28- அபாய வாக்கு-அம்மன் அருள்-1
தொடர் : 31
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
மனதின் வார்த்தைகளை வெளிப்படுத்த இறைவன் கொடுத்த வரம் கலைகள். அது எந்த ரூபமாக இருந்தாலும் சிறப்பு தான். கதை, கவிதை, நாட்டியம், நாடகம், பாட்டுச் சித்திரம், சிற்பம் என ஆயகலைகள் அத்தனையும் சொல்லலாம்.
இங்கு ஜானகி, மனதில் நிறைந்து இருப்பது சந்தேகமின்றி அவள் குடும்பம். தாய் தந்தை அண்ணன்கள், தம்பி அப்பத்தா தாத்தா. அவர்களுக்குப் பின்னே அவளே அறியாமல் நிறைந்திருப்பது அவன் தான்.
தன்னை அன்னை சிறு குழந்தை முதல் வர்ணித்த அவன். கோபிகைகள், கண்ணன் மேல் கொண்ட மயக்கம் போல் அவள் கொண்ட மயக்கம் அவன்.
சிறுபிராயத்து அவனை அவள் அன்னை வர்ணித்ததை அவன் சிறுவயது நிழற்படம் கொண்டு உயிர்ப்பிக்க நினைத்தாள் அவள்.
இதில், ஜானகி அவள் அன்னை மீது கொண்ட பாசமும், அவள் அவன் மீது கொண்ட நேசமும் அடங்கும். இது அவளும் அவள் மனதும் அன்றி அவள் நிழலான அமிர்தாவும் அறியாள்.
ராகினிக்கு இன்னும் மனசு ஆறவில்லை. தன் மகளை வீடியோ காலிலாவது பார்த்து விட வேண்டும் என்று ஆவி துடித்தது. ஜானகியின் போன் டீபாயில் இருக்க, வீடியோ காலிங் என அழைப்பு வந்தது. ரகுவீர் தான் போனுக்கு அருகில் இருந்தான்.
"ஜான்வி, மாதாஜீ ன்னு போட்டுருக்கு உங்க அம்மாவா?" எனக் கேட்டான் ரகுவீர். அவள் ஆமாம் என்று விட்டு வேகமாக வந்தாள். ரகுவீர் ராகினியை பார்த்து விடுவானோ என்ற பதட்டத்தில் வந்தாள். ரகுவீர் ஏதோ ஓர் ஆர்வத்தில் ஸ்வைப் செய்து ஆன் பண்ணி விட்டான். ராஜ், அமிர்தா, ஜானகிக்கு ஹார்ட் பீட் வேகமாக அடித்தது
ரகுவீர் ஜானகியின் அம்மா என்ற நினைப்பில் ,"நமஸ்தே ஆண்டிஜீ!" என ஆரம்பித்தான். "நமஸ்தே பேட்டாஜீ!" என்றது அந்தப் பக்கத்துக் குரல்.
"ஆப் கைசே ஹை?" என்றான் ரகுவீர்.
"நல்லா இருக்கிறேன் பேட்டாஜீ, ஜானகி இல்லையா?" எனக் கேட்டது அந்தப் பக்க குரல்.
"இதோ ஆண்டிஜீ குடுக்குறேன்." என அவளிடம் நீட்டினான். ஜானகி குழம்பிய படி போனை வாங்கினாள் இவனுக்கு அம்மா முகம் மறந்து போனதா என்ன என்ற குழப்பம்.
"ஹலோ, ஜானி பேட்டா கைசி ஹோ?" என்ற பர்க்கா பாண்டேவின் குரலில் குழப்பம் தீர்ந்து குதூகலம் வந்தது ஜானகியின் குரலில்.
"ஹலோ மாமிஜீ எப்படி இருக்கீங்க, பாண்டே டார்லிங் எங்கே என்ன பண்றார்." எனக் கேட்டாள்.
ரகுவீர் இவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். "உன் டார்லிங்க்கு என்ன ஒரே ஜாலி தான். உங்க ஊரில் பிரண்ட்ஸ் கூட இருக்கார்ல. நீ என்ன பண்ற மேரி பஹூராணி!" என்றார் பர்க்கா.
