Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 50- கண்டேன் ஜானகியை 

வகைகள் : தொடர்கள் / மனதின் வார்த்தைகள் புரியாதோ

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


தொடர்கள்

50- கண்டேன் ஜானகியை 

 

ரகுவீரும், அமுதனும் மொட்டை மாடி அறையில் தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பும் நேரம், ஜானகி வரைந்த ஓவியமும், கவிதை வரிகளும் தென்பட்டது. தமிழில் இருந்த வரிகளை வாசித்த தமையனுக்கும், அதன் மொழி பெயர்ப்பில் அவளை உணர்ந்த மனங்கவர்ந்தவனும், பேசும் மொழி மறந்து  சொல்ல இயலாத உணர்ச்சி மிகுதியில், ஜானகியின் காதலின் ஆழத்தையும், அன்பையும் நினைத்து நெகிழ்ந்து நின்றனர்.

ரகுவீரின் அலைப்பேசி, தன்னைச் செவிமடுக்கச் சொல்லி அழைப்பு விடுத்தது. சிவகணேஷ் அழைத்தான். "ஹலோ,கணேஷ் எங்க இருக்க?" என ரகுவீர் அவசரமாகக் கேட்க . 

"அத்தான், நான் மார்வே ஐலேண்டில் இருக்கேன், உங்கள் மிஸ்டுகால் அலர்ட் பார்த்தேன், ஏதாவது முக்கியமான விசயமா?" என்றான்.

"ஜானகியை கிட்னாப் பண்ணிட்டாங்க. நீ இப்போ  எங்கிருந்து வந்த?" என்றான் ரகுவீர்."என்னத்தான் சொல்கிறீர்கள், இது எப்ப நடந்தது எங்கிட்ட யாருமே சொல்லலை, இப்ப ஜானகிக்கா எங்கே இருக்காங்க?" எனக் கண்ணீர் விட்டான் சிவகணேஷ்.

"கணேஷ்  அதுக்குத்தான் உனக்குப் போன் பண்ணினோம்." என்ற ரகுவீர் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான்.

"அத்தான், நீங்க சொல்றதைப் பார்த்தால், நான் கிளம்பும் நேரம் ஒரு போட் வந்தது. அக்கா அதில் இருந்திருப்பாளோ இருங்கள் போட்டோ செக் பண்ணிட்டுக் கூப்பிடுகிறேன்." என்றவன். 

இரண்டாவது நிமிடம் சில போட்டோக்களை அனுப்பினான். "அத்தான் நீங்கச் சொன்னது சரிதான் அக்கா அந்த தீவுல தான் இருக்கனும். நான் உடனே போகிறேன்." என்றான்.

 

"கணேஷ், அவசரப்படாத யார் கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். நீ அங்கயே இரு நாங்கள் ஒரு டீமே அங்க வருகிறோம், அந்த ஐலேண்ட் பற்றிய விவரத்தை சேகரித்து வை." எனக் கட்டளை இட்டவன்  அமுதனுடன் சேர்ந்து போட்டோக்களைப் பார்த்தான். 

ஒரு போட்டோவில், ஜானகி போட்டுக்கு மேலே முக்காட்டை விலக்கி தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் சோர்வு இருந்தது ஆனால் பயமில்லை அதுவே அவர்களுக்குத் தைரியம் தந்தது. போட்டோக்களை, சைலேந்தர், ராஜ், அமுதன், பூஃபாஷாவிற்கு அனுப்பினான் ரகுவீர்.

"அமுதா வா போகலாம், 'ராம்ஜி' என் கோரிக்கையை, நிறைவேற்றி விட்டார். ஜானுவை, அவன் வேற இடத்துக்குக் கடத்தும் முன் மீட்கவேண்டும்." என்றவன், 

கீழே பெரியவர்களிடம், "ஜான்வி இருக்குமிடம் தெரிந்தது, அவளோடு தான் வருவேன்." எனக் கிளம்பும் நேரம் அமரேன் அமர்சிங் இருவரும் ஒரு முக்கியமான தகவலுடன் வந்தனர்.

