உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
தீபா செண்பகம்’s
‘தளிர் மனம் யாரைத் தேடுதோ’ நாவல் எனது இரண்டாவது தொடர்கதை.
தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற இந்தக் கதை, சரியான புரிதல் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் பிரியும் ஒரு பெண், தன் இணையோடும் ,முதல் தலைமுறையில் பிரிந்த சொந்தங்களோடும் ,பிணக்குகள் தீர்ந்து எப்படி இணைகிறாள் என்பதைச் சொல்லும் கதை. தமிழகத்தின் அழகிய கிராமம், பண்ணை, காவிரியின் வர்ணனை. தளிர்களான இளம் மழலைச் செல்வங்களின் பேச்சு மொழி, உறவுகளின் உணர்ச்சிமயமான சங்கமம், தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்கள். பண்டிகை, திருமணம் என விழாக்களும், சமூக சிந்தனை கொண்ட மருத்துவருக்கான சவால்கள் எனக் கதை பயணிக்கும்.
இரட்டை குழந்தைகளோடு தனித்திருக்கும் இளம் மருத்துவரின் கதை.
தனக்கு குழந்தைகள் இருப்பதையே அறியாத நாயகன் ஆதித்யனின் கதை.
தளிர் மனங்களான , அநி, ஆது தந்தையை எதிர் நோக்கி காத்திருக்கும் கதை.
நாயகன் ; ஆதித்ய ராஜன். நாயகி ; திவ்யவர்ஷினி
புதுக்கோட்டை , தஞ்சாவூர், கொடைக்கானல், தாண்டிக்குடி, மதுரை என பயணிக்கும் கதை.
அமேசான் கிண்டலிலும், ப்ரதிலிபியிலும் உள்ளது.
தீபா செண்பகமின் முதல் தொடர் கதை .
நாயகன்; ரகுவீர் சிங் ராத்தோட்
நாயகி ; ஜானகி தேவி .
அமுதன்-மயூரி , பாலன்- அமிர்தா , ராஜ் வீர் -மயூரி என இளைய ஜோடிகள்
தமிழ் மற்றும் ராஜஸ்தானி குடும்பங்களுக்கு இடையேயான பந்தத்தை சொல்லும் நாவல் .
தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரத்தை விவரிக்கும் கதை.
தமிழ், ராஜஸ்தானி, ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு பேசும் நண்பர்கள் குழு.
சிவகுரு -ராகினி, ஹேமந்த் செகாவத் -பங்குரி , மங்கள் பாண்டே-பர்கா ,
ஓம் பிரகாஷ் பல்லா -ப்ரீதோ , ராஜசேகர் ரெட்டி- பார்வதி
அவரவர் பாஷைகளில் சில வாக்கியங்கள், பழக்க வழக்கங்கள் இதில் காணலாம்.
சிறுமலை, மதுரை, மும்பை, உதய்பூர் என பயணிக்கும் கதை.
இரண்டு மொழி பேசும் பெரிய குடும்பங்கள், நண்பர்கள் கூட்டம், மூன்று தலைமுறை ஜோடிகள் என பலவகை ருசிகள் கலந்த பச்சடி இந்த கதை .
அமேசான் கிண்டலில் , அன்லிமிடெட் பிரிவில் ,இந்த கதை, வாசகர் வாசிக்க வசதியாக இரண்டு பாகமாக பதிவேற்ற பட்டுள்ளது.