"போங்க மாமி இந்தப் பஹூராணிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. வாய் மட்டும் தான் சொல்லுது, நீங்க தான், IAS ஆபீஸருக்கு ஜோடியா இன்னோரு IASஆபீஸரை பஹூராணியா ஆக்கிட்டிங்களே. அப்புறம் என்ன?" என்றாள்.
"பைலட் ஆபீஸருக்கு ஜோடியா வந்திரு. அப்பவும் பஹூ தானே. சோட்டி பஹூ!" என்றார் பர்க்கா.
"ஓகே நான் ரெடி எப்ப திருமதி அமித் பாண்டேயா வரணும்னு சொல்லுங்க மும்பை டூ டெல்லி ப்ளைட் பிடிச்சுடுறேன்." என்றாள் ஜானகி. இங்கே பக்கத்தில் காதை தீட்டி வைத்துக் கேட்டுப் புகைந்து கொண்டிருந்தான் ரகுவீர்.
அங்கே பர்க்கா பேச்சைக் கேட்டு, ஶ்ரீநிதி ஜெர்க்கானாள். மஞ்சு, மயூவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அமுதன், பாலன் இயல்பாக இருந்தனர்.
அவர்களுக்கு ஜானகி எப்படிப் பேசுவாள் என்பது தெரியும். ஆதலால் மேலும் சில விசாரிப்புகளுக்குப் பிறகு பர்க்கா தன் கணவரிடம் தொலைப்பேசியைக் கொடுக்க, "ஹேய் மேரே டார்லிங் மாமூ, எப்படி இருக்கீங்க?" என்றாள் ஜானகி. இங்கே ஒருவனுக்கு அனல் மேல் விழுந்தது போல் இருந்தது. கூப்பிடற ஆட்கள் எல்லாம் டார்லிங் தான் என மனதில் ஜானகியை திட்டினான் ரகுவீர்.
"சூப்பர்டா மேரி ஸோனூ!" என கொஞ்சினார் பாண்டே.
"என்ன மாமூ, நான் இல்லாத நேரம் வந்திருக்கீங்க?" என்ற ஜானகியிடம் ,
"இப்ப என்ன, நீ இருக்க இடத்தில் வந்த பார்த்தால் போச்சு." என்றார் பாண்டே.
"வாங்க, வாங்க, சோட்டே பேட்டேவோட வாங்க. அப்பதான் பார்ப்பேன்." என ஜானகி வம்பிழுக்க, "ஏண்டா மும்பையில் சுயம்வரம் வைக்கப் போறீயா, பல்லா எல்லாம் சொல்லிட்டான்." என்றார் பூடகமாக. கன்னம் சிவந்தது ஜானகிக்கு என்னத்தைச் சொன்னாரோ என எண்ணியவள்,
"மாமாஜீ, நீங்க பைலட்டோட வாங்க, அதே ஹெலிகாப்டரில் டெல்லி வந்துடுறேன். இந்த மும்பை உப்புக் காற்று ஒத்துக்கலை." ரகுவீரை பார்த்தபடி வேண்டுமென்றே சொன்னாள்.
"நிஜம்தானே சொல்லு, இப்பவே மாமா வந்து கடத்திடுவேன்." எனவும், "ஆமாம், ஆமாம் நீங்க தான் கடத்துறதுல எக்ஸ்பேர்ட் ஆச்சே, ருக்மணியை கிருஷ்ணன் கடத்த உதவுன அர்ஜுனன் மாதிரி கடத்தி விட்டீங்களே மலையூருக்கு." என ஒரு போடு போட்டாள் ஜானகி.
"அம்மாடி, இந்தப் பாண்டே மேல கருணைக் காட்டு, ரெட்டி மாமாகிட்ட பேசு அவன் பதில் சொல்லுவான்." என்று கொடுத்தார்.
"மருமகளே எப்படி இருக்க?" என ஆரம்பித்தார் ராஜசேகரரெட்டி.
"வணக்கம் மாமையா, நல்லா இருக்கேன் ஶ்ரீ சிஸ்டர்ஸ், அத்தம்மா எல்லாம் நலமா?" ஜானகி விசாரிக்க, "எல்லாம் நல்லா இருக்கோம், என்ன சொல்றாங்க ராத்தோட்ஸ்?" என ஓர் நகைப்போடு குண்டு வீசினார் ரெட்டி.