"ரகுவி! ராகேஷ் ரெனாவத் கடலுக்குள்ள இருக்கத் தீவுக்கு மதியமே போயிட்டான். அந்தத்தீவில் மேலோட்டமான பார்வைக்கு ஒரு ரிசார்ட் இருக்கிறது, ஆனால் இன்டீரியரில் ஒரு ப்ரைவேட் ஏரியா, அதில் எல்லா இல்லீகளும் நடக்கிறது. போதை மருந்து லிக்கர் பொண்ணுங்க எல்லாமே. நீ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, ஜானகியை ரெஸ்கியூ பண்ணு, ரெனாவத் ரொம்ப வக்கிரம் பிடித்தவன். அவனோடு வக்கிரத்துக்கு விக்டிம் அவன் முதல் மனைவி. வசதியான வீட்டுப் பெண் அதனால் தப்பித்தது. கொஞ்சம் இரு  நானும் வர்றேன்." என்றார் அமரேன்.

"சாச்சு, நீங்க எதற்கு அலையறீங்க?" என்றான் ரகுவீர். "இல்லை ரகுவீ, என் தீதீஷாக்கு தான் என்னால் ஒண்ணும் செய்ய முடியலை, ஜானகிக்கு எதுவும் ஆகக்கூடாது. அவள் நம் உயிர் நம் சொத்து, நம் ஷான்?" என உணர்ச்சி வயப்பட்டார்.

அமர்சிங் கிளம்பியவனை, "ஜீஜூ, நீங்க இங்க இருங்க. எங்களுக்கு உதவி பண்ண மும்பையில் ஆள் வேண்டும். நான் கூப்பிடுகிறேன்." என  வீட்டில்  விட்டுச் சென்றான் ரகுவீர்.

"ரகுவி, இன்னொரு விஷயம், நாம் ரெனாவத்தை வாட்ச் பண்ற மாதிரி, அவனும் ஆள் வச்சுருப்பான். உன்னை ஒரு வண்டி ஃபாலோ பண்ணுகிறது, எங்களைப் பார்த்ததும், வண்டியைத் திருப்பினான் கேர்ஃபுல்." என அமர்சிங் டாக்கூர் எச்சரிக்கை செய்தான்.

 

"தாங்க்ஸ் ஜிஜுஷா எச்சரிக்கை செய்ததுக்கு." என்றவாறே மூவரும் கிளம்பினர். அமர் சொன்னது போல், ஒரு வண்டி ஃபாலோ செய்தது நேர் எதிர் திசையில் நவி மும்பையை நோக்கி காரை செலுத்திய ரகுவீர், சிறிது தூரத்தில், தன் நம்பிக்கைக்கு உகந்த யூகியிடம் வண்டியை மாற்றி விட்டு அவனை நவி மும்பை டாக்கூர் பீச் ஹவுஸ் போகச் சொன்னான். இவர்கள் சாதாரணக் காரில் மார்வே வந்து சேர்ந்தனர்.

மார்வே தீவுப்பகுதியில், ஐபிஎஸ் சைலேந்தர், ஓர் ப்ரைவேட் காமண்டோ டீமை இவர்கள் எல்லாரும் எக்ஸ்சர்வீஸ் மென் ஏற்பாடு செய்திருந்தான். ரகுவீர், ராஜ், ரன்வீர், அமுதன், அமித், ஜெய் இருந்தனர். சிவகணேஷ் அவர்களோடு தேடி வந்து சேர்ந்தான்.

"அண்ணா!" என அமுதனைக் கட்டிக் கொண்டு அக்காவிற்காக அழுதான். அமுதன் அவனைத் தேற்றினான். ரகுவீரிடம் வந்தவன், "நீங்க இருக்கும் போது எப்படி அத்தான், என் அக்காவைக் கடத்த விட்டீங்க." என ரகுவீர், தன்னைத் தானே ஆற்றாமையோடு கேட்டுக் கொள்ளும் கேள்வியை, மற்றவர் கேட்க யோசிக்கும் கேள்வியைக் கேட்டே விட்டான் சிவகணேஷ்.

"அதுக்கான தண்டனையைத் தான், ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கிறேன்." என ரகுவீர்  இயலாமையோடு சொன்னான்.

"கணேஷ்! என்னப் பேச்சு இது?" என அமுதன் கண்டித்தான். "அமுதா, என்னை நானே கேட்கிற கேள்வியைத் தான் அவன் கேட்கிறான் விடு." என்றவன்,  "உன் மொபைல் அவளோடு பேர் ஆகியே இருக்கிறது எப்படி." எனக் கேட்டான் ரகுவீர்.

