Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு

தொடர் :

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 01

அத்தியாயம் 01

வண்ண முகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்னையில் பெருந்தனக்காரர்கள் வசிக்கும் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தவனின் சிந்தனை ‘எதுக்காக என்னைய வரச் சொன்னார்...? அதுவும் அவர் ஃபேமிலியோட வந்திருக்கும் போது என்னைய அங்க கூப்பிடுறாரே...?  சும்மாவே என்னைய கண்டா அவங்களுக்கு ஆகாது... ஏதாவது ஹோட்டலில் மீட்பண்ணலாமானு கேட்டா கோவப்படுறார்’ என்ற பொருமலுடன்  பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

'என்னால அவர் வார்த்தையை மீற முடியலையே... அவர்ட்ட நன்றிக்கடன் பட்டு இருக்கேனே... எனக்காக எதுவும் செய்வேன்னு உறுதியா நிக்கிற மனுஷன் பேச்சை தட்ட முடியல...’

தனக்குள் புலம்பிக்கொண்டே அந்த ஏரியாவின் மூன்றாம் அவன்யூவிற்குள் நுழைந்தான். அங்கிருந்த வீதிகளில் வீற்றிருந்த பங்களாக்களை கண்களால் அவதானித்தான், தனித்தனி கோட்டை சுவர்களுக்குள் ஒவ்வொரு பங்களாவும் பல கோடிகளை விழுங்கி அழகழகாய் எழும்பி நின்றிருந்தது. அத்தெருவின் அமைதியும், தூய்மையும், அகலமும், வரிசையாக நின்றுக்கொண்டிருந்த மரங்களும் இது சென்னையா...? என்ற கேள்வியை உண்டாக்கியது.

ஆம்... சென்னைக்குள் வாழும் மிகப் பெரிய செல்வந்தர்களின் குடியிருப்புப் பகுதி அது, என்பதை வண்ண முகில் உணர்ந்துக்கொண்டான்.

சரியான பங்களாவை கண்டு கொண்டு அப்பெரிய கதவின் அருகிலிருந்த வாட்ச்மேனின் கவனத்தை ஈர்க்க, ஹாரனை அடித்தான்,

பெரியவீட்டு பிள்ளையின் தோற்றத்தில், முகத்தில் மாட்டியிருந்த ஹெல்மெட் உள்ளிருந்த கண்களால் கூர்மையாய் தன்னைப் பார்த்தபடி... பளபளவென்ற கருப்புநிற (கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் மதிப்புள்ள’ BMW ஸ்கூட்டரில்) அந்த இருசக்கர வாகனத்தில், அமர்ந்திருந்தவனை வியப்புடன் பார்த்த வாட்ச்மேன்,  அமர்ந்திருந்த ஸ்டூலை விட்டு எழுந்து நின்றான்,

“கேட் ஓபன் பண்ணுங்க, உள்ளபோகணும்” என்றவனை சட்டென விரட்டமுடியாமல் அவனின் தோற்றம் அச்சுறுத்தியதால்,

“சார், உங்க பேர் சொன்னா இண்டர்காமில் கேட்டுட்டு....” என்று பணிவாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிரிங்... கிரிங்... என்ற டெலிபோன் சத்தம் வாட்ச்மேனை அழைத்தது.

சத்தத்தை கவனித்தவன், வேலை செய்பவர்கள் வந்து போக வலது மூலையில் மதில் சுவர்களுடன் பொருத்தப்பட்டிருந்த சிறிய பாதையின் ஒன்றைக் கதவைத் திறந்து அச்சிறு நுழைவு வாசலின் வழி பாய்ந்துச் சென்றான்.

குடைபோல் அமைந்திருந்த, வலது மூலையில் இருந்த அழகான உருளைவடிவில் கூம்பாய் ஓடுகள் பதிக்கப்பட்ட அறையில் அழைத்துக்கொண்டிருந்த இன்டர்காம் போனை எடுத்து “ஐயா...” என்றவனிடம் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில்.... விழுந்து அடித்துக்கொண்டு மறுபடியும் வெளியே ஓடி வந்து, வண்ணமுகிலுக்கு வழிவிட்டு கதவை விரிய திறந்து வைத்தான்.

வண்ணன் பொதுவாக அணிவது கருப்பு நிற உடைகள் தான், இன்றும் அவனுக்குப் பிடித்த கருப்புநிற பிராண்டட் டீசெர்ட் மற்றும் ஐஸ்புளூ ஜீன் ஃபேன்ட் அணிந்திருந்த ஆடையைமீறி திண்ணிய அவனின் படிக்கட்டு தேகம் வெளிப்பட்டது.

மிரட்டலான பைக்குடன் திறந்திருந்த கேட்டினுள் நுழைந்து பயணித்து வெள்ளை மாளிகையில் தோற்றத்தில் இருந்த பங்களா வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவன் ஆறடி உயரத்தில் இருந்தான்.

தலை கவசத்தை கழட்டியதும், சற்று படர்ந்த நீள்வட்ட முகத்தில் இருந்த  பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத சற்று இடுங்கிய கண்களால் கூர்மையாக சூழலை ஆராய்ந்தான். எடுப்பாய் நீண்ட மூக்கும் அதன் அடியில் தாடிமீசைக்குள் இளரோஜா வண்ணத்தில் இருந்த சற்று தடிப்பான உதடுகளும் அவனை அழகனாகக் காட்டியது.

சென்னையில் அவன் வசித்தாலும் இதுவரை உரிமையாய் அந்த பங்களாவிற்குள் வந்ததில்லை. இறங்கியவனை வேகமாக வந்து எதிர்கொண்ட வேலையாள் “பிளீஸ் சார்... வாங்க, உங்களை ஐயாவோட ரூம்க்கு பக்கத்து ரூமில் உட்காரவைக்க சொன்னாங்க” என்றபடி அவனை அழைத்துச் சென்றான்.

வெள்ளைக்காரன் இங்கிருந்தக் காலத்தில் கட்டப்பட்ட மாளிகை அது. ஆங்கிலேயர்களின் கட்டிட பாணியையும், செட்டிநாட்டுக் கட்டிடக் கலையையும் கலந்துக்கட்டி வெண்பளிங்கு கற்களால் உருவாகி இருந்தனர். அந்த பங்களா நான்கு தலைமுறை தாண்டி இப்பொழுது இந்தியாவின் பேர் சொல்லும் தொழில் அதிபர்களுள் முக்கியமான முகில் அதியன் வசம் வந்தடைந்திருந்தது. ஆனால் அவரின் பாட்டன் பூட்டன் வழி வந்ததல்ல... மனைவியின் வழி வந்த சொத்து அது.

தன்னை மரியாதையாய் அழைத்து வழிகாட்டிக்கொண்டு சென்ற வேலையாளைத் தொடர்து கொண்டிருந்தவன் கண்கள் அலைபாய்ந்தது. வீட்டு ஆட்கள் யாரும் அவனின் கண்களில் தட்டுப்படவில்லை. ஆங்காங்கே வேலையாட்கள் மட்டுமே வேலை செய்துக்கொண்டு நின்றனர்.

ஒருவகையில் யாரையும் எதிர்கொள்ளாதது சற்று ஆசுவாசத்தையே அவனுக்கு கொடுத்தது. ஏனெனில் தொழில் நிமித்தமாக ஏற்பாடு ஆகும் நிகழ்வுகளில் முகில் அதியன், தன்னை அவரின் மகனென சொல்லி முன்னிறுத்தும் ஒவ்வொரு முறையும் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் குடும்பம் வெளிப்படையாகவே முகங்களை திருப்பியபடி  வெளியேறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தனக்குத் தந்தையாகிப் போன முகில் அதியன் உரிமையாய் தன்னை வீட்டிற்கு உள்ளேயே வரவைத்த செயல் இங்கு பெரும் பிரளயத்தையே உருவாக்குமென அவன் நினைத்திருத்தான். அங்கு நிலவிய அமைதியை உள்வாங்கியவன், புயலுக்கு முன் வரும் அமைதியோ என்று சஞ்சலம் அடைந்தான்.

அவனுக்கு அந்த பிரமாண்டமான அறையின் கதவினை திறந்து விட்டு வாசலில் நின்றுகொண்டான் வழிகாட்டியவன், கேள்வியாய் அவனை ஏறிட்டுப் பார்த்ததும் “உள்ள உக்காருங்க சார், ஐயா இப்போ வந்துடுவாங்க” எனச்சொல்லியதும் சில்லென்ற ஏசியின் குளிர்ச்சி முகத்தில் மோதுவதை  பொருட்படுத்தாமல் அந்த அறையின் பிரமாண்டத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் முன்னடியில் இருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவனின் மொபைல் ஒலி எழுப்பியது.

அழைத்தது முகில் அதியன் தான், அவரிடம், “வந்துட்டேன்ப்பா.. உங்க ரூமுக்கு பக்கத்து ரூம்ல உட்காரவச்சிட்டுப் போயிருக்கார் உங்க வேலைக்காரர், இவ்வளவு கிட்ட இருந்தும் சட்டுன்னு பார்த்து பேச முடியலைல அதுக்குத்தான் வெளில மீட் பண்ணலாம்னு சொன்னேன்”

“இது உன் வீடு வண்ணன், உனக்கு அடுத்துதான் எனக்கே இங்க உரிமை இருக்கு...” என்றவரிடம்.

“எனக்கு நீங்க கொடுத்த படிப்பும் என்னோட அறிவும் போதும், வேற எதுவும் வேணாம்”

“முகில் குரூப் பொறுப்பை விட்டு நீ விலகி ஓடப் பார்க்குற வண்ணன், உன்னை தொரத்தி விடணும்னு ஆசைப்படுறவங்களுக்கு உன்னோட இந்தமாதிரியான பேச்சுச் சாதகமாயிடும் ஜாக்கிரதை, அது முகில் குரூப்புக்கு நல்லது இல்ல” என்றார் கண்டிப்பான குரலில்.

அவரின் வார்த்தையை உள்வாங்கியவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததும், “முகில்... என்று அழுத்தமாக அழைத்தார், “ம்... ஓகேப்பா உங்களுக்கு பிடிக்காததை பேச மாட்டேன்”

“குட், தேட்ஸ் மை பாய், அஞ்சு நிமிஷத்தில் உன் முன்னாடி நிப்பேன். முக்கியமான விஷயம் பேசணும்” எனச் சொல்லி முடித்தார். 

அந்த பிரமாண்டமான மாளிகையின் சொந்தக்காரன்... வண்ண முகிலாகிய நானாம்...! என்ற நினைப்பில் விரக்தியான சிரிப்பு அவனின் உதட்டில் அரும்பியது,

அந்த இடத்தில் அவனால் பொருந்திப் போக முடியவில்லை, தன்னை எதற்காக இங்கே வரச்சொன்னார்...? என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தான்.

அவன் அமர்ந்திருந்த அறையை சுற்றி கண்கள் ஓடியது.... அங்கிருந்த எதிலும் அவனுக்கான தடம் பதிந்திருக்கவில்லை... பிறப்பால் கிடைக்கும் சொந்தங்களும் சொத்துகளும் அவனைத் தேடி வந்தது பதின்ம வயத்தில் தான். ‘கிடைக்காமலே இருந்திருக்கலாம்..., இந்த குடும்ப அரசியலில் நானும் பகடை ஆகாமல் இருந்திருப்பேன்....’ என்ற பெருமூச்சு வெளிப்பட்டது.

 

****

டெல்லியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன் இரவு பத்துமணிக்கு மேல் புறப்பட்ட ரயிலில் அவள் வந்து கொண்டிருந்தாள். தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னையை ரயில் நெருங்கிக் கொண்டிருந்ததை பேர் பலகையில் கண்டறிந்து இறங்குவதற்கு ஆயத்தமானாள். 

‘அறிமுகம் இல்லாத புதிய ஊரில்... புதிய பேருடன் இனி நான்... ‘நட்சத்திரா’ பேர் நல்லாத்தான் இருக்கு...’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

இந்த மூன்று நாளாக முதுகில் மாட்டவேண்டிய பேக் பேக்கை முன்னாள் மார்போடு கங்காரு குட்டியை போல மாட்டியவள் அதை கழட்டவே இல்லை... அமரும் போதும் தூங்கும் போதும் அதை அணைத்துக்கொண்டே பிரயானமானவளுக்கு பேக் பேக்கும் தனது அங்கமாகவே ஆக்கிப்போனது போல உணர்வு உண்டானது... 

தடக் தடக்கென்ற சத்தத்துடன் ரயிலின் ஓட்டம்  இழுத்துத் தேய்ந்துக்கொண்டே வந்ததும், எழுந்து சீட்டின் அடியில் இருந்த அந்த பெரிய டிராலிப்பேக்கை எடுத்து இறங்கத் தோதாக வைத்தவளுக்கு மூன்று நாள் பிரயாணத்தில் அழுங்கிய தனது தோற்றத்தை சரிப் படுத்தத் தோன்றியது.

முடியைக் கட்டியிருந்த பேண்டை உருவியதும், அலை அலையான கூந்தல் தோள்பட்டையை சற்றே தாண்டி முதுகில் படிந்தது, அந்த அறை அடி கூந்தலை கைகளாலேயே கோதி மறுபடியும் பேன்டினுள் அதக்கிக்கொண்டவளுக்கு.... சுற்றிலும் இருந்த இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்கள் மட்டுமில்லாது பெண்களின் கண்களுமே அவளின் மீது ஓரு நொடி பதிந்தே விலகியது போன்ற எண்ணமே அவளுக்கு திக் திக்கென்ற பயத்தின் அதிர்வைக் கொடுத்தது.

பேக் பேக்கை முன்பக்கம் இருந்துக் கலட்டி முதுகில் மாட்டிக்கொண்டு ‘இல்ல... யாரும் என்னையத் தொடர்ந்து வந்துருக்க வழியே இல்லை’ தனக்குத்தானே ஆரூடம் சொல்லித் தேற்றிக்கொண்டாள்.

சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து, தான் சென்று அடையவேண்டிய வுமன்ஸ் ஹாஸ்டல் அட்ரசை ஒருதடவை மொபைலில் சரிபார்த்த நட்சத்திராவுக்கு புது இடம் மனதினுள் மிரட்சியைக் கொடுத்தது...

‘எவ்வளவோ சமாளிச்சிட்டோம் வந்த நோக்கத்தை ஒரு கை பார்காமப் போகக் கூடாது... அதோட டென்த் படிக்கிற வரை தமிழ் நாட்டில் தானே இருந்தோம், தமிழ் பேச நமக்கு பிரச்சனை இல்லையே... அது போதாதா சமாளிக்க..?’ வந்ததின் நோக்கம் தீயாய் அவளுள் கனன்றுக் கொண்டிருந்தது.

‘எப்படியாவது உதித் முகிலை பார்த்துப் பேசியே ஆகணும்... விடமாட்டேன்... எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும்’ மறுபடி மறுபடி தனக்குள் சொல்லிக்கொண்டவள் சென்ட்ரல் ஸ்டேசனில் அவளிடம் இருந்த மொத்த உடமைகள் அடங்கிய பயணப் பெட்டிகளுடன் கால் பதித்தாள்.

தனது மொபைலில் செல்ல வேண்டிய வுமன்ஸ் ஹாஸ்டளுக்கு ஓலோ ஆப்பிள் டேக்சி புக் செய்துவிட்டு, ஸ்டேசனில் இருந்து எக்சிட் குறியீட்டைகொண்டு தடுமாற்றம் இல்லாமல் ஸ்டேசனின் வாயிலை வந்து அடைந்தாள்.

நின்று கொண்டிருந்த டாக்சிகளில் அவள் புக் செய்த டாக்ஸி நம்பரை மொபைலில் பார்த்து உறுதி செய்து ஏறியவள் புக்கிங் ஓடிபியை டிரைவரிடம் சொல்லிவிட்டு அருகிலேயே லகேஜ்களையும் வைத்தபடி அமர்ந்துக் கொண்டாள்.

கையில் வைத்திருந்த நட்சத்திராவின் ஆதார் அட்டையில் இருந்த போட்டோவை உற்றுக் கவனித்தாள், அதில் அன்று நட்சத்திரா போட்டிருந்த உடை மற்றும் கம்மலையே இன்றும் அணிந்திந்தாள், ஆதார் அட்டையில் இருக்கும் முகத்தை உற்றுக்கவனித்தவளுக்கு சமாலிச்சிடலாம் என்றே தோன்றியது.

இறங்கியவள் பேசிய பணத்தை பேரம்பேசாமல் கொடுக்துவிட்டு வுமன்ஸ் ஹாஸ்டளுக்குள் அடியெடுத்து வைத்தாள், முன்னாள்  கவுண்டரில் இருந்த பெண்ணிடம், கொண்டுவந்த ஐடி புரூப்பை  காண்பித்து ரூம் புக் செய்த டீடைல்ஸ் சொல்லி முடித்ததும்,

“நான் தான் இந்த ஹாஸ்டல் வார்டன், உங்க பேரு நட்சத்திரா தானே சொன்னீங்க...?, மூணு மாசம் வாடகையை அட்வான்சா கொடுத்துட்டு இதில சைன் பண்ணுங்க” என்றதும் ‘நட்சத்திரா’ என்ற பெயரையே கையெழுத்தாக இட்டவள் கண்களால் தான் இட்ட கையெழுத்தை ஸ்கேன் செய்து மனதில் பதித்து வைத்துக் கொண்டாள்.

“மேம் ரூம் நம்பர் பிப்டி ஃபைவ் தானே..? எப்படிப் போகணும்..?” என்றதும்,சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த ஸ்வீப்பரை கையசைத்து

 “ஏய் செஞ்சி, வா... இங்க” என்று அழைத்தார், அந்த கடுகடு மூஞ்சி வார்டன் பெண்மணி,

“சொல்லுங்க வார்டன் மேடம், இவங்க யாரு, புது புள்ளையா...?” என்றதும்,

“ஆமா... அவங்கக்கிட்ட ரொம்ப வாய் பேசி வந்த அன்னைக்கே பயம் காட்டாத.., ரூம் நம்பர் அம்பத்தைந்தைக் காட்டி, விட்டுட்டு வா...” எனச்சொல்லி அவளுடன் முதல் தளத்துக்கு நட்சத்திராவை அனுப்பி விட்டார்.

“ஏம்மா... உங்க பேரு என்ன? என்ன சோக்கா சினிமா நடிகை மாதிரி இருக்க...? எந்த ஊரு நீனு..?” என்றவளிடம்.

டெல்கி எனச் சொல்ல வந்தவள் நிமிடத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு “சேலம், என்னோட பேர் நட்சத்திரா” என்றதும்

“நட்சத்திரா... அந்த நட்சத்திரம் போல பளிச்சுன்னு தான்மே இருக்க, ஆமா நீனு காலேஜ் படிக்கிறையாமே...? அல்லது வேல பார்குறயாமே...?”

“ரெண்டும் இல்லங்க, வேலைத் தேடி வந்துருக்கேன்” என்றதும்.

“சரியாப் போச்சு... இனிதான் வேலை தேடணுமா...? உன்னையப் பார்த்தா பெரிய வீட்டுப் பொண்ணு போல இருக்கு, ஆனா நீ தங்கப் போற ரூம்ல இருக்கிற ஜூலி தரை லோக்கலு. அவகிட்ட ஜாக்கிரதையா இரு...” எனச் சொல்லி அறைக்குள் விட்டுச் சென்றாள் செஞ்சி.

----தொடரும்----

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 02

அத்தியாயம் 02

முகில் அதியன், நெற்றியில் விபூதி தீட்டி, வொயிட்டன் வொயிட் ஜிப்பா அணிந்து, கண்களில் பிளாட்டினம் பிரேம் வைத்த கண்ணாடியும்... கையில் அவரது ராசிக்கு நல்முத்து பதித்த மோதிரமும் தவிர்த்து வேறு எந்த பந்தாவும் இல்லாது இருந்தார்.

அறுபது வயதை நெருங்கியவரின் தேஜஸ் கொஞ்சமும் மங்காமல் இருந்தது. முகத்தில் மட்டும் ஒரு இறுக்கம்.... அவரின் ஒட்டு மொத்த தொழில் சாம்ராஜ்யத்தையும் வீழ்த்தக் கூடிய கத்தி இரண்டாவது மகன் உதித்தால் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது.

பலத்த யோசனையுடன் தந்தையை பார்த்த வண்ணன் “என்ன பிரச்சனை...? இந்த அளவு டல்லா உங்கள பார்த்தது இல்லையே...? என்னென்னு சொல்லுங்கப்பா, என்னால எதுவும் செய்ய முடியுமானு பார்க்கலாம்”

“உன்னால செய்ய முடியும் வண்ணன், ஆனா....” என்று சொல்லாமல் விட்டதும்,

“ஏன் ஆனா... னு நிறுத்திட்டீங்க...? என்னால உங்க கவலைய சரி செய்யமுடியும்னா எந்த காம்ப்ரமைசும் இல்லாம செய்து கொடுத்துடுவேன்... யோசிக்காதீங்க சொல்லுங்க...” என்றான்.

“உதித், லாரா  லவ் விஷயம் உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்... இப்போ லாரா மிஸ்ஸிங்... அவள் உயிரோடு இருக்கிறதுக்கு சான்ஸ் இல்லைனு பேச்சு அடிபடுது. அதோடு இந்த பிரச்சனையில் முதல் குற்றவாளியா உதித்தை சிக்க வைக்க எல்லா ஏற்பாடும் நடந்துக்கிட்டு இருக்கு” என்றார்.

அவர் சொன்ன விஷயத்தை கேட்ட வண்ணன் யோசனையுடன் “நீங்க உதித் கிட்ட இதப்பபத்திப் பேசுனீங்களா...? என்ன சொன்னான்...?” என்றதும் அவரின் முகம் குற்றவுணர்வில் தொய்ந்து போனது...

“அவன் என்கூட பேசுறதை நிறுத்தி மூணு வருஷம் ஆச்சு...” என்றார்.

“எல்லாத்துக்கும் காரணம் நான்தானே...”

“இல்ல வண்ணன், உனக்கு செய்த வினைக்கான அறுவடை காலம் இது...”

“அப்படி என்னதான் என் லைஃபில் நடந்தது...? என்னோட அம்மா யாரு...?  பதினைந்து வயசுவர ஆசிரமத்தில நீங்க இருந்தும் அனாதையா என்னை எதுக்கு வளரவிட்டீங்க...?

இப்படி பல கேள்விக்கு இதுவரை நீங்க பதில் சொல்லலை... உங்ககிட்ட இதையெல்லாம் கேட்டுத் தெந்தரவு பண்ணக்கூடாதுன்னு ஃபாதர் சொன்ன காரணத்துக்காக நானும் கேக்கலை...” என்றவனிடம்,

“அதுதான் நீயே துப்பு துலக்க ஆரம்பிச்சிட்டியே... நான் சொல்லாமலே நீயே இதுகெல்லாம் பதிலை ஓரளவு திரட்டிட்டனு எனக்குத் தெரியும். அப்படி துப்பு தொலக்க ஆரம்பிச்சத்தோட தொடர்ச்சியாத்தான் டிடைக்டிவ் வேலையை உன்னோட ஃபேசனா மாத்திக்கிட்ட...” என்றவரை...

“எத்தனையோ காம்ளிகேட்டான கேசை நான் சால்வ் பண்ணி இருக்கேன்ப்பா... என்னோட விஷயத்தில சம்பந்தப்பட்ட நீங்க வாயத்திறக்காததால. அதாவது.... உங்ககிட்ட நான் என்கொயரி பண்ணாததால இன்னும் பசில்ஸ் கம்ப்ளீட் ஆகாமலேயே இருக்கு...” என்றவனிடம்,

“நான் சொல்லாம இருக்கிறதுக்கு காரணம், நடந்த விஷயங்களால என்னோட பிள்ளைங்களோட நிம்மதி போயிடக் கூடாதுன்ற எண்ணத்தால கம்முனு இருந்துட்டேன். பெரியவங்களோட தப்பு உங்களை பாதிக்காம இருக்கணும்”

“இதுக்கு மேல உங்ககிட்ட இதப்பத்திப் பேசிப் புரயோஜனம் இல்லைன்ற விஷயம் புரியுது, ஆனா இப்போ நடக்குற உதித் பிரச்சனைக்கு தொடக்கப் புள்ளி கூட நான் குடும்பத்துக்குள்ள வந்ததில் ஆரம்பமானது தானே...”

“வண்ணன்... என்னோட வாரிசுகள் கஷ்ட்டப்படக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா என்னோட மூத்த மகனான உன்னோட இந்த நிலைக்கு காரணமானவங்களை தண்டிக்காம விடுற அளவு நான் நல்லவன் இல்ல...”

“அப்பாவா போயிட்டீங்க... அதனால உங்களோட இந்த வாதத்துக்கு ஹார்சா பதில் சொல்லாம ரொம்ப டீசெண்டா சொல்ல டிரை பண்றேன்..”என்று சொன்ன வண்ணன் அழுத்தமாக அவரோட முகத்தை பார்த்தபடி...

“உண்மையாவே என் நிலைக்கு காரணமான உங்க வொய்ப்பை தண்டிக்க நீங்க நினைச்சிருந்தா சட்டத்துக்கு முன்னாடி அவங்க செய்ததை நிரூபிச்சு ஜெயிலில் போட்டிருக்கணும்...

ஆனா நீங்க அதைப் பண்ணலை.... தண்டனைன்ற பேரில் இன்னொரு பொண்ணுகூட ரிலேஷன்ஷிப் வச்சுகிட்டீங்க....

தலைக்கு மேல வளர்ந்த பிள்ளைங்க இருக்கும் போது உங்க வொய்பை  டைவர்ஸ் பண்ணிக்கிட்டீங்க...

அதுமட்டுமா தொழிலை அடுத்த ஸ்டேஜூகு கொண்டு போகணும்னு அந்த இல்லீகல் ரிலேஷன் சிப்பை லீகலாக்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க...” குற்றம் சாட்டும் தொனியில் சொன்ன வண்ணனை நிமிர்ந்து பார்த்த முகில் அதிபன்,

“மேலோட்டமா பார்த்தா நீ சொல்றது போலத்தான் தெரியும் வண்ணன், முதலில் நீ சொன்னியே என் வொய்ப் இஷானிய குற்றவாளின்னு ஜெயிளுக்கு அனுப்பணும்னு...

அப்படி பண்ணினா என்னோட பிஸ்னஸ் லைப்பில் அது கரும்புள்ளியாகிடும்... இஷானிக்கும் எனக்கும் பிறந்த உதித், மோனிகா பேரில் இருக்கிற என்னோட கம்பெனி ஷேர்ஸ் டவுன் ஆகும். அதோடு அவங்க ரெண்டுபேரோட தனிப்பட்ட லைஃப் அபெக்ட் ஆகும்...

அதேபோல நான் உதித் அம்மா இஷானியை ஒதுக்கித்தான் வச்சேன் டைவேர்ஸ் கொடுக்க நினைக்கலை...

சந்திரிக்கா சமர் கூட பிஸ்னெஸ் விஷயமா நான் அடிக்கடி சந்திச்சுப் பேசுனதை தப்பா வெளில காமிச்சது இஷானி தான், அவள்தான் சந்திரிக்காவ நான் மூணாவதா மேரேஜ் பண்ணவேண்டிய சூழலுக்கு கொண்டுவந்தா...

மூணு கல்யாணம் முடிச்சும் இப்போ நான் தனியாத்தான் நிக்கேன். அதுபத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை...

ஆனா இப்போ லாரா கொலைப்பழிய உதித் மேல போட நம்மோட பிஸ்னெஸ் எதிரிங்க சிலர் ஆதாரம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க... நாம அவங்களை முந்திக்கணும், லாராவுக்கு என்ன ஆச்சு அப்படின்னு கண்டுபிடிச்சாத்தான் சிக்கலை விடுவிச்சு உதித்தை காப்பாத்த முடியும்.

அப்படி உதித்தை காப்பாத்த முடியாம போச்சுன்னா... பிரச்சனை அவனோடு முடியாது... முகில் குழுமத்தோட அடையாளத்தில ஒருத்தன் உதித் அதனால மொத்த பிஸ்னசுக்குமே கெட்ட பேரும், சரிவும் வரும்.

அந்த நிலை வரக் கூடாது நீ தான் என்ன நடந்ததுன்னு இறங்கி கண்டுபிடிச்சு சரிபண்ணனும். அதுவும் சீக்ரெட்டா” என்றார்.

அதே நேரம் அந்த பங்களாவின் மற்றொரு அறையில் படுக்கையில் உடல்நலமில்லாமல் இருக்கும் பாட்டி அமுதவல்லியின் முன்பு இருந்த இருக்கையில் கோபத்துடன் அமர்ந்திருந்த இஷானி பெரியவளிடம்,

“கடைசி அந்த வண்ணனை இங்க பங்களாவுக்கே கூட்டுட்டு வந்துட்டார்மா...

இத்தனை காலம் எது நடக்கக் கூடாதுன்னு நான் நினைச்சேனோ அது நடந்துடுமோ....

இல்ல... முடியாது யாருக்காகவும் இந்த பங்களாவை நான் விட்டுக் கொடுக்கிறதா இல்லை...” என்றாள்.

வண்ணன் வந்திருப்பதாக சொன்ன சேதியில் பெரியவளின் முகம் பாசத்தில் இளகியது “உண்மையாவே துவாரகா மகன் வந்துருக்கானா...?” என்றதும்.

“அம்மா.... உண்மையாவே என்னைய பெத்தவ தானா நீ...?

நானே அந்த பொடியன் சின்னவனா இருக்கும்போதே நசுக்காம விட்டுட்டேனேனு ஆதங்கத்துல இருக்கேன்,

என் பிள்ளைகளுக்குப் போட்டியா முளைச்சதும் இல்லாம, எனக்கே எனக்காக இந்த பங்களா வேணும்ற ஆசைக்கு கொல்லி வைக்கிறது போல வந்து நிகிறான் அந்த துவாரஹா மகன்.... அவன் வந்ததைக் கேட்டு உன் முகத்தில் பல்ப்பு எரியுது...?” என்றதும் தனது மகிழ்வை படுக்கையில் இருந்த அந்த பெரிவள் அடக்கிக்கொண்டு

“இஷானி கோர்ட் வரை போய் டைவர்ஸ் ஆகியும் உனக்கு புத்தி வரலையே... போதும் செய்த பாவம் எல்லாம் போதும்...

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

உனக்கு டைவர்ஸ் ஆகி ஒத்தையில நிக்கிறயே... இதோட உனக்கான தண்டனை போதும்” என்றவரிடம்

“இப்போ என்ன டைவர்ஸ் தானே ஆச்சு, நான் என்ன செத்தா போயிட்டேன், இத்தனை காலமா அவருக்கு பொண்டாட்டியா இருந்ததுக்கு சுளையா நஷ்ட்ட ஈடு வாங்கிட்டுத்தானே டைவர்ஸ் கொடுத்திருக்கேன்... ஆனா அவர் கொடுத்த சொத்து பத்து எல்லாம் எனக்கு பெருசு கிடையாது... இந்த பங்களா கடைசி வரை எனக்கானதா இருக்கணும். இதுக்காக நான் எவ்வளவு பாடுபட்டுருக்கேன்.

அப்பா இருந்திருந்தா எனக்கு இந்த நேரம் எவ்வளவு சப்போர்ட்டா இருந்திருப்பார் தெரியுமா...?” என்ற இஷானியிடம் தனது வாதம் எடுபடாது என்ற நிதர்சனத்தில் கண்கள் கலங்கியது.

மனதினுள் ‘அந்த மனுஷன் உன் மனசுல நஞ்சை விதைச்சிட்டு போய் சேர்ந்திட்டாரு... அது அறுவடைக்கு அது காத்து நிக்குது...

கடவுளே இவளை நீதான் காப்பாத்தி திருந்தி வாழ வழிகாட்டணும்’ கடவுளுக்கு தனது கையாலாகாத தனத்தால் வேண்டுதல் வைத்தாள் முதியவள்..

*******

ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது.

அந்த அமைதி அவளை அச்சப்பட வைத்தது...

கைகளை அசைத்தபோதுதான் அது கட்டப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தாள்ஆதலால் அதிர்ச்சியடைந்து சட்டென மயக்கத்திலிருந்து எழுந்தவளின் புலன்களும் விழித்துக் கொண்டது.

கைகள் இரண்டையும் சேர்த்து வைத்துப் போட்டிருந்த இரும்புக்காப்போடு இணைக்கபட்டிருந்த சங்கிலியை இழுத்துப் பார்த்தாள்அது கட்டிலோடு பிணைக்கப்பட்டிருந்தது...

குனிந்து தன்னை நோக்கினாள். பச்சை நிற உடை தரித்திருந்தாள், இதெப்படி..என யோசிக்கும் போதே அவளின் தலை முடியின் வித்தியாசம் உணர்ந்து காப்பு பூட்டப்பட்ட கைகளைக் கொண்டு போய் தலையை தொட்டுப் பார்த்தவள்.... அது ஒட்ட வெட்டப்பட்டிருந்தது,

தனது அழகிய முடி வெட்டப்பட்டிருப்பதில் கண்களில் முணுக்கென கண்ணீர் துளிர்த்தது... எந்நேரமும் டெனிம் பேண்ட்ஷர்ட் மாடர்ன் உடை சகிதமாக வளம் வருபவள் தான். அழகான அடர்ந்த கருத்த அலையலையான நெளிவுகளுடன் காணப்படும் கூந்தலைதோளில் புரளும் அளவுக்கு பெதர் கட் செய்து பார்த்து... பார்த்து... பராமரித்தவளுக்கு இந்த கொடுமை யார் செய்தது...?

பச்சை நிற உடை...கைகள் இரும்புக் காப்புமுடியை ஓட்ட வெட்டியிருத்தல்அத்துடன் நோயாளிகளுக்கான பிரத்தியோகமான கட்டிலில் தன்னை கிடத்தி இருந்தல்... . எல்லாவற்றையும்  ஒன்றோடு ஒன்றாய் தொடர்புப் படுத்திப் பார்த்தால்....  நான் இருக்குற இடம் மெண்டல் ஹாஸ்பிடலோ...நெஞ்சில் பளிச்சென்ற பயத்தின் ஊசி இறங்கியது...

அவ்வாறு யோசிக்கும் போதே அவள் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. வெள்ளைநிற புடவையின் ஓரங்களில் புளூ நிற பட்டையான பார்டர் இருக்கும் சேலை உடுத்தி கழுத்தில் அடையாள அட்டையோடு செவிலியர் ஒருத்தி உள் நுழைந்தாள்.

வந்தவள் “எந்திச்சாச்சா..? என் கூட வா, டாக்டர் பார்க்க வரச் சொன்னாங்க” என்று சொல்லிக்கொண்டே  கொண்டு வந்திருந்த சாவியால் சங்கிலியில் லாக்கை விடுவித்து அழைத்துச் சென்றாள்

அடைத்திருந்த அறையை விட்டு வெளிவந்து நடந்துக்கொண்டே வரிசையாக இரண்டு பக்கமும் ஒரே போல அறைகள் இருப்பதை கண்டாள்...

‘இது ஹாஸ்பிடல்தான்....  ஆனா நான் எப்படி இங்க வந்தேன்...?’ என யோசித்துக்கொண்டே செவிலியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த  அடையாள அட்டையை உற்றுக் கவனித்தாள்.

அதில் நேச்சர் ரீஹேபிடேட் சென்டர் என்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தாள்.

போதை மறுவாழ்வு மையத்துல நான் எதுக்கு இருக்கேன்...? எனக்கு அதுபோல எந்த பழக்கமும் இல்லையே....கடைசியாக எனக்கு என்ன நடந்தது?  

செபாஸ்டின் கூடத்தானே போனேன்... அவன் என்கிட்ட “நீங்க இங்க உட்கார்ந்து லைட்டா ஒயின் சிப் பண்ணுங்கநான் உங்களை உள்ள கூட்டிட்டு போக பெர்மிசன் வாங்கிட்டு வாரேனு சொன்னான்,

அப்போக் கூட “நோ... நோ...உங்க பாஸ்க்குதான் அந்த பழக்கம் இருக்குஒன்லி பிரூட் ஜூஸ் மட்டும் தான்“ செபாஸ்டியன் கிட்ட சொன்னேனே...

ஓகே மேடம், லெமன் சூஸ் சொல்றேனு சொல்லிட்டுப் போய் ஜூஸ் தானே வாங்கிட்டு வந்துக் கொடுத்தான்.

அதை கொஞ்சமா குடிச்சத்து மட்டும்தான் நினைவில் இருக்கு அதுக்குப் பிறகு என்ன ஆச்சு....?”.

இவ்வாறாக அவள் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ள சூழலையும் அனுமானித்தபடி  வந்தவளை டாக்டரின் அறையினுள் கூட்டிக்கொண்டு வந்தாள் அந்த செவிலி..

அங்கு டாக்டரின் முன் உள்ள இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள், நாற்பத்தி ஐந்து வயது போல இல்லாமல் மிகவும் இளமையாக எதிரில் உள்ளவர்களை அசரடிக்கும் அழகுடன் செல்வச் சீமாட்டியாக அமர்ந்திருந்தவள் கோணலான சிரிப்பை உதிர்த்தபடி பார்த்தாள்.

அவளைப் பார்த்ததும் கோபத்தில் அருகில் இருந்த மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டரை தூக்கி அடிக்க பாய்ந்தபோது... அங்கிருந்த இருவர் ஓடிவந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்....

“என்னைய ஒரு வார்த்தை சொல்லி மிரட்டியதுக்கே உன்னைய எங்க கொண்டுவந்து உன்னை நிறுத்தியிருக்கேன் பார்த்தியா....?

எனக்கு நீ எல்லாம் ஒரு மேட்டரே இல்லை....” என்றதும் தன்னை பிடித்தவர்களை உதறி விடுபட்டுக்கொள்ளும் நோக்கத்துடன் துள்ளியவளை...

“ஏய்... என்ன ஆச்சு... ஐயய்யோ... ஒரு பைத்தியத்தைப் போய் எனக்கு ரூம் மேட்டா இந்த வார்டன் கோர்த்து விட்டுருச்சே.. ஏய்... என்ன ஆச்சு..?”என்று கை கால்களை கட்டிலில் உதறிக் கொண்டிருந்த நட்சத்திராவை எழுப்பினாள் ஜூலி.

தொப்பலாக வியர்வையில் குளித்தபடி ஜூலி உசுப்பியதால் கனவில் இருந்து விடுபட்டு எழுந்ர்து அமர்ந்தாள் நட்சத்திரா...

----தொடரும்----

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 03

அத்தியாயம் 03

பங்களாவில் அமுதவல்லியின் அறையில் வண்ணன் தனது தந்தைக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

அங்கு சற்று தள்ளி முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு நின்றிருந்த இஷானியை பார்க்கப் பிடிக்காமல் எங்கோயோ பார்த்தபடி இருந்தார்.“

அமுதவல்லியின் பாசமாக வண்ணனின் கைப்பற்றியதும், உணர்ச்சி வசத்தில் அவரின் கை நடுநக்குவதை  உணர்ந்துகொண்டவனுக்கு அவரின் நெகிழ்வும் ஒரு ஆசுவாசத்தை கொடுத்தது..

தந்தைக்குப் பின் அந்த வீட்டின் மூத்தவர் அமுதவல்லிக்கு தன் மேல் இருக்கும் பிரியத்தில் ஒரு நிம்மதியை அவனுக்கு உண்டானது.

“உதித்தை காப்பாத்த வண்ணனாலத்தான் முடியும்” என்ற முகில் அதியனின் வார்த்தைகேட்டதும் தள்ளி உட்கார்ந்திருந்த இஷானி  ஆத்திரத்துடன் அவருக்கு முன்வந்து நின்றாள்.

அவளின் செயலை வேட்டிக்கை பார்த்த வண்ணனுக்கு இஷானிக்கு தான் உதித்தை காப்பாற்றும் வேலையில் இறங்குவது பிடிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிந்ததால் நெருப்பின் மீது நிற்பதுபோல ஒரு உணர்வு உண்டானது...

அவளோ முகிலிடம் கீச்சுக் குரலில் சத்தமாக “உங்களுக்கு என் பையனை காப்பாத்த இஷ்டம் இல்லைன்னா கம்முனு இருங்க, எதுக்கு தேவையில்லாம இவனை வச்சு டிராமா பண்றீங்க...? என் மகனை காப்பாத்த எனக்குத் தெரியும்” என்றாள் இஷானி.

அவள் சொன்னதைக் கேட்டு கடுப்புடன் பல்லைக் கடித்தவர் மனதினுள் ‘இந்நேரம் அவக்கூட விவாகரத்து மட்டும் ஆகாம இருந்தா... ஒரே அடியில் பல்லை கலட்டி இருப்பேன்... உரிமையை அத்துவிட்டதால இப்போ கையை கட்டிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியது இருக்கு..’ என்ரு கடுப்பானவர், இஷானியிடம் பதில் சொல்லாமல் அமுதவல்லியிடம்,

“அத்தே உங்க மகளை எந்த கிறுக்குத்தனமும் பண்ணாம அடங்கி இருக்கச் சொல்லுங்க, ஆரம்பத்தில் இருந்து எல்லாமே கோணலா பண்ணிப் பண்ணி அவளோட லைஃபையும் அப்படியே மார்த்திக்கிட்டா...