"மாமையா!" என அவள் பதற. "உங்க அப்பா, அம்மா பக்கத்தில் இல்லடா, நாங்க தான் உங்க அம்மா போன்ல கால் பண்றோம்." என்றார்.
"நான் உங்க கூடக் கான்ஃப்ரன்ஸ் கால் வர்றேன். ஒரு ஆள் என்னையவே முறைச்சு கிட்டே இருக்கு பின்னாடி, தெரியுதா உங்களுக்கு?" எனக் கேட்டாள்.
"நல்லா தெரியுது. உங்கப்பன் வரான் அப்புறம் பேசுவோம். " எனக் கட் செய்தார் ரெட்டி.
அவள் போனை வைத்து விட்டு, அமிர்தா இருக்குமிடம் சென்று "ராஜ், மஞ்சரி போட்டோ காட்டு." என்றாள். புவாஷா இருந்த படத்தை மறைத்து வைத்ததால் தைரியமாகக் காட்டினான் ராஜ்.சிருஷ்டி, ஷப்னம் கூப்பிடுவதாகக் கீழே சென்றுவிட்டாள்.
மயூரி, மஞ்சரி பட்டுச் சேலையில் பாந்தமாக இருந்தனர். மயூரி முகத்தில் ஒரு புதுக்களை இருந்தது.
"ஏண்டி ஜானி இதென்ன பெரியத்தான் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாறா? இரண்டும் பாரு, பொண்ணு மாப்பிள்ளை மாதிரி ஜோடியா இருக்காங்க !" என அமிர்தா ஜானகி காதைக் கடித்தாள்.
"அவளுக்காவது வாய்க்கட்டும். அத்தை மகனோட ஜாலியா சுத்துறா பாரு. நீ இங்க கடந்து காயிற, என்னைய பாரு என்ன செய்யரதுன்னே தெரியாமல் சுத்துறேன், எல்லாம் தலையெழுத்து." என அலுத்துக் கொண்டாள் ஜானகி.
ராஜ் போட்டோக்களைக் காட்ட, ரகுவீரும் பார்த்தான். தன் தங்கையைப் பட்டுப் புடவையில் பார்த்தவனுக்குப் பூரிப்பு தாங்கவில்லை. "ஆமாம் காலையில், மந்திர் போறதாகச் சொன்னாள். " என்றான் ரகுவீர்.
"இந்தப் பொண்ணு யாரு ஜானி?" என ராஜ் கேட்க,"அப்பாவோட பிரண்டு மகள், பெயர் ஶ்ரீநிதி.mbbs பண்றா.ஹைதராபாத்." விவரம் சொன்னாள் ஜானகி.
"அப்ப அமித் பாண்டே யாரு?" ரகுவீர், சந்தேகமாக கேட்கவும், ஜானகி முறைத்து விட்டு, " நான் பேசும் போது ஒட்டுக் கேட்கறதுபேட் மேனர்ஸ்.” என்றாள்.
"ஆமாம், ஆல் ஓவர் இந்தியா உனக்கு மாமாஜீ, அவங்களுக்கு இருக்கப் பசங்க கிட்ட இருந்த ப்ரபோஸல் வரும். ஒரே டிமாண்ட் தான் ஜானகி தேவிக்கு." ரகுவீர் பட்டென சொல்லவும், "ஆமாம், அழகோடு சேர்ந்து அறிவாளிப் பொண்ணு எங்க கிடைக்கும் சொல்லுங்க!" சவால் விட்டாள் ஜானகி.
"ஆமாம் அதோடு நான் கட்டிக்கிறேன் ஷாதி பண்ணிக்கிறேன்னு, ஓப்பனா சொல்ற பொண்ணும் எங்க கிடைக்கும்." என சற்று முன் பாண்டே தம்பதியிடம் ஜானகி அமித் பற்றிப் பேசிய வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு ரகுவீர் இளக்காரமாக கேட்க,
"ஏதோ உங்ககிட்ட வந்து ப்ரபோஸ் பண்ணின மாதிரி பேசுறீங்க. இல்லை எத்தனை பேரிடம் நான் ப்ரபோஸ் பண்ணி நீங்க பார்த்து இருக்கீங்க?" எனக் கோவப்பட்டாள் ஜானகி.