"உங்களை முதல்முறை பார்க்கும் போதே, நீங்க தான் அத்தானென்று சொன்னேன் அதுக்கு அடுத்துச் சொல்ல வந்தவனை அக்கா யாருன்னு தெரிஞ்ச சந்தோஷத்தில் நீங்க கேட்கவே இல்லை." எனக் குறைப் பட்டான் கணேஷ். "சரி இப்ப சொல்லு." என்றான் ரகுவீர்.

"எங்கள் அக்காவுக்கு என் மேல் அவ்வளவு பாசம். நான் வேற மாதிரி போய்விடுவேனென்று கண்காணிக்க மெயில் ஐடி, கூகுள் ஐடி மொபைல் நம்பர் எல்லாத்தையும் மெர்ஜ் பண்ணி வச்சிருக்கு. அதோட போன் காண்டேக்ட் எல்லாம் எனக்கும் வரும், என்னோடது அதுக்குப் போகும். இங்க பாருங்கள்." எனக் காட்டினான்.

 கடைசியாக, அவர்கள் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் செல்பி வரை அவன் போனில் இருந்து. ஜானகி வந்த நாளில் இருந்த போட்டோக்களில், ரகுவீரின் பல போஸ்களில், ஜானகி அவனைப் பார்த்திருந்த அத்தனையும் தருணமும் ஏதோ ஒரு போட்டோ இருந்தது.

 

"டேய்! அக்காவும், தம்பியும் என்னடா செய்றீங்க, அவள் சைட் அடிக்கிறதைப் பெருமையா நீயும் காட்டுகிற. ஷாதிக்கு முன்னாடி, என் லுகாயிக்கு வேற மொபைல் நம்பர் வாங்கனும். ப்ரைவசியே இல்லை." எனக் குறை பட்டான் ரகுவீர். "அத்தான், ஓவரா சீன் போடாதீங்க, எங்கள் அக்கா தீர்க்கதரிசி, அதுதான் எப்படி ஒரு ஏற்பாடு." என்றான் கணேஷ்.

"அரே சாலா உன் அக்கா பெருமை போதும், அங்க என்ன செய்து வைத்திருக்கிறாளோ, ராகேஷ் ஒரு வக்கிரம் பிடிச்சவன், என் மேல் உள்ளக் கோபத்தை, அவள் மேல் காட்டுவான்." எனக் கவலைப் பட்டான் ரகுவீர்.

"போகலாம்  நம்ம இப்ப எதற்கு நிற்கிறோம்" எனக் கேட்ட சிவகணேஷிடம் ,அமரேன் வந்த திசையைக் காட்டினான்.

சைலேந்தர், அமரேன், அமித் மூவரும் வந்தனர். சிவகணேஷை ராத்தோட்களுக்கு அறிமுகம் செய்தான் அமுதன். அமித் ஜெய்யை ஏற்கனவே தெரியும்.

ஒரு பத்து பேர் கொண்ட க்ரூப், ப்ரைவேட் பார்ட்டிக்குப் பணம் கட்டியிருக்கு அதுக்குப் போகனும். மீதி ஆளுங்க போட்டில் வெயிட் பண்ணுவோம், போறவங்க சிசுவேசன் பார்த்துச் சொல்லட்டும்.

இது இல்லாமல் ஹெலிகாப்டர் இருக்கு  அமித் ஓட்டிட்டு வருவார், நம்ம கமேண்டோஸ் அண்ட் ரகுவீர் அதில் போய் ப்ரைவேட் ஏரியாவில், யாருக்கும் தெரியாமல் இறங்கனும்." என்றான் சைலேந்தர்.

"ஹெலிகாப்டர் பறந்தால் சந்தேகம் வராதா?" என அமுதன் கேட்டான்.

"இல்லை, இங்கே இது சகஜம், கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றிக் கொண்டே இருப்பாங்க, நமக்கு ஸ்பெஷல் பர்மிஷன், பாண்டே ஸாப் வாங்கித் தந்துவிட்டார். அவங்களும் நாம் சிக்னல் கொடுத்தோனே வந்துருவாங்க." என்றான் சைலேந்தர் 

"நம்ம ராத்தோட்களை, ரெனாவத் ஆளுங்களுக்கு நல்லாத் தெரியும், என்னைத் தெரியாது அதனால், நான், அமுதன், கணேஷ், ஜெய் மாறு வேஷத்தில் பெண் காமேண்டோ சிலரோடு ப்ரைவேட் பார்ட்டிக்குப் போகனும். காகாஷா, ராஜ், ரன்வீர், இன்னும் சிலர் போட்டில் இருங்கள், மொபைல் எல்லாம் வைபிரேட்டில் இருக்கவேண்டும்." எனத் திட்டம் போட்டான் சைலேந்தர்.

