Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 28- அபாய வாக்கு-அம்மன் அருள்-2

வகைகள் : தொடர்கள் / மனதின் வார்த்தைகள் புரியாதோ

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

28- அபாய வாக்கு-அம்மன் அருள்-2

மும்பையில், ஜானகி, கஜேந்தருடன் வேலையில் மும்மரமாக இருந்தாள். இரண்டு மணியைத் தாண்டி நேரம் ஓடிக் கொண்டிருக்க, இவர்கள் சாப்பிடவில்லை. ஸர்குன் கஜேந்தருக்கு போன் செய்து எடுக்காததால், ஜானகிக்கு போன் செய்தார்.

 

அவள் புது நம்பராக இருக்கவும்,எடுத்து ஹலோ என்றாள்.

"பேட்டா, ஸர்குன் பேசுகிறேன். ராஜ்ஜின் மாஷா அங்கிள் பக்கத்தில் இருக்கிறாரா?" என்றார்.

 

"ஜீ ஆண்டி, அவங்களோட தான் ஆண்டி வேலை பார்க்கிறேன்." என்றாள் ஜானகி.

 

"சரியா போச்சு நீயும் அவரோட சேர்ந்தவளா? மணி இரண்டுக்கு மேல ஆச்சு, சாப்பிடச் சொல்லு அல்சர் இருக்கிறது, அப்பறம் வயிறு எரிச்சல் எடுக்கும்." என்றார் ஸர்குன்.

 

"சரிங்க ஆண்டி இதோ எடுத்து வைக்கிறேன்." என்றாள் ஜானகி.

 

"ஜானி, நீ சாப்பிடல்லைனா அம்ரூவும் சாப்பிட்டு இருக்க மாட்டாள். சாப்பாடு சேர்த்து அனுப்பி இருக்கிறேன், சேர்ந்து சாப்பிடுங்க." என்றார் ஸர்குன்.

ஆபிஸ் அறையை ஒட்டிய டைனிங் அறையில் எல்லாம் எடுத்து வைத்து, கஜேந்தரை வந்து அழைத்தாள்.

 

"இது ஒன்னு மட்டும் செக் பண்ணிட்டு வந்து சாப்பிடுறேன், நீங்க சாப்பிடுங்க!" என்றார் மணியைப் பார்த்தவாறே.

 

"நோ வே இடிஸ் பாசிபில் ப்ளைட்ட பிடிக்கப் போறீங்களா, ட்ரைனை பிடிக்கப் போறீங்களா, பஸ்ஸை பிடிக்கப் போறீங்களா, இல்லை ஆபீஸ்ல தொல்லை பண்ற எலியை தான் பிடிக்கப் போறீங்களா? வாங்க பாஸ் சாப்பிடலாம்." என்றாள் ஜானகி.

 

கஜேந்தர், ஓர் நிமிடம் ஆடித்தான் போனார். தன் தீதீஷா தான் கண் முன்னே நிற்பதோ என்று. இதே போல் அவர் காலேஜ் படிக்கும் போது ராகினி அவரிடம் பேசியது உண்டு. கண்கள் பனிக்க, "வரர்றேன் பேட்டா, காணா லகாவ்.(சாப்பாடு எடுத்து வை)" என்றார்.

 

"அதெல்லாம் ஆச்சு வாங்க நீங்க சாப்பிட்ட பிறகு , நான் ஆண்ட்டிக்கு மெசேஜ் பண்ணனும்." என்றாள் ஜானகி.

 

டைனிங்கில் அமிர்தாவும் இணைய, இருவருமாக அவருக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினர். ஒரு பிடி சாதம் அதிகமாகச் சாப்பிட்டார். "உனக்குப் பொண்ணு இருந்திருந்தால் தெரிஞ்சு இருக்கும்." என்ற மாஷாவின் குரல் அவர் காதுகளில் எதிரொலித்தது.

 

தனக்கென ஓர் பெண் குழந்தை இல்லாதது குறையோ? ஆனால் நான் ஹரிணி, மயூரியிடம் பாசமாக இல்லையா என அவர் அந்த அப்பா-மகள் உறவின் அருமை உணர முடியாமல் அல்லாடினார்.

