸ்வர்ணி!" அமுதனின் அம்மாவை அவன் அப்பா அப்படித்தான் காதலோடு கூப்பிடுவார். பிள்ளைகள் குடும்ப வாழ்வில் விருப்பமாக ஈடுபாடு கொள்ள மிக முக்கியமான காரணம், தாய் தந்தை தான். அவர்கள் அன்யோன்யம் அன்பை பார்த்தே, சிறியவர்களுக்கும் அதில் நாட்டம் வரும். பார்வதி போல் விநாயகர் பெண் கேட்டார் என்பார்கள். ஆனால் அமுதன் 'ஸ்வர்ணி' என்ற பெயரில் தன் காதலைத் தேடினான்.
அமுதனின் கேப் வரவும், அதில் ஏறுவதற்காக அவசரமாக வந்தான், அந்த இடத்தில் அதிக நேரம் வண்டியை நிறுத்த இயலாது. எனவே வேகமாக வந்தவனை இடப்புறமாக எதிரில் கடந்த மயூரியின் துப்பட்டா, அவன் கை கடிகாரத்தில் மாட்டியது அவனை வருடிச் சென்றபடி. தன் மேல் பட்ட துப்பட்டாவின் மணத்தை ஒரு நொடியில் உள்ளே நிறைத்தவன், தன் கையில் மாட்டியதை கவனிக்க வில்லை. துப்பட்டா அவள் கழுத்தில் இழுப்பட்டது. அவள் இவன் பக்கம் திரும்பி, "ஹலோ மிஸ்டர், மேரி துப்பட்டா!" என்றாள் மயூரி.
அமுதன் கேப் கதவை வலது கையால் திறக்க பின்னால் இடது கையில் மாட்டிய துப்பட்டாவோடு, கார் கண்ணாடியில் மருண்ட விழிகளோடு தெரிந்தாள் மயூரி. அவன் திரும்பும் முன்னே, அவள் ஷாலை இழுக்க, அதில் கோர்க்கப்பட்ட மணிகள் அறுந்தன. பாதிக் கீழே விழுந்தோட ஒரு சரம் இவன் கடிகாரத்தில் சிக்கியிருக்க, "ஸாரி ஸார்!!!" என்றபடி ஓடிவிட்டாள்.
கண்ணாடியில் தெரிந்த பிம்பமும், ஸாரி ஸார் குரல், ஸ்வர்ணி என்ற பெயர், ஒரு நாள் முழுதும் வாட்டி எடுத்தது அமுதனை. அவன் குழப்பம் தீர, அடுத்த நாள் ஏர்போர்ட்டில் அவள் அண்ணனை வழியனுப்ப தோழியோடு வந்தாள் அவள்.
ராஜ்வீருடன் நின்ற பெண்ணைக் கண்டவன் மனம், துள்ளியது. இவனுக்குத் தெரிந்தவள் தானோ என்று, உற்சாகம் கொண்டான். பியான்சியைப் பற்றிச் சொன்னானே, என ஒரு நிமிடம் அமுதன் மனம் அட்டாக் ஆனது, பின் மஞ்சரி ராஜ்வீரிடம் இழைந்ததில் மயூரி வேறு யாரோ என உறுதி செய்தான்.
ராஜ்வீரும், அமுதனும் ஒரே காலேஜ் என்று பார்த்தோம், பைனல் செமஸ்டர் வகுப்புகளுக்காக லண்டன் செல்கின்றனர். பயணத்தின் போது தன் தங்கை, சித்தப்பா மகள், ஸ்வர்ணமயூரியைப் பற்றி ராஜ் சொன்னான். அன்று முதல் அவன் மனதில் குடி கொண்ட மங்கை அவன் மாமன் மகள் மயூரி.
மயூரியை, விழி எடுக்காது பார்த்திருந்தான் அமுதன். அவளை பார்த்த நாள் முதலாய், அவள் மேல் ஆசைக் கொண்டான், தன் மாமன் மகள் என்றதும் பாசம் வந்தது. அதன் பின் நேசம் வளர்ந்தது அவனுக்குள்.
ஜானகி, எம்பிஏ படிக்கச் சென்ற போதிலிருந்து, அவள் லீவுக்கு வரும் போது, அவள் பேச்சுக்களைக் கூர்ந்து கேட்பான், எங்காவது மயூரியை பற்றிச் சொல்வாள் என்று, ஆனால் நேரடியாக எதுவும் கேட்க மாட்டான்.
ஜானகி, பெங்களூரில் வீடு எடுத்து தங்கிய போதும், நேரடியாக போகவோ, பேசவோ மாட்டான். ஆனால் அவள் மேல் கொண்ட நேசம் மட்டும் வளர்ந்தது.
