Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு கட்டுரைகள்

வகைகள் : இலக்கியம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


இலக்கியம்
சொல்லாமல் சொல்லுவது

  1. சொல்லாமல் சொல்லுவது

ஆகஸ்ட் 1995 கலைமகள்.

 

வாயினால் பேசுவது தான் மனித சமுதாயம் கண்ட வழிமுறை என்பது தெரிந்தது. ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதற்கு வாயை காட்டிலும் அழுத்தமாக ஆணித்தரமாக குறிப்பினால் உணர்த்தி விடலாம் என்று ஆன்றோர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.

தக்ஷிணாமூர்த்தியாகிய இறைவன் குரு மூர்த்தமாக வந்த மருந்து சின் முத்திரை என்று சொல்லப்படும் வடிவத்தில் வலக்கையை காட்டி வாய் சொல்லே இல்லாமல் முனிவர்கள் நால்வருக்கும் உபதேசித்த இந்த சொல்லாமல் சொல்லும் கலையை, குறிப்பால் உணர்த்தும் நுட்பத்தை வழிகாட்டி இருப்பதை

“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை

ஆறங்கம் முதல்கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வர்க்கும் வாகிறந்த

பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை

இந்தபடி இருந்து, காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல்

நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்

என்று பரஞ்சோதி முனிவரின் பாடல் உறுதிப்படுத்துகிறது.

ஒருவரது முக குறிப்பினால் அவரது உள்ள குறிப்பை அறியவல்ல அமைச்சரை அரசர் அவர் எதை கேட்டாலும் கொடுத்து தமக்கு துணையாக கொள்ள வேண்டும் என்ற பொருளில்

குறிப்பிற் குறிப்புணர் வரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் என்கிறது திருக்குறள்

சாணக்கியரை பற்றிய ஒரு குறிப்பு ‘சாணக்கியன் என்ற அந்த மந்திரி உன் முகத்தைப் பார்த்தே நீ என்ன நினைக்கிறாய் இனிமேல் நீ என்ன நினைக்கப் போகிறாய் என்பதை கண்டுகொள்ளும் நுண்ணறிவு படைத்தவன்’ என்கிறது ஆகவே வள்ளுவர் குரலுக்கு எடுத்துக்காட்டாகவே சாணக்கியர் திறமை காணப்படுகிறது.

வால்மீகியின் ஆதி காவியத்தில் நின்று மாறுபட்டு ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் காதலித்தே மணந்து கொண்டார்கள் என்று கதைப்போக்கை நடத்த விரும்பிய கம்பன் வள்ளுவரின் குறிப்பறிதல் என்ற வழியை மனதில் கொண்டு வாய்ப்பேச்சே இல்லாமல் இருவரையும் இணைத்து விட்ட சதுரப்பாட்டினை கம்பனில் காண்கிறோம்.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் என்ற சீதாராமர் காதல் பரிவர்த்தனை வாயினால் ஒரு வார்த்தை கூட பேசாமலே ஒருவரை ஒருவர் ஈர்க்கும் பாசமாக பரிணமிக்கிறது. “வரிசிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்.இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்” என்ற அளவிலே அந்த தெய்வத்திருமணம் நிகழ்ந்து விட்டதாக தானே கொள்ளல் வேண்டும்.

அதன் பிறகு தயரதனும் பல்வேறு தேசத்து மன்னர்களும் மிதிலை வந்தடைந்ததும், கனகபுத்திரி அன்னமும் அரம்பையரும் ஆறாம்ழுதும் நாண மன்னவை இழந்த மணிமண்டபம் வந்தடைதல் காகித்தன் அவர் கரம் பற்றுதலும் எல்லாமும் ஏற்கனவே ராமர் சீதை இருவருடைய கண்களும் நடத்தி முடிந்துவிட்ட செயலை ஊர்திதம் செய்யும் வெறும் சம்பிரதாய சடங்குகள் தான் என்பது தானே உண்மை.

இதற்கு ஆதாரமாக வருகிறது குறள்.

“கண்ணோடு கண்ணீரை நோக்குகின்ற வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல”

கண்கள் நடத்தும் நாடகத்தில் வாய் சொற்களுக்கு ஒரு வேலையும் இல்லை.

அசோகவனத்தில் சீதையை ராமனிடம் கொண்டு போய் சேர்க்க எண்ணிய அனுமன் அவளை தன் தோள் மீது ஏறுக என்று விண்ணப்பிக்கின்றான்.

அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து பிராட்டி வேறு பல காரணங்களை கூறுவதுடன் அனுமன் ஓர் ஆண் என்பதால் அவனை தீண்டுதல் கூடாது என்று சீதை கூறுகிறாள்.

அனுமனின் முக குறிப்பில் மாற்றம் ஏற்படுகின்றது ராவணன் பிராட்டியை தீண்டி தானே கொண்டு வந்திருக்க வேண்டும் என்னும் ஐயம் ஹனுமன் உள்ளத்தில் தோன்றுகிறது அனுமன் வாய் திறந்து தன் சந்தேகத்தை கேட்கவில்லை அவன் முகத்தோற்றமே இந்த ஐயத்தை சீதைக்கு புலப்படுத்துகிறது.

அரக்கன் உங்களை தீண்டவில்லையா என அனுமன் கேட்பதாக வைத்துக்கொண்டு அவன் முகக் குறிப்பறிந்து வருகிறது பதில்,

“நிலம் வங்கையால் கீண்டு கொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையான்” ஆம் ராவணன் சீதையை தொடாமல் பர்ணசாலையுடன் பெயர்த்து கொண்டு வந்துவிட்டான்.

சீதையை தேடப் போனாலும் எப்போது வருவானோ என்று எதிர்பார்த்து காத்திருக்கிறான் ராமன் இதோ அனுமனும் வந்துவிட்டான் வந்தவன் எப்படியோ தரையில் விழுந்து வணங்கினான். யாரை? ராமனை வணங்கவில்லை, சீதை இருக்கும் திசை நோக்கி வணங்கியபடியே சீதையை புகழ்ந்து துதிக்கிறான்.

அனுமனின் இந்த செய்கையில் இருந்து சீதை எங்கேயோ சௌக்கியமாக உயிரோடு இருக்கிறாள் அவளை இவனே கண்டும் வந்து இருக்கிறான் என்பதுடன் அவை எல்லாவற்றையும் காட்டிலும் மிக மிக முக்கியமாக ராமனுக்கு தெரிய வேண்டிய விபரம் சீதையை அனுமன் வணங்குவதால் அவள் மாசுபடாத கர்ப்பின் செல்வியாக விளங்குகிறாள் என்ற அத்தனை விபரங்களையும் குறிப்பினால் ராமன் அறிந்து கொள்கிறான்.

 “உலகம் விட்டு தென்திறவி தெரிய நோக்கினான்

வண்டுலோதியும் வழியில் மாற்றிவன்

கண்டதுண்டவள் கற்பும் நன்றெனக்

கொண்டவன் குறிப்பினால் உணரும் கொள்கையான்”

அது நுட்பமான பூர்மதி படைத்த அனுமன் வாய் திறந்து சொல்லாமலே இத்தனை விபரங்களையும் குறிப்பினால் உணர்த்துகின்றான்.

பாரதியார் கண்ணனை தன் தோழனாக கற்பனை செய்திருப்பதில் அவனுக்கு எத்தனையோ திறமைகள் எல்லாம் இருப்பதாக பெருமைப்படுவதுடன் நான் என் மனதில் என்ன நினைத்தேன் என்பதை குறிப்பா அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவன் என்பதை

“என்றன் நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இது என்று நான் சொல்லும் முன் உணர்வான்” என்று குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமல்ல எனக்கு தலைக்கனம் ஏற்பட்டு விட்டது என்பதை குறிப்பால் உணர்ந்து விட்டால் என் கன்னத்தில் பளார் என்று ஓர் அரை கொடுப்பான் மேலும் நான் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசினால் நீயும் ஒரு மனிதன் தானா என்று முகத்தில் காரி உமிழ்ந்திடுவான் என்ற தோழனின் குறிப்பறியும் திறனை

“உள்ளத்திலே கருவம் கொண்ட போதினிலே ஓங்கி எடுத்திடுவான் நெஞ்சில் கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னாலங்கு காரி உமிழ்ந்து விடுவான்” என்ற வார்த்தைகளால் குதூகலமாக குறிப்பிடுகிறார் பாரதியார்.