அவள் எப்படி போனாலும் எனக்கு கவலை இல்ல.. ஆனா உதித் என்னோட மகன், அவனுக்கு நல்லது செய்யப்போறேன்னு இவள் குழப்பி இன்னும் சிக்கலில் இழுத்து விட்டுடுட்டா கொன்னு புதைச்சிருவேன்... அவளை சொல்லி அடக்கி வைங்க” என்று கர்ஜித்தார்.

“இஷா அதுதான் மாப்பிள்ளை சொல்றார்ல, உதித்தை வந்து பேசச் சொல்லு... அவன் எப்போ வருவான்னு போன் பண்ணிக் கேளு” என்றாள் முதியவள்.

இஷானிக்கு தெரியும் முகிலனுக்கு தான் மட்டும் தான் ஆகாது பிள்ளைகள் மேல் பாசம் அதிகம் என்று தெரியும்,

உதித் பிரச்சனையில் இருப்பது தெரிஞ்சா கண்டிப்பா வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டார் எந்த அளவுக்கும் இறங்கி காப்பாத்துவார்னு தெரியும். ஆனால் அந்த வேலையை வண்ணனிடம் ஒப்படைப்பதாக சொல்லிக்கொண்டு வந்து நின்றதும் தான் அவளின் நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்தது.

இருந்தாலும் ஒருவேளை தான் இறங்கி சொதப்பிட்டா... என்ற பயம் உண்டானது... ஏற்கனவே கணவனுக்கும் சந்திரிக்கா விஷயத்தில் தன்னுடைய தவறான அணுகுமுறை நிரந்தரமாக முகில் அதியனை தன்னைவிட்டு பிரித்துவிட்டதால் மகன் விஷயத்திலும் அப்படி எதுவும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்தாள்.

இப்போதைக்கு மகனை பிரச்சனையில் மாட்டாமல் தப்பிக்க வைப்பதே புத்திசாலித்தனம் எனப் பட்டது. எனவே தனது  மொபைலில் இருந்து உதித்துக்கு டயல் செய்தாள் இஷானி.

உதித்தோ கோபம் ஆற்றாமை மற்றும் எரிச்சலுடன் பப்பில் இருந்து வீடுநோக்கி வந்துகொண்டிருந்தான். குடித்திருந்தாலும் நிதானமாகவே கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.

அவனின் தற்போதைய நிலை நினைத்து மிகவும் சோர்ந்து போனான் மனதினுள் ‘பிளான் பண்ணியபடி எல்லாம் நடந்திருந்தால் இப்போ இப்படியா இருந்திருப்பேன்... லாராகூட லைஃபை ஸ்டார்ட் பண்ணி இருப்பேன்...

எங்க டி போன...? நானே நீ எங்க போனனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன். நீ காணாம போனதுக்கு நான்தான் ரீசன்னு மத்தவங்க பேசுவதை பார்த்து அம்மா பயந்துட்டாங்க...

என்னை அந்த இஸ்யூவில இருந்து காப்பாத்தணும்னு அவங்களே முடிவெடுத்து மும்பையை விட்டு சென்னைக்கு என்னைய இழுத்துட்டு வந்துட்டாங்க,

லாரா... நீ மட்டும் இப்போ என் கண் முன்னாடி வந்தே... உனக்கு இருக்கு... என்கிட்ட இருந்து எப்படி உன்னால போக முடிஞ்சது...?

அந்த சந்திரிக்கா பேய் கிட்ட சவகாசம் வச்சுக்காதனு படிச்சுப் படிச்சுச் சொன்னேன்... கேட்டியா...? அவக்கிட்டதான் மாட்டிக்கிட்டீயோ...? அந்த பேயைப் போய் ‘இந்தியாஸ் பிரவுடஸ்ட் வுமன் என்டர்பிரேனியர்னு’ கொண்டாடுறாங்க. அவள் இத்தனை அட்டூழியம் பண்ணியும் எதுலையுமே மாட்டிக்காம தெனாவட்டா திரியிறா.. ஆனா நானு தப்பே பண்ணாம தலைமறைவா இருக்கேன்.

காதலி லாராவின் பிரிவு அவனின் மனதை பலவிதத்தில் அசைத்துப் பார்த்தது... லாரா காணாமல் போனதுக்கு காரணம் என்று அவன் எண்ணிய அந்த சந்திரிக்காவின் மீது கோபம் அளவுக்கு அதிகமாய் பொங்கியது .

இதுமட்டுமா, அழகான தேன்கூடு போல இருந்த தனது குடும்பத்த கலைச்சு விட்ட முதல் கல் வண்ணன், ரெண்னாவது கல் அந்த பேய் சந்திரிக்கா சந்த். தலைமேல் வளர்ந்த பிள்ளைகள் வைத்திருக்கும் தனது தந்தையை குடும்பத்தை விட்டு பிரித்து கல்யாணம் செய்துகொண்ட அந்த சந்திக்கா சந்த மீது கொலைவெறி வந்தது.

இவ்வாராக பல எண்ணங்களுடன் பங்களாவை நோக்கி வந்து கொண்டிருந்தவனுக்கு மறுபடியும் அம்மாவிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்ததும் “அம்மா... இன்னும் பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன்” எனச்சொல்லி அவர் பேசும் முன் என்ன பேசவந்தார் என்றே கேளாது பேசி வைத்துவிட்டான்.

அங்கு வண்ணன் நிற்பதையும்... இவன் பொருட்டு இன்வெஸ்டிகேஷனில் அவன் இறங்கப் போவதையும் அவர் சொல்வதற்குள் வைத்துவிட்டான் உதித். ‘இது சரிபட்டுவருமா...? அவன் எதிரியாக நினைக்கும் வண்ணனிடம் எப்படி பிகேவ் பண்ணப் போறானோ...’ என்ற கவலையுடன்

“இதோ இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடுவானாம் அம்மா” என்று அமுதவல்லியிடம் பதில் சொன்னாள் இஷானி

********

கனவில் இருந்து விடுபட்ட நட்சத்திரா விடிபல்புவின்  வெளிச்சத்தில் ஜூலியைக் கண்டாள். அவள்  முறைத்துக்கொண்டு நிற்பது தெரிந்த பின்பே தான் இப்பொழுது இருப்பது விடுதியிலென்ற நிதர்சனம் புரிந்தது.

‘ச்சே.... அந்த இன்சிடென்ட் நடந்து முடிஞ்சு வருஷத்துக்கு மேல ஆகியும் மறக்க முடியலையே... என்னோட இந்த ஆக்டிவிடியை பார்த்து ரூம் மேட் பயந்து போயிட்டாளோ...?’ என்று நினைத்துக்கொண்டே ஜூலியிடம்

“என்ன...? என்ன இப்படி நிக்கிறீங்க...?” என்றாள்.

“நான் கேக்க வேண்டியதை நீ கேக்குற...? ஆமா கனவுல அட்டம்ப்ட் ரேப்பா...? கையை காலை அப்படி உதறிகிட்டு கிடந்த..” என்றதும்

அவள் கேட்ட தோரணையில் அதிர்ந்து “இல்ல... இல்ல...” என்று பதற்றமாக சொல்லிக்கொண்டே மனதினுள் ‘என்ன இவள், இப்படி எல்லாம் கேக்குறா...!? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நீ வா போனு பேசுறா...?” அதிர்ச்சியில் கண்கள் விரித்து பார்த்தபோது...

ஜூலி அந்த அறையின் டியூப்லைட்டை எரியவிட்டு தரையில் நட்சத்திராவால் தூக்கி எறியப்பட்டது என்னவென பார்த்தாள் அவளின்  ‘பேக் பேக்’ தான் அது. ஒழுங்கில்லாத நிலையில் அது கிடந்தது.

நட்சத்திராவோ சட்டென படுக்கையை விட்டு எழுந்தவள் வேகமாகச் சென்று அந்த பேக் பேக்கை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள்.

“ஆமா... அந்த பேக்ல அப்படி என்ன இருக்கு..? நானும் நீ வந்ததுல இருந்து பார்க்குறேன் பாத்ரூம் போனாக் கூட அதோடயே போற வருற...?” என்றாள்.

“அதுல என்னோட முக்கியமான திங்க்ஸ் இருக்கு, மிஸ் ஆகிடக் கூடாதுன்னு தான் வேற ஒன்னும் இல்ல...” என்றவளிடம்,

“இப்படி மூணு மணிக்கு நீ கட்டிப் பிடிச்சு தூங்குன பேக் பேக்கை விட்டெறிஞ்சு, கையை காலை உதறி, விடுங்க... விடுங்க... னு சத்தம் போட்டு என்னையும் முழிக்க வச்சிட்ட... இனி நான் தூங்குனாப்புல தான், ஆமா டெய்லி இப்படி பண்ணுவியா இல்ல இன்னைக்கு தான் புதுசாவா...?’ என்றதும்.

“ஊரைவிட்டு வந்து புது இடத்தில் தங்கி இருக்கற பயத்தில் கனவு வந்துருச்சு... இங்க பழகிட்டா நார்மல் ஆகிடுவேன்” என்றதும்,

“அது உண்மையா இருந்தா நல்லது, ஓகே... நாம நாளைக்கு ஃப்ரீயா பேசலாம், இன்னும் மூணுமணி நேரம் தான் தூங்க முடியும்” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே ஜூலி தூங்கிவிட   

நட்சத்திராவுக்கு தூக்கம் தூரப் போய்விட்டது. வாழ்கையில் ஒரு தடவை பட்ட அந்த அனுபவம் தந்த படிப்பினை தான் அதன் பின் எதற்கும் யாரையும் நம்பவே கூடாது என்ற நிலையை அவளுள் விதைத்தது.

‘மும்பையில் இருந்து சென்னைக்கு உதித் முகிலனை பார்க்கணும்னு கிளம்பி வந்துட்டேன். அங்க இருந்த உதித் இப்போ எதுக்கு சென்னைக்கு வந்தான்....?

தப்புச் செஞ்சவங்க தானே ஓடி ஒளியனும், ஒருவேளை இவனும் கிரிமினலா இருந்தா என்ன பண்ண...? ஆனா அக்கா அவனை பத்தி நல்ல விதமாத்தானே என்கிட்ட சொல்லி இருக்கா...

இவ்வளவு பெரிய சிட்டியில எங்கன்னு போய் அவனைத் தேட...? இங்க பணக்கார பசங்க டைம் செலவு பண்ற இடம் எது எதுன்னு கண்டுபிடிக்கணும். என்னோட தேடலை பப், டிஸ்கோத்தே போன்ற இடத்துல ஆரம்பிக்கணும்,

அதை எல்லாம் தெரிஞ்சுக்கிட வகுலாவை காண்டாக்ட் பண்ணனும், அவள்தான் இப்போ இங்க சென்னையில் தங்கி சினிமாவில் சின்ன சின்ன சீன்களில் தலை காட்ட ஆரம்பிச்சிருக்கா அவளுக்கு டிஸ்கோத்தே பப் எல்லாம் அத்துபடியாத்தான் இருக்கும்.

விடிஞ்சதும் முதல் வேலையா அவள்கிட்ட தான் பேசணும் என்று எண்ணியவளுக்கு தூக்கம் தொலைதூரம் போனது. மொபைலில் தனது காண்டாக்டில் இருந்த வகுலாவை தொடர்பு கொள்ள நினைத்தவள், வாட்ஸ் ஆப்பை மொபைலில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தாள்.

பழைய மொபைல் தான் ஆனால் பழைய நம்பர் இருந்த சிம் கார்ட்டை டெல்கியில் இருந்து கிளம்பும் முன்பே உடைத்து வீசி எறிந்தவள் நட்சத்திரா பேரில் வேறு சிம் ஒன்றை வாங்கி தனது மொபைலில் பொருத்தி இருந்தாள். மொபைலையும் ரீபுட் செய்து வைத்திருந்தாள்.

டிரைனில் வரும் போதுதான் காண்டாக்ட் நம்பர்ஸ் பேக்கப் எடுத்து தனது லேப்டாப்பில் பதிந்து வைத்திருந்ததை மீண்டும் மொபைளில் ஸ்டோர் செய்தவள் இப்பொழுதுதான் மறுபடி வாட்ஸ் ஆப் டவுன்லோட் செய்து அதில் வகுலாவுக்கு ஹைய் என்று மெசேஜ் போட்டுவிட்டு படுக்கலாம் என்று பார்த்த போதுதான் அவள் ஆன்லைனில் இருப்பது தெரிந்ததும். அவளுடன் பேச காலையில் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைத்தாள்

சுருக்கமாக “அவளைத் தான் பார்க்கவேண்டும், இப்பொழுது தான் சென்னையில் இருப்பதாகவும் டைப் செய்து, இப்பொழுது தான் நட்சத்திராவாக இங்கு வந்துருப்பதாகச் சொல்லி மெசேஜ் தட்டி அனுப்பினாள்.

அடுத்த மூன்றாவது நிமிடம் அவளுக்கு வகுலாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை கண்டதும் கடந்த சில மாதங்களாக சிரிப்பு என்பதையே மறந்ததுபோய் இருந்த நட்சத்திராவின் முகத்தில் புன்னகை உதித்தது.

“ஹேய் டால்...” என்ற வகுலாவின் அழைப்பில் சந்தோசத்துடன், “எப்படி இருக்க வகுலா...?” என்றதும்.

“சூப்பரா இருக்கேனு எல்லாம் உன் கிட்ட பொய் சொல்ல மாட்டேன் டி. ஆனா மோசமாவும் இல்ல.. ஏதோ போய்கிட்டு இருக்கு, ஆமா சென்னையிலா இருக்க..? எந்த ஹோட்டலில் ஸ்டே பண்ணி இருக்க..? விடிஞ்சதும் முதல் வேலையா உன்னை வந்து பார்த்துட்டுத்தான் மத்த ஜோலியே.. கிட்டத்தட்ட நாம மீட் பண்ணி டூ இயர்ஸ் ஆச்சுல்ல... ஆமா நம்ம பார்ட்னர் எப்படி இருக்கா..?” என்று படபடவென பேசித் தள்ளினாள் வகுலா...

----தொடரும்----

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 04

அத்தியாயம் 04

வாட்ச்மேன் கேட்டை விரிய திறக்க உதித்தின் கார் உள்ளே நுழைந்தது. அங்கு பங்களா வாசலில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகத்தைக் கண்டவனுக்கு ‘அவனா...? என்ற கேள்வி எழுந்த போதே சுல்லென்ற கோபம் மூண்டது. நடையிலும் கோபம் கொப்பளித்தது...

சரக் சரக்கென காலில் போட்டிருந்த ஜூ சப்தம் எழுப்ப வேதவல்லி அறைக்குள் வந்தான் உதித். ஏனெனில் தனது தந்தைக்கும் அவனுக்கு இடையில் இன்டர் மீடியேட்டராக கடந்து சில வருடமாக இருப்பவள் அவளின் அம்மம்மா வேதவல்லி தான்.

உள்ளே நுழைந்தவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அங்கு தனது தந்தை மற்றும் அம்மாவுடன்  வண்ணன் நின்றிருந்ததை சற்றும் எதிர்பார்க்காததால் முதலில் அதிர்ந்தவன் அடுத்து கனல் வீசும் கண்களை வண்ணனின் மீது செலுத்தியபடி திரும்பிச்செல்ல முயன்றபோது வேதவல்லியின் அழைப்பு தடுத்தது.

“உதித் கண்ணா, என்ன திரும்பிப் போற...? உன்கிட்ட பேசத்தான் காத்துகிட்டு இருக்கோம்” என்றவளிடம்,

“அம்மம்மா... இந்த வீட்டுக்கு சம்மந்தம் இல்லாதங்க முன்னாடி எனக்குப் பேச விருப்பம் இல்ல... முதலில் வெளிய அனுப்புங்க... பிறகு நான் பேச வருறேன்” என்றான்.

முகிலனோ தனக்கும் இஷானிக்கும் கருத்து வேறுபாடு முற்றி அவளை விட்டு தான் பிரிவதாக முடிவெடுத்த போது உதித் தன்னைவிட்டு சற்று தூர நிற்க ஆரம்பித்தான்..,

அதன் பின்பு மனைவியுடன் விவாகாரத்து செய்ததும், தவிர்க்க முடியாத இடத்தில் மட்டும் ஓரிரு வார்த்தை பேசினான்...

இஷாணியை விவகாரத்து செய்தபின் சந்திரிக்காவோடு தனது மூன்றாம் திருமணம் ஆனதும் முற்றிலும் தன்னிடம் முகம் கொடுத்து பேசாததால் ஒதுங்கி நின்றுவிட்டான் உதித்.

அவனின் கோபத்தில் உள்ள நியாயம் புரிந்து உதயத்தின் கோபத்துக்கு மதிப்பு கொண்டு அவனின் போக்கிலேயே விட்டு விட்டார் முகில்.

தூரத்தில் இருந்தே அவனுக்குத் தேவையானதை கவனித்துக் கொண்டிருந்தவர்,  இன்று வண்ணனை உதித் எடுத்தெறிந்து பேசிய பேச்சை ஆட்சேபிக்கும் தொனியில் “உதித்...” என்று கர்ஜித்து அழைத்தார்.

அப்பாவின் கண்டிப்பான குரல், உதயத்தை மறுபேச்சு பேசவிடாமல் அடக்கியது. வெளியில் போக திரும்பியவன் கால்கள், அதற்கு மேல் அடியெடுத்து வைக்க தயங்கி நின்றது.

அவனின் அம்மா அப்பாவுக்கு இடையில் உண்டான கருத்து வேறுபாடுகள், மோதல்கள், பிரிவு என்று எத்தனையோ நடந்த போதும் அவனிடம் அவர் நல்லத் தந்தையாக மட்டுமே இதுவரை நடந்துக் கொண்டுள்ளார். அப்படிப்பட்ட அவரிடம் நேரில் எதிர்த்துப் பேச தைரியம் இல்லை என்று சொல்வதை விட விருப்பம் இல்லை உதித்துக்கு.

வேறு ஒருத்தியோடு வாழ்வை அவர் இணைத்துக்கொண்டாலும் அவரின் சொத்துகள், தொழில்கள்  எல்லாவற்றிலும் பிள்ளையென தன்னையுமே முன்னிறுத்தியாவர் பிஸ்னெஸ் இக்கெட்டில் பின்னால் இருந்து தூக்கி நிறுத்துபவர் அவர்தானே...

முகில் அதியனின் வாரிசு என்ற செல்வாக்கு தரும் மதிப்பை முற்றிலுமாக அனுபவித்துக் கொண்டிருப்பவன் தானே உதித்.... அப்படிப்பட்ட தந்தையின் முகத்துக்கு நேராகக் கேள்வி கேட்க அவனால் முடியவில்லை.

வெளியில் செல்ல முயன்றவன் தனது கோபத்தை கொண்டு, தனக்குக்  கட்டுப்பட்டு தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்த இரண்டாவது மகனிடம்,

“என்ன சொன்ன...? வீட்டுக்கு சம்மந்தம் இல்லாதவங்களா..?

யாரைச் சொன்ன வண்ணனையா...?

உன் அம்மா உன்கிட்ட என்ன அளந்து விட்டுருக்கானு நான் கேட்க மாட்டேன்,

அவளை வச்சுகிட்டே இத்தனை காலம் உனக்கு சொல்லாத உண்மையை இப்போ சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ...

இதோ நிக்கிறாளே உன் அம்மா.... அவள் பொறந்து வளர்ந்த வீடு இதுவா இருக்கலாம்,

இதோ படுத்து இருக்காங்களே உன் பாட்டி, உனக்கு வெவரம் தெரிஞ்சு இந்த வீட்டு நிர்வாகத்தை கட்டிக் காப்பாத்துறது இவங்களா இருக்கலாம் ஆனா இந்த வீடு வண்ணனோட வீடு,

உன்பாட்டியோட கூடப்பிறந்த அக்கா கனகவல்லியின் வீடு... கனகவல்லிக்குப் பிறகு அவரின் மகள் துவாரகா வீடு...

என்னோட முதல் வொய்ப் துவாரகாவுக்குப் பிறகு எங்களோட மகன் வண்ணன் முகிலின் வீடு இது.... இப்போ புரிஞ்சதா....? இந்த வீட்டுக்கு சம்மந்தம் இல்லாத ஆள் யாருன்னு...?” என்றவர் கோபமுடன் இஷானியை பார்த்து அவளிடம்

“இத்தனைக்குப் பிறகும் இங்க உரிமையாய் இஷானியை வர விடுறதுக்கு காரணம் இதோ படுக்கையில் இருக்காங்களே உன் பாட்டி இவங்க பெத்த மகள் இவள்ன்ற காரணத்துனால தான்..” என்றார்.

“அம்மா...” என்று அதிர்ந்து இஷானியை அழைத்தான் உதித் முகில்,

கல்லூரியில் முதலாம் ஆண்டில் உதித் படித்துக்கொண்டிருந்த போது திடீரென யாரோ ஒரு வண்ணனை தனது மூத்தமகனென ‘முகில் அதியன்’ பேட்டியில் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்ததை ஊடகத்தில் கண்டவனால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை,

டெல்லியில் நடந்த உலகத் தொழிலதிபர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளப் போன தனது தந்தை... அருகில் அவரின் மகன் என்று வண்ண முகிலை நிறுத்தி அறிமுகப்படுத்தியதை மும்பையில் தனது வீட்டு தொலைக்காட்சியில் பார்த்த உதித் கோபத்தில் அருகில் டீபாயின் மீதிருந்த பேப்பர் வெயிட்டரை எடுத்து விட்டெறிந்து டிவியை உடைத்தான்.

இஷானியோ இதுவரை மிகவும் அன்புள்ள மனைவியாக நடந்து கணவனை தக்க வைத்துக்கொண்டிருந்தாக நினைத்திருந்தவளும் பேட்டியைப் பார்த்து அதிர்ந்துபோனாள். மகனின் கோபத்தை கண்டவள் அவனை தன்னுடன் இறுக்கிப் பிடிக்க நினைத்தாள்.

ஏற்கனவே குறுக்குப் புத்தியும், கயமையும் நிறைந்தவள் தான் இஷானி.., அதனை வெளிப்படுத்தாது அடக்கி இத்தனை நாள் நல்லவளாக நடித்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுது கை நழுவிப் போகும் முன் கணவனை இறுக்கிப் பிடிக்க மகனையே துருப்புச் சீட்டாக பற்றிக்கொள்ள நினைத்து தனது கைப்பிடிக்குள் மகனை கட்டிபோட வஞ்சகமாய் திரித்து பல விஷயங்களை கோபமுடன் உதித்துடன் சொல்லி வைத்திருந்தாள்.

அப்பாவும் மகனும் தன்னால் முகம் திருப்பிகொண்டு  மனம் விட்டு பேசாமல் போவது இஷானிக்கு இன்னும் வசதியாய் போனது.

ஆரம்பத்தில் மகனிடம் உண்மையை முகில் சொல்லிவிடுவாரோ.... என்று தயங்கியவள் அவ்வாறாக எதுவும் அவர் சொல்லாமல் விட்டதுக்கு காரணம்  மகனின் மீதிருந்த அவரின் பாசம் எனப் புரிந்து நிம்மதிக் கொண்டாள்.

இத்தனை நாள் உண்மையை சொல்லாது அமைதி காத்த கணவன். இனிமேலா சொல்லப் போகிறார், உதித்தும் தந்தையோடு பேசுவதில்லையே என்று ஆசுவாசம் கொண்டிருந்தாள்,

இன்று இப்படி பட்டென உண்மையை போட்டு உடைக்கவும் மகனிடம் என்ன சொல்லி சமாலிக்க என்று புரியாமல் கையை பிசைந்துகொண்டு நின்றுவிட்டாள் இஷானி.

தனது அம்மா, அப்பா சொன்னதுக்கு மறுப்பு சொல்லமுடியாமல் கைகளை பிசைந்துக்கொண்டு நிற்பதை கண்டு, தந்தை சொல்வது உண்மை என்று தெரிந்ததால் சோர்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

மகனின் சோர்வைக் கண்ட முகில், “உன்னைய கஷ்டப்படுத்தணும்னு இந்த உண்மையை சொல்லலை, வண்ணனை மனசால உன் அண்ணன்னு நீ ஏத்துக்கிடணும்னு நினைச்சுத்தான் இப்போ இந்த உண்மையைச் சொன்னேன்.

நீ பிறந்ததில் இருந்து இப்போது வரை என்னோட மகனா... மதிப்பா... எல்லா வசதிகளோடும் வளர்த்து நல்ல தகப்பனா உனக்கு இருந்திருக்கேன்.

ஆனா வண்ணன் அவனை அவனே காப்பாத்திக்கிட பக்குவமும் மேச்சூரிட்டுயும் வந்துருச்சுன்ற கான்பிடெண்டு எனக்கு வரும் வரை யாரோவா அனாதையா விட்டிருந்தேன். அவனோட ஸ்கூல் படிப்பு  முடியும் வரை அனாதையாத் தான் நான் வளரவிட்டேன். என்னோட பிஸ்னெஸ் டென்ஷனில் அவனை பின்னாடியே போய் காப்பாபாத்திக்கிட்டு இருக்க முடியாத என்னோட கையாலாகாத தனத்தால அனாதையா விட்டு வச்சிருந்தேன்.

இதோ... இப்போ சிங்கமாட்டம் வளர்ந்து நிக்கிறான், நீயும் அவனும் சேர்ந்து தொழிலில் நின்னா நம்மை யாரும் அசைச்சுக்க முடியாது...

லாரா விஷயத்துல உன்னைய சிக்க வைக்க நம்ம தொழில் எதிரிங்க உனக்கு எதிரா பேச ஆரம்பிச்சிருக்காங்க... உன்னை மாட்டிவிட ஏதாவது பொருத்தமான துப்பை அவங்க கண்டுப் பிடிச்சிட்டா உன்னய கம்பி என்ன வச்சு நம்ம குடும்பப் பேருக்கு களங்கம் பண்ணிடுவாங்க...,

நீ குற்றவாளின்னு முடிவாகிட்டா உன் பொறுப்பில் இருக்கிற கம்பெனியோட மார்கெட் வேல்யூ மட்டும் இல்லாம முகில் குரூப்பின் எல்லா ஷேர்ஸ் வேல்யுவும் டவுனாகி பிஸ்னஸ்ல பெரிய சரிவு வந்துடும்” என்று சொல்லி முடிக்கும் முன்

“அப்பா... நான் பண்ணலைப்பா... லாராவுக்கு என்ன ஆச்சு எங்க போனானே எனக்குத் தெரியாதுப்பா...” என்றான்.

நீ சொல்றதை உண்மைன்னு நம்புறேன்... ஆனா நடந்தது என்னெனு தெரிஞ்சாதான் உன்னையை காப்பாத்த முடியும் உதித். அதேபோல வெளியாட்கள் கிட்ட உன்னை காப்பாத்துற வேலையை கொடுத்தாலும் எதிரிங்க அவங்களையும் விலைக்கு வாங்க சான்ஸ் இருக்கு,

அதனால வண்ணனை தான் லாராவுக்கு என்ன ஆச்சு என்னெனு கண்டுபிடிக்க கூப்பிட்டு இருக்கேன், நீ அவன்கூட கோவாப்ரேட் பண்ணனும் உதித்” என்றார்.

******

மெரீனா கடற்கரையில் மண்ணில் கால் புதைய தோழிகள் இருவரும் மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம் நடந்துக்கொண்டிருந்தனர்,

“உண்மையாவே மொத்தமா எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்பி வந்துட்டயாடி... அடுத்து என்ன பண்ணப் போற...?’

பேசாம என்னையப்போல ஆக்டிங் டிரை பண்ணிப் பார்க்குறயா...? உனக்கு சான்ஸ் கிடைச்சா நிச்சயம் பெரிய இடத்துக்குப் போயிடுவ.

உன் ஸ்டெக்சரும், ஃபேஸ்கட்டும் ரசிகர் பட்டாளம் அல்லும், அவ்வளவு எடுப்பா இருக்க. எல்லா கேரக்டருக்கும் பொருந்துவ... ஆனா கால்சீட் கிடைக்க படாத பாடு படணும்” என்றவளிடம்.

“பிறகு எப்படி வகுலா சீரியலில் நுழைய உனக்கு சான்ஸ் கிடைச்சது...?”

“அதுக்கு காண்டாக்ட் நிறைய வேணும் டால்... பார்ட்டி பப் எல்லாம் போய் கொஞ்சமா ஆட்களை பழக்கப்படுத்திக்கிட்டேன், மாடலிங் லைனில் இருக்கிறதால இதெல்லாம் பாசிபுல் ஆச்சு. ஆனாலும் பேர் சொல்லக்கூடிய அளவில்  எந்த கேரக்டரும் இன்னும் கிடைக்கலை”

வகுலா பேசப் பேச நட்சத்திராவின் மூளைக்குள் பல யோசனைகள், ‘என்னால திரையில் தலைகாட்ட முடியாது. என்னையத் தேடி அலைபவர்களின் கண்களில் மீடியா மூலம் மாட்டிக்கொள்ள நான் என்ன தத்தியா...?

ஆனா பெரிய இடத்துப் பசங்க இருக்கிற இடத்தில தான் உதித்தை தேட ஆரம்பிக்கணும், அதனால இப்போதைக்கு இவளிடம் ஓகே சொல்லி எனக்கும் மீடியாக்காரங்க காண்டாக்ட் வேணும்னு சொல்லி பப், பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போகச் சொல்லலாம்’ என்று தனக்குள் முடிவெடுத்தவள்.

“ம்... ஓகே வகுலா, எனக்கும் என்ன பண்ணனு ஒண்ணுமே தெரியலை...  நீ சொல்றது போல முதலில் டிரை பண்ணிப் பார்கிறேன், ஆனா இங்க உன்னையத்தவிற வேற யாரையும் எனக்குத் தெரியாதே... எனக்கு காண்டாக்ட் கிடைக்க நீதான் ஹெல்ப் பண்ணனும்” என்றதும்.

“சூப்பர் டால், எனக்கும் பார்டிக்கும், பப்புக்கும் போகும் போது கூட கம்பெனிக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தா நல்லா இருக்கும்னு தோணும், இனி நான் போற இடத்துக்கு எல்லாம் நாம சேர்ந்து போலாம்” எனச் சொல்லியவள் கொஞ்சம் தயக்கத்துடன்,

“உன்னை எனக்கு நட்சத்திரான்ற பேர்ல திடீர்னு கூப்பிட வரலை தாரா... அப்படி என்ன தான் ஆச்சு...? ஊரைவிட்டு உன் அடையாளம் எல்லாம் விட்டு இப்படி வந்து இருக்கணும்னு என்ன அவசியம்..?

ஆரம்பத்துல இருந்தே எங்க எல்லாரையும் விட நீ லக்சூரியசான திங்க்ஸ், ஜூவல்ஸ், கையில பணம்னு திருஞ்சாலும் இப்போ வரை உன் ஃபேமிலியை பத்தி எந்த விஷயமும் ஷேர் பண்ணாம கொஞ்சம் ஒதுங்கியே தான் இருந்த.

உன்கிட்ட குளோசா இருந்தது நம்ம பார்ட்னர் ‘நட்சத்திரா’ மட்டும் தான்... இப்போ அவள் பேரை நீயே குத்தகைக்கு எடுத்துக்கிட்டதா என்கிட்டே சொல்லுற...

நான்லாம் எத்தனை தடவை உன்கூட குளோசா பழக டிரை பண்ணி இருக்கேன் தெரியுமா...? ஆனா நீ கூடப் படிக்கிற யார்கூடயுமே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல நெருங்கிப் பழகுனதே இல்லை.

முதலில் நான் கூட, நீ ஹெட்வெயிட்டாலத்தான் அப்படி இருக்கியோனு நினைச்சேன். ஆனா காலேஜ் ப்ராஜெக்ட் பண்ணும் போது உங்க ரெண்டுபேரோட நானும் பார்ட்னரா ஜாயின் பண்ணின அந்த லாஸ்ட திரீ மந்த்ஸ் தான் நீ எவ்வளவு ஸ்வீட்டுன்னு எனக்கு தெரிஞ்சது.

எதோ ஒரு காரணத்துக்காகத்தான் யார் கூடையும் ஒட்டாம தனியா இருக்கேனு நினச்சேன். இப்போ என்னடானா எதுவுமே இல்லாம அநாதை போல வந்து நிக்கிறேன்னு நீ சொல்லும்போது வருத்தமா இருக்கு. அப்படி என்னதான் டி உனக்குப் பிரச்சனை...?” எனக்கேட்டாள் வகுலா.

 ----தொடரும்----

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 05

அத்தியாயம் 05

வகுலா தன்னை பற்றி கேட்டதும், எனக்கு பிரச்சனையே என்னை பெத்த அம்மாவாலனு சொன்னா நம்புவாளா..? என் அம்மா இவங்கனு என்னால அடையாளம் காட்டா முடியுமா....?

அதோடு யாரும் நெருங்க முடியாத பெரிய இடத்தில உள்ள என்னைய பெத்து எடுத்தவ... நான் அவங்க பிள்ளைன்னு உலகத்துக்கு தெரியக் கூடாதுன்னு நினைகிராங்க. தெரியப்படுத்தகூடாதுன்னு என்னைய  மெரட்துராங்க... உலகத்தோட பார்வையில் படாம ஒளிஞ்சு வாழச்சொல்லி கட்டாயபடுத்தப்படுறேனு சொன்னா நம்புவாளா...?’ என்று நினைத்தபடி பெருமூச்சு விட்டவள்.

“ஸாரி வகுலா...,  இப்போதைக்கு என்னால நீ கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாது... நிச்சயமா ஒரு நாள் உன்கிட்ட என்னையப் பத்திய உண்மையை சொல்லுவேன்... இங்க நான் உயிரைக் காப்பாத்துறதுக்கு தப்பிச்சு ஓடி வந்துருக்கேன்.

என்னையத் தேடிக்கிட்டு இருக்கிறவங்கக்கிட்ட இருந்து தப்பிக்கத்தான் நட்சத்திரான்ற பேர்ல சுத்திக்கிட்டு இருக்கேன்....” என்றவளை அதிர்ந்து பார்த்தால்..

“பிளீஸ், நட்சத்திராவா என்னைய டிரீட் பண்ணு... அப்படிக் கூப்பிட நீ பயப்பட வேண்டாம்” என்றவளை இன்னும் பயத்தோடு வகுலா பார்க்க...

“ஏய்.. அப்படி பயந்துப் பார்க்காத... நான் ஒன்னும் கொலை, கொல்லை அடிச்சிட்டு தலைமறைவா இல்ல.. என்னையப் பார்த்தா உனக்கு அக்யூஸ்ட் போலவா தெரியுது...!?” என்றவளிடம்.

“நீ கொடுக்கிற பில்டப்ப பார்க்குறப்போ பயமா இருக்குது டால்... எதுக்காக இவ்வளவு தூரம் உனக்கு பழக்கமே இல்லாத சென்னைக்கு மறைஞ்சு இருக்க...? உன் வீட்டுல உள்ளவங்க உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்களா...?” என்றதும்,

‘இவள் திரும்பத் திரும்ப என் பொறப்பையே நோன்றாளே... இதுக்காகத்தானே நான் யார்கூடயும் குளோசா பழகுறது இல்ல..’ என்று தனக்குள் புலம்பிக்கொண்டவள் அதை தவிர்த்துவிட்டு,

“முகில் அதியன் கேள்விப்பட்டு இருப்பேனு நினைக்கிறேன்... பிஸ்னெஸ் மேகசீன்ல கார்பரேட் செக்ட்டார்ஸ்ல, அடிக்கடி அவரோட பேர் அடிபட்டுக்கிட்டு இருக்குமே... மீடியால கூட முக்கிய தொழிலதிபர்னு அவரை காமிப்பாங்க பார்த்திருக்கியா...? அவரோட மகன் உதித் முகில் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கியா....?”

“என்னடி இப்படிக் கேட்டுட்ட,  அவரப் பற்றித் தெரியாம இருக்குமா...? முகில் குரூப் கால்பதிக்காத பிஸ்னெஸ் ஏது...? இங்க கூட டெலி கம்யூனிகேஷன்ல அடுத்து அவங்க தான் பெரிய அளவில் சைன் பண்ணுவாங்கனு பேச்சு அடிபடுது..

நீ அவங்க கம்பெனி ஒண்ணுல வேலைக்கு ஜாயின் பண்ணப் போறியா...? அப்படி முகில் குரூப்ல வேலை கிடைச்சிட்டா லைஃப்ல செட்டிலாகிடலாம்...

ஆமா... முகில் குரூப்போட அடுத்த வாரிசு உதித் முகிலனுக்கு என்கேஜ்மென்ட் ரகசியமா நடந்ததாக் கூட சோசியல் மீடியால நியூஸ் போய்கிட்டு இருந்ததே... அந்த உதித்தையா கேக்குற...?

மும்பை மாடல் அழகிகக்கூட நிக்கிறது போலவும்..., மும்பை கிரிகெட் டீமோட ஸ்பான்சர்னு, மேச் அப்போ ஆடிட்டோரியத்துல இருக்கிற அந்த மூஞ்சியை அடிக்கடி டிவியில காட்டுவாங்களே... ஆளும் செம்ம ஹேன்சம்மா இருப்பான்... ரொம்ப யங்காண பணக்காரன்... எவளுக்கு குடுத்து வச்சிருக்கோ...? ஆமா... அவனை எதுக்குத் தெரியுமானு கேட்ட..?”

‘உதித் பற்றி தனக்குத் தெரியும், உலக ஞானம் எனக்கும் இருக்குது... பார்த்துட்டா புட்டுப் புட்டு வச்சென்ல என்று தனக்குள் சபாஷ் போட்டுகுக் கொண்டாள் வகுலா.

“அந்த உதித்தைத் தேடித்தான் இங்க வந்துருக்கேன். அவர எப்படியாவது கண்டுப்பிடிச்சுப் பேசணும்... இப்போ சென்னையில தான் இருக்காரோன்ற கெஸ் இருக்கு... அவரைப் ரகசியமா பார்க்கணும்... அவர்கிட்ட இருந்து ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கிடணும்” என்றதும்.

“ஏய்... ஜோக் அடிக்காத... அவங்க எல்லாம் எவ்வளவு பெரிய ஆளுங்க... நம்மளால பக்கத்துல கூட நெருங்க முடியாது...”

“அவங்களும் மனுஷங்க தானே... உதித்தோட அம்மாவழி பாட்டி... அதாவது சந்திரிக்கா சமரை கல்யாணம் பண்ணும் முன்னாடி, டைவர்ஸ் பண்ணிய இஷானி முகிலோட அம்மா வீட்டுல தான் உதித் இப்போ இருக்கணும், அவங்க வீடு எங்க இருக்குனு  உனக்குத் தெரியுமா...?

“டால், உண்மையாவே உதித் முகிலை பார்த்துப் பேசணும்னு நினைக்கிறயா...? உன்கூட அவங்க பேசணும்னா நீ அவங்களுக்கு தெரிஞ்சவங்களா இருக்கணும்... உண்மையைச் சொல்லு நீ யாரு...?” சந்தேகம் தொனிக்கும் குரலில் பேசியதும்

“வகுலா நீ யோசிக்கிறது போல எல்லாம் இல்ல...” என்று எதுவோ குண்டக்க மண்டக்க அவள் யோசிக்கிறாள் எனப் புரிந்து அவளின் எண்ணத்தைத் தடுக்க அவ்வாறு சொன்னதும்,

“ஆமா.. என்ன இல்ல...? நான் எப்படி நினைக்கிறேனு உன்கிட்ட சொல்லவே இல்லையே.. பிறகு எப்படி அப்படி இல்லன்னு நீ சொல்லலாம்...?”

“ஏய்... நீ ஒருமாதிரி.... இழுத்ததுல குண்டக்க மடக்க யோசிச்சியோனு பீல் ஆச்சு...” என்றதும்...

“உன்னையப் பத்தி எதையோ ஒன்னை நான் கண்டுபிடிச்சிட்டேனு பயப்படுரியா டால்...?” என்றதும்.

‘இவள் நம்மகிட்ட போட்டு வாங்க டிரைப் பண்ணுறாளோ...?’ என்று யோசிக்கும் போதே..

“அப்போ உதித், தெ கிரேட் பிஸ்னெஸ் கிங் முகில் அத்தியனை எதுத்து அவனோட காதலிய கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணிகிட்டான்....  அவப் பேரு கூட ‘லாரா சந்த்’னு நினைக்கிறேன். அந்த லாரா சந்த் பற்றிய குடும்பப் பின்னணி பற்றி எந்த ஆதாரமும் கிடைக்கலைனு நியூஸ்...  அதுக்கும் உனக்கும் எதுவும் தொடர்பு இருக்கா... டால். உன் பேருல உள்ள பின்னாடிப் பேரு கூட “சந்த்” தானே?”

‘ஹய்யோ இவள் வேற தூண்டித் துருவிக்கிட்டே இருக்காளே... சொல்ற நிலமையிலேயா நான் இருக்கேன்...’ மனதிற்குள் புலம்பியபடி “இல்...இல்ல...” என்று பயத்துடன் சொன்னதும்.

