Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு

தொடர் :

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


கண் சிமிட்டும் மின்னல் - 08

அத்தியாயம் 08

டயர் டாமாரெனப் பாம் வெடிப்பதுபோலச் சத்தத்துடன் வெடித்ததில் மாயாவின் தேகம் திடுதிடுவென அதிர்ந்தது, செந்தூரனும் மிகவும் அதிர்ந்து போயிருந்தாலும் சமயோகிதமாகச் செயல்படத் தன்னை நிமிடத்தில் நிதானப்படுத்திக்கொண்டான்.


சட்டெனப் பிரேக் போட்டால் கார் குட்டிக்கரணம் அடித்து நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்து பிரேக்கில் கால் வைக்கவில்லை... ஆக்சிலேட்டர் பெடலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தத்தைக் குறைத்து காரின் வேகத்தைக் குறைத்தான். கார் இழுக்கும் பக்கத்திற்கு எதிர்புறம் காரைச் செலுத்தி ரோட்டின் ஓரத்திற்குக் காரை இட்டுச் சென்றான்.
இருந்தும் அங்கிருந்த மரத்தில் மோதியே காரை நிறுத்த முடிந்தது குறைந்த வேகத்தில் மோதியதால் பெரிதாக அடி எதுவும் படவில்லை என்றாலும் முன்னாள் இருந்த டேஸ்போர்டில் மாயாவின் தலை மோதிய வேகத்தில் அவள் மயக்கத்திற்குச் சென்றாள்.


பத்திரமாக உயிருக்குச் சேதமில்லாமல் காரை ஓரம்கட்டி நிறுத்திய நிம்மதியுடன் திரும்பி மாயாவை பார்த்தவன் “ஏய்... மாயா...வே கப் கேர்ள்... மாயா...ஏய்...மாசா...வெனப் பதறித்துடித்தவன். அவளை உச்சி முதல் கால்வரை ஆராய்ந்தவன் பெரிதாக அடியேதும் படவில்லை என்றதும் நாடித்துடிப்பும் சரியாக இருப்பதைக் கணித்தவன் அதிர்ச்சியில் மயங்கி இருக்கிறாள் என்று புரிந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளின் முகத்தில் நீர் கொண்டு அறைந்து “மாயா... மாயா...” என்றதும் மயக்கம் தெளிந்து மெதுவாகக் கண் மலர்ந்ததும்.


“ஊப்ஸ்... கொஞ்ச நேரத்தில் என் உயிரே போயிடுச்சு சில்வண்டு... என்றதும் அவளோ... “நானு எங்கிருக்கேன்...? சொர்க்கத்திலயா? நரகத்திலயா...?” என்றதும்...


“அதுக்குள்ள பரலோகம் போகணும்னு அம்புட்டு ஆசையா உனக்கு...? நானே உயிரை கையில புடிச்சு ஷேஃப்பா வண்டியை நிப்பாட்டிட்டேனேனு சந்தோஷப்பட்டா... நீ என்னடானா சொர்க்கமா நரகமான்னு கேக்குற..”
நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவள் சுத்தி முத்தி பார்வையை ஓடவிட்டவள். “பாம் வெடிச்சதுபோலச் சவுன்ட் வந்துச்சே... என்ன ஆச்சு?”


“பாம் எல்லாம் வெடிக்கலை, கார் டயர் வெடிச்சிருச்சு...”


“அடப்பாவி... ஓட்டக்காரை எடுத்துக்கிட்டு வந்து என் உயிரை பணயம் வைக்க வச்சிட்டியே.. நான் இதுவரை எதையுமே அனுபவிக்காத கன்னிப் பொண்ணுடா.. பாவி...”


“என்னது ஓட்டக்காரா...? என் காரைப் பார்த்தா ஓட்டக்காரைப் போலவா தெரியுது உனக்கு?”


“பார்க்க நல்லா ஜிம்பாடி மாதிரி அழகா கம்பீரமா தான் இருக்கு ஆனா உள்ள இருக்கிற பார்ட்ஸ் சரி இல்லையே..!”


“டயர் வெடிக்கிறது எல்லாக் கார்லயும் நடக்குறதுதான். பொதுவா வெயில் காலத்துல டயரில அதிகக் காத்து இருக்கிறதை விடக் கம்மியா காத்து தான் ஆபத்து. காத்து கம்மியா இருந்தா உராயும் போது ஹீட் அதிகமாகி டயட் வெடிக்கிறது சகஜம் தான். ஃபைவ் பாய்ன்ட் அதிகமா காத்து இருக்குதான்னு ஊர்ல இருந்து கிளம்பும்போது செக் பண்ணினேன். இப்போ புறப்படுப்போ கவனிக்கலை அதுதான் இப்படி ஆகிடுச்சு.