தலைவன் முக்கிய அலுவலாக வெளியூர் செல்ல நினைக்கிறான். இதை ஓர் தோழி மூலம் தன் மனைவிக்கு சொல்லி அனுப்புகிறான், மனைவியிடம் தோழி போய் சொன்னதும் அவள் வாய் திறந்து எதுவுமே பேசாமல்

தொடி நோக்கி மென்தோறும் நோக்கி

அடி நோக்கி அகுது ஆண்டு அவள் செய்தது

அதாவது கணவன் பிரிவினால் ஏற்படும் துயரத்தால் அவள் உடம்பு மெலிந்து கையில் அணிந்திருக்கும் வளைவிகள் எல்லாம் கலன்று விழுந்து விடத்தான் போகின்றன ஆகவே இத்தகைய துயரத்திற்கு நான் ஆளாகி விடாமல் தன் பாதங்களை பார்த்து என் தலைவருடனே நானும் நடந்து செல்ல நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று வாய் திறந்து பேசாமலே பேசுகிறாள்.

தலைவி தன் உள்ளத்திலே வாய் திறந்து சொல்லாமலே உணர்த்தி இருப்பதை இந்த குரல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

ராமாயணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

ராவண சம்ஹாரம் முடித்து ராமரும் பரிவாரங்களும், ராவணனுடைய அரண்மனையைச் சுற்றிப் பார்க்கிறார்கள் அங்கு மிக மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடன் கூடிய ஒரு மரகத சிம்மாசனம் காணப்படுகிறது ராமரே அதன் அழகில் சற்று மயங்கி விடுகிறார்.

அயோத்திக்கு போகும்போது இதை எடுத்துப் போகலாமா என்று அவர் மனதில் ஒரு சபலம் ஏற்படுகிறது.

பிரபு என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறார் எதிரே ஜாம்பவான் நின்று கொண்டிருக்கிறான்.

ஒருவருக்கு தானமாக வழங்கி விட்ட பொருளை யாரும் திருப்பி எடுத்துக் கொள்வது இல்லையே! ராமர் திடுக்கிட்டு தன் இயல்பு நிலைக்கு திரும்பி அந்த இடத்தை விட்டு அகறுகிறார்.

ராமர் மனசிலே ஓடிய நினைவூட்டத்தை குறிப்பால் கண்டுவிட்ட வயது முதிர்ந்த ஜாம்பவான் இந்த இலங்கையும் இதில் உள்ள அத்தனை பொருளும் விபீஷணனுக்கு ஏற்கனவே பட்டம் கட்டி விட்டதை நினைவூட்டுகிறான்.

கதைகளிலும் காவியங்களிலும் காணப்படும் கருத்துக்கள் ஒரு புறம் இருக்க பத்திரிக்கையில் வந்த செய்தியை பார்ப்போம்.

பிரதமர் நேரு சென்னை வந்திருந்தவர் காலையிலிருந்து மாலை வரை பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அவருடைய கலையான முகம் களையிழந்து சோர்வுடன் காணப்படுகிறது அடுத்து இன்னும் ஒரு நிகழ்ச்சி வேறு இருக்கிறது. குறிப்பாக உலர்ந்துவிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள் அந்த மாமனிதரை மனிதருள் மாணிக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்புடன் அதிகாரிகள் அவசரமாக கூடி பேசுகிறார்கள் விவாதிக்கிறார்கள் அடுத்த நிகழ்ச்சியை 2 மணி நேரம் தள்ளி வைப்பது என்றும் அந்த இடைவெளியில் நேரு ஓய்வெடுக்க வைப்பது என்றும் திட்டமிடுகிறார்கள்.

நேரு தமக்கு களைப்பாக இருக்கிறது என்று எதுவும் வைத்திருந்து சொல்லவில்லை குறிப்பால் உணர்ந்து கொண்டு ஆவண செய்த அதிகாரிகளின் திறமையும் கடமை உணர்ச்சியும் பாராட்டப்பட வேண்டியவை தானே.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது முக்கியமான ஒரு கூட்டம். பத்திரிகை நிருபர்கள் ஆங்காங்கு வந்து நின்று கொண்டு தலைவர்களை வெவ்வேறு கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது இந்த நிருபர்களை வெளியே அனுப்பு என்று வாய் திறந்து எதுவும் சொல்லாமலேயே இந்திரா காந்தி அங்கு பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அதிகாரியை ஒரு பார்வை பார்த்தார்.

அந்த குறிப்பை புரிந்து கொண்ட அதிகாரி மளமளவென்று பத்திரிகை நிருபர்களை வெளியேற்றி விட்டார் கூட்டம் ஆரம்பம் ஆகிறது.

ஆகவே வான் புகழ் கொண்ட வள்ளுவரே குறிப்பறிதல் என்று இரண்டு அதிகாரமும் குறிப்பு அறிவுறுத்தல் என்று ஓர் அதிகாரம் ஆக மூன்று அதிகாரங்களை ஒதுக்கி இருப்பதிலிருந்து சொல்லாமல் சொல்லும் இந்த மோனமொழியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

 

இலக்கியம்
குடும்பம்

  1. குடும்பம்

நவம்பர் 1984 கலைமகள்

 

ஊரார் கூடி உற்றார் கூடி மேளதாளங்கள் முழங்க அக்னி சாட்சியாக, அரசாணை சாட்சியாக இவள் உன் மனைவி இவன் உன் கணவன் என்று நிச்சயித்து நிர்ணயித்த காரணத்தினால் மனித இனம் தம்பதிகளாக இணைந்து கொள்கிறார்கள் குடும்பம் உருவாகிறது.

ஆனால் இந்த ஆடம்பரம் எதுவுமே இல்லாமல் சடங்குகள் சம்பிரதாயங்கள் நடத்தாமல் நடத்த தெரியாமல் மற்ற உயிரினங்கள் ஆணும் பெண்ணுமாக இணைந்து கொண்டு தாம்பத்தியத்தில் ஒன்றி தங்கள் குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றன.

அவற்றின் இடத்திலும் ஆசா பாசம், பரிவு, பற்றுதல், குழந்தை குட்டிகளை கட்டி காத்து, குடும்பத்தை அரவணைத்து நடத்திச் செல்லும் தாம்பத்திய நெறியாகிய நியதியையும் காண முடிகிறது.

கிரவுஞ்சம் எனப்படும் அன்றில் பறவைகள் எப்போதும் எந்த நேரத்திலும் இணைபிரியாமல் வாழ்கின்றன அவற்றில் ஆண் இறந்து விட்டது என்றால் பெண் அன்றில் மனிதர்கள் கைம்மை நோன்பு நோற்பது போல் துயரத்தில் மூழ்கி இரவு பகல் இடைவிடாமல் கதறிக் கொண்டே பறந்து திரிந்து தன் உயிரையே மாய்த்துக் கொள்வதை பார்க்கின்றோம்.

“புலர்கின்ற பொழுதோடு மாடத் துலாவும்

புறவென்ன மனம் என்ன மணமக்கள் வாழ்க”

என்ற வாழ்த்துப் பாடலில் இருந்து புறா எப்படி இணைந்து இன்பம் துய்கின்றன என்பது புலனாகிறது.

