Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு தொடர்கள்

வகைகள் : விழியோரத் தேடல் நீ

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 08

தேடல் – 8

ஈஸ்வரன் காரில் இருந்து இறங்கி தன் வீட்டினுள் தளர்ந்த நடையுடன் வந்தவர் “பார்வதி தண்ணீர்” என்று குரல்கொடுத்தார். அவரின் குரல் கேட்டவள்

“இதோ எடுத்துட்டுவர்றேங்க” என்று தண்ணீர் செம்புடன் முன் அறைக்கு வந்தாள். அப்பொழுது ஈஸ்வரனின் நிலையைப்பார்த்து அதிர்ந்து “என்னங்க ஆச்சு” என்று பதற்றத்துடன் கேட்டபடி பார்க்க....

ஈஸ்வரன் உடை முழுவதுவும் வியர்வையால் நனைந்திருந்தது. தன் மார்பில் கைவைத்துக் கண் சொறுகிச் சரிந்து கொண்டிருந்தார்....

அன்று கவிழையாவின் தம்பி வருண் வீட்டில் இருந்ததால் தன் அம்மாவின் அலறலில் வேகமாக வந்தவன் தன் தந்தையின் நிலைமையைப் பார்த்து ஆம்புலன்சிற்குப் போன் செய்து வரவழைத்தான். நகரின் பெரிய மருத்துவமைக்குக் கூட்டிக் கொண்டுவந்து சேர்த்தான்...

இவ்வாறாக அவன் கூறிய அத்தனையும் கேட்ட மஹிந்தன், ஹாஸ்பிட்டலின் பெயரைக்கேட்டுவிட்டு, தான் கவிழையாவை அழைத்துவருவதாகச் சொல்லி போனை வைத்தான்.

அதன் பின் மஹிந்தன், கதிருக்கு தொடர்பு கொண்டு, ஈஸ்வரனை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிட்டலின் பெயரைச்சொல்லி “நான் ழையாவைக் கூட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டல் போவதற்குள் நீ ஹாஸ்பிட்டல் போய் அவரின் ஹெல்த் பற்றி டாக்டரிடம் விசாரித்துவிட்டு, அவருக்குத் தேவையான டிரீட்மென்டை உடனே ஆரம்பிக்கச்சொல். தேவையான ஸ்பெசலிஸ்ட் வரவைத்து ஸ்பெசல் கேர் எடுத்துக் கவனிக்கத் தேவையான ஏற்பாட்டைச்செய்” என்று சொல்லிப் போனை வைத்தான்.

அவன் போனை வைப்பதற்கும் ழையா உடைமாற்றி வெளியில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

வெளியில் வந்தவள் அவள் போகும் முன் உடுத்தியிருந்த டிரஸ்சை அங்கிருந்த மேஜைமேல் வைத்துவிட்டு டிரஸ்சிங்டேபிளின் மேல் இருந்த அவளின் தோடைப் போட்டுக்கொண்டு அவன் அவளுக்குப் போட்டுவிட்ட மற்ற நகைகளைக் கலட்டும் போது அவள் கழுத்தில் உள்ள தாலிச்செயினையும் கழட்டலாமா என்று யோசனை செய்தவள் அதைமட்டும் கழட்டாமல் தன் கழுத்தில் போட்டிருப்பது வெளியில் தெரியாதமாதிரி தன் உடையினுள் அதை மறைத்துப் போட்டுக்கொண்டாள்.

அவளின் ஒவ்வொரு செயலையும் அசைவையும் பார்த்தபடியிருந்த மஹிந்தனுக்கு அவள் தாலிக்கொடியை கழட்டாததைக் கண்டதும் மனதில் இதம் பரவியது.

பின் சிறிது அலுவலக வேலைகளைச் சரிபார்த்துவிட்டு ழையாவை கூட்டிக்கொண்டு காரில் ஹாஸ்பிட்டல் வந்தான். கார் ஹாஸ்பிட்டலில் நிற்பதைப்பார்த்தவள் “இங்க எதுக்காகக் கூட்டிக்கிட்டு வந்தீங்க...?” என்றவாளின் குரலில் ஒரு தற்றம் இருந்தது.

இனி மறைக்க முடியாது என்பதால் “உன் அப்பாவ இங்க அட்மிட் பண்ணியிருக்கிறதா உன் தம்பி போன் பண்ணிச் சொன்னான். அதனாலத் தான் உன்னைய ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு வந்தேன்....” என்றான்.

மஹிந்தன் கூறியதைக்கேட்ட கவிழையா கோபத்துடன் அவன் சட்டையைப்பிடித்து “என் அப்பாவை என்ன பண்ணின...? உன்னால அவருக்கு ஏதாவது ஆச்சு... உன்னைய என்னால மன்னிக்கவே முடியாது...” என்று கூறி கதறினாள். அவள் அழுவதைத் தாங்கமுடியாத மஹிந்தன் அவள் தன் சட்டையைப் பிடித்திருப்பதைப் பார்த்தான் .

பின் “ழையா” என்ற அழைப்புடன் அவளின் தலையைத் தன் நெஞ்சோடு அணைத்துப்பிடித்து “அவருக்கு எதுவும் ஆகாது..., ஆகவும் நான் விடமாட்டேன். நீ அழுறத என்னால பார்க்க முடியவில்லை, ப்ளீஸ்... அழாத...!” என்று கூறியபடி அவள் தலையைத் தடவிக்கொடுத்தான்.

அவளுக்கு அதிர்ச்சி சற்று மட்டுப்பட்டதும் தான் இருக்கும் நிலை உணர்ந்த கவிழையா தன்னை மீட்டுக்கொண்டு தன் அப்பாவைப் பார்க்க ஹாஸ்பிட்டலினுள் நுழைந்தாள்.

அவள் பின்னால் வேகமாக வந்த மஹிந்தன் ரிசப்சனில் ஈஸ்வரனின் பெயரைச்சொல்லி எந்த ரூமில் உள்ளார் என்று கேட்டான். அவர் ஐசியு ரூமில் இருப்பதைக் கூறியதும் அங்கு இருவரும் வேகமாகச் சென்றனர்.

அவளின் அப்பா அட்மிட் செய்திருந்த ரூம் வாசலில் பார்வதி அழுதுகொண்டு அமர்ந்திருந்தாள். கவிழையா அம்மாவைப் பார்த்ததும் ஓடிப்போய்த் தன் அம்மாவிற்குத் தோள்கொடுத்து தேற்றியவள்

“அப்பாவிற்கு எதுவும் ஆகாதும்மா... நீங்க தைரியமாக இருந்தால் தானே நானும் தைரியமாக இருக்கமுடியும்...” என்று பார்வதியிடம் சொல்லியவளின் கண்களில் ஆறாகக் கண்ணீர் வடிந்தது.

மஹிந்தன் மருத்துவமனை வந்துவிட்டதை அறிந்த கதிர் ஷ்பெசல் டாக்டர் குழுவுடன் ஐசியு யூனிட்டிற்குள் வந்தான் அங்கிருந்த மஹிந்தனிடம் ஈஸ்வரனின் உடல்நிலைப் பற்றி விளக்கம் அளித்த டாக்டர் “அஞ்சியோ மூலம் இதயத்தின் அடைப்பைப்பற்றித் தெரிந்துகொண்டு, மற்றதைப் பற்றிப் பேசலாம்” என்றார்.

மேலும் சரியான நேரத்திற்கு ஹாஸ்பிட்டல் கொண்டு வந்துவிட்டதால் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறினார் . டாக்டர்குழுவைப் பார்த்ததும் கவிழையா தன் அப்பாவின் உடல்நிலை அறிய வந்தவள் மஹிந்தனிடம் அவர்கள் பேசியதைக் கேட்டாள்,

அதில் தன் அப்பாவைப்பற்றிய கவலை சற்றுக் குறைந்தது. ஆனால் தொடர்ந்து அதிர்ச்சியைச் சந்தித்ததின் விளைவாக நின்ற இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள்.

அவள் மயங்கிச் சரிவதைத் தற்செயலாகத் திரும்பி பார்த்த மஹிந்தன் பதறிக்கொண்டு ஒரு எட்டில் அவளைத் தாங்கி பிடித்துக்கொண்டான். வருண் ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்தவன் தன் அக்கா மயங்கிச் சரிவதைப் பார்த்தவன் அவளைத் தாங்கிபிடித்த மஹிந்தனைக் கண்டான் .

அதன் பின், மருத்துவர்கள் “ழையா அதிர்ச்சியில் மயங்கிருப்பதாகத் தெருவித்தனர். தற்பொழுது தூக்கத்திற்கு ஊசி போட்டிருப்பதாகவும் தூங்கி எழுந்தாள் சரியாகிவிடுவார்கள்” என்று தெருவித்தனர் .

கதிர் மஹிந்தனை “நீ வீட்டிற்குக் கிளம்பு, நான் இங்குப் பார்த்துக்கிறேன் என்றான். அவன் சொல்வதைக் காதில் வாங்காமல் இருக்கமுடன் மஹிந்தன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.
மஹிந்தன் பிடிவாதமாக இருப்பதைப் பார்த்தவன் “நீ இங்கு இருக்கிறது மற்றவங்ளுக்குத் தெரியறதுக்குள்ள இடத்தைக் காலிசெய்... அப்படி இல்லைன்னா கவிழையாவிற்குத்தான் பிரச்சனை....” என்று கூறி அவனை ஹாஸ்பிட்டலில் இருந்து அனுப்புவதற்கு முயற்சி செய்துக்கொண்டிருந்தான் .

அப்பொழுது அங்கு வந்த வருண், மஹிந்தனிடம் “உங்க உதவிக்கு ரொம்பத் தாங்க்ஸ் சார்” என்றவன் சற்று தயங்கி...

“நாங்கச் சாதாரனமானவங்கதான் ஆனால் அக்காவையும், அப்பாவையும் இங்க வச்சு பார்த்துக்குற அளவுக்கு எங்களுக்கு வசதி இருக்குது சார்..., உங்களோட அதிகப்படியான அக்கறையைப் பார்க்குறப்போ என் அக்காவின் வாழ்க்கையைப் பத்திய பயம் எனக்கு அதிகமாகுது...” என்று கூறினான்.

அவன் பேசவும் கூர்ந்து அவனைக் கவனித்த மஹிந்தனிடம், “நீங்க எவ்வளவு பெரிய வி.ஐ.பி...! எங்களுக்காக நீங்க இங்க இருப்பது சரியில்ல... அதனால அவர் சொல்றதுபோல எங்களுக்குப் பிரச்சனை வருறதுகுள்ள நீங்க கிளம்பிடுங்க...” என்று கதிரை காண்பித்துச் சொன்னான்.

கவிழையாவின் எம்.டி.மஹிந்தன் தன் அக்காவை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டுக்கொண்டு வருவதாகப் போனில் சொல்லியபோதே இந்தியாவின் பலராலும் வியந்து பார்க்கும் நிலையில் உள்ள மிகப்பெரிய பிஸ்னெஸ்மேன் தன் அக்காவுடன் வருவதாகக் கூறியது வருணுக்கு மஹிந்தன் மேல் சற்றுச் சந்தேகத்தைக் கிளப்பியது .

ஏற்கனவே அவனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருப்பதை நியூஸ் பேப்பரிலும், நியூஸ்சேனல்களிலும் கண்டு அறிந்திருந்தான்.

மேலும் கவி அவளின் செக்ரெட்டரி போஸ்ட்டுக்காகக் கட்டாயமாய்த் தனது வீட்டு வாசலில் வைத்து காரில்மட்டும் செல்லவேண்டும் என்று எம்.டிசொன்னதாக அன்று அவனின் ஆட்கள் கூறியது வருணுக்கு நெருடலாக இருந்தது.

மேலும் தன் அக்கா மயங்கிச்சரியும் போது மஹிந்தன் பதறியதைப் பார்த்தவன் கவிழையாவின் மேல் அவனுடைய அதிகப்படியான ஈடுபாட்டையும் கண்டான், இந்த அதிகப்படியான அக்கறை தன் அக்காவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்ற பயத்தை அவனுக்குக் கொடுத்தது.

எனவே வருன், மஹிந்தனை அவ்விடத்தைவிட்டு அகற்றவும் அவனின் உதவியை மறுக்கவும் எண்ணினான்.

வருணின் ஆராய்ச்சிப் பார்வையையும், அறிவையும் கண்ட மஹிந்தனுக்குச் சபாஷ் போடத்தோன்றியது. எனவே மஹிந்தன் அவன் தோளின் மேல் கைபோட்டுப் பக்கத்தில் உட்காரவைத்துப் பேசினான்.

கதிருக்கு மஹிந்தனின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது இதுவரை யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக அவன் பேசியதில்லை. அவன் தங்களிடம் பேசுவதையே பிசினெஸ் உலகத்தினர் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லிக்கொள்வர் அப்படிப்பட்ட இடத்தில் உள்ளவனின் செயல் பார்த்து வருணின் மேல் கதிருக்கும் மதிப்புக் கூடியது .

மஹிந்தன் வருணிடம் கூறினான், “நீ நினைக்கிறது போல் உன் அக்கா எனக்கு ஸ்பெஷல் தான்..., ஆனால் இப்போதைக்கு அதை வெளியில் சொல்ல முடியாது, என் ழையாவை பார்த்துக்கோன்னு பொறுப்பை நான் உன்னிடம் கொடுக்கிறேன்...” என்று கூறி தன் பர்சனல் போன் நம்பரை அவனிடம் கொடுத்தான்.

“எது பேசணும் என்றாலும் இந்த நம்பரில் என்னைக் காண்டாக்ட் செய்” என்றான். அவன் கூறியதைக் கேட்ட வருண் அவன் கொடுத்த நம்பரை பெற்றுக்கொண்டு “என் அக்காவை பார்த்துக்கொள்ள யாரும் எனக்குச் சொல்ல வேண்டாம், உங்களால் அவளுக்குப் பிரச்சனை இல்லாமல் இருந்தால் அதுவே எனக்குப் போதும்...” என்று அவனைப் பார்த்தபடி கூறினான்.

அவன் கூறியதைகேட்டு உதட்டில் புன்னகையுடன் எழுந்துகொண்ட மஹிந்தன் .”நான் உன் அப்பாவின் டிரீட்மென்ட் பொறுப்பையும், உன் அக்காவை என் பொறுப்பிலும் எடுத்துக்கிட்டேன் என்னை உன்னால் தடுக்க முடியாது...” என்று கூறினான்.

பின்பு நட்புடன் வருணைப்பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு “நான் இப்போ போறேன்... ஆனா மீண்டும் வருவேன்...” என்று கூறிச்சென்றான்.

மஹிந்தன் வீட்டிற்கு வருவதற்கு இரவு ஆகிவிட்டது. அவனின் வரவை எதிர்பார்த்துத் தங்கை மதுரா மற்றும் அவனது பெற்றோர் விஸ்வநாதன்- சுபத்ரா ஆகியோர் உடன் ஐஸ்வர்யா மற்றும் அவளது அம்மா விஜியும் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்தனர்.

மஹிந்தன் உள்ளே வந்ததும் மதுரா, “அண்ணா! நீ ஒரு மணி நேரத்தில் வருறதா சொன்ன...? ஆனா, நாலு ஒருமணிநேரம் கழிச்சு வந்திருக்கிற...!” என்று குற்றம் கூறுவதைப் போல் சொன்னாள்.

அவள் அவ்வாறு கூறியதும், மஹிந்தனுக்கு அன்று நடந்த செயல்களின் அழுத்தத்தின் விளைவால் எப்பொழுதும் இல்லாத வழக்கமாகத் தன் தங்கையிடம் கடிந்து பேசினான் .

“மதுரா, நான் யாருக்கும் இன்று என்னைய மீட்பண்ண அப்பாய்ண்மென்ட் கொடுக்கலை..., என்னோட பிஸியான டைம் ஷெட்யூல் தெரிந்திருந்தும் இந்த இன்பார்மும் இல்லாமல் வந்து காத்திருந்தால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாகுறது...?” என்று கோபத்தில் சத்தமாகக் கூறினான்

அவன் கூறியதைகேட்ட மதுரா அதிர்ந்து அவனைப் பார்த்தாள். தன் தங்கையின் அதிர்ச்சியைப் பார்த்தவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி மதுராவின் அருகில் வந்து, “ஸாரி... ஏதோ டென்ஷனில் கத்திட்டேன்” என்று கூறி தன் தங்கையின் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன் புன்னகைத்துக்கொண்டே

“இப்பொழுது சொல் எதுக்காக எல்லாரும் எனக்காகக் காத்திருக்கீங்க?” என்று மதுராவிடம் கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டவுடன் சுபத்ரா மஹிந்தனிடன் “யார் கவிழையா...? அவளோடன் நீ ஏன் சுத்துற....?” என்று கேட்டாள்.

மஹிந்தனின் அம்மா அவ்வாறு கேட்டதும் அவனுக்கு மறுபடியும் கோபத்தில் வார்த்தைகள் வெளிவர துடித்தது. மூச்சை இழுத்து தன் கோபத்தை அடக்கிய மஹிந்தன்

“மாம் நான் என் பெர்சனல் லைப்பற்றி யாருக்கும் விளக்கம் கொடுத்ததில்லை இனிமேலும் கொடுக்கப்போறதில்லை.... இனி இது போல் யாரும் பேசி என் கோபத்தைக் கூட்டவேணாம்...” என்று கூறினான்.

அவன் கூறுவதைக்கேட்ட மஹிந்தனின் அப்பா விஸ்வநாதன் கூறினார், “மஹி இதுவரைக்கும் உன்னைய யாரும் கேட்டதில்ல. ஆனா... இனி அப்படிக் கேட்காமல் இருக்க முடியாது. உனக்குனு ஐஸ்வர்யாவை முடிவு செய்தாச்சு... அவளுக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும்”

என்று கூறி கவிழையாவுடன் மஹிந்தன் காரில் ஏறுவதுபோல், மற்றும் ஹோட்டலில் அவள் கைப்பிடித்துச் செல்வதுபோல், இன்றுகாலை கவிழையாவுடன் கைபிடித்துக் காரிலிருந்து இறங்குவதுபோன்ற போட்டோக்களை அவனின் முன் இருந்த டீபாயின் மேல் பரப்பினார்.

அவற்றைப் பார்த்த மஹிந்தன் “இது எதையும் நான் இல்லைன்னு சொல்லப்போறதில்லை, நானும் ஐஸ்வர்யாவும் காதலுடன் கல்யாணம் முடிக்கச் சம்மதிக்கல..., அவளுக்குத்தேவை என்னைய போல மல்டி மில்லினியர் மாப்பிள்ளை. எனக்குத்தேவை என் தாத்தாவின் கம்பெனி ‘சோ’ இந்தக் கல்யாணம் முடிவாகிருச்சு...” என்றான்.

“அதுவும் ஐஸ்வர்யாவுக்கு என்னையக் கட்டுப்படுத்த எந்தத் தகுதியும் இல்லை. அவள் உங்கக்கிட்ட என்னையப்பத்திய போட்டோவைத் தானே காட்டினாள், இதோ இதில் ஐஸ்வர்யா அவளுடைய பாய்பிரண்ட் அஜய்யுடன் போடும் ஆட்டத்தை வீடியோவாகவும், போட்டோக்களையும் பாருங்கள....”

என்று கூறி தன் ஐ போனில் அஜய்யுடன் ஐஸ்வர்யா இருந்த போட்டோக்களையும் அவனுடன் நெருக்கமாக இருக்கும் சில வீடியோ காட்ச்சிகளையும் தன் தங்கை மதுராவிடம் காண்பித்தான் .

அவ்வளவு நேரம் அவர்கள் முன் சோககீதம் வாசித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, மஹிந்தன் தன்னைப்பற்றிய வண்டவாளங்களைப் படம் போட்டு காட்டவும் . டக்கென்று தன் நடிப்பை மாற்றிக்கொண்டாள்.

“என்ன மஹிந்தன் இது! எல்லாம் நம்மைப்போன்ற ஹய்சொசைட்டி ப்யூபில்ஸ் வாழ்க்கையில் நடப்பதுதானே...?” என்று குழைந்த குரலில் கூறியபடி “நான் ஒன்றும் இதையெல்லாம் பெரிதாக நினைக்கமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டு மஹிந்தனின் அருகில் நெருங்கி உட்கார முயன்றாள்.

உடனே தன் மேல் அவளின் உடல் படுவதை விரும்பாத மஹிந்தன் டக்கென்று எழுந்து நகர்ந்து போய் ஐஸ்வர்யாவைப் பார்த்து “இதுபோல் சீன் கிரியேட் பண்ணினால் இனி இக்கல்யாணம் நடக்காது” என்று கூறினான்,

“என் குடும்ப அடையாளமான எஸ்.வி.என் மோட்டார்சை வேறு வழியில என்கிட்ட எப்படிக் கொண்டுவரனும்றது எனக்குத்தெரியும்” என்று கூறியவன் விருட்டென்று மாடியேறி தன் அறையினுள் சென்றவன் கதவை டமார் என்ற சத்தத்துடன் அறைந்து மூடினான்.

ஐஸ்வர்யாவிற்கு மஹிந்தன் அவ்வாறு தன்னைத் தவிர்த்தது முகத்திலரைந்தது போல் இருந்தது. அவளுக்கு மஹிந்தன் மேல் வண்மம் வலுத்தது.

அவ்வளவு நேரம் மதுராவிற்கு அவன் அண்ணன் மேல் இருந்த வருத்தம் ஐஸ்வர்யாவின் உண்மையான முகத்தைப் பார்த்ததும் கவலையாக மாறியது. இப்படிப்பட்ட குணமும் நடத்தையும் உள்ள ஒருத்தி தன் அண்ணனுக்கு மனைவியாக வருவதை நினைக்கையில் கசப்பாக இருந்தது.

மஹிந்தன் தன் அறைக்குள்ளே கோபம் அடங்காமல் உள்ளம் கொதிப்போடு உடைகூட மாற்றாமல் தன் படுக்கையில் விழுந்தான். அவனுக்கு ஐஸ்வர்யாவின் செயலை மன்னிக்க முடியவில்லை, என் மீது வீட்டில் கம்ப்ளைன்ட் சொல்ல இவளுக்கு எவ்வளவு தைரியம்.

தன் பெற்றோருக்குக் கவிழையா பற்றி இப்பொழுது தெரிவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் தன் தந்தையும் தாயும் ஐஸ்வர்யாவுடனான இக்கல்யாணம் தான் தங்கள் கம்பெனியை மீட்டுத்தரும் என்பதை நம்பினார்கள்.

அவர்களுக்குத் தன் மகனின் இச்செயலால் எஸ்.வி.என்.மோட்டார்ஸ் தங்களின் கைவிட்டுச்செல்வதை விரும்பமாட்டார்கள். எனவே கவிழையாவை மஹிந்தனின் வாழ்வில் இருந்து அகற்ற முடிவெடுத்து அவளுக்குப் பிரச்சனையைக் கொடுக்கப் பார்ப்பார்கள் என்பதை மஹிந்தன் அறிந்திருந்தான்.

எனவே சிறிது யோசனைக்குச் சென்றவன் கதிரை போனில் தொடர்புகொண்டான், கதிர் போனை எடுத்ததும் “ஐஸ்வர்யாவினால் கவிழையா பற்றிய விபரம் வீட்டிற்குத் தெரிந்துவிட்டதைச் சொன்னான். அதனால் கவிழையாவிற்குத் தன் வீட்டவரால் ஆபத்து எதுவும் ஏற்படாது பார்த்துக்கொள்ளும்படி கூறினான். இப்பொழுது அவளுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதா...?” என்று கேட்டான்.

அவன் கூறியதைக்கேட்ட கதிர் மயக்கம் தெளிந்து மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக டாக்டர் கூறியிருக்கிறார் என்றவன், நான் இங்கே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.

மஹிந்தனுக்கு என்ன முயன்றும் இமைமூடி தூக்கத்தை வரவழைக்க முடியவில்லை கவிழையாவிடம் மதியம் தான் நடந்துகொண்டவிதத்தினால் அவள் தன்னைப்பார்த்து பயந்து பின்னால் நகர்ந்ததும், காரில் தன் சட்டையைப்பிடித்துக் கதறியதும் ,மருத்துவமனையில் மயங்கிச்சரிந்ததும் திரும்பத்திரும்ப நினைவில் வந்து அவனைப் படுத்தியது,

ஒரு பெண்ணிற்காகத் தான் இந்த அளவு தவிப்பதை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒன்றை மட்டும் அவன் உறுதியாக நம்பினான் தன்னால் கவிழையாவை மறக்கவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவும் முடியாது என்பதையும் அவன் புரிந்துகொண்டான்.

எவ்வளவு சீக்கிரம் அவளைத் தன் பக்கத்தில் நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியுமோ அதற்கான வேலைகளை உடனே செயல்படுத்த முடிவுசெய்தான். இனி அவளைத் தனியாக விட்டுவைப்பதால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ழையாவிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு கிடைத்துவிடுமோ என அஞ்சினான்.

*********

ஐஸ்வர்யாவை அவளின் வீட்டில் அவள் அம்மா வசவு உரித்துக்கொண்டு இருந்தாள். “உன் பேச்சைக் கேட்டு நான் சம்மந்தி வீட்டுக்கோ போனது... உங்கள் பையனின் லட்சனத்தைப்பாருங்கள்னு சுபத்ராவின் முன்னாடி மாப்பிளையை மட்டம் தட்ட பார்த்தேன்.

அன்னைக்கு நிச்சயத்தப்போ சுபத்ரா கோவைசரளாவின் பாணியில் என் மஹிந்தனுக்கு இரண்டு மில்லை கொடுத்துப் பெண்கொடுப்பதாகக் கூறினார்கள். கப்பல்கொடுத்துப் பெண்கொடுப்பதாகக் கூறினார்கள், பெரியகம்பெனி கொடுத்துப் பெண்கொடுப்பதாக் கூறினார்கள் ஆனால் என் நேரம் இங்கதான் பெண் எடுக்கும் படி ஆகிவிட்டது என்று அலட்டிக்கொண்டாள்.

அந்த நேரத்தில் நான் ஏதாவது சொன்னா.... நிச்சயதார்த்தம் நின்னு போயிடுமோனு பயந்து பேசலை.... இது போன்ற பரம்பரை கோடீஸ்வர வீட்டுச்சம்பந்தம் நமக்குக் கிடைப்பதைப் பார்த்துப் பொறாமைப் பட்டவங்களுக்கு முன்ன உன் கல்யாணம் நல்லபடி முடியம் வரை அடக்கி வாசிக்கணும்னு முடிவெடுத்தேன்...” என்றாள்.

“அதனால் நீ இந்தப் போட்டோக்களைக் காட்டியதும் அந்தச் சுபத்ராவிடம் போட்டோக்களைக் காண்ட்டி.... ‘பார்... உன் மகனின் லட்சனத்தை’ என்று மட்டம் தட்டிவிட்டு உன் மகனைத் திருந்தியிருக்கச்சொல்லு... இந்த ஒருதடவை அவன் செய்த தப்பை பெருசுபண்ணாம திருமணத்திற்குச் சம்மதிக்கிறோம்னு சொல்லி அவளை மட்டம் தட்டலாம்னு அங்க போனேன். ஆனால் என் கிரகம் வழியப்போய் உன்னால் திரும்பவும் அவமானப்படும்படி ஆகிப்போச்சு...” என்றவள், கோபத்துடன்.

“ஏன்டீ இப்படி அந்தச் செம்பட்டை முடி அஜய்கூடச் சுத்தாத... சுத்ததனு சொன்னால் கேட்க மாட்டயா...?” என்று ஐஸ்வர்யாவின் மேல் கோபம் கொண்டாள் அவள் அம்மா .

“அம்மா அவன் எவ்வளவு செலவு செய்து அவன் முடிக்குக் கலரிங் பண்ணியிருக்கிறான் நீ அதைப்போய்ச் செம்பட்டைமுடி என்று பேசுறயே” என்று கூறினாள் .

அவள் கூறியதை கேட்ட அவள் அம்மா, “ஏன்டி நான் இம்புட்டு நேரம் உன் கல்யாணத்தைப்பத்தி கவலைப்பட்டுப் பேசியப்போ... சும்மா இருந்துட்டு, அந்த அஜய்யை நான் குறைபேசியதற்கு மட்டும் பதில் பேசுற...?

அடியே...! ஐஸ்வர்யா... அதென்னடி அவனுடன் போட்டாவில் கட்டிபிடிப்பது, முத்தம் கொடுப்பதுனு புருஷன் பொண்டாட்டி போல நிற்கிற...?! வேறெதுவும் அத்துமீறி அவன்கூடக் கூத்தடிச்சு கல்யாணத்துக்முன்ன வயித்தில வாங்காமல் இருந்தால் சரி....” என்றாள் அவளின் அம்மா.

அம்மா அவ்வாறு சொல்லவும் ஒரு முறை மனதுக்குள் திடுக்கென்றது ஐஸ்வர்யாவிற்கு எதற்கும் டாக்டரிடம் போய் ஒரு தடவை டெஸ்ட் பண்ணிடனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா. ஆனால் வெளியே “அப்படியெல்லாம் வந்து உன்னிடம் நிற்க மாட்டேன். நீ கொஞ்சம் சத்தம் போடாமல் என்னை நிம்மதியாக டி.வி பார்க்கவிடு” என்று கூறியபடி தன் கால் நகத்திற்கு வண்ணம் பூசிக்கொண்டு இருந்தால் ஐஸ்வர்யா .

அதற்கு அவள் அம்மா, “ஆமா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டு இரு..., அந்தக் கவிழையா பாட்டுக்கு அந்த மஹிந்தனை தட்டிக்கிட்டு போயிடப்போறாள் யாரு டீ அவ...? தொடச்சு வச்ச குத்துவிளக்காட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறா...?” என்று கேட்டாள்.

அவளைத் தன் முன்னால், அழகு என்று தன் அம்மா சொல்லவும் கோபத்தில் ஐஸ்வர்யா தான் காலை தூக்கி வைத்துக்கொண்டு நெயில்பாலிஸ் போட்டுக்கொண்டிருந்த காலால். டீபாயினை உதைத்து தள்ளிவிட்டாள் பின் சத்தமாக

“அம்மா அந்த மிட்டில் கிளாஸ் பொண்ணை என்முன்னாடியே எப்படி அழகாக இருக்கிறாள்னு எப்படிச் சொல்லலாம்...?, எனக்கு எதிரில் நிற்கவே தகுதியில்லாதவ அவள்..., எனக்குப் போட்டியாக என் வாழ்க்கையில நுழைய பார்ப்பதற்கு எப்படியெல்லாம் அனுபவிக்கப்போறாள் பாருங்க....!” என்றாள் ஐஸ்வர்யா.
 

விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 07

தேடல் – 7
வீட்டிற்கு வந்ததும் கவிழையாவிற்கு ஹோட்டலில் நடந்த எதுவும் கண்ணைவிட்டு அகலாமல் அவளைப் பாடாய்படுத்தியது. மஹிந்தனின் நடவடிக்கை தன்னை விபரீதமான நிலைக்குத் தள்ளுவதைப் புரிந்துகொண்டாள்.

‘ஏதாவது செய்து அவனிடம் இருந்து தப்பித்துவிட வேண்டுமே.... ஆனால் என்ன செய்ய...?’ என்று ஒன்றும் புரியாமல் மறுநாள் தனது தோழி வனித்தாவை சந்தித்துப் பேசி தெளிவாக ஏதாவது செய்யத் திட்டமிட நினைத்தாள்

மறுநாள் பூங்காவில் வனித்தாவுடன் அமர்ந்திருந்தாள் கவிழையா. “என்னடி கவி பக்கத்துத் தெருவில் இருக்கிற என்னைய கூப்பிட காரில் வந்திருக்கிற...?! சரி காரில் எங்கோயோ என்னைய கூப்பிட்டுப்போகப் போறேன்னு பார்த்தா... என்வீட்டுப்பக்கதில் இருக்கிற பூங்காவுக்குக் கூட்டிட்டு வந்துருக்க...!?.

காரில வச்சு டிரைவர் இருக்காரு எதுவும் பேசவேண்டாம் போனதும் பேசலாம் சொல்லி ரகசியமா பேசுன...., இப்போ இங்கு வந்தாலும் கவலையோடு உக்கார்ந்திருக்க, என்னடீ விஷயம்...?”, என்றாள் வனித்தா.

வனித்தா கேட்டதும் தன்னை அடக்க முடியாமம்ல் விம்மி அழுத கவி தான் வேலையில் சேர்ந்தது முதல் நேற்று ஹோட்டலில் நடந்ததுவரை அனைத்தையும் அவளிடம் கூறினாள்

அவள் கூறியதைக் கேட்ட வனித்தா, “அந்த வில்லன் மஹிந்தன், உன்ன வச்சுக்கவும் அந்த ஐஸ்வர்யாவை கட்டிக்கவும் நினைக்கிறான் போல..., நீ சொல்றதப்பார்த்தா அவன் பணபலமும் ஆள்பலமும் இருக்குறவனா தெரியுறான் எப்படி அவன்கிட்ட இருந்து தப்பிக்கப் போற கவி...?”.

“அதுதான் வனி இப்போ எனக்குப் பெரிய யோசனையா இருக்குது!. அவன் கொடுத்த ஒரு மாசத்துக்குள்ள இதிலயிருந்து எப்படியாவது தப்பிச்சிடணும்னு நினைக்கிறேன். ஆனா எப்படித் தப்பிக்க வனித்தா....? இன்னைக்கு ஞாயித்துக் கிழமை ஆபீஸ் இல்லை.... அதனால என்மனதில உள்ள பாரத்தை உன்கிட்ட இறக்கிவச்சுட்டு ஏதாவது யோசனை உன்கிட்ட கேட்கலாம்னு நினைத்தேன்ப்பா...

அதுக்காக நான் என் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி உன் வீட்டுக்கு வரணும்னு கிளம்போனேனா.... அப்போ எங்கிருந்துதான் அந்த மஹிந்தனின் ஆட்கள் வந்தார்களோ தெரியலை, என் ஸ்கூட்டிக்கு வழிவிடாமல் மறைச்சு நின்னுட்டாங்கடீ....

நான் அவங்ககிட்ட எதற்கு வழிய மறைக்கறீங்கனு கேட்டால், மேடம், நீங்கள் எங்கே போகணும் என்றாலும் காரில்தான் கூட்டிகிட்டுப் போகணும்னு பாஸ் சொல்லியிருக்காங்க” அப்படின்னு அவிங்க சொல்லி முடிக்கறதுக்குள்ள கார் என் வீட்டு வாசலுக்கு வந்துருச்சு...

என் ஸ்கூட்டியை வழிமறிச்சதும் அவிங்க பேசுவதைப் பார்த்ததுமே என் குடும்பமே வெளியே வந்துருச்சு.... எங்கப்பா எனக்கு முன்ன வந்து நின்னு ”யாரு நீங்க...? என் மகள் கூட எதுக்குத் தகராறு செய்றீங்க...?” அப்படின்னு கேட்டாரா...

அதுக்கு அந்த மஹிந்தனோட ஆட்களில் ஒருத்தன் எங்க அப்பாக்கிட்ட ‘மஹிந்தன் சாப்ட்வேரின் செக்ரட்டரி போஸ்டில் உள்ள உங்கமகள் கவழையா மேடத்திற்குப் பாதுகாப்பு கொடுக்கறதுக்குப் பாஸ் எங்கள அனுப்பியிருக்காங்க.... அவங்க ஸ்கூட்டியில் போறது சேப் கிடையாது.... அதனால எங்க மேடம் எங்க போகறதா இருந்தாலும் காரில் கூட்டிட்டுப் போகச் சொல்லியிருக்காங்க எம்.டீ அப்படின்னு சொல்லிட்டான் டீ....

அப்பவே அம்மா அப்பாவிடம் எல்லாத்தையும் சொல்லணும்னு நினைச்சேன். அவன் என்னைய அப்படிக் கூப்பிடுறான்னு தெரிஞ்சா ரொம்பப் பயந்துடுவாங்க வனி.....

அதனாத்தான் உன்கிட்ட பேசிட்டு எப்படியாவது பணம் குடுக்காம அவன்கிட்ட இருந்து மீளமுடியுமானு யோசனை கேக்கலாம். அப்படி யோசனை எதுவும் வராட்டாலும் அம்மா அப்பாவிடம் கொஞ்சம் பதட்டம் இல்லாமல் என் நிலையைச் சொல்ல கொஞ்சம் என்னை ரிலாக்ஸ் செஞ்சுகிட்டு போகலாம்னு நினைத்தேன் வனி....

வீட்டில உள்ளவங்ககிட்ட நான் வனித்தாவை பார்த்துட்டு வந்த பிறகு உங்களிடம் பேசுறேன்னு சொல்லிட்டுக் காரில் ஏறி உன்னைய பார்க்க கிளம்பி வந்துவிட்டேன்” என்றாள் கவிழையா.

மூணு வருஷ காண்ட்ராக்டில நான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேனு சொன்னதையே அம்மா அப்பாவால ஜீரணிக்க முடியல, அதில் நானாகவே வேலையைவிட்டா ஐம்பதுலட்சம் கொடுப்பதற்கு ஒத்துக்கிட்டு கையெழுத்திட்டு போட்டுட்டேன்னு சொன்னதைக் கேட்டே ஏற்கனவே பயந்து போயிருக்காங்க.

இதில் மஹிந்தன் என்னைய அடைய நினைக்கிறான்னு தெரிஞ்சா உயிரையே விட்டுடுவாங்க.... எனக்கு என்ன செய்யன்னு ஒண்ணுமே புரியலையே!” என்று கண்ணீருடன் கூறினாள்.

அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது அவர்களைத்தேடி அங்கேயே ஈஸ்வரன் வந்துவிட்டார்.

“கவி…” என்று அழைப்பதை பார்த்து திரும்பிய கவிழையா “அப்பா உங்களுக்கு எப்படி நாங்கள் இங்கு இருகோம்னு தெரிந்தது...?” என்று கேட்டாள்.

அதற்கு ஈஸ்வரன் “உன்னைய தேடிவருற வழியில் பூங்கா வாசலில நீ வந்தகாரை பார்த்து உள்ளே வந்தேன்...”, என்றவர் “என்ன பிரச்சனை...?” என்று நேராக விசயத்துக்கே வந்துட்டார்..

தன் தந்தையிடம் தான் மஹிந்தனை சந்தித்தது முதல் நேற்று நடந்ததுவரை அனைத்தையும் கூறினாள் கவி. மகள் கூறியதைக் கேட்ட ஈஸ்வரன் இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். பின் தன்னைச் சிறிது திடப்படுத்திக்கொண்டு நம்மால அவன்கிட்ட மோதி தப்பிக்குற அளவு ஆள் பலமும், பணப் பலமும் இல்லை. ஆனா இது என்னோட மகள் பத்திய விபரம் இதை நான் வெளியில் சொன்னால் உனக்கு நல்ல வாழ்க்கை அமையறதிலும் பிரச்சனை வரும்.... அதனால் நம்மால் இதை வெளியில் சொல்லவும் முடியாது....

அவன் சொல்லி இருக்கிறதுபோல இந்த ஒரு மாதத்தில் எப்படியாவது இதில் இருந்து தப்பிக்க வழி கண்டு பிடிக்கிறேன். உனக்கு எதுவென்றாலும் இந்த அப்பா துணைக்கு இருக்கிறேன் கவி...” என்றார்.

“ஆனா இப்பவே உன் அம்மாவிடம் இதை நீ சொல்ல வேண்டாம் கவி. நான் நேரம் பார்த்து உன் அம்மாக்கிட்ட சொல்லிக் கொள்கிறேன். இது தெரிஞ்சா அவள் ரொம்பப் பயந்துடுவா...” என்றார்

“இனி ஒரு தடவை உன்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண டிரை பண்ணினா உடனே நீ வேலையை விட்டு வந்துடு கவி.... நான் ஒரு மாதத்திற்குள்ள என் தலையை அடமானம் வைத்தாவது ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்துடுவேன்...” என்றார்.

அவர் சோர்வுடன் எழுந்து, “நீங்கள் இருவரும் பத்திரமாக வாங்க நான் முன்னாடிப் போறேன்...” என்றார். சோர்வுடன் நடந்து போகும் தன அப்பாவை பார்த்த போது கவிழையாவின் துக்கம் அதிகரித்தது.

*******

கதிர் மஹிந்தனுடன் அவனுடைய ரிசார்டில் உள்ள கடல் பார்த்து அமைந்திருந்த மேற்கூரை மட்டும் உள்ள டீ டேபிளில் எதிர் எதிரில் உள்ள இருக்கைகளில் உட்கார்ந்திருந்தனர். கதிர் குழப்பத்தில் இருந்தான் ஆனால் மஹிந்தன் கனவுகள் சுமந்த மலர்ந்த முகத்துடன் இருந்தான்.

மஹிந்தன் கதிரிடம் “இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி உட்கார்ந்துட்டு இருக்கிற?” என்று கேட்டான் .

அதற்குக் கதிர் “இங்க பாரு மஹிந்தன், நான் உனக்காகவும் உன் பிசினஸ்காகவும் எதுனாலும் செய்றேன். ஆனால் இனி உன் மேரேஜ் விசயத்தில் குறிப்பா கவிழையா விசயத்தில் என்ன எதுவும் செய்யச் சொல்லாத...” என்றான்.

அதற்கு மஹிந்தன் “ஐஸ்வர்யா என்னுடைய தவறுதலாகச் செலக்சன்... ஆனால் என் ழையா குட் செலைக்ஷன்.. எனக்கு அவளை அடையாளம் காட்டியவன் நீ தானே கதிர்...” என்றான்.

“நீ சொன்னது போல் ஐஸ்வர்யா உன்னுடைய தவறான முடிவுன்னு தெரிஞ்சும் நீ ஏன் ஐஸ்வர்யாகூட உன்னுடைய கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யலை மஹிந்தன்...?”, எனக் கேட்டான் .

அதற்கு மஹிந்தன் சொன்னான் “நான் ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் நடக்க இருக்கிற கல்யாணத்தை நிறுத்தினால் என் குடும்பத்தின் முதல் அடையாளமான எஸ்.வி.என் மோட்டார் கம்பெனி என் குடுப்பத்தைவிட்டு வேறு ஒரு குடும்பத்திற்குப் போயிடும்....

உனக்கே தெரியும் கதிர், இப்போது எனக்குப் பல தொழில்கள் இருந்தாலும் என்னைய அடையாளம் சொல்றவங்க எஸ்.வி.என் மோட்டார் கம்பெனியின் வாரிசு அப்படித்தான் சொல்லுவாங்க...” என்றான்.

அதற்குக் கதிர் “நீ சொல்றது சரிதான், உன் குடும்பத்தின் அடையாளம் அது. ஆனால் அன்னைக்கு ஐஸ்வர்யா அந்த அஜய் கூட என்று ‘முதல் நான் ஹோட்டல் சோழாவில் நடந்த அத்தனையும் கூறினான்’ .என்னால் ஐஸ்வர்யாவை தடுத்து அவங்களோட வீட்டிற்கு அனுப்ப முடியலை...” என்றான்.

அந்த அஜய் உன் பியான்சியை அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனது நல்லதில்ல. இதுபோலக் கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்ந்து செய்தால் உன் குடும்பக் கௌரவம் தான் பாதிக்கும்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட மஹிந்தன் “என்னால் ஐஸ்வர்யாவை எப்பொழுதுமே மனைவியாக ஏத்துக்க முடியாது கதிர்.

அவளுக்குத் தேவை ஒரு மல்டி மில்லினியரின் மனைவி என்ற அந்தஸ்து. எனக்குத்தேவை என் குடும்ப அடையாளமான எஸ்.வி.எம் தட்ஸ் ஆல்...” என்றான்.

“எனக்கு ஊர் அறிய கல்யாணம் முடியிரது ஐஸ்வர்யா கூடத்தான். ஆனால் அதுக்கு முன்னாடியே ஊருக்குத் தெரியாமல் எனக்கு அடுத்தமாதம் கவிழையாகூடக் கல்யாணம் முடியப்போகுது... அதனால் எனக்கு முதல் வொய்ஃப் கவிழையா தான்” என்றான்.

அவன் கூறியதை கேட்ட கதிர் “இதுக்குக் கவிழையா ஒத்துக்கொள்ளணுமே...! எனக்கு என்னவோ கவி கல்யாணத்துக்குச் சம்மதிப்பாள்ன்ற நம்பிக்கையில்ல...” என்றான்,

நேத்து நான் கவிழையா வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா என்றன்சில் உன் கார் நிக்கிற இன்பர்மேஷன் நம்ம ஆட்களிடம் இருந்து கிடைச்சதும் என்ன இங்கு நடக்கிறதுன்னு டீடைல் கேட்டேன்.

நம் ஆட்கள் கவிழையாவை பூங்காவிற்கு உன் காரில் கூட்டிவந்த விபரத்தை என்ட்ட சொன்னாங்க. நானும் கிளம்பி உடனே பூனகாவுக்கு வந்துட்டேன். கவிழையாவின் அப்பா பூங்கா வந்தார்.

அவர் வருவதைப்பார்த்து நான், எதற்கு இங்க வந்துருக்கார்னு தெருஞ்சுக்க உள்ளே போனப்போ அவங்க ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தாங்க..... நான் சட்டுன்னு அந்த மரத்தின் பின்னாடி போய் மறைந்து நின்று அவர்கள் பேசியதைக் கேட்டேன்....” என்று அவர்கள் பேசியதை கூறினான்.

“உன்கிட்ட ஐம்பதுலட்சம் பணத்தை ஒரு மாதத்தில் புரட்டி கொடுத்து கவிழையாவை வேலையில் இருந்து நிறுத்தப் போவதாக அவளின் அப்பா கூறினார்” என்றான்.

அவன் கூறியதை கேட்ட மஹிந்தன் சத்தமாகச் சிரித்து “என் பேபியை என்கிட்ட இருந்து பிரிக்க வெறும் ஐம்பது லட்சம் கொடுக்கப் பார்க்கிறார் என் மாமனார்.

ழையா இஸ் மை லைப், அவள் என்னுடைய புதையல்... யாருக்காகவும் எதற்காகவும் அவளை மிஸ் பண்ண மாட்டேன்”. என்று ஆழ்ந்த குரலில் கூறினான் மஹிந்தன்.

கடந்த ஒரு வாரமாகக் கவிழையாவிற்கு ஆபிசில் புது ப்ராஜெக்ட் காரணமாக வேலை தொடர்ந்து இருந்தது மஹிந்தன் வேறு ஒரு அலுவலில் பிசியாக இருந்ததால், புது ப்ராஜெக்ட்டின் முழுப் பொறுப்பும் கவிழையாவின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

அவன் மதியம் முக்கால் மணி நேரம் மட்டும் அங்குவந்து அன்றைய வேலைகளை மேற்பார்வை செய்துவிட்டு செல்வான்.

அவ்வாறு அவன் வரும் நேரத்தில் கவிழையாவிற்கு முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கும்.

அவன் வரும் போது உமாவின் வணக்கத்திற்குப் பதிலாகத் தலையை அசைப்பவனின் வாய் “ழையா வா...“ என்று கூறிக்கொண்டு நேராக அவனின் ரூமிற்குள் செல்வான் .

முதல் நாள் அவன் அவ்வாறு கூப்பிட்டுச் செல்லும் போது அங்குப் போகத் தயங்கி நின்றவளை திரும்பிப்பார்த்து “ஏன் வராம அங்கேயே நிக்கிற...?” என்று கேட்டான்.

அதற்குக் கவி கூறினாள் “பாஸ் உங்க பெர்சனல் ரூமிற்குள் வர எனக்கு இஷ்டம் இல்லை.. என்னுடைய ஆபீஸ் வேலையை இங்கயே செய்து கொடுக்க முடியும்...” என்றாள்.

அதற்கு மஹிந்தன் “நீ இப்படிச் சொல்பேச்சு கேட்காம என்னைய கோபப்படுத்தினால் நான் உனக்குக் கொடுத்திருக்குற ஒரு மாத நேரத்தை வாபஸ் வாங்கவேண்டியது வரும்னு நினைக்கிறேன்....”. என்றவன்

சிறிது யோசிப்பது போல் பாவனைசெய்து “உன் அப்பா உங்க வீட்டை விலை பேச ப்ரோக்கரை இன்னைக்குக் காலைல பார்த்து பேசியிருக்கார்.” என்று கூறியவன்.

கவிழையாவின் அருகில் வந்து “நான் நினைத்தால் உன் வீட்டை விற்க முடியாமல் செய்ய முடியும்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறினான்.

அவளுக்கு அப்பா வீட்டை விலை பேசுகிறார் என்று அவன் கூறியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அவள் அது பற்றிப் பேச நினைக்கையில் அவன் திரும்பவும் “‘ம்’ வா...” என்று கூறி அறையை நோக்கிச் சென்றான் .

கவிழையாவிற்கு ஏனோ அவள் அப்பாவையும் வீட்டையும் பற்றி அவன் பேசியதும் பயம் அடிவயிற்றில் இருந்து கிளம்பியது.. அவளுக்கு எந்தப் பாதிப்பு என்றாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் இருந்தது. ஆனால் அவள் குடும்பத்துக்கும், வசிக்கும் வீட்டிற்கும் ஏதாவது பாதிப்பு என்றால்! அதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை .

எனவே அதிர்ச்சியைக் கண்களில் பிரதிபலித்தபடி அவன் பின்னால் சென்றாள். உள்ளே சென்றதும் கவிழையாவிடம் மஹிந்தன் கூறினான் “ஏற்கனவே நான் சொன்னதுபோல் என்னை எதிர்த்து நிற்பதும் பேசுவதும் உனக்கு நல்லதல்ல பேபி. உன் அப்பாவை எனக்குப் பணம் கொடுக்குற நினைப்பிலிருந்து மாறச் சொல் ழையா. நீ என்னைய விட்டு விலகிப்போக நான் விடுவதாய் இல்லை....” என்றான்.

அவன் கூறியதைகேட்ட கவிழையா, “நீங்க நினைக்கிறது நடக்காது சார்... அப்படி என்னைய நிர்பந்தத்தில் நிறுத்தினால், என் உயிரை விடுவேனே தவிர உன்னுடைய நினைப்புக்கு எப்போதும் பலிக்கவிடமாட்டேன்” என்றாள் .

அதற்கு மஹிந்தன் கண்களில் சீற்றத்துடன், சிட் என்று கூறி மேஜையில் தன் கைகளால் பலமாக ஒரு குத்துக்குத்தினான்.

பின் “நீ ஏன் என்னைய புரிஞ்சுக்க மாட்டேன்கிற ழையா...? நான் இதுவரை யாரிடமும் இது போல் பொறுமையாகப் பேசியது இல்ல....“ என்றவன்.

அவளுடைய கண்களைப் பார்த்தான் அதில் பயம், கோபம், இரண்டும் மாறிமாறி பிரதிபலிப்பதைப் பர்த்தவன் அக்கண்கள் தன்னைக் காதலுடனும் ஆசையுடனும் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் கொண்டான். தன்னைச் சிறிது நிதானப்படுத்திக்கொண்டு “ஓ.கே.பேபி நீயா? நானா? பார்த்துடலாம்” என்றவன்

“லெட்ஸ் கோ டு டூ அவர் வொர்க்” என்றதும் அன்றைய வேலைபற்றிக் கேட்டு அறிந்துகொண்டான். மறுநாள் என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்று கூறி அவர்களின் வேலைபற்றிய விசயத்தில் இருவரும் கவனம் செலுத்தினர்.

இன்றும் அதே போல் கவிழையாவுடன் அவன் ரூமிற்குள் வந்தவன், “ழையா! ஒன் கப் காஃபி” என்று கூறியவன் அவள் காஃபி தயாரித்துக்கொண்டு இருக்கும்போது கபோர்டில் இருந்த கவரை எடுத்தான் அதில் புது உடுப்பு இருந்தது..

அவனிடம் காஃபியை கொடுக்க வந்தவளிடம் “நீ போய் அந்த ரெஸ்ட்ரூமில் இந்த டிரஸ்ஸை மாத்திட்டுவா..., நாம வெளியில் கிளம்பணும்...” என்று கூறினான்.

அவள் அசையாது நிற்பதை பொருட்படுத்தாமல் அவள் முன்னேயே அவன் உடுத்தியிருந்த பார்மல் உடையை அவிழ்த்துவிட்டு வேறு உடைக்கு மாறினான்.

அவனின் செயலில் “செய்” என்ற வார்த்தையை உதிர்த்து திரும்பி நின்றவளை கண்டு மஹிந்தன் சிரித்துக்கொண்டு “உன் டார்லிங்கின் சிக்ஸ்பேக் பாடியை பார்க்க வெட்கமா பேபி...!”. என் கனவுப் படி பார்த்தால் நமக்கு உன்னைப்போல் ஒரு பெண் குழந்தையே இருக்கு...” என்றான்.

அவன் கூறுவதைக் கேட்க பிடிக்காமல் தன் காதுகளை மூடினாள், உடனே மஹிந்தன் அவள் காதில் “உன் அப்பா நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார் வேகமாகக் கிளம்பு...” என்றவன்.

அவள் நம்பாத பார்வையைப் பார்த்து தன் ஐ போனில் அவளின் தந்தைக்கு டையல் செய்து “மிஸ்டர் ஈஸ்வரன் உங்கள் டாட்டரை என்னுடன் கிளம்பி வரச் சொல்லுங்கள்” என்றான்.

அதனை வாங்கிச் செவி கொடுத்ததும் அதில் ஈஸ்வரனின் குரல் வந்தது “கவி நீ அவரோடு கிளம்பி வா...!” என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார் .

தன் அப்பா, வா! என்று கூப்பிட்டதும் என்ன ஏது என்று புரியாவிட்டாலும் தனது அப்பாவை எதிலோ ஒன்றில் மஹிந்தன் சிக்க வைத்திருகிறான் என்பதை மட்டும் புரிந்துக்கொண்டாள்

எனவே அவள் புரிந்த விசயத்தில் தந்தைக்கான பதட்டத்துடன் “பாஸ் வாங்கள் போலாம்...” என்று கவிழையா அவசரப்படுத்தினாள்.

அவள் கூப்பிட்டதும் மஹிந்தனுக்கு அன்று ழையா அவனுடைய ரெஸ்ட்ரூமை பயன்படுத்த மறுத்தது நினைவு வந்தது.

மனதிற்குள் சிரித்துக்கொண்டே அவன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆவதைபோல் பாவனைசெய்தான்.

கவிழையா பொறுமைகாக்க முடியாமல் “பாஸ் அப்பா காத்திருப்பார்” என்று மறுபடியும் அவனைப் பார்த்து கூறினாள்.

அவள் அவ்வாறு கூறவும் மஹிந்தன் “நான் உன்னைக் கூட்டிகிட்டுப் போறேன் ஆனால் நீ என் ரெஸ்ட் ரூமைப் பயன்படுத்தி இந்த டிரஸ்ஸை மாத்திக்கிட்டு வரணும்" என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறவும் திரும்பவும் அவள் தயங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்தவன் திரும்ப ஈஸ்வரனுக்க்கு போன் செய்தான்.

“மிஸ்டர் ஈஸ்வரன் உங்கமகள் என்கூட வர யோசிக்கிறாங்க. என்ன செய்ய...? நம் டீலிங்கை கேன்சல் பண்ணிடலாமா...?” என்று கேட்டான். பின்பு போனில் ஸ்பீக்கரை ஆன் செய்தான் .

ஈஸ்வரனோ “என் மகக்கிட்ட நான் சொல்கிறேன்...”, என்றவர் “கவி உடனே கிளம்பி வாம்மா இங்க நான் மிகவும் நெருக்கடியான நிலைமையில் இருக்கேன்...” என்று கூறினார் .

அவர் அவ்வாறு கூறவும் “அப்பா உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டவளிடம் “நீ முதலில் கிளம்பிவா” என்றார்.

உடனே “சரிப்பா நான் இதோ கிளம்பி வருறேன்” என்று கூறி தொடர்பை துண்டித்தாள்.

மஹிந்தனைப் பார்த்தாள், அவன் கிளம்பும் எண்ணம் இல்லாமல் ரிலாக்சாக உட்கார்ந்துகொண்டு இருந்தான் .

வேறு வழியில்லாமல் கவிழையா அவன் எடுத்துவைத்திருந்த கவரை எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ரூம் சென்றாள்.

புடவையுடுத்தி வெளியில் வந்த கவிழையாவை இமைக்க மறந்து பார்த்தான் மஹிந்தன். அந்த மெரூன் கலர் டிசைனர் புடவையில் முகத்துக்குச் சற்றும் மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகாக இருக்கமுடியுமா என்று அவன் மெய் மறந்து பார்த்தான் .

வெளியில் வந்த கவிழையா “போகலாமா பாஸ்” என்று அப்பாவை பார்க்கும் பரபரப்புடன் கேட்டாள்.

அவள் அருகில் சென்றவன் “போகலாம் பேபி,” அதற்கு முன் என்று அவள் கைப்பிடித்துக் கூட்டிவந்து ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன்னாள் இருந்த இருக்கையில் அவளை அமரவைத்தான் .

அவன் கைப்பற்றியதும் சட்டென உதறப்போனவளின் கையை இறுக்கிப்பிடித்த மஹிந்தன் “உன் அப்பாக்கிட்ட வேகமாகப் போகணும்னா நான் சொல்வதையும், செய்வதையும் அப்படியே ஏத்துக்கணும்”, என்று குழைந்த குரலில் கூறியபடி அவளை உட்காரவைத்தவன் அவள் கழுத்தில் அந்தப் புடவைக்குப் பொருத்தமான கழுத்தாரமும், ஓர் டாலருடன் கூடிய மெல்லிய சங்கிலியும், காதில் ஜிமிக்கியையும் அவனே போட்டுவிட்டான்.

அவனின் இச்செயலை தடுக்க முடியாமல் அவள் அப்பாவின் நிலையால் அவள் கண்களில் கோபத்தின் காரணமாகவும் இயலாமையின் காரணமாகவும் கண்ணீர் அருவி போல வழிந்தது .

அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததும் மஹிந்தனுக்குக் கோபம் வந்தது உடனே தன் கையை அகற்றிவிட்டு அவளிடம் கண்ணீரை துடைக்கச்சொல்லி அவளுடன் அவ்வறையை விட்டு வெளியில் செல்ல முயன்றான்.

அதற்குக் கவிழையா “பாஸ் ஒரு நிமிடம்” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், “என்ன?” என்று கேட்டான்.

கவிழையாவோ “இந்த ரூம்க்குப் பின் வாசல் இருகுதுல்ல அந்த வழியாக வெளியில போகலாமா....?” என்று தயக்கமுடன் கூறியனாள்.

அதற்கு “ஏன்...?” என்று கேட்டவனிடம்

“நாம ரெண்டுபேரும் இப்படிக் காஸ்டியூமில் வெளியில் போனால் எல்லோரும் என்னைய தப்பா நினைப்பாங்களே..” என்று கண்ணீருடன் கூறினாள்.

அவ்வாறு அவள் கூறியதும், “இந்த நிமிடம் முதல் உன்னைய தப்பான பார்வை பார்க்கக்கூட எவனுக்கும் தைரியம் வராது. இப்படி நாம் போவதால் நீ என்னுடையவள்னு உன்னைய மரியாதையாகத்தான் பார்ப்பாங்க....” என்று கூறி, அவள் கைப்பிடித்துத் தரதர வென்று இழுத்துக்கொண்டு அவ்வறையை விட்டு வெளியில் வந்தவன் அவள் கையை விடாமல் பிடித்தவண்ணம் தன் காருக்குள் போய் ஏறிக்கொண்டான்.

இருவரும் காரைவிட்டு இறங்கியதும் கவிழையா தன் அப்பாவை பார்த்து ஓடிச் சென்று கைகளைப் பிடித்தவள், “அப்பா என்னப்பா எதற்கு என்னைய வரச்சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அவ்விடத்தைப் பார்த்தவள் அது பத்திரம் பதியும் அலுவலகமாக இருந்தது., அங்கு அவள் அப்பா மற்றும் அவருடன் இன்னும் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர் .அவர் பக்கத்தில் இருந்த நபரிடம் “என் மகள் கவிழையா...“ என்று அறிமுகப்படுத்தினார்

அந்த நபரின் அருகில் இருந்தவன் கதிர் ஈஸ்வரனிடம் “சார் இவர் தான் உங்க வீட்டை வாங்கப்போகிறவர்...”. என்று மஹிந்தனை ஈஸ்வரனுக்கு அறிமுகப்படுத்தினான்.

ஈஸ்வரன் மஹிந்தனனை நேரில் பார்ப்பது அதுவே முதல் தடவை. மேலும் அவன் தன் மகளுடன் வந்து காரில் இறங்கிய விதமும் அவள் அருகில் நின்றிருந்த உடல் மொழியும் தன் மகள் கவிழையாவை அவனுடையவள் என்று பறை சாற்றும் விதமாக இருந்ததை அவர் சுத்தமாக விரும்பவில்லை.

எனவே, ‘’கவி இந்தப்பக்கம் வா” என்று கூறி அவளைத் தன் மறுபக்கம் நகர்த்தப் பார்த்தார். ஆனால் மஹிந்தனுக்கு அவரின் உரிமையான செயல் மிகவும் பொறாமை படுத்தியது. அப்பொழுது மனதுக்குள் அவள் அப்பா என்றாலும் நான் இருக்கும் போது ழையாவிடம் உரிமையாகப் பேசக்கூடாது என்ற கோபம் ஏற்பட்டது .