"ஆகா என்கிட்ட ப்ரபோஸ் பண்ற ஐடியா வேற இருக்கா , தெரியும் உன்னை மாதிரி பொண்ணுங்க கடைசியில் எங்க வந்து நிப்பீச்கன்னு, ச்சே, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஸ்வருவுடைய ஃப்ரண்டுன்னு நினைச்சது தப்பா போச்சு." என அவனும் யோசிக்காமல் அவள் மேலிருந்த பொசசிவ்னெஸ்ஸில் பேசினான்.
"பய்யா, ப்ளீஸ், நீங்க பார்த்த மற்ற பொண்ணுங்களைக் கம்பேர் பண்ணி ஜானியை பேசாதீங்க. ஜானகி வேற யாரோ இல்லை. அவ நம்ம." என ராஜ் பேசி முடிக்கும் முன் இடையிட்ட ஜானகி.
"ராஜ் இது எனக்கும் உன் பையாவுக்கும் உள்ளது. இதில் நீ குறுக்க வராத. இன்னிக்கு உறுதியா தெரிஞ்சுக்குவோம். என் மேல் இவருக்கு இருக்க உயர்ந்த அபிப்ராயத்தை." என்றவள் ரகுவீர் பக்கம் திரும்பி
"லுக் மிஸ்டர். ராத்தோட் நான் உங்க வீட்டில் தங்கி இருந்தா உங்க அடிமை கிடையாது. நான் யார்கிட்ட பேசனும்னு எனக்குத் தெரியும். என் கேரக்டர் பத்தி நீங்க ஒன்னும் சர்டிபிகேட் தரவேண்டாம்." என வார்த்தைகளைக் கொட்டினாள்
அவளை முறைத்துப் பார்த்தான் ரகுவீர், "எங்க கம்பெனியில வேலை பார்க்கிற, ராத்தோட் மேன்சன்ல தங்கி இருக்கும் போது, நீ எங்க பொறுப்பு, அப்பக் கேள்வி கேட்க, எனக்கு ரைட்ஸ் இருக்கு ." ரகுவீரும் உரிமையை பேச,
"சரி ஃபைன், உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியனும் . நான் எப்படி இங்க ஜானகி சிவகுருநாதனா வந்தேனோ, அதே மாதிரி தான் திரும்புவேன். எங்க அப்பா, அம்மாவுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கு. அதனால் தான் இங்க வரை அனுப்பி இருக்கிறாங்க . அஸ் ஏ கம்பெனி எம்டி, உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா என்னை ட்ரைனில இருந்து ரிலீவ் பண்ணுங்க. நான் உங்கள் கம்பெனி, ராத்தோட் மேன்சன் ஈவன், மும்பையை விட்டுப் போகவும் ரெடி." என அறிவித்தாள் ஜானகி.
"ஜானி என்ன பேச்சு இது. கோவத்தில் பாதியில் விட்டுவிட்டு போறதுக்கு, எதற்கு MBA சேரனும். வந்த வேலை தான் முக்கியம் .உங்கள் மாஷாவை நினைச்சு பாரு அவங்களுக்காகத் தானே இங்க வந்தே." என நினைவு படுத்தினான் ராஜ்.
"அதுக்காக செல்ப் ரெஸ்பெக்ட்ன்னு ஒன்னு எனக்கு வேண்டாமா? எப்ப பாரு உன் பையா, என் கேரக்டர் மேல சந்தேகப்படுகிறார். அன்னைக்கு நீயூஇயர் டே லையும் அப்படித் தான் பேசினார். உண்டா இல்லையான்னு கேளு." என ரகுவீரை நேராக நோக்கினாள்.