தாய்மை பரிவும் பாசமும் காதல் கற்பு தியாகம் என்ற பண்புகளும் இறைவன் சிருஷ்டியில் காண்கின்றன. மனித இனத்துக்கே வழிகாட்டிகளாக குடும்ப பொறுப்புடன் பகுத்தறிவு படைக்காத உயிரினங்களும் வாழ்கின்றன சில இலக்கியச் சான்றுகள் இதோ

கொடிய விஷத்தைக் கக்கும் சினமிக்க பாம்புகளும் கூட ஒன்றை ஒன்று தழுவி இன்பம் பெறுகின்றன என்று தெரிகிறது. கோவலனும் கண்ணகியும் பாம்புகள் ஒன்றை ஒன்று தழுவி பிரியாது கிடப்பது போல் வாழ்க்கையை அனுபவித்தார்கள் என்பதை

“தூமப்பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவர்

காமர் மனைவி என கை கலந்து” என்று இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மிருகங்களில் மான்கள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை. புதருக்குள் சரேல் என்று ஒரு சத்தம் கேட்டு விட்டால் நாலு மைல் ஓடித்தான் நிற்கும் ஆனால் ஆணும் பெண்ணும் இணைந்து இருக்கும்போது அவற்றை எந்த சக்தியாலும் பிரிக்க இயலாது என்று சொல்லப்படுகிறது.

பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டு மகாராஜா காட்டில் வேட்டையாடும் போது இரண்டு மான்கள் இணைந்திருந்த போது அம்பு விட்டு கொன்று விடுகிறான் அந்த குரூரமான செயலினால் பாண்டு சாபத்திற்கு உள்ளாகின்றான் உண்மையில் அவை மான்கள் அல்ல ஒரு ரிஷியும் அவர் பத்தினியும் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு தாம்பத்தியத்தில் இணைத்து இருந்தார்கள் என்பது பாரத கதை.

“இனவிருத்தி” காரணமாக உயிரினங்கள் தங்கள் உடலை வருத்தி குடும்ப நன்மைக்காக எத்தகைய துன்பங்களையும் ஏற்றுக் கொள்வதையும் பார்க்கின்றோம்.

பறவைகள் தங்கள் இரை எடுப்பதை கூட மறந்து முட்டைகளை அடைகாப்பதும் மீன் தன் முட்டைகளை தன் பார்வையினாலே பொரிப்பதையும் ஆமைகள் முட்டையை இட்டு வைத்துவிட்டு அதையே நினைத்துக் கொண்டிருக்கும் யோக சமாதி போன்ற நிலையும்

“அன்னை தம் சிசுவை ஐயன்

ஆமை மீன் பறவை போல

தன்னகம் கருதி நோக்கி

தடவ சந்ததியிருத்தி” என்று கைவல்யம் விளக்குகிறது.

இன்னமுதை காற்று நிலை எங்கும் கலந்தது போல் இசை மழையை பொழியும் குயிலும் அந்த இன்ப போதையில் என்றும் தன்னை விடுவித்துக் கொண்டு பொறுமையாக அடைக்காக இயலாமலோ அல்லது சோம்பேறித்தனத்தினாலோ தன் முட்டைகளை திருட்டுத்தனமாக காகத்தின் கூட்டினில் வைத்து குஞ்சுகளாக மாற்றிக் கொள்கிறது. ஆகவே பாடிய பொழுதை கழிக்கும் பாடகி ஆகிய குயிலும் தன் இனவிருத்தியை அசட்டை செய்து விடவில்லை.

இனவிருத்திக்கு பிறகு அந்த சிசுக்களை கட்டிக் காக்கும் உயிரினங்களின் அக்கறையும் கொஞ்சமல்ல.

அற்பமான கோழியானது குஞ்சு பொரித்த நிலையில் அருகில் யாரையும் அணுக விடுவதில்லை.

குட்டி போட்ட நாய் கிடக்கிறது என்றால் அந்த தெருவில் வேற்று ஆள் நுழைய முடியாது. சாதுவான பசு கன்று போட்டவுடன் புலிப்பாய்ச்சல் பாய்வதை காண்கிறோம்.

“கன்னல் எனும் கருங்குருவி

ககன மலைக்கு ஆற்றாது

மின்னல் எனும் புழுவெடுத்து

விளக்கு வைக்கும் கார்காலம்” இந்த பாடலில் இரவு நேரத்தை குருவியாகவும் மின்னலை புழுவாகவும் உருவப்படுத்தியுள்ளது என்றாலும் நல்ல மழைக்கால இருளில் தம் குஞ்சுகளின் பாதுகாப்புக்காக மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து களிமண்ணில் அவற்றை செருகி வைத்து தன் கூட்டுக்குள் வெளிச்சம் உண்டு பண்ணிக் கொள்ளும் சாமர்த்தியத்தையும் குருவிகளின் குடும்பப் பொறுப்பையும் காண முடிகிறது.

நல்ல கோடை காலம் ஆணும் பெண்ணும் ஆகிய மான்கள் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றன. நா வறள்கிறது, ஓடி ஓடி தேடியும் துளி தண்ணீர் கிடைக்கவில்லை.

கடைசியில் ஒரு சுனையில் தண்ணீர் கிடைப்பது தெரிந்து ஆணும் பெண்ணும் ஆகிய இரண்டு மான்களும் சுனையை நெருங்குகின்றன ஆனால் அங்கு மிகச்சிறிய அளவு தண்ணீரே இருக்கிறது ஆண் மான் குடிக்காவிட்டால் பெண் மான் குடிக்காது இந்த தண்ணீர் முழுவதையும் பெண்மானை குடிக்க வைக்க வேண்டும் அதற்கு ஆண் மான் ஒரு தந்திரம் செய்கிறது என்ன அது

“சுனைவாய் சிறுநீரை எய்தா தென்றுண்ணி

பிணைமான் பெரிதுன்ன வேண்டி கலைமான்

தன் கன்னத்தால் ஊஞ்சும்”

ஆண் மான் தண்ணீரில் வாயை வைத்து உறிஞ்சும் சப்தத்தை எழுப்புகிறது ஆண்மானும் தண்ணீரை குடிப்பதாக நினைத்து பெண் மான் அத்தனை தண்ணீரையும் குடித்து தாகத்தை தணித்துக் கொள்கிறது அதை பார்த்து ஆண் மான் மன நிறைவு அடைகிறது.

அந்தி நேரத்து காட்சி ஒன்று

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின

தந்தியும் பிரிகளும் தடங்கள் நோக்கின” மிகவும் எளிமையான பாடல், குரங்குகள் மரங்களை நோக்கி செல்கின்றன யானைக் கூட்டங்கள் தடாகங்களுக்கு போய்க்கொண்டிருந்தன அவ்வளவுதான் பொருள் ஆனால் கம்பனுடைய பாடல் அல்லவா கருத்தாலும் கவனிக்கத்தக்கது.

முதல் அடியிலேயே மந்தியாகிற பெண் குரங்கு முன்னே போகிறது அதாவது மரத்திலேயே நல்ல வசதியான இடமாக பார்த்து பெண் குரங்கு இரவை கழிக்கட்டும் நாம் எங்கேயாவது மரத்தின் அருகிலோ ஓரத்திலோ தங்கிக் கொள்ளலாம் என்ற தியாகம் உணர்வுடன் ஆண் குரங்கு பின்னே சாவகாசமாக செல்கிறதாம். ஆனால் அடுத்து ஆண் யானை நீர் தடாகத்தை நோக்கி முன்னே செல்ல பெண் யானை பின்னே தொடர்கிறது நீர் தடாகங்களுக்கு அருகே வேட்டுவர்கள் பள்ளம் வெட்டி பொறிவைத்து யானைகளை பிடிப்பது வழக்கம்.

அப்படி பள்ளத்திலே அகப்பட்டுக் கொள்ள நேரிட்டால் ஆண் யானை விழுந்து விட்டதை பார்த்து பெண் யானை தப்பி விட வேண்டுமாம், ஆகவே அத்தகைய ஆபத்தை எதிர்நோக்கி ஆண் யானை முன்னே போகின்றது.

“கற்பு நிலையென்று சொல்ல வந்தாரிரு

கட்சிக்கும் மஃதை பொதுவில் வைப்போம்” என்று மனிதர்களில் ஆண்களையும் அந்த ஒழுங்கில் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறார் பாரதி.

பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும் அந்த நியதி உண்டா? நீண்ட நாட்களுக்கு முன் மேலைநாட்டில் சந்திக்கையில் வந்த ஓர் உண்மை சம்பவம் இது.