அதனால் “மிஸ்டர் ஈஸ்வரன், ழையா இப்ப என்கூட வந்திருக்காள். அதோட உங்க வீட்டை எங்கள் ரெண்டு பேரிலும் ஜாய்ன்டாக எழுதிகொடுக்கப் போறீங்க... அதற்குச் சைன்பண்ண என்னுடன் ழையா இருக்கணும்” என்று கூறி அவள் கைப்பிடித்து ரெஜிஸ்டாரிடம் கூட்டிச்சென்றான்.

அவன் கூறியதைக் கேட்ட கவிழையா, “அப்பா என்னப்பா நடக்குது இங்க?” என்று மஹிந்தனுடன் போய்க் கொண்டே கேட்டாள்.

ஈஸ்வரனுக்கு மகளிடம் அந்த இடத்தில் நடந்ததைப் பேசமுடியாது அமைதியாகிவிட்டார்.. தன் மகளைத் தானே அவனிடம் கொண்டுசெல்லும் நிலைமையில் விட்டுவிட்டோமே என்று நொந்து போய் அவர்களின் பின்னால் நடந்தார்.

கவிழையாவிற்குத் தன் அப்பா தன்னை இயலாமையுடன் பார்ப்பதைப் பார்த்தவள் அவரும் ஏதோ ஒரு வகையில் மஹிந்தனின் சூழ்ச்சியில் மாட்டியிருப்பதைப் புரிந்துகொண்டு மஹிந்தனுடன் நடந்தாள்.

ரெஜிஸ்டார் மஹிந்தனைப் பார்த்ததும் எழுந்து “வாங்க… வாங்க…” என்று கூறிப் பின்னால் இருந்த இரண்டு மாலையை எடுத்துக் கொடுக்கக் கைகளில் பெற்றுக்கொண்டவன் ழையாவிடம் “இதை வைத்திரு” என்று கூறினான்.

அவன் கொடுத்த மாலையைக் கையில் வாங்கும் போது கவிழையாவிற்குத் தன் மீது பிளாஸ் அடித்ததுபோல் தோன்றியது.

அதன் பின் மஹிந்தன், கவிழையா இருவரும் பத்திரத்திலும் அலுவலகக் கோப்புகளில் சில இடங்களிலும் கையெழுத்து போட்டனர் . கவிழையாவிற்கு அங்கு என்ன நடக்க்கிறது என்றே யோசிக்க மூளை வேலை செய்யமுடியாத அளவில் குழப்பமான மனநிலை இருந்தது.

கையெழுத்துப் போட்டபின் மஹிந்தன் மிகவும் சந்தோசமாக “ஐம்பது லட்சம் பணத்திற்கான காசோலையை ஈஸ்வரனிடம் கொடுத்தவன் சிரித்தபடியே

“அங்கிள், அந்தச் சுப்ரமணி வாங்கிய இரண்டுகோடி லோன் பணத்திற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம்.... அவரின் மில்லை நான் வாங்கிகிட்டேன். அதனால பேங்க் லோனை முழுவதுமாகய் கட்டிவிட்டேன்... இனி உங்களுக்குப் பேங்கில் எந்தப் பிரச்சனைகளும் இருக்காது...” என்று கூறினான்.

அவருக்குத் தன் மகளை நிமிர்ந்து பார்க்க முடியாத வகையில் குற்ற உணர்வு தாக்கியது.

அப்பொழுது மஹிந்தனுடைய போன் மணி அழைத்தது. அதனை எடுத்து பார்த்தவன் “சொல் மதுரா” என்றான் மதுரா கூறியதை கேட்டவன்.

மதுராவிடம் “இப்பொழுதே வீட்டிற்கு வான்னு கூப்பிட்டால் எப்படி என்னால் வர முடியும்...? நான் என்ன வேலை வெட்டி இல்லாத ஆளா...?” என்று கோபமாகக் கூறினான்,

பின்பு “சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க இருப்பேன்...” என்றவன் தொடர்பை துண்டித்தான்.

அவனுக்கு ழையாவை அப்பொழுது அவள் அப்பாவிடம் விட்டு போக மனம் இல்லை. எனவே ஈஸ்வரனிடம் “நான் ழையாவை கூப்பிட்டுட்டு ஆபிஸ் போறேன்... கொஞ்சம் வேலை இருக்குது” என்று கூட்டிக்கொண்டு சென்றான்.

ஈஸ்வரனுக்குத் தன் இயலாமையை நினைத்து தன் மேலேயே வெறுப்பு தோன்றியது. அவர் தளர்ந்த நடையுடன் தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

மஹிந்தன், தன் காரின் டிரைவர் மூர்த்தியிடம் கார் கீயை வாங்கியவன் ஆபீசுக்குப் பஸ்ஸில் வந்து சேர் நான் முன்னால் போகிறேன் என்று கூறினான். பின்பு ழையாவுக்குக் காரின் முன்பக்க கதவை திறந்து “உட்கார்...” என்று கூறினான் .

கவிழையா தன் தந்தையின் சோர்ந்த நடையைப் பார்த்தவண்ணம் காரில் ஏறிக்கொண்டாள். அவள் மனதிற்குள் புயல் அடித்துக்கொண்டிருந்தது அவளுக்கு நடக்கும் எல்லாவற்றுக்குமான கேள்வி... ஏன்? எதற்கு? என்று காரணம் முழுமையாகத் தெரியாவிட்டாலும் தானும் தன் குடும்பமும் மஹிந்தனால் பெரிய சுழலில் சிக்கியதைப் போல் உணர்ந்தாள்.

அவளுக்கு எதிர்ப்பதமான மனநிலையில் இருந்தான் மஹிந்தன் அவன் வாய் தானாக
“புது மாப்பிளைக்கு ரப்பப்பரி நல்லயோகமாட ரப்பப்பரி
அந்த மணமகள் தான் வந்த நேரமடா..” ” “

என்று பாட்டைப் பாடியதும். எரிச்சலுடன் அவனை ஏறிட்ட கவிழையாவைப் பார்த்து “என்னம்மா பொண்டாட்டி புது மாப்பிள்ளையை ஆசையாகப் பார்க்காமல் இப்படி முறைத்து பார்த்தாள் என்ன அர்த்தம்?” என்றான்.

உடனே கவிழையா கூறினாள் “யாருக்கு யார் மாப்பிள்ளை?, நீங்கள் பணத்தில் பெரிய கொம்பனாக இருக்கலாம், ஆனால் நான் என்றுமே உங்களைப் போன்று அடுத்தவர்களைத் துன்புறுத்தி ரசிக்கும் ஒருவனுக்குப் பொண்டாட்டியாக மாட்டேன்” என்றாள்.

அவள் அவ்வாறு கூறவும் சத்தமாகச் சிரித்த மஹிந்தன் என்ன சொன்ன பொண்டாட்டியாக மாட்டேன்னா சொன்ன...? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா....?

நீ இப்போ சட்டப்படி என் மனைவி.... கொஞ்ச நேரம் முன்னாடி நீ கையெழுத்து போட்டயே எதுக்குத் தெரியுமா...? நம் கல்யாணத்தைச் சட்டப்படி பதிவு செய்ததுக்காக! நம் கல்யாணத்திற்குச் சாட்சிக் கையெழுத்து போட்டது உன் அப்பா” என்றான்.

அவன் கூறியதைகேட்டு தன் கண்களில் கண்ணீர் வடிய “நீங்கள் சொல்றதை நான் நம்ப மாட்டேன்...” என்றாள். .

உடனே தன் போனில் கதிரை தொடர்புகொண்டு “கதிர் இப்பொழுது எடுத்த போட்டோ மற்றும் கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணியதற்கான டாக்குமென்டின் போட்டோகாப்பி எல்லாம் என் போனிற்கு அனுப்பு” என்று கூறி வைத்தான்.

கார் நிற்பதைகூட உணராமல் அதிர்ச்சியில் இருந்தவளை,” ழையா” என்று கூறி தன் காரின் ட்டேஸ் போர்டில் இருந்த டிஸ்யு பேப்பரை எடுத்து அவளுடைய முகத்தில் ஏசி காரிலும் வேர்த்து இருந்ததை ஒத்தி எடுத்தான். அதில் தன்னிலை அடைந்தவள் அவனுடைய கையைத் தட்டி விட்டாள்

உடனே கோபத்துடன், “என்னடீ ரொம்பவும் துள்ளுற? உள்ள வா போட்டோ காட்டறேன். அப்போத்தான் நான் மட்டும் உன்னைய தொட முடியும்றதை புரிஞ்சுப்ப" என்றவன் காரில் இருந்து இறங்கி கோபத்துடன் உள்ளே சென்றான் .

கவிழையாவும் அவன் பின்னால் ஆபீஸில் நுழைந்தாள். தன்னுடைய மேஜையில் தன் ஹேண்ட்பேக்கை வைத்தவள், மனச்சோர்வின் காரணமாக ஓய்ந்த தோற்றத்துடன் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

உள்ளே வந்த மஹிந்தன் உமாவிடம் அன்றைய அலுவலகத்தின் பணிகளைக் கேட்டு அறிந்தவன் அடுத்துச் செய்ய வேண்டிய அலுவலகப் பணிகளை அவளிடம் கூறிவிட்டு திரும்பி கவிழையாவைப் பார்த்தான் .

அவளின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்தவன் “என்னைய புருசன்னு ஏத்துக்க அவ்வளவு கஷ்டமாகவா இருக்குது இவளுக்கு...?. என்கூட ஒரு நாள்பொழுதை செலவழிக்கப் போட்டிப்போட்டு எத்தனை பேர் காத்திருக்காங்க!. இவள் என்னடான்னா தெ கிரேட் பிஸ்னஸ் கிங் மஹிந்தனின் வொய்ப் ஆனதுக்கு இப்படி முகத்தைத் தூக்கிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறாள்...? இவளுக்கு என்னைப் பார்த்தாள் எப்படி இருக்கிறது?” என்று கோபமாக வந்தது.

ஆனால் தான் அவளைச் சந்தித்த விதமும், அவளை மிரட்டியதும் அவள் அனுமதில்லாமல் அவளை வலுக்கட்டாயமாக அவளுக்கே தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யத தனது செயல்களால் அவளின் மனம் புண்பட்டு இருப்பதையும் மஹிந்தன் உணராமல் போனான்.

மஹிந்தன் அவள் மேஜைக்கு அருகில் வருவதைப்பார்த்த கவிழையா கலவரம் ஆனாள்.

ஏனெனில் மஹிந்தன் அவளைக் கோபமாக “என்ன இங்கேயே உட்கார்ந்திட்ட, வா ரூமுக்குப் போகலாம்” என்று கூறி அவளின் கையைப் பிடித்துக் கூட்டிச்செல்லும் நோக்குடன் ஒரு கையை நீட்டிக்கொண்டு வருவதைப்பார்த்து கவிழையா வேகமாக எழுந்து தள்ளி நின்றாள்.

அவளின் விலகல் மஹிந்தனை அவமானப்படுத்துவதாக நினைத்து அவனின் கோபத்தை மேலும் அதிகரித்தது. எனவே அவன் அவளைக் கோபமாக முறைத்துக்கொண்டே கதவைத்திறந்தான்.

அப்பொழுது அவன் தொலைபேசி சத்தம் கொடுத்ததால் எடுத்து காதிற்குக் கொடுத்தவன் தன் தங்கை பேசவதை கேட்டு “ஆமாம் ஒரு மணி நேரத்தில் வருவதாய்ச் சொன்னேன் இப்பொழுது லேட் ஆகிடுச்சு அதற்கென்ன?” என்று கோபமாகப் பேசியவன் தன் தங்கையிடம் “யாராக இருந்தாலும் நான் வரும் வரை காத்திருக்கட்டும்” என்றவன் தொடர்பைத் துண்டித்தான்

பின் ழையாவின் கைப்பிடித்து உள் இழுத்து சென்று, ஒருகையால் அவளைச் சுற்றிப்பிடித்துச் சேரில் அவளைத் தன் மடியில் அவள் திமிர... திமிர... ஒற்றைக் கையாலேயே அழுத்தி உட்காரவைத்துக் கொண்டவன் தன் போனில் கதிர் அனுப்பிய போட்டோவையும் ஆவணங்களையும் அவளிடம் காண்பித்து “இப்போ நீ என் பொண்டாட்டி டீ” என்றான்.

கவிழையா அவனிடன் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடிப் பார்த்தாள் ஆனால் அவனின் பிடி இரும்பாக இருந்ததால் அவளால் முயற்சி செய்ய மட்டும் தான் முடிந்தது.

மேலும் அவன் கூறிய கல்யாணம் முடிந்துவிட்டது. அதுவும் உன் அப்பா சாட்சி கையெழுத்துடன் அவனின் மனைவியாகத் தான் ஆகியதை கூறிய விதம் அவளைப் பலவீனமாக்கியிருந்தது

எனவே அவளால் தன் பற்களையும் நகங்களையும் ஆயுதமாக்கி அவனைத் தாக்கத் தயக்கம் ஏற்பட்டிருந்தது.

மஹிந்தன் தன் மடியில் அமர்த்திய ழையாவிடம் தன் போனில் இருந்த கல்யாணத்திற்கான ஆதாரத்தைக் காண்பித்தான்.

அவற்றைப்பார்த்த

விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 06

தேடல் – 6


மஹிந்தன் அலுவலகத்திற்கு இவள் வந்து சேர்வதற்கு முன்பே வந்திருந்தான். நேத்து செய்த வேலைகளைச் சற்று சரிபார்த்து வைக்க வேண்டியிருந்ததால் வேகமாக வந்துவிட்டான்.

கவிழையா கதவைத் திறந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் அழகில் ஒரு சிலநிமிடம் கண் இமைக்க மறந்தான். புடவை உடுத்தி அவளை முதல்முறை .பார்க்கிறான்.

கவிழையா மஹிந்தனை பார்த்ததும் “குட் மோர்னிங் பாஸ்” என்றவளிடம்.

புன்னகைத்துக்கொண்டே “குட் மார்னிங், யு லுக் வெரி ப்யூட்டிபுல் டுடே” என்றான்.

கவிழையாவிற்கு இன்று காலை அவளின் அம்மா அப்பாவை இவனால் வருந்தப்படவைக்கும் சூழ்நிலையில் நிறுத்துவிடோமே என்று அவன் மேல் மிகுந்த எரிச்சலில் இருந்தாள்.

இதில் அவன் அவளை மேலிருந்து கீழ்வரை கண்களால் ரசித்துப் புன்னகைத்துக்கொண்டே பேசியதும் கவிழையாவின் முகம் எரிச்சலை அப்படியே பிரதிபலித்தது.

அதன் பின் நேரம், வேலையின் காரணமாக வேகமாகச் சென்றுவிட்டது. வேலையில் மூழ்கியிருந்த மூவரும் மதியம் 2:3௦துக்குப் பின்பே மதியம் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்தான் மஹிந்தன்,

எனவே மூர்த்திக்கு போன் செய்து அவனுக்குத் தேவையான சாப்பாட்டை வரவழைக்கச் சொல்லிவிட்டு “நீங்கள் ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்க...” என்றான்.

“சரி பாஸ்” என்ற உமா கவிழையாவை பார்த்து “இன்னைக்கும் நீ மதியச்சாப்பாட்டை வீட்டில் இருந்தே கொண்டுவந்துட்டயா...?” என்று கேட்டாள்.

“நான் எப்பவுமே வீட்டுச் சாப்பாடுதான் கொண்டு வருவேன். எனக்கு என் அம்மா சமையல்தான் பிடிக்கும். என்னைக்காவது ஒரு நாள் வெளியில் சாப்பிடலாம் தினமும் சாப்பிட்டால் வயிறு கெட்டுப்போயிடும்” என்று புன்னகையோடு உமாவிடம் கூறினாள்.

மஹிந்தன் கொஞ்சம் தள்ளிநின்றதில் சற்று இயல்பாக உமாவிடம் சிரித்துப் பேசிய கவிழையாவை உற்று கவனித்தவன் அவளின் பெண்மையின் அழகும் அவள் சிரித்துபேசிய விதத்தையும் கண்டவனுக்குக் கோபம் வந்தது.

ழையா தன்னிடம் மட்டும் இதுபோல் சிரித்துப் பேசாமல் உமாவிடம் மலர்ச்சியாகப் பேசியதை கண்டவனுக்கு மனம் பொருமியது.

தன்னுடைய டிஃபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு சிரித்துபேசியபடி உமாவுடன் வெளியே செல்லப் போனவளை “ழையா…” என்று அழைத்தான்.

அவன் கூப்பிட்டதும் கவி முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது அவளால் பசி தாங்க முடியாது.... இப்பொழுதே சாப்பிட நேரம் ஆகிவிட்டது என்ற கடுப்புடன் இருந்தவள் எரிச்சலுடன் ”சொல்லுங்க பாஸ்” என்றாள்.

உமா போகாமல் கவிழையாவிற்காக நிற்பதைப்பார்த்த மஹிந்தன் “நீங்க போய்ச் சாப்பிடுங்க உமா, கவிழையா என்னேடு சாப்பிடட்டும். சாப்பிடும் போது கிளையன்டிடம் அவள் எப்படிப் பேசுவாள்ன்றதை பேசச்சொல்லி கேட்டு ஏதேனும் கரெக்சன் இருந்தால் சரிசெய்யணும்” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மூர்த்தி மஹிந்தனின் சாப்பாட்டுடன் வரவும் உமா கவிழையாவிடம் ஒரு தலையசைவுடன் வெளியேறிவிட்டாள்.

மஹிந்தன் மூர்த்தியைப் பார்த்து “சாப்பாட்டை ழையாவிடம் கொடுத்துட்டு நீ போ மூர்த்தி...” என்று சொல்லிவிட்டு

“ழையா வா” என்று கூறி அந்த அறையின் உள்ளிருந்த ரூமிற்குள் செல்ல கதவினருகில் போனவன் கவிழையா வராமல் அங்கேயே நிற்பதைப்பார்த்து “ஏன்... அங்கயே நிக்கிற?” என்று கேட்டான்.

“நாம இங்கயே சாப்பிடலாம் பாஸ்” என்று தன் கண்களில் பயத்துடன் கூறியவளை கண்ட மஹிந்தன்

“ஏன் என்கூடத் தனியா, அங்கே உட்கார்ந்து சாப்பிட பயமாகயிருக்குதா...? அப்படிப் பயம் உள்ளவள் முதல் நாள் வேலையில் சேரும்போது சொன்னது எல்லாம் வெறும் பந்தாவுக்காகவா...?” என்று கேட்டான்.

அவன் எதைச் சொல்கிறான் என்று யோசனையுடன் “நான் அப்படி என்ன பந்தாவுக்குச் சொன்னேன்...?” என்று கேட்டாள்.

மஹிந்தன் அன்று கவிழையா கூறியதுபோல் அழுவதுபோல் நடித்துக்கொண்டே “அத்துமீறி நீ என்கிட்ட நடக்க ட்ரைபண்ணினா ஒன்னு உன் உயிர் போகும்.... இல்ல என்னுயிர் போயிடும்....” என்று கவிழையாபோல் பேசிக்காண்பித்தான்.

அவன் தான் பேசியதுபோல் நடித்துக் காட்டியதை பார்த்து ரோஷத்துடன் “எனக்குப் பொய் சொல்லி பழக்கமில்ல... எனக்கு ஒன்றும் பயமில்ல” என்றுச்சொல்லி இருவருடைய சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு அவன் பின்னால் அந்த அறைக்குள் சென்றாள்.

மஹிந்தனின் அந்த அறைக்குள் கதிரைத் தவிர வேறு யாரையும் அழைத்துச் சென்றதில்லை. அன்று ஐஸ்வர்யா அவனிடம் கேட்காமல் அந்த அறைக்குள் வந்ததை அவனாள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஐஸ்வர்யா அங்கு வந்ததால், அன்று இரவே அந்த அறையின் கதவில் தன்னுடைய கை விரல் பதித்தால் மட்டும் திறக்குமாறு மாற்றம் செய்துவிட்டான்.

உள்ளே வந்த கவிழையா அந்த அறைக்குள் தன் வீடு மொத்ததையுமே அடக்கிவிடலாம்போல என்று நினைத்துக்கொண்டு அங்கு இருந்த சாப்பாட்டு மேஜைக்கு மேல் இருவரின் சாப்பாட்டையும் வைத்தாள்.

அந்த அறையின் பிரம்மாண்டத்தைக் கண்டு மனதினுள், ‘வெளியில் இருந்து அந்தக் கதவைப் பார்க்கும் யாரும் இது போல அழகான பெரிய வீடு உள்ளே இருக்கும் என்று நினைத்துகூடப் பார்த்திருக்க மாட்டாங்கள்...,

பணம் இருந்தால் எதுவும் செய்ய முடியும் ஆனால் பணம் அறிவு அழகு எல்லாம் இருக்கும் இவனிடம் குணம் இல்லையே!’ என்று நினைத்துக்கொண்டே தன்னுடைய டிப்பன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பிக்கப் போனாள்.

மேஜையில், அவள் எதிரில் அமர்ந்தவன் “எனக்கு யார் சாப்பாடு எடுத்துவைப்பது?” என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அங்கிருந்த அலமாரியை காண்பித்து “பிளேட், பவுல் எல்லாம் அதில் இருக்கு” என்று சொன்னான்.

கவிழையா மனதிற்குள், “எருமைக்குக் கை கால் எல்லாம் நல்லாத்தானே வேலை செய்யுது! பிறகு ஏன் இவனுடைய சின்ன... சின்ன... வேலைக்குக் கூட மத்தவங்களை ஏவுறான்? எல்லாம் பணத் திமிர்”

என்று பொறுமிக்கொண்டே அவனுக்குப் பரிமாறத் தேவையானவற்றை எடுத்துவிட்டு திரும்பும் போது அவளுடைய டிஃபன்பாக்ஸ் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டவள் கோபமாக அவனைப் பார்த்து முறைத்தாள்.

அவள் முறைப்பதைப் பார்த்தவன், சாப்பாடு கொட்டியிருந்த இடத்தை அவனும் எட்டிப் பார்த்துவிட்டு “இது எப்படிக் கீழே விழுந்தது...?” என்று கேட்டான்.

அவள் சாப்பாடு பரிமாறப் பாத்திரம் எடுக்கத் திரும்பி இருக்கும் போது வேண்டும் என்றே அதைக் கீழே விழச்செய்தான் மஹிந்தன்.

கீழே கார்பெட் விரிப்பு இருந்ததால் அது விழும் போது சத்தம் எழவில்லை ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் அவளிடம் அவ்வாறு கேட்டான்.

அவன் அவ்வாறு கூறியதும், ‘தான் இவனைப்பற்றி நினைத்துக்கொண்டே டிஃபன்பாக்சை கீழே நழுவிவிழும்படி வைத்துவிட்டோமோ?’ என்று குழம்பிப் போனாள்.

“உனக்கும் சேர்த்து இன்னொரு பிளேட் எடுத்து வா ழையா, என்னுடைய சாப்பாடு இரண்டு பேருக்குத் தாராளமாக இருக்கும்” என்றான்.

“தேவையில்லை! நான் கேண்டியனில் சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறினாள்

“இனிமே நீ அங்குப் போய்ச் சாப்பிட நேரம் இல்லை, பட்டினியோடு கிளைன்டிடம் பேசி என்னை நஷ்டப்பட வைக்காதே” என்றவன் மேலும்

“உன்னைப் பார்க்கவைத்து நான் மட்டும் சாப்பிட்டால் எனக்கு வயிறு வலிக்கும். எதிர்த்துப் பேசாமல் உட்கார்ந்து என்கூடச் சாப்பிடுவது உனக்கும் நல்லது” என்று கடைசி வரியை கொஞ்சம் கடுமையுடன் கூறினான்.

முதலில் அவனுடைய சாப்பாட்டை நான் சாப்பிடுவதா..? என்று வீராப்புடன் மறுத்தவள் இனி கேன்டினில் சாப்பிட நேரம் இருக்காது என்று சொன்னதும் வீராப்பு சற்று மட்டுப்பட்டது,

மேலும் கடைசியாக அவன் சற்றுக் கடுமையாகப் பேசியதும் அவள் கை தானாகவே அவளுக்கு வேண்டிய சாப்பாட்டை எடுத்துவைத்து அவனுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.

மஹிந்தன் அவள் செயலை மனதிற்குள் ரசித்துப் பார்த்தான் நான் கடுமையாப் பேசுறதையே இவளால் தாங்கி கொள்ள முடியல அவளைப் போலவே அவள் மனதும் மிருதுவானதாக இருக்குதே என்று நினைத்தவனின் உள்ளம் அவளிடம் நெருக்கமாக இருக்க அவளின் மென்மையை அவன் கைகள் அப்பொழுதே உணரவேண்டும் என்ற பேராவல் கொண்டது.

அப்படிச்செய்தால் அவள் தன்னைவிட்டு இன்னும் விலகிப்போக முயற்சி செய்வாள் என்பதனை அறிவு கூற. எங்கே போய்விடப் போகிறாள் என்று மனதிற்குள் சொல்லி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

ஆனால் விழிகளில் அவளின் அழகை நிரப்பிக்கொண்டே அவள் சாப்பிடாமல் தட்டில் உள்ளதை கையில் வைத்துக்கொண்டு யோசனையுடன் இருப்பதைப் பார்த்தான்.

சாப்பிட உட்கார்ந்துவிட்டாள் ஆனால் மனதினுள் “இவன் கடுமையா பேசியதற்குப் பயந்து நாம் சாப்பிட ஆரம்பித்ததால் இவன் என்னைப்பற்றி ரொப்ப எளிதாக நினைச்சுடுவானோ...?”

என்று மனதில் அவனைப்பற்றி யோசனை செய்துகொண்டிருப்பவளின் கவனம் “ஏய் ழையா!” என்ற மஹிந்தனின் அழைப்பில் கலைந்து அவன் முகம் நோக்கியவள்,

“என்ன?” என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி எழுப்பினாள்.

“சீக்கிரம் சாப்பிடு, கிளைன்டிடம் எப்படி எக்ஸ்பிளைன் பண்ணலாம் என்று ஒரு குட்டி நோட்ஸ் நான் சொல்வதை எடுத்துக்கோ...” என்று பேசி பிசினெஸ் விசயத்தில் அவள் கவனத்தைத்திருப்பிச் சாப்பிட வைத்தான்.

அவள் சாப்பிட்டதும் அவளுடனான வேலையையும் அங்கிருந்தே முடித்துவிட்டு நேரம் பார்த்தான் அது 3;35 என்று காட்டவும் “ழையா அந்த ரெஸ்ட்ரூம் போய்க் கொஞ்சம் ரெப்ரஸ் ஆகிட்டு வா நாம் கிளம்புற நேரம் வந்துருச்சு” என்றான்.

அதற்கு மறுத்த கவிழையா “நான் வெளியில் உள்ள ஸ்டாப்ஸ் ரெஸ்ட்ரூமில் போய் ரெப்ரஸ் ஆகிட்டு வந்துடுறேன் பாஸ்” என்று கூறி வெளியேற கதவினை நோக்கிச் சென்றவளின் பின்னால் அவனும் வருவதைப் பார்த்தவள், இவன் எதுக்குப் பின்னாடியே வரான்?! என்று திரும்பிப் பார்த்தாள்...

மஹிந்தன் அவள் பார்த்ததும் சிரித்துக்கொண்டே “நீ எப்படிக் கதவை திறக்கனு பார்க்க வருகிறேன் பேபி” என்று குழைந்து பேசினான் .

அதற்கு ‘அவள் இவன் எதுக்கு இப்போ லூசு மாதிரி பேசுகிறான்...?’ என்று அவனை வித்தியாசமான பிறவியைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு சென்று கதவின் லாக்கை கையில் பிடித்துத் திருகி திறக்க முயன்றாள். ஆனால் அக்கதவை அவளால் திறக்க முடியவில்லை.

அவள் திரும்பத் திறக்க முயற்சிசெய்யும் போது அவள் பின்னால் நெருங்கி நின்று அவள் கையின் மேல் தன் கையை வைத்து லாக்கில் இருந்த அவள்கையை எடுத்து தடவியவாறு “நான் கை வைத்தால் மட்டும் தான் அது திறக்கும் பேபி” என்று அவள் காதோரம் கூறினான்.

அவன் தன் பின்னால் நெருங்கி நின்றதுமே தன்னைச் சுதாரித்துக் கொண்டவள் அவன் தன் கைமேல் கையை வைக்கவும் அவன் கையை உதற முயன்றாள்.

ஆனால் பார்ப்பதற்குச் சாதாரணமாகப் பிடித்திருப்பதைப் போன்று இருக்கும் அவன் பிடி உண்மையில் ரொம்ப இறுக்கமாக இருந்தது, அவளால் தன் கையை உதற முயற்சி மட்டும் தான் செய்ய முடிந்தது.

அவளின் பின்னால் இருந்துகொண்டு தன் உதடுகள் அவளின் காதினருகில் கொண்டுசென்று பட்டும்படாமலும் “நான் கை வைத்தால் மட்டும் தான் அது திறக்கும் பேபி...” என்று கூறி அவளின் தோளின் மேல் தன் கையை வைத்து சற்று அவளைத் தள்ளி நிறுத்திக் கதவைத் திறந்து வைத்தான்.

மஹிந்தனின் அச்செயலால் கோபம் கொண்டு உதடுகள் நடுங்க கண்களால் உக்கிரமாகப் பார்த்தவள் “எது சொல்வதா இருந்தாலும் என்னையத் தொடாமல் பேசுங்க...” என்று குறைந்த ஒலியில் கர்ஜனை செய்தாள்.

அதற்கு மஹிந்தன் சிரித்துக்கொண்டே சத்தம் வராமல் உதடு மட்டும் அசைத்து போடீ...! என்று கூறி வாசலைக் காண்பித்தான்.

மேலும் அங்கு நின்று அவனைப் பார்க்கப் பிடிக்காமல் கோபத்துடன் வெளியே வந்தவள், உமாவின் “கவிழையா” என்ற அழைப்பில் அதேக்கோபத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

அவள் கோபமாகப் பார்ப்பதை பார்த்த உமா “எதுக்காக என்னைய கோபத்துடன் இப்படி முறைக்கிற கவி...?” என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் தன் கோபத்தை மறைத்து “அச்சோ எனக்கு உங்கள் மேல கோபம் எதுவுமேயில்லை” என்று சிரித்தபடி தன் கோபத்தை முயன்று அடக்கியபடி பேசினாள் கவிழையா.

“என் மேல் கோபம் இல்லாவிட்டால் அப்போ யார் மீது கோபம்...?” என்று கேட்டு மஹிந்தனின் மூடிய அறைகதவை திரும்பி பார்த்துவிட்டு “நம்ம பாஸ் மீது தான் கோபமா...?” என்று கேட்டாள் உமா.