"ஜானி பேசாமல் இருடி, உன்னை அவங்களுக்கு இரண்டு வாரமா தானே தெரியும். ஏதோ மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்லபேசி இருப்பாங்க." என அமிர்தா அவளைச் சமாதானம் செய்ய,
" ஆமாம் நீ என்னைய அடக்கு, என் கேரக்டர் பற்றி எப்படிச் சொல்றார், உனக்குக் கோபம் வந்ததா, என் கஸின் அப்படி இல்லைன்னு, சொன்னியாடி, கஸினா கூட வேண்டாம் கூடவே இருக்கே இல்லை பிரண்டா, அதுக்காகவாவது கேட்கலாம். உனக்கும் என் கேரக்டர் அப்படித் தான்னு தோணுது போல, பேசாத நீ, உனக்குத் தான் இங்க வந்து புதுசா அண்ணன்லாம் கிடைச்சுருச்சில்ல அதான் என்னைய மறந்துட்ட போடி." என அமிர்தாவிடம் ரகுவீர் மேல் இருந்த கோபத்தைத் திருப்பியவள், அங்கிருந்த டெரஸ் ரூமிற்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள்.
ராஜ், "ஜானி கதவைத் திற, தயவுசெய்து. நீ யாருன்னு எனக்குத் தெரியாதா. பையா அந்த மீனிங்ல சொல்லலை. கதவை திறமா." எனக் கெஞ்சினான்.
"ராஜ், தயவுசெய்து என்னைய கொஞ்ச நேரம் தனியா விடு. நானே கொஞ்ச நேரத்தில் என்னைச் சமாளிச்சுட்டு வந்துக்குவேன்." உள்ளிருந்தே பதில் தந்தாள் ஜானகி.
அமிர்தா தான், "விடுங்கண்ணா வீட்டையும் இப்படித்தான், யாரும் எதுவும் சொல்லக் கூடாது. அத்தை எதாவது சொன்னா, மாமாவையும் சேர்த்து வச்சு செய்வா. ரகுவீர் அண்ணா, ஜானகி நெருப்பு மாதிரி அவளை அவ்வளவு சீக்கிரமா யாரும் நெருங்க முடியாது. பல்லா அங்கிள், பண்டே அங்கிள் அவங்க பசங்க எல்லாரும் அவளுக்கு க்ளோஸ் ஃபேமலி ஃப்ரண்ட்ஸ்.
லாங் வெகேஸன் நேரத்தில், எல்லாரும் அவங்க ஆச்சி, மாமா வீட்டுக்கு போவாங்க, அத்தைக்கு, அதான் ஜானகி அம்மாவுக்கு அது போல் போக முடியாத சூழ்நிலை. எங்க மாமா, பிள்ளைகளுக்கு ஏன் அத்தைக்கே அந்த ஏக்கம் வரக் கூடாதுனு, அவங்க ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு அனுப்புவாங்க. அத்தை அவங்களை அண்ணன் முறை கொண்டாடுவதால, இவள் மாமாஜீன்னு உறவுமுறை கொண்டாடுவாள்." என அமிர்தா நீண்ட விளக்கம் தந்தாள்.
ரகுவீர், தான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டோமோ என யோசித்தான். அவனின் வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது.
ராஜ் மறுபடியும் சென்று "ஜானி, ப்ளீஸ் வெளியே வாடா, மஞ்சரி அனுப்பின மத்த வீடியோ எல்லாம் காட்டுறேன்." என்றான். அதற்கு அவ்விடம் பதிலில்லை. ரகுவீர் அழைத்தால் திறப்பாளோ, என்னவோ, மௌனமாக நேரம் கடந்தது. ரகுவீரும் வாயைத் திறப்பதாக இல்லை.
அமிர்தா தான் அவர்களைச் சமாதானம் செய்து, அவ்விடம் விட்டு நகர்த்தினாள். அவள் அறியாத ஜானியா ஏதோ ப்ளான் பண்ணிதான் ரூமில் அடைந்து இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவள்,
"வாங்க அண்ணா, மொட்டைக் கோபுரத்து முனி இறங்கவும் அதுவே வரும்னு எங்க ஆச்சி சொல்லுவாங்க. அது மாதிரி வருவாள்." என ராத்தோட் ப்ரதர்ஸை கூட்டிச் சென்றாள்.