ஒருவருடைய வீட்டு மாடியில் ஒரு பகுதியில் ஆணும் பெண்ணுமாக இரண்டு நாரைகள் கூடு கட்டிக்கொண்டு வசிக்கின்றன. பெண் நாரை இரண்டு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது, இந்த நிலையில் வீட்டுக்காரர் ஒரு சோதனையை செய்கிறார். நாரைகள் இல்லாத நேரத்தில் அந்த இரண்டு முட்டைகளில் ஒன்றை எடுத்துவிட்டு வேறு ஒரு பறவையின் முட்டையை அதில் வைத்து விடுகிறார் அந்த முட்டை அளவிலும் நிறத்திலும் அதிக வேறுபாடு தெரியாததால் பெண்ணாறு அடைகாத்து குஞ்சுகள் வெளி வருகின்றன சில நாட்களிலேயே அந்த ஒரு குஞ்சு அழகற்றதாகவும் கருப்பாகவும் இருப்பதை ஆண் நாரை கவலையுடன் கவனிக்கிறது. அன்று ஒருநாள் மொட்டை மாடியில் கூடுகின்றன. அந்த அயல் குஞ்சை பார்த்து விட்டு காற்று மூச்சு என்று கத்துகின்றன ஏதோ ஒரு பஞ்சாயத்து நடப்பது போல் ஒரு தோற்றம்.

கடைசியில் அந்த நாரைகள் அத்தனையும் கூறி பெண்ணாறையை கொத்தி காயப்படுத்தி கொன்று விடுகின்றன. ஆண் நாரை அதன் பிறகு அங்கு வரவில்லை. பெண்ணாறையின் கற்பில் சந்தேகம் ஏற்படுவதற்கு தான் காரணமாகி, அந்த நாரை குடும்பமே குலைந்து விட்டதே என்று சோகமாக முடித்து இருந்தார் கட்டுரை ஆசிரியர்.

நாகரிகத்தில் முதிர்ச்சி பெற்று விட்டதாக கருதிக் கொள்ளும் மனித பரம்பரை நெறி இல்லா நெறிதனை நெறியாக நினைத்து சிறுநெறிகளில் சிக்கித் தன்னை கீழ்மைப்படுத்திக் கொள்ளும் போது பகுத்தறியும் தன்மை இல்லாத பறவை இனம் கற்பு நெறியை கடைப்பிடித்தன என்பதை எத்தனையோ பெரிய ஆச்சரியம் தான்.

ஆகவே பகுத்தறிவு இல்லாததாக கருதப்படும் பறவைகளும் விலங்கினங்களும் ஆணும் பெண்ணும் ஒன்றின் மீது ஒன்று அன்பு செய்ய செய்வதிலும் தாம்பத்திய இன்பத்திலும் குட்டிகளை குஞ்சுகளை கட்டிக் காப்பதிலும் தன் துணையின் துன்பத்தை போக்க மற்றொன்று காட்டும் தியாக பெரு உணர்விலும் மனிதனுக்கே வழிகாட்டியாக அவற்றின் குடும்பமும் அமைந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.

 

இலக்கியம்
காவியத்தில் கண்கள்

காவியத்தில் கண்கள்

செப்டம்பர் 1985 கலைமகள்

 

கவிஞர்கள் கண்களைப் பற்றி குறிப்பாக பெண்களின் கண்களை பற்றி எப்படி எல்லாமோ அழகுபட வர்ணித்து இருப்பதை பார்க்கின்றோம்.

வாள் போன்ற கண்கள் மீன் போன்ற கண்கள் மான்விழியால் வேல்விழியால் என்று வர்ணித்திருப்பதையும் காவிடும் மலரையும் குவளை மலரையும் தாமரையும் ஓத்திருப்பதையும் காண்கின்றோம்.

பெண்களின் கண்கள் மருண்ட நோக்குடையவை எனும் பொருளில் “பினை யேற் மட நோக்கு” என்று வள்ளுவரும் குறிப்பிட்டு இருக்கிறார். வேடன் ஒருவன் காட்டுக்குள் வேட்டையாடச் செல்கிறான் ஒரு பெண் மான் தனியே மேய்ந்து கொண்டிருக்கின்றது. முதல் மறைவில் இருந்தபடி அந்த மானின் மீது குறி வைக்கிறான் வேட்டுவன். மானின் மற்ற அவையங்களில் அம்பு பட்டாலும் மான் தப்பி ஓடி விடக்கூடும் என்று மானின் கண்களின் மீது குறி வைக்கிறான்.

இப்போது வேட்டுவரின் ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வையில் மானின் உடல் தெரியவில்லை. தலை தெரியவில்லை கொம்பு முகம் எதுவுமே தெரியவில்லை. ஆனால் மானின் கண்கள் மட்டுமே தெரிகிறது.

அந்த கண்களை கூர்ந்து கவனித்த மாத்திரத்தில் அவன் உடம்பே கிடு கிடு என நடுங்க ஆரம்பித்தது கண் கலங்க உள்ளம் கலங்க அவன் கையில் இருந்த அம்பும் வில்லும் நழுவி கீழே விழுந்து விடுகின்றன என்ன காரணம்

அந்த மானின் மருண்ட நோக்கு குடிசையில் விட்டு வந்துள்ள தன் மனைவியின் கண்களை ஞாபகப்படுத்தி விடுகின்றன இப்போது அந்த மான் வேடனின் கண்களுக்கு மானாகவே தோன்றவில்லை தன் பிரியமுள்ள மனைவியாகவே அந்த மானை பார்க்கின்றான் நினைக்கின்றான்.

 “எய்யத் தொகுத்தேன்

குறத்தி நோக்(கு) ஏற்றதென

கையில் கணை கனைந்து

கன்னிமான் பையப்போ”

“நீ மெதுவாக போம்மா நான் உன்னை ஒன்றும் செய்யவில்லை” என்று அன்பொழுக பேசுகிறான். நக்கீர தேவனாயனார் பாடிய திருஈங்கோய்மலை எழுவதில் இந்த காட்சியை காண்கிறோம்.

ஆரம்பத்தில் ராமன் பர்ணசாலையில் தனியே அமர்ந்திருக்கின்றான். அவனை மயக்கி கவர்ந்து விட சூர்ப்பனகை திட்டமிடுகிறாள் இந்த இப்பிறவியில் பிறமாதரை சிந்தையாலும் தொடாத ராமனை அல்லவா நிலை தடுமாற வைக்க வேண்டும் அதற்காக சூர்ப்பனகை மோகன உருவம் பெற்று சிங்காரவல்லியாக வரும்போது

“மானின விழி பெற்று மயில்

வந்ததென வந்தாள்” என்று கம்பன் சொற்சித்திரம் காட்டுகிறது.

மதுரையில் கோயில் கொண்டுள்ள ஜெகன் மாதாவுக்கு அங்கையர் கண்ணி மீனாட்சி என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு.

மீன் போன்ற அழகிய கண்களை உடையவள் தாய் என்பது மட்டும் பொருள் அல்ல. மீன் தான் ஈன்ற முட்டைகளை தன் பார்வையின் வேகத்தாலேயே குஞ்சுகளாகி அவற்றை கண்காணிப்பது போல் மும்மை புவன முழுதீன்ற அன்னையாகிய மீனாக்ஷி சகல ஜீவராசிகளையும் தன் கருணை கண்களின் கடாட்சத்தாலே காத்து ரட்சிப்பதால் தான் அவளுக்கு அத்தகைய பெயர்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் அறியத் தக்கன.

ராமன் சீதையை மாலையிட மணவாளனாக உலா வருகின்றான். மிதிலை நகரத்து பெண்கள் வீட்டு முற்றங்களிலும் மாடிகளிலும் சாளரங்களின் அருகிலும் குழுமி நிற்கிறார்கள். இங்கே கம்பன் பெண்கள் என்று சொல்லவில்லை கண்கள் என்று சொல்லவில்லை பார்த்தார்கள் என்றும் கூட சொல்லவில்லை.