அதற்குக் கவிழையா பதில் சொல்லாமல் “நான் ஹோட்டல் சோழாவிற்குக் கிளம்பனும் நேரமாச்சு நாளைக்கு நாம பேசலாம்...” என்று சொல்லிக்கொண்டே எடுத்துவைக்கவேண்டிய பைல்களை எடுத்து சரிபார்த்து முடிப்பதற்குள் மஹிந்தன் வெளியே வந்து “ழையா வா போகலாம்” என்று கூறி முன்னால் நடந்தான் அவளும் பைல்களுடன் பின்னால் சென்றாள்.

உமா அன்று மதியம் லஞ் சாப்பிடும் போது அஜயின் நண்பன் உமாவிடம் “என்ன நீங்கள் தனியாகச் சாப்பிடவந்திருக்கீங்க எம். டீ யின் நியூ செக்ரட்டரி….” என்றதில் அழுத்தம் கொடுத்து “உங்களுடன் சாப்பிட வரவில்லையா...?” என்று கேட்டான்.

“இன்னைக்கு நாலுமணிக்கு ஹோட்டல் சோழாவில் ஒரு முக்கியமான கிளையண்டை மீட் பண்ண தேவையானதை எம்.டீ கூட டிஸ்கஸ் செய்வதால் கவிழையா என்கூடச் சாப்பிடவரலை...” என்றாள்.

அவனுக்குத் தேவையான தகவலை பெற்றதும் “அப்படியா?” என்று கூறிக்கொண்டு அந்த விசயத்தை அஜய்யிடம் சொல்ல அவன் நம்பரை டயல்செய்தபடி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

அஜய்க்கு அந்த விஷயம் தெரிந்தவுடன் ஐஸ்வர்யாவை ஹோட்டல் சோழாவிற்கு ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள அப்பொழுதே கிளம்பி வரச்சொன்னான்.

ஹோட்டல் சோழாவிற்கு முன்கூட்டியே வந்து பார்ட்டி ஹாலின் வாசலில் நின்றுகொண்டிருந்த அஜய், ஐஸ்வர்யாவின் இடையைச் சுற்றி கைப்போட்டு நெருங்கி நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது கவிழையாவுடன் மஹிந்தன் நுழைவதைப் பார்த்தவன் “ஐஸ்வர்யா உன்னுடைய பியான்ஷே வேற ஒருத்திக்கூட அங்கே போகிறார் பார்...!” என்று சொன்னான்.

ஐஸ்வர்யா பார்க்கும் போது மஹிந்தன் தன் தொலைபேசியில் பேசிக்கொண்டு வந்தான்.

அவனுடன் வந்த கவிழையாவை, அஜய் ஏற்பாடு செய்திருந்த ஆள் தன்னுடன் வருபவனிடம் ஏதோ கவிழையாவைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே அவளை நோக்கி இடிப்பதைப்போல் நெறுங்கிவந்தான்.

தற்செயலாகத் தன்னை மோத ஒருவன் வருவதைக் கவனித்த கவிழையா அவசரமாக விலகி தடுமாறி விழப்போனவளை மஹிந்தன் தாங்கி தன்னுடன் பிடித்துக்கொண்டு ஒரு காலால் இடிக்கவந்தவனை உதைத்துதள்ளி கோபமாக ஒரு விரலை நீட்டி யாரிடம் உன் வேலையைக் காண்பிக்கிற? என்று கடுமையாக எச்சரித்தான்.

விழுந்தவன் எழுந்து நிற்பதற்குள் அங்கே நான்கு பேருடன் விரைந்து வந்த கதிர், விழுந்தவனின் சட்டை காலரை பின்னிருந்து பிடித்துத் தூக்கியபடி மஹிந்தனை பார்த்து “நான் இவனை நம் இடத்திற்குப் போய் விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினான்.

மஹிந்தன் தன்னை விழாமல் பிடித்ததும் அவனிடம் இருந்து விலக முயன்ற கவிழையாவை முறைத்த மஹிந்தன் கோபமாகத் தன் வாயில் ஒரு விரல் வைத்து “இஸ்…” என்று சத்தம் கொடுத்து அவளை அடக்கினான்.

அவன் தன்னை விழாமல் காத்த இதம் மறைந்து, அவன் தன்னைப் பிடித்துக் கோபமாக முறைத்து அடக்கி, விடாமல் பிடித்துக் கொண்டு இருந்ததில் கலவரம் ஆனாள் .

அந்த நேரம் கதிர் உடன் வந்த நான்கு பேரில் இருவர் முகம் பார்த்த அவளுக்கு ‘அவங்களை எங்கேயோ பார்த்திருக்கிறோமே....’ என்று யோசனையானவள் தன் தெருவை காவல் காப்பதுபோல் சுற்றி வருபவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தாள்.

மஹிந்தன் தன் பாதுகாவலுக்கு வந்த கதிரிடம் “நீ போனில் சொன்னது போல் இவன் அஜய்கு தெரிந்தவன் மட்டும்தானா அல்லது ஐஸ்வர்யாவிற்கும் பழக்கமானவனா...?” என்று கேட்டான் .

ஐஸ்வர்யா என்ற பெயரை கேட்டதும் கவிழையாவிற்கு, ‘நான் மஹிந்தனின் பியான்ஷி’’ என்று தன்னிடம் புன்னகையுடன் கைநீட்டிய ஐஸ்வர்யாவின் முகம் நினைவு வந்தது .

அதனால் இன்னொருத்திக்கு நிச்சயமானவன் தன் கையைப் பற்றி இருப்பதை ஜீரணிக்க முடியாமல் தொடந்து தன் கையை விடுவிக்க முயற்சிசெய்து கொண்டே மஹிந்தனுடன் மீட்டிங் ஹாலை அடைந்தாள்.

வாசலில் அவள் கையை விட்டவன் கவிழையாவை பார்த்து “என்னை நீ திரும்பத் திரும்பக் கோபப்படுத்துற பேபி. யூ ஆர் மைன்! டிரை டூ அண்டர்ஸ்டேன்ட்” என்று கூறி ஒரு நிமிடம் தன் கண்களை மூடி கோபத்தினைக் கட்டுப்படுத்தியவன் “உள்ளே கிளையண்ட் வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க சோ! ரிலாக்ஸ் பேபி” என்று கூறி அவளுடன் உள்ளே சென்றான்.

கவிழையாவிற்கு அச்சூழ்நிலை மூச்சு முட்டுவதுபோல் இருந்தது. அவனுடன் உள்ளே நுழைந்தவள் குறைந்த குரலில்

“நான் ரெஸ்ட்ரூம் போகணும்” என்று மஹிந்தனிடம் கூறியதும் அவன் அது இருந்த பக்கம் கைக் காட்டினான்.

கவிழையாவிற்கு ரெஸ்ட்ரூம் உள் வந்ததும் அழுகையை அடக்க முடியவில்லை ஆனால் அப்பொழுது அழுவதற்கும், யோசிப்பதற்கும் நேரம் இல்லை எனவே தன்முகத்தில் தண்ணீர் விட்டு அலம்பி சிறிது அமைதிப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தாள்.

பார்ட்டி ஹாலில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு அஜய் மதுபானத்துடன் போதை அதிகரிக்கும் வஸ்த்துவை அவள் அறியாமல் கலந்து கொடுத்தான்.

ஐஸ்வர்யாவிடம் அஜய் கூறினான் “மஹிந்தனுக்கு அவனுடைய செகரற்றி மேல் உள்ள அக்கறையைப் பார் அவன் உன்னுடன் நேரம் செலவழிக்க விரும்பமாட்டான் ஏன்னா அவனுக்கு உன் மேல் ஆசையில்லை அவனின் செக்கரற்றி கவிழையா மேல் தான் ஆசை” என்று கூறினான்.

அதற்கு ஐஸ்வர்யா “அந்த மிடில்கிளாஸ் பெண்ணிடம் அப்படியென்ன இருக்கு...? அவளிடம் போய் அப்படி இழைகிறானே...? அஜய். நீ சொல் நான் பெஸ்டா? அல்லது அவள் பெஸ்டா?” என்று கேட்டாள்.

அதற்கு அஜய் அவளுடன் நெருக்கமாக அமர்ந்து, “ஸ்வீட்டி, நீதான் பெஸ்ட்” என்று கூறிச்சிரித்தான்.

அந்தநேரம் மீட்டிங்ஹாலில் கிளைண்டிடம் பேச்சுவார்த்தையில் இருந்த மஹிந்தனுக்கு வந்த போன் வெளிச்சத்தைப் பார்த்தவன் கதிர் என்ற பெயரைப்பார்த்து அவர்களிடம்

“ஒன் மினிட்” என்று கூறி “மை செக்ரட்டரி வில் எக்ஸ்பிளைன் பர்தர் டீடெல்ஸ் வித் யூ.” என்றான்.

அவன் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து கவிழையா மீதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டாள்.

சற்று தள்ளி நின்று கொண்டு கவிழையா பேசுவதைக் கவனித்துக்கொண்டே தன் போனை அட்டென் பண்ணி “சொல் கதிர்...” என்றான்.

கதிர் சொன்னதைகேட்ட மஹிந்தன் சிறு குரலில் கதிரிடம் “ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அனுப்பிவை கதிர். என்னால் இப்பொழுது அங்க வர முடியாது. டீலிங் முடிந்தபின்னால் தான் என்னால் வெளியில் வர முடியும்” என்று சொல்லி போனை வைத்துவிட்டுப் பிசினஸ் டீலிங்கில் கலந்து கொண்டான்.

பார்ட்டி ஹாலில் ஐஸ்வர்யாவின் முன் நின்றிருந்த கதிரைப் பார்த்து அவள் கோபத்துடன் “நீ யார் என் ஃப்ரெண்ட் மீது கைவைக்க...?” என்று போதையுடன் கூறினாள் ஐஸ்வர்யா.

அதற்குக் கதிர் “மேடம் மஹிந்தன் ஸார் உங்களை வீட்டில் விடச் சொல்லியதால் தான், நான் வந்தேன்” என்றான்.

அதற்கு ஐஸ்வர்யா, “என்ன உங்க பாஸ்க்கு திடீர்ன்னு என் மேல் அக்கறை...?” என்று குழறியபடி கூறி “நோ ஐ காண்ட் அக்செப்ட் யுவர் சர்வீஸ். அஜய் வா போகலாம்” என்று அழைத்தாள் ஐஸ்வர்யா அவளின் இடையில் கைகொடுத்து அனைத்ததுபோல் கூட்டிச்சென்ற அஜயை தடுக்க வழியில்லாமல் நின்றான் கதிர்.

மீட்டிங் ஹாலில் பிசினஸ் டீலிங்கை வெற்றிகரமாக முடித்ததில் மஹிந்தனின் மனநிலை சந்தோஷமாக இருந்தது. அந்த அக்ரிமெண்ட் அவனது பிசினஸ் உலகில் ஒரு பெரிய அந்தஸ்த்தை பெற்றுத்தரும் என்பதினால் அவன் அதில் அதிகமாகக் கவனத்தைக் காண்பித்தான்.

கவிழையாவை என்றைக்கு அவனுடயவள் என்று முடிவெடுத்தானோ, அன்றுதான் அந்த டீலிங் பற்றிய முதல் செய்தி அவனுக்குக் கிடைத்தது.

ஐஸ்வர்யா உடன் அவனுக்குச் செய்த நிச்சயதார்தத்தன்று மிகவும் மனஉளைச்சலில் இருந்தவனுக்குக் கதிர், கவிழையா பற்றிக் கூறியபோது ழையா அவளுடையவள் என்று மஹிந்தன் முடிவெடுத்ததும் அவன் போனில் இந்த டீலிங் பற்றிய முதல் அறிவிப்பு அவனுக்குக் கிடைத்தது.

அதன் பின் கவிழையா அவனுடைய ஆபீசில் செக்ரட்டறியாகச் சைன் போட்ட அன்று அவன் எதிர்பார்த்த பிசினஸ் டீலிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவள் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொண்ட ஒப்பந்தம் இன்று வெற்றியை அவனுக்கு அளித்தது. ஏனோ அவள் தன்னுடன் இருப்பது உற்சாகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அவனுக்குத் தருவதாக அவன் நினைத்தான்.

மஹிந்தனுக்கு, கவிழையா அவனுக்குக் கிடைத்த பொக்கிஷமாக மனதிற்குப் பட்டது . மற்றொருவரின் நிழல் கூட அவளை நெருங்க விட அவன் தயாராக இல்லை. அப்படிப்பட்டவளின் மேல் ஒருவன் இடிக்க வந்ததை அவனாள் மன்னிக்க முடியவில்லை. ஆனால் அவன் ஒன்றை அறியவில்லை, தன்னுடைய செயல் அவளுக்கு எவ்வளவு துன்பத்தைகொடுக்கும் என்பதை அவன் யோசிக்கவில்லை.

தான் கல்யாணம் செய்யப்போகும் ஐஸ்வர்யாவிற்கு எவனோ ஒருவன் முத்தமிட்டதைப் பார்க்கும் போது அவனைக் கொல்லவேண்டும் என்ற வெறி அவனுக்குக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் அதில் அவன் கோபம் கொள்ளலாமல் இருந்தது அவள் மேல் அவனுக்கு இருந்த பற்றில்லாத தன்மையை மஹிந்தன் உணர்ந்து. அக்கல்யாணத்தை நிறுத்த முயற்சிசெய்திருக்க வேண்டும்.

அதன் பின் கவிழையாவிடம் தனக்கு அவளின் மீது உள்ள ஈடுபாட்டை நல்லமுறையில் எடுத்துச்சொல்லி அவளின் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும். இதெல்லாம் செய்யாமல் எளியவர்களை வலியவர்கள் அடக்கி ஆள்வதைப்போலத் தடாலடியாக அவளைத் தனது வாழ்வில் இணைத்து அவளின் மனதை காயப்படுத்த திட்டமிட்டான் மஹிந்தன்.

மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்த மஹிந்தனுக்குக் கவிழையாவுடன் தன் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே ழையா என்ற அழைப்புடன் அவள் கைகோர்க்கும் நோக்குடன் நெருங்கினான் மஹிந்தன்.

அதனைப் பார்த்த கவிழையா, ஒரு ஸ்டெப் தள்ளி நின்று கொண்டு “இதுபோல என்னைத் தொட்டு பேசுவதைக் கையைப் பிடிக்கவருவதை நிறுத்திக்கோங்க திருப்பியும் இதுமாதிரி செஞ்சா என் அடியால் உன் கன்னம் பழுத்துடும்” என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதைக் கேட்ட மஹிந்தன் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான். பின்பு “உன்னால் முடியும் விஷயத்தை மட்டும் பேசணும் பேபி” என்று கூறினான் .

பின்பு முகத்தில் கொஞ்சம் கடுமையுடன் “ழையா நான் இன்னைக்கு ஹேப்பியான மூடில் இருக்கிறேன், ஆதலால் நீ பேசியதை நான் பொறுத்துப்போறேன் .என் கூடப் பேசும் போது வார்த்தைகளை அடக்கி பேச கத்துக்கோ” என்றான்.

மேலும், “யூ ஆர் மைன் என்பதனை நீ அக்செப்ட் செய்ய உனக்கு ஒரு மாதம் டைம் தருகிறேன் . அதற்குள்ள என்னைய ஏற்றுக்கொள்ள உன்னைத் தயார் படுத்திக்கோ” என்றான்.

விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 05

தேடல் – 5
அவள் வெளியில் போக நுழைவாசலுக்குப் பக்கத்தில் வருவதற்குள் அங்கு வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது.

அவள் அந்த வளாகத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது அக்காரின் டிரைவர் கவிழைவை எதிர்கொண்டு பணிவாக “மேடம் எம்.டி ஸார் கம்பெனிக்காரில் உங்களை இறக்கிவிடச் சொன்னாங்கள்” என்றுச்சொல்லி காரின் கதவைத் திறந்துவைத்து “ப்ளீஸ் ஏறுங்க மேடம்” என்று சொன்னான்.

கடுப்பானவள் “எனக்குக் கார் தேவையில்லைன்னு உங்க எம்.டீ கிட்ட போய்ச் சொல்லுங்க” என்றுகூறியபடி அக்காரை கடக்க முயன்றவளின் முன் ஓடிவந்து

“ப்ளீஸ் மேடம் உங்களை நான் காரில் கூட்டிட்டுப் போகாட்ட என்வேலைப் போயிரும் மேடம்” என்று அவன் கெஞ்சி கூறினான்.

சுத்தியிருக்கிற எல்லோரும் திரும்பி கவனிப்பதைப் பார்த்தவள் மேலும் அவனோடு வாதாடி எல்லோர் முன்பும் காட்சிப்பொருளாக வேண்டாம் என்று நினைத்து அக்காரின் பின்கதவை திறந்து ஏறிக்கொண்டாள்.

கார் அவளின் வீட்டின் முன் வந்து நின்றதைக் கூடக் கவி உணரவில்லை, அவள் இறங்காமல் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் பார்த்த டிரைவர் இறங்கிவந்து, காரின் கதவை திறந்துவைத்துக்கொண்டு “மேடம் உங்க வீடு வந்துருச்சு” என்று சொல்லவும் சுதாரித்துக் கொண்டு இறங்கினாள் ...

அவள் இறங்கி வீட்டிற்குள் செல்லும் முன் “நாளைக்குக் காலைல ஒன்பது மணிக்கு உங்களை ஆபீசுக்குக் கூட்டிட்டுப்போகக் கார் எடுத்துட்டு வந்துருவேன் மேடம்” என்று கூறி நன்றி தெரிவித்த டிரைவர் காருடன் புறப்பட்டுச் சென்றான்.

வீட்டு வாசலில் கார் நிற்பதை ஜன்னல் மூலம் பார்த்த பார்வதி, யார் நம்ம வீட்டுக்குக் காரில் வருறாங்க? என்று பார்க்க கதவைத் திறப்பதற்குள் கார் சென்றுவிடக் கவிழையாவைப் பார்த்து “என்னடி காரில் வந்து இறங்குற? யாருடைய கார் அது?” என்று விசாரித்துக் கொண்டே உள்ளே செல்லத் திரும்பி நடந்தாள்.

அதற்குள் தன்னைச் சுதாரித்துத் தன் முகத்தைச் சிரித்ததுபோல் வைத்துக்கொண்டு “அம்மா எனக்குக் கம்பெனியில் கார் அலாட் பண்ணிக் கொடுத்திருக்காங்க” என்றாள்.

“அது எப்படி உனக்குக் கார் தருவாங்க?” என்று சந்தேகமாகக் கேட்கவும் “அம்மா என்னுடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா...?”

“முப்பதாயிரம் கொடுப்பாங்கனு காம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனதுமே சொல்லிவிட்டாங்க தானே...” என்ற பார்வதியிடம் கவிழையா மறுப்பாகத் தலை அசைத்து

“அதைப்போல் மூன்றுமடங்கு அதிகம் என் சம்பளம்” என்று கூறினாள்.

ஆச்சரியத்துடன் “எப்படிக் கவி...!?” என்றதும், கவிழையா முதலில் தான் சென்றது முதல் கையெழுத்துப்போடும் வரை நடந்ததை மட்டும் தன் அம்மாவிடம் கூறினாள். கையெழுத்துப் போட்டபின் பின் நடந்த அத்தனையும் கூறாமல் மறைத்துவிட்டாள், இப்போதைக்கு மற்ற எதையும் சொல்லவேண்டாம் என்று நினைத்தாள்....

அவள் சொன்னதைக்கேட்ட பார்வதி, “உன்னால் இவ்வளவு பெரிய பொறுப்பைச் செய்ய முடியுமா கவி...?” என்று யோசனையுடன் கேட்டாள்....

“அதெல்லாம் நான் பார்த்துடுவேன்ம்மா... நீங்க எனக்குக் கொஞ்சம் காபி போட்டுக் கொடுங்க்குறீங்களா தலை வலிக்கிறது, நான் குடிச்சுட்டுக் கொஞ்சநேரம் படுக்கணும்” என்று கூறினாள்.

இன்னும் கொஞ்ச நேரம் தன் அம்மாவிடம் பேசினால் உண்மையை உலரிவிடுவோம் என்று உணர்ந்து தனது அறைக்குள் சென்று குளியலறைக்குள் தாழ்பாள் போட்டு ‘கடவுளே... என்னைய இந்தச் சூழ்நிலையில் இருந்து காப்பாற்று’ என்று கூறி சத்தம் வராமல் புலம்பி தீர்த்தாள்.


பின் தனது குழப்பம் முகத்தில் தெரியாமலிருக்க முகத்தினை நன்கு நீர் அடித்துக் கழுவி வேறு உடை மாற்றிவந்தவள் தன் படுக்கையில் விழுந்தாள் .

மறுநாள் காலை கவிழையா ஏன்தான் விடிகிறதோ, என்ற நினைப்புடனே எழுந்து ஆபீஸ் கிளம்பினாள்.

தான் உடுத்துற டிரஸ் முதல் பேசும் வார்த்தைவரை கண்ணியமாக இருப்பதில் கவனமாக இருக்கும் தன்னைப்பார்த்து அவன் எப்படி இந்தவார்த்தையைக் கேட்கலாம்...? என்று நினைத்து இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. மேலும் இவ்வாறு தன்னைக் கேட்டவனிடம் வேலைபார்க்கும் சூழ்நிலையில் இருப்பதை நினைத்து உருவான மன அழுத்தம் உருவானது.

அப்பாவிடம் கூறி பணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாமா....? என்று நினைக்கையில் ஒரு ஐந்துலட்சம் என்றாள் தன் தந்தையால் ஏற்பாடு செய்துக்கொடுக்க முடியும்.... ஐம்பதுலட்சம் கண்டிப்பாகத் தன் அப்பாவால் முடியாது என்று உணர்ந்தவளால் கேட்பதற்கும் தைரியம் வரவில்லை.

சாப்பாட்டு அறைக்குள் வந்தவளை பார்த்த பார்வதி, “என்ன கவி, உன் முகம் டல்லாக இருக்கு” என்று கேட்டவரிடம் “கொஞ்சம் ஜலதோஷம் பிடிச்சிருக்கும்மா அதனால்தான்” என்று கூறி சமாளித்தவள் சாப்பிட்டுவிட்டு தன் டிஃபன்பாக்சை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்....

கார் வாசலில் காத்துக்கொண்டு இருந்தது. காரில் அவள் ஏறிச்செல்லும்வரை வாசலில் நின்று மகளுக்குக் கை அசைத்து உள்ளே வந்த பார்வதி ஈஸ்வரனிடம்..,

“கவி நேத்து ஆபீஸ் போயிட்டு வந்ததில் இருந்து ஏதோ தெளிவில்லாமல் இருப்பதுபோல் தெரியுதுங்க, ஏதோ பிரச்சனை அவளுக்கு இருக்கிறமாதிரி தோணுது, இன்னைக்கு நைட் அவகிட்ட நீங்க பேசிப் பாருங்க” என்று கலக்கத்துடன் கூறினாள் .

“நீ ஒன்று பயப்படாதே பாரு, நான் என்னென்னு இன்னைக்கு நைட் கவியிடம் விசாரிக்கிறேன்” என்று கூறியவர் யோசனையுடன் தன் அலுவலகம் புறப்பட்டுச் சென்றார்.

கவிழையாவிற்கு வேலையின் அடிப்படையில் இருந்து கற்றுத்தர ஆரம்பித்த உமாவின் திறமையைக் கண்டு முதலில் பயந்து தன்னால் இந்த வேலையைச் செய்யமுடியுமா...? என்ற சந்தேகம் வந்தது.

அதனை உணர்ந்த உமா, ஆதரவாகக் கவிழையாவின் கையைப் பிடித்து “நான் இந்த வேலைக்கு வந்து நான்குவருசம் ஆகிருச்சு. .நான் படித்தது செக்ரட்டரி வேலைக்கான படிப்புன்னாலும் முதலில் நானும் உன்னைப் போலதான் இருந்தேன். போகப்போக எல்லாம் புரிபடும்” என்று கூறினாள்.

கவிழையாவிற்கும் தன் மனச்சுமையைக் குறைக்க இவ்வேலையில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்து வெற்றியும் கண்டாள் மஹிந்தன் வரும் வரை.

மஹிந்தன் அன்று மதியம் இரண்டு மணிக்கு தன் அலுவலகம் வந்தவன் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டான்.

அன்று காலை அவன் மிகவும் எதிர்பார்த்த கிளையன்டிடம் இருந்து மிகப் பெரிய ஆடர் கிடைக்கப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் திட்டம் தயாரித்து வரும்படியும் நாளை அதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளவும் அழைப்பு வந்திருந்தது.

எனவே மஹிந்தன் அதற்கான முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தான். அங்குக் கவிழையா என்று ஒருத்தி இருப்பதையே மஹிந்தனும் உமாவும் மறந்ததுபோல் இருந்தது அவன் செயல்கள் .

அவனுக்கு இதுபோல் வேலைசெய்யும் போது அடிக்கடி குடிக்கத் தண்ணீர் மற்றும் ஜூஸ் தேவைப்படும். அந்தநேரத்தில் மட்டும் “ழையா தண்ணீர்...” என்றும் “ழையா ஜூஸ்...” என்றுகேட்டு வாங்கிக் குடிப்பான் .

கவிழையாவோ முதலில் ‘ழையா’ என்று யாரையோ கூப்பிடுகிறான் என்ற பாவனையில் அசையாமல் இருந்தாள். மஹிந்தன் கூப்பிடுவதைக் காதில் வாங்காமல் இருப்பதைக் கண்டு கோபமாக அவன் பக்கத்தில் வைத்திருந்த பேப்பர்வெயிட்டரை தூக்கி விட்டெறிந்தான் அது தூள்தூளாகத் தரையில் மோதிச் சிதறியது.

அதனால் அவள் உட்கார்ந்த சேரைவிட்டு எழுந்து நின்று தன் கண்களில் பயத்தினைக் காண்பித்து.... வார்த்தை வராமல் இருந்தவளின் நடுங்கிய தோற்றம் பார்த்தவன், அவள் கண்களின் பயத்தினைக் கண்டு தன் கோபத்தினை மட்டுப்படுத்தி உமாவைப் பார்த்தான்.

அவளும் அதிர்ந்திருந்தாலும், அவன் தன்னைப் பார்த்தவும் வாய் தானாக “எஸ் பாஸ்...” என்று கூறியவள் பெல் அடித்து வரவழைத்த ப்யூனிடம் தரையில் கிடந்த சிதறல்களை உடனே சுத்தம் செய்யுமாறு கூறினாள்.

அவன் ஐந்து நிமிடத்திற்குள் சுத்தம் செய்து போன இடைவெளியில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கவிழையாவைப் பார்த்து “என்ன தைரியமிருந்தா... நான் கூப்பிட்டும் என்னென்னு கேக்காமல் இருப்ப...” என்றுகேட்டான் .

அதற்குக் கவிழையா தன் நடுக்கத்தை மறைத்து “என் பெயர் ழையா கிடையாது கவிழையா” என்று கூறினாள்.

அதற்கு மஹிந்தன் “நான் அப்படித்தான் கூப்பிடுவேன். நீ திரும்ப இதுபோல் நடந்து என்னைக் கோபப்பட வைக்கிறது உனக்கு நல்லதில்ல...” என்று கூறியவனின் கண்களில் கண்ட கோபத்தில் கவியின் தலை தானாகச் சரி என்று அசைந்தது.

மஹிந்தன் கவிழையாவை அவனுக்கு ஸ்பெஷலானவள் என்பதையும் அவள் அவனுடையவள் என்பதையும் எல்லோரையும் உணரச்செய்ய நினைத்தான். எனவே அவனுடைய கார் ஒன்றில் அவனுடைய டிரைவரை கொண்டு கவிழையாவை ஆபீஸ் கூட்டிவரவும் வீட்டில் விடவும் ஏற்பாடு செய்திருந்தான்....

அக்கார் தங்கள் எம்.டி உடையது என்றும் அதை ஓட்டும் டிரைவர் தங்கள் எம்.டியின் விசுவாசி என்பதையும் அங்கு வேலைபார்க்கும் பெரும்பான்மையானவர்கள் அறிந்த விஷயம். மேலும் அதனால் அங்குள்ள பணியாளர்கள் யாரும் கவிழையாவிடம் ஒரு மரியாதையுடன் ஒதுங்கி இருந்தனர்.

முதல்நாளில் அவளிடம் சாதாரணமாகப் பேசிய பிரசாத் ,ராம் போன்றவர்கள் மறுநாள் அவளை எதிரில் பார்த்து மரியாதையாகக் காலை வணக்கம் செய்து ஒதுங்கிச் சென்றனர். இந்தவிபரங்கள் எதுவும் கவிழையா அறியவில்லை.

அதற்குப்பின் மஹிந்தனின் ழையா தண்ணீர், ழையா ஜூஸ் போன்ற வார்த்தைகளுக்கு அவள் கட்டுப்பட்டு நடந்தபோதும் அவனின் அப்பெயர் சுருக்கம் கவிழையாவிற்கு எரிச்சலை கொடுத்தது.

நேரம் செல்லச்செல்ல அவனின் தொழில் அறிவைக் கண்டவளுக்குச் சிறிது மரியாதை அவன்மேல் வந்தது.

டெக்னிக்கலாகச் சில ஆலோசனைகளைக் கவிழையா அவர்களின் உரையாடல்களைக் கவனித்ததின் அடிப்படையில் தானாகவே முன்வந்து ஆர்வத்துடன் சொன்னாள்.

அவள் கல்லூரியில் பயிலும் போது ஒரு ப்ரொஜெக்ட் செய்து அதனைச் சமர்பிக்கும் நாள் வந்தபோது வந்த கடுமையான வயிற்றுபோக்கால் அவளால் அதைச் சமர்பிக்க முடியாமல் போனது.

தற்போதைய மஹிந்தனின் தொழில் திட்டத்திற்கு அவள் செய்த ப்ரொஜெக்ட் பொருந்திவருவதைக் கண்ட கவிழையா ஆர்வத்தில் அதைப் பற்றிய தன்னுடைய புரிதலை கூறினாள். அவள் கூறியதைக்கேட்டு யோசனையுடன் புருவம் உயர்த்திய மஹிந்தன் சில சந்தேகங்களைக் கேட்டான்.

அதற்குக் கவிழையாவின் விளக்கத்தைப் பார்த்தவன் “குட்” என்று அவளைப் பாராட்டியவன் அதன் பின் அவளையும் தங்கள் வேலையில் அவள் அறியாமல் இணைத்துக் கொண்டான். அதன்பிறகு அவன் பருக ஜூஸ் தயாரிப்பதை உமா மேற்கொண்டாள்.

அவர்கள் திட்டம் தயாரித்து முடிக்க ஐந்தரை மணியாகிவிட்டது. அப்பொழுது கவிழையாவின் தொலைபேசி சத்தமிட்டது அதனை எடுத்துப் பார்த்தவள் காதில்கொடுத்து “இதோ கிளம்பிட்டேன்ம்மா கொஞ்சம் வேலை அதிகம் அதனால் தான்” என்று சொல்லிவிட்டு மணியைப்பார்த்தவள் 5:5௦ ஆனதை பார்த்துக் கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.