ரகுவீருக்கு மனசே இல்லை. அவள் மேல் கோபமும் இருந்தது, ஆதங்கமும் இருந்தது. ராட்சசி என மனதில் திட்டிக் கொண்டான். ஹாலில் வந்து எல்லாரும் அமர, கஜேனும் அமரேனும் ஜானகியைக் கேட்டனர்.
"அமிர்தா கூடச் சண்டை போட்டு டெரஸ்ல உட்கார்ந்து இருக்கா." என ரகுவீர் பேரை எடுக்காமல் ராஜ் சமாளிக்க,
"அவளை அப்படியே விட்டுட்டு வந்துட்டிங்களா , சண்டை போட்டா சமாதானம் பண்ணனுமா இல்லையா." என்ற கஜேன் "நான் போறேன் காத்து வாங்கியும் ரொம்ப நாள் ஆச்சு!" என லிப்ட் ஏறப் போக "பையா நானும் வர்றேன் ." என அமரேனும் சேர்ந்து போனார்.
ரகுவீருக்கு தான் எதுவும் புரியவில்லை. யாரிடமும் ஒட்டாத கஜேன் சாச்சாஷாவே, இவளைத் தேடி ஓடுகிறார். இவள் என்ன மோகினியா, தேவதையா, என மனதில் அதிசயித்தவான், இல்லை இல்லை இது ஒரு குட்டி பிசாசு என நினைத்துக் கொண்டான். ரூமில் அடைத்து உட்கார்ந்தவள், ரகுவீர் மேல் கோபம் இருந்தாலும் அதைப் பொருட் படுத்தவில்லை. பாண்டேவுக்கும், ரெட்டிக்கும் கான்ஃப்ரன்ஸ் கால் போட்டாள்.
சிவகுருவுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவர்கள், ஹலோ, ஹலோ என ஆளுக்கு ஒரு பக்கம் போனைப் பிடித்துச் சென்றனர்.
"மாமாஜீ, சத்தம் வரலையா?" என்ற ஜானகியிடம், "உங்கப்பாவுக்குக் கேட்காத தூரம் எப்படி வர்றது,அதுக்குத் தான் ஆக்டிங்." என்றார் பாண்டே.
"ஜானகி, நாங்க உங்கப்பா,அம்மாவை கூட்டிக்கிட்டு இன்னும் அஞ்சு நாள்ல ஹேமந்த் அண்ணன் மகள் கல்யாணத்துக்கு, உதய்பூர் வர்றோம் . நீ செய்ய வேண்டியது ராத்தோட்ஸ் எல்லோரும்,உன் மூனு மாமன்கள் அவர்கள் பையன்கள், உங்க நானா, நானி எல்லாரும் அங்க வர்ற மாதிரி ப்ளான் பண்ணு. இதில் தான் உங்க அம்மாவை அவங்க வீட்டோட சேர்க்கனும்." என்றார் ரெட்டி.
"மாமையா, பிரச்சனை ஒன்னும் வந்துடாதே?” எனக் கவலைப்பட்டாள் ஜானகி.
"கலகம் பிறந்தால் தான் நன்மை பிறக்கும். கூட்டிட்டு வா அந்த மாமன்களா, இந்த மாமன்களான்னு பார்த்திருவோம்." என்றார் பாண்டே.
"எனக்கென்னமா இவங்க எல்லாம் அம்மா மேல் பாசமா இருக்க மாதிரி தெரியுது, பிரச்சினை உதய்பூர்ல தான்னு தோணுது." என்றாள்.
"ஆமாம்டா, அதுக்குத் தான் அங்கே போகப் போறோம்." என்ற ரெட்டியிடம்,
"ரொம்பக் கஷ்டம் மாமாஜீ , உங்க கிட்ட பேசறதுக்கே ஒரு ஆளு பயங்கரமா முறைக்குது. இன்ன கேள்வின்னு இல்லை. எங்க உன்மையைச் சொல்லிட்டு போங்கடான்னு வந்துருவோம்னு தோணுது." என்றாள் ஜானகி.