“ஆனகத்திரை அரமியதளத்திலும் அனந்த

சாளரத்தினம் பூத்தன தாமரை மலர்கள்”

என்று சொல் ஜாலத்தின் மூலம் அந்த தாமரை மலர்களைப் போன்ற கண் அழகிகளாகிய பெண் அழகிகள் ஆங்காங்கே கூடி நிற்பதையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறான் கம்பன்.

உழவர்கள் வயல்களுக்கு களை எடுக்கச் சென்றவர்கள் அங்கே களையாக மண்டி கிடக்கும் குவளை மலர்களை எல்லாம் பிடுங்கி ஏறிய மனம் வராமலேயே மலைத்து நிற்கின்றார்களாம். காரணம் குவளை மலர்கள் தம் மனைவியரின் கண்களைப் போலவே தோன்றுகின்றனவாம்.

“மையணைந்த குவளை தம் கண்களெல்லாம்

மலர் குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்

செய்யணைந்து களைகளை யாதேறும்…” என்று வரும் திருமங்கையாழ்வாரின் பாடல் இப்படி கூறுகிறது

“கண்ணன குவளையும்

கட்டல் ஓம்பினார்”

என்று வரும் சீவக சிந்தாமணி பாடலிலும் இதே கருத்து காணப்படுகிறது.

பெண்களின் கண்களை வாளுக்கு ஒப்பிட்டுள்ளதை பல இடங்களில் பார்க்கின்றோம் ராமனும் சீதையும் முதன் முதலில் சந்திக்கும் போது

“வரிசிலை அண்ணலும் வாட் கண் நங்கையும்

இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார்” என்று பேசப்படுகிறது.

இங்கே சீதையின் கண்கள் வாள் என்று உவமிக்கப்படுகிறது. அதாவது வரி சிலையாகிய ஆயுதம் ஏந்திய ராமனது பிரம்மச்சரிய கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே நுழைய சீதையிடம் வாள் என்ற ஆயுதம் இருக்கிறது

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ராமனது வில் ஏந்திய வீரசௌந்தர்யமும் சீதையினுடைய வாள் போன்ற கண்களை உடைய ரூபசௌந்தர்யமும் ஒன்றை ஒன்று ஆக்கிரமித்து வெற்றி பெற்று விட்டன என்பது தானே இராமாயண கதை

“காலாயுதக் கொடியோன்,

கையாயுத விழியாள்

மாலாயுதம் ஈன்ற மாமணியைத்

தானுகுத்தான்”

காலை ஆயுதமாக உடைய சேவல். சேவலை கொடியாக கொண்டவன் முருகன். அவனது ஆயுதம் வேல். அந்த வேல் போன்ற கண்களை உடைய ஒரு பெண், திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாகிய சங்கு ஈன்ற முத்தைப் போன்ற கண்ணீரை உகுத்தாளாம். ஒரு பெண் அழுதால் என்பதுதான் விஷயம் இதற்கிடையில் இத்தனை ஆயுதங்களையும் கொண்டு வந்து குவித்து விடுகிறார் கவிஞர்.

முதல் நாள் யுத்தத்தில் “இன்று போய் நாளை வா” என்ற ராமனுடைய வள்ளல் தன்மையால் உயிர்பிச்சை பெற்று ராவணன் “பூதலம் எனும் நங்கை தன்னையே நோக்கி” வீடு திரும்புகிறான்

இந்த பெருத்த அவமானம் தேவர்களுக்கெல்லாம் தெரிந்து சிரிப்பார்களே? மண்ணுலக மாந்தர்கள் எல்லாம் பார்த்து நகைப்பார்களே? தன்னுடைய எதிரிகளால் போரில் கேலி பேச்சுக்கு இடமாகி விடுமே என்று கூட ராவணன் கவலைப்படவில்லை. ஆனால் சீதை பார்த்து சிரித்து விடுவாளே என்று ஞானத்தால் சாம்புகிறான்.

இதைச் சொல்ல வந்த கம்பன்

“வேல்நடு நெடுங்க செவ்வாய் மெல்லியள்

மிதிலை தந்த சானாகி நகுவள்“ என்று குறிப்பிடுகிறான். அதாவது பெயர்களையெல்லாம் பார்த்து ஜானகியின் கண்கள் பூ இவ்வளவுதானா உங்கள் கூர்மை என்று பரிகசிக்கின்றனவாம்.

அரச சபைக்கு பாஞ்சாலியை மாடு நிகர்த்த துச்சாதனன் அவளுடைய மைக்குழல் பற்றி இழுத்து வந்து துகிலுருகிறான் அவளுடைய கணவர்களாகிய பாண்டவர்கள் மாயசூதினால் கட்டுண்டு இந்த அநீதியை அக்கிரமத்தை தடுக்க சக்தி அற்றவர்களாக தலைகுனிந்து இருக்கிறார்கள்.

இந்த தீய செயலை தடுப்பது என்பது தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துவிட்டது திரௌபதி இறைவனையே பரிபூரண சரணம் அடைகிறாள் அப்பொழுது அவளது அஞ்சனம் தீட்டிய அகன்ற பெரிய கண்கள் அருவியென கொட்டுகின்றன.

“ஆறாகி இருதடும் கண் அஞ்சன வெம்புனல்

சோர அளகம் சோர” என்று வில்லிபாரதம் கூறுகிறது

இந்த சோக கட்டத்திலும் கூட பாரதியும், பாஞ்சாலியின் கண்களை, கவிஞன் கண் கொண்டு கவனிக்க தவறவில்லை.

“நவ்வி நோக்கினாள்” அதாவது பெண் மானின் மருண்ட கண்களை உடையவள் என்று பேசுகிறார்.

இப்படியெல்லாம் பெண்களின் கண்களை அழகுபட வர்ணித்து இருக்கும் போது நெருப்பை கக்கி கொண்டிருக்கும் கொள்ளனது உலைப் போல் பயங்கரமாகவும் கண்கள் இருக்குமா? அப்படியும் ஒரு பெண்ணின் கண்கள் இருந்தன என்று கம்பன் அல்லவா சொல்கிறான் அதாவது ராமன் தாடகையுடன் செய்த கன்னி யுத்தத்தில் ராமனது அம்பு எத்தனை அற்புதங்களை எல்லாம் செய்தன என்று ஜனகரிடத்தில் சொல்ல வந்த விசுவாமித்திரர்.

“உலை உருவக்கனல் உமிழ் கண்

தாடகை தன் உரம் உறுவி” என்று பெருமையுடன் விவரிக்கிறார்.

வானம் இடிந்து விழுமா தெரியாது அப்படி விழுந்தால் சர்வநாசம் தானே அத்தகைய பயங்கரமான உத்பாதத்தை பற்றி சொல்லும் பாரதி அதற்கு சமமாக வைத்து மற்றொரு நிகழ்ச்சியையும் சொல்லுகிறார்.

“கச்சணிந்த கொங்கை மாதர்

கண்கள் வீசு போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை” ஆகவே பெண்களின் கண்களுக்கு எத்தனை பெரிய மகத்தான சக்தி உண்டு என்பதை பாரதியின் வாக்கிலே காணுகின்றோம்.

பெண்களின் கண்கள் இப்படி இருக்க திருமாலின் கண்கள் “செங்கண்” என்று பல சந்தர்ப்பங்களில் சிறப்பிக்கப்படுவதை பார்க்கின்றோம்.

நெருப்பைக் கக்கும் பரமேஸ்வரனது நெற்றிக்கண் என்றால் தேவாதி தேவர்களும் நடுங்குவார்கள் அத்தகைய நெற்றிக்கண், நக்கீரர் என்ற அந்த தனி மனிதரை தாக்கிய போது அவர் கொஞ்சமும் நின்று அஞ்சவில்லை

“பற்றுவான் இன்னும் அஞ்சான், உம்பர் ஆர்பதி போலாக

முற்றும் நீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்”

என்று சர்வ வல்லமை உள்ள சர்வேசுவரனையே எதிர்த்து வாதம் செய்தார் என்றால் அது தமிழின் தரம் குறைந்து விடக்கூடாது கட்டி காக்க வேண்டும் என்ற அவரது இலட்சிய வேகமே, நக்கீரருக்கு அத்தகைய திட சித்தத்தையும் மனதின்மையையும் அழித்திருக்க வேண்டும் என்று அறிய முடிகிறது.