தீப்தி, மறைந்து நின்று கேட்டவள், ஒரு பொண்ணோடு முன்னே வந்தாள் .

"படே பய்யா, நாங்களும் உங்களுக்கு ஹெல் பண்றோம், பை த வே, இவள் சாந்தினி, சாந்தினி ரெனாவத், ராகேஷ் ரெனாவத்தின் பஹன்." என்றாள் தீப்தி.

எல்லாரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர். "என் பாய்ஷா, கொஞ்சம் ரஃப் அண்ட டஃப்னு தெரியும், ஆனால் சிவாவின் அக்காவைக் கடத்தி வச்சிருப்பாருன்னு நினைக்கவில்லை. நான் அவங்களைக் காப்பாற்ற என்னால் முடிந்த ஹெல்ப் செய்கிறேன், சொல்லுங்கள்." என்றாள்

அமரேன், அவளை அழைத்தவர், "எங்கள் தாதிஷா குடும்பத்துப் பொண்ணு, அதே துணிச்சல் இருக்குது." என்றவர். "நீங்க இரண்டு பேரும் உதவ வந்தது நல்லது தான், ஆனால் சின்னப் பொண்ணுங்களை என்னால் இதற்கு அனுமதிக்க முடியாது. வீட்டுக்குக் கிளம்புங்கள்." என அனுப்பினார் அமரேன்.

"சரிங்க அங்கிள், பாய்ஷா எங்க இருக்கார்னு பார்ப்போம், உங்கள் முன்னால் பேசுகிறேன்." என்றவள் டயல் செய்தாள்.

"பாய்ஷா, சாந்தினி பேசுகிறேன், நீங்க எங்க இருக்கீங்க?" எனக் கேட்டாள்.

"இதென்ன புதுசா கேள்வி கேட்கிற?" எனஅதட்டினான்  ராகேஷ்.

"இல்ல பாய்ஷா, போட்டோ சூட் முடிந்தது, வீட்டுக்கு போகனும், நீங்க பக்கத்தில் இருந்தால் சேர்ந்து போகலாம் னு பார்த்தேன்." என்றாள். அதற்குள், ரெனாவத் ஷா, உஸ் லட்கி காயப் ஹோகயி[ அந்தப் பெண் காணவில்லை ]" என்ற குரல் கேட்டது. 

"சுப் ரஹோ பாகல் கைக்கா, என அங்கே திட்டியவன், "பாய்ஷா, யார் காணோம்?" எனக்கேட்டாள். "ஒண்ணும் இல்லை டேன்ஸர் பணம் பத்தாதுன்னு, தகராறு செய்தாள் அவளைத் தான் காணாமல் தேடுகிறார்கள். நம்ம ஐலேண்ட் விட்டு எங்கேயும் போக முடியாது . நான் இரண்டு நாள் கழித்துத் தான் வருவேன். அடிக்கடி போன் பண்ணாதே, பார்த்துப் பத்திரமா வீட்டுக்குப் போ  வெளியே சுற்றாதே." எனப் போனை வைத்தான். 

மூச்சு விட மறந்தவர்கள்,அப்போது தான் பேசினர்."அப்ப ஜானி தப்பிச்சிட்டளா?" என ராஜ் கேட்டான். "இல்லை பாய்ஷா, அங்கிருந்து தப்பிக்க முடியாது. நிறையச் செக்யூரிட்டி சிஸ்டத்தில் கணக்ட் ஆகி இருக்கும். யாரும், உள்ளே போனாலோ வந்தாலோ காட்டிடும். நீங்க எப்படிப் போனாலும், பாய்ஷா கண்ணில் பட்டுடுவீங்க." என்றாள் சாந்தினி.

"அதோட கண்ட்ரோல் எங்க இருக்கிறது?" எனச் சைலேந்தர் கேட்டான். எங்கள் வீட்டில் எனச் சாந்தினி சொல்லவும்.