அப்பொழுது மஹிந்தன் “நாளைக்கு இந்த ப்ரொஜெக்டில் சைன் பண்ண ஹோட்டல் சோழாவிற்குப் போகணும் அதற்கு ஏற்றார்போல் ட்ரெஸ் பண்ணிட்டு வா ழையா” என்றான்.

அதனைக் கேட்ட கவிழையா “நானா?” என்று கேட்டாள். அதற்கு

“நீயேதான். இக்கொட்டேசனை பற்றிய டீடைல்ஸ் எக்ஸ்பிளைன் பண்ண தேவையான பேப்பர்ஸை என்னிடம் எடுத்துக்கொடுத்து அசிஸ்ட் பண்ண சொல்ல என்கூட அங்கு நீ இருக்கணும். மதியம் மூன்று மணிக்கு அங்க போகணும். நம்ம வேலை முடிந்து நீ வீட்டிற்குச்செல்ல நைட் ஆகிடும்” என்று கூறினான்.

அதற்குக் கவிழையா, “நைட்டு வெளியில... அதுவும் ஹோட்டலுக்கு எல்லாம் போக என் வீட்டில் விட மாட்டாங்க பாஸ்...” என்றாள்.

உடனே மஹிந்தன் “நீ இன்னும் ஸ்கூலிற்குப் போகும் பிள்ளை இல்ல ழையா இந்த மஹிந்தனின்.. என்று கூறி ஒரு நிமிடம் மௌனமாகி அவளை மேலிருந்து கீழ்வரை தன் கண்களால் ரசித்துவிட்டு செக்ரட்டரி” என்று கூறினான்.

அவ்வளவு நேரம் சற்றுச் சாதாரணமாகப் பேசிக்கோண்டு இருந்தவள் அவனுடைய அந்த ஒரு நிமிட மௌனத்திலும் பார்வையிலும் இவன் மனதில் என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான் என்ற கோபமும் எச்சரிக்கையும் கொண்டு திரும்பவும் அவனுடன் விறைப்பாகப் பேச ஆரம்பித்தாள்.

“நான் உங்கள் செக்ரட்டரி மட்டும் தான்” என்று கூறி கோபத்தைச் சிறிது கட்டுப்படுத்தி அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டு தன் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேற போனவளைத் தடுத்து “கொஞ்சம் நில்லு ழையா” என்றவன்.

தன்னுடைய ப்ரீப்கேஸை உமாவை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு கவிழையாவைப் பார்த்து “வா போலாம்...” என்று கூறி ஒரு அடி எடுத்து வைத்தவன் அவள் வராமல் அங்கேயே நிற்பதைப்பார்த்து திரும்பி என்ன? என்று கேட்டான்.

“நீங்க என்கூட ஏன் வருறீங்க பாஸ்?” என்று கேட்டாள். அதில் எரிச்சலானவன் “வாடீ! இப்படி நீ அலம்பல் பண்ணிக்கிட்டே நின்றால் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுதான் போவேன்” என்றான்.

அவனுடைய பேச்சினைக் கேட்ட ழையாவுக்கு அழுகையும், ஆத்திரமும் வந்தது, அவன் அவ்வாறு செய்தால் தனது மானம் தான் போகும் என்பதை அறிந்து வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றாள்.

மஹிந்தன் காரின் பின் கதவை கவிழையா ஏறுவதற்குத் தோதாகத் திறந்துகொண்டு அவளைப் பார்த்தான். கவிழையா ஏறாமல் காரை சுற்றி வந்து மறுபுறம் இருந்த கதவைத் திறந்து ஏறிக்கொண்டாள்.

அவள் செய்வதைப் பார்த்தவன் உதடுகள் புன்னகையில் விரிந்தது. உமாவிடம் தன் ப்ரீப்கேஸை வாங்கியவன் காரில் அவள் அருகில் உட்காந்தவுடன் கார் கவிழையாவின் வீட்டை நோக்கிச் சென்றது...

மஹிந்தனின் பியான்ஷி ஐஸ்வர்யாவிடம் அஜய் தன் போனில் கவிழையா மஹிந்தனுடன் காரில் ஏறும் வீடியோ பதிவைக் காண்பித்தான்.

பார் உன்னுடைய பியான்ஷே வேறு ஒருத்தியோட வாழ்கையை அனுபவிக்கிறான், நீதான் முன்னாடி மாதிரி என்கூட டைம் ஸ்பென் பண்ண மாட்டேன்கிற....” என்றான்.

அவன் காட்டிய புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள் ஐஸ்வர்யா. அதில் கவிழையா முகத்தில் கோபமும் எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிய கார் கதவைத் திறந்து ஏறுவதும் மறுபுறத்தின் கதவை திறந்துகொண்டு குறும்புச் சிரிப்புடன் மஹிந்தன் ஏறும் காட்சியைக் கண்டாள்.

அவள் வாய் தானாக மஹிந்தனை பார்த்து நான் இந்த மிடில் கிளாஸ் பெண்ணைவிட எந்தவிதத்திலும் குறைந்து போகலை... இவளை உன்னிடம் இருந்து விரட்ட செண்டிமெண்ட் வார்த்தை போதும் எனக்கு...” என்று வாய்விட்டுச் சொன்னவள்,

“அஜய் நாளைக்கு உன்கூட என்னைய வெளியே வரச்சொல்லிக் கேட்டிருந்தயே டைம் பிளேஸ் இரண்டும் எனக்கு மெசேஜ்ல அனுப்பு” என்று கூறிவிட்டு அந்த க்ளப் விட்டு வெளியேறினாள்

அஜய்க்கு ஐஸ்வர்யா மேல் ஒரு கண் உண்டு இன்னும் அவளை முழுவதுமாக அவன் நெருங்கவில்லை. ஹக், லிப்கிஸ் மட்டுமே அவள் அனுமதித்திருந்தாள்

அவளைக் கவர்ச்சியான உடையில் கண்டு அவள் அழகை மொத்தமாக இன்னும் அனுபவித்து முடிப்பதற்குள் அவள் கல்யாணம் என்ற பெயரில் அவனைத் தவிர்ப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவளின் கல்யாணத்திற்குள் எப்படியும் அவளை மொத்தமாக நெருங்கும் சந்தர்ப்பத்துக்குக் கொக்குபோலக் காத்திருந்தான்.

எனவே மஹிந்தனின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அவனின் நண்பன் மூலம் இதுபோன்ற மஹிந்தனின் செயல்களை உளவுபார்த்து சொல்ல ஏற்பாடு செய்திருந்தான்.

அதனை ஐஸ்வர்யாவிடம் கூறி அவளைத் தன்னுடன் நெருங்கி பழகவைப்பதுக்கும் அவளின் பொறாமையைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதில் குளிர்காயவும் விரும்பினான்.

அவள் போனதும் தன்னுடைய நண்பனிடம், எப்படியும் அவள கல்யாணத்திற்குள் நான் அடைஞ்சுடனும் என்றான்.

அதற்கு அவன் “நீ நினைச்சா முடிக்காமல் விடமாட்ட என்பது எனக்குத் தெரியும் அஜய்” என்று கூறியதும், அஜய் வில்லன் சிரிப்புச் சிரித்தான்.

மறுநாள் கவிழையா நீலவான கலரில் அடர் ஊதாநிற பார்டர் உள்ள காட்டன் புடவையை உடுத்தி அடர் ஊதாக்கல் தோடும் அதற்குப் பொறுத்தமான பென்டனுடன் கூடிய செயின் அணிந்து அவளின் இடுப்புவரை உள்ள கூந்தலை கிளிப்பினுள் அடக்கி அவள் கண்களுக்குச் சிறிது மையிட்டு ஊதநிற பொட்டிட்டு வந்தாள்.

அவளைப் பார்த்த பார்வதிக்கு தன்மகளின் அழகை கண்டு இன்று வந்தவுடன் திருஷ்டி சுத்தணும் என்று நினைத்துக்கொண்டாள்.

நேற்று ஈஸ்வரன் தன் மகள் வேலையின் காரணமாகச் சோர்வாக இருப்பதைப் பார்த்தவர் நாளை மகளிடம் அவள் பணியிடத்தில் ஏதேனும் சிரமம் அல்லது பிரச்சனை உள்ளதாவென விசாரிக்க நினைத்திருந்தார்.

காலை அமர்ந்து சாப்பிடும் போது தயங்கி தன் பெற்றோரிடம் சோழா ஹோட்டலுக்குச் செக்ரட்டரி என்ற முறையில் எம்.டி யுடன் செல்ல வேண்டியதையும் வருவதற்கு நைட் ஆகிவிடும் என்பதையும் கூறினாள்...

அவள் கூறியதை கேட்ட பார்வதி “இதுபோல ஹோட்டலுக்குப் போகவேண்டியிருந்தால் நீ ஒன்றும் அந்த வேலைக்கே போக வேண்டாம்” என்று கறார் குரலில் சொல்லிவிட்டாள்

அதனைக்கேட்ட ஈஸ்வரன் “நீ இந்த வேலையில சேர்ந்ததில் இருந்து உன் முகம் தெளிவில்லாமயே இருக்குது கவி.... அதனால உன் அம்மா சொல்றதைப்போல நீ இந்தவேலைக்குப் போகவேண்டாம்...” என்றார்.

அதற்குக் கவிழையா “என்னப்பா நீங்களும் இப்படிச் சொல்றீங்க....? எம்.டி கொட்டேசன் தயாரிக்கும்போது செக்ரட்டரின்ற முறையில் நான் தான் அவருக்கு அசிஸ்ட் பண்ணினேன். அங்கு இக்கொட்டேசன் பற்றிய டீடெய்ல்ஸ் எம்.டி.க்கு அடுத்து எனக்குத்தான் தெரியும்..... இது என்னுடைய வேலை.... நான் போகலைன்னா ஏற்படுற நஷ்டத்திர்க்கு நான் தான் பொறுப்பேற்கணும்.....” என்றாள்.

கவி அவ்வாறு கூரியதைகேட்டு ஈஸ்வரன், “என்ன கவி சொல்ற?” என்று கேட்டதும். அப்பா நான் வேலையில சேரும் போது போட்ட காண்ட்ராக்டில் இன்னும் மூன்று வருசம் அங்க வொர்க் பண்ணுறதா சைன் பண்ணியிருக்கேன்....” என்றாள்

அதன்பிறகு ஒரு நிமிட மௌனமாகி பின் கூறினாள், நானு இப்போ இதைச் சொல்றது உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருக்கலாம்.... நான் வேலை பார்க்குற இடத்தில் முக்கியப் பொறுப்பில இருக்கேன்.....

இதில கம்பெனி இரகசியத்தைப் பாதுகாப்பதும் என்னுடைய முக்கியப் பங்கு இருக்குது.... ஆதனால திடீர்ன்னு நானாய் என் வேலைப் பொறுப்பில் இருந்து விலகிக்க முடியாது... அப்படி நானாக விலகி வேலையை விட்டு நின்றுவிட்டால் ஐம்பது இலட்சம் நஷ்ட்டஈடு கொடுக்கனுமென எழுதியதை கவனிக்காம சைன் பண்ணிட்டேன்” என்றாள்.

“என்னது ஐம்பது லட்சமா?” என்று அதிர்ந்து கேட்டனர், அவளது பெற்றோர்

உடனே பார்வதி “நீ காண்ட்ராக்டில கையெழுத்து போடுறப்போ அதைப் படிக்காமலேயா சைன் பண்ண...? என்று கேட்டார் .

“அம்மா திடீர்ன்னு செக்ரட்டரி போஸ்ட்டிற்கு என்னைச் செலக்ட் செய்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு ஏற்பட்ட குழப்பத்தில நான் ஒப்பந்தத்தைச் சரியாகக் கவனிக்காம சைன் பண்ணிட்டேன்... அதுக்குப் பிறகுதான் அதில் இருந்த விஷயம் எனக்குத் தெரிந்தது....” என்றாள் .

அதனால் தான் இத்தனை நாளாய் குழப்பிட்டே இருந்தேன். மத்தபடி எனக்கு வேலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை....” என்றாள்.

ஈஸ்வரனுக்கு, மகள் தன்னிடம் மேலும் எதையோ மறைப்பதாக மனதிற்குப் பட்டது. இருந்தாலும் இப்பொழுது அவரும் அலுவலகம் புறப்படும் அவசரத்தில் இருந்ததால் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

உடனே பார்வதி “நீ இன்னைக்கு ஹோட்டல் சோழாவுக்குச் சாயந்திரம் கண்டிப்பா போகணுமா கவி...?” என்றார்.

பதில்சொல்ல முடியாமல் மகள் திணறுவதைப் பார்த்த ஈஸ்வரன் “அதுதான் அவள் நிலைமையைச் சொல்லிட்டாளே....” என்றவர்

“பார்த்துக் கவனமாகப் போய்ட்டு வா கவி அங்கு உனக்கு எதுவும் மனதிற்குப் பிடிக்கவில்லைன்னா உடனே எனக்குப் போன் செய்துடு” என்றார்.

“சரிப்பா..” என்றவள். அம்மா கொடுத்த டிஃப்பனை வாங்கிகொண்டு வெளியில் வருவதற்குள் கார் அவளுக்காகக் காத்திருந்தது.

காரில் அவள் ஏறுவதற்குள் பார்வதி ட்ரைவரிடம், “தம்பி நைட் கொஞ்சம் சீக்கிரம் என் மகளைக் கூப்பிட்டு வந்துடுங்க அவள் வீட்டிற்கு வரும் வரை எனக்கு நிம்மதியாக இருக்காது...” என்றாள். அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பொதுவாக அவன் தலையை அசைத்தான்...

கார் கிளம்பியதும், “டிரைவர் அண்ணா அம்மாவிற்கு என்னைய தனியாக வெளியிடங்களுக்கு அனுப்பிப் பழக்கம் இல்லாததால் பயந்து அப்படி உங்களிடம் சொல்லிட்டாங்க.... நீங்க அதைப் பெரிசா நினைச்சுக்க வேண்டாம்” என்றாள்.

மஹிந்தனே அவளுக்குக் கார் கதவை திறந்துவிடும் அளவில் தன் முதலாளிக்கு முக்கியமானவள் தன்னை அண்ணா என்று அழைப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்தவன், “என்பெயர் மூர்த்திம்மா..., என்னைய பேர் சொல்லியே நீங்க கூப்பிடலாம்...” என்றான்.

அதற்குக் கவி “நீங்க என்னைய விடப் பெரியவங்க தானே..?, பிறகு எப்படி உங்களை நான் பேர் சொல்லிக் கூப்பிட முடியும்...?” என்றாள்.

அதற்குப் பின் அமைதியாக அலுவலகம் வந்ததும் எதிர்பட்டவர்கள் அவளுக்கு மரியாதையுடன் வணக்கம் வைத்ததைப் பார்க்கும் போதுதான் பதிலுக்கு வணக்கம் சொல்லி யோசித்தாள் கவிழையா.

தான் முதல் நாள் பார்த்தபோது மற்றவர்கள் தன்னை நட்புடன் பார்த்ததிற்கும் இப்பொழுது தன்னைப் பார்த்து மரியாதையாக நடந்துகொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தையும் பார்த்தவள் அது தன் செக்ரட்டரி பதவிக்கு வந்த மரியாதையா? அல்லது வேறெதுக்குமா...? என யோசிக்க ஆரம்பித்தாள்.
 

விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 04

தேடல் - 4
மறுநாள், வனிதா சொன்னது போலவே கவிழையாவை கடைக்குக் கூட்டிக்கொண்டுபோக வீட்டிற்கு வந்துவிட்டாள். கவி அப்பொழுதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்...

“வா வனித்தா!” என்ற பார்வதி, “நீயும் கொஞ்சம் சாப்பிடும்மா" என்றதும் .

“நான் ஏற்கனவே சாப்பிட்டாச்சு ஆன்ட்டி, இருந்தாலும் உங்கள் கைப்பக்குவம் என் அம்மாவிற்கு வராது அதனால்... இப்போது கொஞ்சமா வைங்க" என்று சொல்லிவிட்டு சாப்பிட மேசையில் அமர்நதும்..

கவிழையா சிரித்துக்கொண்டே, “அப்போ உங்கள் வீட்டில் சாப்பிட்டது?” என்று கேட்டாள்
.
“அப்பச் சாப்பிட்டது பசிக்கு. இப்ப சாப்பிடுவது ருசிக்கு” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினாள்.

அப்பொழுது பார்வதி, “ஏம்மா இந்தக் கொளுத்தற வெயிலில் ட்ரெஸ் எடுக்கப் போகணுமா? அப்பாகூடச் சாயங்காலம் போகலாமே!” என்றதும்.

“அம்மா நான் எடுக்கும் ட்ரெஸ்ஸைப் பத்தி அப்பாவிற்கு அபிப்ராயம் சொல்லத் தெரியாது. அதற்கு வனித்தா தான் சரி. பொம்பளைப்பிள்ளைகள் தனியாக ஆறு மணிக்கு மேல வெளியில் போகக்கூடாதுனு சொல்லி அனுப்பமாட்டீங்க. அதனால் வெயிலா இருந்தாலும் பரவால்ல இப்போவே போய் எடுத்துட்டு வந்துவிடுகிறோம்” எனச் சொல்லி கிளம்பினர்..

அன்று போன அதே மாலிற்குச் சென்று ஸ்கூட்டியை விட்டு இறங்கியதும் அங்கிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து “நான் ஸ்கூட்டியை பார்க் பண்ணிவிட்டு சாவியை உங்களிடம் கொடுத்து விடுறேன் மேம்” என்றவரை, கவி, வனி இருவரும் அதிசயப் பிறவியைப் பார்ப்பதுபோல் பார்த்துவைத்தனர்.

“என்னமோ நாம BMW காரில் வந்து இறங்குவதைப்போல் இவர் ஓவரா ட்ரீட் பண்றாரே.... நமக்கு இது சரிப்பட்டு வராது” என்று வனியிடம் தாழ்ந்தகுரலில் கூறிய கவிழையா,

‘இருக்கட்டும் சார்! நாங்களே நிறுத்திக்கிடுவோம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்

அவருக்குத்தான் தன்னிடம் பிறப்பிக்கப்பட்ட மேலிடத்து உத்தரவினை நிறைவேற்றமுடியாத பயத்துடன் அவர்கள் பின்னாடியே சென்று நிறுத்த வழி செய்துகொடுத்துச் சென்றார்.

அன்று போன அதே கடைக்கு இருவரும் போனார்கள். கடையின் முன் அன்று இருந்த தள்ளுபடி வாசகம் இன்றில்லை. எனவே கவிழையா, “ஏய் வனி தள்ளுபடி இன்னைக்குக் கிடையாது போல அதனால என் பட்ஜெட்டில் வாங்க முடியாதுப்பா...” என்றாள்.

“இவ்வளவுதூரம் வந்தாச்சுக் கவி... உள்ளேபோய்ப் பார்த்துடலாம் வா!” என்று கூற, சரி என்று தலையசைத்த கவியும் வனியுடன் அக்கடையின் உள்ளே நுழைந்தாள். அக்கடையின் விற்பனையாளர்,

“உங்களுக்கு எந்தமாதிரியான கலெக்சன் வேண்டும்” என்றதும்.

“வுமென்ஸ் ஆபீஸ்வியர் கலெக்சன்ஸ்” என்று கவியிடம். அங்குக் காண்பித்த உடை அனைத்தும் கவிழையா சொன்னதுபோல் விலை தலைசுற்ற வைத்தது.

உடனே கவிழையா, “சார்! ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால் காட்டுங்கள். இல்லைன்னா நாங்கள் போறோம்” என்று கூறிக்கொண்டிருக்கும் போது அக்கடையின் தொலைபேசி அழைத்தது.

அதில் பேசியப்பின் விற்பனையாளரின் போக்கே மாறிவிட்டது. “மேடம் இன்று இங்க நீங்கள் வாங்கும் எல்லாமே ஆயிரம் ரூபாய்க்கு உள்ளேதான், இந்தக் கடையின் ஓனருக்கு இன்று பிறந்தநாள் அதனால உங்களுக்கு இந்த ஆபர் கொடுத்திருக்காங்க” என்று கூறி டிரஸ்களை அவள் முன் குவித்து உட்காரச்சொல்லி உபசரித்துச் சாப்பிட கூல்காபி வரவழைத்துக் கொடுத்தார்.

வனி கவியிடம், “இன்று உனக்கு அதிர்ஷ்டமான நாள் என்று காலண்டரில் போட்டிருக்கும். வீட்டிற்குப் போய்ப் பார்த்துவிட்டுச்சொல்லு”, என்று கூறிக்கொண்டே அக்கடையில் அவர்களுக்குத் தேவையான உடையை எடுத்து முடிக்கும்போது அங்கு மஹிந்தனும் கதிரும் அங்கு வந்தனர்,

கவிழையா பணம் செலுத்தி ரசீது வாங்கும் வரை மஹிந்தனின் பார்வை கவிழையாவை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

மஹிந்தன் அக்கடைக்குள் நுழையும்போதே கவிழையா பார்த்துவிட்டாள். இந்த மூஞ்சியை எங்கயோ பார்த்திருக்கிறோமே...?! என்று நினைக்கும்போதே அன்று அவனைப் பாத்ததும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதனால் அவள் வெறுப்பாக முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

ஆனாலும் அவனின் பார்வை தன்னைத் தொடர்வதை அவளால் உணரமுடிந்தது. எனோ! அப்பார்வையில் அவளுக்கு நடுக்கம் பிறந்ததால், வனித்தாவின் கையை இருக்கி பிடித்துக்கொண்டாள். ஆனால் வனித்தாவோ இது எதையும் உணரவில்லை. அதனால்...

“ஏன்டீ என் கையை இந்த அழுத்து அழுத்துற” என்றாள்.

“அன்னைக்கு நாம் இங்க வந்தோம்ல அப்ப ஒருத்தன் நான் கீழே விழப்பார்த்தபோது என்னைய கீழே விழாமல் பிடிச்சதுக்குப் பின்னாடி வம்பு செய்தான்ல... அவன் நம்மளையே முறைச்சு பார்க்கிறான்டீ...!” என்றாள்.

உடனே வனித்தா திரும்பி பார்த்தாள். அவள் பார்த்ததும் “ஹாய்...!” என்று கூறி, மஹிந்தன் கை அசைத்தான். பக்கத்தில் நின்ற கதிர் சுவாரஸ்யமாக அவர்களை வேடிக்கை பார்த்தான்.

அறிமுகம் இல்லாத ஒருத்தன் எதோ நீண்டகாலம் பழகியவர்களைப் பார்த்துச் செய்வது போலக் கையசைத்து ஹாய்! சொன்னவிதத்தில் யோசனையுடன் அவனைப் பார்த்த வனித்தா...

“கவி அவன் நம்மளை பார்த்து ஹாய் சொல்லுறான்டீ...!” என்றாள்.

உடனே கவிழையா எரிச்சலுடன் “இப்படித்தான் அவனைப் பார்த்துவைப்பயா?” எனக் கடிந்தாள்

“என்னடீ கவி, நீதானே அவன் முறைக்கிறானு சொன்ன...! எவன் அவன் நம்மைப்பார்த்து முறைக்கிறதுனு பார்த்தேன். இது ஒரு குத்தமா...?” என்று கூறினாள் ...

“நீ பார்த்தது குதத்மில்லை. அவனுக்குத் தெரியும் படி பார்த்தததான் தப்பு..., இப்பபாரு அவன் உன்னைய பார்த்து கையை ஆட்டி திரும்பவும் வம்பிழுக்க ஆரம்பிச்சுட்டான்...” என்றாள் கவி... நாம அவனைக் கவனிக்காதது மாதிரி சீக்கிரம் வெளிய போய்விடுவோம்...”

என்றவள் ஒரு கையில் வனித்தாவைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் ட்ரெஸ் எடுத்த பைகளைத் தூக்கிக்கொண்டு விறுவிறு என்று வாசலை நோக்கி சென்றாள்...

உடனே மஹிந்தன் “ஏய்...! மெதுவா நட பேபி, அன்னைக்கு போலத் திரும்ப நீ விழ நான் பிடிக்கனு சீன் கிரியேட் ஆகிடப்போகுது....” என்றான்.

அவனின் உரிமையானவர்களிடம் பேசுவதைப் போன்ற தோரணையினால் பேபி என்ற அழைப்பில்வெகுண்ட கவிழையா

“நீங்கள் யாரு சார்...? யாரோ ஒருத்தர் என்னை எப்படிப் பேபின்று கூப்பிடலாம்...?, இதுபோலப் பேச்சையெல்லாம் உங்ககூட வந்தாங்களே ஒரு பொண்ணு, அவளோடு வைச்சுக்ங்க.... இன்னும் ஒரு தடவை என்கிட்ட இதுபோன்று நடந்தா... நான் மனுசியாவே இருக்க மாட்டேன்” என்றுகூறி,

“வாடீ போகலாம்” என்று தோழியை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றாள் கவி.

அவளின் கோபத்தைக் கண்ட மஹிந்தன் “எங்க போயிடப்போகிறாள் நம்ம கிட்டத்தானே வேலைக்கு வரப்போறா அப்போ பார்த்துக்கிடலாம்” என்று கதிரிடம் கூறியபடி மால் விட்டு வெளியே வந்து காருக்காகக் காத்திருந்தான். அவன் காரும் வாசலுக்கு வந்தது...

அவன் காரில் ஏறும் போது அங்கு வந்த கவியும் வனியும் அவனை அதிர்ச்சியுடன் பார்ப்பதை பார்த்து ஒருநிமிடம் அவன் கண்கள் பளிச்சிட்டது பின் அவன் உதடுகள் “கண்டுபிடிச்சிட்டாள்”, என்றுகூறி பின் கவியைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டுக் காரில் சென்றுவிட்டான்...

வனித்தா அதிர்ச்சியுடன் “கவி! இத்தனை நாள் நம்மள ஃபாலோ பண்ணிய கார் இவனுடையது தான்போல...!” என்று கூறினாள்.
.
“ஆமாம் வனி அன்னைக்கு நீ சொன்னதுபோல என்னைய பலிவாங்க கிளம்பி வந்துட்டான் போல...! எனக்குப் பயமாக இருக்குதுடி!” என்றாள்.

தன் தோழி பயப்படுவதைப் பார்த்த வனித்தா “கவி உடனே இதை உன் அப்பாட்ட சொல்லிடு” என்று கூறினாள்.

“அச்சச்சோ! நீ அப்பாவிடம் உளறிடாத! ஏற்கனவே எனக்குக் கல்யாணம் செய்யணும்னு பேசினாங்க.... நான் தான் கெஞ்சி ஒரு வருடம் வேலைக்குப் போகப் பெர்மிசன் வாங்கியிருக்கேன். இதைச் சொன்னால் பயந்துபோய் வேலைக்கு அனுப்பமாட்டாங்க, கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டிற்கு அனுப்பிவிடுவாங்கள்” என்றவள்...

இனிமேல் பகலில் கூட வெளியில எங்கயும் தனியாகக் கொஞ்சநாள் போகக்கூடாது... மஹிந்தன் சாப்ட்வேர் கம்பெனி பஸ் எங்க வீட்டிலயிருந்து நடக்குற தொலைவில் உள்ள மெயின்ரோட்டில் போறதை பார்த்திருக்கேன்.... அதில தான் வேலைக்குப் போகணும், ஸ்கூட்டியில் போகக்கூடாது....” என்று கூறினாள்..

“ஒரு சில மாசம் அவனோட கண்ணில படாம இருந்தாச்சுன்னா அவன் அவனுடைய வேலையைப் பார்க்க போயிடப் போறான்” என்று அவளுக்கும் சேர்த்துச் சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

அவன் பெயர் ‘மஹிந்தன்’ என்பதையும், அவனிடம்தான் அவள் வேலைக்குப் போகப்போகிறோம் என்பதையும் கவிழையா அறியவில்லை......

******

அன்று காலை கவிழையா வீட்டில் “அம்மா இங்க வாங்க, வருண் என்னுடைய பேனாவை கொடுக்கமாட்டேனு வம்புசெய்றான்...” என்று தன் ரூமில் இருந்து கத்திக்கொண்டு இருந்தாள் கவி.

பார்வதிவோ கோபத்துடன் “நான் அடுப்படியில் வேலைபார்க்கவா? அல்லது உங்க ரெண்டுபேருக்கும் வழக்கு தீர்க்கவா?” என்றார்.

வருண் கவியிடம் “உன்னால என்கிட்ட இருந்து பிடுங்க முடிந்தால் பிடிங்கிக்கோ...” என்று சொல்லிவிட்டு முன் அறைக்கு ஓடி வந்தான்.

அவனைத் துரத்திக்கொண்டு வந்த கவி அவன் கையில் இருந்த பேனாவினை பறிக்க.... பேனா மூடி மட்டும் கவியின் கையில் இருந்தது, பேனா கீழே விழுந்துவிட்டது....

அப்பொழுது, “இங்க என்ன சண்டை...?” என்று கேட்டுக்கொண்டு வந்த ஈஸ்வரன் கீழே விழுந்த பேனாவை எடுத்தார். அப்பேனாவின் முனி முறிந்திருந்தது.

அதைப்பார்த்து கவலையோடு கவிழையா “இன்னைக்கு நானு வேலையில ஜாயின்செய்யுறப்போ முதல் முதலில் சைன்பண்றதுக்குனு வாங்கிய புதுப்பேனா இப்படி உடைஞ்சுபோச்சே...!” என்றாள்.

அதனைக் கேட்ட பார்வதிக்கு ஏனோ அது அபசகுனமாகப்பட்டது.

வருண் “சாரி... கவி...! இப்படி உடையும்னு நான் நினைக்கலை” என்றான்.

ஈஸ்வரன், “அவன் தான் ஸாரி கேட்டுட்டானே கவி, நீ போகுற போது வழியில வேற பேனா வாங்கிக்கலாம்...” என்றார்.

ஈஸ்வரனிடம், “இன்னைக்கு முதல் நாள் கவி வேலைக்குப் போறதால நீங்களும் கூடப்போய், அவள் வேலை பார்க்குற இடத்தைப் பார்த்துட்டு வாங்க...” எனச்சொன்னாள் பார்வதி.

கவியிடம், “நீ கிளம்பிட்டு சாமிக்கு விளக்கேத்தி சாமிகும்பிட மறக்காதே” என்றும் கூறினாள் பார்வதி.

ஈஸ்வரன் தன் மகளுடன் அவள் வேலையில் ஜாயின் செய்யும் நிறுவனத்திற்கு வந்தவர் அவளுடன் அங்கிருந்த ரிசெப்சனுக்குச் சென்றதும், அங்கிருதவள் “குட்மார்னிங் மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டாள்.

அவளிடம் கவிழையா தன் பணி நியமன உத்தரவை காண்பித்தாள்

அதை அங்கிருந்த தொலைபேசிமூலம் உறுதிசெய்துவிட்டு கவிழையாவை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தாள்.