"ஜானிம்மா, இன்னும் கொஞ்சம் பொறுமையாக இரு. இப்ப தெரிஞ்சது சொத்துக்கு வந்திருக்கன்னு சொல்லுவாங்க. கீளின் செக்காக அம்மா அவங்க பிறந்த வீட்டுக்கு போகனும்." என்றார் பாண்டே. அதற்குள் கதவு தட்டும் சத்தமும், மாமாக்களின் குரலும் கேட்டது.
"மாமாஜீ, இங்க மாமாஷா இரண்டு பேர் கதவை தட்டுறாங்க. நான் கோபமா இருக்கேன். அதுக்குத் தான் சமாதானம் செய்ய வந்திருக்காங்க." என்ற ஜானகியிடம்,
"சுலபமா இறங்கிடாத, வச்சு செய்யி, உன் மாமன்களை." என்றார் ரெட்டி.
"டன், மாமையா, நீங்க சொல்லி,உங்கள் பேச்சைத் தட்டுவனா!" என்றவள்,
ஜானி, ஜானகி சீனியர் ராத்தோட் ப்ரதர்ஸ், என கதவைத் தட்டவும், மெல்ல வந்து கதவைத் திறந்தாள். முகம் கழுவி வந்திருந்தாள். அவள் வாடிய முகம் பார்த்து, அமரனுக்குப் பொறுக்க முடியவில்லை.
"ஏண்டா, இப்படி க்ரை பேபி, ஃபேஸ். இது நல்லாவே இல்லையே!" என அமரேனும், "உன்னைய யாராவது ஏதாவது சொன்னாங்களா?" என கஜேனும் வினவ, "அதை விடுங்க அங்கிள் பேசி என்ன ஆகப் போகுது." எனச் சோகமாகச் சொன்னாள் ஜானகி.
"அப்ப இங்க தான் ஏதோ, அம்ரூகிட்ட சண்டைனா அவ இல்லை அழுவா?" என ஆராய்ந்தார் அமரேன். "ராஜ், ரன்வீர் யாருன்னு சொல்லு." என்றார் கஜேன்.
"ம்கூம், வேண்டாம் அங்கிள்! உங்கள் ஒற்றுமையான குடும்பத்தில் என்னால் பிரச்சினை வேண்டாம். பாஸ் திட்டுனா பொறுத்துக்கனும். என்ன பண்ண சர்டிபிகேட் வேணுமே. இல்லைனா டிகிரி வாங்க முடியாது. அதுவும் இல்லைனா யாரு நம்மை மதிப்பாங்க." என ஜானகி சோக கீதம் பாடவும்,
"உன்னைய ஒருத்தன் திட்டினா அவனுக்கும் அறிவில்லை, அவன் குடும்பத்துக்கும் அறிவில்லைனு அர்த்தம்." என்றார் கஜேன்.
"அதான் தெரியுமே!" என முணுமுணுத்தவள். "அங்கிள் அப்படிச் சொல்லாதீங்க, நீங்க வேணா உங்களைத் திட்டிக்கலாம், ஆனால் அதைக் கேட்க எனக்குத் தான் கஷ்டமா இருக்கும்." எனவும், கஜேன் முழித்தார், "அப்பத் திட்டினது ரகுவியா?" என்றவர். "அவனுக்குப் பொண்ணுங்கன்னா வெறுப்பு, அதுனால அப்படித் திட்டி இருப்பான். நீ கவலை படாத நான் சொல்லி வைக்கிறேன்." என்றார்.
"பரவாயில்லை அங்கிள் நீங்க இரண்டு பேரும் என்கிட்ட பாசமா இருந்தா அதுவே எனக்குப் போதும்." என்ற ஜானகி "மாமூ, உங்க நேடிவ் எது?" என வினயமாக கேட்டாள்.
"நாங்கள் மார்வாடி, உதய்பூர். அங்க தான் ஹவேலி இருக்கிறது." என்ற அமரேனிடம், "அதென்ன ஹவேலி?" ஜானகி சந்தேகம் கேட்க.
"அரண்மனை மாதிரி இருக்கும்." எனக் கஜேன் சொன்னார்.
"என்னைய அங்க கூட்டிட்டு போறீங்களா?" ஆசையாக கேட்டாள் ஜானகி.