 

அந்த நேரம், சட்டெனப் புரை ஏறியது கஜேந்தருக்கு. கண் மூக்கெல்லாம் சிவந்து, கண்ணீர் வந்தது. முச்சு விடச் சிரமப் பட்டார். அப்படியே மூச்சுப் பிடித்துக் கொண்டது. ஜானகி துரிதமாகச் செயல் பட்டு முதுகில் நீவி விட்டாள்.கோர்ட்டைக் கழட்டி, சர்ட் பட்டன் திறந்து விட்டு,நெஞ்சில் நீவி விட்டு,

 

"அமித்து டேபிள் ஃபேன் கொண்டு வந்து வை, ஏசியை ஸ்பீடா வை." என்றாள்.

அவர் சுவாசம் கொஞ்சம் சீரானதும், வியர்வையைத் துடைத்து, கொஞ்சமாகத் தண்ணீர் கொடுத்தாள். முகத்துக்கு நேரே ஃபேன் காற்றுப்பட்டது. ஈரத் துணியில் முகத்தைத் துடைத்து விட்டாள் ஜானகி.

 

"அங்கிள்,ஆர் யூ ஓகே?" எனக் கேட்டாள். அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

 

"இவ்வளவு சீக்கிரம் ரெகவர் ஆனது இன்னைக்குத் தான்." என்றார் கஜேன்.

"ஆமாம், இந்த ட்ரிக் எப்படித் தெரியும்?" எனக் கேட்டார்.

 

"உங்க சேம் ஃப்ளட்,எங்கள் வீ்ட்டுலையும் இருக்கே." எனத் தன் தாயை நினைத்துச் சொன்னவள். "எங்க அம்மாவுக்கு இது மாதிரி வரும், எக்ஸ்பீரியன்ஸ்!" என்றாள்.

 

"என்னை மாதிரியே இன்னொரு ஜீவனா? எங்க தீதீஷாவுக்கும் இப்படித்தான் வரும்." என்றார் கஜேன் பழைய நினைவுகளில் மூழ்கி.

 

"அவங்க மேல, உங்க எல்லாருக்கும் கோபமோ? ரகுவீர் சொன்னார்." என்றாள்.

 

கஜேன் யோசித்து விட்டு, "விதி யாரை விட்டது. எனக்கும் தீதீக்கும் ஒன்றறை வருஷம் வித்தியாசம் தான்."

 

"நாங்க இரண்டு பேரும், எல்லா ரகசியமும் ஸேர் பண்ணிக்குவோம். எங்க தீதீ, அவங்க லவ்வை என்கிட்டயும் மறைச்சது தான் எனக்குக் கோபம்." என்றவர் தொடர்ந்து,

 

"இது தான் உண்மைனு  நான் நினைத்துக்கிட்டு இருக்கேன். மாஷா சொல்றதைப் பார்த்தால் தீதீ மேல தப்பு இல்லாத மாதிரி இருக்கு. இது உண்மைன்னா, நான் தான் பெரிய துரோகி, குற்றவாளி எல்லாம். ஹே பகவான் என் தீதீஷா  எந்தக் கஷ்டமும் பட்டிருக்கக் கூடாது." என வேண்டிக் கொண்டார்.

 

மலையூரில் ராகினி, அமைதி இன்றி இருந்தார். ஜானகிக்கு போன் செய்தார். கஜேனுடன் பேசிக் கொண்டிருக்கையில் போன் வந்தது.

 

"மாதாஜி, என்ன இந்த நேரம் போன், எல்லாம் நல்லா இருக்காங்களா? தாத்தா, அப்பத்தா ஓகே தானே?" எனப் பதறினாள்.

 

"எல்லாரும் நல்லா இருக்கோம், எனக்கு, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் அது தான் கால் பண்ணேன்." என்றார் ராகினி.

 

"நான், நல்லா இருக்கேன். எனக்கு என்ன குறை இப்ப கூடப் பாருங்க எங்க பாஸோட வீட்டில் இருந்து சாப்பாடு வந்தது  அவரோடு சேர்ந்து சாப்பிட்டோம்." என்றாள் ஜானகி.

 

"ஜானும்மா போற வர பக்கம் பார்த்து கேர்புல், கவனமா போகனும் ஸோனூ." என்றார் ராகினி.

 

"மா, நான் என்ன சின்னக் குழந்தையா, ஐ வில் டேக்  கேர் மை செல்ஃப். கவலை படாதீங்க. இன்னைக்கு ஏன் இவ்வளவு கவலை. விசயம் என்ன?" என்றாள் ஜானகி.