“அப்போ.... நீ எதுக்கு உதித்த பார்க்க நினைக்கிறேன்ற ரீசனை என்கிட்ட சொல்ல மாட்ட அப்படித்தானே...? சரி விடு...

நீ சொல்றதைப் போல இஷானி முகில் பிறந்து வளர்ந்த வீடு தமிழ்நாட்டுல அதுவும் சென்னையில பணக்காரங்க ஏரியானு சொல்ற அடையார் பக்கம்னு கேள்விப் பட்டு இருக்கேன்.

ஏரியா பேர் கூட போர்ட் கிளப்னு நினைக்கிறேன். இப்போவும் இஷானி அடிக்கடி அவங்க அம்மா பங்களாவுக்கு வந்து போவாங்கனு சொல்லுவாங்க. ஆனா அந்த ஏரியா பக்கம் நான் போனதில்ல... எங்க இருக்கு என்னென்னு விசாரிச்சிட்டு சொல்றேன்” என்றபோது

வகுலாவின் மொபைல் அழைத்தது... அழைக்கும் சத்தத்திலேயே முகம் மலர்ந்தது அவளுக்கு..

“டால், நான் சொன்னேன்ல என் ஆளு மாதேஷ்னு...  அவன்  தான் கூப்பிடுறான். வா உன்னைய ஹாஸ்டலில் டிராப் பண்ணிட்டு அவனைப் பார்க்க கிளம்புறேன்” எனச்சொல்லி மொபைலில் பேசிக்கொண்டே முன்னால் அவள் நடக்க ‘அடுத்து என்ன பண்ண...?’ என்ற யோசனையுடன் வகுலாவைப் பின் தொடர்ந்தாள் நட்சத்திரா... 

******

மறுநாள் காலை தனது லக்சூரியஸ் டூபிஹைச் பங்களாவில் படுக்கை அறையில் சுகமாய் உறங்கிகொண்டிருந்த வண்ணனை அலாரத்தின் ஓசை உசுப்பிவிட்டது...

“சோம்பல் முறித்தபடி எழுந்தவனுக்கு‘ அந்த நேரத்திலும் நேற்றைய நிகழ்வே மண்டையைக் குடைந்தது...

‘உதித் என்ன முடிவெடுப்பான்...? என்னையத் தேடி வருவானா...? அல்லது  இனியும் எதிரியாய் என்னைய நினச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்பானா...?

ஆக்ஸ்வெல்லா நான் தானே அவங்க எல்லார் மேலேயும் கோபப்படணும்... ஆனா நான் அவங்களுக்கு அப்போசிட்டா பொறுமையா இருக்கேனே..’ என்று எண்ணிக்கொண்டே காலை கடனை முடித்த நேரம் அங்கு அவனை சந்திக்க உதித் வந்து சேர்ந்தான்.

அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், ஒருவேளை வராமல் எதிரியாய் முறைத்துக்கொண்டே நின்றால்...?’ என்ற வண்ணனின் இருவேறு மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதித் வந்தது சேர்ந்ததால் சட்டென ஒரு உற்சாகம் ஊற்றெடுக்க

“வா... வா.. உதித்...” என்று வரவேற்கும் போதே ‘இப்படி நான் உரிமையா பேசுறதுல அவனுக்கு உடன்பாடு இருக்கோ... என்னவோ...?’ என்ற எண்ணம் தோற்றியதும் சட்டென

“ஸாரி... ஸாரி... உதித் நான் பாட்டுக்கு உரிமையா பேர் சொல்லி வா போனு பேசிட்டேன்” என்று கம்பீரமான குரலில் கூறிய வண்ணனிடம்,

“எனக்கு மூத்தவன் தானே நீ... அப்படிக் கூப்பிட்டதில தப்பு இல்ல...” என்ற வார்த்தையை உள்வாங்கிய வண்ணனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

“அப்போ உன்னோட பெரியவ நானுன்னு தெரிஞ்சும்... நீ, வா, போ..னு என்னைப் பேசுறேள்ல.. அதில எனக்கும் எந்த அப்ஜெக்ஷனும் இல்ல”

வண்ணனின் வார்த்தையை உள்வாங்கிய உதித்தின் முகத்திலும் இருந்த இறுக்கம் வடிய புன்னகைப் பூத்தது.

அதைகண்ட வண்ணனுக்கோ... ‘அவன் இயல்பாகிட்டான்.., இனி இருவரும் இலகுவாக பேசவேண்டியதை பேச ஆரம்பிக்கலாம்’ என்ற ஆசுவாசம் உண்டானதால்

“”உட்காரு உதித், குடிக்க என்ன கொண்டுவரச் சொல்ல...?”

“பிளாக் காபி” என்று சுருக்கமாய்ச் சொன்னதும்,

அங்கு வந்த சமையல்காரர் அஞ்சப்பரிடம், “ரெண்டுபேருக்கும் பிளாக் காபி கொண்டுவாங்க” எனச் சொல்லிவிட்டு, “அப்போ லாரா கேசை நான் ஹேண்டில் பண்ணலாம் தானே...?” என்றதும்

“ம்... அதுக்காகத் தான் உன்னையப் பார்க்க வந்தேன். ஆனா அதுக்கு முன்னாடி அப்பா உன்னைப் பத்தி சொன்ன விஷயம் என்ன ரொம்ப டிஸ்டப் பண்ணுச்சு.

நீயும் அவரோட பையன் தான்...? ஆனா உன்னைய அனாதை ஆஸ்ரமத்தில் வளரவிட்டுருக்கார்...

உன் இடத்தில் நான் இருந்திருந்தா... என்னால உன்னையப் போல எந்த கோபமும் இல்லாம கேஸ்வலா நீ பேசுறது போல பேச முடியாது...

யோசிச்சுப் பார்த்தா என்னையவிட அதிகம் பாதிக்கப்பட்டவன் நீதானு இப்போ புரியுது. ஆனா ஏன் இப்படி...? எனக்கு கொஞ்சம் உன்னையபத்தி சொல்ல முடியுமா...?

அதாவது நீ சின்ன வயசுல ஆசிரமத்தில் இருந்தது.. படிச்சது, வளர்ந்தது, எப்போ உனக்கு நம்ம அப்பா இருக்காருன்ற விஷயம் தெரிஞ்சது...? என்ன ஆச்சு உன் லைஃப்லனு தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்.

அதுக்குப் பிறகு லாரா டீடைல்ஸ் சொல்றேன்..?” என்ற உதித்திடம்.

 

“பொறந்ததில் இருந்து அனாதையா ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன். வெவரம் தெரிஞ்சப் பிறகு உறவுன்னு சொல்லிட்டு அதுவும் என்னையப் படிக்க ஸ்பான்சர் பண்ணிய நல்லவர், கடவுளுக்கு சமமானவர்னு மரியாதை வச்சிருக்கவர் மகன்னு உறவு கொண்டாதினார். உறவுகளோட அருமை... அது இல்லாம வளர்ந்த எனக்கு புரிஞ்சதால சட்டுன்னு அவரை ஏத்துக்கிட்டேன். மறுக்க முடியலை..

என்னோட எட்டு வயசுவரை, கிடைக்குறதை சாப்பிட்டு... ஏதோ படிச்சுக்கிட்டு... ரொம்பவே ஏக்கத்தோட... எனக்கும் யாருமே இல்லைன்ற எண்ணத்தோடதான் வளர்ந்தேன்.

ஆனா என்னோட ஒன்பதாவது வயசுல ஒரு பெரிய பணக்காரர் எனக்குத் தேவையான எல்லாம் தத்தெடுத்து ஸ்பான்சர்ன்ற பேர்ல பண்றதா சொல்லி நல்லச் சாப்பாடு, நல்ல ஸ்கூல், நல்ல டிரஸ் எல்லாம் கொடுத்தாரு...

என்னால என் கூட இருக்கிறவங்களை விட்டுட்டு இதை எல்லாம் தனியா அனுபவிக்க முடியலை... 

என்கூட இருக்கிறவங்களுக்கும் தரமான கல்வி, உணவு, உடை தந்தாத்தான் நானும் இந்த வசதியை அக்சப்ட் பண்ணுவேன்... இல்லைன்னா எனக்கும் எதுவும் வேணாம்னு ஸ்பான்சர் பண்றவர்கிட்ட சொல்லச்சொல்லி ஃபார்கிட்ட சொன்னேன்.

கேட்டும் மத்தவங்களுக்கு அவரால் கொடுக்க முடியாமப் போனா.... எனக்கு செலவு செய்ற அந்தத் தொகையை எங்க எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்க... சின்னதா கிடைச்சாக்கூட போதும்,

அப்படி எல்லாருக்கும் பகிர்ந்து உதவ முடியாட்டி மொத்தத்துக்கும்  வேணாம்.... கூட இருக்கிறவங்களோட ஏக்கம் என்னை நிம்மதியா தனியா இதை ஏத்துக்க விடலைனு சொல்ல நினைச்சேன்.

ஆனா நான் கேட்த்தை ஃபாதர் ஸ்பான்சர்கிட்ட  சொன்னதும், என் கூட இருக்கிற எல்லோருக்கும் எனக்கு இணையான கவனிப்பு கிடைச்சது.

நான் கேட்டேன்ற ஒரே காரணத்துக்காக என்கூட இருந்த இருபது பிள்ளைகளுக்கும் உதவியதைப் பார்த்து, தெய்வத்துக்கு நிகரான பக்தி அந்த ஸ்பான்சர் மேல வந்துருச்சு...

ஹய் ஸ்கூல் படிப்புக்கு இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் படிக்கின்ற போர்டிங் ஸ்கூலில் அவரால நான் சேர்க்கப்பட்டேன். சிம்லாவில் இருக்கிற ஸ்கூலில்  சிறந்த கல்வி... பல நாடுகளில் இருந்தது வந்து படிக்கும் மாணவர்களின் நட்பும் கிடைச்சது,

அனாதையான எனக்கு ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் ஸ்பான்சர் மேல நன்றிக்கடன் வலுத்துச்சு.

லண்டன் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில பிஸ்னெஸ் மேனேஜ்மென்ட் படிக்க சேர்ந்தப்போ தான் லைட்டா அவர் எனக்கு வெறும் ஸ்பான்சர் மட்டும் இல்லைன்னுற எண்ணம் வந்தது...

காரணம், அப்போதான் அவரை நேரில் பார்த்தேன். என்னோட ஸ்பான்சர் தொழிலதிபதி முகில் அதியன் வந்து என்னையப் பார்த்துப் பேசினபோது ‘அப்பா’ன்னு கூப்பிடச் சொன்னபோது.... அவர் யாரோ எனக்கு ரெத்தம் சம்மந்தம் இல்லாத நபர் இல்லைன்ற எண்ணம் வந்தது...

எதுக்கு...? ஏன்...? அப்படின்ற கேள்வியும் வந்தாது.... படிப்பு முடிஞ்சக் கையேடு என்னைய அவரின் ஒரு கம்பெனியில் எம்.டி சீட்டில் உட்காரவச்சதோடு, உலக தொழிலதிபர்கள் மாநாட்டில் நிருபர்கள் முன்னாடி நிக்கவச்சு அவரோட மூத்த மகன்னு அறிவிச்சப்போ வந்த ஃபீலிங் இருக்கே.... அதை ஹேண்டில் பண்ண ரொம்ப கஷ்டமா இருந்தது இப்பவும் நினைவில் இருக்கு.  .

அப்பாவா இல்லாம ஸ்பான்சரா இருந்தப்போ கடவுளா தெரிஞ்சவர், அப்பான்னு தெரிஞ்சப் பிறகு அனாதையா என்னைய எதுக்கு விட்டார் அப்படின்ற கேள்வியும், சரியான ரீசன் தெரிஞ்சே ஆகணும்ன்ற வெரியும் வந்துச்சு...  

ஆனா ஃபாதரும், அப்பாவும் என்னோட பாதுகாப்புக்கும் நல்லதுக்கும் தான் அப்படிப் பண்ணியதா சொன்னப்போ மொட்டையா அப்படிச் சொன்னா என்ன அர்த்தம்ன்ற ஆதங்கம் வந்துச்சு...

அப்போ அவரோட மனைவியா  ன் உன்னோட அம்மா இஷானி இருந்தாங்க... இஷாநிதான் என்னோட அம்மாவானு கேட்டப்போ, இல்லைன்னு சொல்லிட்டாங்க..

உடனே வெளியில் சொல்ல முடியாத உறவால உண்டான பிள்ளையா நான்...? அப்படின்ற கேள்வி முதலில் எனக்குள்ள வந்தாலும் உடனே அது அபத்தமாப் பட்டுடுச்சு....

அப்படி இருந்தா மூத்த மகன்னு பத்திரிகையில் பேட்டி கொடுத்துருக்க மாட்டாங்கனு தோனுச்சு... ஆனாலும் அம்மா பத்திக் கேட்டதுக்கு எனக்கு சரியான பதில் சொல்ல ரெடியா இல்ல.. அதுக்குப் பின்னாடி தான் நானே கண்டுபிடிக்கணும்னு இறங்கிட்டேன்.

முகில் அதியனின் முதல் வொய்ப் துவாரஹா இறந்துட்டாங்க அப்படின்ற விஷயமும்... துவாரஹா இறந்தப்போ சென்னையில் இருந்ததாகவும் நியூஸ் தெரிஞ்சதால சென்னையில் இருக்க தொழிலை பார்த்துகுறேனு சொல்லி இங்க வந்தேன். இங்க இருந்துதான் என்னோட டிடைக்டிவ் வேலையை அதுவும் என்னோட அடையாளத்தை தேட என் ஸ்கூல் லைப் ஆரம்பிச்ச சென்னைக்கே வந்து சேர்ந்தேன்...

இதுல நான் தெரிஞ்சுக்கிட்டது உன் அம்மாவும் என் அம்மாவும் ஒரே வீட்டில் அதாவது நேத்து நான் வந்திருந்த வெள்ளை மாளிகையில் பிறந்து வளர்ந்தவங்கன்ற விஷயம் தெரிஞ்சது....

மும்பையில பிறந்துவளர்ந்த நம்ம அப்பா குடும்பம் ஒரு தமிழ் குடும்பம். பூர்வீகமான தமிழ் நாட்டில தொழில் தொடங்கணும்னு நினச்ச அப்பா... அவர் படிச்சு முடிச்ச நேரத்தில் இங்க உள்ள பேக்டரி ஒன்னை விலைக்கு வாங்க வந்துருக்காங்க.

அது துவாரஹா அம்மா, கனகவல்லியோடது. கனகவல்லி மகளுக்கு  வரன் பார்த்துகிட்டு இருக்கிற விஷயமும் தெரியவந்துருக்கு... பேக்டரியை வாங்க வந்த நம்ம அப்பா அதை விட்டுட்டு துவாரஹாவை பொண்ணு கேட்டுருக்கார். கனகவல்லிக்கும் முகில் அதியனை பிடிச்சுப் போனதால அப்பாவுக்கு கட்டிகொடுத்து அந்த கம்பெனியையும் சீதனமா கொடுததா தகவல் எனக்கு கிடைச்சிருக்கு...,

கல்யாணமான ஒரே வருஷத்தில் அவங்களுக்கு குழந்தையும் பொறந்துச்சு... ஊட்டியில இருக்கிற அவங்க எஸ்டேட்டுக்கு மூணு மாத குழந்தையோடு துவாரஹா ரெஸ்ட் எடுக்க அம்மா கனகவல்லிக் கூட போயிருக்காங்க,

அங்க ஆக்சிடெண்ட்டாகி அவங்க கார் மலையில் இருந்து உருண்டதாகவும் துவாரகாவும் அவங்க மூனுமாத ஆண் குழந்தையும், கனகவல்லியும் இறந்துட்டதா தகவல் வந்து தேடிப் போனப்போ... உடலை மீட்க முடியலைன்னு கேள்விப் பட்டேன்.

ஆனா அந்த மூணு மாதமான இறந்த குழந்தைக்கும் எனக்குமான வயசு ஒரே வயசுன்ற விஷயம் மட்டுமே இறந்ததா நம்பப்படுற குழந்தை நானா இருக்குமோன்ற கேள்வி எனக்கு வந்தது...

துவாரஹா கூட ஊட்டியில இருந்தவங்களை விசாரிக்க நினைச்சபோது தான் ஒத்தாசைக்கும் குழந்தையை கவனிக்க இருந்த செவ்வந்தியை பத்திக் கேள்விப் பட்டேன். அந்த இன்சிட்டென்டுக்குப் பிறகு செவ்வந்தி காணாம போயிட்டதாகத் தகவல் கிடைச்சது.

பாட்டி கனகவல்லியோட கணவரும் இதேபோல ஒரு ஆக்ஷிட்டேன்டில் துவரஹா பிறந்து நாலு ஐந்து மாசத்திலேயே இறந்ததாகவும்...

அப்போ கணவன் இறந்த துக்கத்தில் கனகவல்லி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஊரில் கஷ்ட ஜீவன் நடத்திக்கிட்டு இருந்த வீட்டைவிட்டு காதலிச்சு திருமணம் செய்துகிட்ட தங்கச்சி அமுதவல்லியை ஒத்தாசையா குழந்தையைக் கவனிக்க வரவச்சிருக்காங்க.

கணவன் இல்லாமப் போய் அந்த கவலையில் உடல்நிலை பாதித்து இருந்த கனகவல்லி கணவனின் தொழிலை எடுத்து நடத்த உதவிக்கு அமுதவல்லியின் புருஷன் சண்முகத்தையும் வரவழைச்சு பங்கலாவிளில் கூடவே வச்சிக்கிட்டாங்க.

இங்க பங்களாவுக்கு வந்ததுக்குப் பிறகு தான் அமுதவல்லிக்கும் சுந்தரத்துக்கும் இஷானி பொறந்திருக்காங்க. துவாரகாவும் இஷானியும் ஒன்னா ஒரே வீட்டில வளர்ந்தவங்க தான்.

கனகவல்லி இறந்ததால அவங்களோட சொத்துக்களோட கார்டியனாய்  தான் அமுதவல்லி இருந்திருக்காங்க. அக்கா பேரனின் இருபதாவது வயதுக்கு பிறகுதான் அந்த சொத்துகள் அவனுக்குச் சேரணும்னு எழுதிவச்சிருக்காங்க.

என்னைய மகன்னு அறிவிச்ச என் இருபதாவது வயதில் கனகவல்லியின் சொத்துக்கள் எல்லாம் என் பேருக்கு வந்துருக்குன்ற விஷயம் கூட இதுவரை ரகசியமாத்தான் அமுதவல்லி வச்சிருக்காங்க.

உங்க அம்மாவுக்கு கூட உயில் விஷயம் தெரியாமதத்தான் அமுதவல்லி பாட்டி ரகசியமா வச்சிருக்காங்க. இங்க வந்து ஒவ்வொன்னா தோண்டிப் துருவிப்  பார்த்தபோதுதான் இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சது,

இதுல நான் எப்படி மூணு மாசமா இருக்கும்போது ஆக்சிட்டேன்டில் தப்பிச்சு அநாதை இல்லத்துக்குப் போனேன்... இல்லத்துல இருந்த என்னை என்னோட எட்டாவது வயசுல எப்படி அப்பா தெரிஞ்சுக்கிட்டு  கார்டியனா வந்தாரு...

இதுபோல பல கேள்விக்கு உன் பாட்டிகிட்ட பதில் இருக்கும். அதை நீயே அமுதவல்லி பாட்டிக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ உதித்...” என்று தன கதையை கூறி முடித்தான் வண்ணன்.

---தொடரும்---  

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 06 , 07

அத்தியாயம் 06

மும்பைக்குச் செல்லும் விமானத்தில், பிஸ்னெஸ் கிளாஸ் பகுதியில் ஓர் இருக்கையில் அமர்ந்து கண்மூடி பறந்துக்கொண்டிருந்தார் முகில் அதியன். அவரின் நினைவுகளும் பயணித்துக்கொண்டிருந்தது.

“என் வீட்டுக்கு உதித் வந்துருக்கான்ப்பா, பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்” காலையில வண்ணன் மெசேஜ் அனுப்பிவிட்டதை பார்த்த ஆசுவாசத்தில்... பிஸ்னெஸ் பார்க்க உடனே கிளம்பிட்டேன். .உதித்தை லாரா இஸ்யூவில் இருந்து வெளியில கொண்டுவந்துடுவான்... எல்லாத்தையும் அவன் சரி பண்ணிடுவான்’

வண்ணனை படிக்க வச்சு ஒரு நிலைக்குக் கொண்டு வந்தேன்ற காரணத்தை மட்டும் வச்சு... அப்பான்ற உறவை நான் வெளிபடுத்தியும்... அந்த உறவுக்கான அங்கீகாரத்தை கையில வாங்காம அவனுக்குத் தேவையானதை அவனே செய்துக்கிறான்.

அதேநேரம் நான் கேக்குற உதவிகளையும்... கொடுக்கிற வேலைகளையும் செய்துக்கொடுக்கவும் தயங்குறதில்லை. அவனை நினச்சு சந்தோஷமாகவும் இருக்குது, வண்ணனுக்கு நியாயம் செய்யவில்லைன்னு துக்கமாகவும் இருக்குதே...

அமுதவல்லி அத்தை ரூமில வச்சு ‘வண்ணனை அங்க இருந்து கிளம்பச்சொல்லி’ உதித் சொன்னதும் எனக்கு கஷ்டமாப் போயிடுச்சு...

உதித்கிட்ட இத்தனை காலமா உண்மையைச் சொல்லாம விட்டுட்டோம்ன்ற குற்றவுணர்வில்..... துவாரகாவுக்கு இத்தனை நாள் செய்யாத நியாயத்தை செய்ய உண்மையைச் சொன்னேன். அந்த பங்களா யாரோடதுனு உதித்துக்குப் புரிய வச்சேன்.

வண்ண முகிலின் வீடு இது.... இப்போ புரிஞ்சதா....? இந்த வீட்டுக்கு சம்மந்தம் இல்லாத ஆள் யாருன்னு...? கேட்டதும் உதித்தோட முகத்தில எம்புட்டு கலக்கம் உண்டாச்சு...

அப்ப நான் உதித்தை சமாதானப் படுத்துனாலும்... அந்த சிட்டிவேஷனை வண்ணன்தான் நார்மலாக்க சட்டுன்னு ‘கிளம்புறேன் அப்பா’னு சொன்னான்..

உதித்கிட்ட, ‘வண்ணனும் நீயும் ஒத்துமையா இருக்கணும்’னு சொன்னதும் அவன் உடைஞ்சு போய் குற்றவாளியாய் இஷானிய கோபமாய் பார்த்து முடிவு எடுக்க முடியாம தள்ளாடிக்கிட்டு இருந்தான். அவனுக்கு முடிவு எடுக்க அவகாசம் கொடுக்க நெனச்ச வண்ணன்.

“அப்பா நான் கிளம்புறே”னு சொல்லிட்டு எந்த ஈகோவும் பார்க்காம உதித் முன்னாடி இருக்கிற டீபாயில் விசிடிங் கார்டு வச்சவன் “நீ லாரா கேஸ்ல நான் இறங்கணும்னு முடிவெடுத்தா.... இதில் இருக்கிற அட்ரஸ் அல்லது மொபைலில் என்னையக் காண்டாக்ட் பண்ணு’ன்னு சொல்லிட்டு வெளியேறினான்.

உதித்தை சமாதானப்படுத்த நெனச்ச நான் வண்ணனை போகாதனு தடுக்காம வேடிக்கைத்தானே பார்த்துக்கிட்டு நின்னேன்.... ஆனா அவன் எனக்காகத்தானே எல்லாம் செய்றான்...துவாரஹாவும் அப்படித்தானே..!

துவாரகாவை கல்யாணம் பண்ணின ரெண்டுவருஷம் வாழ்கை சொர்க்கமாய் இருந்ததே... புத்தித் தடுமாறிப் போய் இஷானி விரிச்ச சதி வலைக்குள்ள மாட்டி தேவதை துவாரஹாவை தொலைச்சதுக் கூட புரியாம பேய்க்கூட கூட வாழ்க்கையையும் இணைச்சு பிள்ளைகளை பெத்து இருக்கேன்ற ஆத்திரம்.

அந்த ஆத்திரத்தில் செய்த அடுத்த தப்பு சந்திரிக்கான்ற பிசாசை மேரேஜ் பண்ணியது.  சந்திரிக்காவை ஆரம்பத்தில பார்த்தப்போ, அவளோட அபாரமான அழகும், புத்திசாலித்தனமும், தொழிலில் எனக்கு நிகராய் நின்ன அவளோட டேலண்டும் ரொம்பவே பிரமிப்பாய் இருந்தது. அதுவே ரசிப்புடன்... அவளை பார்க்க வச்சது... இப்படிப்பட்ட பொக்கிஷத்தை சொந்தமாக்க சான்ஸ் கிடைச்சப்போ பேரானந்தமாகத்தானே இருந்தது.

ஆனால் இப்போ அவளைப் பார்த்தா அழகிய விஷத்தை உதட்டுக்கு அடியில் வைத்திருக்கும் தோல் மினுமினுப்பு உள்ள இச்சாதாரி நாகத்தைப் பார்க்கிறது போல இருக்குதே....

துவாரஹாவை கல்யாணம் பண்ணினப்போ அவளோட வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம் தான் அவள் மட்டுமா அவளை சேர்ந்த எல்லாமே என்னோடதா நான் எடுத்துக்கிட்டேன், அவளோடது பிராபர்ட்டி எல்லாமே என்னோடதா பீல் பண்ணினேன்.. அவள் கூட ஒன்னா வளர்ந்த தங்கச்சி இஷானியையுமே.....

அதனாலத்தானோ என்னவோ என்கூட வாழ இஷ்டம் இல்லாம சீக்கிரமே என்னைவிட்டு போய்ச் சேர்ந்துட்டா.. அவள் இல்லாமப் போனதுக்குப் பின்னாடி தான் அவளோட அருமையே எனக்குப் புரிஞ்சது...  இஷானியோட மறுபக்கமும் புரிய ஆரம்பிச்சது...

ஆனா எல்லாமே என்னோட கை மீறிப் போயிடுச்சு... அமுதவல்லி ஆண்டி போல குணம் உள்ள ஒருத்தவங்க பெத்த இஷானியா இப்படின்னு முழுசா இஷானி பற்றித் தெரிஞ்சப்போ ரெண்டு பிள்ளைகள் ஆகிடுச்சு...

இனி பிள்ளைகளுக்காகத்தான் லைஃப், என் பிஸ்னஸ் தான் என் மூச்சுன்னு இருந்தேன். ஆனா தொழில் மேல இருக்கிற மோகம் சந்திரிக்கா கூட இணைய வச்சது.

தொழிலோட இல்லாம வாழ்க்கையோடு இணைச்சுகிட்டா இன்னும் நல்லா இருக்கும்னு நினச்சது எவ்வளவு பெரிய அபத்தம்...

அவளோட பிஸ்னசை நான் ஏப்பம் போட நினச்சா... அவள் என்னோடதை அவளோடது ஆக்க ஆசைப்படுறாள்... சுதாரிச்சு அலார்ட் ஆகிட்டதா நெனச்சேன் ஆனா இந்த உதித் எப்படி லாராகிட்ட மாட்டினான்.

சந்திரிக்காவோட அம்மா அப்பாவோட வளர்ப்பு மகள் லாராகிட்ட... அதுவும் சந்திரிக்காவின் தங்கை முறை ஆகிய அந்த சின்ன பொண்ணு லாராகிட்ட எப்படி மாட்டினான்...? என்ற யோசனையோடு இருந்த போது உதித் லாராவுக்கும் அவனுக்குமான உறவு எப்படி ஆரம்பமானது என்பதை வண்ணனிடம் சொல்ல ஆரம்பித்தான்.

 ********

“லாராவை ஒரு பிஸ்னெஸ் பார்ட்டியில தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். என்னோட குடும்பம் சிதைஞ்சு நிக்க காரணமான அந்த சந்திரிக்கா கூட  அவளைப் பார்த்தேன்.

லாராவின் முகம் பார்க்க ரொம்ப அப்செட்ல இருந்துச்சு. அந்த அழகான சின்னப் பொண்ணு யாருன்னு விசாரிச்சப்போ சந்திரிக்காவோட தங்கச்சின்னு கேள்விப்பட்டேன்.

சந்திரிக்கா பார்வைக்கு இளையவளா இருந்தாலும் அவளோட வயசு எனக்குத் தெரியுமே.. அதனால தங்கச்சின்னு சொல்லிக்கிட்டு கூட கூட்டிகிட்டு வந்திருக்கும் லாரா வயசுக்கும் சந்திரிக்காவின் வயசுக்கும் உள்ள வித்தியாசம் தங்கச்சியா இருக்க வழி இல்லைன்னு தோண வச்சது.

அதுக்கு அடுத்தடுத்த மீடிங்கிலும் சந்திரிக்காவோட வந்த லாராவவின் முகத்த நோட்டம் விட ஆரம்பிச்சேன்... பிடிக்காம பார்ட்டிக்கு வந்திருக்கிறதை போலவும்... ஏதோ ஒரு கட்டாயத்தில் அங்க இருக்கிறது போலவும் எனக்குத் தோனுச்சு.

காரணம் யாரையுமே லாரா கண்டுக்கலை, வந்ததும் ஓரமா இடம்பார்த்து போய் உட்கார்ந்துகிட்டு மொபைலில் எதையாவது பார்க்க ஆரம்பிச்சிடுவா... பார்ட்டி முடியறதுக்குள்ள அடிக்கடி வாட்ச்சை பார்ப்பதும் சில சமயங்களில் சந்திரிக்காவோட பி.ஏ செபாஸ்டியன்கிட்ட ‘இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் இங்க இருந்து கிளம்ப..?’ என்று விசாரிப்பதையும் நான் கவனிச்சேன்.

சந்திரிக்காவோடு பேசும் போது அக்காவோடு பேசும் ஒரு நெறுக்கம் இல்லாம ஒரு பயத்துடன் பேசுறது போல லாராவோட பாவனை இருந்தது.

எனக்கு ஏற்கனவே சந்திரிக்கா நம்ம அப்பாவை கல்யாணம் செய்ததால அவமேல பயங்கர கோபம் இருந்தது. அவளாலே என் குடும்பமே சிதைஞ்சு போச்சுன்ற வருத்தம் இருந்தது. சந்திரிக்காவை நெருங்கி அவளை ஏதாவது செய்யணும்ற கோபம் எனக்குள்ள இருந்தது. ஆனா நெருங்கிப் பேசக் கூட எனக்கு வாய்ப்பு இல்லாம இருந்தது.

சந்திரிக்கா கூடவே இருக்கிற லாராவுக்கும் ஒருவேளை என்னையப் போலவே சந்திரிக்கா மேல எதுவும் கோபம் இருக்குதோ...? அதுனாலத்தான் அப்படி இருக்காளோனு தோனுச்சு. அப்படி இருந்தா லாரா கூட கூட்டுச்சேர்ந்து சந்திரிக்காவை ஏதாவது பண்ண முடியுமானு பழகிப் பார்த்து கண்டுபிடிக்கணும்னு தோனுச்சு.

லாரா தனியா ஒரு பொட்டிக்ஸ் வச்சிருக்கிறத விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். என்னோட காலஜ் ஃப்ரெண்ட் டெய்சி கூட அவளுக்கு டிரஸ் வாங்குறது போல நானும் பொட்டிக்ஸ் போனேன். போய் லாராக்கூட பேச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

முதலில் அவள் என்கூட பேசலை, ஆனா அடிக்கடி பொட்டிக்ஸ் போய் அவள்கூட ஏதாவது சாக்கு வச்சு பேசி பேசி நல்ல ஃப்ரெண்டு ஆனேன். அதுக்குப் பின்னாடிதான் நான் யாருன்ற உண்மையைச் சொன்னேன். ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடியே அவளும் நான் யாருன்ற விஷயத்தை தெரிஞ்சு வச்சிருந்தா...

பார்ட்டியில நான் அவளை கவனிக்கிறதை கவனிச்சு இருக்கா... படிப்படியா எங்க பேச்சு வளர்ந்தது.

சந்திரிக்காவின் அம்மாவும் அப்பாவும் அவளை அடாப்ட் பண்ணி சேலத்தில் வச்சு வளர்த்ததாகவும் ஹயர் ஸ்கூல் படிக்க வைக்க மும்பைக்கு கூட தங்கச்சி லாரவ அழைச்சிட்டு வந்த சந்திரிக்கா படிப்பு முடிச்ச பிறகும் அவளோடு அவள் சொல்றதை செய்யும் ஒரு மெஷினாக லாராவை கூடவே வச்சுக்கிட்டாள்.

சந்திரிக்காவின் கைப்பாவையாக அவள் சொவதை மட்டும் செய்யணும், சொல்ற படிப்பைத்தான் படிக்கணும். தலையாட்டி பொம்மை போல இருக்கணும்னும். லாராவுக்குனு எந்த தனிப்பட்ட ஆசையும் இல்லாம இருக்கணும்னு கட்டாயப் படுத்தப்படுத்தபட்டாள்.

அதனால் லாராவுக்கு வாழ்கையே வெறுத்துப் போனதாக என்கிட்டே புலம்புவாள். போக்கிடம் இல்லாமல் அவளோடு இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்கிட்டே புலம்பினாள் ஒரு நாள்.

நான் இருக்கேன் உனக்குன்னு சொல்லி அவளோட கையைப் பிடிச்சேன்...

எப்பவும் இருப்பீங்களா...? எனக்கு உங்க கூட பேசும் போது சந்தோசமா இருக்குனு சொன்னாள் லாரா. இதே போல எப்பவும் என்னைய சந்தோசமா உங்க கூடவே வச்சுக்க முடியுமானு கேட்டாள்.

எனக்கும் தொடர்ந்து லாரா கூட பழக ஆரம்பிச்சப் பிறகு அவளை ரொம்பவும் பிடிச்சது... நானும் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சேன். எப்பவும் அவளுக்கு துணையா இருக்கிறதா வாக்குக் கொடுத்தேன்.

ஒரு காலகட்டத்தில் நாங்க ரெண்டுபேரும் லவ் பண்ற விஷயம் சந்திரிக்காவுக்குத் தெரிய ஆரம்பிச்சது. அது அவளுக்குப் பிடிக்கலை.

லாரா அவளோட கண்ரோல் விட்டு விலகிப் போறது பல வகையில் சந்திரிக்காவுக்கு நட்டத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருகிறதால லாராவை என்கிட்டே இருந்து விலகிடச் சொல்லி கட்டாயப் படுத்தி இருக்காள்.

லாரா பேர்ல டம்மி கம்பெனி ஆரம்பிச்சு அதற்கு ரப்பர் ஸ்டாம்பா அவளை பயன்படுத்திக்கிட்டு இருந்தாள். அவள் என்னைய கல்யாணம் செய்துக்கொண்டால் அந்த பணம் சந்திரிக்காவின் கைவிட்டுப் போயிடும்னு பயந்தாள்.

அதால என்னைய லவ் பண்ணக் கூடாதுன்னு லாராவுக்கு நிறைய திட்டும் அடியும் கிடைச்சிருக்கு. வீட்டை விட்டு வெளியில் போகக்கூட விடாம ஹோம் அரஸ்ட் பண்ணப்பட்டாள் லாரா.

அத்தியாயம் 07

அவள் கையில் போன் கூட கொடுக்காம என்னைய விட்டு விலகச்சொல்லி டார்ச்சர் பண்ணி இருக்கா சந்திரிக்கா. அங்க இருந்து எஸ்கேப்பாகி முப்பையில் நான் இருந்த வீட்டுக்கு வந்துட்டாள். அதுக்குப் பிறகு சந்திரிக்கா வீட்டுக்கு போகாம என்கூடவே இருந்துட்டாள் நாங்க ரெண்டுபேரும் லிவ்விங்ல வாழ ஆரம்பிச்சோம்..

கம்பெனி வேலையா டெல்கிக்கு நான் போயிருந்தேன், நான் லாராக்கூட இல்லாததை தெரிஞ்சுக்கிட்டு என் வீட்டுக்கே வந்த சந்திரிக்கா வலுக்கட்டாயமா லாராவை இழுத்துட்டுப் போயிட்டாள்.

மறுபடியும் லாராவை ஹோம் அரெஸ்டில் வச்சுக்கிட்டாள். அப்படி இருந்தபோது எதனாலயோ அடிக்கடி லாராவுக்கு மயக்கம் உண்டாகியிருக்கு. சந்திரிக்கா அவளை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போய் செக்கப் செய்து பார்த்தபோது எதுவோ வைட்டமின் குறைபாடெனச் சொல்லி மாத்திரை தொடர்ந்து சாப்பிடச்சொல்லியிருக்கார்.

அதற்கு பிறகு அவளை பொட்டிக்சில் கூட்டிக்கொண்டு போகவரவென  பாடிகார்டாக ஒருத்தன் கூட அனுப்பினா. வேறு எங்கும் தப்பிச் செல்லவோ என்னை சந்திக்கவோ முடியாதபடி சூழலை உருவாக்கி அனுப்பிக்கிட்டு இருந்தாள்.

லாராவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போயிருக்கு. ஒருநாள் மிகவும் உடலுக்கு முடியாமப் போனதால பொட்டிக்ஷில் இருந்து பாடிகார்ட்டோட ஹாஸ்பிடல் போயிருக்கா. அவனை வாசலில் நிற்கச் சொல்லிட்டு போய் டாக்டர் பார்த்தபோது டாக்டர் அட்வைஷின் படி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியிருந்தாள்.

அப்பொழுது ஹாஸ்பிடலில் எதேர்ச்சையாக வந்திருந்த ஃப்ரெண்ட டெய்சியை சந்திச்சிருக்கா. ஹாஸ்பிடலில் அவள் இருக்கும் விஷயத்தை என்கிட்டே சொல்லச் சொல்லி என் கம்பெனி அட்ரஸ்க்கு அனுப்பி இருந்தாள்.

டெய்சி என்கிட்ட வந்து லாரா ஹாஸ்பிட்டலில் இருக்கிற விஷயத்தை சொன்னாள். ஹாஸ்பிடல் தவிர்த்து மற்ற இடங்களில் பாதுகாப்பு மீறி என்னால் அவளை சந்திக்க முடியலை.

லாராகிட்ட இருந்த மொபைளையும் சந்திரிக்கா பிடிங்கிட்டா. அதனால் அவள தொடர்பு கொண்டு பேசமுடியாம இருந்த என்னை... லாராவின்  ஃப்ரெண்டு டேய்ஷி கம்பெனிக்கே வந்துபார்த்தாள்... லாரா நிலையைச் சொல்லி அவளை பார்க்க என்னைய ஹாஸ்பிட்டளுக்கு கூட்டிக்கொண்டு போனாள்.

போன இடத்தில் லாராவின் திடீர் உடல் மெலிவு என்னை கலங்கடித்தது, என்ன காரணமென விசாரிர்த்தபோது அடிக்கடி மயக்கம் வந்தது டாக்டரிடம் காட்டியபோது வைட்டமின் பற்றாக்குறை என்று டேப்லெட் கொடுத்தாங்க. அதற்கு பிறகும் ஏனோ தெரியவில்லை உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே போகிறது என்றாள் லாரா.

அத்தோடு தலைவலியும் என்னைய பாடாய்ப் படுத்துது என்னால் எதையும் யோசிக்கக் கூட முடியலைன்னு சொன்னாள்.

எனக்கு ஏனோ அவளுக்கு வைட்டமின் பற்றாக்குறை இருந்ததாக சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியலை... ‘எந்த டாக்டர் உனக்கு டிரீட்மென்ட் கொடுத்தாங்க...? அதுக்கு நீ இப்போ என்ன டேப்லட் சாப்பிடுற...? உன் ரிப்போர்ட்... நீ சாப்பிடுற டேப்லெட் எல்லாம் என்கிட்ட காட்டு...’ என்று கேட்டேன்.

அவள் அப்பொழுது தங்கி இருந்த மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர் ஒருவரின் பெயரைச்சொல்லி அவர் தான் டிரீட்மென்ட் கொடுத்தார். இதோ அவர் கொடுத்த மாத்திரை இதுதானென என்னிடம் காட்டினாள்.

அந்த டேப்லட்டின் அட்டையை பெயரோடு போட்டோ எடுத்து அங்கிருந்தவாறே எனது நண்பனும் மருத்துவனுமான ஷையத்துக்கு வாட்சைப்பில் அனுப்பினேன், அது எந்த வகையான மருந்து எந்த நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்து எனக்கேட்டான்.

அடுத்த பத்து நிமிசத்துக்குள் டாக்டர் ஷையத் எனக்கு கால் பண்ணினான். பதிலை மெசேஜாக டைப் பண்ணி அனுப்பாமல் உடனே  நேரடியாக பேச வந்ததுமே, என் கெஸ் சரிதானென புரிஞ்சது. போனை ஸ்பீகரில் போட்டு “சொல்லு ஷையத், எப்படி இருக்க?” எனக் கேட்டேன்.

“ஐ ஆம் பைன் உதித், நீ இப்போ வாட்ஸ் ஆப்ள ஒரு டிரக் போட்டோ அனுப்பியிருக்கியே அது ‘ஏ’சைக்கார்டிக் டிரக். மெண்டல் டிஸார்டர் இருக்கிறவங்களுக்கு அதாவது, மூளை பாதிப்பு உள்ளவங்களுக்கு கொடுக்கும் மாத்திரை. அதுவும் ரொம்ப தீவிரமான மனநோய் உள்ள சமயம் கொடுக்குற டிரக் அது.