 

 

இலக்கியம்
இலக்கியத்தில் இமைகள்

இலக்கியத்தில் இமைகள்

நவம்பர் 1983 கலைமகள்

 

மனிதனுடைய அவயங்களில் மிகச்சிறந்ததாக மிக மிக அருமையானதாக கருதப்படுபவை கண்கள். அன்பு குழந்தையை ஆசை மனைவியை “கண்ணே என் கண்மணியே” என்றெல்லாம் புகழ்வதை பார்க்கின்றோம்.

அத்தகைய அபூர்வமான பொருள்களாகிய கண்களை கட்டி காக்கும் பொறுப்பு இமைகளை சார்ந்தது.

தூசு தும்பு பறக்கும் போது ஏதாவது ஒரு பொருள் கண்களை தாக்கி விடுமோ என்ற நிலைமையிலும் இமைகள் நம்மை அறியாமல் தானாகவே இயங்கும் இயல்புடையனைய இமைகளை இலக்கிய கர்த்தாக்கள் பல இடங்களில் எடுத்து கையாள்வதை காண்கின்றோம்.

இமைகள் இமைக்கின்ற அந்த குறுகிய நேரத்திலும் இறைவனது திருவடிகள் தன்னுடைய நெஞ்சை விட்டு அகலாத பெரும் பேரு பெற்றவர் வாதவூர் அடிகள் ஆகவே இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று பெருமுகத்துடன் பேசுகிறார்.

கலைகளிலே ஈடுபாடு பகுதியாக உள்ள அயோத்தி நகரத்து பெண்கள் சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். திரையிலும் ஒரு பெண் உயிர் பெற்று வருகிறாள், பேசுகிறாள், சிரிக்கின்றாள். அவள் மனதிலே எண்ணுகின்ற எண்ணங்களையும் ஓடுகின்ற நினைவூட்டங்களையும் கண்களிலும் முகத்திலும் புருவங்களின் நெருப்பிலும் கண்டுகொள்ள முடிகிறது ஆனால் இன்னும் நெருங்கிப் பார்க்கும்போது அந்த உயிரோவியத்திலும் ஒரு குறை தென்படுகிறது. என்ன அது? அந்த ஓவியப் பெண்ணின் கண்கள் இமைக்கவில்லை ஏன்? காரணத்தை கம்பரே சொல்லுகிறார்.

“தொழுததை மடந்தையர் சுடர் விளக்கென

பழுதரு மேனியை பார்க்கும் ஆசை கொல்

ழுது சித்திரங்களும் இமைப்பில்லாதவோ!”

ஆமாம்! இந்த சித்திரப்பாவை சித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் அழகு பாதையை ஆசை தீர, ஆவல் தீர கண்களை இமைக்கவும் மறந்து அப்படியே பார்த்துக் கொண்டிருக்கின்றாளாம்.

விசுவாமித்திரனின் வேள்விக்காக சென்ற ராம இலக்குமனர்களை,

“மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள்

கண்ணினை காக்கின்ற இமையிற் காத்தனர்”

என்பது பிரசித்தமானது.

இமைகளின் இயக்கத்தின் போர் ஒழுங்குமுறை இருப்பதை பார்க்கலாம்.

அதாவது கீழ் இமை இருந்த இடத்திலேயே இருக்க, மேல் இமை தான் போய் வந்து கீழ் இமையுடன் இணைந்து கொள்கிறது.

அதேபோல் வேள்வி நடக்கும் இடத்தில் இளையவனாகிய இலக்குவன் காத்து நிற்க மூத்தவனாகிய ராமன் சுற்று சுற்றி வந்து இலக்குவனுடன் இணைந்து கொள்கிறான் என்று பொருள் கொள்வாரும் உண்டு.

பரதனிடம் ராமன், இலக்குவன், சீதை மூவரும் இரவில் எங்கே படுத்திருந்தார்கள் என்பதை சொல்ல வரும் போது குகன்,

“அழகனும் அவளும் துஞ் கங்கில் நின்றான்.இமைப்பிலன் நயனம்” என்றான்.

இதிலேயே இலக்குவன் இமையாது காவல் செய்ததை குகனும் அங்கு நின்ற ராமன் சீதையுடன் அந்த இளையவளையும் சேர்த்து இமை காத்தான் என்பதும் சொல்லாமலே விளங்குகின்றது.

தேவர்கள் இமய நாட்டம் பெற்றவர்கள் என்பதால் இமையோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தமயந்தியின் பேரழகை கண்டு மயங்கிய தேவர்கள் தமயந்தியின் சுயம்வரத்தில் நளனை போல் உருமாறி அங்கு உட்கார்ந்து இருக்கிறார்கள் தமயந்தி உண்மையான மானுட நளனை கண்டுகொள்ள இமைகள் தான் உதவி செய்கின்றன.

 “கண்ணிமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால் அறிந்தாள் நலன்றன்னை ஆங்கு” என்று வரும் நளவெண்பாவின் மூலம் தெரிய வருகிறது.

தேவர்களைப் போலவே புஜங்களும் இணையாத தன்மையுடையன எனினும் நாக பாச படலத்தில் வரும் கருடனது இறக்கை வீச்சின் வேகத்தில் இமையாத திக்கஜங்களின் கண்களும் மூடி ஒடுங்கி விட்டன என்பதை

“இமையா திசையானை கண்கள் முகிழாவொடுங்கு

நிறைகால் வழங்கு கிறையான்”

என்று வரும் கம்பன் பாடலால் அறிகிறோம்.

பாரத யுத்தத்தில் ஒப்பற்ற வீரசிங்கமாகிய அபிமன்யு என்ற குலக்கொழுந்து வந்தனையால் கருகி விழுந்து விடுகிறது ஈரறிண்டு போர்வழிய மற்ற எதிரிகளும் கூட அபிமன்யுவின் மரணத்திற்காக அழுது புலம்புகிறார்கள் தருமர் மணமடைந்து கதறுகிறார் என்னை பாதுகாத்து நின்ற உன்னை நீ போ என்று அனுப்பியதும் யுத்த களத்தில் பாய்ந்து புகுந்து எதிரிகளை இமைப்பொழுது கொன்று குவிந்த வீரனே என்ற பொருளை

“நின்றனையே எனை காத்து நீரகென்று

யானுரைப்ப நெடும் தேரூர்ந்து

சென்றனையே இமைப்பொழுதில்

தெவ்வரோட வென்றணையே “

என்று வரும் வில்லிபாரத கவி விளக்குகின்றது.

அர்ஜுனது அம்பால் கர்ணன் வீழ்ந்து பட்டான். பாண்டவர்கள் நிம்மதியாக நெடுமூச்சு விடுகிறார்கள், ஆனால் கர்ணனின் சடலதின் அருகே நின்று கதறும் ஒற்றைப் பெண் குரல் சந்தேகமே இல்லை குந்திதேவியின் உடையது தான். பாண்டவர்கள் குழம்புகிறார்கள்.

ஓடிப் போய் சூத்திரதாரியாக நடத்தி வைக்கும் கிருஷ்ண பரமாத்மாவை விசாரித்தார்கள் என்பதை

“ஆழியானை ஓரிமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்தற் பின்” என்ற வரிகள் உணர்த்துகின்றன.

பாரதியாருக்கு கண்ணன் சேவகன் ஆக வந்து எத்தகைய சேவை எல்லாம் செய்தான் என்று சொல்லி வரும் போது கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான் என்று பெருமையாக நன்றியறிதல் உடன் குறிப்பிடுகின்றார்.

கண்கள் இமைப்பதை சிமிட்டுதல் என்றும் குறிப்பிடுவது உண்டு.

பாரதியாரின் குயில் பாட்டில் வரும் குயிலின் காதலர் ஆகிய குரங்கு காதல் போதையில்

“கண்ணை சிமிட்டுவதும்

காலாலும் கையாலும்

மண்ணை பிறாண்டி எங்கும்

வாரி இறைப்பதையும் பார்க்கின்றோம்.”