"குட், நீ போய், அதை ஹேக் பண்ணு, நான் ஒரு நம்பர் தரேன், அவர் சொல்கிறபடி வீட்டில் போய்ச் செஞ்சேன்னா போதும்." எனச் சொல்லி, தீப்தியையும். அமரிடம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

 

"தீப்திகிட்ட இருந்து மெசேஜ் வரட்டும்." என முக்கால் மணி நேரம் காத்திருந்தனர்.

ஜானகியை, மயக்கமடையச் செய்த ருத்ரநாத், அவளை ரிசார்டைச் சுற்றி, உள்பகுதிக்குத் தூக்கிச் சென்றான். இந்த முறை வீரியம் குறைவாக மயக்க மருந்தை உபயோகித்ததால், ஒருமணி நேரத்தில் முழித்தாள். தலை சுற்றியது.

"ஏய், ருத்ரா தண்ணீர் கொண்டுவா." என அதிகாரமாக அழைத்தாள்  ஜானகி.

தண்ணீர் பாட்டில் முன்னால் நீட்டப் பட்டது, அதை வாங்கி முகம் கழுவியவள், கொஞ்சம் குடித்தாள். அதன் பின்னரே மசமசத்த கண்கள் தெளிவடைந்தன.

"ஏய் ருத்ரா! இனிமே இந்த மயக்க மருந்தை வைத்தேனா பாரு, தலை வலிக்குதடா காட்டுப் பயலே." எனத் திட்டினாள்.

"கும்ரிஷாவிற்கு, இனிமே அந்தச் சிரமத்தைத் தரமாட்டோம், வரவேண்டிய இடத்துக்கு வந்துட்டீங்க கம்மாகனி." என்றவன் குரலில் நிமிர்ந்து பார்த்தாள்  ஜானகி, ராகேஷ் ரெனாவத் நின்றான்.

ஏளனமாக வளைந்த உதடுகளில் புன்னகையைத் தவழ விட்ட ஜானகி, "ஹலோ மிஸ்டர் நீ என்ன மயக்க மருந்து ஃபேக்டரி வச்சிருக்கியா, எலிக்கு குடுக்குறதுக்குப் பதிலா எனக்குக் கொடுத்து டெஸ்ட் பண்ற?" என்றாள்.

"கும்ரிஷா, நாங்கள் கொண்டு வந்திருக்கிறது ஸேரிணியை.(பெண் சிங்கம்) எலியெல்லாம் இவ்வளவு டோஸ் தாங்குமா என்ன?" என்றான்.

"இரஜபுத்திரர்கள், பெரிய வீரனென்று கதை சொல்றீங்க, இதென்ன அப்பாவி பெண்ணைக் கடத்துகிறது தான் வீரமா?" என்றாள்  ஜானகி.

ராக்கேஷ் சிரித்தான், "கும்ரிஷா, இரண்டு விசயம், கடத்திட்டுப் போய் ஷாதி பண்றது ஏற்கப்பட்ட ஒன்று, ப்ரத்வி ராஜ் மகராஜ்ஜே செஞ்சிருக்கார். இன்னோன்னு நீங்க அப்பாவி கிடையாது." என்றான்.

"உங்கள் இரண்டாந்தரக் கடத்தலுக்கு, கிரேட் கிங் பேரைச் சொல்லாதே, இரஜபுத்திரர்கள் காரி உமிழ்வாங்க. அவர் தன்னை விரும்பியவளை தானே கடத்தினார், அதுவும் மணாளனாக மாலையிட்ட பின்பு." என ஜானகி கொந்தளித்தாள்  ஜானகி.

"சரி விடுங்கள் எப்படியோ வந்தாயிற்று, இனி திருமதி ரெனாவத் ஆகத் தான் திரும்புவீங்க." என்றான்.

 

"எந்தக் காலத்தில் இருக்க ராகேஷ், அதுவும் நான் தமிழ்நாட்டுப் பொண்ணு, சுய மரியாதை, உரிமையைப் பற்றி அதிகம் பேசறவங்க நாங்கள். நீ என்னை ரேப் பண்ணாலும் உன்னவள் ஆகமாட்டேன் தெரிஞ்சுக்கோ, என் மனசும், ஆத்மாவும் என்றும் என் வீரூஜிக்காகத்தான் துடிக்கும்." என அவனை உதாசினப்படுத்தினாள் ஜானகி.

"அதையும் தான் பார்ப்போம், இந்த மிடுக்கு எத்தனை நாளைக்கு இருக்கிறதென்று?" என்றான்.