நல்ல ஆரோக்கியமான ஒருத்தர் அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டால் அவங்க மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகய் பிரைன் டெத் என்ற நிலைக்கு போயிடுவாங்க” என்றான்.

“அதாவது.... ஸ்லோ பாய்சன் போன்ற மாத்திரைன்னு சொல்றயா ஷையத்..?

ம்... நிச்சயம் அப்படித்தான். நீ சொல்வது போல இது விட்டமின் பற்றாக்குறைக்கு கொடுக்கிற மாத்திரை இல்லை. அதே போல இந்த மாத்திரை மெண்டல் டிசார்டர் உள்ளவங்களுக்கே கூட தொடர்ந்து கொடுக்க மாட்டாங்க. இதை உனக்கு வேண்டியவங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்தா உடனே நிப்பாட்டச் சொல்லு

இந்த மாத்திரையால் அவங்களோட மூலையில் எதுவும் பாதிப்பு உண்டாகி இருக்குதான்னு நல்ல டாக்டர் ஒருத்தரை பார்த்து கன்சல்ட் பண்ணிட்டு டிரீட்மென்ட் எடுக்கச்சொல்லு.” என்றான்.

ஸ்பீக்கரில் போட்டு பேசியதால டாக்டர் ஷையத் சொன்னதை லாராவும் அவளின் தோழியும் கேட்டுவிட்டு மிகவும் அதிர்ந்து போனார்கள்.

மருத்துவமணையின் நிர்வாகத்துக்கு சொல்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் வெளியேற வச்சோம் லாராவை. அவசர அவசரமாக நர்சோ மற்றவர்களோ பார்ப்பதற்குள் வெளியில் இருக்கும் அவளின் பார்டிகாட்டுகுத் தெரியாமல் டெய்சியோட டிரஸ்ஸை லாரா போட்டுக்கிட்டு முகத்தை துப்பட்டாவால் முஸ்லீம் பெண்களை போல தனது முகம் முழுவதையும் கவர் செய்துக்கொண்டு குனிந்தபடி வெளியேறி காரில் என்னோடு அங்கிருந்து தப்பித்து என் வீட்டிற்கே மறுபடியும் வந்துவிட்டாள்.

அதன் பின்பு நான் அவளை இரண்டு மூன்று டாக்டரிடம் காண்பித்தேன். நல்லவேளை அவள் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்ததால் அந்த மாத்திரையின் பாதிப்பில் இருந்து வெளியேற டிரீட்மென்ட் கொடுத்ததை அவளின் உடல் சப்போர் பண்ணியது.

விரைவில் அவள் குணமாக எல்லா சாத்தியக்கூறும் இருந்ததால் அவள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக ரெக்கவரானாலும் இன்னும் முற்றிலும் அந்த மாத்திரையின் பாதிப்பில் இருந்து அவள் வெளியே வரவில்லை.

அவளோட உடல் நிலை சரியாகும் வரை கல்யாணம் செய்ய வேண்டாமென்ற டாக்டர்சின் அட்வைசால் முதலில் என்கேஜ்மென்ட் மட்டும் செய்துக்கொள்வோம்னு முடிவெடுத்தோம்.

எங்க ரெண்டு பேருக்குமே ஒரு டவுட் வந்தது, நல்ல உடல்நிலையில் இருந்த அவள் எதுக்கு அந்த டேப்லெட் சாப்பிடும் முன்பு அடிக்கடி மயக்கம் போட்டாலென டவுட் வந்தது.

அப்போது லாரா சாப்பிடும் உணவில் மயக்கம் உண்டாக்க எதையேனும் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற புரிதல் வந்தது.

உதித் சொன்னதை கேட்டு அதிர்ந்த வண்ணன் “நல்லவேளை எப்படியோ உண்மை தெரிஞ்சு காபாத்திட்டீங்க. இல்லைன்னா லாராவின்  நிலைமையை நினைக்கவே பயமாயிருக்கு.

ஆமா லாரா மறுபடி உன் வீட்டுக்கு வந்ததுக்குப் பிறகு சந்திரிக்காவாள் தொந்தரவு வரலையா?” என்ற வண்ணனிடம்,

“வந்தது, ஆனா அவளுக்கு தப்பான டிரீட்மென்ட் கொடுத்ததுக்கான அத்தனை ஆதாரத்தையும் திரட்டிக்காட்டி நான் சந்திரிக்காவை மிரட்டியதும் எங்களை அப்போதைக்கு மிரட்டுறதை விட்டுட்டா.

ஆனா நாங்க ரெண்டுபேரும் கல்யாணம், செய்யப்போறோமென்ற விஷயம் தெரிஞ்சு எங்களோடு மறுபடியும் பேச வந்தா.... நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்யக்கூடாதுன்னு மிரட்டினா” என்றான்.

“ஏன்...? நீங்க கல்யாணம் பண்றதால அவளுக்கு அப்படி என்ன பாதிப்பு?” என்றதும்.

லாரா பேரில் டம்மி கம்பெனி ஆரம்பித்து கொஞ்ச மாதங்கள் முன்னாடிதான் சந்திரிக்காவின் நூத்துக்கணக்கான கோடி ரூபாய்க்கு லாராவை பினாமியா ஆக்கியிருக்கா

இந்த நிலையில் லாரா அவளை பிரிஞ்சு என்னை கல்யாணம் செய்தால் அந்த பினாமி பிராப்பர்ட்டி டம்மி கம்பெனி அமெளன்டும் கைவிட்டு போயிடுமேட... போறது லாரா மட்டும் இல்லையே.... அவளோடு அம்புட்டுப் பணமுமில்ல கை விட்டுப் போயிடும்”

“டம்மி கம்பெனி, அதோட ஷேர் அப்படிலாம் சொல்றீயே உதித்! என்ன ஏதுன்னு தெளிவா சொல்லு” என்றவனிடம்,

“சந்திரிக்காவோட ஹஸ்பென்ட் யார் தெரியும்ல உலகளவில் பேர் சொல்லக்கூடிய சேனலின் சி.இ.ஓவான முகில் வண்ணனை, நம்ம அப்பாவை.

அப்பாவும் சந்திரிக்காவும் சேர்ந்து கல்யாணத்தில்  இணைஞ்சதுக்கு  காரணம்... ரெண்டு பேருக்கும் நெருங்கிய பழக்கம் வந்ததுக்கும் காரணம்  ஜாய்ண்டா புது டெலிகாம் கம்பெனி உருவாக்கியதாலத்தான்.

நல்லா வளர்ந்த அந்த நிறுவனத்தை ஒரு வருஷம் முன்னாடி வெளிநாட்டு நிறுவனத்துக்கு வித்துட்டாங்க. அதன் மூலம் அவங்களுக்கு கிடைத்த அந்நிய நாட்டுப் பணம்(ஹவாலா மூலம்) எவ்வளவு தெரியுமா? தொள்ளாயிரம் கோடி...!

ஆனால் கவர்மென்ட் கணக்கில் காண்பித்தது வெறும் தொண்ணூறு கோடி மட்டுமே.... அந்த கணக்கில் காட்டாத பணத்தை, லாரா பேரில் டம்மி கம்பெனி ஆரம்பிச்சு மூணு நாலு தவணையா அவள் பேரில் இன்வெஸ்ட் பண்ணி இருக்காள் சந்திரிக்கா.

என்னது தொள்ளாயிரம் கோடியா...!?

ஆமா அந்த அமெளன்டை ஹவாலா மூலம் கைப்பற்றியிருக்காங்க.  பணத்தை புருசனும் பொண்டாட்டியும் பாதியா பிரிச்சுக்கிட்டாங்க.

சமீபத்தில் இந்தியன் பிஸ்னஸ் மேகசீனில் உலக அளவில் முன்னணியில்  இருக்கும் பெண் தொழிலதிபர்களின் வரிசையில் எட்டாவது இடத்தை இந்தியாவைச் சேர்ந்த சந்திரிக்கா முகில் இடம்பிடித்ததாக வந்திருந்ததே பார்த்திருப்பேல்ல

இந்த பணத்தை வச்சுத்தான் அவள் தனிப்பட்ட முறையில் ஆரம்பிக்க திட்டமிட்டு பில்ட் பண்ணிட்டு இருந்த அந்த புதிய சேனல் அதுக்கான பண்ட் எல்லாம் சந்திரிக்காவுக்கு இதன் மூலமாத்தான் கிடைச்சது” என்றான்.

“ஆனா சந்திரிக்கா பேரில் அந்த பணத்தை இன்வஸ்ட் பண்ணாம ஏன் லாரா பேரில் இன்வெஸ்ட் பண்ணியிருக்கா.?”

“லாரா பேரில் டம்மி கம்பெனி ஆரம்பிச்சு அதில் தான் அந்த பணத்தை இன்வெஸ்ட் பண்ணியிருக்கா. பணம் அந்த கம்பெனி பேரில் இருக்கும். ஆனா அதோட ஓனர் லாராவா இருந்தாலும் அது போல ஒரு கம்பெனி உண்மையாவே கிடையாது.

அந்த இல்லாத கம்பெனிக்கு பணத்தை கையாள லாரா கையெழுத்து போட ஸ்டாம்பு அம்புட்டுத்தான்.

லாரான்ற ஸ்டாம்பு சந்திரிக்கா தன்னோட கைவசம் இருக்கும்னு நம்பி இத்தனையும் பண்ணியிருக்கா... ஆனா இடையில் என்னோடு லாரா சேர்ந்ததும் பணம் கைவிட்டுப் போயிடும்ற பயம் அவளுக்கு வந்திருச்சு.

எப்படியாவது லாராவை அவள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கணும்னு நினைச்சு என்னென்னமோ பண்ணினா. ஆனா எல்லாத்தையும் தாண்டி என்கிட்ட லாரா வந்துட்டா...

நான் கூட அந்த பணத்தை மொத்தமா சந்திரிக்கா பேருக்கு மாத்தி கொடுத்துடலாமா லாரா, அப்படி கொடுக்காட்டி அவ நம்மளை நிம்மதியா வாழ விடமாட்டானு சொன்னேன்.

லாராவோ அதுக்கு என் மேலக்கோபப்பட்டா. ஏன்னா நானும் லாராவும் பழக ஆரம்பிச்சதே எங்க ரெண்டுபேரோட பொதுவான எதிரி சந்திரிக்கான்னு தெரிஞ்சதாலத்தான்.

என் அப்பாவை கல்யாணம் செய்து என் அம்மாவை தவிக்க விட்டவ  அவள்தானே இந்த உலகத்தில் நான் வெறுக்கும் பழிவாங்க துடிக்கும் முதல் ஆளு அவதான்.

நாங்க காதல் பண்றதுக்கு முன்னாடி எங்க ரெண்டுபேரோட பொது எதிரியான சந்திரிக்காவை ஏதாவது செய்து அவளோட சுயரூபத்தை மீடியா மூலம் எல்லோருக்கும் காட்டி பழி வாங்கணும் என்ற நினைப்பில் தான் நானும் லாராவும் கூட்டு சேர்ந்தோம்.

நாளடைவில் ரெண்டுபேரும் லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பிறகு எனக்கு லாராவோடு இருந்த நாட்கள் ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததால பழி வாங்க எல்லாம் வேண்டாம். இதே போல எப்பவும் அவளோடு சந்தோசமா வாழ்ந்தா போதும்னு தோண ஆரம்பிச்சது.

அதுக்கு காரணம் சந்திரிக்காவோட மறுபக்கம் பார்த்து பயந்ததால். கூடவே வச்சு வளர்த்த லாராவை இந்த அளவு கொடூரமா ஏ சைக்காடிக் டிரக் கொடுத்தவ... அந்த பணத்துக்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவ  அவளை விட்டு எட்ட இருக்கணும்னு யோசிச்சேன்.

இதுக்கிடையே மறுபடி பிஸ்னெஸ் விஷயமா நான் மும்பை வந்துட்டுப் போனபோது மறுபடியும் லாரா மிஸ் ஆகிட்டா..

ஆனா இந்த தடவை அவள் சந்திரிக்கா வீட்டில் இல்லை.. நான் அவளோட வீடுக்கே தேடிப் போனேன். ஆனால் அவள் அப்படியே பிளேட்டை மாத்திப் போட்டு நான் தான் லாராவை என்னமோ பண்ணிட்டேன்னு என்கிட்டே எகுறுனாள் போலீஸ் கிட்ட என்மேல கம்ப்ளைன்ட் கொடுப்பதாய் மிரட்டி உண்மையைச் சொல்லச் சொன்னா...

அம்மாவுக்கும் விஷயத்தை தெரியப்படுத்தினா... அம்மா அவளோட மிரட்டலுக்குப் பயந்து என்னை அழுது ஆர்பாட்டம் பண்ணி இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. இதுதான் லாரா விஷயத்தில் நடந்தது. உண்மையாவே லாராவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியாது. ஆனா சந்தேகம் முழுக்க அந்த சந்திரிக்கா மேலதான்’ என்றான் உதித்..

---- தொடரும்----

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 08

அத்தியாயம் 08

உதித்திடம் ‘அப்போ சந்திரிக்காவாலத்தான் லாராவுக்கு என்னமோ ஆகிடுச்சுனு சொல்ற அப்படித்தானே..?’ என்றதும்

“பாசிபில்ஸ் நிறைய இருக்குது வண்ணன்” என்றவனை யோசனையுடன் பார்த்தபடியே

“லாராவை அடாப்ட் பண்ணியது சந்திரிக்காவோட பேரன்ஸ்னு சொன்னியே... என்ன காரணத்துக்காக அவங்க அடாப்ட் பண்ணுனாங்கன்ற விஷயம் தெரியுமா...?

ஏன் கேக்குறேன்னா குழந்தை இல்லாதவங்க ஒரு குழந்தையை தத்து எடுத்தா காரணம் தேடப்போறதில்லை...  ஆனா சந்திரிக்காவுக்கு முதல் கல்யாணத்தில ஒரு குழந்தை இருக்குது. இப்போ அந்த குழந்தைக்கு பதினாறு பதினேழு வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.

தன் மகளை சந்திரிக்கா வளர்கலை.... அந்த பேத்தியை இந்த கிரான்ட் பேரன்ட்ஸூம் வளர்கலை..., சந்திரிக்காவின் எக்ஸ் ஹஸ்பென்ட் கிட்டத்தான் அந்த பொண்ணு வளருது. அப்படி இருக்கும் போது யாரோ ஒரு குழந்தைய தத்தெடுத்து ஏன் வளர்க்கணும்...?” என்றான்.

அவனின் கேள்விக்கு எதுவும் சொல்லாமல் யோசனையுடன் அமர்ந்திருந்த உதித்தைப் பார்த்து. “ரைட்டு விடு, உனக்கு இவ்வளவு தான் விஷயம் தெரியும் போல...” என்றதும்.

“ம்... எனக்கு தெரிஞ்ச விஷயத்தைச் சொல்லிட்டேன். லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க உன்னால முடியும்னு அப்பா நம்புறாங்க. இந்த பிரச்சனை சால்வ் பண்ணினா நானும் தப்பிப்பேன். அதனாலத்தான் உனக்கு லாரா கேஸ் விஷயத்தில் கோவாப்பரேட் பண்ணனும்னு முடிவெடுத்துட்டேன், லாராவைத் தேடுறதுக்கு என்னால முடிச்ச ஹெல்ப்பை தருவேன். அப்போ நான் கிளம்பட்டா...?” என்றவனிடம்.

“என் வாட்ஸ் ஆப் நம்பருக்கு லாராவோட போட்டோ அனுப்பி வை உதித். போட்டோ இருந்தா தேட வசதியா இருக்கும்” எனச்சொல்லியபடி கிளம்ப எழுந்தவனிடம் கைக் குலுக்கி விடை கொடுத்தான் வண்ணன்.

அவன் சென்றதும் வண்ணனின் மொபைல் அழைத்தது. அழைப்பது “யுகாந்” என்பதை  டிஸ்பிளேயில்  பார்த்ததும் அட்டன் செய்து ”டேய் யுகா, சென்னை வந்தாச்சா...?” என்றதும்.

ம்... மார்னிங் தான் வந்தேன், ஆமா உன் விஷயம் என்னாச்சு..?”

“லாராவைத் தேடுற பொறுப்பை என்கிட்ட கொண்டுவந்திருக்கார் ‘மிஸ்டர் முகிலன்’ அவரோட மகன் உதித்தும் அதுக்காகத்தான் என்கிட்ட வந்து பேசிட்டுப் போறான்.. நான் விரிச்ச வலையில் தானாவே வந்து அப்பாவும் மகனும் விழுந்தாச்சு...?” என்றவன் வெடிச்சிரிப்பு சிரித்தான்.

“வண்ணன்... ‘கர்மா இஸ் பூமர்..’னு இதைத்தான் சொல்லுவாங்க போல. ஆமா உன்னோட நெகட்ஸ் மூவ் என்னடா..?”

“அதை நேரில் சொல்றேன், என் அம்மாவுக்கு இவங்க செய்த துரோகத்துக்கும், என்னைய அனாதையா நிக்க வச்சதுக்கும் காரணமான ஒவ்வொருத்தரையும் அதுக்கான தண்டனையைக் கொடுக்காம அடங்க மாட்டேன்”

“ஐ நோ யுவர் ஃபீலிங்க்ஸ் டா... உன்கூட எப்பவும் நான் இருப்பேன்”

“தேங்க்ஸ் டா... முகில் அதியனையும் அந்த ஆளைச் சார்ந்து இருக்கிற ஒவ்வொருத்தரும் என்னோட டார்கெட், ஆனா... இதில் இடையில் வந்து மாட்டிகிட்டது பாவம் லாரா தான், எனக்கென்னமோ ஷி இஸ் நோ மோர்னு தோணுது... ஒரு சின்னப் பொண்ணை காசுக்காக பழிகொடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.

மிஸ்டர் முகிலுக்கும் சரி... அவரை சேர்ந்த மத்தவங்களும் சரி... பணம் தானே முக்கியம், பணம்... பணம்... பணம்... அதைத் தாண்டி மத்தது எதுவுமே அவுங்க கண்ணுக்குத் தெரியாது.

இந்த கோஸ்டில உள்ளவங்க பொண்டாட்டி, புருஷன், புள்ளைன்னு ரத்த உறவுகளையே பணத்துக்காக பழிகொடுக்கத் தயங்காத பணப் பிசாசுகள். அந்த பணத்தை வச்சே அத்தனை போரையும் என் டிராப் குள்ள விழுக வச்சாச்சுல்ல...” என்றதும்.

“ம்...நினைச்சதை சாதிக்கிறவன் தான் நீ, சரி கிளம்பி இங்க வா... உனக்கு இன்னைக்கு பிரேக் பாஸ்ட் என் கூடத்தான்.. சேர்ந்து சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். பசியோடு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். லேட் பண்ணிடாதடா...” என்றதும்,

“ம்... இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்” எனச்சொல்லி மொபைல் இணைப்பைத் துண்டித்த வண்ணனின் மனம் உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது.

அவனின் இந்த கோபமும் கொதிப்பும் ஆரம்பித்தது அவளது கல்லூரி காலத்தில். அவனின் பிறப்பின் ரகசியத்தை தோண்ட ஆரம்பித்த நாளிலிருந்து கிடைத்த விசயங்கள் அவனை கொதிப்படைய வைத்தது.

இத்தனை காலமாக துரோகத்தின் நிழலில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை அவனைச் சுட ஆரம்பித்தது.

அந்த தகிப்புத் தணிய அவன் மேற்கொண்ட யுத்தத்தில் பாவம் அப்புராணி லாராவும் மாட்டிக்கொண்டது தான் விதி.

குறிப்பு; யாரெல்லாம் “வெண்பனிப் பூவே” நாவல் படிச்சிருக்கீங்க...? அதில் வரும் வெண்ணிலா & யுகாந்தன் ஜோடி நினைவில் இருக்கா. அந்த போர்ட் கிளப் தெருவாசியான யுகாந்தன் தான் வண்ணனின் நண்பன்.

இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள். கதையில் யுகாந்தன் கெஸ்ட் ரோல் தான். ஆனால் முக்கிய திருப்பத்துக்கு வண்ணனுக்கு உதவியவன் அவனே.

இந்த கதைப் புரிய யுகாந்தனை படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவனின் மனைவியான வெண்ணிலா (ராஜ வம்சத்து வாரிசு)வைத் தெரிந்து வைத்திருந்தால் கதையில் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும். இருந்தாலும் இரண்டு கதைக்கும் தொடர்ப்பு இல்லை)   

***********

காலை எழுந்ததுமே நட்சத்திரா மனதினுள் ‘போர்ட் கிளப் ஏரியாவுக்கு உதித்தைத் தேடி கிளம்பனும்’ தனக்குள் சொல்லிகொண்டாள்.

இரவு தூங்கும் முன் கூகுளில் தேடியதை வைத்து அந்த வி.வி.வி. ஐபிகள் வசிக்கும் ஏரியா பற்றியத் தகவல்களைத் திரட்டியவள் தன்னை யாரும் அங்கு கண்டுக்கொள்ளப் போவதில்லை... என்று சொல்லிக்கொண்டாள்.

அந்த ஏரியாவில் உதித் இருக்கும் பங்களாவை எப்படிக் கண்டுபிடிக்க...? தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டாள். அதற்கு அவளின் மனமோ  

‘அங்க இருக்கிற ஒவ்வொரு பங்களா முன்னாடியும் நேம் போர்டில் வீட்டு ஓனரை அட்ரஸ் பண்ணயிருப்பாங்கள்ல... அதை நோட் பண்ணினால் போதும், முகில் அதியன் குரூப் பங்களாவை அடையாளம் கண்டுப்பிடிச்சிடலாம்.

அப்படி அடையாளம் கண்டுக்கிட்டா பங்களாவ விட்டு வெளியேறும் ஒவ்வொரு காரையும் ஃபாலோ பண்ணனும். அப்படி ஃபாலோ பண்ணினா உதித் காரு எதுனு கண்டுப்பிடிச்சிடலாம். அந்த காரை வச்சே அவன் போற வார இடத்தையும் கண்டுப்பிடிச்சு ஏதாவது ஒரு இடத்தில் அவனை  மடக்கிடலாம்’ என்றுத் தனக்குத்தானே’ என்று திட்டமிட்டாள்.

மறுநிமிடமே உடலில் சுறுசுறுப்புத் தொற்றிக்கொண்டது. இரவு ஏதேதோ நினைவுகளில் தூக்கம் கெட்டதால் விடிந்தது தெரியாமல் உறங்கி எழுந்து  சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்ததும் நேரம் பத்தரை என்று பல்லிளித்தது.

ரூம் மேட் ஜூலி கிளம்பி வேலைக்குச் சென்றிருந்ததை நோட்டமிட்டு கண்டுகொண்டாள். யாருமில்லாத அறையில் கண் விழித்தவளுக்கு அத்தனிமை “அப்பாடா... ஃப்ரீயா கிளம்பலாம் என்ற ஆசுவாசத்தைக் கொடுத்தது.

அத்தோடு தான் எந்நேரமும் கங்காரு குட்டி போல தூக்கிக்கொண்டே திரியும் அந்த பேக் பேக்கை எடுத்துத்தாள். ‘முதல்ல இதில் இருக்கிற பணத்தை எல்லாம் எடுத்துப் பத்திரப்படுத்தனும்... போகுற இடத்துக்கெல்லாம் இதைத் தூக்கிக்கிட்டே போறது சேஃப்டி இல்லை’ முணுமுணுத்துக்கொண்டே...

பேக் பேக்கைத் திறந்து அடியில் வைத்திருந்த பணக்கட்டுகளை மறைத்து மேல போட்டிருந்த டர்கித் துண்டை விலக்கிவிட்டு பணக்கட்டுகளை கட்டிலில் கொட்டினாள். அத்தனையும் ஐநூறு ரூபாய் கட்டுகள். கட்டுகளின் எண்ணிக்கையை எண்ணி கணக்குப் பார்த்தாள்.

“நான் வந்த விஷயத்தை செய்து முடிக்கிறதுக்கு முன்னாடி வேற வேலைக்குப் போக முடியாது. அதுவரை செலவு பண்ண இந்த பணம் போதும்னு நினைக்கிறேன். எல்லாம் செலவாகுறதுக்குள்ள ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கணும்.’ என்று அவளின் மனம் முணுமுணுத்தது.

அந்த ரூபாய் கட்டுகளை உடைகள் வைத்திருக்கும் அப்பெரிய டிராலியில் துணிகளுக்கு இடையில் அடுக்கிவைத்தாள். திறந்தவுடன் பார்க்க உடைகள் மட்டுமே இருப்பது போல செட் செய்தவள்.

டிராலியை தான் வாங்கி வைத்திருந்த நம்பர் லாக் பூட்டில் ரகசிய எண் கொண்டு பூட்டியவள், தனக்கென இருக்கும் கபோட்டில் வைத்தாள். சாவியை பத்திரமாக ஹேன்ட் பேக்கிற்குள் போட்டவள், பணக்கட்டுகளை இதுவரை வைத்திருந்த பேக் பேக்கை எடுத்து உள்ளே வேறு எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.

உதித், லாராவுடன் நின்றுகொண்டிருந்த நிச்சயதார்த்தப் போட்டோவை பார்த்தவளின் கண்களில் முணுக்கென கண்ணீர் சுரந்தது. மனதில் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது.

எவ்வளவு ஆசை ஆசையா நடந்தது நிச்சயதார்த்தம். இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு இருக்கணும்... விடமாட்டேன்... எல்லாத்துக்கும் பதில் கண்டுபடிச்சுட்டுத்தான் மத்தவேளை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு மடமடவென குளித்து உடை மாற்றி கிளம்பி முடித்த வேளையில் மொபைல் அழைத்தது..

அதில் அவள் புக் செய்திருக்கும் கார் வந்துவிட்டதாக தகவலைப் பெற்றதும் ரூமில் இருந்து வெளியில் வந்து கதவைப் பூட்டினாள் நட்சத்திரா.

ஹாஸ்டலில் இருந்து போர்ட் கிளப் ஏரியாவிற்கு வந்து அடைந்தவள், முதல் அவன்யூவில் (தெருவில்) கேப்பை நிறுத்தி பணம் கொடுத்துவிட்டு பொடி நடையாக அந்த ஏரியாவை சுற்றிப் பார்க்கும் உல்லாச பயணிபோல உள்ளே நுழைந்தாள்.

சோசியல் மீடியாவில் இந்த ஏரியாவ பத்தி கிடைச்ச நியூஸ் சரிதான். சென்னையில இப்படி ஒரு இடமா...!?. எங்கயோ ஃபாரின்ல இருக்கிறது போல இருக்கு.

தெருவோரத்தில குப்ப இல்ல..., சாக்கடை ஓடல..., தெருவில ரெண்டுபக்கமும் மரங்களா இருக்கு... அது தெருக்குள்ள வெயிலயே வரவிடாம குளுகுளுன்னு நிழலா குடை பிடிச்சிருக்கு... அதனால இந்த இடமே ஊட்டி கொடைக்கானல் போல சில்லுனு பார்க்கவும் ரம்யமாய் எதுவோ டூரிஸ்ட் ஸ்பாட் போல இருக்குது...

இப்படி இருக்கிறதாலத்தான்  பணக்காரங்க காசை கொட்டி இங்க இடத்தை வாங்கப் போட்டிப் போட்டு இந்த ஏரியாவோட மாட்கேட் வேல்யூவையே கண்டபடி ஏத்தி விட்டுட்டாங்க. தமிழ்நாட்டிலேயே ரொம்ப கார்சிலியான ஏரியாவம்ல இது, ஆமா இங்க யாருகிட்டயும் போய் நான் விசாரிக்க...? ஒத்த ஆளு கூட பங்களாவை விட்டு வெளியில தலை காட்டலையே...

ஆத்தாடி...! ஒவ்வொரு பங்களாவுக்கும் அடுத்து இருக்கும் பங்களாவுக்கு இடையில எம்புட்டு நீளமா காம்பவுண்டு சுவரா... போய்கிட்டே இருக்குது...!?  என்று இரண்டு பக்கமும் இருக்கும் வீடுகளை ஜிக் ஜாகாக அன்னநடை நடந்தும் சில இடங்களில் குதித்தாவது காம்பவுண்டு சுவர் தாண்டி பங்களாவிற்குள் யாரையும் பார்க்க முடியுதாவென முயன்றபடியும்  போய்க் கொண்டிருந்தாள் நட்சத்திரா.

அதே நேரம் தனது டூ வீலரில் வண்ணனும் அங்கு நுழைந்தான். அழகான இளம் பெண் முன்னாள் சென்று கொண்டிருப்பதை,  அங்க  வளைவுகள் அவனின் கவனத்தை ஈர்த்தது.

அவளின் உடலைத் தழுவிய பிங்க் கலர் ஸ்லீவ்லெஸ் பனியன் மற்றும் திரீ ஃபோர்த் புளூ ஜீன்ஸூம், தோளில் கிராசாக பஸ் கண்டெக்டர் ஸ்டைலில் மாட்டியிருந்த ஹேன்ட் பேக்குடன் விரித்து விட்டிருந்த அலையலையான முடிகற்றைகள் காற்றில் ஆட...

ஆள்கள் தெருவில் அவ்வளவாக நடமாடாத நிலையில் நேராக போகாமல்  கிறுக்குத் தனமாக அந்தப் பக்கம் இந்த பக்கமென ஜிக் ஜேக்காக நடந்தும் குதித்துக்கொண்டும் போய்க்கொண்டிருந்தவளின் மீது சுவாரஸ்யமாக வண்ணனின் கவனம் பதிந்தது.

அவன் பார்த்தவரை அந்த ஏரியா தெருக்களில் அங்குள்ளவர்கள் எவரும் இத்தனை விச்ராந்தியாக நடந்துபோவதை அவன் பார்த்ததில்லை.

வீட்டை விட்டு வெளியில் கால் வைப்பவர்கள் தங்களின் பங்களா காம்பவுன்ட்டுக்குள் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் தான் தெருவில் பவனி வருவார்கள். அப்படி இருக்க மாடர்ன் யுவதி ஒருத்தி அவ்வாறாக நடந்து போவதை வைத்து அவள் இத்தெருவைச் சார்ந்தவளாக இருக்க வழி இல்லை என்று எண்ணினான்.

அத்தோடு ஒவ்வொரு பங்களாவின் நேம் போர்டு இருக்கும் இடத்தில் நின்று உற்று கவனிப்பதையும்... அந்த பங்களா வாசலில் நிற்கும் வாட்ச்மேன்கள் சந்தேகத்துடன் அவளிடம் கேள்வி கேட்பதும்... அதற்கு அவளும் ஏதோ பதில் சொல்லிவிட்டு, கேள்வியும் கேட்டு சிரித்து மழுப்பி நழுவிக் கொண்டு செல்வதையும் நோட் பண்ணினான். மிகவும் மெதுவாக தனது டூவீலரை செலுத்திக்கொண்டே கவனித்துக்கொண்டு பின் தொடர்ந்தான்.

எவ்வளவு மெதுவாக பைக்கை ஓட்டினாலும், ஒரு பாய்ண்டில் அவளை நெறுங்கி கடக்க வேண்டியது வந்தது... அவளும் குறுக்கே நடந்து கடந்து,  மறு பக்கத்திற்குச் செல்ல நினைத்து...  பைக் வருவதை பின்னால் திரும்பிக் கவனிக்காமல் வந்துகொண்டிருந்த வண்ணனின் டூவீலருக்கு குறுக்கே பாய்ந்துவிட்டாள்.

சடன்பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன், “லூசு... குறுக்கப் பாயிற..? நான் ஸ்லோவா வந்ததால சுதாரிக்க முடிஞ்சது... வளர்ந்திருக்கியே கொஞ்சமாவது அறிவிருக்க...?” என்று கோபத்தில் வார்த்தைகளை விட்டான்.

ஏற்கனவே எதிரில் இருக்கும் பங்களாவின் இருந்த 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற வாசகத்தை ‘நேம் போர்டு’ என்று தவறாக எண்ணி உற்றுக் கவனிக்க குறுக்கே ஓடி கடக்க முயன்றவள்... சட்டென வண்டியில் அடிபடப்பட்டு விடுவோமோ என்று  சமீபத்துவிட்ட வண்டியை கவனித்து அதிர்ந்து அசையாமல் ஆணி அடித்ததுபோல கண்ணை மூடி நின்றவளை அந்த பைக் தொட்டு இடிக்காமல் நின்றது.

அத்தோடு அந்த காம்பவுண்டுக்குள் இருந்து நாய்வேறு லொள்... லொள்... என்று குறைக்க ஆரம்பித்தது... அதில் அவளின் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்த நேரம் பைக்காரன் கணீர் என்ற குரலில் கேட்ட வசவுகள், அவளை கோவம், அவமானம், பயம் போன்ற உணர்வுகளில் தாக்க... ரத்தம் சூடாகி  பாய்ந்த முகம் சிவந்துப் போனது.

அவ்வாறாக திட்டியவனை முறைத்துப் பார்த்துக்கொண்டு மிக மெதுவாக வாய்க்குள் “போடா... டெவில்..” என்று முணுமுணுத்துக்கொண்டே சட்டென ரைட் சைடில் திரும்பிய தெருவிற்குள் சென்று மறைந்தாள்.

---தொடரும்---

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 09

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்)


 

அத்தியாயம் 09

பளபளவென்ற கருப்பு நிற மிரட்டலான பைக் மீது அதே கருப்பு நிற ஹெல்மெட், கருப்பு நிற டீசெர்ட், மென் சாம்பல் நிற ஜீன்ஸ். அணிந்து ஆறடி உயரத்தில் ஓங்குதாங்காக புரவி வீரனின் தோற்றத்தில் மிரட்டலான தொனியில் “அறிவிருக்கா” என்று பேசிய குரலுக்கு சொந்தக்காரனின் கண்கள் தன்னை கொத்தித் தின்பது போன்ற பிரம்மை உண்டானது நட்சத்திராவுக்கு.

ஏனோ அவனின் அத்தோற்றம் அவள் பார்த்த ஆங்கிலப்படத்தில் கண்ட டெவிலை ஒத்து இருப்பதாக பட்டதால் சில்லென்ற பயம் அவளின் இதயத்தைத் தாக்கியது.

அவனின் பார்வை விட்டு மறைந்துக்கொள்ளத் தோன்றியதால் சட்டென்று வலதுபக்கம் சென்ற தெருவிற்குள் வேக எட்டுவைத்து நுழைந்துவிட்டாள். அவன் தன்னை தொடர்ந்து வந்துவிட்டால் என்ற எச்சரிக்கை உணர்வில் அங்கு நின்றுகொண்டிருந்த குப்பைகளை எடுத்துச்செல்ல வந்திருந்த டிரக்குக்குப் பின் தனது உருவத்தை மறைத்து நின்றுக்கொண்டாள்.

அவளின் வாய் அசைவை வைத்தே தன்னை திட்டிய வார்த்தையை வண்ணன் யூகித்து விட்டான், சிறுபிள்ளைபோல வேடிக்கைப் பார்த்துகொண்டு வந்தவள், தனது வண்டியில் குறுக்கே பாய்ந்து அட்டிபடப் போவதை கண்டு.... கடைசி நிமிடம் சுதாரித்து.... சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியதால் அவனுக்கு வந்த டென்ஷனில் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டான்.

அந்த குற்றவுணர்வோடு அவளை ஏறிட்டுப் பார்தவனுக்கு அவளின் கண்கள் பயத்தை காட்டிய விதமும். அழகான உதடுகள் அசைந்த விதமும் “ஸ்...ஸப்ப, அழகிதான்” என்று தனக்குள் சொல்ல வைத்தது.

தன்னை பதிலுக்கு பதில் அவள் ஏசியத்தை ஏனோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை, சில நிமிடங்கள் மட்டுமே அருகில் கண்ட அவளின் உருவம் அவனின் அடிமனதில் தங்கிவிட்டது.

இருந்தும் “ஓய்..”. என்று அரட்டும் விதத்தில் சத்தமிட்டவனின் கண்கள், ஓடி மறைந்து போனவளை மறுபடி காண அலைபாய்ந்தது. அவள் காணாமல் போன பிறகே.. ‘அடச் சே... ஒரு பொண்ணப் பார்த்து நடுரோட்ல வண்டியை நிப்பாட்டிட்ட... நீயெல்லாம்...!?’ என்று மனதிற்குள் தன்னை தானே காறி துப்பிவிட்டு அங்கிருந்து யுகாந்தனின் வீடு நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

அவனுக்கு அந்தத் தெரு புதிதில்லை... அவனின் தாய் வீடு அங்கேதான் என்றாலும், தனது பிறப்பின் பின்புலம் தேடி அலைந்தபோது அங்கிருந்த யுகாந்தன் நண்பனாய் அவனை அரவணைத்துக்கொண்டான். அவனின் குடும்பமும் அவனை தங்களிள் ஒருவரகாக பார்த்ததால் தயக்கம் இல்லாது நண்பன் அழைக்கும் போது அவன் ஆசைப்படும் குடும்பக் கூட்டுன் நிழலை நண்பனின் தயவில் அனுபவிக்க அங்கு வருவான்.

இன்றும் பங்களாவிற்குள் நுழைந்த போது முன் வரவேற்ப்பு அறையில் அமர்ந்து கீரை சூப் பருகிக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்த பாட்டி கல்யாணி “வா... வா... வா.. வண்ணன், எப்படி இருக்க? இங்க சென்னையில தான் இருக்கிறதா யுகா சொல்றான். ஆனா அவன் வந்தாத்தான் உன்னைய இந்த வீட்டுப் பக்கமே பார்க்க முடியுது” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே யுகாந்தனும் அங்கு வந்து சேர்ந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு விலகியதும், “ஆமா வெண்ணிலா எங்க..?” என்றதும்

“அவள் அவங்க டாட் கூட லண்டன்ல முக்கியமான ப்ராஜெக்ட்ல இருக்கா, அடுத்தத் தடவை நீ இங்க வரும்போது பார்க்கலாம், அதுவும் எங்க ஜூனியரோடு” என்றதும்.

“வாப்... கங்கராசூலேசன் டா.. அப்போ நான் தாய்மாமா ஆகப்போறேனா..?” இவ்வளவு பெரிய சந்தோசத்தை வெறுமனே சொல்ற டிரீட் வேணும் எனக்கு” என்று சொல்லிகொண்டிருக்கும் போது அங்கு வந்த யுகாந்தனின் சித்தி திவ்யாவோ,

“வாப்பா வண்ணன், நல்லா இருக்கியா..? அப்புறமா ரெண்டுபேரும் டிரீட் கொண்டாட வெளில போலாம். இப்போ கை கழுவிட்டு சாப்பிட வாங்க... நீ வருவேன்னு யுகா சொன்னதால அவரும் சாப்பிடாம வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்” எனேறு சொல்லிவிட்டு முன்னாள் நடக்க.

“நல்லா இருக்கேன் ஆண்ட்டி, அங்கிளை சாப்பிடச்சொல்ல வேண்டியது தானே ஆண்டி... அவங்க சுகர் பேஷன்ட் பசிக்கும் எனக்காக பாவம் எதுக்கு காத்திருக்க வச்சீங்க...?” என்று வண்ணனும் டைனிங் டேபிள் நோக்கி யுகாந்தனுடன் நகர்ந்தான்.

சாப்பிட ரெடியாக அமர்ந்திருந்த திவ்யாவின் கணவர் வருண்ராஜ் அவன் சொன்னதை கேட்டுவிட்டு.. “அதெல்லாம் பசிக்கலை, பிள்ளைங்க எல்லோரும் கல்யாணம் பண்ணி வெளில போயிட்டாங்க. எனக்கும் என் அம்மாவுக்கும் தானேனு உப்பு உரப்பு இல்லாம சாப்பாடு போடுறா... இன்னைக்கு யுகா வந்துருக்க புண்ணியத்தாலயும், உன்னாலயும் வெரைட்டியா ரெடி பண்ணி வச்சிருக்கா. அப்படி இருக்கும் போது நீங்க இல்லாம நான் மட்டும் சாப்பிட உட்கார்ந்தா நல்லா இருக்காதுல்ல...” எனச்சொல்லவும்.

“அவர் கிடக்குறார் எதையாவது ஏட்டிக்குப் போட்டியா சொல்லிகிட்டு.... ஸுகர், பிரசருன்னு உடம்புல வந்ததுக்குப் பிறகு வாயை கட்டினாத்தானே டாக்டர்கிட்ட போகாம தப்பிக்க முடியும், நீ உட்காருப்பா”  எனச்சொல்லி சாப்பாடு பரிமாறிக்கொண்டே...

“ஆமா வண்ணம் போன வருஷம் இங்கன வந்தப்போ கான்ட்ராக்டர் சிவ நாதன் மகள் துவாரஹா வீட்டுல வேலைபாத்த ஜோதியை பத்தி எதுவோ டீடைல் வேணும்னு இங்க வந்திருந்த கங்காக்கிட்ட விசாரிச்சியே... எதுவும் தகவல் கிடைச்சதா...?”