கவிழையா தன் தந்தையிடம் விடை பெற, “அப்பா” என்று அழைத்தாள்.

அவர் அவள் கூப்பிடுவதைக் கவனிக்காமல் அந்தக் கட்டிடத்தின் பிரமாண்டத்தையும் அங்குப் பணிபுரியும் மற்ற பணியாளர்களின் நாகரிகமான தோற்றத்தையும் அவ்வலுவலகத்தின் தூய்மையையும் பார்த்து தன் மகளும் அங்கு வேலைபார்ப்பதில் பெருமை அடைந்தார்.

திரும்பவும், அப்பா! என்ற அழைப்பில் தன் மகளைப் பார்த்து வாழ்த்துக் கூறி தான் வாங்கிய புதுப் பேனாவை அவளிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

கவிழையா ஆர்வமாகவும் சிறிது தடுமாற்றதுடனும் உள் நுழையும் போது அவளை எதிர்கொண்டு அழைத்துச் செல்ல வந்த பிரசாத்...
.
“நான் பிரசாத், நீங்க கவிழையா தானே” என்று புன்னகையுடன் அவளிடம் அறிமுகமாகியவன், “நான் இங்கு ஹைச்.ஆர் ஆக இருக்கிறேன்” என்றுகூறிவிட்டு “வெல்கம் டு அவர் ஹோம்” என்று கூறி அழைத்துச்சென்றான்

அத்தளத்தில் இருந்த ஓர் அறையைக் காண்பித்து “அங்க இன்னும் நான்கு நியூ ஹேன்டிடேட்ஸ் உட்கார்ந்துக்கிட்டு இருப்பாங்க. நீங்க போய் அவர்களுடன் வெய்ட் பண்ணுங்க... நம்ம டிபார்ட்மென்ட் ஹெட் உங்களை வந்து பார்ப்பார்” என்று கூறிச்சென்று விட்டான்.

அங்கு அவள் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்தவர் “ஹாய் ஐ ஆம் யுவர் டிபார்ட்மென்ட் ஹெட் ராம்” என்று கூறி கவிழையாவைத் தவிர மற்ற நாலுபேரிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சொனான்...

கவிழையாவிடம் “மிஸ் கவிழையா, ஃபாலோ மீ...” என்று கூறி உள்ளே கூப்பிட்டுக்கொண்டு போய் எம் டீ மஹிந்தன் என்ற அறையின் கதவைத்திறந்து உள்ளே சென்றான்.

அந்த எம்.டீரூம் பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாக இருந்தது, இரண்டு ஜோடி மேஜையும் இருந்தது. ஒன்றில் மஹிந்தன் எம் டி என்று போர்டும் இருந்தது ஆனால் அதன் இருக்கை காலியாக இருந்தது...

மற்றொரு இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண், “கவிழையா! நான் எம்.டீ மஹிந்தனின் செக்ரட்டரி உமா...” என்றுகூறி எதிரில் இருந்த இருக்கையைக் காண்பித்து அதில் கவிழையாவை உட்காரச்சொன்னாள்.

அமர்ந்தவளிடம “ஆல்திபெஸ்ட் மிஸ் கவிழையா” எனச்சொல்லி வேலையில் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் போடச்சொல்லி தாள்களைக் கொடுத்தாள் உமா.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த கவிழையா அதிர்ச்சியுடன் எழுந்து “மேடம் இது செக்ரட்டரி போஸ்ட்கான காண்ட்ராக்ட் லெட்டர். நான் ஐ.டி.ஸ்டூடன்ட் நீங்க வேறயாரோனு நெனச்சு என்கிட்ட இதில் சைன் பண்ணச்சொல்றீங்க...” என்றாள்

அதற்கு உமா “மிஸ் கவிழையா உங்களைச் செலக்ட் செய்தது இந்த வேலைக்குத் தான், நான் இன்னும் ஒருசில மாதத்தில் ப்ரமோசனில் சிங்கப்பூர் போகப்போறேன்....

இந்தச் செக்ரட்டரி போஸ்ட்டில உள்ளவங்க ஐ.டி ஸ்டூடண்டா இருந்தா பாஸ்க்கு ஹெல்ப்பா இருக்கும். அதனால உங்களை இந்தப் போஸ்ட்டுக்குச் செலக்ட் செய்திருக்கோம்....

நான் இங்க இருந்து போற்குள் உங்களுக்கு என்னென்ன வேலை... எப்படிச் செய்யனும்... எல்லாம் சொல்லித் தந்துடுவேன்...” என்றுகூறினாள்.

“மத்த ஐ.டி.ஸ்டாப்ஸ் சேலரியை விட இரண்டு மடங்கு சம்பளம் இதில் அதிகம். ஏன்னா கம்பெனி சீக்ரட்டை வெளியில் கசியவிடாம இருப்பது இந்தவேலையில ரொம்ப முக்கியம். உங்களுக்கு எதுவும் இதில் ஆட்சேபனை இருந்தால் இப்பொழுதே சொல்லிவிடுங்க மிஸ் கவிழையா...” என்று கூறினாள்,

கவிழையா குழம்பியபடியே “நான் இதில் ஜாய்ன் பண்ணுறேன்...” என்று கூறினாள்,

உடனே உமா பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஒப்பந்த தாள்களைக் கொடுத்தாள், அவள் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போட்டாள் கவி.

கவிழையாவின் இக்கையெழுத்தால் அவள் தலையெழுத்தே மாறிப்போவதை அவள் அறியவில்லை.

கவிழையா அவளின் அப்பாவுடன் வந்ததில் இருந்து, அவள் தன் அறையில் இப்பொழுது இருப்பதுவரை சிசிடி கேமராவில் பார்த்துக்கொண்டிருந்த மஹிந்தனுக்கு முகத்தில் சிரிப்புடன் கூடிய ரசனையுடன், கவிழையாவை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அவளின் கண்களும் அதில் தோன்றும் பாவனைகளும் மஹிந்தனை அவள் மேல் பித்தம் கொள்ளவைத்தது “மை பேபி, இனி நீ என்னோடுதான். எங்கயும் ஓட முடியாது“ என்று கேமராவில் கவியைப் பார்த்துக்கொண்டே முனுமுனுத்தான்.

அப்பொழுது அவன் அறைக்குள் படீர் என்று கதவை திறந்துக்கொண்டு ஐஸ்வர்யா நுழைந்தாள்.

அவன் அலுவலக அறைக்குள்ளே இருந்த அந்த லக்ஷ்ஸூரியஸ் அறையில் இருந்து கொண்டு தான் சிசிடி கேமராவில் கவியைப் பார்த்துக்கொண்டு இருந்தான்...

கவிழையா கையெழுத்துப் போடும்வரை தான்தான் எம்.டீ என்று கவிக்குத் தெரியக்கூடாது என்று கவனமாக இருந்தான், அவள் கையெழுத்துப் போட்டபின்தான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்...
.
இப்பொழுது ஐஸ்வர்யா வந்ததைப் பார்த்தும், அவனுக்கு வந்த நிம்மதி திரும்பவும் போய்விட்டதை உணர்ந்தவன். “இப்ப எதற்கு இங்கு வந்த...?” எனக் கோபமாகக் கேட்டான்.

ஐஸ்வர்யா அவன் கையில இருந்த ஐ போனை வெடுக்கென்று பிடுங்கினாள்,

மஹிந்த் அப்பொழுதுதான் கவிழையாவின் கண்களைத் தனது மொபைலில் ஸ்க்ரீன் பிச்சராக வைத்து முடித்திருந்தான்

அவனிடம் இருந்து பிடுங்கி அதன் மெசேஜ்களைச் செக் செய்தாள்.

அவள் தங்கள் ரெண்டுபேருக்கும் கல்யாணம் முடிவாகியதற்கு அவளின் நட்புவட்டத்தில் உள்ளவர்களுக்கு ‘காலை பத்துமணிக்கு’ இருவரும் சேர்ந்து பார்ட்டி கொடுக்க அவனை வரச்சொல்லி பதினைந்துக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பி இருந்தாள்.

அவன் ரிப்ளே பண்ணாததால். நைட் வீட்டில் உள்ள லேன்ட்லைனில் மஹிந்தனிடம் பேசி “ஏன் எனது மெசேஜ்க்கு பதிலளிக்கவில்லை” எனக் கேட்டாள்.

மஹிந்தன், தான் மெசேஜ் பார்க்கவில்லை என்றும் நாளை தான் அந்தப் பார்ட்டியில் கலந்துகொள்வதாகவும் கூறியிருந்தான்.

இன்று காலை ஏழுமணியில் இருந்து பலமுறை அவனுக்கு வரும்படி மெசேஜ் அனுப்பியும் அவன் பார்ட்டிக்கு வராததால் அவளுக்குப் பெறும் அவமானமாகப் போய் விட்டது.

அதனால் கோபத்துடன் அவன் இருக்கும் இடம் வந்தாள், ஆனால் ஆபீசில் அவளை உள்ளே அனுப்ப மறுத்தனர் அதனால் அவள் கோபம்கொண்டு,

தான் மஹிந்தனின் வருங்கால மனைவி என்று கூறி பளார் என்று அவளை விட மறுத்தவனை அடித்துவிட்டு அதே கோபத்துடன் உள்ளே வந்தாள்

மஹிந்தன் அத்தனை மெசேஜையும் பார்த்தும், வராமல் இங்கு ஹாயாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவள் “இதற்கு என்ன அர்த்தம்...?” என்று கேட்டாள்...

அதனால் கோபம்கொண்ட மஹிந்தன் “நீ என்கிட்ட இப்படிக் கோபம் எல்லாம் படக்கூடாது..., எனக்கு உன்கூட வெளியே எல்லாம் கைகோர்த்து வரமுடியாதுனு ஒரு தடவை உன்னைக் கூட்டிகிட்டுப் போனதில் தெரிஞ்சிருச்சு..., இதற்குமேல இங்கு இருந்து சத்தம் போட்ட இந்தக் கல்யாணமே நடக்காது... நான் நிறுத்திடுவேன்...” என்று கூறினான்....

அவன் கல்யாணம் நடக்காது என்று கூறியதும் தன்னுடைய கோபத்தை மறைத்து அவனிடம் குலைந்து பேசுவதைபோல் பாவனைச்செய்து,

“என்ன மஹிந்தன்...?! எதுக்கு இத்தனை கோபமா....ம், இதுக்குப்போய்க் கல்யாணத்தை நிறுத்தணும்னு அபசகுணமாகய் பேசணுமா...? வரமுடியாத சூழ்நிலையில நீங்கள் இருந்திருப்பீங்க....” என்றவள், “‘பை’ டே கேர்” என்று கூறி அவன் கன்னத்தில் இதழ் பதித்து வெளியேறினாள்....

அவள் வெளியே செல்லும் போது அவள் முகமும் மனமும் சீற்றத்தில் கொதித்துக்கொண்டு இருந்தது.

இக்கல்யாணம் முடியவில்லை என்றால் தன்னைத் தன் நட்பு வட்டத்தில் இப்பொழுது பொறாமையாகப் பார்க்கும் கூட்டம், தன்னைக் கேலிபார்வையாகப் பார்க்கும், அதனால் இக்கல்யாணம் மட்டும் எக்காரணத்தையும் கொண்டும் நின்று விடக்கூடாது என்றும், கல்யாணம் முடிந்துடன் இதற்கெல்லாம் சேர்த்து நன்கு மஹிந்தனைப் பழிவாங்குவேன் என்றும் நினைத்துக்கொண்டு வந்தவள்

யோசனையுடன் வந்ததால் கவனிக்காமல் எதிரில் வந்த கவிழையாவின் மேல் இடித்து விழப் போனவளை கவிழையா தாங்கிப்பிடித்தாள்...

அப்பொழுது கவிழையாவின் முகம் பார்த்தவளுக்கு அவள் கண்களைப் பார்த்தவுடன் அது மஹிந்தனின் மொபைல் ஸ்கிரீனில் பார்த்த கண்கள் என்பதனை உணர்ந்தவள், நின்றுகொண்டு அவளை உற்றுப்பார்த்தாள்,

இவள் அன்று மாலில் மஹிந்தனுடன் வாதாடிக்கொண்டிருந்தவள் தானே என்று கண்டுகொண்டாள். உடனே தன்னைச் சுதாரித்துக்கொண்டவள் இவளால் தான் மஹிந்தன் தன்னைத் தவிர்க்கிறான் போல என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள்

கவியைப் பார்த்து “ஸாரி.. ஸாரி.. நான் கவனிக்காம உங்கள் மேல் மோதிட்டேன்...” என்றவள், வெளியில் நட்புடன் சிரிப்பதுபோலப் பவனைச் செய்துகொண்டாள்.

கவியுடன் கைகுலுக்கத் தன் கரம் நீட்டி, “நான் மஹிந்தனின் பியான்ஷி ஐஸ்வர்யா.... நீங்கள்.... ? என்று கேட்டாள்.

கவிழையாவிற்கு அவளை எங்கோயோ பார்த்த நியாபகம் ஆனால் எங்குப் பார்த்தோம் என்பது நினைவில் கொண்டுவர இயலவில்லை.

இந்நிலையில் நட்புடன் தான் வேலையில் சேர்ந்திருக்கும் மஹிந்தன் நிறுவனத்தின் எம்.டியோட பியான்ஷி அவள் என்று தெரிந்ததும் கவிழையாவும் சிரித்துக்கொண்டே “நான் மஹிந்தன் சாரின் செக்ரட்டரி கவிழையா, இன்றுதான் வேலையில் சேர்ந்திருக்கிறேன்...” என்றாள்.

உடனே அவள் வேலையில் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கூறி “பை! திரும்பவும் சந்திப்போம்....” என்று கூறிச்சென்றுவிட்டாள்.

மஹிந்தன், ஐஸ்வர்யா முத்தமிட்ட கண்ணத்தை ஒரு முகச்சுளிப்புடன் துடைத்துவிட்டு, இவளுடன் ஒரு பத்துநிமிடம் இருக்கவே என்னால் முடியலை. இந்த ஐஸ்வர்யாவை ஏன் கல்யாணம் செய்ய ஒத்துக்கொண்டோம்.... என்று நினைக்கையில் அவன் தலைவலிப்பது போல இருந்தது.

எனவே தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டு உட்கார்தான்

அப்பொழுது சிசிடி கேமரா மூலம் தன் அலுவலக அறையில் நடப்பதை பார்த்தான் அதில் ஐஸ்வர்யாவை தாங்கிய கவிழையாவையும் அதன் பின் நடந்த அத்தனையையும் பார்த்த மஹிந்தன், ஐஸ்வர்யாவின் பேச்சில் இருந்த போலித்தன்மையை உணர்ந்தான்.

எப்படியோ அவள் கண்டுபிடித்துவிட்டாள் எப்படி...? என்று நினைத்துக்கொண்டு தன் அருகில் இருந்த போனை பார்த்தான் அதில் மெசேஜ் வந்ததற்கு அறிகுறியாக ஒளியும் ஒலியும் வந்தது. அப்பொழுது திரையில் கவிழையாவின் கண்களைப் பார்த்ததும் இதை ஐஸ்வர்யா பார்த்தது நினைவு வந்தது.

ஐஸ்வர்யாவை, கவியிடம் நெருங்க விடக்கூடாது, என்று முடிவெடுத்தான். அவ்விசயத்தைத் தள்ளிவைத்துவிட்டு, உதட்டில் புன்னகையுடன் “இப்பொழுது உன்னிடம் கொஞ்சம் விளையாட வருகிறேன் பேபி” என்று கூறி அவ்வலுவலக அறைக்குச் சென்றான்.

மஹிந்தன் உள்ளே இருந்த அறையில் இருந்து வருவதைக்கண்ட கவிழையா, ‘இவன் எங்கே இங்கு வருகிறான்!’ என்று நினைத்துக்கொண்டு அவனை யோசனையுடன் பார்த்தாள் கவி.

அப்பொழுது எதிரில் அமர்ந்திருந்த செக்ரட்டரி எழுந்து மஹிந்தனிடம், “பாஸ் மிஸ் கவிழையாவிடம் எல்லாத்துலேயும் சைன் வாங்கிட்டேன்” என்று சொல்லியபடி மஹிந்தனிடம் கொடுத்தாள்.

அவள் பாஸ் என்றவுடன், இவனா எம்.டி. மஹிந்தன்? என்று குழம்பிப்பார்க்கும் போதே ஒப்பந்த தாள்களை வாங்கிக்கொண்டு எம் .டி மேசையில் அவன் அமர்ந்தான்.

“குட் ஜாப் உமா” என்று கூறி, “உமா நீங்கள் ராமிடம் கொடுத்த பிராஜெக்ட் எந்த அளவில் முடிந்திருக்கிறது என்று பார்த்துவிட்டு வாங்கள்...” என்றுகூறி அனுப்பிவைத்தான்.

அவள் வெளியே சென்றதும், அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த கவிழையாவை பார்த்து, “இப்பொழுது நான் யாருனு தெரிஞ்சிக்கிட்டேள்ல?” என்று சொல்லிமுடிக்கும் முன்பே

கவிழையா “எனக்கு இங்க வேலை பார்க்க விருப்பம் இல்லை...” என்றுகூறி வெளியேற போகும்போது, ஒரு எட்டில் அவள் அருகில் வந்து கையைப் பிடித்துத் தடுத்த மஹிந்தனை பார்த்து “கையை விடுங்க இல்லன்னா உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்கப் போறீங்க” என்று கூறி கண்களில் கோபத்துடன் பார்த்தாள்.

அவளின் கண்களைப் பார்த்துகொண்டே “விடமுடியாது அப்படி என்ன செய்வ...?” என்று மஹிந்தன் சொன்னவனை...

அவளின் மற்றொரு கையால் அடிப்பதற்கு ஓங்கியதும்... ஓங்கிய கையை அடிக்க விடாமல் பிடித்துக்கொண்டு கோபத்துடன். அவளின் இரு கைகளையும் அவளுக்குப் பின்னால் கொண்டுசென்று பிடித்து... தன் அருகில் அவளை இழுத்துக்கொண்டு வந்தவளின் தேகம் அவனை உரச.. தன்னை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களையும் உதடுகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே “என்னைக் கோபப்படுதுவது உனக்கு நல்லதில்லை கவிழையா....?” என்று உறுமினான்.

அவன் கண்களின் கோபத்தையும், இருக்கிப் பிடித்ததினால் ஏற்பட்ட விலியினாலும் பயந்த அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

அவள் நடுங்கவும் தன்னுடைய பிடியை தளர்த்திவிட்டு தன் மேஜையின் எதிரில் உள்ள இருக்கையைக் காண்பித்து அதில் அவளை உட்கார் என்று சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தான் மஹிந்தன். கவிழையாவிடம் தன் மேஜையில் வைத்திருந்த ஒப்பந்த பத்திரத்தை தூக்கிக்காண்பித்து அதில் உள்ளதை கூறினான்,

“இந்த ஓப்பந்தப்படி நீ, என்கிட்ட மூணு வருடம் வேலை செய்ய ஒத்துக்கிட்டு கையெழுத்துப் போட்டிருக்க..., நீயாவே வேலைசெய்யாம வெளியேறிப் போகணும்னு நினைத்தால் ‘ஐம்பது இலட்சம் ரூபாய்’ எனக்குத் தருவதாக ஒத்துக்க்கிட்டு கையெழுத்து போட்டிருக்க....” என்று கூறினான்.

அதைக் கேட்ட கவிழையாவிற்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் பேச்சுவர மறுத்தது “இது அநியாயம்... இப்படி நடந்துக்க உங்களுக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியில்லையா....?” என்று கேட்டாள்.

அதற்கு மஹிந்தன், “என் மனம் சொல்றதைத்தான் நான் செய்றேன், நீ சொல்வதுபோல யோசித்தால் நான் இவ்வளவு சக்சஸ்புல் பெர்சனாய் வந்திருக்க முடியாது....” என்றவன்.

“எனக்கு நான் நினைப்பது நடக்கணும்.... அப்படி நடக்க என்ன செய்யணும் என்பதைமட்டுமே நான் யோசிப்பேன்...” என்றான்.

அவன் பேசுவதக்கேட்ட கவிழையா, “நான் மாலில அன்னைக்கு உங்களைத் திட்டியதுக்காக இப்படியா நடந்துக்கிறீங்க....?" என்றவள் தன்னை நிதானப்படுத்திகொண்டு...

“நான் அதுக்கு உங்களிடம் அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன், தயவுசெய்து என்னை மன்னிச்சு விட்டுடுங்க. எனக்கு உங்ககிட்ட வேலை பார்க்க விருய்ப்பம் இல்ல...” என்றாள்.

அதனைகேட்ட மஹிந்தன் மனதுக்குள், ‘உன்னை என்னிடம் வரவைப்பதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை பேபி..” என்று நினைத்துக்கொண்டு, வெளியில் “உன்னுடைய மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று கூறினான்.

அதைக்கேட்ட கவிழையா மனம் சிறிது அமைதியடைவதற்குள் மஹிந்தன் கூறினான் “ஆனால் அதற்கு நீ நான் விரும்பும்படி நடந்துக்கிட்டா.... இந்த வேலையைவிட்டு இப்பவே போயிடலாம்” என்று கூறினான்.


அவன் எதுவோ விபரீதமாகச் சொல்லப்போகிறான் என்று அவள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

மஹிந்தனோ அவளை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே... “என்ன விருப்பம்னு கேட்கமாட்டயா பேபி...?” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் “நீ கேட்கலை என்றாலும் நான் சொல்லிடுகிறேன்....” என்றவன்

தனது தொண்டையைச் செருமிக்கொண்டு “உனக்கு எல்லாம் நான் கொடுக்கிறேன் வீடு, கார், பணம், நகைன்னு நீ எது கேட்டாலும் தருறேன்... அதை வாங்கிகிட்டு நீ எனக்காக.... நான் வாங்கிகொடுக்குற வீட்டில.....” என்று மேலே பேசமுற்பட்டவனின் பேச்சை கேட்க இஷ்டப்படாமல்...

அவள் தன் காதுகள் இரண்டையும் கைகளால் மூடிக்கொண்டு “நிப்பாட்டு உன் உளறலை” என்று கத்தினாள்.

“நீ நினைக்கிறது உன் கனவிலும் நடக்காது..... உன்னுடைய கீழ்த்தரமான விருப்பத்திற்கு இணங்கும் சாக்கடை நானு இல்லை....” என்று கூறிவிட்டுக் கண்களில் கண்ணீர் வழிவதை தன் புறங்கையால் துடைத்துக்கொண்டாள்....

“இந்த ஆபீசில் வேலை செய்றேன் எனக்கு ஐம்பது இலட்சம் பணம்ன்றது ஈசியான விஷயம் கிடையாது.... ஆனால் அத்துமீறி எதுவும் நீ என்கிட்ட நடந்துக்க நினைச்ச...., ஒன்று உன் உயிர் போகும் அல்லது எனதுயிர் போகும்....”, என்று உதடு உடல் எல்லாம் நடுங்க கூறியவள்,

“நான் நாளையில் இருந்து என் வேலையில் ஜாய்ன் பண்ணிக்கிறேன்....” என்று கூறி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறு என்று வெளியேறினாள்.

விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 03

தேடல்-3

மஹிந்தனுக்கு இரவு தூக்கமே வரவில்லை கண்ணுமூடினால் ஐஸ்வர்யாவுக்குப் பதில் மாலில் பார்த்த அந்த ஸ்கூட்டிப்பெண் கண் அழகியே கண்களுக்குள் வந்தாள்.

அத்துடன் தன்னை அவள் ‘சீ’ என்று சொன்ன வார்த்தையும் அருவருத்த பார்வையுமே அவனை இம்சைப்படுத்தியது..

அவள் மேல கட்டுக்கடங்காத கோபம் வந்தது யார்டீ நீ? என்றவன், எழுந்து தன் ஐபோனை எடுத்து மாலில் இருக்கும்போது அவளுக்குத் தெரியாமல் எடுத்த அவளின் போட்டோவை மஹிந்தனின் விசுவாசியும் நண்பனுமான கதிரின் மொபைலுக்கு அனுப்பினான்.

இரவு 11:15 எனக் கடிகாரம் காட்டியது. இருந்தாலும் கதிரின் நம்பருக்கு டயல் செய்தான்.

தூக்கக் கலக்கத்தில் இருந்தவன் இந்த நேரத்தில் யார் போன்பண்றது என்றபடி கண்கூடத் திறக்காமல் அழைப்பை அட்டன் செய்தவன். மஹிந்தனின் குரல்கேட்டதும் தூக்கம் சட்டென விலகிச்சொல்ல “சொல்லு மஹிந்த், என்ன செய்யணும்?” என்று கேட்டான்.

அவனது பதிலில் எப்பொழுதும் போல மகிழ்ந்து போன மஹிந்த் “உன் மெயிலுக்கு ஒருத்தியோட போட்டோ அனுப்பியிருக்கிறேன் பாரு... அவளைப்பத்திய எல்லா விபரமும் இன்னும் இரண்டு நாளைக்குள் என் கையில் இருக்கணும்

நேத்து மாலில் ஈவினிங் 5மணிக்குப் அவளைப் பார்த்தேன். அப்போ எடுத்த போட்டோவைத்தான் உனக்கு அனுப்பியிருக்கேன். அவளைத் தேடும் வேலைய மாலில் இருக்கும் கண்காணிப்புக் கேமரா கன்ரோலிங் அறையில் இருந்து தொடங்கு” எனச் சொல்லி தொலைபேசியை வைத்தான் மஹிந்தன்.

மஹிந்தன் ஒரு பெண்ணைத் தேடச்சொல்வது இதுவே முதல் தடவை. அந்தவிசயம் கதிருக்கு விருப்பமானதாக இல்லை. இருந்தாலும் மஹிந்தனின் விருப்பத்தை அவனின் முகக்குறிப்பில் இருந்தே நிறைவேற்றிக் கொடுப்பவன் கதிர்...

போன்பண்ணி செய்யச்சொன்னதை முடிக்காமல் விட்டுவிடுவானா...? கதிர் அந்த நேரத்தில் தனது தேடலை மாலில் துவங்க கிளம்பிச் சென்றான்.

மஹிந்தனின் நிழல் போன்றவன் கதிர் என்பதை, மஹிந்தனின் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து இடத்தில் இருப்பவர்களும் தெரிந்து வைத்திருந்தனர்.

அவன் சென்ற அந்த மாலின் பெரும்பான்மையான தளங்களின் ஏக போக உரிமையாளன் மஹிந்தன். அங்குப் பல இடங்களில் பொருத்தபட்டிருந்த சி,சி.டி கேமராக்களைக் கண்ரோல் செய்து மெய்ன்டைன் செய்யும் அறையில் வேலைபார்ப்பவன், கதிர் கேட்ட விபரத்தை அவன் காட்டிய போட்டோ மற்றும் அவள் மாலில் இருந்த நேரத்தை கதிரின் மூலம் அறிந்து கேமராப் பதிவில் தேடி கவிழையா ஸ்கூட்டியை பார்க்கிங்கில் இருந்து வெளிக்கொண்டுவரும் போது தெரிந்த அவள் வண்டி நம்பரைக் குறித்துக் கொடுத்தான்.

மறுநாள் மதியமே மஹிந்தனின் மேசையில் கவிழையாவின் அத்தனை விபரங்களையும் வைத்தான் கதிர்.

அதனை எடுத்து பார்த்த மஹிந்தன் முன் பக்கத்தில் இருந்த அவள் புகைப்படத்தின் அடியிலிருந்த கவிழையா என்ற அவள் பெயரை உச்சரித்துக் கொண்டே விரல்களால் படத்தில் இருந்த முகவடிவைத் தடவினான்..

அவள் கண்கள் அவனைப்பார்த்து சிரிப்பதுபோல இருந்தது. ‘ரொம்ப அழகாகத்தான் இருக்கிறாள்.... ஆனால் இந்தவாய் என்னைய திட்டியதற்கு என்ன தண்டணை கொடுக்கலாம்..?’ என்று கூறிக்கொண்டு மற்ற விபரங்களைப் பார்த்தான். அவள் தன்னுடைய நிறுவனத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவள் என்பது தெரிந்ததும் அவன் முகத்தில் ஒரு வெற்றிச்சிரிப்புத் தோன்றியது. அவன் உதடுகள் “வீ வில் மீட் சூன் பேபி...” என்று உச்சரித்தது.
*****
மஹிந்தனின் பேலஸ் அன்று மிக அழகாக அழங்கரிக்கப்பட்டிருந்தது.

அவனது வீட்டின் மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கூடி இருந்தனர் பணியாளர்கள் அனைவரும் உற்சாகமாகப் பரபரப்புடன் பணிபுரிந்து கொண்டு இருந்தனர்.

அங்கிருந்த அனைவரும் நிச்சயதார்த்ததுக்கு ஐஸ்வர்யாவின் வீட்டை நோக்கிச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

மஹிந்தனின் செக்ரட்டரி அந்த நிச்சயதார்தத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் சரிபார்த்து வேலையாட்களை வைத்து வேலைவாங்கிக் கொண்டிருந்தாள்.

மஹிந்தன் கண்ணாடிமுன்னால் நின்று அவனின் தோற்றத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பொருத்தவரையில் அவ்வைபவம் அவனது அந்தஸ்த்தை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு...

அதனால், அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்துமுடிக்கணுமென எல்லோருக்கும் கட்டளை இட்டிருந்தான்....

அவனாக இதுவரையில் ஐஸ்வர்யாவிடம் பேசியதில்லை. அதற்காகக் கோபித்துக் கொண்டு ஐஸ்வர்யாவும் இருந்ததில்லை. அவளே அவனைப்பார்க்க அவன் இருக்கிற இடத்திற்கே வந்துவிடுவாள்.

ஆனாள் மஹிந்தன் அன்று மாலுக்குக் கூட்டிப்போனதுக்குப் பிறகு வேறு எங்கேயும் அவளை வெளியே கூட்டிட்டுப்போகவில்லை...

அதை அவள் வன்மமாக மனதில் பதித்திருந்தாள். கல்யாணத்திற்குப் பிறகு அதனை ஈடுகட்ட முடிவுசெய்திருந்தாள்.

அன்று அவனோடு மாலுக்குப்போனபோது கிடைத்த மரியாதையும் அவன் வாங்கித்தந்த பரிசுப்பொருட்களும் அவள் நண்பர்களிடத்தில் அதிகரித்த அவளுடைய அந்தஸ்த்து அவளைப் போதை கொள்ள வைத்திருந்தது.

ஐஸ்வர்யாவின் பெரியப்பாமகனும் மஹிந்தனின் தங்கை மாப்பிள்ளையுமாகிய பார்த்தீபன், நிச்சயதார்த்ததிற்கு வீட்டின் மேல் தளம் முழுவதும் ஆடம்பரமாக அழகாக அழங்கரிக்க ஏற்பாடு செய்திருந்தான்.

நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கக்கூடிய நேரத்திற்கு அரை மணிநேரம் இருக்கும்போது மஹிந்தனின் கார் அங்கு வந்துசேர்ந்தது.