"அது பிறந்ததில் இருந்து இருக்கிறது உனக்குத் தான் டைம் ரொம்பக் கம்மியா இருக்கிறது, இந்நேரம் என் வீரூஜி, உனக்குச் சமாதி கட்டுகிற எல்லா வேலையும் செய்து இருப்பார்." என்றாள் ஜானகி.

சாதாரணமாகவே ராக்கேஷ்க்கு, ரகுவீர் மீது கோபம் இருக்கும், அது ஸ்வர்ண மாஹாலக்ஷ்மி காலத்திலிருந்து, வரும் பகை இது.

ஜானகியைக் கடத்தியதின் முக்கிய நோக்கம், ராஜா வீட்டுப் பரம்பரை நகை. ரெனாவத்களிடமிருந்து நகையானது தாதிஷாவை, ராத்தோட் குடும்பத்தில் திருமணம் முடித்தால் அவர்களுடையதானது. படி தாதியின் மகளை, பைரவ் செகாவத்துக்கு மணம் முடித்த போதும், ஸ்வர்ண மஹாலக்ஷ்மி பெயருக்கு ஓரிரு நகைகளைப் போட்டார், அவருக்கு வாரிசு இல்லாமல் போனது, எனவே ராகினியை தன் வாரிசாக்கி, அவர் திருமணம் நடந்த போது, பேத்திக்கு நியாயம் செய்வதாகத் தனது நகைகளை அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இது ராத்தோட்களுக்கே இப்போது தான் தெரியும்.

பைரவின் குறுக்குப் புத்தி அவர்களைப் பலி  வாங்க யோசித்து, தன் குடும்பம் தன் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என ரெனாவத்தைத் தேர்ந்தெடுத்தார். அவனுக்கும் ஜானகியால் இழப்பும் ரகுவீருக்கு அவளை மணமுடிக்க விடக்கூடாது என்ற எண்ணமும்  அதோடு பரம்பரை நகையை அடையும் வேகமும் சேர்ந்து கடத்தி விட்டான். ஜானகி வழிக்கு வந்தால் சரி, இல்லாவிட்டால் வேறு சிலதும் அவளுக்காக யோசித்திருந்தான்.

 ஜானகியை ஓர் அறையில் அடைத்து வைத்து விட்டு, ரகுவீரின் நடவடிக்கையை வேவு பார்க்க வைத்திருந்தவனிடம் விசாரித்தான். அவன் ராத்தோட்டை பின் தொடர்ந்து நவிமும்பை பகுதியில் வந்திருப்பதாகச் சொல்லவும், திருப்தி அடைந்தான்.

 ருத்ரநாத் பவாரியாவுடன் ஜானகியை, அடுத்து என்ன செய்வது என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தான். அதே நேரம், சாந்தினியிடமிருந்து போன் வந்தது. அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஜானகி பூட்டிய அறையில் இல்லை என ஒருவன் வந்து சொன்னான்.

 

போன் பேசி முடித்த  ராக்கேஷ் சிசி டிவி மூலம் ஜானகி பதுங்கிய இடத்தைக் கண்டு பிடித்தான். ஜானகி, அடைக்கப்பட்ட பிறகு, அந்த அறையை ஆராய்ந்து, ஒரு ஜன்னல் வழியாகத் தப்பிக்க நினைத்தாள். அவள் ஏறிக் குதித்ததில்  அவள் காலில் ஆணி குத்தி இரத்தம் வழிந்தது. கைகளிலும் சிராய்ப்பு இருந்தது.

அவளை இழுத்து வந்தான் ருத்ரநாத், "கும்ரிஷா  ஒரு நகக்கீறல் கூட இல்லாமல் நாங்கள் பத்திரமாகப் பார்த்திக்கிட்ட  இருக்கோம்  , நீங்க என்ன சின்னப் பிள்ளை மாதிரி கை, கால்களைக் காயப்படுத்திக்கிட்டு இருக்கீங்க. என் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கிறது. இனிமே இப்படிச் செய்யாதீங்க . இங்க பாருங்க எல்லா இடமும் இதில் தெரியும்." என சிசி டிவி கேமராவைக் காட்டினான் ராக்கேஷ்.

 "ருத்ரா கும்ரிஷா, கண்ணைத் திறந்து பார்த்தால் தானே, தப்பிக்க நினைப்பாங்க. அவர்களே கண்ணை மூடிக்கனும். அப்படிக் காவல் போடு." என்றான் ராகேஷ்.