“எதுக்குக் கேக்குறீங்க ஆண்ட்டி..? ஒரு வருஷம் முன்னாடி கேட்டத இப்போ வரை நினைவில வச்சிருக்கீங்களே...!”

“நானும் ஒரு வருஷமா இங்க இல்லையே... ரெண்டாவது உள்ளவ மாசமா இருந்தால்ல, பிரசவத்தை அமெரிக்காவுலயே பார்த்துடணும்னு பிரியபட்டா, அதனால நானும் கூட பார்த்துகிட அங்க போயிட்டேன்ல..

இஷானி இங்க வந்துருக்காளாம்... எனக்கு நேத்து தான் தகவல் தெரிஞ்சது. துவாரஹா இருக்கும் போது நான் அங்க போவேன் அவள் இங்க வருவா நாங்க ரெண்டுபேரும் திக் ஃப்ரெண்ட்ஸ் தெரியுமா...?

அவப்போய் சேர்ந்தப் பிறகு அந்த பக்கமே அவ்வளவா போகுறது இல்ல... இஷானியும் என்கிட்ட நல்லா தான் பேசுவாள். ஆனா துவாரஹா அளவு இவள்கிட்ட குளோஸ் இல்லை.அதோட இவளுக்கு கொஞ்சம் ஹெட் வெயிட்டும் அதிகம்,

அவங்க வீட்டுல வேலை பார்த்த ஜோதி பத்தி எதுக்கு விசாரிக்கிறேனு காரணத்தோட சொன்னா. நான் இஷானிக்கிட்ட ஜோதி பத்தி கேட்டுச் சொல்வேன்ல” என்றதும் யுகாந்தும், வண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்க் கொண்டனர், மனதினுள் “போச்சு காரியமே கெட்டுடும்’ என்று நினைத்தார்கள்.

“நோ... ஆண்ட்டி, அதெல்லாம் எதுவும் கேக்க வேண்டாம் நான் விசாரிக்கிற கேஸ் சம்மந்தப்பட்டவங்க வீட்டுல வேலை பார்த்த ஜோதியும் காண்ட்ராக்டர் சிவ நாதன் வீட்டுல வேலை பார்த்த ஜோதியும் வேற வேற ஆட்கள், நான் ஒண்ணுனு நெனச்சு விசாரிச்சுட்டேன்” என்று ஏதோதோ சொல்லி மழுப்பி விட்டான்.

சாப்பிட்டதும் அங்கிருந்து நழுவிய நண்பர்கள் இருவரும் மாடியில் இருந்த பால்கனியில் அமர்ந்து பேச சென்ற வேளையில் தூரத்தில் கேட் அருகே தெரிந்த உருவத்தை கண்டு சுவாரஷ்யமானான் வண்ணன்.

கேட் அருகில் நின்று எதையோ உற்றுப்பார்க்கும் அவள்... இங்க நான் வரும் போது பைக் முன்பு விழுந்தவள் தானே... என்று அடையாளம் கண்டுகொண்ட வண்ணனின் பார்வை கூர்மையாக அவளின் மீது பதிந்தது...

அப்போ இருந்து இப்போவரை இவள் இன்னும் இங்கயே தான் சுத்திக்கிட்டு இருக்காளா... ஆமா நான் பார்த்தப்போதும் இதேபோலத்தானே ஒவ்வொரு கேட் முன்னாடியும் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.. என்று யோசிக்கும் போதே வாச்மேன் அவளிடம் என்னவோ கேட்பதும் அவள் ஏதோ பதில் சொல்வதும் அதற்கு அவர் சொன்ன பதிலை கேட்டு அங்கிருந்து அவள் நகர்வதையும் பார்த்ததும் “சம்திங் ராங்” என்ற முணுமுணுப்புடன் கேள்வியாக அவன் புருவம் இடுங்கியது.

******

மும்பை மாளிகையில் இருக்கும் தனது அலுவலக அறையில் சந்திரிக்கா கோபமாக அமர்ந்திருந்தாள்.

அவளின் முன்பு நின்றுகொண்டிருந்த செபாஸ்டின் “மேம்... விசாரிச்சவரை ஒன்னு ரெண்டு பேர் மட்டும் தான் நாம தேடிப் போறதுக்கு முதல் நாளில் அவங்க ரூம் பக்கம் போனதை பார்த்ததா சொல்றாங்க, ஆனா ரூம்விட்டு அவங்க வெளியப் போனத யாரும் கவனிக்கலைன்றாங்க.

ஹாஸ்டல் மேனேஜ்மென்ட் கிட்ட பேசி ஹாஸ்டல் என்ட்ரென்ஸ்ல இருக்கிற சிசிடிவி ஃபுட்டேஜ்ல கூட செக் பண்ணி பார்த்தாச்சு. அவங்க வெளியப் போனதுக்கான எந்த தடயமும் தெரியலை.

டெல்கியை சுத்தி அவங்க போகக் கூடிய எல்லா இடத்துலேயும் தேடிட்டோம் ஆனா கிடைக்கலை” என்றான்.

யோசனையுடன் “ஒருவேளை டெல்லியை விட்டு எஸ் ஆகிட்டாளோ...? இப்போ எனக்கு இருக்கிற பிரச்சனைக்கு ஒரே தீர்வு அவள் மட்டும் தான். எப்படியாவது தேடிப்பார்த்து கண்டு பிடிக்கணும். படிக்கிற இடத்தில யாரெல்லாம் அவளுக்கு குளோஸ் ஃப்ரெண்ஸ்ன்னு பாரு செபாஸ்டின். அவள் ரூம் மேட்டையும் ஃபாலோ பண்ணு... எனக்கு அவள் வேணும்”

“ம்...ஓகே மேடம். அவங்க செல் நம்ரையும், மொபைலின்  IMEI நம்பரையும் வச்சுக் கூட டிரேக் பண்ண முடியலை. செல்லை டிஸ்போஸ் பண்ணிட்டாங்கனு நினைக்கிறன்”

“இங்க வந்தவ எப்படியோ அலார்ட்டாகிட்டா. நாம அவளை அசால்டா நினைச்சு கோட்டை விட்டாச்சு...” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது நிதி அமைச்சரின் பெர்சனல் அலைபேசியால் இருந்து அழைப்பு வந்தது.

இவர் எதுக்கு இப்போ கூப்பிடுறார் என்ற யோசனையோடு “yes சார், சொல்லுங்க நான் சந்திரிக்காதான் பேசுறேன்” என்றதும்

“என்ன மேடம் நான் அனுமதிச்ச உங்க பில்லுக்கு FIBP (ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் பிராம்டர்ன் போர்ட்)ல இன்வேஷ்டிகேசன் வைப்பாங்க போல... என் மேல சந்தேகம் வந்துருக்கு...  

உங்கக்கிட்டு இருந்து எனக்கு கைமாறிய பணத்தைக் கூட ஸ்மல் பண்ணியிருக்காங்க, எப்படி மேடம்...? நீங்க ரிஸ்க் வராது. வந்தா நான் பார்த்துக்கிடுவேனு சொன்னீங்களே... அதனாலத்தானே பில்லில் நான் சைன் பண்ணி அனுமதிக் கொடுத்தேன்” என்றதும்.

“சார்... உங்களுக்கு மட்டும் ரிஸ்க்ன்றது போல பேசுறீங்க, நீங்க சொல்றது போல என் மேல ED (இந்திய அரசாங்கத்தின் சட்ட அமலாக்க இயக்குனர்) நடவடிக்கை எடுத்தா நானும் தான் வசம்மா மாட்டுவேன். என்னைக் காப்பாத்திக்கவாவது நான் ஸ்டெப் எடுத்தே ஆகணும். கொஞ்சம் பொறுமையா இருங்க, என் ஹஸ்பென்ட்கிட்ட பேசிட்டு உங்ககிட்ட என் நெக்ஸ்ட் மூவ் பத்தி சொல்றேன்” என்றாள்.

“உங்க வார்த்தையை நம்புறேன் மேடம், விஷயத்தை எப்படியாவது ஆஃப் பண்ணப் பாருங்க” என்று சொல்லி வைத்தார் மினிஸ்டர்.

வைத்ததும் கோபத்தில் அருகில் இருந்த அழகான செராமிக் ஃப்லவர்வாசை எடுத்து ‘ஆ....’ என்று கத்திக்கொண்டே கோபத்தில் சுவற்றில் தூக்கி அடித்தாள் சந்திரிக்கா. அந்நேரம் சரியாக முகில் அதியனும் பங்களாவிற்குள் நுழைந்தார்.

பங்களாவின் முன் வரண்டாவில் கால் வைக்கும் போதே முன்னடியில் வலதுபக்கம் இருந்த சந்திரிக்காவின் ஆபீஸ் அறையில் இருந்து வந்த அவளின் சத்தமும் அதைத் தொடர்ந்து உடையும் சிலீரென்ற சத்தமும் அவரை கலவரப்படுத்த வேகமாக அங்கே சென்று பட்டென கதவைத் திறந்தார்.

உள்ளே சிவந்த முகமும், ஆக்ரோசமான பார்வையோடும் சந்தனத்தில் கடைந்தெடுத்த சிற்பம் போன்ற வடிவில் கையில்லாத சிவப்பு நிற ரவிக்கை மற்றும் காட்டன் சேலை உடுத்தி நின்று கொண்டிருந்தவளின் தோற்றத்தையும் உடைந்து கிடக்கும் பூச் சாடியையும் அதிர்ந்து பார்த்தவரிடம்.

“ஏதாவது பண்ணுங்க முகில், இல்லன்னா நாம ஜாயின்ட்டா வித்து கணக்கில் காட்டாம பதுக்கி வச்சிருக்க அத்தனை பணமும் போயிடும். அதோடு நாம ஜெயிலுக்கும் போகவேண்டியது இருக்கும்.

எனக்கு கூட ஒன்னும் இல்ல, என் பங்குப் பணத்தை அனாமத்தா  லாரா பேரில் இருக்குற கம்பெனியில் வச்சிருக்கேன். எனக்குப் பதில் லாராதான் உள்ள போகணும், ஆனா நீங்க...?” என்று கூறி நிறுத்தினாள்.   

---தொடரும்--- 

 

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 10

அத்தியாயம் 10

சந்திரிக்காவோ, தாங்கள் செய்த அந்நிய செலாவணி மோசடியில் இருந்து தப்பிக்க நினைத்தாள், அதற்கான வேளையில் முகில் அதியனை ஈடுபட வைக்க, தீவிரமாகக் களம் இறக்கவேண்டும் என்று யோசித்தாள். அதற்கான தூண்டுதலுக்காகவே மாட்டினால் அவருக்குத்தான் பாதகம் அதிகம் என்று சொல்லி... பிரச்னையை ஆஃப் பண்ண முகிலனை கிளப்பிவிட முயன்றாள்

ஆனால் உண்மையில் பிரச்சனை பூதாகரமானால்... லாராவை குற்றவாளியாக தேடினால்... அவளைப் பற்றிய விஷயங்களைத் தூண்டித் துருவ ஆரம்பித்தால் தனது முகத்திரை கிழிக்கப்பட்டுவிடும் என்ற பயம் சந்திரிக்காவை ஆட்டிப் படைத்தது.

முகிலனோ தன்னை மிரட்டும் வகையில் பேசியவளிடம், “என்ன சொன்ன சந்திரிக்கா... நீ ஜெயிலுக்கு போக மாட்டியா...? நடந்ததுல ரெண்டுபேருக்கும் சரிபங்கு இருக்கு... சொல்லப் போனால் நான்கூட லண்டன் விக்டர், ராயல் பேமிலியைச் சேர்ந்த லண்டன் விக்டரோட ஒவ்வொரு மூவையும் மீடியா கவர் பண்ண அலைஞ்சுகிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் போது நம்ம டெலிகாம்யூனிகேசன் கம்பெனியை அவருக்கு கைமாத்தி விட்டு பணம் வாங்குனா... அதைப் பத்திய  விஷயம் மீடியாவில் தூண்டித் துருவுனா என்ன பண்ணனு கேட்டேன்” என்றதும்

“இப்போ என்ன சொல்றீங்க டார்லிங்...? இந்த இஸ்யூவுக்கு நான்தான் காரணம்னு சொல்றீங்களா..? உங்களுக்கு அதுல கிடைக்கும்னு தெரிஞ்ச பணத்து மேல ஆசை இல்ல, என்னோட கட்டாயத்தின் பேர்ல தான் நடந்ததுன்னு சொல்ல வருறீங்களா..?”

என்று கூர்மையாக அவரை துளைக்கும் பார்வை பார்த்தபடி அவ்வளவு நேரமும் இருந்த ஆக்ரோசத்தை சட்டென புன்னகை என்னும் மாய்மாலத்தின் பின் மறைத்துக்கொண்டு திமிராக அவரை பார்த்தபடி அவரின் அருகில் நடந்து வந்தாள்

அவள் தனக்கு அருகில் நெருங்க... நெருங்க... ஏதோ மாய வலைக்குள் அவள் தன்னை வீழ்த்த வருவது போல தெரிவதே என்று தனக்குள் சொல்லிகொண்டாலும்,

நெருங்கிவிட்டவளின் லாவண்யங்களினால் தாக்கப்பட்டடு... தட்டுத்தடுமாறியபடி,,,”ஹேய்... நோ... நோ... அப்படிலாம் இல்லா... எனக்குமே அந்த பண டீலிங் பிடிச்சுதான் இருந்தது...” என்றார்.

அவளோ சரேலென பின்னால் திரும்பி செபாஸ்டியனை பார்த்ததும் அவன் சட்டென குனிந்துகொண்டு அவளின் பார்வையின் ஆர்த்தம் புரிந்து அந்த அறையை விட்டு வெளியேறினான்.

ஹஸ்கி வாய்சில், “ஐ நோ யூ டார்லிங், யூ கேன் டூ இட்” என்றவளின் குரல் முகிலனின் உதட்டுக்குள் அடங்கிப் போனது.

*****

நட்சத்திரா யுகாந்தனின் வீட்டு வாசலில் நோட்டம் இட்டுவிட்டு ஏமாற்றத்துடன் போவதை கண்டதும் அவளைத் தொடர்ந்து போக அவனின் துப்பறியும் மூளை உந்தியது.

“யுகா... ஒரு பத்து நிமிசத்தில் வந்துடுறேன்” எனச்சொல்லி படபடவென கீழே இறங்கி வந்து பைக்கை எடுக்காமல் நடந்தே கேட்டுக்கு அருகில் வேகமாக வந்தடைந்தான்.

அவனை பார்த்த வாட்ச்மேன் மரியாதையோடு எழுந்து நின்றான்.

அவரிடம் “இப்போ ஒரு பொண்ணு உங்க கிட்ட வந்து ஏதோ விசாரிச்சிட்டுப் போச்சே.. என்ன கேட்டுட்டாள்...?” என்றதும்.

“யாரோ “உதித் முகிலன்”றவரை நம்ம பங்களாவில் இருக்காறானு  அந்தபொண்ணு கேட்டுச்சுங்க, நான் அப்படி யாரும் இங்க இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டேன்” என்று சொன்னதும் அவனின் மூளைக்குள் மணி அடித்தது.

சட்டென சுறுசுறுப்பானவன், அவளை மிஸ் பண்ணக் கூடாதென  அங்கிருந்து அவள் சென்ற திசையில் வேக எட்டுகள் வைத்து சென்றான். கண்ணனுக்கு தென்படுகிறாளா என்று தேடினான்.

தூரத்தில் சென்றுகொண்டிருந்தவளை பார்த்ததும், தேவையான இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான். அவளுக்கு இந்த ஏரியா புதிது என்பதை ஆங்காங்கே திக்கு தெரியாமல் முட்டுச் சந்தில் போய் முட்டிவிட்டு திரும்புவதை வைத்துக் கண்டு கொண்டான்.

‘இவ யாரு..? உதித்தை எதுக்குத் தேடுறாள்....? இவளுக்கும் உதித்துக்கும் என்ன தொடர்ப்பு இருக்கும்...?’ என்று யோசித்தபடி அவள் அறியாமல் பின் தொடர்ந்தான்.

மதியத்தை தாண்டிய பின்னும் அவளின் தேடுதல் படலம் முடியவில்லை அடுத்த தெருவில் தான் அவள் தேடிவந்த உதித் தங்கி இருக்கிறான் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாததால் சோர்ந்து போனாள். அவளின் நடையில் ஆரம்பத்தில் இருந்த துள்ளல் இல்லை என்பதையும் வண்ணன் கண்டுகொண்டான்.

ஒருகட்டத்தில் அவளைத் தொடர்ந்து வரும் தன்னை அவளும் கண்டுகொண்டாள் என்பதை திரும்பி திரும்பி பதட்டமாக பார்த்தபடி வேக நடை போட்டவளின் செயலில் இருந்து புரிந்துக் கொண்டான்.

இனி இப்படி பூசாண்டி காட்டாம அவளை பிடித்து நேரடியாகவே விசாரித்துவிடுவோம் என்று முடிவெடுத்தவன் வேக எட்டு வைத்து அவளை நெருங்க முன்னேறினான்.

நட்சத்திராவோ காலை பத்து மணிக்கு மேல் அங்கிருந்த தெருக்களில் சுற்ற ஆரம்பித்து மதியமாகியும் சுற்றுவது முடியாத நிலையில் அவளின்  நாக்கு உலர்ந்து போனது.

நண்பகலைத் தாண்டிய நிலையில் பசியெடுக்க ஆரம்பித்தது. காலையில் கிளம்பி வரும் முன்பு ஹாஸ்டல் மெஸ்ஸில். ஆறிப்போன கல்தோசையை வெறும் கடலைமாவை கரைத்துவிட்டு வைத்திருந்த சாம்பார், சட்னியும் அவளுக்கு ருசிக்கவில்லை. எனவே எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டுமே என்ற கட்டாயத்தில் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு வந்திருந்தாள். எங்கும் அமராமலும் நிற்காமலும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்ததால் எனர்ஜி காலியாகிவிட்டது. வயிறும் பசிக்க ஆரம்பித்தது.  

சோர்வுடன் நடந்தவளுக்கு கொஞ்ச நேரமாக தன்னை யாரோ பின் தொடர்வது போல உறுத்தல் உண்டானது. திரும்பிப் பார்த்தால் எவரும் இல்லை என்றாலும் அவளின் உள்ளுணர்வு பொய்யில்லை என்று தோன்றியது.

எனவே பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஒரு பங்களாவின் காம்பவுன்ட்டுக்கு அருகில் வரிசையாக நின்றிருந்த பாக்குமரம் போன்ற தோற்றத்தில் இருந்த குட்டையான மரங்களுக்கு இடையில் சட்டென்று புகுந்து தன்னை மறைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றுக்கொண்டாள்.

ஒரு பத்துநிமிடம் சென்று தன்னை தேடியபடி அவனின் தலை தெரிந்தது... உற்றுக் கவனித்தபோது அவளுக்கும் அவன் யாரென புரிந்துப்போனது.. காலையில் பைக்கில் தன்னை இடிக்க வந்து திட்டிய டெவில் அவனென புரிந்ததும் படபடவென்று பயத்தால் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.

“ஆத்தாடி அவன்கிட்ட மாட்டினோம் அம்புடுத்தான், இவன் எதுக்கு என்னைய ஃபாலோ பண்ணி வாரான், ஒருவேளை தேடி மும்பையில் இருந்து வந்துருப்பானோ...?

அப்படி இல்லன்னா வாயப்பொத்து இழுத்துட்டுப் போய் தப்பா நடக்க பார்ப்பானோ...? அவன் ஹய்ட்டுக்கும் பாடிக்கும் முன்னாடி நான்லாம் சுண்டெலி... போராடி அவன்கிட்ட எல்லாம் ஜெயிக்க முடியாது... தப்பிச்சு ஓடிடு” என்று அவளுக்குள் அவளே கவுண்டவுன் கொடுத்தாள்.

இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதை கண்டவள்.... கிட்ட வந்தா நான் ஒளிஞ்சு நிக்கிறதை பார்த்துடுவான், ஓடிடலாம், என்று எண்ணியவன் அங்கிருந்து வேகவேகமாக நடந்தால், அந்த தெரு ஜாயிட் ஆகியிருந்த மெயின் ரோட்டைப் பார்த்து கிட்டத்தட்ட நடையையே ஓட்டம் அளவு வேகமாக எட்டுவைத்து கடக்க ஆரம்பித்தாள், தன்னை பிடிக்க அவனும் வேகமாக வருவதைப் பார்த்து ஓட்டம் எடுக்க ஆரம்பித்தாள்.

ஓடி ரோட்டுக்கு வந்ததும் அங்கு ஆள் நடமாட்டம் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள்.

ஆனால் அவன் இன்னும் வேகமாக தன்னை நோக்கி வருவதை திரும்பிப் பார்த்தவள் பயந்து போனாள், தப்பிக்க வழி தேடி சுற்றும் முற்றும் கவனித்தவள், சற்று தள்ளி இருந்த பஸ் ஸ்டாப்பில், பஸ் நின்றுகொண்டிருப்பதையும் பயணிகள் பஸ்ஸில் ஏறுவதையும் கண்டாள்.

பஸ் கிளம்பப் போவதை உணர்ந்து வேகமாக கை அசைத்தபடி ஓடிச் சென்று ஏறிக்கொண்டாள். அது எங்கே போகிறது என்றெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை, பேருந்தும் அவளை அங்கிருந்து சுமந்துக்கொண்டு விலகிச் சென்றது.

அவள் தப்பி விட்டதை கண்டன் வண்ணன் கால்களை தடையில் உதைத்து “சே... மிஸ் பண்ணிட்டேனே.. பைக் எடுக்காம வந்தது தப்பாப் போச்சு... அவளை சேஸ்பண்ணி இனி பிடிக்க வழி இல்லை... என்று முணுமுணுத்தவன், மறுபடியும் யுகாந்தன் வீட்டிற்கு திரும்பி வந்தான்.

வந்தவனை “டேய்... பைக்கை கூட எடுக்காம, நடந்தே எங்கடா போன..?” என்று யோசனையுடன் கேட்டவனிடம் நடந்ததைச் சொன்னதும்.

“உதித் பேரைச் சொல்லி தேடிக்கிட்டு இருக்கானா சொல்ற...? அவன் இங்க இருக்குற விஷயம் ரொம்ப நெருக்கமானவங்களுக்குத்தானே தெரியும்..? ஒருவேளை இவள் காணாமப் போனதா தேடுற லாராவா இருக்குமோ..?” என்றதும்

யோசனையுடன், லாரா போட்டோ என்கிட்ட இருக்கு காலையில் தான்  எனக்கு உதித் அனுப்பினான், ஆனா போட்டோல இருக்கிற லாரா வேற கெட்டப்பில் இருந்ததால கம்பேர் பண்ணி பார்க்கக் கூட யோசிக்காம விட்டுட்டேன்.” என்று சொல்லியபடி மொபைலில் உதித் அனுப்பிய போட்டோக்களை எடுத்து உற்றுக் கவனித்தான்.

லாரா உதித்தோடு நின்றுகொண்டிருந்த நிச்சயதார்த்தப் போட்டோக்களைத் தான் அனுப்பி இருந்தான். மனதில் பதிந்திருந்த நட்சத்திராவின்  உருவத்தோடு போட்டோவில் இருந்த லாராவின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்க ஜூம் செய்து பார்த்தான். கிட்டத்தட்ட ஒரே சாயல்தான், ஆனாலும் எதோ ஒரு மாற்றம் இருப்பதாகவும் பட்டது.

புருவச்சுளிப்போடு உட்கார்ந்திருந்தவனிடம், “என்னடா யோசிக்கிற...?” என்றதும்.

“கிட்டத்தட்ட இதே போலத்தான் இருந்தாள் ஆனா எக்ஸாக்ட்டா சொல்ல முடியலை டா...” என்றான்.

“நீ குழம்புறதை பார்த்தா எனக்கு என்னமோ ரெண்டுபேரும் ஒன்னா இருக்க சான்ஸ் இருக்குதுன்னு தோணுது” என்ற யுகாந்தனை புருவத்தை இடுங்கியவாறு பார்த்தவன்,

அப்படி இருந்தா அவள் நிச்சயம் உதித்தை தேடுறதை விட மாட்டாள், ஆனா இனி இந்த ஏரியாக்குள்ள தனியா வரப் பயபடுவாள், அதனால உதித்தை வேற இடத்தில் தேடுவா...

வேற இடத்தில்னா எங்கெக்க தேடுவான்னு உனக்கு ஐடியா இருக்கா..?

இருக்கு யுகா, உதித்தைப் பத்தி நல்லா தெரிஞ்சவளா இருந்தா அடுத்து அவள் சென்னையில் தேடுற இடம் பப்பு, டிஸ்கோத்தே போல ஹாய் கிளாஸ் செலபரடீஸ் ஜாலியா பொழுதை செலவளிக்கிற இடமாத்தான் இருக்கனும்.

அதனால நாம இவளை அதேபோல இடத்தில் தேடுனா கண்டுபிடிக்க சான்ஸ் இருக்கு... உதித்ததும் இவளும் மீட் பண்றதுக்குள்ள நாம அவளை மடக்கணும், அவள் யாரு என்னென்ற விஷயம் தெரிஞ்சுக்கிட்ட பிறகு தான் அடுத்த மூவ் என்னென்னு டிசைட் பண்ணனும்” என்றவனின் எண்ணத்தில் பல முடிச்சுகள்.

*******

பஸ்ஸில் ஏறி பயணித்த நட்சத்திராவோ அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டாள். இன்னும் அவளுக்கு படபடப்பு அகலவில்லை,

‘யாரா இருக்கும்...? அப்போ காலையிலேயே வேணும்னு தான் என்னைய இடிக்கிறது போல வந்தானோ...?

உதித்தை அந்த ஏரியாவில் இருந்து தானே தேட ஆரம்பிக்கணும், ஆனா இனி அங்குட்டு தனியா போய் மாட்டிகிட்டா...?! வேணாம் கொஞ்ச நாள் அந்த பக்கம் தலையைக் காட்ட வேணாம். அதுவரை பப்பு டிஸ்கோத்தே போல இடங்களில் தேடலாம்” என்று அவளுக்குள் அவளுக்கே சொல்லிக்கொண்டாள்.

அவள் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத இலவசப் பேருந்து. எனவே பிரச்சனை இல்லாமல் அடுத்து வந்த நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டாள். அந்த இடம் எதுவென்று ரோட்டுக் கடைகளின் மேல் இருந்த போர்ட்டுகளில் எழுதியிருந்த அட்ரஸ் வைத்து எந்த இடம் என்று தெரிந்துக்கொண்டாள்.

வகுலா அந்த பெயர் உள்ள ஏரியாவில் தான் இருப்பதாக சொன்னது நினைவு வந்ததும் அவளை மொபைலில் அழைத்தாள்.

ஒரு ரிங்கிலேயே எடுத்த வகுலாவோ “டால், இப்போ தான் உன்னை கூப்பிடணும்னு நினச்சேன் ஆனா நீயே கால் பண்ணிட்ட, சொல்லுடி என்ன விஷயம்..?” என்றதும்.

“நான் உன் எரியாவுல தான் நிக்கிறேன். என்னை வந்து .பிக்கப் பண்ணிகிறயா..?” என்றதும்.

“ம்... வாரேன், லஞ்ச் டயம் தான் இது, சொல்லு எங்க நிக்கிற..?” என்றதும் தான் நின்றுக்கொண்டிருந்த இடத்தின் அருகில் பெரிதாக தெரிந்த ஹோட்டலின் பெயரும் மேலும் சில அடையாளங்களையும் சொன்னதும்,

“எனக்குப் பக்கம்தான், அங்கேயே நில்லுடி இதோ இப்போ வந்துருவேன்” எனச்சொன்னாள்.     

----தொடரும்----

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 11

அத்தியாயம் 11

வகுலாவுடன் மெரீனா கடற்கரை சாலையல், வி.ஐ.பி கள் வந்து போகும் பார் வசதியுடன் கூடிய பப்பிற்கு வந்திருந்தாள் நட்சத்திரா.

வகுலா வேலை பார்க்கும், புது படத்தின் டான்ஸ் மாஸ்டருக்கு இன்று பிறந்தநாள். அதில் கலந்துகொள்ள வந்த வகுலா, நட்சத்திராவையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.

அது வி.ஐ.பி கள் அதிகம் வந்து போகும் இடம். ஆதலால் மிகவும் ஆடம்பரமாக இருந்தது. வி,ஐ.பி கஷ்டமர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க ஆங்காகே பவுன்சர்ஸ் நின்றுக்கொண்டிருந்தார்கள்.

அந்த பப்புக்குள் அரசியல் பெரிய பதவியில் இருப்பவர்கள், அவர்களின் வாரிசு, சினிமாத் துறையினர், வி.ஐ.பி மதிப்புள்ள பிஸ்னெஸ் சர்கில்ஸ் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதுபோல ஏதாவது பார்ட்டி அரேஜ் செய்திருந்தால், பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யும் பெருந்தனக்காரர்கள் வரவழைக்கும் விருந்தினர்களுக்கு என்ட்ரி பாஸ் குறிப்பிட்ட அளவு மட்டும அனுமதிக்கப்டுவதுண்டு.

அவ்வாறான என்ட்ரி பாஸ் இருந்தால் மட்டுமே வகுலாவுடன் நட்சத்திராவையும்  அனுமதித்தார்கள், என்ட்ரி பாஸ் வைத்திருப்பவர்கள் உடன் ஒருவரை மட்டும் அழைத்து வரலாம் என்ற கட்டுப்பாடு நிலவியதால் வகுலாவால் நட்சத்திராவை உடன் அழைத்து வர முடிந்தது.

அவர்கள் இருவரும், அந்த பிரமாண்டமான பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததும் இரு கண்கள் அவர்களை பின் தொடர்ந்தது.

அக்கண்களுக்குச் சொந்தக்காரன் வண்ணன் தான். வண்ணனுக்கும் நட்சத்திராவுக்கும் இடையில் இருந்த தூரம் அதிகம் என்றாலும் அவளை அவனால் நன்றாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது.

காலையில் அவள் உடுத்தி இருந்த அதே உடையில் இருந்தவளை அவன் கண்டுக்கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

தான் கனித்தது போல உதித்தைத் தேடி பப்புக்கே அவள் வந்துவிட்டதை கண்டவன் தனக்குள் ‘அவளை மிஸ் பண்ணக் கூடாது’ என்று முணுமுணுத்துக் கொண்டான். அத்தோடு உதித்தைப் அவள் பார்த்துப் பேசுவதற்குள் மடக்கணும், அவளைப் பற்றிய அத்தனை விஷயத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்’ என்றும் நினைத்தான்.

அவளின் மீது இருந்த கண்ணை விலக்காமல் பார்த்தபடி, தனது மொபைலில் இருந்து உதித்தோடு இருக்கும் ரீட்டாவை அழைத்தான்.

ரீட்டா வண்ணனின் வேலையாள், உதித் சென்னைக்கு வந்த அன்றே அவனை பின் தொடர ஆரம்பித்திருந்தான், அவன் இந்த பப்புக்கு வருவதை கண்டு ஃபாலோ செய்து வந்தான். உதித்தொடு ரீட்டாவை பழகவிடும் நோக்குடன் உடன் அழைத்து வந்தான்.

தன்னுடைய வி.ஐ.பி அடையாளத்தை பயன்படுத்தி அவளோடு உள் நுழைந்தவன் உதித்தை அவளிடம் கைகாட்டிவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்தான்.

உதித்துக்கு இங்கு நண்பர்கள் கிடையாது... சென்னைக்கு அவனின் அம்மா இஷானியின் வற்புறுத்தலுக்காக வந்தவன், பொழுதை போக்க மும்பை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து இங்கு வந்து போக ஆரம்பித்தான்.

தனியாக இருக்கும் அவனை அங்கு பிடித்து வைக்க வண்ணன் அனுப்பிய  ரீட்டாவோ பேச்சில் கில்லாடி, மெல்லமெல்ல உதித்துடன் பேச்சுக் கொடுத்து அவனின் தனிமைக்கு ஒரு துணையாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள்.

அதன் பின்பு உதித்தே கடந்து இரண்டு தடவையாக இங்கு வரும் முன் ரீட்டாவையும் வரச்சொல்லி மொபைலில் அழைத்து, அவனே பிக்கப் செய்து இங்கு நேரம் செலவிட மது போதையுடன் மங்கையின் போதைக்காக ரீட்டாவுடன் இணைத்துக்கொண்டான்.

அவள் ஒரு மாடல் அழகி மட்டும் அல்ல, கால்கேளும் கூட. அதுவும் ஹாய் டெக் கார்ல் கேர்ள். வண்ணன் இக்கட்டான நிலையில் அவளுக்கு உதவி இருந்ததால் டிடைக்டிவ் வேலைக்கு அவனுக்கு தேவையான உதவிகளை சம்பளம் வாங்கிக்கொண்டு செய்து வந்தாள்.

பாட்டிலில் இருந்த அந்த விலை உயர்ந்த மதுபானத்தை அழகிய கண்ணாடிக் குவளையில் ஊற்றி உதித்துக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது வண்ணனிடம் இருந்து அழைப்பு வந்ததால் போ பேச அவனை விட்டு தள்ளி சில எட்டுக்கள் எடுத்து வைத்தவள் அழைப்பை ஏற்று, “ம்.. சொல்லுங்க சார்” என்றதும்.

“உதித்தை அங்க இருந்து ஓரமா கூட்டிட்டுப் போய் உட்காரவை ரீட்டா, ஒரு பொண்ணு அவனைத் தேடி இங்க வந்துருக்கா, அவளும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது” என்றான்.

“ம்... ஓகே சார், நான் அவரை ஓரமா கூட்டிட்டுப் போய் மறைவாய் உட்கார வச்சிடுறேன்” எனச்சொல்லிவிட்டு வந்தவள் உதித்தின் முன்பு அமர்ந்து தான் அணிந்திருந்த சட்டையின் மேல் இரு பட்டன்களை மட்டும் கலட்டி விரட்டு அவனை டெம்ட் பண்ணினாள்.

உதித்துக்கு மது போதாயுடன் மங்கையின் போதையும் சேர்ந்துக்கொள்ள அவளை தொட்டுப் பார்க்க ஆசைத் துளிர்த்து. அவனின் ஆசையை மேச்சல் பார்வையில் கண்டுகொண்ட ரீட்டா அங்கிருந்து கண்களால் தூண்டில் இட்டபடி ஓரமாக சென்றாள். எனவே ரீட்டா இழுத்த இழுவைக்கு அவனும் சென்றான்.

ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்திற்கு அவனை அழைத்துச் சென்ற ரீட்டா, மற்றவர்களின் பார்வையில் இருந்து தங்களை மறைத்துக்கொண்டு அவனின் கைகளை தனது மேனியில் அலையவிட அனுமதித்தாள்.

நடப்பது எதையும் அறியாத நட்சத்திராவோ அங்கு நிலவிய சூழலை கண்டு  ‘வகுலா என்னடீ...? டெல்லி பரவால்ல போல... இப்படி ஜோடி ஜோடியா அங்கங்க குளோசா உட்கார்ந்து இருக்காங்க...!?” என்றதும்,

“இங்க இப்படி இருக்கிறதெல்லாம் யாருன்னு நெனச்ச...?” என்று ஆங்காங்கே அமர்ந்திருந்த சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளின் வாரிசுகளையும் கை நீட்டி சுட்டிக்காட்டாமல்... நேக்காக கண்களால் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டினாள்.

நட்சத்திராவும் அவர்களை உற்றுப் பார்த்து வகுலாவின் வார்த்தைகளை உறுதிப் படுத்திகொண்டவள் ஆச்சர்யமாய் கண்களை அகல விரித்து...

“ம்... ஆமாடி.., இவங்க இப்படி பாட்டிலும் கையுமா... நெருக்கமா... பப்ளிக்கா இருக்கிறது சோசியல் மீடியால யாராவது போட்டோ, வீடியோனு எடுத்து அப்லோடு பண்ணிட்டா என்னடீ பண்ணுவாங்க?” எனக் கேட்டவளின் காதிற்கு அருகில் சென்று ரகசிய குரலில்,

இங்க உள்ள எந்த இடத்திலும் கேமரா இருக்காது, உள்ளுக்குள் என்ன நடந்தாலும் வெளிய லீக் ஆகாது. அதோட மொபைலில் யாராவது அடுத்தவங்களை படம் பிடிச்சா அங்கங்க நின்னுக்கிட்டு இருக்கிற பவுன்சர்ஸ் வந்து, யாரா இருந்தாலும் கேள்வியே இல்லாம மொபைலை பிடிங்கிடுவாங்க,” என்று அங்கிருக்கும் நிலைமையை எடுத்துச் சொன்னாள்.

அப்பொழுது பிறந்தநாள் நாயகன் கேக் கட்பண்ண ரெடியாக நட்சத்திராவை கூட்டிக்கொண்டு கூட்டத்தோடு போய் நின்றாள் வகுலா. அங்கே ஆரவாரமாக பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலிக்க, சுற்றி இருந்தவர் உற்சாகக் குரலுக்கு இடையில் அந்த பிரபலமான டான்ஸ் மாஸ்டர் தனது லவ்வருடன் நின்று கேக் கட் பண்ணிக்கொண்டிருந்த வேளையில்,

“ஹேய் வகுலா...” என்றபடி அவர்களின் அருகே இளம் தயாரிப்பாளர் ஷியாம் வந்து நின்றான்.

தன்னிடம் வழிய வந்து அவன் பேசவும் சந்தோசத்தில் அதிர்ந்தாள் வகுலா, “ஹாய்...” என்ற சொல்லுக்கு மேல் வார்த்தை பேச வராமல் திக்கி திணறி அவரைப் பார்த்தவளிடம்.

“ரிலாக்ஸ் வகுலா, என்னோட அடுத்த படத்துக்கு செகென்ட் ஹீரோயின் ரோலுக்கு, நீ ஆப்ட்டா இருப்பனு தோனுச்சு, இந்தா என் விசிட்டிங் கார்ட் இஷ்டம்னா எனக்கு கால் பண்ணு” என்றதும்.

“சார், உண்மையாவா சார்...? இது எவ்வளவு பெரிய ஆபர், நான் ரெடிசார்” என்றதும்.

“ஹா... ஹா... ஹா... என்று சிரித்துவிட்டு, வித் பிளசர்” என்றவன்,

“இவங்க  யாரு...? இதுவரை நான் பார்த்தது இல்லையே..?” என்று நட்சத்திராவை பார்த்துக்கேட்டான்.

“இது என் ஃப்ரெண்டு நட்சத்திரா.. இவளுக்கும் சினி இன்டஸ்ரிக்குள்ள நுழையணும்னு ஆசை. அதுதான் கூட கூட்டிகிட்டு சுத்துறேன்” என்றதும்.

“இஸ் இட், குட்.” என்றவன், இருவருக்கும் பொதுவாக, “வாங்களேன் அப்படி ஓரமாய் உட்கார்ந்து பேசலாம்” என்று அழைத்தான்.

“ஸ்யூர், என்றபடி வகுலா அவனின் பின்பு நட்சத்திராவையும் இழுத்துக்கொண்டு நடந்தாள். தனக்கு அவனின் படத்தில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி அவளின் துள்ளலான நடையில் தெரிந்தது.

நட்சத்திரா அந்த சூழலை சமாளிக்க கொஞ்சம் திணறித்தான் போனாள். அவள் அங்கு வந்த காரணம் உதித் அல்லவா... அவளின் கண்கள் சுற்றும் முற்றும் சுழன்று உதித் அங்கு எங்கும் தென்படுகிறானா என்று தேடியது. மேலும் அந்த இளம் தயாரிப்பாளரின் பார்வை தன்னை உச்சி முதல் பாதம் வரை அளவிடுவதை கண்டவளுக்கு ‘இதென்னடா சோதனை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவனின் பார்வையை தவிர்க்க நினைத்தாள், எனவே அவளின் கண்கள் மறுபடி அந்த ஹாலை சுற்றி வளம் வந்தது. அப்பொழுது அவளின் பார்வையில் காலையில் தன்னை ஃபாலோ பண்ணிய கருப்பு வண்டிக்காரன் தட்டுபட்டான்.

“இவன்... இவன்.. கலையில என்னைய அங்க வச்சு துரத்திப் பிடிக்க வந்தவன் தானே..? என்ற கேள்வியுடன் மறுபடியும் தனது யூகம் சரிதானா என்று கண்டறிய வண்ணனை பார்த்த இடத்தில் மறுபடி திரும்பிப் பார்த்தாள், ஆனால் அங்கு அவன் இல்லை. அவன் நின்றிருந்த இடம் வெற்றிடமாக இருந்தது.

அவளை பயம் கவ்விக் கொண்டது. வகுலாவின் கையை இறுக்கமாக பிடித்தபடி தன்னை நோக்கி இழுத்து காதிற்குள் “வகுலா காலையில என்னைய ஒருத்தன் ஃபாலோ பண்ணி வந்ததா சொன்னேனே.. அவனை இங்கப் பார்த்தேன்” என்றாள்.

“எங்க டால்,...?” என்றபடி அவளும் கண்களை சுழலவிட்டதும், “நம்மளுக்கு ரைட் சைட்ல மூனாவதா இருக்கிற டேபிள் கிட்ட நின்னுக்கிட்டு இருந்தான், இப்போ காணோம்” என்று குசு குசுவென பேசிக்கொண்டே சென்றவர்களை திரும்பிப் பார்த்த அந்த டைரக்டர் ஷியாம்

“என்னாச்சு..? எதுவோ ரகசியா பேசுறீங்க, யாரைப் பத்தி பேசுறீங்க, என்னைப் பத்தியா...?” என்றதும்.