காரிலிருந்து இறங்கிய மஹிந்தனை ஆராத்தி எடுத்து அழைத்தனர்... .

விருந்துக்கு வந்திருந்தவங்களை மேல் தளத்தில் கூட்டிக்கொண்டு போய் உட்காரவைத்துக் கொண்டிருந்தனர்.

அங்குப் போகப்போன மஹிந்தனைத் தடுத்த பார்த்தீபன் “மஹிந்தன் நிச்சயதார்த்த மோதிரம் உங்களிடம் தானே இருக்கு?” என்று கேட்டான்.

“ம்...நான்தான் வச்சிருக்கேன்” எனப்பதில் சொன்ன மஹிந்தனிடம் “நீங்க வாங்கிய மோதிரம் அவளின் விரலுக்குச் சரியாக இருக்குதான்னு பார்க்காமல் வாங்கிட்டீங்கனு மதுரா சொன்னாள்.

கிரவுண்ட் பிளோரில் ரைட் சைடில் உள்ள ஐஸ்வர்யாவின் ரூம்க்கு போய் அவளுக்குப் போட்டு சரிபாருங்க மஹிந்த், அது அவளுக்கு அளவு சரியில்லை என்றால் மதுரா உங்களிடம் வேறு மோதிரம் கொடுப்பாள் அதைப் போட்டுவிடுங்க” என்றுகூறினான்.

பார்த்தீபன் சொன்ன ஐஸ்வர்யாவின் அறையிருந்த பக்கம் சென்ற மஹிந்தன் ஐஸ்வர்யாவின் ரூம்வாசலில் சென்று கதவுதிறக்கும் போது கேட்ட பேச்சுக்குரலில் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தான்.

ஐஸ்வர்யா தனது நண்பர்களுடன் தனது அறையில் முழு மேக்கப்புடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்த அவளின் நண்பர்களில் ஒருவன். “டார்லிங் யூ ஆர் லுக்கிங் வெரி செக்சி டுடே” என்றுகூறி அவள் உதட்டில் முத்தமிட்டான்.

உடன் அங்கிருந்த ஐஸ்வர்யாவின் மற்ற நண்பர்கள் ‘ஹேய்’ என்ற ஒலி எழுப்பி “அஜய் இனி நீ ஐஸ்க்கு இப்படி முத்தம் கொடுக்கக்கூடாது இனி அதுக்கு முழு உரிமை உள்ளவர் கிரேட் பிஸ்னஸ் கிங் மஹிந்தன்தான்” என்று கூறினர்.

கதவினை திறக்க லாக்கில் கைவைத்ததும் அதன் லாக் ஒபெனாகி கிடைத்த சிறு இடைவெளியில் உள்ளிருந்தவந்த ஐஸ்வர்யாவின் நட்பு பட்டாலங்களுக்கிடையே நடைபெற்ற கலாட்டாக்களை, ஏனோ மஹிந்தனுக்கு ரசிக்கும் படியாக இல்லை.

எனவே அவனுக்கு உள்ளே செல்ல இஷ்டம் வரவில்லை எனவே அவன் உள்ளே போகாமலே திரும்பி நேராக மதுராவிடம் வந்து சேர்ந்தான்.

மதுராவிடம் உள்ள மோதிரத்தை வாங்கிக்கொண்டு அதனையே நிச்சயதார்த்துக்குப் போட்டுவிட முடிவு செய்தான்.

அவன் பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுத்த மோதிரம் அவன் நெஞசில் உறுத்தியது முதல் முதலாகத் தான் தவறான முடிவு எடுத்து விட்டோமோ? என யோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த யோசனையுடனே நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள ஆரம்பித்தான்.

அங்கு வந்த ஐஸ்வர்யாவை அவன் கண்டுகொள்ளவே இல்லை. மஹிந்தனின் அந்த உதாசீனமான செயல் ஐஸ்வர்யாவை கடுகடுப்பாகியது.... இருந்தாலும் அவனின் அந்தஸ்தின் காரணமாக அடக்கிவாசிக்கவே முடிவுசெய்தாள்.

இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தாலும் நிச்சயதார்த்தம் சிறப்பாகவே முடிந்தது. நிச்சயம் முடிந்த மறுநிமிடமே மஹிந்தன் அங்கிருந்து வெளியேறி தனியாக அவனின் பீச் ரெசார்டிற்கு வந்துசேர்ந்தான்.

அவன் மனம் சோர்வாக இருக்கும்போது எப்பொழுதும் வரும் இடம் இந்த ரெசார்ட்தான் ஆனால் தனியாக வரமாட்டான் அவனின் நண்பன் கதிருடன் தான் அங்கு வருவான்.

கதிர் அவன் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்தான் ஆனால் கூட்டத்தில் தள்ளிநின்று எல்லோரையும் கவனித்துக்கொண்டு இருந்தான். வீட்டிற்கு வெளியில் மட்டுமே அவன் மஹிந்தனுடன் நட்பு பாராட்டுவான்.
.
அவனின் வீட்டுக்குள் வரமாட்டான். மஹிந்தனின் குடும்பநிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முடிந்தஅளவு தவிர்த்துவிடுவான் கதிர். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இப்பொழுதுபோல ஒதுங்கி ஒரு காவளாளியின் பணியை எடுத்துக்கொள்வான்.

கண் மூடி அமர்ந்திருந்த மஹிந்தனுக்குப் புல்லட்டின் சத்தம் கேட்டது. ஆம் கதிர்தான் தன்னுடைய இரண்டுசக்கர வாகனத்தில் அங்கு வந்துசேர்ந்தான்.

கதிரைப்பார்ததும் மஹிந்தனின் முகம் மலர்ந்தது.

வந்தவன் “என்ன பிரச்சனை மஹிந்த்? என்றதும்.
.
“எப்பிடிடா? என் முகத்தைப் பார்த்தே எனக்குப் பிரச்சனை’னு தெரிஞ்சுக்கிற? ஆனால் இப்போ என்னுடைய பிரச்சனையில் உன்னால எனக்கு எதுவும் செய்ய முடியாது...” என்று கூறினான்.

அதனைக்கேட்ட கதிர் “என்னால் முடியுமா முடியாதான்னு நான்தான் சொல்லனும் அதை நீ சொல்லக்கூடாது” என்றான்.

“ஓ…அப்படி சொல்றயா..?! ஒகே பிரச்சனையைச் சொல்றேன் கேளு கதிர்.. இதுவரை நான் முடிவெடுத்தது எதுவும் தவறாய் போனதில்லை, ஆனால் என் கல்யாணத்திற்குத் தவறான ஒருத்திய அவசரப்பட்டுச் செலைக்ட் செய்திட்டேனோனு நினைக்கிறேன்” என்றவன், தான் பப்பில் ஐஸ்வர்யாவைப் பார்த்ததுமுதல் இன்று அவள் ரூமுக்குள் நடந்ததுவரை எல்லாத்தையும் கூறினான்.

“என்னைக் கண்ட்ரோல் பண்றவளா என் வொய்ப் இருக்கக்கூடாது’னு நினைத்து எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாத ஒருத்திக்கூட நிச்சயம்வரை வந்துட்டேன்..

என்னோட ஜூனியர்ஸ்க்கு இப்படிப்பட்ட ஒருத்தி அம்மாவா ஆனா அவங்களை என்ன லட்சணத்தில இவ வளர்த்து ஆளாக்குவா...?

இனி இந்தக் கல்யாணத்தை நிறுத்தவும் முடியாது... அதுதான் என்ன செய்யனு யோசனையா இருக்கு?” என்று கூறியவனைக் கவலையோடு பார்த்தான் கதிர்.

கதிர் பிறந்து வளர்ந்தது குப்பத்தில். அவன் பெற்றவர்களைப் பார்த்ததில்லை. அவனின் பதினாறு வயதுவரை வளர்ந்தது அவனின் மாமா ரவுடி மாரியிடம். மாரிக்குக் குடும்பம் கிடையாது.

அவன் வசித்த குப்பத்தின் அருகிலிருந்த விளையாடும் மைதானத்தில் மஹிந்தன் பிளஸ் ஒன் படிக்கும் போது கிரிக்கெட் விளையாட தினமும் வருவான்.

கதிர் வேடிக்கை பார்க்க அந்த மைதானத்திற்குள் அடிக்கடி வருவான்.

ஒருநாள் மஹிந்தனுக்கும் கூட விளையாடும் மற்றவனுக்குத் தகராறு வந்தது.

மஹிந்தன் கவனிக்காத போது பேட்டால் மஹிந்தனனின் பின் மண்டையில் அடிக்க வீசியதை பார்த்துப் பக்கத்தில் இருந்த கதிர் குறுக்கே வந்து அவ்வடியை தன் முதுகில் வாங்கிச் சுருண்டு மயங்கி கீழே விழுந்தான்.

அன்று முதல் கதிர் மஹிந்தனின் நட்பு ஆரம்பித்தது. மயக்கம் தெளிந்த பின் கதிருக்கு ருபாய் நோட்டுக் கட்டை கொடுத்தான் மஹிந்த். அதனை வாங்க மறுத்த கதிர், தனக்கு ஒரு வேலை வாங்கித்தரச் சொன்னான்.

அவனை மஹிந்தன் தன் வீட்டிற்குக் கூட்டிச்சென்று தன் தாத்தாவிடம் அவனைக் காட்டி கதிர் தனக்கு உதவியதை கூறி வேலை கொடுக்கச் சொன்னான்.

தன் பேரன் கூட்டிவந்த காரணத்தால் தங்கள் மோட்டார் பேக்டரியில் அவனுக்கு வேலை போட்டுக் கொடுப்பதாகச் சொன்னார். மறுநாள் ஃபேக்டரியில் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

கதிர் அவர்களின் வீட்டில் இருந்து திரும்பி போகும்போது எதிரில் வந்த மஹிந்தனின் பெற்றவர்கள் கதிரின் தோற்றம் கண்டு அவனைக் கடிந்து பேசி விரட்டினர்.

பக்கத்தில் இருந்த மஹிந்தன், கதிருக்காக அவனது பெற்றவர்களை எதிர்த்துப் பேசினான். அன்றுமுதல் கதிரின் அனைத்தும் ஆகிப்போனான் மஹிந்தன்.

கதிருக்கு, குடும்பத்தையும், பெண்களையும் பற்றி எதுவும் தெரியாது. மஹிந்தன் வருந்துவதைத் தாளமுடியாத கதிர், “மஹிந் நான் உனக்கு ஒரு யோசனை சொல்லவா?” என்று கேட்டான்.

“ம்... சொல்லு கதிர்” என்ற மஹிந்தனிடம்

“அன்னைக்குக் கவிழையான்ற பெண்ணைப் பற்றிய விபரம் விசாரிக்கச் சொன்னல்ல. நான் விசாரித்தவரை அவள் ரொம்பவும் ஒழுக்கமான பெண், மேலும் ஒரு ஆண் நண்பன்கூட அவளுக்கு இல்லை, ஆறு மணிக்குமேல் தன் குடும்பத்தாரை தவிர மற்றவர்களுடன் அவளை வெளியில் பார்க்கமுடியாது

நீ ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்ககோ. கவிழையாவை எப்படியாவது உனக்கே உனக்கானவளா உன் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டும் இருப்பவளா வச்சுக்கோ” என்றான்.

கதிர் அறியவில்லை இது எவ்வளவு பெரிய பாவம் என்று இந்தச் செயலால் எத்தனை பேர் வாழ்க்கை காயப்படப் போகிறது என்பதையும்.

கவிழையாவின் பெயரை கேட்டதுமே மஹிந்தனுக்கு ஆர்வம் வந்துவிட்டது மேலும் அவளைப்பற்றிக் கதிர் கூறியதும், கவிழையா அவனுடையவள் என்று முடிவெடுத்துவிட்டான் மஹிந்தன்.

கவிழையாவிற்குச் சிறிதுநாளாகவே தங்களை யாரோ பின் தொடர்வதுபோல் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. எனவே அவள் தன் தோழி வனித்தாவிடம் கூறினாள்

“வனித்தா, நம் பின்னாடி ஒரு கறுப்புநிற கார் வருகிறதுபார்...’ என்றாள்.

வனிதா பார்த்துவிட்டு, “ஆமாம்! சூப்பரா பளபளக்குதுல. பார்க்க பிளைட் மாதிரி இருக்கு. அது மாதிரி காரையெல்லாம் நம்மால் பார்க்கத்தான் முடியும்” என்றாள்.

அவளது பதிலில் கடுப்பான கவி, நான் உன்கிட்ட அந்தக் காரின் அழகைபத்தியா கேட்டேன்....? என்றாள்.

உடனே வனித்தா “நீதானடீ அந்தக் காரை பார்க்கச் சொன்ன?!” என்றாள்
.
“கொஞ்சநாளாகவே நாம் போகிற இடமெல்லாம் இந்தக்கார் என் ஸ்கூட்டியை ஃபாலோ பண்றதுபோலத் தெரியுது வனி.. அதை நீயும் கவனிச்சயானு கேட்கத்தான் உன்னைய பார்க்கச் சொன்னேன். அந்தக் காரின் அழகை பார்க்க சொல்லலை....” என்றாள்

“நாம தினமும் இந்தப் பாதையில்தான் காலேஜ் போறோம். அந்தக் கார்காரனின் கம்பெனியும் நம்ம காலேஜ் போகுற பாதையில இருக்கலாம்.... அவனின் வேலைநேரமும் நம்ம போற... வார... நேரத்தை ஒத்து இருக்கலாம். அதனால் நாம வீட்டிற்குத் திரும்புற போதும் அந்தகாரும் இந்த ரூட்டில் வந்து இருக்கலாம்..., இதை வச்சு... அந்தக் காரு நம்மை ஃபாலோ பண்ணுதுன்னு நீ நினைக்கலாமா...?” என்று வனிக்கேட்டாள்.

அதற்குக் கவிழையா, “இந்த ரோட்டில் மட்டும் அது நம்ம பின்னாடி வந்தா நீ சொல்வது சரி. ஆனா... நாம இரண்டு பேரும் வாரம் இரண்டுதடவை போகுற லைப்ரரி பாதையிலும், வெள்ளிகிழமையில போகுற பெருமாள்கோவில் பாதையிலும் இந்தக் காரு நம்ம பின்னாடி வருவதை நான் கவனிச்சேன்” என்றாள்.

அதைக் கேட்டதும் வனித்தா “நீ சொல்வதைப் பார்த்தால் யோசிக்கக்கூடிய விசயமாகத்தான் இருக்கு. ஆனால் இன்னையோட நம்மலுக்குக் காலேஜ் லைப் முடிஞ்சுடும். இனிமே நாம வெளியில் போகும் பாதை எல்லாம் மாறப்போகிறது. அதனால் இதைபற்றி ரொம்ப யோசிப்பதை விட்டுட்டு அடுத்தவாரம் நீ வேலையில் சேரப்போவதை பற்றியும். நான் எனக்கு வேலை கிடைப்பதற்கு என்ன செய்யன்றதை பற்றியும் யோசிப்போம்” என்றாள்.

வனித்தா அவள் கவனத்தை மாற்றியதால், கவி வனித்தாவிடம், “நான் வேலையில் ஜாயின் பண்றதுக்கு முன்னால கொஞ்சம் ஆபீஸ்வியர் கலைக்சன்ஸ் வாங்கணும் வனி”.

அதனைக் கேட்ட வனி, “எனக்குப் பிறந்தநாள் டிரஸ் எடுத்த கடைக்குப் போய்ப் பார்ப்போமா?. அந்தக் கடையில செலக்டிவ் கலெக்செனாய் நம்மால வாங்கக்கூடிய விலையில் இருந்ததுல...” என்றாள்.

அதற்குக் கவிழையா “அப்போது தள்ளுபடி போட்டு இருந்தாங்க வனி அதனால் அது போலக் கடையில் வாங்க முடிந்தது, மத்தநேரத்தில் அதுபோன்ற மாலில உள்ள கடைகளைச் சும்மா சுற்றிபார்க்கத்தான் முடியும். அங்கு வாங்கப்போய் விலையைக் கேட்டால் நமக்கு மயக்கந்தான் வரும்” என்றாள் கவி .

அதற்கு வனித்தா “நான் நாளைக்கு மதியம் சாப்பாடு முடிந்து உன் வீட்டிற்கு வருவேன் நீ கிளம்பியிருக்கிற,. நாம் போய் அந்தக்கடையில் டிரஸ் வாங்கத்தான் போகிறோம்” என்று கூறிக்கொண்டு வரும் போதே வனித்தாவின் வீடு வந்துவிட்டது.

அங்கே அவளை இறக்கிவிட்டு அடுத்தத் தெருவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றாள் கவிழையா.

கவிழையா தன் வீட்டு வாசலில் ஸ்கூட்டியை விட்டு இறங்கும்போது அத்தெருவில் இரண்டு தடியன்கள் கடப்பதை கவனித்தாள்.

சிறிது நாட்களாக அவர்கள் அந்தத் தெருவையே சுற்றி சுற்றி வருவதாக அவளுக்குத் தோன்றியது. தன் தலையை உலுக்கி ‘சே’ எல்லாம் நம் பிரம்மை. நம்மை வேவு பார்க்க நம்ம என்ன பெரிய வி. ஐ. பி யா என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

ஆனால் அவள் அறியவில்லை. எவனோ ஒருவன் கவிழையாவின் அனைத்து நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டான் என்பதை அறிய நேரும் போது என்ன ஆவாளோ...?.

விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 02

தேடல்-2

டைனிங் ரூமில் தன்னுடைய மனைவியுடன் அமர்ந்திருந்த விஷ்வநாதரின் பார்வை படியில் இறங்கி வந்துகொண்டிருந்த மஹிந்தனின் மேல் பதிந்தது. அவனின் ஆறடி உயரத்தையும், அகண்ட தோள்களையும், சிக்ஸ்பேக் உடல்கட்டையும், வீட்டில் உடுத்தும் உடையின் நேர்த்தியும், கண்களின் கூர்மையும் நிமிர்ந்த நடையையும், ரசித்தவரின் உள்ளம்.

மத்த அப்பாக்கள் மாதிரி உரிமையாக என்னால் ஏன் என் மகனுடன் பேசமுடியவில்லை என்ற ஏக்கம் எழுந்தது. எப்போது மகனுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி வந்தது என்ற கேள்வியும் அவருள் எழுந்தது.

ஆனால் அதை ஆராயவிடாமல், “ஏதாவது பிரச்சனையா டாடி?” என்று கேட்டபடி வந்து அமர்ந்தான் மஹிந்தன்.

சுபத்திரா தனக்கு எதிரில் அமர்ந்த மஹிந்தனுக்குத் தன் அருகில் இருந்த டீபாயில் இருந்த கெட்டிலில் இருந்து தேநீரை அழகிய வெள்ளிக் கப்பில் கலந்து கொடுத்தார்.

கையில் வாங்கப் போன மஹிந்தன், வாங்காமல் “மாம் நான் பால் டீ குடிக்கறது நிறுத்தி பைவ் இயர்ஸ் ஆகிருச்சு” என்று கூறினான். பக்கத்தில் இருந்த அலாரத்தில் பீப் என்ற சத்தம் கொடுத்த. உடனே அங்கு வந்த செர்வன்ட் மணியிடம் “எனக்கு டீ” என்றான்.

உடனே கெட்டிலின் உதவியில் ஐந்தே நிமிடத்தில் அவன் கேட்ட கிரீன்டீயை மணி கலந்து கொடுத்து வெளியில் போகும் வரை மூன்று பேரும் அமைதியாக இருந்தனர்.

அவன் போனதும் “ம்...சொல்லுங்க என்ன விஷயம்” என்றவனிடம்.

“நம்முடைய எஸ்.வி.என் மோட்டார் கம்பெனி ஷேர்ஸ் 65% நம்மளோடதா இருந்துச்சு.. அதுல 20% உன்தங்கை மதுராவை கல்யாணம் பண்ணிக் கொடுத்ததால அவளோட ஃபேமிலிக்கு சேர்ந்திடுச்சு. இப்போ 45%தான் நம்மகிட்ட இருக்கு.

பார்த்தீபன் குடும்பத்தின் 35% ஷேர்ஸ் கூட, மதுரவோட 20% ம் பார்த்தீபன் வீட்டிற்குப் போயிட்டதால இனி மெஜாரிட்டி ஷேர்ஸ் பார்தீபன் குடும்பத்துக்கிட்ட. இப்போ அவங்ககிட்ட 55% இருக்குது.

அதனால அடுத்தப் பங்குதாரர் கூட்டத்தில் சேர்மன் பதவியில் இருந்து என்னைய தூக்கிட கூடிய சூழ்நிலை இருக்கு” என்றார் விஸ்வநாதன்..

அதனைக் கேட்டு யோசனையாக மஹிந்தன் “இதுக்கு உங்கட்ட ஏதாவது சொல்யூசன் இருக்கா?” .

“உன் தங்கை மதுரா வீட்டில் இருக்கிற அவளின் பெரிய மாமனாரின் மகள் ஐஸ்வர்யாவை உனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க அவங்க வீட்டில ஆசைப்படுறாங்க....

கல்யாணத்திற்கு டவுரியா அவங்க குடும்பப் பங்கில் 20% உனக்குத் தருவதாகச் சொல்றாங்க....

இந்தக் கல்யாணம் உறுதியானா அடுத்தப் பங்குதாரர் கூட்டத்தின் தேர்தலில் எப்பொழுதும் போல் சேர்மன் பதவியும், கம்பெனியும் நம்ம கைவிட்டு போகாம இருக்கும்” என்றார்...

அப்போது சுபத்திரா சொன்னாள் “நாளைக்கு நைட்டு உன் தங்கை மதுரா வீட்டில நம்ம எல்லோரையும் விருந்திற்குக் கூப்பிட்டிருக்காங்க, அப்போ உனக்கும் அந்த ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் முடிக்கிறத பத்தி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன் மஹிந்த்” என்றார்...

கொஞ்சம் யோசித்த மஹிந்தன், “ஓகே மாம் எத்தனை மணிக்கு அவங்க வீட்டில் இருக்கணும்?”

அவன் ஓகே சொல்வானோ மாட்டானோ என்ற டென்சனில் இருந்த சுபத்ராவும் விஸ்வநாதனும் அப்பாடா... என்று மூச்சு விட்டனர்.

சுபத்திராவே மஹிந்தனிடம் “ஒரு எட்டு மணிக்கு நாம அங்க வருவதா உன் தங்கச்சிட்ட சொல்லிடுறேன் மஹிந்த்” என்றார்.

*******

மஹிந்தனின் கார் அந்த நட்சத்திர விடுதியை அடைந்ததும் காரிலிருந்து இறங்கி அவனுக்காகவே காத்திருந்த பிரெஞ்ச் கிளையண்டை ரிசீவ் செய்து வியாபார ஒப்பந்தத்தை நல்லபடியாக முடித்துவிட்டு. அதனைக் கொண்டாட அவர்களுடன் அவ்விடுதியில் உள்ள பப்க்கு உள்ளே கூட்டிச்சென்றான். அங்கே அவன் காதில் விழுந்த, “ஐஸ்வர்யா டார்லிங்...” என்ற பெயரைக் கேட்டதும் யார் அது என்பதைப் பார்க்க தன்னையறியாமல் திரும்பிப் பார்த்தான்.

அங்குக் கறுப்புநிற ஜீன்சும் இளம் ரோசாநிற கையில்லாத மேல் சட்டையுடுத்தி பக்கத்தில் நின்ற வாலிபனின் கைகோர்த்து பளிச்சென்ற வெண்மையான நிறத்துடன், அவள் உடுத்தியிருந்த சட்டை நிற ரோஸ் உதடுகள், திருத்தப்பட்ட புருவத்துடனும், மையிட்டக் கண்களுடன் நின்றுகொண்டிருந்த ஐஸ்வர்யாவைக் கண்டதும் அவன் மனதில் அன்று தன் காரின் அருகில் நின்ற ஸ்கூட்டி பெண்ணின் கண்கள் அவன் கண்ணுக்குள்ளே ஒரு நிமிடம் மின்னி மறைந்தது. உடனே தலையைக் குலுக்கித் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.

அந்த ஐஸ்வர்யாவின் பின்புறம் இருந்த மேசையில் தன்னுடன் வந்த கிளையண்டுடன் சென்று உட்கார்ந்துகொண்டு அவளின் செயலை நோட்டம் விடஆரம்பித்தான்.

அவளோ உடன் இருந்தவனிடம் “அஜய் இன்னைக்கு நைட் எஸ்.வி.என் மோட்டார்ஸ் குடும்பத்தின் ஒரே பையனான மஹிந்தனுக்காக என்னைப் பெண்ணுபார்க்க வருறாங்க....

என்னால உனக்கு மதியத்திற்குமேல் கம்பெனி கொடுக்க முடியாது! ஒரு பெக்குக்கு மேல எடுக்கக் கூடாதுன்னு என் வீட்டில் தடா போட்டிருக்காங்க” என்றாள்..

அதைக் கேட்ட அஜய் “உனக்குக் கல்யாணமா? ஜோக் அடிக்காதே” என்றவனிடம்..

“இந்த வாழ்க்கையை அனுபவிக்க எனக்குப் பணம் வேணும். அந்த மஹிந்தனை என் அண்ணன் கல்யாணத்தில பார்த்திருக்கிறேன் செம ஹேன்சம்மேன். பவர்புல் பெர்சன். அவனின் மனைவியாய் இருந்தா என்னுடைய ஸ்டேட்டஸ், ஃப்ரண்ட்ஸ் மத்தியில் எகிறிடும்... அதனால் நான் இந்தக் கல்யாணத்தை விரும்புறேன்” என்றாள்.

அவளுக்குப் பின்னாடி உட்கார்ந்து அவள் பேசியதை கவனித்துக் கொண்டிருக்கும் மஹிந்தனை கவனிக்காமல் பேசிய ஐஸ்வர்யா அந்த அஜய் என்பவனுடன் பேசிக்கொண்டே வெளியேறிவிட்டாள்.

மஹிந்தனுக்கு அவள் பேசியதை கேட்டபிறகு யோசிக்க வேண்டியது இருந்ததால். அக்கிளையண்டை தனது செக்ரட்டரி பொறுப்பில் விட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

காரில் உட்கார்ந்து தன்னைபற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அவனைப்போன்ற குடும்பத்தின் திருமணங்கள் அனைத்தும் தொழில் அடிப்படையில் தான் முடிவாகும் என்பதை அவன் பார்த்தும் கேட்டும் இருக்கிறான்.

அவன் பெற்றோர்களின் திருமணமும் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நடந்தது எனத் தன் தாத்தா சொல்லி கேட்டிருக்கிறான்.

தன்னுடைய தங்கை திருமணமும் அப்படித்தான் நடந்தது. அவர்களைப் போன்ற பணக்கார சொசைட்டியில் உள்ள பெண்களில் அவன் அறிந்தவரை டிஸ்கோத்தே, பப், பாய்பிரண்ட் போன்றவை வெகு சாதாரணம்.

தனது தங்கை மட்டும் அதில் விதிவிலக்கு. காரணம் தனது தாத்தா.

ஆனால் தான் தொழில், அறிவு இரண்டில் மட்டுமே தன் தாத்தாவையும், பெண்கள் விஷயத்திலும், மற்றபொழுதுபோக்கு விசயங்களில் தன் தந்தைபோலவும் இருப்பதை உணர்ந்தான்.

மஹிந்தன் நினைத்தான், தன்னுடைய குணத்திற்குத் தன்னைக் கட்டுப்படுத்தும் குணம் கொண்ட பெண்ணுடன் வாழ்க்கை அமைந்தால் போராட்டமாக இருக்குமென நினைத்தான். ஐஸ்வர்யா தன்னை ஃப்ரீயா விட்டுவிடுவாளென நினைத்து ஐஸ்வர்யாவுடனான தன்னுடைய கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள முடிவெடுத்தான் மஹிந்தன்.

******
அன்று சரியாக இரவு எட்டுமணிக்கு பார்த்தீபன் வீட்டில் காரில் தன் பெற்றோருடன் வந்திறங்கிய மஹிந்தனை கண்டு “அண்ணா…!” என ஓடிவந்து கைபற்றிய மதுரா, தனது பெற்றோரையும் அணைத்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றாள்.
.
வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் மஹிந்தனின் வீட்டவரை மரியாதையுடன் நடத்தினர் “ஹாலின் பக்கவாட்டு அறையில் இருந்து வந்த ஐஸ்வர்யா” ஜீன்ஸ்பேன்ட் தொப்புள் தெரியுமாறு பனியனுடன் இருந்தவள் மஹிந்தனின் அருகில் சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள்.


மஹிந்தனையும் அவனின் பெற்றோர்களையும் பார்த்து “வெல்கம் டூ அவர் ஹோம்” எனக் கொஞ்சி பேசினாள்.

மஹிந்தனின் குடும்பம் “காரில் இங்கு வரும்போதே அவன் தனது பெற்றோர்களிடம் ஐஸ்வர்யாவை தான் கல்யாணம் செய்வதற்குச் சரி சொல்லிவிடுங்கள் என்று சொல்லியிருந்தான்.

எனவே சுபத்திரா, ஐஸ்வர்யாவை பார்த்து “இனி நீ எங்கள் வீட்டு மருமகள்” என்று கன்னம் தடவி, இருவீட்டாரின் கல்யாணபேச்சிற்குச் சம்மதத்தைத் தெருவித்தார்.

மஹிந்தனின் தங்கை மதுரா, தன் பெற்றோரை பார்த்து, “அப்போ அண்ணண் இந்தக் கல்யாண ஏற்பாட்டிற்குச் சம்மதம் சொல்லிவிட்டானா?” எனக் கேட்டதும். ஆமாம்! எனத் தலையசைத்துப் பதில் கொடுத்தனர்..

அவர்கள் வந்து பத்துநிமிடத்திலேயே மஹிந்தனுக்கு எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம் என்றாகிவிட்டது. ஐஸ்வர்யாவின் உரிமையான தொடுதல் அவனுக்கு அசெளகரியத்தைக் கொடுத்தது.

அவன் பெண்களின் அருகாமையை உணராதவன் இல்லை. ஆனால், இதுவரை வெளியிடங்களிலும் தனது குடும்பத்தாரின் முன்பும் எந்த ஒரு பெண்ணுடனும் தன்னை இணைத்து பார்க்கும்படி அவன் நடந்துகொண்டதில்லை. தன்னை இப்பொழுதும் கெத்தாக அவர்களின் முன் காட்டவே விரும்பினான்.

அப்பொழுது ஐஸ்வர்யா அவனிடம், “மஹி வாங்க சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் போகலாம்” எனக் கொஞ்சும் குரலில் கூறிக்கொண்டு உரிமையுடன் மஹிந்தனின் கைகோர்த்து நெருங்கி அமர்ந்தாள்.