அந்தக் கருணை இல்லாத காட்டானே அதிர்ந்தான், "ரெனாவத்ஷா, அதுக்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி ஷாதி செஞ்சுக்குங்க." என்றான்.

"நான் சொன்னதை மட்டும் செய்." எனக் கட்டளை இட்டான் ராகேஷ்.

"கும்ரிஷா, நீங்க ரெனாவத்ஷாவை ஷாதி செஞ்சுக்குங்க இங்க ராணி மாதிரி இருக்கலாம். மறுத்துப் பேசாதீங்க." என அவளிடம் வாதாடினான்.

"அதுக்கு உங்கள் ஊரில் ஜோஹர் வளர்பாங்களே அதைச் செய், அந்தத் தீயில் குதிச்சுடுவேன்." என்றாள்  ஜானகி. "இதுவும் வாழ்நாள் பூராவும் அக்னியில் இருப்பது போல் தான். நிம்மதி போகும்." என்றான் ருத்ரநாத். வேறு வழியின்றி  ஒளி நிறைந்த அந்த அறையில் ஜானகியைக் கொண்டு விட்டு வந்தான்.

சாந்தினியும், தீப்தியும் ரெனாவத் வீட்டிற்கு வந்தனர். தங்கள் அறையில் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை எனத் தன் பாபிஷாவிடம் சொன்னவள், பாயீஷா இரண்டு நாள் வரமாட்டாங்கலாம், நான் அவர்கள் கம்யூட்டர் உபயோகப் படுத்திக் கொள்கிறேன் என அவன் அறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.

 சைலேந்தர் கொடுத்த, எண்ணிற்குப் போன் செய்தார்கள், அந்த ஹேக்கர் சொல்லச் சொல்ல, அவனுடைய கம்பெனி முதலான சகலத்துக்குள்ளும், அந்த ஹேக்கர் நுழைந்து தகவல்களை எடுத்தார். தீவின் சிசிடிவி கேமராவும், அசைவு இருப்பது போல் செட் செய்யப் பட்டது.

 

தன் அண்ணனின் சாம்ராஜ்யம் அழிக்கப்படுகிறது என்பதை அறியாமல் சாந்தினி, ரெனாவத்தை வீழ்த்த வழிவகைச் செய்தாள். தீப்தியிடமிருந்து ரகுவீருக்கு மெசேஜ் வந்தது சைலேந்தருக்கும் டிபார்ட்மென்டில் இருந்து தகவல் வந்தது. கமிஷனர் உதவியால் ரெனாவத் அரஸ்ட் ஆர்டரும் சைலேந்தர் கையில் இருந்தது.

ஜானகியை மீட்கும் பணியை ஆரம்பித்தனர். அமித், ரகுவீர் மற்றும் மூன்று கமேண்டோஸ் ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக, ஏர்போர்ஸ் தளத்தில் தயாராக இருந்தனர். ஏற்கனவே பாரா ஃப்ளையிங் க்ளப் போன்றவற்றில் மெம்பராக இருந்ததால் ரகுவீருக்கு அனுமதி கிடைத்தது. மற்றவர்கள் ஏர்போர்ஸ் சர்வீஸ் முடித்து ரெஸ்கியூ டீமில் இருப்பவர்கள்.

ஒரு பயணிகள் ஸ்ட்ரிமரில் ராக்கேஷின் ஐலேண்ட் செல்லும் கேங்குடன், சைலேந்தர், அமுதன், கணேஷ், ஜெய் மற்றும் நான்கு பெண் கமாண்டோகளுடன், பார்ட்டி செல்லும் கெட்டப்பில் ஏறிச் சென்றனர்.

மற்றொரு கப்பற்படை ரோந்து போட்டில், அந்த வீரர்களுடன், அமரேன், ராஜ், ரன்வீர் சென்றனர். இவர்கள் லைப் ஜாக்கெட் அணிந்து இருந்தனர்.

ஹெலிகாப்டரைக் அமித் சிறப்பு அனுமதி பேரில் இயக்கினான். அதில் அமர்ந்திருந்த ரகுவீருக்கு மனம் வேகமாகத் துடித்தது, ஜானகி சகிக்க இயலாத வேதனையில் இருப்பது போல் தவிப்பாக இருந்தது.