 

"பாண்டே மாமாஜீ, ரெட்டி மாமாஜீ, வந்துருக்காங்க. அதுனால மீனாட்சி அம்மன் கோவில் போய்ட்டு வந்தோம்." என்றார் ராகினி.

 

"வாவ், சூப்பர். மாமி இரண்டு பேரும் வந்துருக்காங்களா, ஆர்வ், அமித், ஶ்ரீ சிஸ்டர்ஸ்... எல்லாரும் வந்துருக்காங்களா?" எனக் கேட்டாள்.

 

"பாபி இரண்டு பேரும், ஶ்ரீநிதி மட்டும், ஶ்ரீ அக்கா பாப்பா வந்திருக்கு." என்றார் ராகினி. "ஓகே,மா சாய்ந்திரம் வந்து பேசுறேன். ஐ மிஸ் யூ ஆல்." என்றாள் ஜானகி.

 

மாலை நேரம் ஆபீஸ் முடிந்து கஜேந்தருடன் வந்தவளிடம் ஸர்குன் நடந்ததை அறிந்து நன்றி கூற,  "ஆண்டி, இதென்ன நன்றி சொல்லி அந்நியம் ஆக்குறீங்க. நானும் உங்களுக்கு ஹரிணி தீ, மயூ மாதிரி பொண்ணா நினைச்சுக்குங்க!" என்றாள் ஜானகி.

 

டிரஸ் மாற்றி டெரஸ் கார்டன் வந்து விட்டாள். இன்று அமிர்தாவும் உடன் வந்தாள். ஆல்பம் அடுக்கும் வேலையை அவளிடம் தந்து விட்டு, ஜானகி, பெயிண்டிங்கை தொடர்ந்தாள்.

 

ராஜ் தன் வேலையைச் சீக்கிரம் முடித்தவன் இவர்களைத் தேடி அங்கேயே வந்து விட்டான். மஞ்சரி அனுப்பிய போட்டோக்களைக் காட்டி யார் எவரென விசாரித்து தெரிந்து கொண்டு இருந்தான்.

 

"இது தான் உன் புவாஷா. உன் பூபாஷா. தாத்தா, அப்பத்தா, தெய்வாம்மா, சண்முப்பா," பாண்டே, ரெட்டியையும் காட்டினாள். ஶ்ரீநிதி, குட்டி தியாவைப் பார்த்துக் கொஞ்சிக் கொண்டு இருக்கையில் ரகுவீர் வந்தான்.

 

ரகுவீரைக் கண்டதும், ராகினி இருக்கும் படங்களை மறைத்தான் ராஜ்வீர். "இன்னைக்குப் பாபுஷாவுக்குப் புரை ஏறியதாமே, நீ நல்லா பார்த்துக் கிட்டியாம். நமக்கும் ஒரு பொண்ணு இருந்திருந்தா இது மாதிரி என்கிட்ட பழகி இருப்பாள். நீ ரன்வீருக்கு அப்புறம், பெண் பிள்ளை பெத்திருக்கலாம்னு மாஷா கிட்டச் சண்டை போட்டுகிட்டு இருக்கார்." என ராஜ் சிரித்தான்.

 

"சாசாஷாவா அப்பிடி சொன்னாங்க ஏய் ஜான்வி, உன் கிட்ட நிஜமாகவே ஏதோ ஜாதூ(magic) இருக்கு ." என்றான் ரகுவீர்.

 

எங்கோ கோவிலுக்கு ஷப்னத்துடன் சென்று விட்டு சிருஷ்டியுடன் வந்து சேர்ந்து வந்தான் ரகுவீர். அவன் தாய் வழி உறவினர் வீட்டு விசேஷம். அங்கு எல்லாரும் சிருஷ்டியுடனான அவன் ஜோடிப் பொருத்தத்தைக் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பற்றிப் பூனத்திடம் ஷப்னம் பேசிக் கொண்டிருந்ததை ஜானகி கேட்டிருந்தாள். அதனால் மனதில் ரகுவீர் மேல் ஒரு கோபம் இருந்தது. அதனால் அவனுக்குப் பதில் சொல்லாமல் பேசாமல் இருந்தாள்.

 

அதே நேரம் ராகினியிடம் இருந்து வீடியோ கால் வந்தது ஜானகிக்கு. ரகுவீர் தெரிந்துக் கொள்வானா ஜானகி யாரென்று.

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!