அவள் அவ்வாறு தன் கைகோர்த்து அழைத்தது, மஹிந்தனுக்கு ஹோட்டலில் தான் பார்த்த போது அஜய்யுடன் ஐஸ்வர்யா கை கோர்த்து நெருங்கி நின்ற காட்சி மனதில் தோன்றியது. உடன் மஹிந்தனின் உதடுகள் ஒரு ஏலனச் சிரிப்பை உதிர்த்தது.
*****
கவிழையாவிற்கு இன்று ஞாயிறு அதனால காலையில் லேட்டாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட மேஜைக்கு வந்தாள்.

“அம்மா இன்னைக்குச் சாப்பாட்டில் என்ன ஸ்பெசல்? நெய்வாசனை தூள் கிளப்புது” என்றாள்.

அதற்குப் பார்வதி, “கல்யாணம் முடிக்கிற வயதில் இருந்துகிட்டு அடுப்படி பக்கமே வந்துடாம இருந்தால். கல்யாணத்துக்கு அப்பறம் உன் புருஷனுக்கு எப்படிச் சமைச்சு கொடுப்ப...?” எனக் கடுப்புடன் கேட்டார்.

அதைக் கேட்டுக்கொண்டு வந்த ஈஸ்வரன் “இப்ப எதுக்கு அவளைத் திட்டுற அதெல்லாம் என்மகள் அருமையாகச் சமைத்து மாப்பிள்ளையை அசத்திடுவாள்” எனறார்

மகளுக்கும் கணவனுக்கும் சாப்பாடு எடுத்துப் பரிமாறிக்கொண்டே ஈஸ்வரனிடம் மகளுடன் பேசச்சொல்லி கண்ஜாடை காமித்தாள்.

உடனே சரி என்று தலை அசைத்தவர், தன் தட்டில் உள்ள வெண்பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே மகளிடம் “கவி உனக்கு இந்த வாரத்தோட காலேஜ் முடிஞ்சுடுதுதானே... அதனால அப்பா உனக்குக் கல்யாணம் முடிக்கலாம்னு நினைக்கிறேன். உனக்கு அதில ஒன்னும் பிரச்சனை இல்லையே..?.” என்று கேட்டார்.

அவர் கேட்டதும் கவிழையா, “அப்பா.... இப்ப என்ன கல்யாணத்திற்கு அவசரம்?. நான் என் படிப்ப முடிச்சிட்டு அட்லீஸ்ட் ரெண்டு வருசமாவது எனக்குக் கிடைத்த வேலையைப் பார்க்கணும் அதுவரை கல்யாணம் என்ற பேச்சே இருக்கக்கூடாது ப்ளீஸ்...ப்பா” என்று கூறினாள் மேலும்,

ரெண்டு வருடம் வேலை பார்த்த பின்னாடி, நீங்கள் யாரை கல்யாணம் செய்யச் சொன்னாலும் செய்றேனேப்பா, இப்போ எனக்குக் கல்யாணம் வேண்டாம்” என்றாள்.

அதனைக் கேட்ட பார்வதி “அதெல்லாம் நீ வேலைக்குப் போய் ஒன்றும் சாதிக்க வேண்டாம் “மூன்று மாதம் முடிந்ததும் உனக்குக் கல்யாணம். அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டார்” என்று கூறினாள்....

அதனைக் கேட்டதும் கவிழையாவின் கண்களில் கண்ணீர் ததும்பிவிட்டது.

மகள் கண்கலங்குவதைப் பார்த்த தந்தை, தனது முடிவை மாற்றிகொண்டார்.

என் மகளுக்கு இன்னும் ஒருவருடம் கழிச்சுதான் கல்யாணப் பேச்சை எடுக்க முடிவெடுத்திருப்பதாக என் ஃப்ரெண்டுகிட்ட சொல்லிக்கிறேன் பார்வதி.

இனி ஒருவருசம் அவளின் கல்யாணத்தைப் பற்றி வீட்டில் யாரும் பேசவேண்டாம் என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பாவம் கவிழையாவிற்கு இன்னும் ஐந்துமாதத்தில் அவர்களின் அனுமதியில்லாமல் கல்யாணம் முடியும் என்பதை அவர் அறியவில்லை.

******

வெளியில் போவதற்குக் கிளம்பிவந்த கவிழையா, அம்மா, வனித்தாவுடன் நானும் லைப்ரரி போயிட்டு அப்படியே அவள் பிறந்தநாளுக்குக் கடைக்குச்சென்று ட்ரெஸ் எடுத்துட்டு இருட்டுறதுகுள்ள வீடு வந்துவிடுவேன்”, எனக் கூறினாள்.

மகளைப் பார்த்து “பத்திரமாகப் போய்ட்டுவா கவி ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடனும்” என்று கண்டிப்போடு சொல்லி அனுப்பி வைத்தார்..

அந்த நேரம் அவங்க வீட்டு வாசலுக்கு வந்துவிட்ட வனித்தா, “ஆன்ட்டி நான் உங்க மகளைப் பத்திரமாக உங்களிடம் ஒப்படைச்சுடுவேன்” எனக் கூறி கவிழையாவை “வா சீக்கிரம் போகலாம். உனக்குச் சாயந்தரம் வரைதான் டைம் கொடுத்துருக்காங்க நேரம் கம்மியா இருக்கு” என்று கூறி கைபிடித்து இழுத்துச்சென்றாள். வாசலில் நின்ற ஸ்கூட்டியில் இருவரும் ஏறிச் சென்றனர்.

மாலின் முதல் தளத்தில் இருந்த “சவுத் ஸ்டைல் வுமன்ஸ்கலெக்சன்” 50% டிஸ்கவுன்ட் என்ற பலகை இருந்த கடையைச் சுட்டிக் காட்டிய வனி, “கவி அந்தக் கடைக்குப் போய் எனக்கு ட்ரெஸ் பார்போமா?” எனக் கேட்டாள்.

கவிழையா அவள் சொன்ன கடையைப் பார்க்கும்போது எதிரில் வந்த ஜோடியினைப் பார்த்தவள் முகம்சுளித்தாள். காரணம், அந்த ஜோடியில் ஆணின் கரம் அந்த லேடியின் இடையில் பதிந்திருந்த விதம்.

ஸ்...அப்பா இதுகளையெல்லாம் கண்டுக்கக் கூடாது என நினைத்தவள் “வா! போகலாம்” என வனியுடன் அந்தகடைக்குச் சென்று ட்ரெஸ் வாங்கிவிட்டு வரும்போது கவிழையா தரையில் கொட்டியிருந்த தண்ணீரில் காலைவைத்து வழுக்கி விழப்பார்த்தாள். அப்போ இரண்டு வலிமையான கரம் அவளைத் தாங்கிப் பிடித்தது.

பிடித்தவன் அவள் கண்களைப் பார்த்ததும் கையை விலக்க மறந்து அக்கண்ணில் தோன்றிய பல பாவங்களை ரசிக்க ஆரம்பித்தான்.

கவி விழப்போகும் அதிர்ச்சியில் கண்ணை இறுக்கமூடியவள் விழவில்லை என்று தெரிந்ததும் அப்பா... தப்பித்தோம்! என்ற பாவனையைக் கண்களில் காட்டி நன்றியை சொல்லும் நோக்குடன் அவன் முகம் பார்த்தவள். அய்யோ இவனா என அதிர்ந்து! பின் அவளின் கண்கள் கோபத்தைப் பிரதிபலித்தது..

கொஞ்சநேரம் முன் கவி பார்த்த ஜோடியின் ஆண் அவன். அச்ஜோடி மஹிந்தன்-ஐஸ்வர்யா தான், நேற்று ஐஸ்வர்யா ஷாப்பிங் போகலாம் என்று கூப்பிட்டதும் மஹிந்தன் அதைப் பொய்காரணம் சொல்லி தவிர்த்துவிட்டான்.

இன்னைக்குக் காலையிலேயே மஹிந்தனை மீண்டும் மொபைலில் கூப்பிட்ட ஐஸ்வர்யா ஷாப்பிங் கூட்டிட்டுப் போகச் சொல்லி நச்சரித்தாள்.

அவளுடனான கல்யாணத்திற்குச் சம்மதித்தாகிவிட்டது. கொஞ்சம் பழகித்தான் பார்ப்போமே என்று நினைத்து மஹிந்தனும் சரி கூட்டிட்டுப்போறேன் என்று சொல்லியதால் இதோ மாலுக்கு அவளுடன் வந்திருக்கிறான்.

அங்கு வந்தவன் கண்களில் கவி விழுந்தாள் கவியின் கண்ணின் பாவத்திலும் அழகிலும் ஈர்க்கபட்டான் மஹிந்தன் .

கவிழையா அவன் பிடியிலிருந்து வெளிவர முயன்று முடியாமல் போனதால் “ஹலோ மிஸ்டர் முதலில் என்னை விடுங்க” என்று கோபமாகச் சொன்னாள்.

அவளின் சாயம் பூசாத இளம்ரோசா உதடுகளைப் பார்த்துக்கொண்டே அவளை விட்டான் மஹிந்தன்.

அந்த நேரத்தில் ரெஸ்ட்ரூம் போயிருந்த ஐஸ்வர்யா மஹிந்தனைத் தேடி அங்கு வந்தவள் “வாட் ஹேப்பென்ட் ஹியர் மஹிந்த்” என்றவளிடம்.

“நத்திங் லெட்ஸ் வி கோ” என்று கவிழையாவை மென்று தின்பவன் போல் பார்த்துக்கொண்டு ஐஸ்வர்யாவை பழையபடி இடுப்பில் கைகோர்த்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.

கவிழையாவிற்கு உடம்பே அவன் தொட்டதிலும், பார்த்ததிலும், கூசிப்போய் “சீ...! முதலில் வீட்டிற்குப் போய்ச் சோப்புபோட்டு தேச்சு குளிக்கணும்” என்று சத்தமாக மஹிந்தனின் காதில்விழுமாறு கூறினாள்.

அதைக் கேட்ட மஹிந்தனுக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன.

மஹிந்தன் முதலில் கவிழையா அவனைப் பார்க்கும்போதே அவள் கண்களைக் கவனித்துவிட்டான்.

இரண்டு நாளாக அக்கண்கள் அவ்வப்பப்போது அவன் மனதில் தோன்றி மறைந்ததால் பார்த்த உடனே அவள்தான் என்று மனம்சொன்னதை உறுதிசெய்ய அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

இதுவரை அவன் எந்தபெண்களின் பின்பும் போனதில்லை அவனைத்தேடி வருகின்ற பெண்களை அவன் தொடாமல் விட்டதில்லை.

அவனுக்கே அவன் செயல் புரியாமல் பின்பு அவள் தான் பழகிய பெண்களைவிட வித்தியாசமான இயற்கை அழகில் இருப்பதால் வந்த ஈர்ப்பு. ஒருதடவை அவளை நெருங்கிவிட்டோம் என்றால் இந்த ஈர்ப்பு போயிடும் என்ற நினைத்துத்தான் அவளைப் பின்தொடர்தான்.

இப்பொழுது “சீ” என்ற கவிழையாவின் வார்த்தை அவனைச் சீண்டிவிட்டது.

******

வழி நெடுக கவிழையா அவனைத் திட்டிக்கொண்டே வந்ததைப் பார்த்த வனித்தா அவளை ரிலாக்ஸ் ஆக்கணும் என்பதுக்காக, “கவி நீ, இவ்வளவு அழகாக இருக்கக்கூடாதடி...!” என்றாள்.

“இப்ப எதுக்குடி என் அழகைப் பத்திப் பேசுற...?” எனக் காட்டமாகக் கேட்ட கவியிடம்.

“இல்லை…. கவி உன் அழகை பார்க்கும் எனக்கே உன்னைக் கட்டிக்கணும் போல இருக்கு” என்று சொன்னதும்

“ஏய் செய், லூசு வனி இப்படியெல்லாம் பேசிட்டிருந்தேனா ஓடும்வண்டியில் இருந்து தள்ளி விட்டுடுவேன் பார்த்துக்கோ”

“இல்ல கவி நீ திட்டுறயே அந்த ஹேன்சம்மேன்” என்று சொன்னதும்

“உனக்கு ஹேன்சமாகத் தெரிகிற அவன் எனக்கு விஷச்செடியா தெரியிறான்” என்றாள்..

“பக்கத்தில் அவனோட ஆளைவச்சுகிட்டே மத்த பொண்ணுங்கள கண்களால மேயுற இவனைப் போன்ற வளர்ந்த மாடுகளைச் சாட்டையை வைத்து வெலாசித் தள்ளனும்” என்று கூறினாள்.

“அதற்குத்தான் சொல்கிறேன் கவி, அவனைப் பார்த்தால் மிகப் பெரிய இடத்துப் பிள்ளை போலத் தெரிகிறான் நீ எதற்கு அவன் காதுல விழுறமாதிரித் திட்டின கவி...?” என்றாள்.

அதற்குக் கவிழையா “நீவேற.... நான் அவனை அடிக்காமல் விட்டேனே..!” என்றாள்

“அடியே கவி! நீ திட்டியதுக்கே அவன் ரியாக்சனை பார்த்து நான் சினிமாவில் பார்க்கிறது போல உன்னைப் பழிவாங்க அவன் வந்து விடக்கூடாது எனக் கடவுள் கிட்ட மனு போட நினைச்சுகிட்டு இருக்கேன்” என்றாள்.

அவ்வாறு சொன்னதும் கவிழையா வனித்தாவை “நீ நிறையச் சினிமா பார்த்து இதுபோல் ஓவரா கற்பனை செய்ய ஆரம்பிச்சிட்ட. சினிமா வேற, வாழ்க்கை வேற வனி”என்றாள்.

“தேவையில்லாம இதுபோலக் கற்பனை செய்து என்னைப் பயமுடுத்தாதடி பக்கி” என்று கூறியபடி அவள் அம்மா சொன்ன நேரத்திற்குள் வீடுவந்து சேர்ந்தாள் தனது தோழியுடன்.

விழியோரத் தேடல் நீ
விழியோரத் தேடல் நீ Epi - 01

தேடல்-1
அந்தக் கருப்புநிற ஆடிகார் டிராபிக் சிக்னலில் நின்றிருந்தது, அதன் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த மஹிந்தன் வெளியில் பார்த்தான்.
காருக்குப் பக்கத்தில் சிகப்புநிற ஸ்கூட்டியில் செம ஸ்டெக்சருல ஒருத்தி சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தாள். ஏனோ நம்ம மஹிந்துக்கு அவளின் கண்ணியமான சுடிதார்கூட வஞ்சனையில்லாமல் காண்பித்த வளைவு சுளிவுகளினால் ஈர்க்கப்பட்டு ‘வாவ்...! செம சேப்’. என்று நினைச்சுகிட்டே முகத்தைப் பார்த்தால் பச்சைக்கலர் துப்பட்டாவை முகமூடியாக்கி... நெற்றி கண் தவிர மத்ததெல்லாம் மறைச்சிருந்தாள்.
ஆனாலும் மறைக்காமல் விட்ட சந்தநிற நெத்தியையும் கண்ணையும் பார்த்தவன் ‘எப்பா... என்ன அழகான கண்ணு, ஐலேஸ் கூட இவ்வளவு அழகா இருக்குமா...?’ என்று அவனை அறியாமலே அவளின் கண் அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கும்போது கிரீன்சிக்னல் விழுந்தது. எனவே அந்த ஸ்கூட்டி ஒருபக்கமும் இவன் கார் ஒருபக்கமும் பிரிஞ்சு பயணத்தைத் தொடங்கியது.
மஹிந்தனின் கார் கடற்கரையில் இருந்த அப்பெரிய மதில்களுடன் ஆன பெரிய கதவின் அருகில் சென்றதும் வாட்ச்மேன் வேகமாகக் கதவை திறந்தார்.
கார் அதன் பாதையில் ஐந்து நிமிடம் பயணம் செய்து அப்பெரிய பேலசின் முன் நின்றது.

காரிலிருந்து இறங்கிய நம்ம மஹிந்தன் அவனோட லேப்டாப் பேக்கை மட்டும் ஸ்டைலிசா எடுத்துச் சோல்டரில் போட்டுகொண்டு அந்தப் பளிங்கு மாளிகையினுள் வேகமாக நுழைந்தான்.

வேலைசெய்துகொண்டிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் மாடியில் இருந்த அவனுடைய அறைக்கு வந்தான்.
பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூமில் இருக்கும் சுத்தம், வடிவம் அழகைவிட வாவ்..! என்று வாய்பிளந்து பார்க்குமாறு இருந்த அந்த அறையின் கதவை கூட அடைக்காமல்... ஒருபக்கம் சுவர் முழுவதும் அழகாக அமைக்கபட்டிருந்த கபோர்டில் தனது லேப்டாப்பேக்கை வைத்தான்.
அவனுக்குப் பின்னாலேயே வந்த கார் டிரைவர், காரில் இருந்த லக்கேஜை கொண்டுவந்து வைத்துவிட்டு வெளியில் வந்து சத்தம் எழுப்பாமல் மெதுவாகக் கதவை அடைத்துவிட்டுச் சென்றான்.
அப்போது மஹிந்தனின் மொபைலில் அவனின் அம்மாவின் அழைப்புவந்தது.
“ம்...சொலுங்கமாம்” என்றான்.
“இப்போதான் வந்தியா மஹிந்த்” என்று அவனின் அம்மா சுபத்ரா கேட்டாள்.
“ம்...ஆமா... இப்போ எதுக்குப் போன்பண்ணினீங்க? ஏதாவது முக்கியமா பேசணுமா?” எனக் கேட்டான்.
“அப்பா உன்கூடப் பேசணும்னு சொன்னாங்க. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஆறுமணிக்கு எங்ககூட டீ டைமில் ஜாய்ன் பண்ணிக்க வந்துரு மஹிந்த் என்றாள்” சுபத்ரா.
“ஓகே வர்றேன்...” என்று கூறிவிட்டு ஆளைவிழுங்கும் அந்த நுரை மெத்தையில் அக்கடாவென விழுந்தான் மஹிந்தன்.

மஹிந்தனின் அப்பா விஷ்வநாதன். அவர் தனது தந்தையின் தொழில்களைச் சிறப்பாக நடத்திவருபவர். தன் மகன் மஹிந்தன் தன்னுடைய தந்தையின் மறுஉருவமாக இருப்பதில் சிறிய பொறாமை உண்டு. அவரது தந்தை மஹிந்தனின் இருபதாவது வயதில் இறந்துவிட்டார்.
மஹிந்தனின் அப்பா விஷ்வநாதன் பணக்கார வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகளைப் போல் ஆடம்பரத்தில் அலாதி பிரியம் உள்ளவர். பரம்பரை சொத்தை காப்பதற்கு மட்டுமே அவரால் நேரத்தை செலவிட முடியும்.
மஹிந்தனின் தாத்தா சண்முகநாதனைப் போல் தந்தைக்கு இருக்கும் சொத்தை மூன்று மடங்கு பெருக்கத் திறமையில்லை அவருக்கு. ஆனால் மஹிந்தனை வளர்த்தது அவரது தாத்தா சண்முகநாதன் தான்.
விஸ்வநாதன் சுபத்திரா தம்பதியருக்கு மஹிந்தன்,மதுரா ஆகிய இரண்டு பிள்ளைகள். மஹிந்தனின் அம்மா சுபத்திராவிற்குப் பார்ட்டி மற்றும் தனது மகளிர் கிளப்பின் பொதுச்சேவை தான் உலகம்.
சுபத்ராவை பார்ப்பவர்கள் அவருக்கு நாற்பத்தெட்டு வயது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். முப்பதுக்குள் இருக்கும் பெண்களைப் போன்ற தோற்றத்தில் இருப்பார். அத்தோற்றத்தை மெயின்டெய்ன் செய்ய எல்லா வழிகளையும் பின்பற்றுபவர். தன் பிள்ளைகளை வளர்க்க உரிய பணியாளர்களை நேர்முகத் தேர்வின் மூலம் பணியமர்த்திக் கண்காணித்து வந்தவர்.
தாத்தா சண்முகநாதன் உயிருடன் இருக்கும் வரை தனது ஓய்வுநேரம் முழுவதும் செலவிடுவது தனது பேரன் பேத்தியுடன்தான். அதனால் மஹிந்தன் தனது ரோல்மாடலாகத் தனது தாத்தாவை கொண்டே வளர்ந்தான் .
மஹிந்தன் சிறு வயது முதல் அவன் இருக்கும் இடத்தில் நடக்கும் எல்லாப் போட்டியிலும் அவனே வெற்றிபெறுபவனாக இருப்பான். அவ்வெற்றிக்காக எல்லா வித வழிகளையும் ஆராய்ந்து செயல்படுத்தும் திறன் இயற்கையாகவே அமைந்திருந்தது.

பணம் அறிவு இரண்டும் இருந்ததினால் திமிரும் எதிரில் இருப்பவரை அடக்கியாளும் குணமும் கொண்டிருந்தான். அவன் அடங்கும் ஒரே ஆள் அவன் தாத்தா மட்டும்தான். தனது தங்கை மதுராவின் சொல்லிற்குச் சிறிது செவிசாய்ப்பான்.
மஹிந்தனின் தாத்தா இறப்புக்குப் பின் அவனை அடக்கி நல்வழிப்படுத்த ஆள் இல்லாமல் போய்விட்டது.
தனது மேல் படிப்பை லண்டனில் முடித்து வந்து தனது பரம்பரை தொழில்களைக் கையில் எடுத்தவன் ஒரே வருடத்தில் ஈட்டியவருமானமும் எட்டிய உயரமும் கண்ட அவனது தந்தை தாயையுமே வியந்து ஒரு அடி தள்ளிநின்று பேசும் நிலையைக் கொண்டுவந்தது.
******
ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்த கவிழையா தனது வீட்டின் காலிங்பெல்லை விடாமல் அழுத்தினாள். சமையல் அறையில் பாத்திரத்தை கழுவி கொண்டிருந்த அவளின் அம்மா பெல் அடிப்பது தன் மகள்தான் என்று தெரிந்துகொண்டதால்.
“உள்ளயிருந்து போய்க் கதவை திறக்கறவர அடிச்சுகிட்டே இருக்காதேனு எத்தனை தடவதான் இவளுக்குச் சொல்றதோ...!. எப்பப்பாரு என்னைய டென்சன்படுத்தறதே இவளுக்கு வேலையாபோச்சு..” என்று அவள் ஏற்படுத்திகொண்டிருந்த காலிங்பெல் சவுண்டில் இரிடேட் ஆகி கோபமுடன் கதவை திறந்தாள்.
“கவி எத்தனை தடவை சொல்லிட்டேன், இப்படிக் கைஎடுக்காம காலிங்பெல் அடிக்காதேன்னு அந்தச் சவுன்ட் எவ்வளவு இரிடேட்டிங்கா இருக்கு தெரியுமா?” என்று அவள் அம்மா கேட்பதை காதில் வாங்காமல்.

கவி .தனது ஹேன்ட்பேக்கை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டுப் பொத்தெனச் சோபாவில் உட்கார்ந்து தனது காலை டீபாயின் மேல் வைத்தவளை பார்வதி கோபமாக முறைப்பதை பார்த்து
“எவ்வளவு வெயில் தூசில உன் மகள் கஷ்ட்டப்பட்டுக் காலேஜுக்கு ஸ்கூட்டில போயிட்டு வந்துருக்கா. இப்போவே அவளை வறுத்தெடுக்க ஆரம்பிக்கணுமா..? மீ பாவம் விட்டுடு என்செல்ல அம்மால்ல” என்று ஒரு பிட்டை போட்டுவைத்தாள்.
தன் மகளின் முகத்தில் களைப்பை பார்த்ததும், “எப்பதான் நீ திருந்தப்போறியோ போ... போய் மூஞ்சி கைகால் அலம்பிட்டுவா டீ எடுத்துட்டு வருறேன்” என்றாள் பார்வதி.
“வருண் இன்னும் ஸ்சூல்விட்டு வரலையாமா? எனப் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் அவளின் தம்பியை கேட்டாள்.
“அவன் வருறநேரம்தான், இப்போ வந்துருவான்” என்றபடி அவள் அடுப்படிக்குள் நுழைய கவிழையா அவளது அறைக்குள் சென்றாள். கீழிருந்த இரண்டு அறைகளில் ஒரு அறையை அவளுக்கென்று எடுத்துகொண்டதில் அவளுடன் அடிக்கடி உரிமைபோராட்டம் நடத்தி கொண்டிருந்தான் வருண்.
ஈஸ்வரன்-பார்வதி தம்பதியருக்கு கவிழையா, வருண் என இரு பிள்ளைகள்.
ஈஸ்வரன் வங்கியில் மேலாளராக உள்ளார். பார்வதி பிள்ளைகளை முழுவதுமாகக் கவனிப்பதற்குத் தன்னுடைய ஆசிரியர் வேலை சற்று இடையூராக இருந்ததால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர குடும்பத் தலைவியாக இருப்பவர்.

ஈஸ்வரன் அன்பான குடும்பத்தலைவன் தனது வங்கிமேலாளர் வருமானத்திலேயே சிக்கனமாகச் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர். பிள்ளைகளின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்ற தயங்கமாட்டார்.

கவிழையா வியர்வை நீங்கி டிரஸ்மாத்தி முன் அறைக்குள் வருவதற்கு முன்பே அவள் அப்பாவும் தம்பியும் ட்ரெஸ் மாத்திட்டு உட்கார்ந்து பார்வதி கொடுத்த டீயோடு வடையையும் சாப்பிடுவதைப் பார்த்தவள்

“அம்மா எனக்கு முதலில் வடை கொடுக்காம எனக்குப்பின்னாடி வந்த ரெண்டுபேருக்கும் கொடுக்கறது சரியில்லை” எனகூறினாள்.

“பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்ற பழமொழியை ஃபாலோ செய்றவங்க நாங்க.. உன்னமாதிரி நாங்க என்ன அசமந்தமா?” என்றான் வருண்.

“டேய் யாரபார்த்து அசமந்தம்னு சொல்ற..?. என்னை என்ன உன்னமாதிரி வேலவெட்டி இல்லாதவன்னு நெனச்சுகிட்டயா? ஐ கெட் அ ஜாப்...
அப்பா... எனக்குக் காம்பஸ் இண்டர்வியூவில மஹிந்தன் சாப்ட்வேர் இன்டஸ்ட்ரீஸில் வேலை கிடைச்சிருக்கு” என்றாள்.

“கவி உண்மையாவாடீ சொல்ற..?” எனப் பார்வதி கேட்டாள்.

உடனே ஈஸ்வர், “அவ என் பொண்ணு, அவளுக்கு வேலைக்கிடைக்கலனா தான் நீ ஆச்சரியபடணும்” என்று பார்வதியிடம் கூறியவர். வருணிடம், “நீயும் அக்கா மாதிரி காலேஜ் காம்பஸ் இண்டர்வியூவில வேலைக்குச் செலக்ட் ஆகுற தகுதியை வளர்த்துக்கோ” எனக் கூறினார்.

“சரிப்பா என்று அவரிடம் சொன்ன வருண், ஒரு வடைக்குப் போட்டிப்போடுற சின்னப்பிள்ளையை எப்படிம்மா வேலைக்கு எடுத்தாங்க...!?” எனத் தன் பெரிய சந்தேகத்தை எழுப்பினான் பார்வதியிடம்
உடனே “கவி யாரைப்பார்த்து சின்னப்பிள்ளைன்னு சொன்ன பொடியா?” என அடிக்கத் துரத்த ஆரம்பித்தாள்.

“ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணாமல் சாப்பிடுங்கள்” என அதட்டினார் ஈஸ்வரன்.

தந்தையின் அதட்டலில் சாப்பிட உட்கார்ந்த பிள்ளைகள் அப்பா எதுவோ தீவிர யோசனையில் இருப்பதைப் பார்த்து அமைதியானார்கள்.

“நைட் அடுப்படி வேலைகளை முடித்துப் படுக்கவந்த பார்வதி யோசனையுடன் படுத்திருந்த ஈஸ்வரனை “ரொம்ப நேரமா யோசிச்சிட்டே இருக்கிறீங்க பிள்ளைங்க தூக்கப் போனதும் எதுக்கு இந்த யோசனைன்னு கேக்கலாம்னு இருந்துட்டேன்... இப்ப சொல்லுங்க என்ன யோசனை?” என்று கேட்டாள்.

“என் ஃப்ரெண்டோட பையனுக்கு நம்ம கவிய கேக்குறாங்க. அந்தப் பையன் வெளிநாட்டுல வேலை பாக்குறான். ஒரு வருசத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை பையனை பார்த்திருக்கேன். கவிக்குப் பொருத்தமா இருப்பான். நல்ல இடம் அதுதான் என்ன சொல்லன்னு யோசிக்கிறேன்” என்றார்.“நல்ல இடம்னா பேசி முடிச்சிடலாம். அது தான் காலேஜ் படிப்ப முடிச்சுட்டாள்ல” என்றாள் பார்வதி.
“இல்ல... கல்யாணம் முடிச்ச கையோடு மாப்பிள்ளை வேலை செய்ற வெளிநாட்டுக்கே கவியையும் கூட்டிட்டு போறமாதிரி அவங்க பேசுறாங்க.
நம்ம கவி அவளுக்கு வேலைக்கிடைச்சிருக்கு என்று ஆசையாகச் சொன்னா. பெரிய கம்பெனில கைநிறையா சம்பளத்தோட வேலை கிடைச்சிருக்கு என்று சொல்ற பிள்ளைட்ட அதில் ஜாயின் பண்ணாதனு சொல்ல கஷ்டமாயிருக்கு”
“மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கார்ங்க, மத்த டீடைல்ஸ் எல்லாம் சொல்லுங்க என்ன செய்யலாம்னு யோசிப்போம்.”

“மாப்பிள்ளையின் பேரு தனுஷ் போனவாரம் தான் லீவில் இந்தியா வந்திருக்கிறார். கடைவீதியில் என்னோட கவியைப் பார்த்திருக்கிறார். அவருக்கு நம் கவியை ரொம்பப் பிடிச்சிருக்காம்.
நம்மளைவிட வசதியானவங்க. நல்லபடிப்பு, வேலை எல்லாம் நிறைவா இருக்கு. நீங்க உங்க பொண்ணுக்கு எவ்வளவு போட்டாலும் சரி அதையெல்லாம் டிமான்ட் பண்ணமாட்டோம்னு சொல்றாங்க.. லீவ் முடிஞ்சு தனுஷ் வெளிநாடு போவதுக்குள்ள கல்யாணத்தை முடிவு செய்ய ஆசைபடுறாங்க” எனக் கூறினார்.

அதற்குப் பார்வதி. “கவலைப்படாதீங்க நாளைக்குக் காலையில் கவிட்ட பேசிட்டு அதுக்குப் பிறகு உங்க ஃப்ரெண்ட்கிட்ட முடிவை சொல்லலாம். எல்லாம் நல்ல படிதான் முடியும் நீங்க மனசப்போட்டு குழப்பிக்காம தூங்குங்க” என்றாள்.....

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!