விறலியை தூது அனுப்பும் போது

“அங்கே பட்ட சீரமும் தழைக்க பக்தர் மனம் தாமுறுக” பாடும்போது ஆடாமல் அசையாமல் அங்க சேஷ்டை எதுவும் இல்லாமல் கத்தி முனை வில் போல் என்னும் விழி இமையும் கொட்டாமல் என்று போற்றப்படுவதை விறலி விடு தூதில் பார்க்கின்றோம்.

காதலர் உலகத்திலேயே கண்களும் கண்களுடன் சேர்ந்த இமைகளுமே வேலை அதிகம் என்பதை

“கண்ணோடு கண்ணின் நோக்கின் வாய்சொற்கள்

என்னு பயனும் இல” என்று திருவள்ளுவரே கூறுகிறார்.

காதல் வயப்பட்ட பெண் ஒரு நாள் இமைகளை மூடி தூங்காமலே காலம் கடத்துகிறாள். ஊரார் என்ன பேசிக் கொள்கிறார்கள், “இவளுடைய காதலன் இவளை இப்படி தூக்கம் கெட செய்து விட்டானே அன்பில்லாதவன்” என்றெல்லாம் ஏசுகிறார்கள். ஆனால் காதலில் என்ன நினைத்து கொள்கிறாள்

“நான் கண்ணின்மைகளை மூடிவிட்டால் என் கண்ணிலே குடியிருக்கும் காதலரின் உருவம் மறைந்து விடுமே என்றுதான் தூங்காமல் இருக்கின்றேன்.”

கவி காளமேகம் எதையும் ஹாஸியமாகவும் சிலேடை நயத்துடனும் கவி பாடும் சதுரப்பாடுடையவர்.

முருகன், வள்ளி என்ற குறப்பெண்ணை மணந்து விட்டான் என்பதற்காக அவர் தந்தை நஞ்சுண்டராம், மாமன் மண்ணை அள்ளி தின்றாராம், தேவர்கள் கவலையுடன் தூங்காமல் கழித்தார்களாம் என்பது போல்

“கடவுள் அவர்கள் இரு விழியுமையாமல் இரவு பகல் உறங்காமலிருக்கின்றாரே என்று வித்தாரமாக பேசுகிறது கவி காளமேகத்தின் கவி.

 

இலக்கியம்
தாமரை பூத்த தடாகங்கள்

தாமரை பூத்த தடாகங்கள்

டிசம்பர் 1987 கலைமகள்

 

காலை கதிரவனின் முதல் கிரனங்கள் தாமரை மொட்டுக்களின் பற்றுடலை தொட்டுத் தழுவி முத்தமிட்டதுமே மடல் விரித்து மனம் பரப்பும் தாமரை மலர்கள் நீர் நிறைந்த தடாகங்களிலும் குளங்களிலும் பூத்துக் குலுங்குவதை பார்க்கின்றோம். பார்த்து மெய் மறந்து நிற்கின்றோம்.

அதேபோல் காவியமாகிய கவினுறு தடாகங்களிலும் கவிஞர் பெருமக்கள் தங்கள் மந்திர சொற்களாலேயே தாமரை மலர்கள் மலர வைத்துள்ள அற்புதத்தையும் கண்டு களிக்கின்றோம்

சிற்பம், சித்திரம், சங்கீதம், நாட்டியம், இலக்கியம் ஆகிய நூல்களை எல்லாம் நீக்கமற நிறைந்து அழகு படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் ஒன்றைக் குறிப்பிடும்படி மகாமேதையும் புதுமை கலா ரசிகருமாகிய ஆனந்த குமாரசமியிடம் கேட்டபோது தாமரை என்று பதில் கொடுத்தாராம்.

கவிதைகளில் கலை தெய்வமாகிய கலைமகளை பற்றி குறிப்பிட வேண்டிய போதெல்லாம் அங்கு வெள்ளை தாமரை நம் கண் முன் நிற்கின்றது. அதுவும் குறிப்பாக பாரதியார், வாய் இனிக்க மனம் இனிக்க பாடி இருக்கும் அருமையை காணலாம்

1. வெள்ளை தாமரை பூவினில் இருப்பாள்.

2. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்.

3. தாமரைப் பூவினிலே சுருதியைத் தணி இருந்துரைப்பாள்.

4. வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர்.

5. வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழேற்றி இருப்பாள்.

இதே போல் இன்னும் பல இடங்களிலும் தாமரை மலரை இணைத்தே சரஸ்வதி தேவியை குறிப்பிடப்படுகிறார்

இப்படி வெள்ளை சீலையுடுத்தி வெள்ளை பணி பூண்டு வெள்ளை கமலத்தில் வீற்று இருப்பதன் காரணமாக வெள்ளை நிற பாரதி என்றே குறிப்பிட்டு கலைமகளை

“வெள்ளை நிற பாரதியும் நாரணியும்

பார் மகளும் தும்புறவும் நாரதரும்

வந்து நயம் கேட்ப” என்று விறலி விடு தூது கூறுகிறது

சரஸ்வதி தேவிக்கு வெள்ளை மலராசனம் கொடுக்கப்பட்டதை போல மகாலட்சுமிக்கு, செந்தாமரை கொடுக்கப் பட்டிருக்கிறது. மிதிலை நகரத்தின் மாடங்களிலும் பதில்களிலும் பறக்கும் வண்ண வண்ண கொடிகள் மிதிலையே ஒரு செந்தாமரை மலர் போல் தோற்றுவிக்கின்றனவாம் அதற்கு காரணம் திருமகளின் அவதாரமாகிய சீதையை பயந்த ஊர் அல்லவா மிதிலை.

“சீதையை தருவதாலே திருமகள்

இருந்த செய்ய

போதென பொலிந்து தோன்றும்

பொன்மதில் மிதிலைப் பூக்கார்”

என்ற கம்பராமாயண பாடல் மூலம் அறிகின்றோம்.

மேலும் லட்சுமி அஷ்டோத்திரத்தில் பாதாதி கேச வர்ணனையாக திருமகளின் திருமேனியை தாமரையாக உவமித்திருக்கும் அழகை பார்க்கலாம்.

1. பத்மாலயாம் 2. பத்மாம் 3. பத்மபிரியாம் 4. பத்ம ஹஸ்தாம் 

5. பத்மாட்சிம் (கண்) 6. பத்மசுந்தரீம் 7. பத்மோத்பவாம். 8. பத்மமுகீம். 

9. பத்மநாப பிரியாம் 10. பத்மமாலா தராம் 11. பத்மினிம். 12. பத்ம கந்தனீம். 

திருமாலுக்கு பத்மநாபன் என்றே நாமமும் வழங்குகின்றது.

“விரிகமல உந்தியுடைய விண்ணவன்” என்று இளங்கோவடிகள் சிறப்பித்துள்ளார்.

திருமங்கையாழ்வார் திருநடந்தாண்டகத்தில் திருமாலின் கை, வாய், கண், பாதங்கள் அத்தனையும் தாமரை மலர்கள் என்று வர்ணிப்பதை பார்க்கலாம்.

“கை வண்ணம் தாமரை, வாய்

கமலம் போலும்- கண்ணிணையும்

அரவிந்தம், அடியும் அஃதே“

இதன் காரணமாகத்தான் திருமாலையே செந்தாமரை என பெயரிட்டிருக்கும் சிறப்பையும் காணலாம்.

கஜேந்திரன் முதலையிடம் அகப்பட்டு கொண்டபோது “ஆதி மூலமே” என்றழைக்க திருமால் ஓடி வந்து கஜேந்திரனை காத்த புராண வரலாற்றை

“முந்தருளும் வேழம் முதலே

என அழைப்ப

வந்தருளும் செந்தாமரை”

என நளவெண்பா ஆசிரியர் கூறுகின்றார்.

“பகவனே ஈசன்மா யோன்

பங்கயன் சின்னே புத்தன்”

என்று நிகண்டு பிரம்ம தேவனையும் பங்கயன் எனக் குறிப்பிடுகிறது.