“சரி... இந்த நைட் நேரம் இதை எப்படிச் சரிபண்ணபோற இப்படியே நடுரோட்டில் நிக்க வேண்டியதுதானா?”


“இரு ஏதாவது யோசிப்போம் எனச்சொல்லி தன் பக்கம் இருந்த டோர் கதவை திறக்க முயன்றான் செந்தூரன் அந்தக் கதவு ஸ்ட்ரக்காகி திறக்கவில்லை, உடனே தனது பக்கமிருந்த கார் டோர் கதவை மாயா திறக்கப் பார்த்தாள் அதுவுமே திறக்க வரலை.


“டேய்... திறக்க முடியலைடா... இப்போ என்னடா பண்ண?”


“பொறு... ஏதாவது யோசிக்கலாம்’ எனச் சொல்லியவன் விண்டோ கண்ணாடியை இறக்கி “உன்னால விண்டோ வழியா வெளியே போக முடியும் என்னால முடிமான்னு தான் தெரியலை” என்றான்.


கார் டயர் வெடித்தது பெரிய சத்தத்தை உண்டாக்கி இருந்தது என்றாலும் அந்தச் சமயம் பார்த்து வேறு வாகனங்கள் எதுவும் வராததால் அடுத்து வந்த வாகனங்கள் எதுவும் இவர்கள் கார் ரோட்டோரம் இருப்பதைப் பொருட்படுத்தாது போய்க்கொண்டு இருந்தது.


ஆனால் அச்சத்தம் கேட்டு அங்குப் பக்கத்தில் இருந்த ரெசார்ட் வாட்ச்மேன் என்ன ஏது என்று பார்க்க இவர்களின் காருக்கு அருகில் வந்தான்.


திறந்த கண்ணாடி டோர் முன்பு நின்று என்ன சார் சத்தம் டமார்னு வந்துச்சு உங்க கார் டயர் வெடிச்சிருச்சா?” என்றதும்.


“ஆமாம் சார்.. இந்த மரத்துல மோதி வண்டியை எப்படியோ நிப்பாட்டிட்டேன். ஆனா டோர் கதவு ஸ்ட்ரக்காகிடுச்சு தொறக்க முடியலை” எனச்சொல்லிகொண்டே விண்டோ கண்ணாடியை இறக்கிவிட்டதின் வழி வெளியேற முயன்றவனை அவரும் வெளியில் வர உதவி செய்தார். அதனைத் தொடர்ந்து மாயாவும் அவனைப் போலவே காரிலிருந்து வெளியில் வந்தாள்.


“சார் ஸ்டெப்னி இருக்கு ஆனாலும் மெக்கானிக் யாராவது வேணும் டயர் மாத்த இந்த டோர் கதவையும் திறக்கணும் இங்க பக்கத்துல இருக்கிற மெக்கானிக் போன் நம்பர் எதுவும் உங்ககிட்ட இருக்கா?”


“இல்ல தம்பி என்கிட்ட மெக்கானிக் நம்பர் எதுவும் இல்லையே... அந்தோ தெரியுது பாருங்க அந்த ரெசார்ட் வாச்மேன் நானு, இந்த நேரத்தில எங்கனு போய் நீங்க மெக்கானிக்கை தேடுவீங்க? நைட் அங்க ரூம் எடுத்து தங்கிக்கோங்க, கொஞ்சம் கார்சிலியா தான் இருக்கும், அங்க தங்கினா ரிஷப்சனில் கார் பிரச்சனை ஆகிடுச்சுன்னு சொன்னா... கஷ்டமர்ன்ற முறையில அவங்களே காலையில் மெக்கானிக்கை போன்பண்ணி வரவச்சிடுவாங்க” என்றார்.


இவர்களுக்கும் வேறு வழி தெரியாததால் அவர் சொன்னது போலவே ரெசார்டில் தங்க முடிவெடுத்துப் பின் சீட்டில் போட்டிருந்த லகேஜை விண்டோ வழியாக எடுத்துக்கொண்டு அவருடன் நடக்கும்போது பளிச்சென்று மின்னிய மின்னலுடன் ஈரவாடை காற்று வீச தொடர்ந்து சடசடவென்று மழை பொழியத் துவங்கியது...


என்னதான் வேகமாக ஓடிவந்தும் சொட்டச் சொட்ட நனைந்தபடி ரிஷப்ஷனில் நின்றனர்.


“ரிஷப்ஷனிஸ் இரவு வேலையில் நின்றிருந்த அந்த ரிஷப்ஷநிஷ்ட் சற்று அசந்திருந்தாள் போல அந்தக் கண்ணாடியாலான தடித்த பெரிய கதவை தள்ளிக்கொண்டு இருவரும் உள் நுழைந்ததும் ஆள் அரவம் உணர்ந்து சட்டென விழித்ததில் திருத் திருவென முழுந்தபடி “யெஸ்.. சார்... வாட்யூ வான்ட்?” என்றவளிடம்.