அவளிடம் சொன்னதும் இல்லை. அமுதன் தன் தாயை பார்த்தே வளர்ந்தான், எனவே தான் பிறந்த குடும்பத்தைப் பிரிந்து அம்மா சிரமப்படுவது போல், வேறு யாரும் சிரமப் படக் கூடாது என்று மயூரியிடம் விலகியே இருப்பான்.
ஆனால், அவனுடைய இயல்பான குணமே, மயூரியை அவன் பால் ஈர்த்தது. அவனுக்காக அவள் புவாஷாவுக்காக தன் வீட்டினரிடம் கேள்வி எழுப்பினாள். அமுதன் அவளையே பார்த்திருந்த நேரம், மெல்ல கண் விழித்தாள் மயூரி. பூ மலர் வதைப் போல் தன்னை மறந்து பார்த்திருந்தான் நம் நாயகன். கண் விழித்த மயூரி, தான் உறங்கவே இல்லையோ எனக் குழம்பினாள் ஒரு நொடி, பின் சமாளித்து அவனைப் பார்த்து முறுவலித்தாள்.
"குட் மார்னிங், எப்படி இருக்க?" என்றான் அமுதன்."குட் மார்னிங், நல்லா இருக்கேன், நைட் முழுதும் இங்கேயேவா நின்னீங்க?" என்றாள் மயூரி.
"தங்கனும்னு ஆசை தான், ஆனா என்ன உரிமை இருக்கு? தப்புல்ல." என்றான் அமுதன்.
"என்ன தப்பு, எனக்கு உடம்பு முடியாம இருந்ததே, அதுவும் இல்லாமல், உரிமை ஏன் இல்லைனு சொல்றீங்க. நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா?" என்றாள் மயூரி.
அமுதன் சிரித்து விட்டு, "ஆர்க்யூமெண்ட் அப்புறம் வச்சுக்கலாம், குளிச்சிட்டு கீழே வா." என்றான். "எஸ்கேப் ஆகுறீங்க, என்னைக்கு இருந்தாலும் பதில் சொல்லனும்." என்றபடி குளியலறை புகுந்தாள் மயூரி.
காலை உணவுக்கு, கூடியிருந்தனர் சிவ மாளிகையில் அனைவரும். அமுதன் புது வருட வாழ்த்துக்களை ஆசியுடன் பெற்றுக் கொண்டான்.
"என்னப்பா, எப்படி இருந்தது மும்பை?" எனக் கேட்டார் சிவகுருநாதன். "ஜானகியோட பாஸை பார்த்தேன் அப்பா. நல்லா பார்த்துகிறாங்க." என்றான் அமுதன்.
"ஆமாம்ப்பா, மயூரியோட ப்ரதர் தானே, ஜானகியோட பாஸ்!" எனக் குண்டைத் தூக்கிப் போட்டார் சிவகுரு.
அமுதனுக்குப் புரை ஏறியது. அவன் தலையைத் தட்டி தண்ணீர் கொடுத்தார் ராகினி. "மயூரி அண்ணன்னா, ரகுவீரா? ராத்தோட் குரூப்ஸ்லயா, ஜானகி வேலை பார்க்குறா?" என ராகினி கேள்வியாய் அடுக்க.
"அப்பா, நான் உங்கிட்ட அப்படியா சொன்னேன்? பாருங்க அம்மா எவ்வளவு எக்ஸைட் ஆகுறாங்க. அம்மா மயூரியோட கஸின் ப்ரதர். மயூரி அம்மாவோட அக்கா பையன். உங்களுக்குத் தெரியாது." என்றான் மூச்சை இழுத்து விட்டு.
மயூரி வாய்க்குள் ரொட்டியை அமுக்கி சிரிப்பை கட்டுப்படுத்தினாள். அதனை பார்த்த அமுதன் அவளை முறைத்தான்.
"மயூ பேட்டா, உன் மாஷா எந்தக் குடும்பம் டா, எனக்கு அவங்களைத் தெரியுமா, குடும்பப் பேர் சொல்லு." என்றார் ராகினி.
இப்போது மயூரிக்குப் புரை ஏறியது. அவள் இருமி கண்ணெல்லாம் சிவந்து போக, சிவகாமி அப்பத்தா, மருமகளைச் சத்தம் போட்டார்.
"ஏத்தா, மருமகளே, இப்படித்தான் சாப்பிட விடாம கேள்வி கேப்பியா, இப்ப யாரா இருந்தா நமக்கென்ன சம்மந்தமா பண்ணப் போறோம்." என்றார்.