“இல்ல... இல்ல.. சும்மா அது வேற எங்களுக்குள்ள” என்று சொன்னவள் நட்சத்திராவே தான்.

“ஹப்பாடா பேசிட்டீங்க என்கிட்ட, நான் கூட உங்களுக்கு பேசவே வராதோனு பயந்துட்டேன்” என்றவன்.

“சொல்லுங்க கேர்ல்ஸ் என்ன சாப்பிடுறீங்க...? ஏதாவது சிப் பண்ணிட்டே பேசலாம்” என்றபடி வட்ட மேஜையின் அருகில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து அவர்களையும் அமருமாறு சொன்னதும். வகுலா ஆர்வமாக அமர்ந்தாள்.

நட்சத்திராதான் ஒரு வகை அவஷ்தையுடனும் அமர்ந்தாள். அவளின் கண்கள் அந்த கருப்பு வண்டிக்காரன் எங்கிருக்கிறான் என்று அலைபாய்ந்தது.

அப்பொழுது அவளின் பின் வந்து நின்ற வண்ணன் “ஹலோ ஷியாம்” என்றபடி அந்த இளம் தயாரிப்பாளரை பார்த்து நட்பாக கை நீட்டினான்.

அவனின் குரல் கேட்டு அதிர்ந்து திரும்பிய நட்சத்திராவை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு நிமிர்ந்தவன், தன்னை நோக்கி ஆர்வமாக நீண்ட ஷியாமின் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.,

கடவுளை பார்த்தது போல பக்தியுடன், “ஹலோ மிஸ்டர் வண்ண முகிலன்” என்ற அந்த டைரக்டரின் வார்த்தையை உள்வாங்கி அதிர்ந்து நின்றாள் நட்சத்திரா.

அவளின் மீது ஆர்வமாக இருந்த சியாமின் கவனம் வண்ணனின் பக்கம் திரும்பியது.

அவன் “வண்ண முகில்” என்று சொன்னதுமே, அப்போ இவன் உதித் அண்ணனா...? அச்சோ மாட்டிக்கிட்டேனா..?’ என்று அதிர்ந்து விழித்தாள்.

---தொடரும்---

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 12

அத்தியாயம் 12

சட்டென அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து “எக்ஸ்கியூஸ் மீ” எனச்சொல்லி அந்த இடத்தைவிட்டு ரெஸ்ட்ரூம் போவது போல போக்கு காட்டியபடி விலகிச் சென்றாள் நட்சத்திரா.

அந்த இளம் டைரக்டரிடம் கைக் குலுக்கிவிட்டு அவர்களோடு அதே மேஜையில் அமர்ந்துகொள்ளப் போன வண்ணன், அவள் எழுந்ததும் மனதிற்குள் “ஓடப் பார்க்குறாளோ?...’ என்று எண்ணிக்கொண்டே

ஷியாமிடம் “உங்க புது ப்ராஜெக்ட் பற்றி சொல்லுங்க” என்றான். தான் அவளுக்காகவே பேசவந்தது தெரியக்கூடாதென தொடர்ந்து பேச்சை வளர்த்தான்.

நட்சத்திராவோ ரெஸ்ட் ரூம் பக்கம் போவது போல போக்குக் காட்டிவிட்டு சுற்றி நடந்து. தனது மொபைலை எடுத்து வகுலாவுக்கு டயல் செய்தபடி  வாசலை நோக்கி நடந்தாள்.

டால் என்ற பெயரில் வந்த அழைப்பை பார்த்து ‘என்ன ரெஸ்ட் ரூம் போனவ கால் பண்றா..?’ என்ற யோசனையுடன் அட்டன் செய்தவளிடம்,

“வகுலா, பேசுறது நான்னு காட்டிக்காத, என்னைய விரட்டிட்டு வந்தவன் இப்போ உங்க கூடத்தான் உட்கார்ந்து இருக்கான். நான் அவன் கிட்ட மாட்டக்கூடாது அதனால கிளம்புறேன். என்னையப் பத்தி எதாவது கேட்டா நட்சத்திரான்ற பேரை தவிர வேற எதையும் சொல்லாத” எனச் சொல்லிவிட்டு கட் செய்தாள்.

வகுலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை, “இந்த டால் சரியில்லை, எதோ மர்மப் பட ரீல்ஸ்ல உள்ள கேரக்டர் போலவே நடந்துக்குறா...’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டளின் முகக் குறிப்பை கவனித்தான் வண்ணன்.

‘இவளுக்கு இப்போ அவள்தான் போன் பண்ணி கிளம்புறதா சொல்லி இருப்பாளோ’ என்று நினைத்தான்.

வகுலாவோ அப்போ இவன்தான் காலையில இருந்து டால் பார்த்து பயந்துகிட்டு இருக்கிற டெவில...என்று வண்ணனின் முகத்தைப் பார்த்தாள்,

வண்ணனின் கூர் பார்வையில் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் அவனின் பார்வையில் வகுலாவுக்கு குளிரெடுக்க ஆரம்பித்தது தானாக அவளின் வாய் உளறிக் கொட்டியது,

“சார்... ஒன்னும் இல்ல... என் ஃப்ரெண்டுக்கு முக்கியமான வேலை வந்துருச்சாம், அதுதான் கிளம்புறேன்னு போன் பண்ணினாள்” என்று திக்கித்திணறி சொன்னவள் மனதினுள் ‘ஹய்யோ உளறிக் கொட்டுறேனே...’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அவளின் வார்த்தையைக் கேட்டவன், ‘நான் நெனச்சது சரி தான், எஸ் ஆகப் பார்க்குறா... ‘ என்று கண்டுகொண்டான்.

டேபிளுக்கு கீழே கையில் வைத்திருந்த மொபைலைக் கொண்டு இவர்கள் கவனிக்காதவாறு தனது மொபைலில் அழைப்பு வந்தது போல ரிங் டோனை ஒலிக்க விட்டான்.

சட்டென தனக்கு கால் வந்திருப்பதாக அட்டன் செய்வது காதிற்கு கொடுத்து, “ம்...ஓகே இதோ கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு ஷியாமிடம், “பிறகு பார்க்கலாம், ஒரு முக்கியமான வேலை, நான் கிளம்புறேன்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அந்த பில்டிங் விட்டு வெளியில் வந்த நட்சத்திரா என்ட்ரென்ஸ் கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். செல்லும் வழியில் இருந்த வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அவள் கடக்க முயன்ற நேரம் வேக நடையுடன் அங்கு வந்து சேர்ந்தான் வண்ணன்.

அவள் ரெஸ்ட்ரூம் பக்கம் சென்று சுற்றி நடந்து அந்த பில்டிங் விட்டு வெளியில் வர சற்று தாமதமானதால் வெளியில் அவள் செல்லும் முன்பே அவனால் அவளை பார்த்துவிட முடிந்தது.

இருந்தும் ‘அந்த காம்பவுண்டுக்குள் அவளுடன் மல்லுக்கட்டினால் மற்றவர்களின் பார்வையில் படும்... வெளியில் இருக்கும் கேமராவில் பதிவாகி ரசவாதமாகும்.... அவளை முன்னே நடக்க விட்டு கேட் வெளியில் சென்றபின் மடக்கலாம்’ என்று பதுங்கிக்கொண்டான்.

பொதுவாக அங்கு வந்தவர்களுள் தொண்ணுறு சதவீதத்துக்கும் மேலானோர் லக்சூரியஸ் கார்களில் தான் வந்து போவார்கள், அங்கு வேலைபார்ப்பவர்களுடன் ஒரு சிலர் மட்டுமே டூ வீலரில் வந்திருந்தார்கள்.

அங்கிருந்த பிரமாண்டமான கார்களுக்கு இடையில் தனித்து கம்பீரமாக பளபளவென்று நின்றிருந்த அவனின் கருப்பு நிற டூவீலர் துண்டாக அவளுக்கு தெரிந்தது. இது அந்த டெவிலோட வண்டி தானே...? என்று எண்ணியவள் சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டாள்.

“இவ என்ன பண்ணப் போறா...? எதுக்கு எதுவோ திருட்டுத்தனம் பண்றது போல முழிக்கிறாள்...? என்று மறைந்திருந்தபடி உற்றுக் கவனித்தான்.

அவள் தனது ஹேன்ட் பேக்கிற்குள் இருந்து கைக்கு அடக்கமாக எதுவோ ஒன்றை எடுத்துக்கொண்டு தனது பைக்கை நெருங்குவதை கவனித்தவன் மூச்சு விடாமல் பூனை போல பதுங்கியபடி அவளை நோக்கி முன்னேறினான்.

தனது பைக் அருகில் குனிந்தவளை பின்னிருந்து கோழியை அமுக்குவது போல அமுக்கி அவளின் கரத்தில் உள்ளதை பிடுங்க முயன்றான்.

விலகி ஓட முயன்றவளை பிடித்து காலுக்குள் இடையில் அமுக்கி கிடுக்குப் பிடி போட்டு நகரவிடாமல் பிடித்துக்கொண்டான்.

சட்டென ஒருவன் பின்னால் இருந்து தன்னை பிடித்துக்கொண்டதும் கத்தப்போனவளின் வாயில் ஒரு கையை வைத்துப் பொத்திக்கொண்டு அவளின் கரத்தில் உள்ளதை கைப்பற்ற முயன்றவனிடம் மல்லுக்கட்டினாள்.

அவனின் பலத்துக்கு முன் அவளால் எதுவுமே செய்யமுடியவில்லை, கையில் இருந்ததை அவனிடம் பரிகொடுத்தாள். அது நெக வெட்டிதான்   அழுக்கெடுக்க இருக்கும் ஷார்பான கொக்கி போன்ற ஹூகினை எடுத்து வைத்திருந்தாள்.

தனது டூவீலரின் டயரை பஞ்சர் ஆக்க முனைந்த அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரிப்பும் கோபமும் ஒரு சேர அவனுக்குள் முளைத்தது.

அவனின் கண்கள் அங்கிருந்த கேமிராவின் கண்களை பார்த்ததும் சட்டென அவளை வேண்டுமென்றே நழுவ விட்டான்.

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக வெளியில் செல்லும் கேட்டை நோக்கி பாய்ந்து ஓடினாள். தான் இருப்பதும், இருக்கும் இடமும் வண்ணனின் மூலம் அவளது தந்தை முகில் அதியனுக்குத் தெரிந்து.... முகில் மூலம் அவரின் மனைவி சந்திரிக்காவுக்கு தெரிந்தால்...!? அவாளவுதான் நான் செத்தேன்...’ என்ற பதட்டம் அவளை தொற்றிக்கொண்டது.

வண்ணனோ.. ‘காம்பவுண்டு கேட்டை விட்டுத் தாண்டுற அவளால்... அந்த ஏரியாவில் தள்ளித்தள்ளி அங்கொன்னும் இங்க்கொன்னும் இருக்கும் இந்த பங்களாக்களை விட்டு ரோட்டுக்குப் போக குறைந்தது முக்கால் மணி நேரமாவது நேரமாவது எடுக்கும்.... அதற்குள் அவளை மடக்கி விடமுடியும்.... மடக்கி தனது வழிக்கு கொண்டுவந்துவிட முடியும்....’ என்று நினைத்தான்.

கேட்டை விட்டு வெளியில் வந்தவளுக்கு எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்றே புரியவில்லை, ஒரு நிமிடம் நின்று மூச்சை இழுத்துப் பிடித்தவள் டேக்ஸியில் வகுலாவுடன் வந்த பக்கத்தை நினைவில் கொண்டு வந்து  அந்த பக்கம் ஓட ஆரம்பித்தாள்.

தனக்கு பின்னால் அவனின் டூவீலர் வருகிறதா என்று திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடி ரோட்டுக்கு செல்லும் பாதையில் நடந்துகொண்டே தனது மொபைலில் கால் டேக்சி புக் பண்ண முயன்றாள்.

அவளின் பின்பு டூவீலர் வரும் அரவம் உணர்ந்து சட்டென இரு பில்டிங்கின் இடையில் இருக்கும் மூன்று நபர்கள் செல்லக்கூடிய அளவில் இருந்த சற்று பெரிய சந்தில் பதுங்கி நின்றாள்.

அவள் எந்தப்பக்கம் ஓடுகிறாள் என்பதை கவனித்தே தனது வாகனத்தை அப்பாதையில் செலுத்தினான் வண்ணன், ஆனால் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை அவளை பார்க்க முடியாததால் ‘எங்கேயோ பதுங்கி நிக்கிறா...’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

சுற்றி முற்றி கண்களை அலையவிட்டான், அங்கிருந்த இரண்டு பங்களாவையும் கவனித்தான் அதன் கேட்டிற்குள்ளும் குதித்து போக வழியில்லை, அப்போ எங்க போயிருப்பா...? என்று யோசித்தவனுக்கு இரண்டு பங்களாவின் மதில் சுவர்களுக்கு இடையில் இருந்த சந்து கண்ணுக்குத் தெரிந்ததும், அது தவிர்த்து பதுங்க வேறு இடம் இல்லை என்பது புரிந்தது .

சந்திற்குள் அவனது டூவீலரில் செல்வது சரியில்லை என்று நினைத்து  வண்டியை ஓரமாக நிறுத்தியவன் சாவியை எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டபடி சந்தினை நோக்கி நடந்தான்.

அவன் தான் இருக்கும் பக்கம் வருவதைக் கண்டு ஓட ஆரம்பித்தாள். பாதி தூரம் ஓடியவளுக்கு பின்னால் அவன் வருவதும் முன்னால் போகும் சந்தின் பாதை ஒரு எல்லையோடு முடிந்துவிடுவதையும் கண்டு அவனிடம் மாட்டாமல் இருக்க என்ன செய்ய...? என்ற யோசனையோடு ஓடியவள் காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து விட்டால் தப்பித்து விடலாம்... ஏற வசதி உள்ளதா...? என்று பார்த்தாள்

அவளின் உடை வேறு அதற்கு தோதாக இருந்தது. எனவே சற்றும் யோசிக்காமல் உயரமான அந்த காம்பவுண்டு சுவரில் ஏற.... அதன் பக்கத்தில் இருக்கும் மரத்தின் ஏறி மதில் சுவரை அடைய நினைத்தாள். உடனே ஒரு வேகத்தில் மரத்தில் ஏறி விட்டாள். அது தானாக முளைத்த புளிய மரம். பொதுவாகவே புளிய மரத்தில் ஏறுவது புத்திசாலித்தனம் இல்லை. அதன் கிளைகள் எளிதாக முறிந்துவிடும்.

அதுவோ இளமரம், தற்போதுதான் கிளையும் இலையும் விட்டு படர்ந்து இருந்தது. கொப்புகளில் கைகளால் பற்றி ஏறி உயரத்துக்குச் சென்று மதில் சுவற்றின் மேல் புறத்தில் கை வைத்த போதுதான் கண்ணாடித் துண்டுகள்  பதித்திருப்பது அவளுக்குப் புரிந்தது. ‘இந்த சுவத்தில ஏறினோம்... செத்தோம்...’ என்று உணர்வில் அதிர்ச்சியும் சோர்வும் உண்டாக அக்கிளையிலேயே அமர்ந்துவிட்டாள்.

எதோ வேகத்தில் ஏறிவிட்டாள் ஆனால் இப்பொழுது இறங்க நினைத்தவளுக்கு கால்கள் வேறு நடுங்க ஆரம்பித்தது.  

அவளை வேண்டுமென்றே ஓடவிட்டான், அவன் நினைத்திருந்தால் வேக எட்டில் அவளை பிடித்திருக்கலாம், ஓடி அவளின் எனர்ஜி காலியாகட்டும் என்றே விட்டு விட்டு பின் தொடர்ந்தான். தொடர்ந்தவன் மரத்தில் அவள் ஏறுவதையும் கவனிக்கத் தவறவில்லை.

அந்த மரத்துக்கு அடியில் வந்து நின்றவனுக்கு அவளின் நிலை புரிந்தது, எனவே சத்தமாக “உன்னால இனி எங்கயும் ஓட முடியாது... நான் உன்னைய ஒன்னும் பண்ணமாட்டேன்... உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்துருக்கேன்.. பார்த்து இறங்கு.... நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா...?” என்றான்.

அவன் தன்னை அவனிடம் சரணடைய சொல்லுவது பயத்தை கொடுத்தாலும் வெளியில் காட்டாமல் “ஹலோ சார், நீங்க யாரு எனக்கு ஹெல்ப் பண்ண...? உங்க ஹெல்ப் ஒன்னும் வேணாம்... நீங்க இங்க இருந்து கிளம்புங்க....” என்றாள்.

மரத்தின் கிளை அவளின் எடை தாங்காமல் வளைந்து கொண்டே வந்தது எந்நேரமாமும் அந்த கொப்பு உடைந்து அதனுடன் சேர்ந்து அவளும் கீழே விழுக வேண்டியது வரும் என்பதை அவன் உணர்ந்துக் கொண்டான்.

தனது பையில் இருந்த டார்ச்சை எடுத்து அவளின் மேல் ஒளியை அடித்தபடி “இங்க பாரு, இன்னும் கொஞ்ச நேரத்தில் கொப்பு ஒடஞ்சு நீ விழுந்து மண்டைய உடைச்சுக்கிடத்தான் போற...  நான் சொல்றதைக் கேட்டா... நீ இறங்க உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்” என்று சொன்னான்.

அவளும் கிளை கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து கொண்டு போவதை கவனித்து பயந்தது நடுங்கியவளின் கால் கிளைவிட்டு நழுவியது. விழுகாமல் இருக்க மரக்கிளைகளை பற்றியவளின் கால் அந்தரத்தில் தொங்கியது. ஆமாம் மரத்தில் கிளைகளை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் எடை தாங்காமல் கிளை உடைந்து கீழே விழுக இருந்தவளை கைகளில் ஏந்திக் கொண்டான் வண்ணன்.

விழுந்து அடிபடப் போகிறோம் என்ற பயத்திலேயே மூர்ச்சையாகி விழுந்தவளை அவனின் கைகளில் பூமாலையாக ஏந்திக் கொண்டான்.

தனது மொபைலை எடுத்து ரீட்டாவை அழைத்தான். உதித்தோடு சல்லாபித்து முடித்தவள் போதையில் இருந்தவனை விலக்கிவிட்டு சற்று தள்ளி நின்று “சொல்லுங்க சார்” என்றதும், தான் இருக்கும் இடத்தைச் சொல்லி குவிக்கா உடனே ஒரு காரை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு, கையில் அவளை ஏந்தியபடி நடந்தான்.

ரீட்டாவுக்கு அந்த பப்பில் வேலை பார்க்கும் வேலையாட்கள் சிலருடன் நல்ல பழக்கம் இருந்தது. எனவே அவர்களின் ஒருவனான வினோத்தை தேடிச்சென்றாள்.

சற்று தூரம் கையில் அவளை ஏந்தியபடி நடந்தவன் அந்த நிலவொளியில் அவளது முகத்தை மிக அருகில் பார்த்தான். குமரியின் உருவத்தில் குழந்தையின் மென்மையான சருமத்துடன் கூடிய அழகான அவளின் முகத்தைக் கண்டதும் வண்ணனின் முகத்தில் மென்மை படர்ந்தது...

ஆனால் மனதில் “இடியட்... லவ்வுக்கு ஜூஸ் பண்ண வேற ஆளே கிடைக்கலையா உனக்கு...? பணக்காரன் லவ் பண்ணினா அவனோட கேரக்டரை கண்டுக்காம விட்டுடுராங்க இந்த பொண்ணுங்க..

அதுதான் இப்படி ஒரு இடத்தில் இவங்களை கொண்டு வந்து விட்டுருது... என்று லாராவாக அவளை நினைத்து தனக்குள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் மயக்கம் தெளிய ஆரம்பித்தது.

கண்களை மெதுவாக திறந்து பார்த்தவள், தன் முகத்துக்கு அருகில் தெரிந்த முகத்தை கண்டதும் அதிர்ந்து அவனின் கையில் இருந்து துள்ளி இறங்க முயன்றாள்.

----தொடரும்----

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 13

அத்தியாயம் – 13

நிலவின் ஒளியில் தனது கைகளில் இருந்தவள் கண்களை மலர்த்தி விழிக்கும்போதே அடுத்து அவள் துள்ளியபடி தன்னிடம் இருந்து தப்பிக்கப் பார்ப்பாள் எனத் தெரிந்ததால் அவளை தன்னோடு சேர்ந்து இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தான் வண்ணன்.

அவன் நினைத்தது போல துள்ளிக் குதித்து நழுவ முயன்றவளின் பாதத்தை மட்டும் ரோட்டில் படுமாறு நழுவ விட்டவன்... நடையை நிறுத்தி அவளின் கைகள் இரண்டையும்... அவளின் முதுகுக்குப் பின் கொண்டுசென்று பிணைத்துப் பிடித்து, தன்னைப் பார்த்தபடி நிறுத்தினான்.

மிகவும் நெருக்கமான நிலையில் அந்நிய ஆடவனின் முரட்டுப் பிடியில் நின்றுக்கொண்டிருந்தவளுக்கு கண்களில் கண்ணீர் திரண்டு நிறைந்தது...

அவனின் மார்பை தாண்டி கழுத்துவரை இருந்தவள் நிமிர்ந்து வண்ணனின் முகம் பார்த்தாள். அவமானத்தில் கண்ணீர் குளம் போல் அணைகட்டிய கண்களுடன், உதடு துடிக்க “செய்... விடு... விடுடா... டெவில்...” என்று சொன்னவளின் அழகு அந்தே நேரத்தில் அவனை சலனப் படுத்தியதால் தனது மண்டையிலேயே மானசீகமாகக் கொட்டு வைத்துக்கொண்டான்.

அப்படி இருந்தாலும் அடங்காமல் “ஹா... ஹா... ஹா... டெவில் என்ன செய்யும் தெரியுமா...? அப்படியே கடிச்சு ரத்தத்தை உறிஞ்சிடும்” என்று கடிப்பதுபோல செய்து காட்டினான்.

அவனின் பேச்சிலும் செய்கையிலும் இன்னும் பயந்து போனாள், அவனின் நீண்ட அகண்ட கண்களும் நேர் நாசியும் அவனின் நிறத்துக்கு ஏற்றது போல இல்லாமல் சற்று கருத்து போய் தடித்து கிடந்த உதடுகள் தாடி மீசைக்குள் அடங்கி இருந்தவனின் முகத்தோற்றம் லட்சனமாக இருந்தாலும்... அந்த கண்களில் இருந்த ஒரு ஸ்பார்க் அவளை அச்சுறுத்தியது.

அதைவிட ஆறடி உயரத்தில் திடகாத்திரமான தேகத்துடன் அடங்காத முடிக்கற்றைகள் கொண்டவனின் கருப்பு நிற பணியனும், சாம்பல் நிற ஜீன்சும் அவனை அரக்கன் போலவே அவளின் கண்களுக்கு காட்டியது.

அவன் அழகை ரசிப்பவன் தான் ஆனால் எந்த பெண்களுடனும் அத்துமீற நினைத்துக் கூட பார்க்க மாட்டான் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது அல்லவா...

அவனுமே எந்த பெண்களையும் இப்படி கையில் சுமந்தது நெருங்கி நிறுத்தியது இல்லை. ஆண்களை ஈசியாக கையாள முடிந்த அவனால் இத்தனை நெருக்கத்தில் அழகான பெண் ஒருத்தியைக் கையாள முடியாமல் தடுமாறித்தான் போனான்.

அவன் மனத்தினும் “செய் மனுஷனாடா நீ...? அவள் உதித்தின் ஃப்யான்ஷி” என்று தனக்குள்ளே சொல்லியவன் முகம் கடுமையானது.

“ஸ்..... ஒழுங்கா கூட வந்துட்டா... அடி படாம கூட்டிட்டுப் போய் உன்கூட பேச்சு வார்த்தை நடத்துவேன். அடம் புடிச்சே..... போலிஸ் டிரீட்மென்ட் தெரியுமில்ல, டிரைனிங் போகாமலேயே அம்புட்டையும் கத்து வச்சுருக்கேன்” என்று பல்லை கடித்தபடி அவளை முன்னால் திருப்பி கைகள் இரண்டையும் அவளின் பின் பக்கம் இழுத்து பிடித்தபடி நடக்க சொல்லி முன்னாள் உந்தித் தள்ளினான்.

அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. சந்தை விட்டு வெளியேறிவிட்டால் யாரிடமாவது உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு என்று எண்ணத்தோடு நடந்தாள்.

ஆனால் ரோட்டுக்கு வந்தும் ஆள் யாரும் நடமாடாமல் வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்டவள் ‘ஆண்டவா... யாராவது இந்த பாதையில் வரக் கூடாதா..? வந்து எனக்கு ஹெல்ப் பண்ணக் கூடாதா...?’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கார் வருவதைக் கண்டதும் கடவுளை கண்டது போலமுகம் பிரகாசமானது நட்சத்திராவுக்கு.

அவனின் பிடியில் நின்றுகொண்டே “ஹெல்ப்... ஹெல்ப்... ஹெல்ப்...” என்று கூச்சல் போட்டாள். வேகமாக வந்தகார் ஸ்லோ ஆகவும் தன்னை பிடித்திருந்தவனாசி இழுத்துக்கொண்டே போய் “சார்... சார்... சார்... பிளீஸ் சார், இவன்கிட்ட இருந்து என்னைய காப்பாத்துங்க சார்” என்று நின்ற காரினுள் அமர்ந்திருந்தவர்களிடம் குனிந்து பேசினாள், வண்ணனின் பிடியில் நின்றுகொண்டே.

நிறுத்திய காரிலிருந்து டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி இவள் பேசுவதை பார்த்துக்கொண்டே இறங்கவும், அவகளுக்கு நம்பிக்கை துளிர்விட்டது.இறங்கியவள் பின் கதவை திறந்து பிடித்து நின்றாள்.

அது ரீட்டா வண்ணன் சொன்னதால் எடுத்து வந்திருக்கும் கார். ரீட்டா கார் கதவை திறந்து வைக்க அதனுள் வண்ணன் அவளை திமிர திமிர உந்தி உள்ளே தள்ளினான்.

“மேம்... மேம்... பிளீஸ், ஹய்யோ என்னை விட்டுடுங்களேன்” என்றவளுக்கு அக்கார் இந்த டெவில் வரவழைத்த கார் என்பது அப்பொழுதுதான் புரிந்தது. ஆனால் இப்பொழுது இவனுடன் மல்லுகட்டுவதில் எந்த புரயோஜனமும் இல்லை எனத்தெரிந்து சோர்ந்து போய் காரில் அமர்ந்துவிட்டாள்.

அவனும் உள்ளே ஏறி அமர்ந்து, டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனிடம் கைகளை நீட்ட நீண்ட கயிறு ஒன்றை எடுத்துக் கொடுத்தான். அதைகொண்டு பின்னால் கைகளை கட்டியவன், மீண்டும் டிரைவரிடம் கை நீட்ட அவன் கொடுத்த பண்டல் சுற்ற வைத்திருக்கும் பெரிய டேப்பை எடுத்துக்கொடுக்க நட்சத்திராவின் வாயில் ஓட்டி விட்டான்,

ரீட்டாவிடம் “நீ இவளை நேரா என்னோட இடத்துக்கே கூட்டிக்கிட்டு வா நானும் பின்னாடியே வாரேன். வேற எங்கயும் இடையில் காரை நிப்பாட்டாத, டிராபிக்கில் வண்டி நிக்கிற நிலை வந்தா... அப்போ ஏதாவது இவள் சேட்டை பண்ணினா... இதோ இது குலோரோபார்ம் உள்ள கர்சீப் முகத்தில் வச்சு அழுத்தி பிடிச்சுக்கோ. கொஞ்ச நீரத்தில் மயங்கிடுவா... “

எனச்சொல்லிவிட்டு காரைவிட்டு இறங்கவும் கார் நட்ச்சத்திராவை சுமந்துகொண்டு நகர்ந்தது. அதன் பின்பு தனது பைக்கை எடுத்துகொண்டு பின் தொடர்ந்தான் வண்ணன்.

.

*********

 

 தனது பங்களாவில் பின்னால் இருந்த புழங்காமல் பூட்டி வைத்திருந்த அறையில் இரண்டு சேர்கள் மட்டும் இருந்தது. ஒன்றில் நட்சத்திராவும் மற்றொன்றில் வண்ணனும் அமர்ந்திருந்தார்கள்.

“சொல்லு எதுக்காக உதித்தை தேடி வந்த...?” என்றான்.

“உதித்தா...? அப்படி யாரையுமே எனக்குத் தெரியாதே... நீங்க தப்பா என்கிட்ட விசாரிக்கிறீங்க?”

“அப்போ உனக்கு உதித் யாருன்னு தெரியாது... சரிதானே? நல்லா யோசனை பண்ணி பதில் சொல்லு” என்றதும் கொஞ்சம் அரண்ட முகத்துடன் “தெரியாது...” என்றதும்.

வண்ணன் அவளை பார்த்து கோணலாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு தனது மொபைலில் யுகாந்தனின் வீட்டு வாசலில் வாட்ச்மேனிடம் “உதித் முகிலை பார்க்கணும் இருக்கார்ல..?” என்று அவள் கேட்பதும்

“அப்படி யாரும் இங்க இல்லைம்மா” என வாட்ச்மேன் சொல்வதும், ஓ... இது அவசங்க பங்கலா கிடையாதா... இந்த ஏரியாவில் தானே வி.ஐ.பி முகில் அதியன் பங்களா இருக்குது... அது எதுன்னு சொல்ல முடியுமா...?” என்று மீண்டும் அவள் கேட்பதும்.

“அப்படிலாம் இங்க யாரும் இல்லைமா, நீங்க அட்ரஸ் மாறி வந்துருக்கீங்க போங்க...” என்று விரட்டுவதும் பதிவாகி இருந்ததை ஓடவிட்டு அவளிடம் காட்டினான்.

கேட் பக்கத்துல இருந்த சி சி.டிவி பூட் ஏஜ்ல இருந்து அப்பவே நான் சுடச் சுட சுட்டு என் மொபைலில் எடுத்துக்கிட்ட வீடியோ இது” என்றவன் மிதப்பமாக அவளை பார்த்தபடி, “எங்கே இப்போ உதித் யாருன்னு தெரியாதுன்னு சொல்லு பாப்போம்...!” என்றான்.

“அது... அது... “ என்று சொன்னவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் திணறினாள். படபடப்பில் அவளுக்கு முத்து முத்தாக வேர்த்து வடிந்தது.

“சரி... உதித்த எதுக்கு தேடி வந்தனு சொல்ல மாட்ட, இதுக்காவது பதில் சொல்லுவியா அதுதான் லாராவை பத்தி....?” என்றதும்.

அவள் கண்ணில் முத்து முத்தாக கண்ணீர் திரண்டு கன்னத்தில் உருண்டது... கண்களில் ஒரு ஆவேசம் அவளுக்கு உண்டானது,

“அதுதான் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கிக்கிறோம் எதையும் மூச்சு விடமாட்டோம் எங்களை விட்டுடுங்கனு சொன்னோமே... அப்படி இருந்தும் அந்த சந்திரிக்காவுக்கு வன்மம் அடங்கலையா...? செய் அவளெல்லாம் ஒரு பொம்பளை...? அவளுக்காக வேலை பார்க்கிற உன்கிட்ட மனிஷத் தன்மையை எதிர்பார்க்கவா முடியும்?” என்றாள்.

அவள் பேசப் பேச வண்ணனின் புருவம் இடுங்கியது... “லுக்... லாரா, உனக்கு  என்ன ஆச்சு...? எதுக்கு நீ, இங்க வந்து தலைமறைவா இருக்கன்ற உண்மையை சொல்லு, நான் உன்னைய இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் கொண்டுவாரேன்”  

அவன் தன்னை லாரா என்று சொன்னதும் “என்ன போட்டு வாங்குறீங்களா..? நான் ஒன்னும் லாரா கிடையாது” என்றாள்.

“ஸ்... இப்படி நீ முரண்டு பிடிக்கிறதால ஒன்னும் ஆகப் போறது இல்ல, சந்திரிக்கா உனக்கு மட்டும் எதிரியில்லை, எனக்கும் தான். நமக்கு பொதுவான எதிரிதான் அவள், அவளுக்காக நான் வேலை பார்க்கலை, அவள்கிட்ட இருந்து உன்னை காப்பாத்த என்னால முடியும்... சொல்லு ஏன் இப்படி மும்பையில் இருந்து இங்க வந்து தலைமறைவாகி இருக்க..?”

“ஆடு நனையுதேன்னு ஓனான் கவலைப் பட்டுச்சான், இப்படித்தான் உதித்ததும் பேசி நம்பவச்சான்.. நமக்கு பொது எதிரி அந்த சந்திரிக்கானு சொன்ன பொய்யை நம்பித்தான் அவன் கூட பழகி இப்போ மோஷம் போய் நிக்கிறோம்” என்றவளுக்கு கண்கள் கண்ணீரில் நிறைந்தது.

“உதித்தை கல்யாணம் பண்ணிக்கப் போறாம்னு எவ்வளவு ஆசையா என்கிட்டே லாரா சொன்னா தெரியுமா...? குடும்பமா வாழப் போறோம்னு எவ்வளவு சந்தோசப்பட்டா தெரியுமா...

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, கூடபிறந்தவங்கனு எல்லோரும் இருந்தும் யாரையும் வெளியில்,அடையாளம் காட்ட முடியாம இருக்கிற நிலை கொடுமை. அதுக்கு அனாதையாவே நின்னு இருக்கலாம்னு எவ்வளவு முறை அழுதிருப்போம்...” என்று கண்ணீருடன் பேசியவள், கோபத்துடன் தனது கண்களை துடைத்துவிட்டு.

“பணம் பணம்னு ஏன் இப்படி பேயா அலையிறீங்க, நீங்க எல்லாரும் பணப் பேய்ங்க, மனுஷ உருவத்துல இருக்கிற டெவில் நீங்க” என்று ஆத்திரத்துடன் பேசி முடித்தாள்.

அவள் பேசுவதை நிதானமாக வேடிக்கைப் பார்த்தவன், “பேசிட்டியா..? பேசி முடிச்சிட்டியா..? இப்போ நான் கேக்குறதுக்கு பதிலைச் சொல்லு....

ஆமா நாங்க... நாங்கன்னு... சொல்றீயே...! அந்த நாங்கள்ல ஒன்னு லாரா, இன்னும் எத்தனை பேரு சொல்லு....? நீ லாரா இல்லைன்னா உன் பேர் என்ன...? நீ எங்க இருந்து வந்த...? இப்போ சென்னையில என்ன பண்ணிக்கிட்டு இருக்க...?” என்றான்.

‘இவன் திரும்ப ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கே வந்து நிக்கிறானே..., ஆத்திரத்தில நான் வேற வாயை விட்டுட்டேனோ...? இவன் சொல்றது போல உண்மையாவே சந்திரிக்காவுக்கு வேலை பார்க்கிறவன் இல்லையோ...?” என்று யோசித்தபடி கேட்டதுக்கு பதில் சொல்லாமல் அழுத்தமாக அமர்ந்து இருந்தாள்.

வண்ணனோ அவள் தன்னை லாரா இல்லை என்று சாதிப்பதை... சந்தர்ப்பமும் சூழலும் பொய் என்று சொல்ல... அவன் உள் மனமோ அவள் வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியமான உண்மை என்று கூறியது... அமைதியாக இருந்தவளை துளைக்கும் பார்வை பார்த்தபடி தனது மொபைலுக்கு லாரா உதித் நிச்சியத்தின் போது எடுத்திருந்த போட்டோக்கள் இருந்ததை கேலரியில் போய் தேடி எடுத்தான்.

அதில் உள்ள ஒவ்வொரு போட்டோவாக எடுத்து லாராவுடன் எதிரில் அமர்ந்திருப்பவளின் முகச்சாடையில் ஒத்துப்போகும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அவனை குழப்பி விட்டது.

ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு போட்டோவை எடுத்ததுப் பார்த்ததும்  அவன் கண்கள் விடை கிடைத்த மகிழ்ச்சியில் அகல விரிந்தது. அவளின் உதடுகளில் புன்னகையில் விரிந்தது.

---தொடரும்---

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 14

அத்தியாயம் 14

நிச்சயதார்த்த போட்டோக்களில் லாரா மணப்பெண் அலங்காரத்தில் இருக்கிறாள். வேறு எதுவும் சாதாரண போட்டோ ஒன்றை அனுப்பு உதித் என்று  மணப்பெண் அலங்காரத்தில் இல்லாத லாராவின் போட்டோவை  கேட்டு வாங்கி இருந்தான் வண்ணன்.

அவ்வாறாக தனக்கு அனுப்பிய போட்டோவின் பேக்ரவுண்டில், சந்திரிக்காவின் இளவயது வால்பேப்பர் அளவில் உள்ள போட்டோவும் பதிவாகி இருந்தது. அதைக்கொண்டு  சந்திரிக்காவின் வீட்டில் லாரா இருக்கும் போது எடுத்த போட்டோவென்ற புரிதல் உண்டாகி இருந்தது வண்ணனுக்கு.

மேலும் அந்த படத்தில் இருக்கும், இளவயது சந்திரிக்காவுக்கும் லாராவுக்கும் முகச் சாயல் நிறைய ஒத்துப் போவதைக் கண்டு ஏற்கனவே வண்ணன் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்

ஏனெனில் இருவருக்கும் ரெத்த சம்பந்தம் எதுவும் இல்லை. லாராவை சந்திரிக்காவின் அம்மாவும் அப்பாவும் தத்தெடுத்து வளர்த்தார்கள். ஆதலால் அதிக வயது வித்தியாசத்தில் லாரா என்றொரு தங்கை சந்திரிக்காவுக்கு அமைந்திருப்பதாகத் தான் ஊருக்குள் பேச்சு.

இருவரின் உருவ ஒற்றுமையும், இவர்களுக்குள் எதுவோ ரத்தச் சம்பந்தம் உண்டோ என்ற ஐயத்தை அவனுக்கு உண்டாக்கி இருந்தது.

இந்நிலையில்... லாராவுக்கும், இப்பொழுது தனக்கு முன்பாக இருக்கும் நட்சத்திராவுக்கும் முகச் சாயல் ஒத்துபோவதாக தெரிந்ததில் இவள் லாராவோ என்ற சந்தேகம் வண்ணனுக்கு வந்து இருந்தது.

ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்தவனுக்கு அந்த நிச்சய விழாவில் நட்சத்திராவும் இருப்பது ஒரு போட்டோவில் பதிவாகி இருந்ததை இப்போது தான் பார்த்தான்.

இருபதுக்கும் மேற்பட்ட நிச்சயதார்த்தப் போட்டோக்களில் பெரும்பாலும் லாராவுக்கு அருகிலேயே தான் நட்சத்திராவும் இருந்திருக்கிறாள். ஆனால் அதில் அவளையும் சேர்ந்து போட்டோ எடுப்பதை பெரும்பாலும் தவிர்த்திருந்தார்கள். இருந்தாலும் அவளின் உடை, திரும்பி இருக்கும் முகம், கை மற்றும் கால் மட்டுமே பதிவாகி இருந்ததால் அந்த உருவத்துக்கு வண்ணன் முக்கியத்துவம் கொடுக்காமல் தான் இருந்தான்.

ஆனால் ஒன்றில் கவனக்குறைவாக  லாராவுக்கு பின்பு நின்றிருந்த நட்சத்திராவையும் சேர்ந்து படம்பிடிக்கப்பட்டிருந்தது. சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த நட்சத்திராவின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதை ஜூம் செய்து பார்த்தவன் அவள் தனக்கு முன்பு இருக்கும் நட்சத்திராதான் என்று கண்டுக்கொண்டான்.

அவ்வாறு அவன் கண்டதும், லாராவும் நட்சத்திராவும் வேறு வேறு என்ற உண்மை புரிந்தது.  அவனின் ஐயத்துக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் கண்கள் அகல விரிந்தது. அவளின் உதடுகளில் புன்னகை உண்டானது.

ஏற்கனவே சந்திரிக்காவுக்கும் லாராவுக்கும் உள்ள உருவ ஒற்றுமை அவனுக்கு நெருடலாக இருக்க இப்பொழுது நட்சத்திராவும் அவர்களின் இருவரின் ஜாடையில் இருப்பதைக் கண்டு ‘சம்திங் ஸ்பெஷல். இவங்க மூணு பேருக்கும் இடையே எதுவோ ரகசியம் இருக்கு...’ என்று நினைத்துக்கொண்டான்.

“ஓகே நட்சத்திரா... நீ எதுக்கும் பதில் சொல்லப் போறது இல்ல... ரைட் ஆனா இதை வச்சு விசாரிச்சா... தானா எனக்கு உண்மை கிடைச்சிடப் போகுது” என்று அவனின் மொபைலில் இருக்கும் அவளின் உருவத்தை காட்டினான்.