“ரூம் வேணும்?” என்ற செந்தூரனிடம் ஒரு கேட்டலாக்கை எடுத்துக்காட்டி அவேய்லபுல் ரூம்ஸ், ரெண்ட் பிரைஸ் இதில் இருக்கு சார்.. எது வேணும்னு பார்த்துச் சொல்லுங்க” பக்கங்கங்க்களைத் திருப்பிப் பார்த்தவர்கள் ஒரு நைட் ஸ்டேன்ட் பண்ணவே பல ஆயிரங்களில் ஜார்ஜ் செய்வதைகண்டு நொந்து போனார்கள்.


டபுள் காட் ரூம் விலை மிக அதிகமாக இருந்ததால் சிங்கிள் காட் ரூம் புக் செயதனர் ஒருத்தர் படுக்கையையும் மற்றவர் சோபாவிலும் தங்கிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.


ரூம் புக் செய்து முடித்தபோது அங்கிருந்த இவர்களின் பெட்டியை தூக்கிச்சென்று ரூமில் வைக்க வந்த ரூம் சர்வீஸ் பாய் அவனின் பார்வை நனைந்திருந்த இருவரில் மாயாவின் மீது சற்று அழுத்தமாகப் படிந்து மீண்டதை கவனித்த செந்தூரனுக்குக் கோபம் மூண்டது.


செந்தூரன் தன்னை முறைத்துப் பார்ப்பதை கவனித்த அவன் சட்டெனத் தனது பார்வையைத் தரைபார்த்து கவிழ்த்து செந்தூரனின் கோபப் பார்வையைத் தவிர்த்தான். அவர்களுக்கு ஒதுக்கிய அறை எண்ணுக்குத் தரையில் வைத்திருந்த மாயாவின் லக்கேஜை எடுத்துகொண்டு அறையை அடையாளம் காட்டும் நோக்கில் முன்னாள் நடந்தான்.


ஆனால் மாயாவோ இதை எதையும் கவனிக்கவில்லை ஹோட்டலை கண்களால் அளந்தால். அதன் அழகை ரசித்துப் பார்த்தாள். “வாவ் இந்த இடம் சூபர்ல” என்று கேட்டுக்கொண்டே நனைந்ததால் உண்டான குளிரில் செந்தூரனுடன் நெருக்கமாக இணைந்து நடந்தாள்.


அவனுக்குத் தன முன்னாலேயே அவளை ஒரு வேலைக்காரன் சைட் அடித்தது ஏனோ உள்ளுக்குள் புசுபுசுவென்ற கோபம் கனன்றது. மேலும் அந்த வேலையாளிடம் அவளுக்குரியவன் தான்... எனவே அவளை விட்டு எட்டியே நில்.... என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது..
எனவே தனது அருகில் இணைந்து நடந்தவளை “கம் குவிக்,..” என்று சொல்லிவிட்டு அவளில் கையைத் தனது அகண்ட சூடான கரங்களில் பற்றித் தனது கரங்களுக்குள் அடக்கிக்கொண்டு சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தான்.


இன்று காலையில் இருந்தே அவளின் ஒவ்வொரு அசைவிலும் அவன் கிறுகிறுத்துப் போயிருந்தான். என்னதான் தனது சூழலை நினைத்துச் சொல்லாமல் காதலை பொத்தி வைத்திருந்தாலும் இருவருக்குமான இத்தனிமை அவனைத் தன்னிலை மறக்க வைத்தது. அதற்குத் தூண்டுதலாக அந்த வேலைக்காரனியன் பார்வை அவனை உசுப்பேத்தி விட்டுவிட்டது.

அது உயர்தரமான வகையில் உருவாக்கி இருந்த ரெஸ்ட்டாரென்ட் அதன் உள்ளேயே ஹோட்டல், பார். ஸ்விம்மிங் பூல் வசதியுடன் அழகிய பூங்காக்கள் ஆங்காங்கே அமர்ந்து பேச நிழற்குடைகள் முதலியன இரவின் இருளை விரட்ட ஆங்ககே வரிசையாய் அலங்காரமாய் நின்றிருந்த விளக்கின் ஒளியில் பார்க்க ரம்மியமாக இருந்தது.