"ஜானும்மா நீ இருக்கும் இடத்துக்கு இன்னும் பத்து நிமிடம் வந்துடுவேன்டி, தைரியமா இரு." என மனதில் பேசினான்.

ஜானகி கடத்தப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரத்தில், ஜானகியை அடையும் வழித் தேடிவிட்டான் ரகுவீர்.

அமித், அந்தத் தீவின், அமைவிடம் ஸ்பாட் செய்து, அமித் சுற்றி வந்து கொண்டிருந்தான். அதனோடு ஒட்டிய மேட்டுப் பாங்கான இடத்தில் கயிறு மூலம் இறங்குவதாகத் திட்டம்.

முதலில் தீவை அடைந்தது அமித் தான். மூன்று முறை வட்டமடித்தான், சாதாரணமாக, மும்பையில் தரை இறங்க ஸ்லாட் கிடைக்காத விமானங்களும், அரைமணிநேரம், ஒரு மணிநேரம் எனக் கடல் பகுதியில் வட்டமடிக்கும், ஹெலிகாப்டரில் ரோந்து செல்வதும் வழக்கமாதலால், ரெனாவத் ஆட்களுக்குச் சந்தேகம் வரவில்லை.

அமித் மேட்டுப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டரை 20 அடி உயரத்தில் ஃப்ளோட் செய்து கொண்டிருந்தான், முதலில் இரண்டு கமாண்டோஸ் இறங்கிய பின் ரகுவீர் இறங்கினான், மற்றவர்கள் அவன் பின்னே இறங்க அமித் மார்வே தீவுக்குப் பறந்தான்.

 

முதலில் சமதளத்தில் நின்றவர்கள், கூகுள் உதவியுடன் சரிவுப் பகுதியில், ராகேஷின் இடத்திற்கு மெல்ல நகர்ந்தனர். ஒளி வெள்ளம் சூழ்ந்து  காட்டுப் பங்களா போல் இருந்தது.

சீக்ரெட் ரிசார்ட். அதைச் சுற்றி வேலித் தடுப்பு இருந்தது, சந்தேகத்துடன், ஒரு காய்ந்த கட்டையைத் தூக்கிப் போடவும், அது எரிந்தது. அதனைத் தாண்டும் மார்க்கத்தைக் கமாண்டோஸ் யோசித்தனர்.

ஸ்ட்ரீமரில் வந்த அமுதன் சைலேந்தர் டீம், மற்ற பயணிகளோடு போதை ஏறியவர்கள் போல் உள்ளே நுழைந்தனர். ஒரு பப் இருந்தது அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி அரைகுறை ஆடையில் ஆடித் திரிந்தனர். இவர்கள் பாவ்லா செய்த வண்ணம் ஒவ்வொரு அறையாகச் சோதனை செய்தனர்.

அமரேன், ராஜ், ரன்வீர் கடலில் இருந்தனர். வேலியைத் தாண்ட சரியான உபாயம் கிடைத்தது. வேலியின் ஓரிடத்தில் லைட் எரிந்தது, கமாண்டோஸ், ஒருவர் மேல் ஒருவர் ஏறி, ரகுவீரை மேலே ஏற்றினர். வேலியைத் தொடாமல், பல்பை கழட்டி  ஒரு நாணயத்தை வைத்துத் திரும்பி மாட்டவும், ஃப்யூஸ் போனது, அதனால் வேலிக்குச் செல்லும், பவர் கட்டானது. இப்போது சுலபமாக வேலியைத் தாண்டினர். இரவை பகலாக்கிக் கொண்டிருந்த ரிசார்ட்டுக்குள், மறைந்து, மறைந்து சென்றனர். இவர்களைக் கடந்த மூன்று நான்கு ஆட்களை ஒரே தட்டில் மயக்கமடையச் செய்தனர்.

ஒவ்வொரு அறையாக, நோட்டமிட்டுக் கொண்டே வந்த ரகுவீரின் கண்களில் கண்ணை இருக்க மூடிக்கொண்டு, காதைப் பொத்திக் கொண்டு சுருண்டு கிடந்த ஜானகி தென்பட்டாள். ஜானகி ஏன் அப்படிக் கிடந்தால், ரகுவீர் அவளைச் சேதமில்லாமல் மீட்பானா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

1 கருத்துகள்
  • Priya 30-Dec-2024

    Sister, 51 vadhu Adyayan epponpoduveenga

ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!