"ஒரு ஷாதி கூட வருது, நம்ம மஞ்சரிக்கு கஸின், ஆனால் பாபுஷா, மாஷா வர மாட்டாங்க." என்றார் கஜேன்.
"அங்கிள், ப்ளீஸ் கூட்டிட்டு போங்க. எனக்கு ஹவேலி, ஒட்டகம் எல்லாம் பார்க்கனும்." என ஜானகி, அவர் கையை பிடித்து கேட்கவும், "பார்க்கலாம்." என்றவர்கள். வெகு நாள் கழித்து, அந்த முன் இரவு காற்று, நிலவு எல்லாவற்றையும் ரசித்தனர். ஜானகி, அவர்களுடன் சிரித்துப் பேசி கதை அடித்துக் கொண்டிருந்தாள். அமரேன் போனில் டோட்டல் குடும்பத்தையும், மொட்டை மாடி டின்னருக்கு அழைத்தார்.
"இன்றைக்கு என்ன ஸ்பெஷல், டெரஸ் டின்னர்." என்றபடி எல்லாரும் வந்து சேர்ந்தவர்கள், அந்தச் சூழ்நிலையை, நன்றாக அனுபவித்தனர்.
ரகுவீர், 'நேற்று என்னைய மாடிக்கு ஏற வச்சா , இன்னைக்கு முழுக் குடும்பத்தையும் டெரஸ்க்கு ஏத்திட்டாள். வசதி இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் பறந்துட்டு இருந்தோம். இது புதுவித உணர்வு. எல்லாம் இந்தக் குட்டி பிசாசு பண்ண வேலை. எல்லார்கிட்டையும் நல்லா பேசுறா, என் கிட்ட மட்டும் சண்டை கட்டி ஏறுறா. இவளை நான் ஏதாவது சொன்னா, எனக்கே தாங்க முடியலை. என்னையவே என்மேல் கோவப் பட வைக்கிறாளே? அடிப் பாவி, அரை மணியா, நானே என்னை நொந்தக்குற மாதிரி இப்படிப் புலம்ப விட்டுட்டாளே' என மனதில் குமுறினான்.
அவளும் ரகுவீரை கண்டு கொள்ளவே இல்லை.சரியான கோபத்திலிருந்தாள். அவன் பக்கம் மறந்தும் திரும்புவது இல்லை. சிருஷ்டி தான் ரகுவிக்குத் தேவையானதைத் தேடி தேடி பரிமாறினாள். ஜானகிக்கும் தன் மாமன்களுடன் பேச நிறைய விசயம் இருந்தது.
உதய்பூரைப் பற்றி, அங்கிருக்கும் ஹவேலிகளைப் பற்றி, அதில் வரையப் பட்டிருக்கும், சித்திரங்களைப் பற்றி என வாய் ஓயாமல் பேசிப் பேசி உதய்பூர் செல்லும் ஆவலை அவர்கள் மனதில் விதைத்தாள்.
அமிர்தாவையும் அவள் தவிர்க்கவும், அதிலிருந்து முனி இன்னும் இறங்க வில்லை என்பதை அறிந்தாள்.
நேரம் கடந்து கொண்டிருக்க தூங்குவதற்காக எனப் பெரியவர்கள் கிளம்பினர். ஜானகியும், கஜேனுடன் கீழே இறங்கினாள்.
கீழ் தளத்துக்கு வந்தவள், தன் நாநிஷா காலைப் பிடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து, காலுக்கு, ஆயில் தடவி , உதய்பூர் பற்றி அவரிடமும் பேச, அவர் கோபமாக மறுத்தார்.
"நாநிஷா நம்ம ராஜ்காகப் பார்க்கனும்ல, அவன் பாவம் தானே அப்புறம் மஞ்சரி வீட்டில் என்ன மரியாதை இருக்கும். மஞ்சரியும் கல்யாணம் பண்ணி வந்து எப்படி எல்லாரோடும் ஒட்டுவாள்." என மூளைச் சலவை செய்தாள் ஜானகி. பின்னர் ரகுவீர், அமிர்தா வரும் சத்தம் கேட்டு நானியிடம், ஏதோ சொல்லி விட்டு ரூமிற்குள் சென்று படுத்து விட்டாள்.