கர்ணனிடத்தில் அவன் செய்த புண்ணியம் அனைத்தையும் தானமாக பெற்ற கிருஷ்ண பரமாத்மா, கர்ணன் எத்தனை பிறவி எடுக்கினும் ஈகையும், செல்வமும் எய்தி வாழ வரம் அளித்துவிட்டு, தன வடிவத்தையே மாற்றி பஞ்ச ஆயுதங்களுடன் திருமாலாக காட்சி அளிக்கிறார். அதை தேவர்களும், பிரம்மதேவனும் வணங்கினர் என்பதை, 

“கமல நான்முகனும் கண்டு கனக நான்

மலர்கொடு பணித்தார்.“

என்று வில்லிபாரதம் கூறுகிறது.

இறைவனிடத்தில் ஈடற்ற பக்தி பூண்டொழுகிய மணிவாகப் பெருமான், எனது ஐம்புலன்களின் ஆவலும் அடங்க உன்னை வந்தனை செய்யும்படி

“ஐம்புலன்களா……

தந்தெனை செந்தாமரை காடனைய

கனிச் சுடரே…”

என்று ஈசனின் திருமேனியையே செந்தாமரை காடாக உவமித்துத் திருச்சதகத்தில் பேசுகிறார். அதே போல் திருவெம்பாவையில்,

“அண்ணாமலையார் அடிக்கமனம்

சென்றிறைஞ்சும்”

என இறைவனின் பாதங்கள் கமலம் போன்றவை என்று கூறாமல், அங்கு இருப்பவை கமலங்கள் தாம், ஆனால் அடிகள் என்று பெயரிட்டு அழைக்கின்றோம் என்று சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.

இப்படி தாமரை மலர்கள் தெய்வாம்சமாக விளங்குவதால் தாமரை தடாகங்களை காணும் போது ஒரு தெய்வீக காட்சியை நமக்கு ஞாபகம் மூட்டுகின்றன அந்த இடமே புனித தன்மையுடன் பொழிகின்றது.

பறவை இனங்களில் அபூர்வமான அழகான இடம் அன்னப்பறவை. அவை மலர்களிலே சிறப்பான தாமரை மலர்களையே நாடுகின்றன என்பதை

“நற்றாமரை கயத்தில்

நல்லன்னம் சேர்ந்தார் போல்”

என்ற சொற்களாலும் தாமரையின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.

“பூவினுக்கருங்குளம் பொங்கு தாமரை”

என்ற அப்பரின் தேவாரமும் அதை உறுதிப்படுத்துகின்றது.

அயோத்தி மாநகரத்தின் மருத நிலக் காட்சியை சொல்ல வந்த கம்பன் “தண்டலை மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் தாங்க

கொண்டல்கள் முழவின் ஏங்க

குவளை கண் விழித்து நோக்க”

என்று ஒரு ராஜ தர்பார் நடைபெறும் கோலமண்டபம் போல வர்ணிக்கும் போதும் தாமரை அங்கு ஒலி விட்டுக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.

இப்படி ஒரு கதை உண்டு பொற்சிலம்பி என்ற தாசி தன் சொத்துக்களை எல்லாம் பெற்று திரட்டி பணமாக்கி கம்பரிடத்தில் கொடுத்து அவளைப் பற்றி ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொள்கிறாள் அதாவது கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாடப்பெற்றால் தனக்கு எல்லா செல்வமும் கிட்டிவிடும் என்று ஒரு நம்பிக்கை.

“தண்ணீரும் காவிரியே

தார்வேந்தன் சோழனே

மண்ணுவதும் சோழமண்டலமே-”

என சோழ நாட்டின் சிறப்பை பற்றி இரண்டு அடி பாடிவிட்டு, கொடுத்த பணத்துக்கு சரியாய் போய்விட்டது என்று சொல்லி போய்விட்டார் கம்பர். உள்ள சொத்தும் போய் வருமையால் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால் அப்பொற்சிலம்பி. அந்தப் பக்கம் அவ்வையார் தடியை ஊன்றிக் கொண்டு வந்தாள். பொற்ச்சிலம்பி தான் வைத்திருந்த கூழை அவ்வையாருக்கு கொடுத்துவிட்டு தன் துயர கதையை சொன்னாள். அவ்வையார் அந்த வெண்பாவை பூர்த்தி செய்தாள்.

“…பெண்ணவள்

அப்பொற் சிலம்பி அரவிந்தாள் அணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு!”

அந்த தாசியின் பாதங்கள் அழகாக தாமரை மலர்கள் போல் இருந்திருக்க வேண்டும் அதனால் தான் அரவிந்தத்தால் என்று அந்த கூழுக்கு பாடிய அவையின் தமிழ் கூல் கூறுகிறது.

விதர்ப நாட்டு மன்னன் தவம் செய்ததன் பயனாக தாமரை மலரை தன் இருக்கையாகக் கொண்ட அந்த திருமகளே அவருக்கு மகளாக வந்து தமையந்தி என அவதரித்தாள் என்பதை

“விதர்ப்ப கோன் தவத்தினில் தோன்றி

முளரி அம்தவிகினில் இனிது வீற்றிருக்கும 

முகிழ் முலை மாதர் விழித்திருவே

தளிர் நலம் கவற்றும் மலர்க மலர்த்தான்

 தமயந்தி என்னும் பெயர் தரித்தாள்”

என்று நைடதம் கூறுகிறது.

அதே தமயந்தியின் அங்கங்களை வர்ணிக்கும் போது “இழை இடை போகாது மார்பிடம் கொண்ட ஏரிலவ என முலை வள்ளி கொலை பெறும் கன்னி எழில் கடல் பிறந்த குமிழியோ அதனிடை நீந்த விளைவுறும் மதனும் பருவமும் சமைத்த விலங்கு பொற் குடங்களோ அதனில் தலை சிறை நியமிப்பு புட்களோ கமல முககளோ என் கொள் சாற்றுவதே!”

தமயந்தியின் அழகு கடவுளிடை தோன்றிய குமிழிகளோ, பொற்குடங்களோ சக்கரவாக பட்சிகளோ என்றெல்லாம் வர்ணிப்பதுடன் தாமரை மொட்டுடன் உவமிப்பதையும் பார்க்கின்றோம்.

குழந்தையைப் பற்றிய ஒரு கவிஞனின் கணிப்பு.

“அன்னத்தின் தூவி அனிச்சமலர் எடுத்து

சின்ன உடலாக சித்தரித்த பூங்கோவில்”

அத்தகைய மணமலர் ஆகிய குழந்தை செல்வத்தை தொட்டிலிட்டு ஆடுகிறாள் தாய்.

“கண்ணே கமல பூ

கையிரண்டும் தாமரைப்பூ

மேனி மகிழம்பூ

மெல்லியலே கண்ணுறங்கு”

குழந்தையின் கண்களையும் கைகளையும் தாமரை பூக்களாக காண்கிறாள் தாய்.

இதற்கெல்லாம் அப்பால் மனிதனது உடம்புக்குள்ளேயே தாமரைகள் இருப்பதாக யோகியர் நிர்ணயித்து உள்ளார்கள்.

நூறல்ல 200 அல்ல ஆயிரம் இதழ்களோடு கூடிய தாமரை இருப்பதாக சொல்லுகிறார்கள்.

அதாவது மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை சக்தியை மேலெழும்பி சுவாதிஷ்டானம் மணிபூரகம் அனாதகம் விசுத்தி ஆங்கே முதலிய தாமரைகளைக் கடந்து சகஸ்ராரம் என்னும் ஆயிரம் இதழ் தாமரை அடையச் செய்கிறார்கள் என்பது யோக நூலின் முடிவு மனிதன் அடைகின்ற அத்தகைய தெய்வ சாணக்கியமான நிலையை தாமரையாக உருவப் படுத்தி இருப்பதன் மூலம் தாமரை மலரின் மிக உயர்ந்த நிலையையும் புனித தன்மையும் காண முடிகிறது.

 

 

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!