“டேய்... இங்கேயாடா நாம தங்கப் போறோம்...? கனவு போல இருக்கு, ஆத்தாடி எம்புட்டு அழகா இருக்கு.. இந்த இடம்” என்று சொல்லிக்கொண்டே ரூமிற்குள் வந்ததும் அந்த வேலையாள் செந்தூரனின் முறைப்புக்கு பயந்தோ என்னவோ அதன் பின் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அறையில் கொண்டுவந்த பேக்கை வைத்துவிட்டு குனிந்தபடி வெளியேறினான்.


மிதமான ஏசி... அறையெங்கும் பெர்ஃப்யூம் வாசனை, சுத்தமான வெள்ளை நிற படுக்கையில் பூந்தூவாலை துண்டினால் இரண்டு பறவைகள் உருவம் உருவாக்கி அதன் அலகுகள் சேர்ந்து ஹர்ட் ஷேப்பில் அமர்ந்திருந்தது.
உள்ளே வந்ததும் மாயாவோ “ஏய்.. இங்க பாரேன்.... துண்டுல பொம்மைலாம் பண்ணி வச்சிருக்காங்க..., இது எதுக்காம் படுக்குற பெட்ல போய் வச்சிருக்காங்க..... லூசுக, மேலே படுத்தா கலைஞ்சு போயிடாது?” எனச்சொல்லி பெட்டின் மீது ஏறப் போனவளை...


“ஏய்... ஏய்... போ.. போய்ப் பாத்ரூம்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா... ஈரத்தோட பெட்டுல ஏறாத” எனச்சொல்லி அவளைத் தடுத்ததும்.
“டேய்... டேய்... எம்புட்டுக் காசு போட்டு இங்க தங்குறோம்.. வெளியில பார்த்தேல்ல பார்க் ஸ்விம்மிங் பூல் எல்லாம் இருக்கு.... கொடுத்த காசுக்கு எல்லாத்துலேயும் ஒரு ஆட்டம் போட்டுட்டு காலையில இங்க இருந்து கிளம்பலாம்...”


“மழை பெஞ்சுக்கிட்டு இருக்கு.... இந்நேரம் வெளில சுத்தணும்னு சொல்ற? உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?”


“ஏய்... என்ன மிரட்டுற? அப்போ நீ வரலை... சரிவிடு நான் போறேன்...” எனச்சொல்லி அவள் முன்னாள் நடக்க அவனும், “ஏய்... தனியாவா.. போற? இரு...இரு... நானும் வாறேன்”


செந்தூரனோ மனதிற்குள், ‘படுத்துறாளே... சும்மாவே இன்னைக்குக் காலையில இருந்து என்னைய பைத்தியம்புடிக்க வைக்கிறா? அதோட நான் இருக்கும் போதே என் கண் முன்னாலேயே ஒருத்தன் இவளை சைட் அடிக்கிறான்.. தனியா போனா அம்புட்டுத்தான்...’ என்று புலம்பியபடி ரூம் கீகொண்டு அறையைப் பூட்டிவிட்டு அவளின் பின்னோடு ஓடியவன்,
“ஏய்... புது இடம் தெரியாத ஆட்கள் எல்லாம் இருக்கிற இடத்தில் இப்படி நைட் டைம் தனியா போறயே.. உனக்குப் பயமே.. இல்லையா?”


“என்ன பூச்சாண்டி காட்டுற? பொண்ணுங்க நைட்ல தனியா போனா அப்படி நடந்துடும்... இப்படி நடந்துடும்னு... என் அப்பா மாதிரியே சொல்றியா?
இங்க பாரு என்கிட்டே எவனாவது வந்து வாலாட்டட்டும் அவன் வால ஒட்ட நறுக்குறேனா இல்லையானு பாரு... உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லட்ட..?”
சொல்லவளிடம் “என்ன...?” என்று புருவம் சுருக்கி யோசனையுடன் கேட்டவனிடம்.


“என்கூட இந்த ரெசார்தட்டுக்கு வந்துருக்க என் ஃப்ரெண்டு செந்தூரனை பத்தி உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்கோ... அவன் சும்மாவே என்கிட்டே ஒருத்தனையும் முறைச்சு கூடப் பேச விடமாட்டான்... எம் மேல யாராவது கைவைக்க விட்டுடுவானா..? நான் தனியா போனாலும் என் பின்னாடியே வந்து எனக்கு எஸ்கார்ட் வேலை பார்ப்பான் தெரியுமா? ஃப்ரெண்டுன்னா அவனை மாதிரி இருக்கணும்”


அவனைப் பற்றி அவனிடமே எடுத்துச்சொல்லவும் உதட்டில் புன்னகையோடு அவளைத் தொடர்ந்தான்.


அதன் பின் வளவளத்துக் கொண்டே பில்டிங் விட்டு இறங்கி மழையில் நனைந்த படியே மோகினியெனச் சென்றவளின் பின் அவனும் தொடர்ந்தான்.

----தொடரும்---

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!