அந்த நேரம் லேட்டாக வந்து சேர்ந்த மஞ்சரி, "தாத்தா, அப்பத்தா வணக்கம், புதுவருசம் ஆசீர்வாதம் பண்ணுங்க." என்று காலைத் தொட்டு வணங்கினாள்.
"சீக்கிரம், தொங்க, தொங்க தாலிய கட்டிக் கிட்டு, தீர்க்க சுமங்கலியா சந்தோஷமா இரு." என்றார்கள்.
"அப்பத்தா, வைரத்துல தாலி கட்டி, கழுத்தோட கருகமணி கட்டி, தீர்க சுமங்கலியா இருன்னு. ஆசிர்வாதம் பண்ணுங்க." என்றான் பாலன்.
இப்போது, மயூரி மஞ்சரிக்குக் கொஞ்சம் தமிழ் புரிய ஆரம்பித்து இருந்தது.
"அப்பத்தா, அது மட்டும் நடக்கட்டும், உங்களுக்கு ஸ்வீட் கடையவே கொண்டு வந்து தரேன்." என்றாள் மஞ்சரி.
"இம்புட்டு ஆசை இருந்தா, அப்பன் ஆத்தா கிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்கலாம்ல." என்றார் அப்பத்தா. "நீங்க வேற அப்பத்தா, மாப்பிள்ளை ரெடி ரூட் கிளியர் ஆக மாட்டேங்குது." என்றாள் மஞ்சரி.
"அது என்னடி அப்படி!" என்றார் தெய்வா.
"மயூரியோட பெரியப்பா மகனுக்குத் தான் என்னைப் பேசி முடிஞ்சு, ஒரு பால்ய கல்யாணம் ஆயிடுச்சு. ஆனால் அவருக்கு ஒரு அண்ணன், இவளோட பெரிய பெரியப்பா மகன் ரகுவீர், படே பையா இருக்காரு, அவருக்கு ஷாதி செய்யாம நாங்க பண்ணிக்க முடியாது." என்றாள் மஞ்சரி.
"ஏம்மா அப்படியா?" என்றார் தாத்தா. "அவருக்கு முதல்ல கல்யாணம் பண்ண வேண்டியது தானே?" என்றார், இவர்கள் பேச்சை கேட்டபடி வந்த சண்முகம்.
"அவரு தான் பிடிகுடுக்க மாட்டேன் அடம் பிடிக்கிறாரே." என்ற மஞ்சரி. "அவருக்கு யாரையும் பிடிக்கலையாம்." என்றாள் தொடர்ந்து.
"பிடிக்கிற மாதிரி பொண்ண காட்டனும்." என்றார் தாத்தா. "அதெப்படி, பையா , பெண் பார்க்கவே விடலையே !" என்றாள் மயூரி.
"எங்க ஜானகி மாதிரி பொண்ண கொண்டு போய் நிறுத்து, எந்தக் கொம்பனும் மாட்டேன்னு சொல்ல மாட்டான்." என்றார் சண்முகம்.
"அப்ப, கொண்டு வந்து நிறுத்துங்க, எங்க படே பையா முன்னாடி, உங்க ஜானகி அவ்வளவு சமத்தான்னு பார்ப்போம்." என்றாள் மஞ்சரி.
"ரகுவீருக்கு, ஜானகியா?" என யோசனை ஓடியது ராகினிக்கு.
"ஆனா, எட்டு வயசுக்கு மேல வித்தியாசம் வருமே?" என்றார் ராகினி.
"ஏத்தா மனசு ஒத்துப் போனா வயசு என்ன பெரிய விசயமா?" என்றார் சிவகாமி.
"எனக்கும் உங்க அத்தைக்கும் பத்து வருஷம் வித்தியாசம்." என்றார் சிவ பரங்கிரி ஐயா.
"அது எதுக்குப்பா இந்த பேச்சு ராகினியவே அவங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்க." என்றார் சிவகுருநாதன். அவர் சொல்லவும், மயூரிக்கு முகம் சிறுத்துப் போனது.
"அப்படி இல்ல மாஷூ இந்த தடவை மும்பை போன போது, இந்த டாபிக் வந்தது." என ஆரம்பித்து, மயூரி கேட்டது அந்த வீட்டினர் பதில், தாதிஷா கண்ணீர் எல்லாவற்றையும் சொன்னாள் மஞ்சரி.
இதைக் கேட்ட ராகினி, மயூரியை கட்டிக் கொண்டார். "எனக்கா
அடடே ராகினிக்கு மருமகள் ரெடி போல
ஆம். கதையை தொடர்வதற்கு நன்றி