நிச்சயதார்த்த நிகழ்வில் லாராவின் அருகில் சற்று இடைவெளி விட்டு தான் அவள் நிற்க வேண்டியநிலை, லாரா தன்னுடைய சைல்ட் ஹூட் ஃப்ரெண்ட்... இங்க அவளுக்கு யாரும் தெரியாது... அதனால் தனக்கு அருகிலேயே நிற்கட்டும் என்று சொல்லியதால்தான் அங்கே அவளுடன் நிற்க முடிந்தது.

ஏற்கனவே உதித், லாரா நிச்சயதார்த்தம் சந்திரிக்காவை கோபப் படுத்தியிருந்தது. பெரியோர்களின் சம்மதம் இல்லாமல் லாரா மற்றும் உதித்தின் நண்பர்கள், பிஸ்னெஸ் தொடர்புடையோர்கள் முன்னிலையில் அவர்களே நடத்திக்கொண்டிருந்த நிச்சயதார்த்தம் அது.

இந்நிலையில் தானும் அங்கு வெளிப்படையாக லாராவுடன் நெருக்கமாக நின்று மற்றவர்களின் பார்வையை உறுத்த ஆரம்பித்தால் சந்திரிக்காவின் கோபம் அதிகரிக்கும். அதனால் வீண் தொல்லைகள் எழும் என்றே போட்டோ கவர் செய்யும் போது அவளை அவாய்ட் பண்ணச் சொல்லி சற்று எட்டவே நின்றிருந்தேன்.

இருந்தாலும் எப்படியோ இதில் என் முகம் பதிவாகிவிட்டதே... இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே...! என்று நட்சத்திரா தவித்துப் போனாள்.

“சார்.. சார்... சார்... என்னை விட்டுடுங்களேன், நானே இவ்வளவு தூரம் லாராவைத் தேடித்தான் வந்தேன். உதித் கிட்ட லாராவைப் பத்தி விசாரிக்க தான் நான் சென்னைக்கே வந்தேன்.

நான்... நான்... இங்க இருக்கிறது உங்க அப்பாவோட வொய்ஃப் சந்திரிக்காவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.

லாராவை அவங்க இஷ்டத்துக்கு பொம்பையாய் ஆட்டிவச்சாங்க... லாராவும் லக்சூரியஸ் லைஃபுக்கு அடாப்ட் ஆனதால அவங்க கூடவே இருக்கவேண்டிய நிலை. அதுக்காக நிறைய அவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுத்தானே இருந்தா...

ஆனா இப்போ அவளையே காணோம்... அவளை என்ன செஞ்சாங்கன்னு தெரியலை. எனக்குன்னு இருக்கிற ஒரே உறவு அவள்தான்... எங்க இருந்தாலும் வாரம் ஒரு தடவை என்கிட்ட பேசாம இருக்கவே மாட்டா... நான் போன் பண்ணினா அட்டன் பண்ணாம ஒருநாளும் இருந்ததில்ல... ஆனா... ஆனா... இப்போ கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு மேல எங்களுக்குள் எந்த தொடபும் இல்லாம ஆகிடுச்சு  அவள் குரலை கூட என்னால கேட்க முடியலை... எனக்கு என் லாரா வேணும்...”

நட்சத்திரா உடைந்து அழுதாள். தான் மாட்டிக்கொண்டோம், இனி அவ்வளவுதான் சந்திரிக்காவின் கட்டுப்பாட்டில் போகப் போகிறோம்... லாராவை இவங்க எல்லோரும் என்ன செஞ்சாங்க...? அவள் இருக்காளா... இல்லையா...? என்று தெரியாமல் இவங்ககிட்ட மாட்டிகிட்டோம்... என்ற அழுத்தத்தில் உடைந்து போனாள்.

நட்சத்திராவை பேசவிட்டு கவனித்த வண்ணன், “இங்க பாரு நட்சத்திரா... நீ நினைக்கிறது போல நான் சந்திரிக்காவின் ஆள் இல்லை... உனக்கு என்னால எந்த ஆபத்தும் வராது... எனக்குத் தேவை நீ யார்? உனக்கும் லாராவுக்கும் சந்திரிக்காவும் என்ன சபந்தம் அப்படின்ற டீடைல்ஸ் மட்டும் தான். நானும் லாராவுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க த தான் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்கேன்.”  என்றான்.

“நீங்க சொல்றதை நான் எப்படி நம்ப..? உங்க பேர் வண்ண முகில்னு அந்த டைரக்டர்கிட்ட சொல்லும் போது, நானும் அங்கே தானே இருந்தேன்.

அப்படி இருந்தும் வண்ண முகில், உதித் முகில் ரெண்டுபேரும் முகில் அதியனின் மகன்கள்றதை கண்டுபிடிக்க முடியாத அளவு ஒன்னும் எனக்கு விவரம் இல்லாமல் இல்லையே...

உங்க அப்பா முகில் அதியனும் மனைவி சந்திரிக்காவும் சொல்லாமலா என்னைய இப்படி கடத்திட்டு வந்து அடைச்சு வச்சிருக்கீங்க...? நீங்க அவங்களோட கையாள்ன்னு நான் நினைக்கிறது எப்படி தப்பாகும்...?” என்றாள்.

அவளின் மேல் உண்டாகி இருந்த சலனத்தை, ஈர்ப்பை உதயத்தின் காதலி என்ற எண்ணத்தில் மெனக்கெட்டு தனது கட்டுக்குள் கொண்டுவந்து மிகவும் ஸ்டிக்ட்டாகவே அவளிடம் விசாரணையை மேற்கொண்டிருந்தான்.  அவள் லாரா இல்லை என்று தெரிந்ததும் ஏனோ ஒரு வித ஆசுவாசம் உண்டானது. அவளை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தான் வண்ணன்.

அவளின் அனாதாரவான நிலை அவளின் பேச்சில் புலப்பட்டது. ஏனோ தன்னைப் போல சொந்த குடும்பத்தால் அவளும் வஞ்சிக்கப் பட்டவளாக இருக்கிறாள் என்ற புரிதலும் உண்டானது.

அவ்வாறான புரிதல் அவளின் மேல் உண்டான ஈர்ப்போடு இவ்வளவு அழகான பெண்ணுக்கு இப்படி ஒரு பாதுகாப்பாற்ற நிலை வந்திருக்கக் கூடாது என்ற பரிதாபம் உண்டானது. ஏதாவது வகையில் அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணன் தோன்றியது.

அவனின் எண்ணம் செல்லும் போக்கை கண்டு, தனக்குள்ளேயே தன்னை காறித் துப்பிக்கொண்டவன், ‘ஒரு அழகான பொண்ணை பார்த்ததும் இம்ப்ரஸ் பண்ணும்னு நினைக்கிறேனு சொல்லிட்டுப் போ... அதைவிட்டு உதவுற எண்ணம்னு பூசி மொழுகிறயே.... நீ சரியான கேடிடா.’ என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்துகொண்டான்.

அவளுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்தினால்தான் மனம் திறந்து தன்னிடம் பேசுவாள் என்று உணர்ந்தவன்.

*****

 

முகிலன் தனது பிஸ்னெஸில் ஆலோசனை கூற நியமித்திருக்கும் குழுவோடு மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தார். அவரின் முகம் பெரும் கவலையைக் கொண்டிருந்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஃபைனான்ஸ் அட்வைசர், இன்சூரன்ஸ் புரோக்கர், பிஸ்னெஸ் மென்ட்டர், அனலாக் அட்வைசர், லாங்டெர்ம் அட்வைசர். எக்ஸ்பெர்ட் அட்வைசர் ஆகியோர் சொன்ன பதில் அவரை கோபப்படுத்தியது..

தானும் சந்திரிக்காவும் சேர்ந்து ஆரம்பித்திருந்த டெலிகம்யூனிகேஷன் பிஸ்னசை வாங்க லண்டனில் இருக்கும் ‘அரசகுடும்பத்தைச் சார்ந்த விக்டர்’ வாங்க விரும்புகிறார் என்று தெரிந்ததுமே... இது ஒரு நல்ல ஆபர் என்று ஆலோசனை கூறியது இந்த டீம் தான்... இப்போது அவ்வாறு அவர்களுக்கு விற்றிருக்கக் கூடாது என்றும் சொல்வதால் வந்த கோபத்தில்  வார்த்தைகளால் எதிரில், உள்ளவர்களை பந்தாடி விட்டார்.

“பிறகு என்ன டேஷ்க்கு உங்ககிட்ட லண்டன் விக்ரம் கூட சேல் டீட்ல சைன் பண்ணலாமானு கேட்டதுக்கு ஆஹா... ஓஹோ.. பேஸ்.. பேஸ்.. நல்ல ஆபர் ‘டேன்ட் மிஸ்னு’ ஒவ்வொருத்தரும் வாயை விட்டீங்க...?” என்று கர்ஜித்தார்.

அப்பொழுது அமர்ந்திருந்தவர்களுள் வயதில் மூத்த கனிஷ்கர் மட்டும் சற்று பயந்தபடி “சார், ஃபினான்சியல் மினிஸ்டர் சப்போர்ட் இருதுன்னு நீங்க சொன்னதால வேற இஸ்யூஸ் வராதுன்னு நினச்சேன்... ஆனாலும் பிளாக்கில கிடைகிற வெளிநாட்டுப் பணம் ரிஸ்க்குன்ற பாய்ண்டை நான் எடுத்து வச்சேன். சந்திரிக்கா மேடம், அதுக்கு மினிஸ்டரை இந்த விஷயத்தில் அவங்களால டீல் பண்ணிக்க முடியும்னு சொன்னதால நான் அழுத்திச் சொல்ல முடியாமப் போயிடுச்சு” என்றார்.   

முகிலனோ, ‘இப்பொழுதுதான் உதித் பிரச்சனையை வண்ணன் கிட்ட ஒப்படைச்சு அவன் பார்த்துக்குவானு கொஞ்சம் ரிலீப் ஆனேன்..., ஆனா அதுக்குள்ள அந்நிய செலாவணி மோசடி கேஸ்ல சிக்கிடுற நிலைமை. இப்படி அடுத்து அடுத்த பிரச்சனையா வந்து நிக்குதே...’ என்று மனதிற்குள் நொந்து கொண்டார்.

இந்த ரெண்டு பிரச்சனைக்கும் ஆரம்பப் புள்ளி சந்திரிக்கா தான். அவளோட அறிவும் அழகும் எனக்குச் சொந்தமானா... பிஸ்னஸ்ல எங்கயோ போயிடலாம்னு கற்பனை பண்ணினேன். ஆனா அவளை கூட சேர்த்ததுக்கு தண்டனையா இத்தனை காலம் பார்த்துப் பார்த்துக் கட்டிய என்னோட பிஸ்னெஸ் சாம்ராஜ்யமே ஆடிப்போயிடுமோன்னு இப்போ புலம்பிக்கிட்டு நிக்கிறேன்...’ என்று தனக்குள் மருகி நின்றவர், அந்த டென்ஷனில் 

“அடுத்த மீட்டிங்கில் இதுக்கு  என்ன பண்ணலாம்னு ஒரு சொலியூசன் ஒவ்வொருத்தரும் கொடுத்தே ஆகணும். உங்க எல்லாரையும் சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கிறதே அதுக்காகத்தான்” என்று சொல்லியபடி “ மீட்டிங் டிஸ்போஸ்” எனச் சொல்லி வெளியேறினார்.

---தொடரும்---

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 15

அத்தியாயம் 15

சந்திரிக்காவின் காரை செபாஸ்டின் அவளது பங்கலாவினை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தான். சந்திரிக்காவின் பி.ஏ பொஷிஷனில் இருக்கும் செபாஸ்டியன் அவளுக்கான வலது கை என்றே சொல்லலாம். அவள் முக்கியமான விடயங்களுக்கு தனித்து பயணம் செய்யும் போது அவளுக்கு கார் சாரதியாக  இருப்பதும் அவனே.

“மேடம் நம்மகிட்டு இருந்து தப்பிச்ச தாரா மூணு மாசம் டெல்லியில் தான் இருந்திருக்காங்க. அவங்க அக்கவுண்டில் இருக்கிற காசை கொஞ்சம் கொஞ்சமா வித்டிராபண்ணியத்துக்கான பேன்ங் ஸ்டேட்மென்ட் இது.

எல்லாமே டில்லியில் இருக்கிற வேற வேற ATM மிஷின்ல இருந்துதான் எடுத்து இருக்காங்க.

அவங்க ஒவ்வொரு முறை பணம் வித்ரா பண்ணும் போதும் வரும் நோடிபிகேசன் இன்பர்மேஷன் வச்சு அந்த லோகேஷன்ல தான் இருக்காங்கனு கண்டுபிடிச்சு நமம ஆளுங்களை அனுப்பி கண்கானிப்போம்....

ஆனா அடுத்த தடவை வேற இடத்துல இருக்கும் atm இருந்து பணம் எடுப்பாங்க. இப்படியே மூணு மாசம் தொடர்ந்து மாத்தி மாத்தி எடுத்து அக்கவுண்டில் இருக்கிற அம்புட்டு காசையும் காலி பண்ணிட்டாங்க. இப்போ மினிமம் பேலன்ஸ் தான் அவங்க அக்கவுண்டில் இருக்கு...” என்றான்.

“தப்புப் பண்ணிட்டேன்... ‘படிக்கிறாளே... ஒவ்வொரு தடவையும் பீஸ் கட்ட, புக்ஸ் வாங்க அப்படின்னு என்னை டிஸ்டப் பண்ணக் கூடாதுன்னு மொத்தமா டுவென்டி லேக் அவளோட அக்கவுண்டில் போட்டுவச்சது என்னோட தப்புதான். அந்த காசு அம்புட்டையும் எடுத்துக்கிட்டு எனக்கே  கம்பி நீட்டிட்டா...

கைல காசு இல்லாம இருக்க வச்சிருக்கணும்... அடுத்த வேலை சோத்துக்கு என்கிட்ட கையேந்தி ஒவ்வொரு தடவையும் வரவச்சு இருந்துருக்கணும். அந்த காசு இருக்கிற தைரியத்துல தான் என்னைய மீறி எங்கயோ போய் ஒளிஞ்சுக்கிட்டா...

அவளோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் நோட் பண்ணி.. பாலோ பண்ணச் சொன்னேனே, அவங்க மூலமா ஏதாவது இன்பர்மேசன் கிடைச்சதா...?”  என்றாள்.

“ம்... ஆமாம் மேடம், நட்சத்திரான்ற பொண்ணு கூட மட்டும் தாரா ரொம்ப குளோசா காலேஜில் பழகுவாங்கனு கேள்விப் பட்டேன். அந்த நட்சத்திரா பேமிலி டெல்லியில வசிக்கிற ஒரு தமிழ் குடும்பம். அந்த பொண்ணோட அப்பா கவர்மென்ட் எம்ப்ளாயி... அப்பர் மிடில்கிளாஸ் பொண்ணு...

ஆனா இப்போ அந்த பொண்ணு காதுல, கையில, கழுத்துல எல்லாம் டைமன்ட் ஜூவல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கிறதாகவும் அதுவும் சமீப காலமாத்தான் இதெல்லாம் போடுறதாவும் கேள்விப் பட்டேன்.

அதோடு நமக்குத் தெரிஞ்ச அந்த காலேஜ்ல படிக்கிற பொண்ணு அவள் போடுற சில நகைகள் தாராவோடது போல இருக்கிறதா சொல்றா...” என்றதும், 

“ஒருவேளை தாராவை அந்த பொண்ணு எதுவும் பண்ணிட்டு அவளோட பணம் ஜூவல்ஸ் எல்லாத்தையும் ஆட்டைய போட்டு இருப்பாள்னு நினைக்கிறயா செபாஸ்டின்..?” என்றதும்.

“இல்ல மேடம், அந்த பொண்ணு அப்படி பட்ட பொண்ணு இல்லைன்னு கேள்விப் பட்டேன். ரொம்ப நல்ல குடும்பத்துப் பொண்ணு... நல்ல பொண்ணு  அந்த நட்சத்திரானு கேள்வியும் பட்டேன். அதோட அந்த பொண்ணு தான் தாராவை டெல்லியில் இருந்து தப்பிச்சுப் போக ஹெல்ப் பண்ணி இருப்பாள்னு சந்தேகப் படுறேன்” என்றான்.

“எதை வச்சு அப்படி சொல்ற செபாஸ்டின்...? நானும் அப்பர் மிடில் கிளாசில் கெளரவமான குடும்பத்தில் பாவம், புண்ணியம்னு பயந்து இருக்கிற ஃபேமிளியில் பிறந்தவள்தான். ஆனா காசு பணம் சம்பாதிச்சு பெரிய ஆளா ஆகணும்னு முடிவு எடுத்ததுக்குப் பின்னாடி அந்த காசுக்காக எதுவும் பண்ணலாம் தப்பே இல்லன்னு புரிஞ்சுக்கிட்டேன். பணம் தான் இந்த வாழ்கையில் எல்லாம்... அந்த பணத்துக்காக மக்கள் யார்வேணும்னாலும் எதுவேணும்னாலும் செய்வாங்க” என்றாள்

“அது வந்து மேடம்... லாஸ்ட் வீக் இந்த நட்சத்திரா பேர்ல டெல்லியில் இருந்து நேரா சென்னைக்கு போற டிரைய்ன்ல, ஒரு டிக்கெட் ஆன்லைனில், புக் பண்ணிருக்காள்.

ஆனா அந்த பொண்ணு அன்னைக்கு அந்த டிரைனில்  போகலை. ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி புட்டேஜ்ல கிட்டத்தட்ட நம்ம தாரா வயசு பொண்ணு முஸ்லிம் போல முகத்தை மறைச்சுக்கிட்டு நட்சத்திரா பேர்ல டிக்கெட் புக்காகி இருந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறுறது போல ரயில்வே ஸ்டேசன் சி.சி.டிவி புட்டேஜ் பதிவானது கிடைச்சது.

அதில் பயணம் செய்த பேசஞ்சர்ஸ் லிஸ்ட்டை விசாரிச்சதுல நட்சத்திரான்ற ஒரு பொண்ணு அந்த டிரைன்ல டிராவல் பண்ணி இருக்கிறாள்ன்ற விஷயம் தெரிஞ்சது. ஒருவேளை சென்னைக்குப் போனது நட்சத்திரா பேர்ல நம்ம தாரா போய் இருக்கலாம்னு ஒரு கெஸ் இருக்கு” என்றான் செபாஸ்டின். 

“ஓ... அவள் ஒருவேளை தமிழ்நாட்டுக்குப்  போயிருந்தா எப்படியும் என்னோட அம்மா அப்பாவை மீட் பண்ணாம இருக்க மாட்டா... சேலத்துல இருக்கிற என் அம்மா அப்பா வீட்டை குளோசா வாட்ச் பண்ணச் சொல்லிடு செபாஸ்டின். எப்படியாவது அவளை பிடிச்சாத்தான் லாரா விஷயத்தில் நாம மாட்டிக்கிடாம தப்பிக்க முடியும். லாரா பேர்ல நான் போட்டுவச்சு இருக்கிற பணத்தையும் என் கைக்கு கொண்டுவர முடியும்” எனச்சொல்லிக் கொண்டிருக்கும் போது பங்களாவிற்குள் கார் நுழைந்தது.

ஏற்கனவே பங்களா காம்பவுண்டிற்குள் முகில் அதியன் கார் நிற்பதை கவனித்தவள். இந்த பேச்சை இனி இங்க பேசாத செபாஸ்டின், முகில் வீட்டுக்கு வந்துட்டார் போல... இந்த கிழட வச்சு நான் பெரியாளா ஆகலாம்னு பார்த்தா... அந்த கெழடு என்கிட்ட இருக்கிறதை அமுக்கப் பார்க்குது. அதுக்குத்தான் அவரோட பையன் உதித்தை லாரா கேசில் கொஞ்சநாள் சிக்க வச்சு ‘தி கிரேட் பிஸ்னெஸ் மேல் முகில் அதியன்’ தலையில பலமா ஒரு கொட்டு வைக்க ஏற்பாடு பண்றேன்” என்றாள்.

*****

நட்சத்திராவை தன்னிடம் வெளிப்படையாக பேசவைக்க, வண்ணன்  சந்திரிக்காவின் ஆள் இல்லை என்று அவளுக்கு புரிய வைக்கவேண்டும் என்று நினைத்தான். ஏனெனில் அவள் தப்பிக்க நினைப்பது சந்திரிக்காவிடம் இருந்துதான் என்ற நிதர்சனத்தை அவளின் பேச்சில் புரிந்தது கொண்டான். சந்திரிக்காவுக்காக இவளை நான்  தூக்கிட்டு வந்ததேன் என்ற  அவளின் மனப்பிரம்மையை மாற்ற நினைத்தான், எனவே அவளிடம்,

 “உன்னோட கெஸ்ல சில விஷயங்கள் சரி... சில விஷயங்கள் தப்பு...” என்றவனை நம்பாத பார்வை பார்த்தாள் நட்சத்திரா.

“அதாவது நான், முகில் அதியனின் மகன்ன்றது சரி...

உதித்தை, லாரா மிஸ்ஸிங் கேசில் அக்யூஸ்டா ஆக்குறதுக்கு எங்களோட பிஸ்னெஸ் எதிரிங்க சதித்திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதில் சந்திரிக்காவோட பங்கு அதிகம்னு நினைக்கிறார் அப்பா.

அதனால உதித்தோட ஃபியான்ஷி லாராவுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கிட்டாத்தான்  அதவச்சு உதித்தை பிரச்சனையில் மாட்டாம காப்பாத்த முடியும்.

லாராவை காணலைன்னு ஆட்கொணர்வு மனு சந்திர்க்கா கொடுக்கலாம்... கூடவே லாராவுக்கு எதுவும் ஆகி இருந்தா அதுக்கு உதித் தான் காரணம் என்று தக்க ஜோடனை செய்யப்பட்ட ஆதாரங்களோடு கம்ப்ளைன்ட் பண்ணப் போறதா ஒரு சந்தேகம் அப்பாவுக்கு வந்திருக்கு...

அப்படி உதித்தை எதிலாவது மாட்டிவிட்டா எங்களோட  கம்பெனி ஷேர்ஸ்  மார்கெட் வேல்யூ எல்லாம் சட்டுன்னு அதல பாதாலத்துப் போயிடும். பெரிய அளவில் பிஸ்னஸ்ல சரிவும் வந்துரும்.

அப்படி ஆகாம இருக்க லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டு பிடிக்கிற வேலையை  என் அப்பா முகில் அதியன் என்கிட்ட கொடுத்திருக்கிறார். இதுல சந்திரிக்கா என்னோட அப்பாவின் வொய்ஃபா இருந்தாலும் பிஸ்னெஸ்ல ரெண்டுபேரும் இப்போ பார்ட்னரா இல்லை... ஷோ இந்த விஷயத்தில் சந்திரிக்காவ கூட்டு சேர்க்கலை” என்றான்.

அவன் சொன்னதை கேட்ட நட்சத்திராவோ தனக்குள் ‘அப்போ இவங்களும் என்னையப் போல லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கத்தான் முயற்சி பண்றாங்களோ...?

அப்போ லாரா மிஸ் ஆனதுக்கு காரணம் சந்திரிக்காவாகத்தான் இருக்கும்ன்ற சந்தேகத்தை உதித் இவன் கிட்ட சொல்லி இருக்கணுமே...’ என்று யோசித்தவள்.

“சார், உங்க தம்பி உதித், லாரா காணாம போனதைப் பத்தி உங்ககிட்ட என்ன சொன்னார். யார்மேலயாவது அவருக்கு  சந்தேகம் இருக்குதுன்னு  சொன்னாரா...? லாரா அவரோட லவ்வர், சந்திரிக்காவோட சிஸ்டர்ன்ற விஷயத்தைத்தாண்டி வேற என்னென்ன அவளைப் பத்திச் சொன்னார்...?” எனக் கேட்டாள்.

“நிறைய சொன்னான்... சந்திரிக்கா, லாரா பேர்ல டம்பி கம்பெனி ஆரம்பிச்சு அதுக்கு ரப்பர் ஸ்டாம்ப்பா மட்டும் அவளை வச்சு இருக்கிறது. அதனால உதித்தோடு லவ், மேரேஜ் அப்படின்னு லாரா போயிட்டா லாரா பேர்ல கோடிக்கணக்கான பணம் போட்டு வச்சிருக்கிற டம்மி கம்பெனி கைவிட்டுப் போயிடும்... அவள் உதித்தோட ரப்பர் ஸ்டாம்பா ஆகிடுவாள்னு பயந்து அவளுக்கு A சைக்காட்ரிக் டிரக்கை வைட்டமின் குறைபாட்டுக்கு கொடுக்கிற மாத்திரைபோல எடுக்க வச்சு... உடல் அளவிலும் பாதிப்பும் புத்தி மழுங்கியும் போக வைக்கப் பார்த்தது எல்லாமே சொன்னான்” என்றான்.

வேறு எதுவோ ஒன்றை அவனிடம் கேட்க நினைத்து ஆனால் தயங்கிக்கொண்டு இருந்தவளை பார்த்து , “நீ பார்டியிலும் சாப்பிடலை.. லேட் நைட் ஆகிருச்சு, வா.. என்கூட ஏதாவது வந்து சாப்பிடு. ரொம்ப டயர்டா தெரியிற... சாப்பிட்டப் பிறகு உனக்குப் பேச எனர்ஜி வந்ததாய் பீல் பண்ணினா பேசலாம். அல்லது காலையில் மத்ததை பேசலாம். எனக்கு இப்போ சாப்பிடனும், கொஞ்சம் ரெஸ்டும் தேவை” என்றான்.

அவன் திடமாகத்தான் இருந்தான் ஆனால் அவள் அவ்வாறு இல்லை.. மிகவும் சோர்ந்து தெரிந்தாள். அவளின் மேல் தான் அக்கறை காட்டுவதை அவள் அறியாது செய்யவேண்டுமென்று நினைத்தான். எனவே தனக்கு சாப்பாடு தூக்கம் வேண்டும் என்று சொல்லி உடன் அவளை அழைத்துக்கொண்டு அந்த மாளிகைக்குள் இருந்த உணவு கூடத்துக்கு அழைத்துச் சென்றான்.

இங்கே அவளை ரீட்டா என்பவள் காரில் கொண்டுவந்து இறக்கச சொல்லி  உள்ளே நடத்தி வந்தபோது தப்பிக்க பார்த்தாள் நட்சத்திரா...

அப்பொழுது அவளை இழுத்து ஓடமுடியாமல் இழுத்துக்கொண்டு வந்தவளை பங்களாவின் உள் இருந்து வந்த வண்ணன் எதிர்கொண்டான். ரீட்டாவிடம் இருந்து தன்னை  கைபிடியில் வாங்கி வைத்தபடி

“ஓகே ரீட்டா இனி நான் பார்த்துப்பேன், நீ கிளம்பி..” எனச்சொல்லி இழுத்துக்கொண்டு வந்தவனிடம் மல்லுகட்டியத்தில் வீட்டின் அமைப்பை அப்போது கவனிக்காது விட்டுவிட்டாள்.

இப்பொழுதுதான் அவனுடன் நடந்துகொண்டே சுற்றி முற்றி பார்த்தாள். பார்க்கும் இடமெல்லாம் பணத்தின் செழுமை கண்ணைப் பறித்தது. நவீன வசதிகளுடன் பளிங்குபோல மின்னும் வீட்டின் அமைப்பை நோட்டம் இட்டுக்கொண்டே நடந்தவள் இங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி புலப்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே அவனுடன் நடந்தாள்.

அங்கு சாப்பாட்டு மேஜை கிடந்த அறையில் சாப்பிட அமர்ந்தபடி அந்த அறைக்கு அடுத்து இருந்த வானவெளியில், ஆர்டிபீசியல் அருவி ஒன்ரிலிருந்த செயற்கை குளத்தில் தண்ணீர் விழுவது போல பவுண்டன் அமைக்கபட்டிருந்தது அந்தக் காட்சியும் தண்ணீர் விழுகும் சத்தமும் அத்தனை ரம்யமாக இருந்தது.

ஆனால் அவளுக்கு அதெல்லாம் கண்ணில் படவில்லை அந்த வானவெளியில் இருந்த சுவற்றில் ஏதாவது ஏணி தட்டுபட்டால் போட்டு ஏறி வெளியில் குதித்து எஸ் ஆகிவிடலாம் என்ற எண்ணமே அவளுக்குள் உண்டானது.

அவளின் முகக் குறிப்பை வைத்தே அவனின் மனம் போகும் போக்கை உணர்ந்து கொண்டவன், “அந்த சுவர் ஒரூ மாடிக்கும் கூடுதலான  உயரத்துல இருக்கும். அதுல ஏற வழியே இல்லை... அப்படியே ஏறினாலும் அங்குட்டு குதிச்சா கை கால் முறிஞ்சிடும். அதோடு அதுவும் என் காம்பவுண்டுகுள்ளே தான் குதிக்கணும். அந்த பக்கம் என்னோட ராஜபாளையம் நாய் ரெண்டு சுத்திகிட்டே இருக்கும், அது பிறகு உன் ரெத்தத்தை டேஸ்ட் பார்க்க ஆசைப்படும்...” என்றான்.

அவனின் கூற்றில் அரண்டுபோய் அவனை பார்த்தவளிடம். “இல்ல நீ அப்படி எல்லாம் என்கிட்டே இருந்து எஸ் ஆக டிரை பண்ண மாட்டேனு தெரியும். இருந்தாலும் ஒரு ஃபன்னுக்கு சொல்லி வைக்கலாம்னு தான்” என்றான்.

அவன் சொன்ன தோரனையை கண்டு, “இந்த கொலைவெறி பேச்சை போய்  ஃபன் அப்படின்னு சொல்ற இவனை....” என்று தனக்குள் பல்லை கடித்துக்கொண்டாள்.  

----தொடரும்----

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 16

அத்தியாயம் 16

 சாப்பாட்டு மேஜைக்கு அருகில் சென்றவன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவளோ அமராமல், தனது ரத்தத்தை அவனின் நாய்கள் டேஸ்ட் பார்க்க ஆசைபடும் என்று சொன்னதில். கோவம் அடைந்து ரோஷம்  பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும் அதை காட்டுவதற்கான இடம் அது இல்லை என்று புரிந்ததால் கடுப்புடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

“என்ன அங்கயே நிக்கிற... வா.. வந்து உட்கார்ந்து சாப்பிடு... உன்னையப் பார்த்தா பல நாள் பட்டினியா கிடந்தது போல இருக்கு... எனக்கு தேவையான டீடைல்ஸ் சொல்லாம நீ மயங்கி கியங்கி விழுந்துட்டா அதுக்கு டிரீட்மென்ட் பண்ணித் தொலையணும்” என்றான்.

அப்பொழுது கையில் உணவு இருக்கும் பாத்திரங்களை கொண்டுவந்து மேஜையில் வைத்துவிட்டு அவ்வீட்டு சமையல்காரர்  நகர்ந்தார்.

அவன் சொன்ன வார்த்தைகள் அவ்வேலையாளின் காதில் விழுந்திருக்கும் என்பது புரிந்தது. அவர் என்னமோ சாதாரணமாகத்தான் அவளை பார்த்தபடி அங்கிருந்து சென்றார்.ஆனால் இவளுக்கு தான் தன்னை அவர் வித்தியாசமான ஜந்துவை பார்ப்பது போல தோன்றியது.

எனவே வண்ணனைப் பார்த்து கடுப்புடன் “ஹலோ... உங்ககிட்ட சாப்பாடு போடச்சொல்லியோ.... நான் மயங்கி விழுந்தா என்னைய காப்பாத்தச் சொல்லியோ நான் கேட்கவே இல்ல... காலையில இருந்து போற இடத்துல எல்லாம் என்னைய தொறத்திட்டே வந்தது நீங்க... இன்னைக்கு முழுக்க ஒரு வாய் சாப்பாடு கூட என்னைய ஒழுங்கா சாப்பிட விடாம இந்த நிலைமைக்கு ஆக்குனதும் நீங்கதான்...” என்று கோபமுடன் சொன்னாள்.

அப்பொழுது அவனுக்கு  தட்டில் சுடச் சுட இட்டிலி வைத்து சாம்பார் சட்டினி விட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றவளுக்கு நாவில் எச்சில் ஊறியது. அதைப் பார்த்து தனது நாவில் எச்சில் ஊர்வதைதில் டெம்டாகி அவளுக்கு அகோர பசி உண்டானதால் ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்னு இதைத்தான் சொல்லுவாங்களோ...!’  என்று தனக்குள்  சொல்லிகொண்டவல் ரோசத்தை தள்ளி வைத்துவிட்டு சட்டென மேஜையை நெருங்கி சாப்பிட அமர்ந்துவிட்டாள்.

அவள் அமர்ந்தததும் தனக்குப் பரிமாறிய தட்டை அவளை நோக்கி நகரத்து வைத்துவிட்டு “சாப்பிடு...” என்றான் மிகவும் மென்மையாக.

அவனும் சிறுவயதில் அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன்தான் அக்காலத்தில் அவன் சந்தித்த பசியின் கொடுமையின் வடு அதன் பின் எவ்வளவோ செல்வத்தில் புரண்டாலும் அடிமனதில் தங்கிவிட்டது. அதனால் அவன் இருக்கும் இடத்தில் யாரும் எப்பொழுதும் பசியில் வாட அவன் விடுவதே இல்லை.

வண்ணன் தன்னிடம் தட்டை நகர்த்தி கொடுத்து ‘சாப்பிடு’ என்று சொன்னதும் ஆசையாக இட்டிலியை துண்டாக பிய்த்து சாம்பாரில் தோய்த்தவள் கைகள் யோசனையுடன் தட்டில் இருந்து அகன்றது...

ஏன் சாப்பிடாமல் வச்சுட்ட...? என்று கேள்வியாக பார்த்தவனிடம், “ஏன்... நீங்க சாப்பிடலையா...? முதலில் நீங்க சாப்பிடுங்க அடுத்து நான் சாப்பிடுறேன்” என்றாள்.

‘எதையாவது சாபாட்டில் கலந்து வச்சிருக்கானோ... அதுதான் அவன் சாப்பிடாம எனக்கு கொடுக்குறான்...’ என்ற சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்டவன் “இப்ப என்ன உன் சாப்பாட்டுல விஷம் கிஷம் எதுவும் வச்சிருகேன்னு சந்தேகப் படுறயா..? என்று கோவத்துடன் சுல்லென்று கேட்டவன் துளியும் தாமதிக்காமல் அவள் பிட்டு சாம்பாரில் தோய்த்து வாயில் வைக்காமல் விட்டிருந்த இட்டிலித் துண்டை எட்டி எடுத்து சாப்பிடான்.

அவனின் செயலை கண்கள் விரிய பார்த்தவளை பார்த்துக்கொண்டே மடமடவென அவளின் தட்டில் வைத்திருந்த இரண்டு இட்டிலிகளையும் சாப்பிட்டு முடித்துவிட்டு

 “இப்போ சந்தேகம் தீந்திருச்சா...? உனக்கு நம்பிக்கை இருந்தா இந்தாதான் பிளேட், சாப்பாடு எல்லாம் இருக்கு.. எடுத்து வச்சு சாப்பிடு” எனச் சொல்லியவன் இன்னும் மூன்று இட்டிலிகளை அதே தட்டில் எடுத்து வைத்து உட்கார்ந்த அவளை கண்டுக்கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தான்.

“ஸாரி... நான் வேணும்னே பண்ணலை... இதுல எதுவும் கலக்கலைன்னு  நம்புறேன்” என்று நலிந்த குரலில் சொன்னவள், தயக்கத்தோடு தட்டை எடுத்து அதில் இட்டிலிகளை  வைத்து சாப்பிடத் துவங்கினாள்.

அவள் சாப்பிட ஆரம்பித்தப் பின்பே வண்ணனின் முகத்தில் இருந்த இறுக்கம் குறைய ஆரம்பித்தது. அவள் தட்டில் சட்னி, சாம்பார், இட்டிலி என்று குறைய குறைய தேவை சொல்லாமல் உணர்ந்து அவளுக்கும் பரிமாறியபடி அசால்டாக டஜன் இட்டிலிகளை அவனின் வயிறுக்குள்ளும் தள்ளிக்கொண்டு இருந்தான் வண்ணன்.

தயக்கத்தோடு தட்டை எடுத்து சாப்பிட அமர்ந்தவள் ருசியில் தன்னை மறந்து ஆர்வமாக நான்கு இட்டிலிகளை உண்டவள் அதற்கு மேல் உண்ண முடியாமல் போதும் என்று பரிமாற வந்தவனை தடுத்துவிட்டாள்.

எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் வண்ணன் சாப்பிடுவதை அவள் அதிசயமாக பார்ப்பதை கண்டவன் “உதித் போல நான் பிறந்ததில் இருந்து கோல்ட் ஸ்பூன்ல சாப்பிட்டவன் இல்லை... எனக்கு விவரம் தெரியிற வயது வரை கால்வயிறு, அரைவயிறு சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்திருக்கேன். அதனாலத்தானோ என்னவோ எனக்கு வசதி வந்ததுக்குப் பிறகும் சாப்பாட்டு மேல அலாதியான பிரியம் வந்துடுச்சு.... என்னைய புட்டினு சொன்னால் கூட தப்பு இல்ல...” என்றான்.

‘முகில் அதியனோட மகன் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டானா..?’ என்ற எண்ணத்துடன் அவளைப் பார்த்தவளிடம்,

“எக்ஸ்பிரசிவ் ஐஸ் உனக்கு...” என்று ரசனையாக அவளைப் பார்த்துச் சொல்லியவன் “முகில் அதியனுக்கு மூத்த மகன் நான் இருக்கேன்ற விஷயம் இந்த உலகத்துக்கு தெரிஞ்சதே நான் காலேஜில் படிக்கும் போதுதான்...

என்னோட மிடில் ஸ்கூல் வரை அநாதை ஆசிரமத்தில் நானும் ஒரு அனாதைன்ற நிலையில தான் வளர்ந்தேன். உனக்கு ஒரு பிளாஸ் பேக் இருக்கிறது போல எனக்கும் இருக்கு” என்றான்.

அவனின் தோற்றத்துக்கும்.... ஆரம்பத்தில் தன்னை பயம்காட்டிய அவனின் நடவடிக்கைகளுக்கும்... சம்மந்தம் இல்லாத பெரிய உருவத்திற்குள் அடிபட்ட குழந்தையின் உள்ளத்தோடு அவன் இருப்பதைக் கண்டாள்.

வண்ணன் தனது பேச்சிலேயே அவளை கொஞ்சம் கொஞ்சமாக தான் கேட்கும் கேள்விகளுக்கு  பதிலைக் கொடுக்க தயார்படுத்திக் கொண்டிருந்தான். அதுவும் அவனின் உண்மையான தன்மையை வெளிப்படுயத்தியே அவ்வாறாக அவளை மிஸ்மெரிசம் செய்துக்கொண்டிருந்தான்.

“பாரு சாப்பிடும் போது தேவையில்லாததை பேசி சாப்பிடுற மூடையே கெடுத்துக்கிட்டேன்” எனச்சொல்லி எழுந்துபோய் கைகழுவச் சென்றான். அவனின் பின்னால் அவளும் எழுந்துபோய் கைகழுவிக் கொண்டிருந்தவளிடம்,

“சந்திரிக்காவோட பேரன்ட்ஸ் அடாப்ட் பண்ணிய குழந்தைதான் லாரானு சொல்றாங்களே...  அதில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு... உதித்கிட்ட கூட அதைப்பத்தி கேட்டேன், அவன் பதில் சொல்லலை, நீ தான் லாராவோட நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறதா சொன்னியே... அப்போ உனக்கு கண்டிப்பா லாராவைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கும்.  உன்கிட்ட கேட்டால் பதில் சொல்லுவியா...?”என்றான்.

“என்ன... என்ன கேக்கப் போறீங்க...?” என்று படபடப்புடன் கேட்டவளிடம்.

“சந்திரிக்கா என் அப்பா முகில் அதியனை கல்யாணம் பண்ணுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் கிஷோர் வர்மாவை டைவேர்ஸ் பண்ணியதா கேள்விப்பட்டேன்.

அந்த கிஷோருக்கும் சந்திரிக்காவுக்கும் கூட ஒரு பையன் இருக்கானே... அந்த பையன வளர்க்காம கிஷோரின் வயசான பேரன்ஸ் கிட்ட விட்டுட்டு பிஸ்னெஸ் பின்னாடியே வொய்ஃப் சுத்துனதாலத்தான் ரெண்டுபேருக்கும் பிரச்சனையாகி ரொம்ப வருஷமா டைவர்ஸ் பண்ணாட்டியும் பிரிஞ்சு வாழ்ந்தாங்கனு கேள்விப்பட்டேன்.

அப்படிப்பட்ட சந்திரிக்காவோட பேரன்ஸ், சொந்த பேரனை எடுத்து வளர்க்காம எதுக்கு லாராவை தத்தெடுத்து வளர்த்தாங்க...?” என்று கேள்வி கேட்டான்.

“சார் ஒரு திருத்தம், கிஷோர் வர்மனுக்கும் சந்திரிக்காவுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே லாராவை சமர்வீரபுத், அருணிமா சமர் தம்பதிகள் தத்தெடுத்துக்கிட்டாங்க. அதாவது தொழிலதிபர் கிஷோர் வர்மாவை கல்யாணம் பண்ணுறதுக்கு தன்னோட வீட்டில இருக்கிற மகள் லாராரித்திக்  தடையாய இருந்தாள். அதனால லாரா ரித்திக்கை அனாதையா தந்தெடுத்தது வளர்கிறதா காட்டிக்க சட்டப்படி சமர்வீரபுத், அருணிமாவோட பொண்ணா தத்தெடுத்து “லாரா சமர்” ஆகிட்டாங்க” என்றாள்.

“அப்போ லாராவுக்கும் அப்பா யாரு...? அவர் என்ன ஆனாரு...?”என்று கேட்டவனிடம்,

“சந்திரிக்கா டெல்லி ஐ ஐ டி காலேஜில் படிக்கும் போதே மாடலிங் பீல்டில் அப்போ ஓரளவு பேர்சொல்லி அடையாளம் தெரியும் அளவு வளர்ந்திருந்த ரித்திக் சர்மா கூட லிவ்விங் டுகதரில்  இருந்த்திருக்கா... அப்போ ரெண்டுபேரும் படுக்கையையும் சேர் பண்ணி இருந்ததில் பிரிகாஷன் எடுத்துக்காம கேர்லசா இருந்ததால கன்சீவாகி சந்திரிக்கா லாராவை பெத்தெடுக்கும்படி ஆகிடுச்சு...  அந்த லாரா வேற யாரும் இல்ல என்னோட அக்காதான். இந்த தாராவோட ஒன்லி ஒன் டியேரெஸ்ட் சிஸ்டர் தான் லாரா...” என்றாள்.

“என்ன சொல்ற...? சந்திரிக்காவோட மகள்கள் தான் லாராவும் நீயுமா...? காட் நான் இந்த ஆங்கிளில் யோசிக்கவே இல்ல...

சந்திரிக்காவுக்கு எதோ ஒரு வகையில் லாராவோட ரெத்த சம்பந்தம் இருக்குனு யூகிச்சேன். அதாவது அவளோட சித்தி பிள்ளைங்க அப்பா கூடபிறந்தவங்க பிள்ளைங்க அப்படி இருக்கும்னு தான் நினைச்சேன்.

ஆனா... சொந்த மகளைத்தான் அந்த சந்திரிக்கா தங்கச்சின்னு கூட வச்சு சுத்திகிட்டு இருந்தாளா...? அதுமட்டுமா பெத்த மகளுக்கே கொடூரமான மாத்திரை தொடர்ந்து .கொடுத்துருக்கா..

செய், இவள் எல்லாம் பொம்பளையா இருக்கவே... அதுவும் அம்மான்ற சொல்லுக்கே லாயக்கு இல்லாதவள்,  சரி அடுத்து நீ எப்படி பிறந்த... ஸாரி... ஸாரி...உன்னைய கேவலப்படுத்த இந்த கேள்வியை கேக்கலை. படிக்கும் போதே லாரா பொறந்துட்டதா சொன்ன.. பிறகு எப்படி நீ... ?” என்றவன் கேட்ட தும் கசப்பான சிரிப்பு ஒன்றை கொடுத்தவள்,

“லாரா பிறந்ததால சந்திரிக்காவின் படிப்பு பாதியிலேயே  டிஸ்கண்டினியூ ஆகிடுச்சு ... ஆனா தாத்தா சமர் வீரபுத் தொடர்ந்து மகளுக்காகவும் பேத்திக்காகவும்  ரித்திக் சர்மாவுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான ரிலேஷன்சிப்பை புதுபிக்க பேச்சு வார்த்தை நடத்தியதால லாராவோட ஃபர்ஸ்ட் பெர்த்டேக்கு அப்பாவா முன்னாடி வந்து நின்னார். அப்போ வீட்டுல உள்ளவங்க முன்னாடி சிம்பிளா ரெண்டு பேருகும் கல்யாணம் செஞ்சு வச்சாங்க .

அதுவும் ஒரு வருஷம் தான் ஒழுங்கா போயிருக்கு மறுபடி சந்திரிக்கா என்னைய கப்ன்சீவ் ஆனதுக்கு பிறகு ரெண்டுபேருக்கும் இடையில் மனக்கசப்பு வந்து நிரந்தரமா என்னோட மூணாவது வயதில் பிரிஞ்சிட்டாங்க,.

என்னோட மூணு வயசுல இருந்து பத்து வயசு வரை நான் அப்பா ரித்திக் வீட்டுல அவருக்கு மகளா வளர்ந்தேன்.

லாரா சந்திரிக்காவோட வீட்டுல பாட்டி தாத்தாகிட்ட வளர்ந்தாள்.

என்னோட அப்பா ரித்திக்கு அவங்க அம்மா வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற வரை அந்த வீட்டில் ஓரளவு நல்லாத்தான் இருந்தேன். ஆனா அதுக்குப் பிறகு நான் அங்க தேவையில்லாத ஒரு உருப்படியா ஆகிட்டேன்.

ஒவ்வொரு லீவுக்கும் சேலத்தில இருக்கிற என்னோட பாட்டித் தாத்தா வீட்டுக்கு வரும் நாட்களுக்காகவே எப்பவும் காத்து இருந்தேன். லாராவும் என் வரவுக்காக காத்து இருப்பா... எங்களோட பெத்தவங்க தான் எங்களுக்கு சரியில்லை  

ஆனா என்னோட கிரான்ட் பேரன்ட் சமர்வீரபுத், அருணிமா சமரும் , கூட பிறந்தவளும் எனக்கு கிடைச்ச வரம்.

ஆனா எங்க ரெண்டுபேரையும் இந்த அளவு நல்லபடியா வளர்த்த எங்க தாத்தா பாட்டி, எப்படி அவங்க வயித்தில் பொறந்த எங்க அம்மா சந்திரிக்காவை இவ்வளவு ஒரு மோசமான பிறவியா வளர்த்தாங்கன்ற கேள்வி  எனக்குள்ள ரொம்ப நாளாக இருக்கு...” என்றாள்.

---தொடரும்---

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 17

அத்தியாயம் 17

வண்ணன் அவளிடம் “ஒருவேளை மகளை வளர்த்த அப்போ செய்த தப்பை உணர்ந்துக்கிட்டவங்க, உங்களை நல்ல விதமாய் வளர்த்திருக்கலாம்ல” என்றவனின் முகம் எதுவோ யோசனைக்குள் சென்றது...

அவனின் ஆழ்ந்த யோசனையை பார்த்து. “என்ன யோசிக்கிறீங்க? எதுவும் கேக்கணுமா...?” என்றவளிடம்.

“உன் அக்காவுக்கு நீ தவிக்கிறது உண்மையா..? லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க நினைச்சா... என்கூட லாராவை கண்டுபிடிக்கும் ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ணலாம்?” என்றான்.

அவன் அவ்வாறு கேட்டதும் ‘கண்ணா லட்டுத் திங்க ஆசையா...?’ என்று கேட்பது போல தோணியது நட்சத்திரா பேரில் இருக்கும் தாராவுக்கு.

“எனக்கு இப்போ இருக்கிற ஒரே லச்சியம் அதுதான். ஆனா என்னைய எதுக்கு நீங்க கூட்டுச் சேர்க்க நினைக்கிறீங்க...? அதனால உங்களுக்கு என்ன லாபம்..?” என்றாள்.

“உனக்கு சந்திரிக்காவோட வீடு, அவளுக்கு நெருக்கமானவ்காங்க அவங்ககூட பழகி இருக்கதால அவங்க எப்படி யோசிப்பாங்க அப்படின்ற விஷயம் தெரியும் அந்த டீடைல்ஸ் வச்சு அவங்ககிட்ட லாரா மாட்டி இருந்தா கண்டுபிடிக்க ஹெல்ப்பா இருக்கும். இல்லைன்னா அதுக்கான பிராசஸ்க்கு சரியான ஆளைத் தேடணும்” என்றவனிடம்.

“ம்... என்னால நீங்க சொல்ற டீடைல்ஸ் எல்லாம் ஓரளவுக்கு கொடுக்க முடியும். அதேபோல இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சாலும் என்னால நேரடியா... அதுவும் தனியா... அவங்களை பேஷ் பண்ணவோ விசாரிக்கவோ  முடியாதுதான். ஆனா இதுமட்டும்தான் காரணமா...?”

“எனக்கு உன்னோட உணர்வுகள் புரியுது... நம்ம வீட்டு மனுஷங்களே நம்மளுக்கு துரோகம் பண்ணுறதோட வலி எனக்கு நல்லாவே தெரியும். நான் எப்படி என் அம்மாவோட டெத்துக்கு காரணமான ஒவ்வொருத்தரையும் கண்டு மனசுக்குள்ள குமுறிக்கிட்டு இருக்கேனோ... அதே போலத்தானே நீயும் இருப்ப? எனக்கு அம்மா... உனக்கு அக்கா.. அவ்வளவுதான் வித்தியாசம்” என்று சொல்லிக்கொண்டு போனவனை

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் டாக்...” என்று காதை பொத்தியபடி கத்தினாள்.

தான் என்ன அப்படித் தவறாக பேசிவிட்டோம் என்பது வண்ணனுக்குத் தெரியவில்லை, எனவே “எதுக்கு இப்படி தேவையில்லாம ரியாக்ட் பண்ற...?” என்று கடினமான முகத்தோடு அவளிடம் கேட்டான்.

“நீ... நீ... இப்போ என்ன சொன்ன...?  என் லாரா.. உன் அம்மா போல செத்துப் போனது போல இல்ல...  நீ பேசுற...? அது அப்படி இல்லைன்னு சொல்லு... என் லாராவுக்கு எதுவும் அந்த மாதிரி ஆகலைன்னு சொல்லு...” என்றாள் பதட்டத்தோடு.

அவனுமே அப்போதுதான் தனது வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தான். அவன் வேண்டும் என்றே அவ்வாறு சொல்லவில்லை... உறவுகளின் தேடல், அதன் வலி இருவருக்கும் உண்டு என்பதை சொல்ல சொன்ன வார்த்தைகளில் விளைந்த அனர்த்தமான அர்த்தம் புரிந்ததும்

“ஸாரி... ஸாரி... நான் உணர்ந்து சொல்லலை...” என்றவன் மனதினுள் ஒரு நெருடல் ஒட்டிக்கொண்டது.

“சரி... உனக்கும் லாராவுக்கும் அந்த சந்திரிக்காவுக்கும் இடையில இருக்கிற ரிலேஷன்ஷிப் பத்தி கொஞ்சம் சொல்லு..., ஏன் கேக்குறேன்னா, லாரா பேர்ல கோடிக்கணக்கான பணம் இருக்கு... அது சந்திரிக்காவுக்கு வேணும்... அதனால அவளை கண்ரோல் பண்ணி வைக்கப் பார்க்கிறா...

ஆனா  உனக்கும் சந்திரிக்காவுக்கும்  என்ன பிரச்சனை....? நீ எதுக்கு அவளைப் பார்த்துப் பயப்படுற...?.” என்று கேட்டான். அவனிடம் பதில் சொல்லாமல் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தவளிடம்.

“இங்க பார்... உன் பேரு தாரா தானே? எதுக்கு நட்சத்திரான்ற பேர்ல சுத்திக்கிட்டு இருக்க...? “ என அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.

“உங்க கிட்ட அதை எல்லாம் சொல்லி எனக்கு என்ன ஆகப்போகுது..?” என்றவளிடம்.

“லாராவுக்கு  என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியணும். நானும் அதை கண்டுபிடிக்கத்தான் டிரை பண்ணிக்கிட்டு இருக்கோம். நாம தனித்தனி பாதையில் போனா நம்ம ரெண்டுபேருக்குமே சவாலாய் இருக்கும். அதுதான் சேர்ந்து தேடுவோம்னு நினைக்கிறேன்.” என்றான்.

அவன் சொல்வதில் ஒரு அர்த்தம் இருப்பதாகப் பட்டது. அவள் உதித்திடம் லாராவுக்கு என்ன ஆச்சுன்னு கேள்விக் கேட்க நினைத்தே இங்கே புறப்பட்டு வந்தாள். அவளை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அவனுக்கும் பொறுப்பு உண்டு எடுத்துக்கூற நினைத்தாள். லாராவை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு கேட்க நினைத்திருந்தாள். ஆனால் அவனே, இந்த டெவிலிடம் தான் அந்த வேலையைக் கொடுத்திருக்கான்’ என்று நினைத்தவள்.

“ஓகே... லாராவை கண்டுப்பிடிக்க எனக்கு நீங்க ஹெல்ப்பண்றேன்னு சொன்னதால... நானும் உங்கக் கூட கோவாப்ரேட் பண்றேன்...” என்றவள் அவள் வாழ்கையில் நடந்ததை அவனிடம் சொல்லத் துவங்கினாள்.

என்னோட மூணு வயசுல, அப்பாவும் அம்மாவும் டைவேர்ஸ் ஆனதுல நான் அப்பா ரித்திக் பொறுப்பில் கங்கம்மா பாட்டியோட கண்ட்ரோலில்  வளர்ந்தேன், லாராவோ  அம்மா சந்திரிக்கா பொறுப்பில் சமர் வீரபுத், அருணிமா பாதுகாப்பில் சேலத்தில் வளர்ந்தாள்.

அம்மா சந்திரிக்கா  மேற்படிப்பு முடிக்க... அதை தொடர்ந்து பிஸ்னெஸ் பண்ணணு மும்பையில செட்டில் ஆகிட்டாங்க. எப்பவாவது கெஸ்ட் போல சேலம் வீட்டுக்கு வந்து போவாங்க.

அப்பா ரித்திக்கோட  வீட்டுல... கங்குப்பாட்டி கண்டிப்புல நான் வளர்ந்துகிட்டு இருந்தேன். அப்பா பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டாங்க. மாசம் ஒரு தடவையோ ரெண்ட்டு தடவையோ தான் வீட்டுக்கு வருவாங்க.

அப்பா ஒவ்வொரு முறை வரும் போதும் கங்குபாட்டி “நான் ஒத்தமனுஷியா இருந்தப்போ இருக்கிறது வச்சு வயித்தை நிரப்பிக்கிட்டு கம்முனு கிடந்தேன். இப்போ  தாராவவையும் வளர்த்து விடணுமே...., அவள் படிப்புக்கு, துணிமணி, சாப்பாடு தின்பண்டம்னு மாசம் எம்புட்டுச் செலவு ஆகுது தெரியுமா...?  ஒழுங்கு மரியாதையா செலவுக்கு பணத்தை எடுத்து வச்சிட்டு இங்க இருந்து கிளம்புன்னு அப்பாகிட்ட சண்டைப் பிடிப்பாங்க.

அப்பாவும் பாட்டிகிட்ட கோவப்பட்டுப் பேசிட்டு பணத்தைக் கொடுத்துட்டு கிளம்பிடுவாங்க. கங்குப்பாட்டி என்கூட பாசமாய் பேசி அரவணைக்க மாட்டாங்க... ஆனா சாப்பாடு, உடுத்த டிரஸ், நல்ல படிப்புன்னு அத்தனையும் கொடுத்தாங்க.  எனக்கு ஏனோ அவங்க கூட ஒட்டவே இல்லை... எப்படா லீவ் விடுவாங்க சேலத்துல இருக்கிற அம்மம்மா வீட்டுக்கு போவோம்னு காத்துக்கிட்டு இருப்பேன்.

அங்க போனா சமர் வீரபுத் தாத்தாவும், அருணிமா பாட்டியும் நல்ல கதைகள் சொல்வாங்க, கடைத்தெருவுக்கு கூட்டிட்டுப் போவாங்க, லாரா கூட விளையாட முடியும்னு சேலம் போக ஆசைப்படுவேன்.

எப்பவும் சமர் தாத்தா தான் லீவ்விட்டதும் என்னைய டாக்சி பிடிச்சிட்டு வந்து ஊருக்கு அழைச்சிட்டுப் போவாங்க. ஆனா ஒரு தடவை அப்பா என்னைய அங்க அழைச்சிட்டுப் போனார். அப்போ நான் மூணாவது படிச்சுக்கிட்டு இருந்தேன் லாரா ஐந்தாவது படிச்சுக்கிட்டு இருந்தா...

அப்பாகூட அம்மம்மா வீட்டுக்குள்ள நுழைஞ்சப்போ எப்பவும் போல வீடு இல்லை. ரொம்ப அமைதியாய் இருந்தது. அப்பவே சந்திரிக்கா வந்துருக்காங்கன்ற விஷயம் எனக்கு விளங்கிடுச்சு.

அம்மா வந்தா லாரா பயத்துடன் எந்தம் சந்தமும் போடாம அமைதியாகிடுவாள். பாட்டி சமையல் அறையே கதின்னு ஆகிடுவாங்க. தாத்தா வந்திருக்கிற மகள்கூட அடுத்து என்ன பண்ணப் போற... குடும்ப நிலலவரம் என்ன என்பதை பற்றி தணிந்த குரலில் பேசிட்டே இருப்பாங்க. அதனால லாராவோட சத்தமோ... பாட்டியோட கண்ணுங்களா என்ற பாசமான அழைப்போ... தத்தாவின் பின்பு சிலேடை எடுத்துக்கொண்டுபோய் யானை படம் வரைஞ்சு கொடுங்கன்னு நொச்சரிக்கும் எங்க சத்தமோ இருக்காது.

அப்போதான் சந்திரிக்கா, பிரபல தொழில் அதிபத் கிஷோர் வர்மாவை கல்யாணம் பண்ண பிளான் பண்ணிட்டாங்க. அதுக்கு எந்த விதத்திலும் தாரா, லாரா அப்பாவான ரித்திக் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்... தனக்கும் அவனுக்கும் முன்னாடி  கல்யாணம் முடிந்து குழந்தைகள் இருக்குன்ற  விஷயத்தை உலகத்தின் பார்வையில் மறைக்கவும் பணம் டீல் பேச அப்பா ரித்திக்கை அங்க வர வைத்திருந்தாள்.

லாரா, தாரா ரெண்டுபேரும் அனாதைகள் என்ற போலி ஆதாரத்துடன் லாராவை வீரபுத், அருணிமா தந்தெடுக்கவும்... அதுபோல ரித்திக் குடும்பம் என்னைய அடாப்ட் செய்தது போல டாக்குமென்ட் ரெடி பண்ணவும் ரித்திக்  ஒத்துழைக்க அவரிடம் பணம் பேரம் பேசப்பட்டது.

ரித்திக் கேட்ட பெரும் தொகையை மறுபேச்சு பேசாமல் கொடுத்து தனது திட்டத்துக்கு ஒத்துழைக்க வைத்தாள் சந்திரிக்கா. இனி எங்கும் அவனின் முன்னாள் மனைவி என்று சந்திரிக்காவை நேரடியாகவோ மறைமுகமாகவோ மூச்சுவிடக் கூடாது... அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பது உலகத்தின் பார்வைக்கு வரக்கூடாது... என்ற டீல் அன்றில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

நானும் லாராவுக்கும் எங்களோட பேரன்ஸ் பிரிஞ்சதால ஒருமுறை அறியாத வயதிலேயே இடம்மாறியதால உறவுகள் உருமாற்றத்தால ஒரு பெரிய கஷ்டத்தை ஃபேஸ் பண்ணினோம். அதைத் தொடர்ந்து ரெண்டாவது தடவையாய எங்களைப் பெத்தவங்களால் எங்கள் பிறப்பே கேள்வி கேலிகூத்தாய் ஆகியது...

இவ்வாறு அப்பொழுது சந்திரிக்காவின் சுயநலப் பேய் வெளியில் வர காரணம் கிஷோர் வர்மா.... பாரம்பரியமான தொழில் துறையில் முன்னனியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் வர்மாவுக்கு மனைவியாக வேண்டும் என்ற ஆசைக்கு குறுக்கே அவளின் கடந்த கால கல்யாணம் குழந்தைகள் ரெண்டும் தடையாக இருந்ததால் பணம் கொடுத்து அத்தடையங்களை உலத்தின் பார்வையில் மறைக்கப்பட்டது.

இதில் இப்பொழுது அவள் வாழ்க்கைக்குள் வந்திருக்கும் கிஷோர்  சந்திரிக்காவுக்கு முதலாளியாக அறிமுகமாகியவர். இருவருக்கும் உண்டான ஈர்ப்பும், தேவைகளும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற இடத்துக்கும் அவர்களை நகர்த்தியிருந்தது.

யூடியூப் கலாச்சாரம் சோசியல் மீடியாக்களில் புகாத அன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் தங்களை பிராலமாக்க... தங்களுக்கென தனிச்சேனலை போட்டிப் போட்டு உருவாக்கிய காலம் அது.

அவ்வாறான சூழலில் தான் கிஷோரின் வளர்ந்துவரும் மீடியா கிரியேடர் தொழிலில் முறை கம்பெனியில் சந்திரிக்கா வேலைக்கு அமர்ந்தாள். கிஷோரிடம் வேலைக்கு சேர்ந்த சந்திரிக்கா, டெக்னிக்கள் செயல்பாட்டிற்கான நுண்ணறிவும் அந்த பிஸ்னெசை டெவெலப் பண்ண என்னென்ன செய்யவேண்டும் என்ற அறிவும் கொண்டிருந்தாள்.

கிஷோர் தொழிலில் தடுமாற்றத்தை சந்திக்கும் நேரங்களில் தக்க ஆலோசனை கொடுத்து கம்பெனி முன்னேற சந்திரிக்கா காரணமாக ஆனாள். எனவே கிஷோரின் கவனம் சந்திரிக்காவின் மீது விழுந்தது. அவளின் மீது ஈர்ப்பு உண்டானது. அவள் நிரந்தரமாக தன்னுடன் இருந்துவிட்டால் தொழிலில் நிறைய சாதிக்க முடியும் என்ற எண்ணம் துளித்தது.

எனவே செல்லும் இடங்களுக்கெல்லாம் அவளையும் உடன் கூட்டிக்கொண்டு திரிய ஆரம்பித்தான். காலப்போக்கில் இருவரின் நெருக்கமும் அதிகமானது. கிஷோர் அவளுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டதை சூசுகமாக அவளிடமும் கோடிட்டு அடிக்கடி காட்ட ஆரம்பித்தான்.

சந்திரிக்காவுக்கு கைநிறைய சம்பளமும், நட்சத்திர விடுதி வாசமும், டாம்பீகமான வாழ்க்கை முறையும் அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் கிடைத்தது. எனவே  கிஷோரின் ஆசைகளை கோடிட்டுக் காட்டியும் வேலையை விட்டு விலக மனம் இல்லாமல் அவனை  தட்டிக்களித்துக் கொண்டே அந்த நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் சந்திரிக்கா அவனக்கு தந்த பிஸ்னெஸ் ஆலோசனையில்... வெளிநாட்டு முதலீட்டை தங்களது நிறுவனத்திற்கு திரட்டும் விதமாக... ஒரு பிக் பிஸ்னெஸ் ஆபர் கிடைக்க சந்தர்ப்பம் அமைந்தது. அதனால் கிஷோர் மிகவும் சந்தோசமடைந்தான்.

இருந்தாலும் அந்த பிஸ்னெஸ் டீலிங்கில் ஒரு சிக்கல் இருந்தது. வெளிநாட்டு முதலீட்டை அரசாங்கம் வரையறை செய்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கள் கம்பெனிக்குள் கொண்டு வர முடியாமல் போவதால், ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாத சூழல் வந்தது.

அரசாங்கம் அனுமதித்த வெளிநாட்டு முதலீட்டுக்காக சதவீதத்தை தகரத்தினால் தான் இந்த ஒப்பந்தம் முடியுமென்ற நிலையில். அதற்கு பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சட்டத்தை ஏய்த்தால் சாத்தியமாகும் என்ற புரிதல் சந்திரிக்காவுக்கு இருந்தது.

தொழில் அதிபர் என்ற முறையில் அந்நிய செலாவணி தொடர்பான அமைச்சரை சந்திக்க கிஷோர் ஏற்பாடு செய்தான். அவள் அந்த அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை தனது பேச்சுத் திறமையால் பெற்று சாதித்துக் காட்டினாள். அதைக்கண்ட கிஷோருக்கு அவளின் திறமை மற்றும் அழகை நிரந்தரமாகச் சொந்தம் கொள்ள, தனது வாழ்க்கைக்குள் கொண்டுவரவேண்டும் என்று முடிவெடுத்தான்.

முதலில் வெறும் படுக்கையை மட்டும் பகிர்ந்துகொள்ள நினைத்தவன் அவளை நிரந்தரமாக தன பிடிக்குள் கொண்டுவர அவளைகொண்டு  பிஸ்னெசை முன்னேற்ற தன்னுடன் தக்கவைத்துக் கொள்ள அவளை   கல்யாணம்செய்ய முடிவெடுத்தான்.

---தொடரும்---

இனிக்கும் விஷம் (தீபாஸ்) - 18

அத்தியாயம் 18

கிஷோர் தன்னை பிஸ்னெஸ்க்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளாமல் அதைத்தாண்டி தன்னை முழுவதுமாக சொந்தமாக்கிக்கொள்ள பிரியப்படுகிறான் என்பது புரிந்தது. கண்மூடித்தனமாக அவனை மறுக்கவும் விருப்பம் இல்லை.

லகரங்களில் சம்பளம் பெற்றாலும்... அதைக்கொண்டு ஏழு குட்டிக்கரணம் போட்டாலும்... தன்னால் தொழில் அதிபனாகிய கிஷோரின் அளவு செல்வவளத்தை எட்டிப்பிடிக்க முடியாது. ஆனால் அவனின் வாழ்கையில் ஒரு அங்கம் ஆனால் அவளின் சொத்து முழுக்க தனக்கும் சொந்தமாகும் என்ற கணக்குப் புரிந்தது.

அதோடு இந்த கல்யாண ஆஃப்பரை தட்டிக்களித்தால் இந்த வேலையில் இருந்து தன்னை தூக்கி எறிந்துவிடவும் சந்தர்ப்பம் உள்ளது. அதனால் திரும்ப சாதாரண மிடில்கிளாஸ் வாழ்க்கைக்குள் போய்விடும் நிலை வந்துவிடும் என்ற பயம் உண்டானது.

இதுவரை அவள் தன்னை திருமணம் ஆனவள் என்று அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உண்மையைச் சொல்லி அதன் பிறகும் அவன் என்னை கல்யாணம் செய்ய விரும்பினால் மேற்கொண்டு யோசிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

அவளின் மும்பை வாழ்க்கை ஆரம்பமானத்தில் இருந்து அங்குள்ளவர்கள் எவரிடமும் கடந்தகால வாழ்கையை வெளிப்படுத்தவில்லை. தன்னைப்பற்றி பிறரிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைத்திருந்தாள். ஆனால் கிஷோரிடம் அவ்வாறு மறைப்பது ஆபத்து என்பது புரிந்தது.

அதனால் தனது கடந்தகால வாழ்கையை பற்றி அவளிடம் சொல்ல முன்வந்தாள். அதுவும் இங்கு யாருக்கும் தனது கடந்த கால வாழ்க்கைப் பற்றித் தெரியாது.. உங்ககிட்ட அதைச்சொல்வதை நீங்கள் யாரிடமும் வெளிப்படுத்திவிடக் கூடாது... என்ற நிபந்தனைகளுடன் கிஷோரிடம் வெளிப்படையாப் பேசினாள்.

அவள் பேசியதும் யோசனையாக சிறிதுநேரம் அமர்ந்திருந்த கிஷோரிடம், “இதை உங்ககிட்டு மறைச்சு கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பலை கிஷோர்... அதேபோல கல்யாணம்ற கமிட்மென்ட்க்குள்ள நுழையாம  லஸ்ட்டுக்காக படுக்கையில் இடம்கொடுத்தால் வரும் அனர்த்தங்களை நான் ஏற்கனவே சந்திச்சிட்டேன். இனி அப்படி நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். இனிமே நீங்கதான் ‘வெறும் ஸ்டாஃப்பா வேலையை நான் பார்க்கணுமா.... இல்லை உங்க லைஃப் பார்ட்னராகி உங்களுக்கு என் படுக்கையில் இடம் கொடுக்கணுமா’ என்றதை முடிவு பண்ணனும்” என்றாள்    

கிஷோருக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடோ. நெறியான வாழ்க்கைமேல் பிடிப்போ கிடையாது அவனுக்குத் தேவை பணம்... பெரும் பணம்... அதன் மூலம் கிடைக்கும் வளமான வாழ்வு மட்டுமே குறிக்கோள்.

ஆனால் அவனது குடும்பத்துப் பெரியோரிடம் அதை வெளிப்படையாகப் பகிர முடியாது. மேலும் தன்னுடைய மைன்ட் செட்டிற்கு ஏற்ற லைஃப் பார்ட்னர் சந்திரிக்காதான் என்று முடிவெடுத்தான். அவளை போன்ற ஒரு கேரக்டரை இனி காண்பது அரிது எனவே அவளை எப்படியாவது தன்னுடன் பிடித்து பிணைத்து நிறுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.

மேலும் அவளது கடந்தகால வாழ்க்கையை சொல்லியதால் ‘அவளுக்கு குழந்தைகள் இருந்தாலும் அக்குழந்தைகளின் மேல் பிடிப்பு இல்லை என்றும்... வாழ்கையில் பெரிய அளவில் செட்டிலாக வேண்டியது மட்டுமே அவளது  குறிக்கோள் எனவும்... சொல்லி முடித்திருந்ததால் ‘தாங்கள் இருவருக்குமே ஒத்த எண்ணம் கொண்டவர்கள்’ என்று புரிதலில் சந்தோசம் அடைந்தான்.

“நீ அம்மாவா...? சான்சே இல்லை சந்திரிக்கா...! யாருமே உன்னை பார்த்து அப்படி சொன்னா நம்ப மாட்டாங்கயூ ஆர் ஸ்டில் வெரி யங் என்றான்.

அவன் சொன்னதும் கெத்தாக ஓர் புன்னகையை உதிர்த்தவள்அதெல்லாம் சரி, இந்த நிலையில் என்னை லைஃப் பார்ட்னராக்க உங்களுக்கு சம்மதமா கிஷோர்...!?.

முதல் தடவை போல கமிட்மென்ட் ஆகாமல் குழந்தை பெற்று அதற்கான பொறுப்பை என் தலையில் தூக்கிக்கிட்டு அலைவது போல இன்னொரு நிலை வர நான் விட மாட்டேன. அதனால இப்படியே என்னை மனைவியா ஏற்றுக்கொண்டால் தவிற வேறு வகையில் மத்த விஷயங்களுக்கு உங்ககூட இணக்கமாக இருக்க மாட்டேன்” என்றாள் சந்திரிக்கா..

எனக்கு உன்னைய இப்படியே என் லைஃப் பார்ட்னராக்க எந்த அப்ஜெக்சனும் இல்லை. ஆனா என் வீட்டில உன் பாஸ்ட் லைஃப் பற்றி வெளிப்படையாச் சொல்ல வேணாம். உனக்கு இதுக்கு முன்பு கல்யாணமாகாமல் குழந்தை இருக்கும் விஷயத்தை மறைச்சுத் தான் நாம் பேசணும் அப்பத்தான் நாம கல்யாணம் பண்ண  சம்மதம் வாங்க முடியும்” என்றான்.

அவன் அவ்வாறு சொல்லவும் சந்திரிக்கா மனதினுள் மகிழ்ச்சி அடைந்தாள். வேலைபார்க்கும் இடத்தின் முதலாளியான அவனுடன் வாழ்கையில் இணைந்தால் அவனின் நிறுவனமும் சொத்துக்களும் தனக்கும் சொந்தமாகும் என்ற ஆசை பிறந்தது எனவே அவளும் சம்மதித்தாள்.

மேலும் சந்திரிக்கா தன்னுடைய கடந்த காலத்தை முற்றிலும் மறைத்து புதியதாக இந்த சமூகத்தில் தன்னை பெரிய வீட்டு பெண் என்ற அடையாளத்துடனும் பிஸ்னெஸ் உலகில் தன்னையும் ஒரு தொழிலதிபர் என்ற அந்தஸ்திலும் நிலை நிறுத்திக்கொள்ள இந்த ஏற்பாடு, திட்டம் வகுத்துத் தரும் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தாள்...

சந்திரிக்கா லைஃப்பில் இருந்து மகள்களான தங்களை எதுவோ வேண்டாத பொருளைப் போல ஒதுக்கி வைத்ததும்.... அவள் அப்பா ரித்திக் பணத்தை பெற்றுக்கொண்டு சொந்த மகளையே தத்துப் பிள்ளையாக மாற்ற சம்மதித்த கதையையும் சொல்லி முடித்தாள்.

அவள் சொன்னதை கேட்ட வண்ணன் ‘பணத்துக்காக இப்படிப்பட்ட செயலை செய்யவும், ஒரு தாய் தகப்பனால எப்படி முடிந்தது...? இப்படிப்பட்ட இந்த சந்திரிக்கா பெற்ற பிள்ளைகளை கொல்லவும் தயங்கியிருக்க மாட்டாள்... இப்படிப்பட்ட ஒரு அம்மாவுக்கு மகள்களாக பிறந்ததால் இவள் இன்னும் என்னென்ன வகையில் துன்பப்பட்டாளோ... என்ற எண்ணத்தில் அனுதாபமும் பரிவும் தாராமீது உண்டானது.

அவனின் எண்ணத்தை மெய்பிக்கும் வகையில் தாரா மறுபடியும் பேச ஆரம்பித்தாள்... “என்னையும் லாராவையும் இப்போவரை உயிரோடு விட்டு வச்சதுக்கு ஒரே காரணம் இதுவரை நாங்க சந்திரிக்காவின் மகள்னு எங்களை வெளிபடுத்திக்காம இருக்கிறதால் தான்... இதுவரை எங்களைத் தெரிந்த நெருங்கிய உறவுக்காரங்க உண்மைய வெளியில சொல்லாம இருக்கிறதுக்கு காரணம் அவங்க வாய தொறக்காம இருக்கிறதுக்கு கிடைச்சப் பணம். பணக்காரங்க மேல இருக்கிற பயம்...

ஆனா எங்க மனசு இப்படி அப்பா, அம்மா இருந்தும் அனாதையா அடையாளப்படுத்துறதால என்னமா பாடுபட்டிருக்கும்னு எங்களை சேர்ந்த யாருமே யோசிக்கலை...

அப்பா ரித்திக் பணத்துக்கு விலைபோனதுக்குப் பின்னாடி என்னை அவர் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனதும்... கங்குப்பாட்டிக்கு என் அம்மாவின் சுயரூபம் தெரிஞ்சதும்... இப்படியும் ஒரு தாயானு தான் சந்திரிக்காவை திட்டினாங்க.

ஆனா கட்டுக்கட்டா பணத்தை மகன் காட்டியதும் அவுங்க கண்ணும் ஆசையில் மின்னுச்சு... அதுக்குப் பிறகு இத்தனைப் பணத்தோடு வந்திருக்க மகன் இன்னும் எதுக்கு பொண்டாட்டி துணை இல்லாமல் தனியாக இருக்கணும்னு யோசிக்க ஆரம்பிச்சாங்க...

அப்படிப்பட்ட அம்மாவுக்கு பிள்ளையாய் பிறந்த என்னை அற்பமாய் பார்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க சொந்தத்தில் இருக்கிற ஒரு பொண்ணை, அப்பா ரித்திக்கிற்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க. அதுக்கு பின்னாடி அந்த வீட்டில் நான் வேண்டாத பொருளாய் எல்லோராலும் பார்க்கப்பட்டேன்.

என்நிலமை இப்படி ஆகிப்போச்சு என்றால் லாராவுக்கு அம்மான்னு இதுவரை சொல்லிக்கொண்டிருந்த சந்திரிக்காவை அக்கா, மேடம்னு கூப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டாள்.

அதுக்குப் பிறகு மூணு வருஷம் மட்டுமே லீவுக்கு தொடர்ந்து சேலத்துக்கு தாத்தா கூட்டிக்கிட்டு போவாங்க. என்னோட உடல் மெலிவு, டிரஸ், ஏன்... படிக்கிற ஸ்கூல் கூட... ரித்திக்கின் புது மனைவியால் எனக்கு தெண்டத்துக்கு காசு செலவழிக்க மனம் இல்லாமல் மாற்றப்பட்டத்தையும், எனக்கான கவனிப்பு மற்றும் செலவுகளை சுருக்கிக் கொண்டத்தையும்   கண்டுக்கொண்டார்கள்.

என்னோட நிலையைப்  பார்த்து பாட்டியும் தாத்தாவும் ரொம்ப கவலைப் பட்டாங்க. எனக்கு ஏதாவது வழி செய்யச்சொல்லி மகள் சந்திரிக்காவை  தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க.

அந்த மூணு வருஷத்தில் சந்திரிக்கா பெரிய அளவில் எல்லா பிஸ்னெஸ் மேகசீங்களிலும் பாராட்டி ஆர்டிக்கிள் பிரசுரம் ஆகும் அளவில் பிஸ்னெஸ் உலகில் ஒரு தனி இடத்தை பெற்றுக்கொண்டாள். அவளோட வாழ்க்கைத்தரமும் பணமும் புகழும் ஜெட்வேகத்தில் உச்சத்துக்கு போச்சு. எந்த அளவுக்குனு உங்களுக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றவளிடம்.

“ம்... தெரியும் உலக அளவில் பவர்புல் பிஸ்னெஸ் வுமன் லிஸ்டில் முதல் பத்து இடத்துக்குள்ள அவங்க பேர் வந்ததைத்தானே சொல்ற..?’ என வண்ணன் கேட்டதும்.

“அதுமட்டும் இல்ல... முக்கியமான அரசுப்பதவியல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு சந்திரிக்கான்ற பேர் மிகவும் பரிட்சயமான நெருக்கமான ஆளாவும் ஆனாங்க. அரசாங்கத்தை அவளின் தேவைக்கு வளைச்சுப்போடும் பவர் இருகிக்கிறவளாக சந்திரிக்கா பார்க்கப்பட்டாள்

ஆனா எனக்கு சப்போட் பண்ணச்சொன்ன தாத்தாவை எடுத்தெறிஞ்சு பேசினாள். அந்த கவலையில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்....

எல்லா மனிதர்களுக்கும் ஒரு வீக்னெஸ் உண்டு அதேபோல சந்திரிக்காவின் வீக் பாய்ன்ட் அவளது தந்தை. சிறுவயதில் இருந்து படிப்பு ஸ்கூல் ஆக்டிவிட்டிஸ் அனைத்திலும் திறமையான அவளுக்கு முழு சப்போர்ட் அவளின் தந்தைதான்.

அவள் என்ன செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதில் சரி, தவறு என்று பிரித்துக் கூட பார்க்காமல் உடன் துணை நிற்பவர் அவர். அவளின் பிளஸ் மைனஸ் இரண்டுமே அவர்தான். ஏனோ லாரா, தாரா பிறந்ததுக்குப் பின்னால் பிள்ளைகளுக்கு அடுத்து தான் தான் அவருக்கு முக்கியம் என்ற நிலைக்கு வந்ததை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அந்த பிள்ளைகளுக்காகவே எந்நேரமும் யோசித்து தன்னிடம் பேசும் அவரின் வார்த்தைகள் பிடிக்காது போனதால் சற்று அவரை விட்டு மனத்தால் தூரம் சென்றாள் சந்திரிக்கா. இருந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து என்றதும் உலகத்திலேயே அந்த ஒரு மனிதருக்காக மட்டுமே அவள் சற்று பதறிப் போனாள்.

அவளது அந்த பிஷி செட்யூல்களுக்கு இடையில் தந்தையை மருத்துவமனையில் பார்க்க ஓடி வந்து சேர்ந்தாள்.

மருந்துவ உபகரணங்களுடன் படுக்கையில் இருந்த அவர் மகளிடம் வைத்த கோரிக்கை, தாரா படிப்புக்கும், படிப்பு முடிந்து தங்கள் கால்களில் நிற்கும் வரைக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு செலவு செய்யவும், தாராவை நல்ல ஸ்கூலில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு கவனித்துக்கொள்வேன் என்று சத்தியம் செய்யச் சொன்னார்.

அவர் அந்த நிலையில் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக மட்டுமே தான் இப்பொழுது படித்துக்கொண்டிருந்த டெல்லி யுனிவர்சிட்டி காலேஜ் படிப்பு வரை சப்போர்ட் பண்ணிக்கொண்டிருகிறாள் சந்திரிக்கா. அதுவும் ஏழை பொண்ணுக்கு படிப்புக்கு ஸ்பான்சர் பண்ணுகிறேன் என்ற பேரில் உதவிக்கொண்டிருக்கிறாள். தன்னை அவளின் மகள் என்று உலகத்திற்கு சொல்லிவிடக் கூடாது என்ற பயங்கர கெடுபிடிகளுடன் நடந்துக்கொண்டிருகிறார்.

எல்லைத்தாண்டிய சந்திரிக்காவின் மீது கோபமும் ஆத்திரமும் கொள்ளும்படியான சூழலுக்கு சமீபகாலமாக அடிக்கடி நான் செல்ல வேண்டிய சூழல் வந்தது. அதற்கு தன்னை அவள் மிரட்டிய விதத்தை தாரா சொல்லிக் கேட்டதும்...  இப்படியுமா...!? என்று வண்ணன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான்...

---தொடரும்---

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!